• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

ஜீவா

மரணத்தின் மர்மங்களை அறிவது எப்படி?

Recommended Posts

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 13

 

சுவர்க்கம்

 

முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட இரண்டாவது படிநிலையில் உள்ளவர்கள் இங்கு வாழ்ந்த பொழுது கீழ்த்தர ஆசைகள், சிற்றின்பக் கேளிக்கைகள், மிருகத்தனமான இச்சைகள் ஆகியவைகளுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தவர்கள். இறந்த பின்னர் இந்த இன்பங்ளை அனுபவிக்க இயலாத நிலையில் அவைகளுக்காக ஏங்கி அல்லல்படுவர். இவர்கள் சிறிதளவேனும் ஆன்மீக ஈடுபாடு இல்லாது வாழ்ந்தவர்கள். மூன்றாவது நாலாவது படிநிலைகளில் உள்ளவர்கள் சிறிது முன்னேறிய ஆத்மாக்கள். இவர்களுக்கு பூவுலகுடன் தொடர்புகொள்ள நாட்டமிருந்தாலும் (Earth Stimuli) இங்குள்ளவர்கள் அவர்களை நோக்கித் தங்கள் பலம் வாய்ந்த உணர்ச்சிபூர்வமான சிந்தனை அலைகளை அனுப்பி அவர்களை தொந்தரவு செய்யாதிருந்தால் அவர்க்ள அமைதியாக இந்தப் படிநிலையைக் கடந்து விடுவார்கள்.
 
ஐந்தாவது படிநிலை ஓரளவு பிரகாசம் பொருந்திய இன்பகரமான உணர்வுநிலை என்று கூறப்படுகிறது. தமக்கு புண்ணியம் சேர்க்கும் நோக்குடமன் அல்லது புகழ்சேர்க்கும் விருப்புடன் அல்லது தமது ஆத்ம விமோசனத்திற்காக பொதுமக்களுக்குப் பயனளிக்கக்கூடிய நற்காரியங்களைச் செய்தவாறே பூவுலக வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தவர்களுக்குரிய இடம் இது. தங்களால் மேலும் ஆன்மீக உயர்ச்சி பெறமுடியும் என்ற நினைவு இவர்களுக்கு இருந்து கொண்டேயிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆறாவது படிநிலையில் உள்ளவர்கள் ஆன்மீக முன்னேற்றம் அடைந்த ஆத்மாக்கள். ஆனால் அவர்கள் பூவுலகில் வாழ்ந்தபொழுது தமது திமை, அறிவு, செயல்வனமை ஆகியவற்றை சுயநல நோக்கோடு பயன்படுத்திய காரணத்தால் ஒருகுறுகிய காலத்துக்கு இங்கு தங்கிய பின்னரே மேலே செல்வர்.
 
ஏழாவது படிநிலை மிக உயர்ந்த நிலை. அறிவாளிகளுக்கும் ஆன்மீக உயர்வு பெற்றவர்களுக்கும் உரிய இடம் இது. இவர்கள் உலோகாயதிகளாக (Materialists) இருந்த காரணத்தால் இங்கு சிலகாலம் தங்கி, தங்கள் அறிவை மேலும் வளர்த்துக்கொள்வார்கள். 
 
காமலோகத்தில் நமது கடந்த பிறப்பின் ஆசைகள் மட்டுமே அழிக்கப்படுகின்றன. கர்மவினைகளில் இருந்து நாம் விடுபடுவதில்லை. அடுத்த பிறப்புவரை நமது மூன்றுவகை கர்மாக்களும் ஒருசெயலற்ற நிலையில் நிறுத்திவைக்கப்படுகின்றன. காமலோகத்தைக் கடக்கும்பொழுது மனிதனின் மனசும் அதனால் வளர்க்கப்பட்ட காமரூபமும் அழிந்து விடுகின்றன. காலோகத்தை விட்டு சூட்சும உலகின் இறுதிப்பகுதியாகிய "தேவஸ்தான்" எனப்படும் சுவர்க்கலோகத்தை மனிதன் அடையும்பொழுது, ஆத்மா, புத்தி, மனம் ஆகிய உயர் அம்சங்களுடனேயே அவன் அங்கு செல்கின்றான். இந்த நிலையை இந்துக்கள் "தேவஸ்தான்" என்றும் "சுவர்க்கம்" என்றும், பௌத்தர்கள் "சுகாவதி" என்றும், கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் , பார்சிகள் ஆகியோ "மோட்சம்" என்றும், பிரம்மஞானிகள் "தேவச்சன்" என்றும் விவரிக்கின்றனர். 
 
Irantha-Pin---13.png
 
மனிதனின் சூட்சும சரீரம் காமலோகத்திலிருந்து விடுபடும்பொழுது அழிந்துவிடுகிறது. இப்போது மனிதனின் பிரக்ஞை அவனுடைய மனோசரீரத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக்கின்றது. 
 
தேவஸ்தானும் காமலோகம் போலவே ஏழுபடிநிலைகளாக வகுக்கபடுகிறது. ஒவ்வொருவரும் தமது பெறுபேறுகளுக்கேற்ப தமக்குரிய தளநிலைக்குச் செல்வர்.
 
கீழ்நாலு படிநிலைகளில் மனிதர்கள் தங்கள் மனோசரீரத்தின் கீழ்நிலையில் சஞ்சரிக்கின்றார்கள், உயர் மூன்று தளநிலைகளில் மனோசரீரத்தின் உயர் நிலையில் ஆத்மாவின் சுயஉணர்வு நிலையான ஆனந்த பரவச நிலையில் (bliss) இருப்பர் எனப்படுகிறது.
 
இறந்தவுடன் எவ்வாறு சில நிமிடங்களுக்கு உணர்வற்ற நிலையேற்பட்டு பின்னர் பிரக்ஞை தெளிவடைகிறதோ அதேபோன்று காமலோகத்தில் இருந்த விடுபட்டு தேவஸ்தானுக்குள் புகுந்து கொள்ளும் பொழுதும் ஏற்படுகிறது.
 
தேவஸ்தானம் மனிதனுக்கு பிரக்ஞை வந்தவுடன் விவரிக்க இயலாத இன்பமும் புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றது. அங்கு நிலவும் பிரகாசமும் மன நிறைவும் மனிதன் முன்னெப்பொழுதும் அனுபவிக்காதவைகள். எனவே அவனால் தனது மொழியில் அங்குள்ள நிலையை விவரிக்க இயலாது. ஒவ்வொரு ஆத்மாவும் தனது மனோசக்தியால் ஒரு துயில்கூடு (shell) அமைத்துக்கொண்டு அதனுள் இருந்தபடி இன்பக்கனவுகள் காணப்து போன்ற நிலையில் தேவஸ்தரில் தனக்கென வரையறுக்கப்பட்ட காலம்வரை தங்கியிருக்கும்.
 

கனவில் நாம் காண்பதெல்லாம் சடப்பொருட்கள்போல் தோன்றினாலும் அவைகள் எல்லாம் எமது எண்ண அலைகளால் தோற்றுவிக்கப்படுவன. அதேபோன்று தான் நமது சுவர்க்கமும் நமது விருப்புகளுக்கேற்ப நமது எண்ணங்களால் தோற்றுவிக்கப்படுகிறது. சுவர்க்கம் எப்படியிருக்கும் என்று கர்ண பரம்பரைக்கதைகள் கூறுவதைக் கொண்டு நாம் கற்பனைகளை ஓடவிட்டிகிருக்கிறோம். நமது மனதுக்குக் களிப்பூட்டக்கூடிய வகையிலும் திருப்தி தரக்கூடிய வகையிலேயே அங்குள்ள சூழ்நிலை அமையும். அங்கு மனிதன் தங்கியிருக்கும் வரை நிரந்தரமான மகிழ்ச்சியையும் அமைதியையும் அடைகிறான். அவரவருக்கு ஏற்றவகையில் அவரவருடைய மனப்பாங்கிற்க்கு ஏற்றபடியே சுவர்க்கம் அமைகிறது.

 

தொடரும்..

Share this post


Link to post
Share on other sites

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 14

 

 

முற்பிறப்பு நினைவுகள்

 

மனிதனுடைய கீழ் மனசு காமலோகத்தில் சுத்தப்படுத்தப்படும் என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதன் பின்னர் அவனிடம் சட உலகில் இருந்த உயர்ந்த எண்ணங்களும், தன்னலமற்ற மனப்பாங்குமே சுவர்க்கத்துக்கு அவன் செல்லும்போது கூடவருகின்றன. சமய ஈடுபாடு கூடிய ஒருவருக்கு அவருக்கேற்ற சுவர்க்கம் கிட்டுகிறது. கடவுள் வணக்கத்தில் இன்பம் கண்டவருக்கு சடஉலகில் பல்வேறு தடைகள் கிலேசங்கள் சௌகரியங்கள் அவருடைய தெய்வவழிபாட்டுக்கு இடைஞ்சல்களாக இருந்திருக்கும். சுவர்க்கத்தில் எல்லாவித இடர்பாடுகளும் நீங்கப்பெற்று தெய்வ வழிபாட்டுக்கு அனுகூலமான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அதுவே அவருக்கு சுவர்க்கமாக அமைகிறது.
 
சடஉலகில் வாழ்ந்தபொழுது உலக நன்மைக்காக உழைத்த கல்விமான்களும் பேரறிஞர்களும் விஞ்ஞானிகளும் மேதைகளும் மேலும் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளக்கூடிய அனுகூலங்களைப் பெற்றுக்களிப்புற்றிருப்பர். சுவர்க்கம் எண்ணங்களின் மயமான மனோதளம் (Mental plane) என்பதனால் ஆழமான ஆராய்சிகளுக்கு மிகவும் சாதகமானது. இதுவே புதிய சந்ததிகள் சிந்தனா சக்தியும் புதிய ஆக்க திறனும் அதிகமுள்ளவர்களாக பிறக்க காரணமாகிறது.
 
இங்குள்ள போது இயற்கையின் எழிலை ரசித்து மகிழ்ந்தவர்கள் சுவர்க்கத்தில் இயற்கைக் காட்சிகளின் வனப்பைக் கண்டு மகிழ்வுற்றிருப்பர். இசைப்பிரியர்கள், ஓவியர்கள் ஆகியோர் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதில் இன்பம் காண்பர். சுவர்க்கத்தை சிறுசிறு உதாரணங்களால் விளக்கிவிட முடியாது. இறைவனின் திட்டம் பிரம்மாண்டமானதொரு கணிப்புப்பொறி (Computer) போன்றது. ஒவ்வொரு மனிதனின் மனோநிலைக்கு ஏற்றவாறும் அவனது சட உலகபெறுபேறுகளுக்கு ஏற்றவகையிலும் அவனுடைய சுவர்க்கம் அமைக்கப்படுகிறது. பல்வேறு சமயத்தவர்களாலும் அவர்களுடைய சமய மரபுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்ப சுவர்க்கம் வர்ணிக்கப்படுகிறது. ஒருசில வர்ணனைகள் விநோதமான கற்பனைகளாகத் தெரிந்தாலும் அந்தத் தேசங்களையும் சமூகங்களையும் பொறுத்தவரையில் அவைகள் அர்த்தம் நிறைந்தவைகளாகவே தென்படுகின்றன.
 
கிரேக்கர்களும் ரோமாபுரியினரும் நல்ல ஆத்மாக்கள் எலீசியன் வெளிகளுக்கு (Elysian Fields) சென்று தங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கூடிக்குலாவி களிப்புற்றிருப்பர் என்றும் பூவுலகில் தாங்கள் செய்த தொழில்களையே செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்றும் நம்பினார்கள். ஸ்கந்தினேவியர்கள் யுத்தப்பிரியர்கள், யுத்தமுனையில் இறந்த சுத்தவீரர்களின் ஆத்மாக்கள் "வல்ஹல்ல" (Valhalla) என்னும் சுவர்க்கத்துக்குச் சென்று அங்கு "ஒடின்" என்னும் தெய்வத்தின் முன்னிலையில் யுத்தம்புரிந்து, வெற்றிகள் ஈட்டி விருந்துகள் உண்டு இன்புற்றிருப்பார்கள் என்று நம்பினார்கள். செவ்விந்தியர்கள் (Red Indians) வேட்டைப்பிரியர்கள் சுவர்க்கத்தில் நல்ல வேட்டைக்காடுகள் நிறைய இருப்பதாக எண்ணினார்கள்.
 
Irantha-Pin---14.png
 
முகம்மது நபிகளும் அவரைப் பின்பற்றிய ஆரம்பகால முஸ்லீம்களும் வனாந்தரங்களில் வாழ்ந்தவர்கள். எனவே அவர்க்ள அல்லாவின் ஆணைகளைப் பின்பற்றியவர்கள் மோட்சத்துக்குச் செல்வார்கள் என்றும், அங்கு நிழல்தரும் விருட்சங்களும் சுவைமிக்க கனிகளை அளிக்கும் மரங்களும் சுத்தநீரோடைகளும் பாலும் தேனும் முந்திரிகைப் பழச்சாறும் ஓடும் ஆறுகளும் காணப்படும் என்றும் மோட்சவாசிகள் மரநிழலில் படுத்துக்கொண்டு அழகிய பெண்மணிகள் (Houris) கிண்ணங்களில் ஊற்றும் பழச்சாற்றை அருந்திக் கொண்டு இன்புற்றிருப்பர் என்றும் கூறுகிறார்கள். எனவே சுவர்க்கம் அவரவருடைய மனப்பாங்குக்கு ஏற்றவாறே அமைகிறது. தூய மனம் உள்ளவர்களும் ஆன்மீக முன்னேற்றமடைந்தவர்களும் தன்னலமற்ற பொது சேவைகள் புரிந்தவர்களும் புண்ணிய கருமங்களைச் செய்தவர்களும் சுவர்க்கத்தில் நீண்டகாலம் தங்கிவிடுகிறார்கள்.
 
மேலும் சில விளக்கங்களைப் பார்க்கலாம்.
 

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கோ ஜீவா நான் வாசிச்சுக் கொண் டிருக்கிறன் :) :) .

Share this post


Link to post
Share on other sites

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 15

 

காரண சரீரம்

 

காரண சரீரம் என்பது அந்தராத்மாவின் கொள்கலம். மனிதனின் தன்முனைப்பு (Ego) அல்லது அஹங்காரம் இச்சரீரத்திற்குரியது.
 
பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதனின் தனித்தன்மை உருவாகும்பொழுது மிருக உடலில் இருந்த பிரக்ஞை தனக்கென்று ஒரு காரண சரீரத்தைப் பெற்று மனிதனாகி விடுகிறது. இந்நிலையில் பரமாத்மாவின் சுடர்பொறியே காரணசரீரத்தில் புகுந்து ஜீவாத்மன் ஆகின்றது.
 
"காரண சரீரங்களின் மொத்தமே ஈஸ்வரன். ஜீவனின் காரண சரீரம் ஈஸ்வரனின் சரீரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது" - மாண்டுக்கியோபநிஷதம்.
 
கடந்த பிறப்புகளின் அனுபவங்கள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு இச்சரீரத்தில் தேங்கி நின்று நமது அடுத்த பிறப்புக்கு காரணியாக அமைகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி இச்சரீரத்தில் பிரதிபலிக்கின்றது. ஏனைய சரீரங்கள் ஒவ்வொன்றாக அழிந்த பின்னர், காணர சரீரம் மட்டும் பிறவிகள் தோறும் நிலைத்து நிற்கின்றது. ஒவ்வொரு பிறப்பிலும் ஆத்மா பெறும் அனுபவங்கள் காரண சரீரத்தை மேலும் மேலும் விருத்தி அடையச் செய்கின்றது.
 
Irantha-Pin---15.png
 
காரண சரீரத்தை இந்த வேதங்கள் விஞ்ஞானமய கோஷம் என்று குறிப்பிடுகின்றன. வேறுபடுத்தி தேர்வு செய்யும் கோஷம் (Discriminating Sheath) என்று இதை அர்த்தப்படுத்தலாம். அதாவது ஏனைய சரீரங்கள் மூலமாக பெற்ற அனுபவங்களை காரண சரீரம் ஒழுங்குபடுத்தி நல்லது கெட்டது எது எனப் பிரித்தெடுத்து தன்னிடம் தக்க வைத்துக் கொள்கிறது. காரண சரீரத்தின் பெறுபேறுகளைக் கொண்டே மறுபிறப்பில் எமக்குரிய குணம் நாட்டம் திறமை எல்லாம் நிர்ணயிக்கப்படுகின்றன. இச்சரீரத்தில் பிரதிபலிக்கப்படும் காரணங்களைக் கொண்டு எமது எதிர்காலம் அமைக்கப்படுவதால் தான் இது காரண சரீரம் எனப்படுகிறது.
 
காரண சரீரத்திலேயே மனிதனின் கிரியாசக்தியிருக்கிறது. மனிதனின் உயர்மனசு தெய்வீகமானது. மனிதன் தனது மனதைக் குவித்து ஒருநிலைப்படுத்தி தியானித்து தனது சிந்தனையால் "படைக்கும் ஆற்றலை" (Creative Power) பெறலாம். அவ்வாற்றலின் மூலமாக அவனது உயர்சிந்தனைகள் அவனை அறியாமலேயே செயல்வடிவங்கள் பெறுகின்றன.
 
காரண சரீரத்தில் உதிக்கும் எண்ணங்கள் அரூபமானவை (Abstract) மனோசரீரத்தில் தோன்றும் சிந்தனைகள் ரூபமானவை (Concrete).
 
காரண சரீரத்தை விருத்தியடையச் செய்து சித்தபுருஷர்கள் கடந்துபோன பிறப்புக்களை ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார்கள்.
 
தொடரும்..

Share this post


Link to post
Share on other sites

அடி முடி தேடும் படலமாக இருந்தாலும், தேடல் சுவையைத் தருகிறது.

 

மூளையே இறுதியாக மரணிப்பதாக அறிவியல் உலகம் தெரிவிக்கிறது. ஆகவே ஒருவனின் இறப்பு ஆரம்பமாகி, அவன் மூளை இறப்பதற்கு முன்பாக நடைபெறும் நிகழ்வுகளை அறியக்கூடிய வாய்ப்புகள் விரைவில் கிட்டலாம் என்ற நம்பிக்கையும் தென்படுகிறது.   

Share this post


Link to post
Share on other sites

மரணத்தின் மர்மங்களை (மர்மம் என ஏதாவது இருந்தால்..) நாம் அறிவதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது. அது நாம் மரணம் அடைவதுதான்.   

 

நாம் ஒவ்வொருவரும் எமக்குரிய காலம் வரும்போது நிச்சயம் அதை உணர்ந்துகொள்வோம் (உணரக்கூடியதாய் காணப்பட்டால்...).

 

ஒரு மனிதன் மரணம் அடையும்போது அவரது நிறை உடனடியாக ஒரு அவுன்ஸ் குறைவடைவதாக கண்டுபிடித்து இருக்கின்றார்கள். இதற்கான விஞ்ஞானரீதியான சரியான காரணம் இதுவரை அறியபப்படவில்லை. அந்த ஒரு அவுன்ஸ் நிறைகுறைவே அந்த உயிர் என்று யாராவது வாதாடலாம்.

Share this post


Link to post
Share on other sites

நான் எதிர்பார்த்ததை விடவும், மிகவும் ஆழமாகவே மரணத்தைத் தொட்டுச் செல்கின்றீர்கள், ஜீவா! :o

 

கடந்து போன பிறப்புக்களை, மீண்டும் ஏன் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை!

 

ஏதோ ஒரு காரணத்துக்காகவே அந்த நினைவுகள் மறைக்கப் படுகின்றன! அதை அப்படியே மறந்து விட்டுப், புதிய பயணத்தைத் தொடர்வது தான் நல்லது போல உள்ளது!

 

நாம், இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சிறிய விம்பம்!

 

மீண்டுமொரு முறை, இந்தப் பிரபஞ்சத்துடன் நிரந்தரமாகக் கலந்து விட வேண்டுமென்பது தான் எனது ஆசை!

 

ஆனால், அந்த ஆசை கூட, மீண்டும் இந்தப் பிரபஞ்சத்தில், இன்னுமொரு பிறப்பை எடுக்கவே என்னை நிர்ப்பந்திக்கக் கூடும்! :o

 

எனவே, அந்த ஆசையையும் விட்டு விட முயற்சிக்கிறேன்! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

நாமறிந்த மூன்று பரிமாணங்களை விடநான்காவது பரிமாணத்தைக்கொண்ட சூட்சும உலகொன்றிருக்கிறதாம்.  அங்கே நாம் ஓர் காலுறையினுட் கையை விட்டு அதன் உட்பக்கத்தை வெளிப்புறத்திற்கு எடுப்பது போல அந்த நான்காவது பரிமாணத்தினூடாக ஒரு பந்தின் உட்புறத்தையும் வெளிப்புறத்திற்குக் கொண்டு வந்துவிட முடியுமாம்.

Share this post


Link to post
Share on other sites

நான் எதிர்பார்த்ததை விடவும், மிகவும் ஆழமாகவே மரணத்தைத் தொட்டுச் செல்கின்றீர்கள், ஜீவா! :o

 

 

இது எனது சொந்த ஆக்கம் இல்லை புங்கை அண்ணா. இன்னொரு தளத்தில் இருந்தே வெட்டி ஒட்டுகிறேன்.

மேல் இருக்கும் இணைப்பை அழுத்தி தளத்திற்குச் செல்லலாம்.

 

அதே வேளை இனி மறக்காமல் இணைப்பையும் கொடுத்துவிடுகிறேன்.

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 16

 

கர்மவினைகள்

 

ஆத்மா சுவர்க்கத்தில் தனது காரண சரீரமாகிய ஊடகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்குப் பூவுலகத்துக்குத் திரும்பவேண்டுமென்ற "தாகம்" ஏற்படுகிறது. இந்நிலை சமஸ்கிருதத்தில் "திருஷ்னா" என்றும், பாளியில் "தன்ஹா" என்றும் குறிப்பிடப்படுகிறது. மனிதன் பூரணத்துவ நிலையை எய்தும் வரை, தனது ஆசைகளை அழித்து கர்மாவில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் வரை பிறந்து இறந்து கொண்டேயிருப்பான்.
 
ஒவ்வொரு பிறப்பும் முடிவடைந்தவுடன் நமது கர்மவினைகள் ஒரு செயலற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அவை நாம் பிறப்பெடுக்கும் வேளையில் நம்மை வந்தடைகின்றன. நமது கர்மவினைக்கேற்ப நமது குணச்சிறப்புகள், உணர்வுகள், மனப்பாங்குகள், மனோசக்திகள் எல்லாம் அமைந்து விடுகின்றன. நாம் புக வேண்டிய கர்ப்பாயசமும் நமது கர்மாவுக்கு ஏற்பவே நிர்ணயிக்கப்படுகிறது.
 
விஞ்ஞானத்தின் அடிப்படைத் தத்துவங்களாக காரணங்களும் விளைவுகளும் (Cause and effect) ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிரடைச் செயலும் (Equal and Opposite) இருப்பதுபோல், கர்ம நியதிக்கும் அவை அடிப்படைக் கோட்பாடுகளாக அமைகின்றன. ஒவ்வொரு செயலுக்கும் சிந்தனைக்கும் சமமான பிரதிபலன் விளைகின்றது. ஒவ்வொரு பிறப்பிலும் நாம் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்கு நாமே தான் காரணகர்த்தாக்கள். கடந்த பிறப்புகளில் நிறைய தர்மம் செய்த பயனை இப்பிறவியில் செல்வந்தனாக வந்து அனுபவிக்கின்றோம். நாம் முன்னர் செய்த பாவவினைகளுக்குப் பிரதிபலனாக இப்பிறப்பில் நோய், பிணி, வறுமை ஆகியவற்றால் துன்பப்படுகிறோம்.
 
பிரபஞ்சத்தில் எந்த நிகழ்வும் தற்செயலாகவோ விபத்தாகவோ நடைபெறுவதில்லை. எல்லாம் ஒரு ஒழுங்குமுறையில் தான் நடைபெறுகின்றன. நாம் முன்னர் செய்த காரியங்களுக்கும், இன்று செய்பவற்றுக்கும் இனிமேல் சந்திக்கப்போகும் இன்பதுன்பங்களுக்கும் நிச்சயமான ஒழுங்குமுறையான தொடர்பு உண்டு. இதுதான் கர்மநியதியின் தத்துவம்.
 
"உலகம் ஒரு கணக்கியல் சமன்பாடு (Mathematical Equation). ஒவ்வொரு இரகசியமும் வெளிப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு குற்றமும் தண்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு புண்ணியச் செயலுக்கும் பிரதிபலன் அருளப்படுகின்றது. ஒவ்வொரு தீங்கும் நிவர்த்தி செய்யப்படுகின்றது. எல்லாம் அமைதியாகவும் நிச்சயமாகவும் நடைபெறுகின்றன" என்று அமெரிக்க தத்துவஞானி எமேர்சன் தனது "Compensation" என்ற நூலில் கூறியுள்ளார்.
 
கர்ம நியதிகளின் அடிப்படையில் தான் பழியெதிர்ச்செயலாக (Retribution) தண்டனைகள் அனுபவிக்கிறோம். நமது சுயநலமற்ற சேவைகளுக்கு இழப்பீடுகளாக (Compensation) அல்லது கைம்மாற்றுக்களாக நாம் நலன்களை அடைகிறோம். உலகப் புகழ்ப்பெற்ற சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் அதுவும் சுவாச உறுப்புகளில் சத்திரசிகிச்சை செய்பவர் கடுமையாக சிகரெட் புகைப்பதை கண்ணுற்ற அவருடைய நண்பர், "நீங்களே இப்படிப் புகைத்துத் தள்ளுகிறீர்களே!?" என்று கேட்டாராம். அதற்கு அந்த வைத்திய விற்பன்னர் கூறிய பதில் மேல்நாட்டு அறிஞர்களுக்கும் கர்மாவில் நம்பிக்கையுண்டு என்பதை வெளிப்படுத்துகிறது. அதாவது "இந்துக்களும் பௌத்தர்களும் நம்பும் கர்ம தத்துவத்தில் எனக்கும் அசையாத நம்பிக்கை உண்டு" என்று அவர் கூறினாராம்.
 
Irantha-Pin---16.png
 
கர்மாவில் நம்பிக்கை உண்டென்பதால் எதையும் செய்யலாம் எப்படியும் வாழலாம் என்று எண்ணுவது அறிவுடைமை அல்ல. இருப்பினும் நம் சிந்தனைகள் செயல்களெல்லாம் நமது கர்ம வினைகளுக்குத் தொடர்பிசைவாகவே நடைபெறுகின்றன என்பதை மறுக்க இயலாது.
 
நல்ல சுகதேகியாகவும், நல்ல சூழ்நிலையில் வாழ்ந்தவராகவும் உள்ள தாயின் கர்ப்பத்தில் பிறந்த குழந்தைக்கு காரணத்தைக் கண்டுபிடிக்க இயலாத நோய்கள் பிறவிக்கூறாக இருப்பதையும் புற்றுநோய் வருவதையும் பார்த்து வைத்தியர்கள் குழப்பமடைகிறார்கள். இதற்கான காரணங்கள் அக்குழந்தையின் கர்மவினைகளில் காணப்படும். நாளாந்த வாழ்க்கையில் நாம் கர்மாவின் வினோதசெயற்பாடுகள் நேரிடையாகக் காணக்கூடியதாயிருக்கின்றது. எல்லா நற்குணங்களும் கடவுள் பக்தியும் நிரம்பிய மனிதர்கள், மிகக்கொடியவர்கள் அனுபவிக்கவேண்டிய துன்பங்களை அனுபவிப்பதையும், கொடியவர்களும் கொலைஞர்களும் வாழ்வில் எல்லாவித சுகங்களையும் பெற்றுக் களிப்புற்றிருப்பதையும் காண்கிறோம். கர்மாவின் மர்மமான செயற்பாடுகளை நாம் புரிந்துகொண்டால் அதற்கு விடை அவர்களின் முற்பிறப்புகளிலும் அவர்கள் இவ்வுலகுக்குத் தம்முடன் கொண்டுவந்த "கர்ம அறுவடை" யிலும் தங்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ளுவோம்.
 
தேசங்களும் மனித இனங்களும் இயற்கையினாலும் மனித செயற்பாடுகளினாலும் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவற்றுக்கும் கர்மாவே அடிப்படையாகவுள்ளது. ஒவ்வொரு மனிதனும் பிறக்கின்ற நாடு, இனம், குடும்பம் எல்லாம் அவனுடைய கர்மாவுக்கு ஏற்பவே நிர்ணயிக்கப்படுகின்றது.
 
மறுபிறப்பையும் கர்மாவையும் அடிப்படைத் தத்துவங்களாகக் கொண்டது இந்து சமயம்.
 
"பழுதுபட்ட ஆடைகளை களைந்துவிட்டு மனிதன் புதியவைகளை அணிந்து கொள்வது போன்று ஆன்மா பழைய உடல்களை நீத்துப் புதியன புகுகிறது" என்கிறது கீதை (அத் 2 - சு 22).
 
மறுபிறப்பு பற்றிய தெளிவுகளை அடுத்துப் பார்க்கலாம்.
 

Share this post


Link to post
Share on other sites

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 17

 

மறுபிறப்பு

 

இந்து சமயத்தின் மடியில் வளர்ந்த பௌத்த சமயமும் சமண மதமும் இந்து வேதங்களில் கூறப்பட்ட சில விடயங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டவையாயினும், மறுபிறப்பையும் கர்மாவையும் தமது ஆதார தத்துவங்களாக ஏற்றுக் கொண்டவை. கிறிஸ்துவுக்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டு முறைகளை ஆராயுமிடத்து, அவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறியக் கிடைக்கின்றது. 
 
கிறிஸ்துவுக்கு முன் 6 ம் நூற்றாண்டில் கிரேக்க தேசத்தில் பரவியிருந்த ஆர்பியஸ் வழிபாட்டு மரபில் (Orphic Cult) மனிதன் பிறப்புகள் தோறும் ஆன்மீக உயர்வு பெற்று இறுதியில் பிறப்பு – இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறான் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. இந்து மதத்துக்கே உரியதான இந்த தத்துவம் இந்தியாவுடன் தொடர்பு வைத்திருந்த அக்காலத்து கிரேக்க வணிகர்களால் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.
 
ஆதிகால கிரேக்க சமய மரபுகள் (Greek Gnosticism) இந்து சமய நம்பிக்கைகளை ஒத்திருக்கக் காணப்படுகின்றன. எம்பிடொக்கில்ஸ், பைதகொறஸ் போன்ற பேரறிஞர்கள் மறுபிறப்புத் தத்துவத்தை மக்கள் மத்தியில் கூறிவந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து பிளாட்டோவும் மறுபிறப்பு நம்பிக்கையை வலியுறுத்தினார்.
 
யூதர்களின் வழிகாட்டியும், அவர்களின் சமயக் கோட்பாடுகளுக்கு ஆரம்ப வித்திட்டவருமான மோசஸ் பரப்பிய “கபாலா” தத்துவம் மறுபிறப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் பின்னால் வந்த “மிஷ்னா”, “தல்முட்” என்ற யூத போதனைகளில் இத்தத்துவம் ஏனோ வலியுறுத்தப்படவில்லை. ஆரம்பகால கிறிஸ்தவ தத்துவங்களிலும் சிந்தனைகளிலும் மறுபிறப்பு நம்பிக்கையின் பிரதிபலிப்புகள் இருந்ததென்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
 
கி.பி. 538 – ம் ஆண்டின் கான்ஸ்டான்ட்டினோபிளில் நடைபெற்ற மகாநாட்டில் (Council of Constantinople) தான் முதல் தடவையாக ஜஸ்ரீனியன் என்ற பேரரசன் மறுபிறப்பில் நம்பிக்கை வைப்பது திருச்சபைக்கு இழிவு ஏற்படுத்தும் செயல் (Anathema) என்று சட்ட மூலமாகப் பிரகடனப்படுத்தினான்.
 
Irantha-Pin---17.png
 
இஸ்லாம் மதத்தின் “சூஃபி” (Sufi) பிரிவைச் சேர்ந்த மறைஞானி ஜெலாலுதீன் றூமி என்பவர் இவ்வாறு பாடினார்.
 
“நான் கனிப்பொருளாயிருந்தேன். பின், இறந்து
தாவரமாகினேன். பின் மிருகமாகி அவ்வுடலையும்
துறந்து மனிதனாகினேன். இறப்பதற்கு ஏன் நான்
பயப்படவேண்டும்? இறப்பதால் தான் நான்
உயர்வடைகிறேன். ஒரு காலத்தில் நான் தேவதூதர்
ஆவேன்…………………”
 
(ஆதாரம் The mystics of Islam by Reynold.A Nicholson).
 
இப்பாடல் மாணிக்கவாசக சுவாமிகளின் பின்வரும் திருவாசகத்தை நினைவுறுத்துகிறது.
 
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவாராயத் தேவராய்ச்
செல்லா அநின்றவித் தாவர சங்கமத்து
ளெல்லா பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்”.
 
மனிதன் முக்தியடையும் வரை அவனுடைய ஆத்மா பிறப்பெடுத்துக் கொண்டேயிருக்கும் என்று இந்து சமயம் புகட்டுகிறது.
 
கி.மு. 5 – ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெறோடொட்டுஸ் (Herodotus) என்பவர் “எகிப்தியர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்தனர் மனிதனின் ஆத்மா அழிவற்றது. மனிதன் இறந்தவுடன் இன்னொரு உடலினுள் அவனுடைய ஆத்மா புகுந்து விடுகிறது என்று நம்பினார்கள்” என்று குறிப்பிடுகிறார்.
 
அலெக்சாந்திரியாவின் கிளமேந்து என்னும் போப்பாண்டவர் (2ம் நூற்றாண்டு) அதேகாலத்துப் பேரறிஞர் ஓறிஜின் ஆகியோரும் மறுபிறப்பு தத்துவத்தில் தமக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.
 
ஜெருசலத்தில் பிரம்மாண்டமான தேவாலயத்தை நிறுவிய இஸ்ரவேல் நாட்டின் புகழ்பெற்ற மன்னன் சாலமன் (கி.மு 970 – 933) வெளியிட்ட “அறிவுக்களஞ்சியம்”  (book of wisdom) என்ற தனது நூலில் “நான் நல்லவனாயிருந்ததால் எனது ஆத்மா ஒருநல்ல உடலில் புகுந்து கொண்டது” என்று கூறியுள்ளார்.
 
மேற்கு நாட்டு அறிஞர்கள் பலர் மறுபிறப்பில் தமக்கு உண்டான நம்பிக்கையை தங்கள் நூல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களில் இங்கிலாந்தைச் சேர்ந்த Samuel Alexander (1859 – 1939) பிறான்ஸ் தேசத்தைச் சேர்ந்த Henri Bergson (1859 – 1941) ஆகியோர் முக்கியமானவர்கள். அமெரிக்கப் பேரறிஞர் எமேர்சனும் (1803 – 82) மறுபிறப்புத் தத்துவத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
 
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த டாக்டர் இவான்ஸ் வென்ஸ் (Dr. Evans Ventz) ஒரு ஞான ஆராய்ச்சியாளர். இவர் 1958-ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் உரையாற்றிய பொழுது, “இன்னும் ஐம்பது வருடங்களில் விஞ்ஞானிகள் மறு பிறப்புத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டுவிடுவார்கள்” என்று கூறினார். இன்றைய சமுதாயம் விஞ்ஞான அடிப்படையில் ஆய்ந்தறிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத எதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் சுபாவமுடையது. இருந்தும் இறப்புக்குப் பின் ஏதோவொரு வகையில் மனித வாழ்வு தொடர்கின்றது என்ற நம்பிக்கை இப்போது உலக மக்கள் மத்தியில் பரவலாக நிலை பெற்றுவிட்டது.
 
கடவுளை நம்புகிறவர்களுக்கு கர்மாவிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை வைப்பது தவிர்க்க முடியாததாகின்றது.
 

அடுத்து முற்பிறப்பு நினைவுகள் பற்றிப் பார்க்கலாம்.

 

 

http://ithutamil.com/content.aspx?type=2&postid=b666f5d8-33f4-40bc-8434-41069d2bd2bd#.UkR1QlOC-yw

 

Share this post


Link to post
Share on other sites
 
இஸ்லாம் மதத்தின் “சூஃபி” (Sufi) பிரிவைச் சேர்ந்த மறைஞானி ஜெலாலுதீன் றூமி என்பவர் இவ்வாறு பாடினார்.
 
“நான் கனிப்பொருளாயிருந்தேன். பின், இறந்து
தாவரமாகினேன். பின் மிருகமாகி அவ்வுடலையும்
துறந்து மனிதனாகினேன். இறப்பதற்கு ஏன் நான்
பயப்படவேண்டும்? இறப்பதால் தான் நான்
உயர்வடைகிறேன். ஒரு காலத்தில் நான் தேவதூதர்
ஆவேன்…………………”

 

 
இஸ்லாமிய மதத்தில் இருக்கும் முக்கிய குறைபாடு ' தேடலுக்கு' அங்கு இடமில்லை என்பதாகும்!
 
நாடோடிகளாகத் திரிந்த, மனிதர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு ஒரு அடையாளமொன்றைக் கொடுப்பதில் 'இஸ்லாம்' வெற்றிபெற்றிருந்தாலும், 'ஆத்மீகத் தேடலுக்கு' அங்கு இடமிருக்கவில்லை என்பது பலரது கருத்தாக இருந்தது!
 
இதற்குப் பதில் சொல்லவே' சுபி' என்னும் இஸ்லாமியப் பிரிவு தோற்றப்பட்டது என்று கூறப்படுகின்றது! இந்தப் பிரிவில், சங்கீதமும், நடனமும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன என நினைக்கிறேன்!
 
தொடருங்கள், ஜீவா!

Share this post


Link to post
Share on other sites
 
முற்பிறப்பு நினைவுகள்
 
எமது இயல்புணர்ச்சிகள் (Instincts) முற்பிறப்பு அனுபவங்களில் இருந்து பிறந்தவையே. குழந்தை பிறந்தவுடன் தாயின் பாலைத்தேடுவதும், மனிதர் ஒருவர் மீது ஒருவர் கண்டதும் காதல் கொள்வதும் ஒருவரை நாம் எவ்வித காரணமும் இல்லாமல் வெறுக்கத் தோன்றுவதும் முற்பிறப்புகளின் ‘விட்ட குறை தொட்டகுறை” என்றே கூறவேண்டும். மனிதனின் மனப்பாங்கு, குணாம்சங்கள், செயல்நாட்டம், திறமை எல்லாம் முற்பிறப்பின் தொடர்ச்சியாகவே இயங்குகின்றன. ஐந்து வயது சிறவன் மிருதங்கம் கதாகாலஷேபம் செய்வதும், முற்பிறப்புகளில் வளர்த்துக் கொண்ட திறமைகளின் தொடர்ச்சிகளே.
 
முற்பிறப்பு அனுபவங்கள் நமது மனதின் அடி உணர்வு தளத்தில் (Sub-conscious mind) பதிந்து விடுகின்றபடியால் அவை சூட்சும நிலையில் நம்மோடு கூடவே இருந்து கொண்டு பிறப்புக்கள் தோறும் தொடர்ந்து வருகின்றன. கனவுகளில் சில சமயங்களில் நீண்ட காலத்துக்கு முந்தைய பிறப்புக்களின் அனுபவங்கள் பிரதிபலிப்பதுண்டு. ஆகாயத்தில் பறந்து செல்வது போல் நாம் கனவு காண்பது.. பறவைகளாக இருந்த முற்பிறப்புக்களின் அனுபவங்களே.
 
முற்பிறப்பு ஞாபகங்கள் இயல்பாக நமக்கு இருப்பதில்லை. ஆழ்ந்த தியானத்தின் மூலம் கிடைக்கப் பெறும் ஒரு நிலையில் இருந்து முற்பிறப்புகளை அறியலாம். புத்தர் பெருமான் “அங்குத்தற நிக்காயா”வில் இந்த யோகநிலையை எப்படி பெறுவது என்று தனது சீடர்களுக்கு விளக்கியுள்ளார்.
 
அறிதுயில் நிலையில் பின்னோக்கிச் சென்று (Hypnotic Regression) முற்பிறப்புக்களை அறிதல் சாத்தியம் என நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அறிதுயில் நிபுணர் (Hypnotist) தனது மனோசக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள நபரின் ஞாபகச் சக்தியை தான் விரும்புவது போல் நூறு இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செலுத்தித் தகவல்களைப் பெறுவார்.
 
Irantha-Pin---18.png
 
இப்படியான ஒரு ஆய்வின்போது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரைடி மர்ஃபி (Bridey Murphy) என்னும் பெண்மணி அயர்லாந்தில் நிகழ்ந்த தனது முற்பிறப்பை நினைவு கூர்ந்து அதன் முழு விபரங்களையும் தெரிவித்தார். அவர் தனது முற்பிறப்பு நிகழ்ந்ததாகக் கூறிய ஆண்டு அண்மைய காலமாயிருந்ததனால் தேவாலய பதிவேடுகள், அரசாங்க எழுத்துக் குறிப்புகள் மூலம் அவருடைய கூற்றுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்திலும் இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டு மறுபிறப்புக்கு ஆதாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
 
அமெரிக்காவில் கென்ரக்கி என்னும் நகரில் வாழ்ந்த எட்கர் கைஸ் (Edger Cayce) என்பவர் அறிதுயில் நிலையில் இருந்துகொண்டு மனிதர்களுடைய நோய்களைக் கண்டுபிடித்து அதற்குச் சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் கூறுவார். இவர் ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்களுடைய நோய்களுக்கு அவர்களுடைய முற்பிறப்பு “கர்மா” தான் காரணம் என்று அறிதுயில் நிலையில் இருந்து கொண்டு கூறினார். அவருக்குச் சுயநினைவு வந்தவுடன் “கர்மா” என்றால் என்ன என்று அவரிடம் கேட்டபொழுது அப்படியான ஒரு பதத்தை தான் கேள்விப்பட்டதேயில்லை என்றார். தனது முற்பிறப்பின் அறிவையும் ஆற்றலையுமே அறிதுயில் நிலையில் இருந்து கொண்டு வெளிப்படுத்தினார் என்று தெரிகிறது.
 
தியானத்தை வழிபாட்டு முறையாகக் கொண்ட இந்துக்களினதும் பௌத்தர்களினதும் மத்தியில் தான் மற்பிறப்பு ஞாபகங்கள் உள்ளவர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் கிடைத்த முற்பிறப்பு ஞாபகங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் அமெரிக்காவில் உள்ள வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் உள ஆய்வியல்துறைப் பேராசிரியர் ஐயன் ஸ்ரீவன்சன் என்பவராலும் பிறான்கிஸ் ஸ்ரோறி என்பவராலும் ஆய்வு செய்யப்பட்டன. இவைகளில் இருபது முற்பிறப்பு சம்பவங்கள் ஆய்வுக்குறிப்புகளின் ஆதாரங்களுடன் “fate” என்னும் சஞ்சிகையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளன.
 
அடுத்து சில முற்பிறப்பு சம்பவங்கள் பார்க்கலாம்.
 

 

Share this post


Link to post
Share on other sites

நன்றி ஜீவா அண்ணா, தொடர்ந்து இணையுங்கள்.

 

இறப்பு என்பது உடல் எனும் இயந்திரம் நின்று விட்டதாக கொள்வதா அல்லது ஆன்மா உடலை விட்டு பிரிந்து வேறெங்கோ செல்வதாக கொள்வதா என்பதில் எனக்கு நிறையவே குழப்பம் உள்ளது.

மரண தறுவாயில் இருக்கும் சிலர் ஏற்கனவே இறந்த தமது உறவுகளின் பெயரை சொல்வார்கள். அதனால் அவர்கள் ஆவி வந்து இவரை அழைக்குதோ என நினைத்ததுண்டு.  :) ஆனால் மரண தறுவாயில் பழைய நினைவுகள் மனதில் சுழலும் என கேள்விப்பட்டிருக்கிறேன். :rolleyes: பழைய சம்பவங்களை நினைக்கும் போது அதில் அவர்கள் பெயர் சம்பந்தப்படுவதால் கூறியிருப்பார்கள் என பின்னர் நினைப்பதுண்டு. :unsure: இதனால் ஆவிகள் இருப்பதை நான் இன்னும் நம்பவில்லை. ஆனால் இல்லை என உறுதியாக கூறவும் முடியவில்லை. :rolleyes:

 

ஒரு உருவம் தன்னை துரத்திக்கொண்டு வருவதாக எமது குடும்பத்தில் ஒருவர் இறப்பதற்கு சிறிது நேரத்தின் முன் கூறினார் என கேள்விப்பட்டேன். அது உண்மையா அவரின் மன பிரம்மையா என தெரியவில்லை. அதே போல் இறப்பு நடப்பதற்கு முன் நாய்கள் குரைப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அது தற்செயலாக குரைக்கிறதா அல்லது எதையாவது பார்த்து குரைக்கிறதா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.

 

(சில பகுதிகளே வாசித்துள்ளேன். மிகுதியும் வாசித்தால் சிலவேளை இவற்றுக்கு பதில் கிடைக்கலாம்.)

 

விஞ்ஞான ரீதியாக ஆவிகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும்,
தேவகணம் உள்ளவர்கள் "தாம் இறந்தவர்களை ஆவியாக கண்டதாக" கூறினாலும் அதை எந்த அளவில் நம்புவது என தெரியவில்லை. எனவே என்னை பொறுத்தவரை மரணத்தின் பின்னர் என்ன நடக்கும் என்பதை நான் மரணிக்கும் போது தான் கண்டு கொள்வேன். :unsure:

Share this post


Link to post
Share on other sites

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 19

 

முற்பிறப்பு சம்பவங்கள்

 

வர்ணசிறி அதிகாரி என்பவர் 9.11.1957இல் “கிறிகற்ற” என்ற கிராமத்தில் பிறந்தான். இவனுக்கு நாலு வயது ஆகும் பொழுது தான்,  கடந்த பிறப்பில் “கிம்புல்கொட” என்ற கிராமத்தில் மஹிபால என்பவருக்கு மகனாயிருந்ததாகவும், அப்பிறப்பில் தனது பெயர் “ஆனந்தா மஹிபால” என்றும் கூறினான். தனது முற்பிறப்பில் நடைபெற்ற சில நகழ்ச்சிகளும், உற்றார், உறவினர், உடைமைகள் ஆகியவற்றின் விபரங்களும் அவனால் கூறப்பட்டு பிறான்சிஸ் ஸ்ரோறி என்பவரால் நுணுக்கமாக விசாரணை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. ஆனந்தா மஹிபால 26.10.1926ல் பிறந்து 26.10.1956இல் சடுதியாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பதினைந்து நாட்களுக்குப் பின்னர் “கிறிகற்ற” என்ற கிராமத்தில் வர்ணசிறி பிறந்ததாகக் கூறப்பட்டது.
 
கண்டியில் இருந்து இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள “உடுபோகவ” என்ற கிராமத்தில் 26.4.1959இல் பிறந்த பெண்குழந்தை “டிஸ்னாசமரசிங்க” என்பவள் ஒன்றரை வயதாகியதும் முற்பிறப்பைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள். மூன்று வயதைத் தாண்டியவுடன் முற்பிற்பு விபரங்களைத் துல்லியமாகத் தெரிவித்தாள். “வெற்றாவ” என்னும் கிராமத்தில் 63வயது வரையிலும் வாழ்ந்து 15.01.1958ல் இறந்து போன “பபானோனா” என்னும் வயோதிக மாது பதினைந்து மாதங்களின் பின் “உடுபோகவ” என்னும் கிராமத்தில் பிறந்த “டிஸ்னாசமரசிங்க” என்பது தக்க ஆய்வுகளின் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
முற்பிறப்பு ஞாபகங்கள் உள்ளவர்கள் இலங்கை, இந்தியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நிறைய இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆசைகள், பாசங்கள் காரணமாகவும் தனி ஒதுக்க (Insular) சிந்தனைகள் காரணமாகவும் மறுபிறப்புகள், முற்பிறப்புக்குத் தொடர்புள்ள சூழலிலேயே, அதே இனம், அதே மொழி பேசுபவர்கள் மத்தியிலும் அண்மித்த கிராமங்களிலும் பெரும்பாலும் நிகழ்வதாகத் தெரிகிறது. அதே நேரம் தூர தேசங்களில் போய் பிறப்பவர்களும் உண்டு. 
 
அம்பலாங்கொடையில் பிறந்த ரமணி செனிவரத்னா என்ற சிறுமி தான் முற்பிறப்பில் வட இந்தியாவில் மணிப்பூரில் நாட்டியக்காரியாக இருந்ததாகக் கூறினாள். முற்பிறப்பில் அவள் பெற்ற அனுபவத்தின் தொடர்ச்சியாக நாட்டியக் கலையில், குறிப்பாக இந்திய நாட்டியங்களில் அபூர்வமான தேர்ச்சி பெற்றவளாகக் காணப்பட்டாள். நாட்டியத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் பார்த்து அதிசயிக்குமளவுக்கு அவள் நாட்டியக் கலையில் திறமைப் பெற்றவளாகத் திகழ்ந்தாள்.
 
Irantha-Pin---19.png
 
“இங்கு எப்படி வந்து பிறந்தாய்?”என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவள் “எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஆறு இருந்தது. அதில் எனது அண்ணன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது நான் ஒரு உயரமான பாறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென பாறையில் இருந்து தவறி கீழ் ஒரு கற்குவியல் மீது விழுந்து படுகாயமுற்றேன். பின்னர் வைத்தியசாலைக்கு என்னை எடுத்துச் சென்றது தெரியும். அதன் பின்னர் இங்கு வந்துவிட்டேன்” என்றாள்.
 
முற்பிறப்பில் இங்கிலாந்து வாசியாக இருந்தவர் இலங்கையில் வந்து பிறந்த நிகழ்ச்சியும் தெரியவந்துள்ளது. கோட்டை (Kotte) யில் பிறந்த “ரஞ்சித் மாலகந்த” என்ற சிறுவன், மூன்றரை வயதை அடைந்தபொழுது தனது முற்பிறப்பு விபரங்களைக் கூற முற்பட்டான். இங்கிலாந்தில் வசித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய அந்நாட்டு சீதோஷ்ண நிலை, பழக்க வழக்கங்கள் யாவற்றையும் மூன்றரை வயது சிறுவன் துல்லியமாக விவரித்தான். மேலும் கிறிஸ்தவ மரபில் நாட்ட முள்ளவனாகவும் ஆங்கிலேயர்களின் பழக்க வழக்கங்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் ஆங்கிலேய உணவு வகைகளை விரும்புவனாகவும் அவன் காணப்பட்டான். இலங்கை வானொலியில் ஆங்கில ஒலிபரப்பில் பெண் அறிவிப்பாளரால் செய்திகள் வாசிக்கப்பட்டதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு “இப்படித்தான் எனது மம்மி பேசுவாள்”என்று கூறினான்.
 
சிலர் பிறவிக்கூறான உருச்சிதைவுகளுடனும் அடையாளங்களுடனும் பிறக்கிறார்கள். இதற்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் காண இயலாதிருக்கும். ஆனால் இதற்கான காரணங்கள் முற்பிறப்பின் சிந்தனையும் உடலும் சார்ந்த (Psychosomatic Reaction) விளைவுகள் எனத் தெரிய வருகின்றது. தாய்லாந்தில், “பிறாசொம்” என்ற புத்தகுரு தனது முற்பிறப்பின் நிகழ்வுகளைத் தெரிவித்தார். இவர் 3.11.1939ல் “பான்சாய்” என்ற கிராமத்தில் பிறந்தவர். அவருக்கு மூன்று வயது நிரம்பியவுடன் முற்பிறப்பு விவரங்களைக் கூற ஆரம்பித்தார். “பாக்லாட்” என்ற கிராமத்தில் “நாசொய்” என்ற பெயரில் தான் முற்பிறப்பில் இருந்ததாகவும், தனது 45வது வயதில் ஒரு பெண்ணைப் பலவந்தப்படுத்திய பொழுது, அவள் கத்தியால் தனது நெஞ்சில் குத்தியதன் விளைவாகத் தான் இறந்து விட்டதாகவும் கூறினார். இவர் பிறந்த பொழுது இவருடைய நெஞ்சில் கத்திக்குத்தினால் ஏற்பட்டது போன்ற ஒரு வடு காணப்பட்டது. பிறாசொம்மின் தாயார் இவர் பிறந்தபொழுது இவருடைய நெஞ்சில் வெட்டுக்காயம் போன்ற ஆறாத புண் ஒன்று காணப்பட்டதாகவும் அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் கூறினார். இந்த விவரங்கள் எல்லாம் ஒப்பு நோக்கப்பட்டு சரியாக  இருக்கக் காணப்பட்டன.
 
முற்பிறப்பில் நமது மனதை பலமாக அழுத்தி ஆக்கிரமித்து இச்சையை அடைவதற்காகவென்றே சில சமயங்களில் நாம் மறுபிறப்பு எடுப்பதுண்டு. பர்மாவிலும் தாய்லாந்திலும் ஆய்வு செய்யப்பட்ட முற்பிறப்பு சம்பவங்கள் பல இதங்கு ஆதாரமாக எடுத்துக் கூறக் கூடியனவகையில் நிகழ்ந்துள்ளன.
 
முற்பிறப்பில் ஆணாக அல்லது பெண்ணாக இருந்த ஒருவர் அடுத்த பிறப்பில் மாறி பிறக்க வாய்ப்பிருக்கிறதா?
 
அடுத்து பார்க்கலாம்.
 
 
 

Share this post


Link to post
Share on other sites

பிறவிக்கூறான உருச்சிதைவுகளுடனும் அடையாளங்களுடனும் குழந்தை பிறக்காது இருப்பதற்கு, விஞ்ஞான ரீதியாகவும் எற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடுகளையும், அதற்கான விளக்கங்களையும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனைப் பின்பற்றுவதில்தான் சிரமமுள்ளது. இதனை உணரும்போது பருவம் கடந்து விடுகிறது. பருவம் உள்ளபோது உணருவதற்கு பொறுமை இருப்பதில்லை. பெரும்பாலும், காம உணர்ச்சியின் உச்சத்தின் செயல்பாடே ஆண் பெண்ணை இணைய வைக்கிறது. ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என்ற உணர்வோ, உணர்ச்சியோ அங்கு உச்சம் பெறுவதில்லை. குறைபாடுகளுடன் பிறப்பதற்கு முற்பிறப்பின் செயற்பாடுகள் என்று காரணம்காட்டிச் சமாதானம் அடைவதை, இயலாமையின் செயற்பாடு எனவும் வாதிடலாம். 

Share this post


Link to post
Share on other sites

இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 20

 

 

மறுபிறப்பும் பால் வேறுபாடுகளும்

 

மனிதர்களில் பெண்ணாகப் பிறந்துவிட்டதற்காக வருந்துபவர்களோ அல்லது ஆணாகப்பிறந்து விட்டோம் என்று பெருமிதம் கொள்பவர்களோ பெரும்பாலும் இருப்பதில்லை. ஏதோ சிலர் துயர்தரும் சம்பவங்களின் போது “பெண்ணாக ஏன் பிறந்தோம்” என்று நினைத்தாலும், பெண்ணாகப் பிறந்ததற்காக தன்னையே நொந்து கொள்பவர்கள் வெகுசிலரே. பெண்ணாகப் பிறந்ததால் பல நன்மைகளும் உண்டு. ஆணாகப் பிறந்தவர்களுக்குப் பலகஷ்டங்களும் இருக்கவே செய்கின்றன. இயற்கையின் விசித்திரம் என்னவென்றால் ஆண் தனது ஆண்மையை நேசிப்பது போலவே பெண்ணும் தனது பெண்மையை நேசிக்கும்இயல்புணர்ச்சிகள் மனிதர்களிடம் இருக்கின்றன.
 
மனிதக் கருவுயிரின் (Embryo) மரபுவழித் தனிச்சிறப்புப் பண்புகள் தாய் தந்தையரின் சரிசமனான இனக்கீற்றுக்களில் (chromosomes) இருந்தே உருவாகின்றன. ஆனால் பிறக்கும் உயிரின் “பால்” எப்படி நிர்ணயிக்கப்படுகின்றது என்று விஞ்ஞானம் விளக்குகிறது. இனக்கீற்றுகள் X,Y என பாகுபடுத்தப்படுகின்றன. பெண் உயிரணு (Cell) இரண்டு X இனக்கீற்றுகளை கொண்டதாகவும் ஆண் உயிரணு ஒரு X இனக்கீற்றையும் ஒரு Y இனக்கீற்றையும் கொண்டதாகவும் உள்ளன. கருத்தரிக்கும் பொழுது ஆணின் கருவுயிர் நீர்மத்திலுள்ள உயிரணு பெண் உயிர்மத்துடன் ஐக்கியமாகி ஒருமுழுமையான உயிர்மம் உருப்பெறுகிறது.

Irantha-Pin---20.png
 
பின்னர் உயிர்மப் பிளவியக்கம் (Mitosis) நடைபெற்று கரு உருவாகின்றது X இனக்கீற்றும் Y இனக்கீற்றும் சேர்வதால் சிசு பெண்ணாகவும் ஏனைய வகைகளில் இனக்கீற்றுகள் சேர்ந்துகொள்ளுமிடத்து ஆணாகவும் உருப்பெறுகின்றன. இவ்வாறாக இனக்கீற்றுகள் சேர்ந்து ஆணோ, பெண்ணோ உருவாவது தற்செயலாக நடைபெறும் காரியம் அல்ல. நமது கர்மாவே இதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.
 
பெண்ணிடத்தோ ஆணுக்கு இருக்கவேண்டிய குணாம்சங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப பிறப்புகள் தோறும் படிப்படியாக பரிணமிப்பது இயல்பு. இதேபோல் ஆணிடமும் பெண்மை மயமான குணாம்சங்கள் தோன்றுவதுண்டு. இந்த நிலைக்கு நமது  சிந்தனைகளும் செயற்பாடுகளுமே காரணங்களாகவுள்ளன.
 
இப்பரிணாம மாற்றங்கள் முதிர்வடையும்பொழுது இறப்பவர்கள் மறுபிறப்பில் ஆண்கள், பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் பிறக்கக்கூடும். இந்த மாற்றங்கள் பூரணத்துவம் பெறமுன்னர் இறப்பவர்கள் ஆண்மையுடைய பெண்களாகவும் பெண்மையுடைய ஆண்களாகவும் பிறக்கிறார்கள்.
 

Share this post


Link to post
Share on other sites