• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

SUNDHAL

காதலனுக்கு ஆப்படிச்ச சேரன் மகள்

Recommended Posts

சென்னை: காதலும் வேண்டாம் காதலனும் வேண்டாம் என நீதிமன்றத்தில் கூறிவிட்டு மகள் தாமினி தன்னோடு வந்ததில் மிகுந்த சந்தோஷமடைந்த இயக்குநர் சேரன், மீடியாவுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார். நீதிமன்றத்தில் இன்று தாமினி காதல் வழக்கு விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பழையபடி தாய் தந்தையுடன் சேர்ந்துவிட்டார் தாமினி. தன் மகள் திரும்பக் கிடைத்தது சேரனுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ளது. இதற்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். ஏராளமான மீடியாக்காரர்களும் வந்திருந்தனர். தரையில் விழுந்து... அப்போது அனைவர் மத்தியிலும் பேசிய சேரன், 'என் பொக்கிஷம் திரும்பக் கிடைத்துவிட்டது. எனக்கு பக்கத் துணையாக நின்றது மீடியாவும் நண்பர்களும்தான். இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்," என்று கூறி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். சேரனின் இந்த செய்கை, வந்திருந்த அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது.

பேஸ்புக்கில்..

முன்னதாக இன்று காலை பேஸ்புக்கில் சேரன் இப்படி எழுதியிருந்தார்: "இன்று என் பொக்கிஷம் திரும்பி வரும் நாள்.... அவள் இந்த உலகிற்கு வந்த நாளில் எவ்வளவு பயமும் பதட்டமும் இருந்ததோ அதைவிட 100 மடங்கு இன்று.... இன்று நான் காணப்போகும் வெற்றி எனக்கானது மட்டும் அல்ல... இவ்வுலகில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்குமானது...."

Thatstamil

Share this post


Link to post
Share on other sites

பட்ட பகலில் பெற்றோர்களால், நீதிபதிகளால், சட்டத்தால்,  கிட்நாப் செய்யப்பட்ட மகள். 

Share this post


Link to post
Share on other sites

"காதலன் காவாலியாக" இருந்தாலும் கைப்பிடிக்கவேண்டும் என்று படம் எடுத்துக் கல்லா நிரப்பலாம்! ஆனால் மற்றப் பெற்றோருக்கும் இதுமாதிரிப் பிரச்சினை இருக்கும் என்று ஒரே ஒரு படம்கூட எடுத்தீர்களா??

Share this post


Link to post
Share on other sites

bleedingheart2nh7.jpg

 

தாமினி சேரனின் முடிவை காதல் ஒழிப்பு சங்கத்தின் சார்ப்பில் வரவேற்கிறோம். எனி உங்கள் படிப்பை பார்த்துக் கொண்டு.. அமைதியான வழியில் நல்ல வாழ்வை அமைக்கவும்.. அப்பா அம்மா சொல்லுற வழியில் ஒரு துணையை தேடிக் கொள்ளவும்.. காசுக்கு.. கவர்ச்சிக்கு எடுக்கும்.. யதார்த்தத்திற்கு புறம்பான.. சினிமா பார்த்து கெடாமல் இருக்கவும்.. வாழ்த்துகின்றோம்.

 

நன்றி.

 

நெடுக்காலபோவன்.

ஸ்தாபகர், தலைவர், செயலாளர் நாயகம், பொருளாளர், CEO

காதல் ஒழிப்பு சங்கம்.

யாழ்.

 

ஆதி

நிறுவினர்.

காதல் ஒழிப்பு சங்கம்.

யாழ்.

 

[ contact detail: http://www.yarl.com/forum3/index.php?showtopic=29602&st=0&p=352365 ]

 

Share this post


Link to post
Share on other sites
காதல் ஒழிப்பு சங்கத்தை கடுமையாய் எதிர்க்கிறேன்
 
:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:
 
 
இங்ஙனம் 
காதலித்து கல்யாணம் செய்த 
உங்கள் விழியன் 

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • Emotional symptoms Restlessness: the addict may find it impossible to remain still and calm for any length of time whilst not gaming; fidgeting, pacing, constantly getting up and down, and being unable to participate in any task for more than a few minutes may all indicate frustration at not being able to game. Irritability: an addict may be quick to lose their temper and/or to snap at others if they are kept away from gaming for a protracted period – or if they are in a bad mood from a recent unsuccessful gaming bout. Preoccupation with thoughts of previous or next gaming activity: gaming may entirely capture the addict’s thought processes, leaving them unable to think about anything else and possibly visibly distracted from important activities. Lying about the amount of time spent playing: many gaming addicts feel shame at the amount of time they spend feeding their addictions, and/or recognise that in many people’s eyes they are engaging in an unhealthy activity, and so deceive others about how long they actually spend gaming. Isolation from others to spend more time gaming: as noted above, withdrawing from social circles and previously enjoyed activities is a very common sign that something is wrong. Physical symptoms of video game addiction Fatigue: many people play computer games for very long periods of time – indeed, as noted above gaming-related fatigue has been a factor in numerous deaths in recent years – and often sacrifice sleep for the sake of continuing to play. This is especially common amongst those who work or attend college or university and who are therefore unable to play during working hours. Migraines: prolonged gaming has been known to spark off migraines even in those who have previously not suffered from them. Carpal tunnel syndrome: repeated, very protracted bouts of gaming using manual controls such as drawing pads, keyboards or mice can lead to the wrist condition known as carpal tunnel syndrome, causing pain and tingling in the fingers and hands. Poor personal hygiene: some gamers allow their levels of hygiene to slip significantly as a result of their protracted gaming – and/or because their isolation leaves them feeling that they do not need to make any effort in this regard. Some e-sports competitions have been obliged to post notices warning that gamers exhibiting poor levels of hygiene will be disqualified and removed from the venue. https://www.uk-rehab.com/behavioural-addictions/gaming/
    • அறிவியல் வளர்சசியின் ஒரு பரிணாமே தகவல் தொழில்நுட்ப வளர்சசியாகும். அதன் மூலம் உண்டான வசதியான  சமூகவலைத்தளங்களைப்  பாவித்து போலி அறிவியலை பேசி மக்களை ஏமாற்றுவோரும்,  அதை அப்படியே ஆராயாமல் நம்பிவிடும் பேதைகளும் தற்போதைய காலத்தில் அதிகரித்து வருகிறனர்.  சமூக வலைத்தளங்கள் உருவாக முன்பே கிட்டத்தட்ட 90 வருடங்களுக்கு முன்பு  தேசபக்தி என்ற பெயரால்  முப்பாட்டன் அறிவியல் என்று  போலி அறிவியலை அறிமுகப்படுத்தியதால் சோவியத் மக்கள் அடைந்த இன்னலகளை இந்த காணொலி  விளக்குகிறது   
    • விபத்தில் உயிரிழந்தத் தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ள ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும்; வைகோ வைகோ: கோப்புப்படம் சென்னை விபத்தில் உயிரிழந்தத் தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ள ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூலை 7) வெளியிட்ட அறிக்கை நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி கொதிகலன் வெடித்ததில் 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலி ஆனார்கள். கடுமையான தீ காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 17 தொழிலாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நேர்ந்த இடத்திலேயே பணிபுரிந்த பத்மநாபன், அருண்குமார், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், ராமநாதன், நாகராஜ் ஆகிய 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் துணை முதன்மைப் பொறியாளர் சிவகுமார், இளநிலை பொறியாளர்கள் இரவிச்சந்திரன், வைத்தியநாதன், ஜோதிராமலிங்கம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களான செல்வராஜ், இளங்கோவன், ஆனந்தபத்மநாபன் ஆகிய 7 பேரும் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களில் மேலும் நான்கு பேர் மிகவும் கவலைக்கு இடமாக இருப்பதாகத் தெரிகிறது. ஜூன் 1 ஆம் தேதி என்எல்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்தக் கோர விபத்தில் இதுவரையில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தும், மேலும் சிலர் உயிருக்குப் போராடி வரும் தகவலும் மிகுந்த சோகத்தை அளிக்கிறது. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தொழிலக விபத்தில் இறந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் கருணைத் தொகை அளிக்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கவும் என்எல்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால், இந்தக் கருணைத் தொகை ரூ.30 லட்சத்தில் தொழிலக விபத்து நேரிட்டால் வழங்கப்பட்டு வரும் இழப்பீடுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவையும் தமிழக அரசு அறிவித்த 3 லட்சம் ரூபாயும் அடங்கும் என்று என்எல்சி நிர்வாகம் முடிவு செய்து இருப்பது ஏற்கவே முடியாத அக்கிரமம் ஆகும். இது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. என்எல்சி நிர்வாகம் பாதுகாப்பு விதிகளை மீறியதாலும், பராமரிப்புப் பணிகளின் அலட்சியத்தாலும் தொடர் விபத்துகள் ஏற்பட்டபோதும் அதுகுறித்து கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அனல்மின் நிலையத்தை இயக்கியதுதான் தொழிலாளர்கள் உயிர் பலியானதற்கு முதன்மைக் காரணம் ஆகும். தொழிலக விபத்தில் உயிரிழப்பவர்களுக்குக் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை என்பது சட்டபூர்வ உரிமையாகும். இந்நிலையில், உயிரிழந்தத் தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ள ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும். தொழிலக விபத்து இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை தனியாக அளிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்தையும் சேர்த்து வழங்க வேண்டும். கோடி கோடியாய் அள்ளிக் கொடுத்தாலும், உயிரிழப்புக்கு எதுவும் ஈடு செய்ய முடியாது என்பதை என்எல்சி நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், உயிரிழந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் குடும்பங்களில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனம் நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கும்போது, கல்வித் தகுதியின் அடிப்படையில் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார். https://www.hindutamil.in/news/tamilnadu/563111-vaiko-urges-to-give-solatium-to-deceased-workers-families-3.html  
    • ஒன்றிலிருந்து மீள்வதற்குள் இன்னொன்று தவிக்கும் சீனா.! சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த வைரசின் முதல் அலையில் இருந்து மீண்ட சீனா தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த நோயில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.பிளேக் நோய் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் பயன்னார் நகரம் முழுவதும் பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.இந்த பாதுகாப்பான நிலை இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.முன்னதாக சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு கடந்த 1-ந் திகதி பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டது. மர்மோட் எனப்படும் ஒருவகை அணிலின் இறைச்சியை உண்டதால் இவர்கள் பிளேக் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.இதைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.சீனாவில் பிளேக் நோய் கண்டறியப்பட்டு இருப்பது அரசையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சியடையச்செய்து உள்ளது.அங்கு சமீபத்தில் பன்றியில் இருந்து பரவக்கூடிய ஜி4 வைரஸ் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://www.vanakkamlondon.com/ஒன்றிலிருந்து-மீள்வதற்க/ டிஸ்கி : இப்போ அணிலா..? சப்பயல் உலகை ஒரு வழி செய்யாமல் விட மாட்டினம் போல..😢
    • வீர தமிழச்சி! இந்தியாவின் முதல் திருநங்கை Police Prithika Yashini அம்மாவுடன்! கண் கலங்கிய பிரபலங்கள்