Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பார்பதி அக்காவும் பாம்பும் ..!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் மிக அதிக மக்கள் தெரிந்து இருக்க கூடிய ஆள் நம்ம பார்வதி அக்கா எவர் என்ன உதவி கேட்டலும் முகம் சுளிக்காமல் செய்து கொடுப்பா சிலர் அதை அவர் கஸ்ரம் என்பதால் செய்கிறார் என்றும் சொல்லுவினம் ஆனால் அவா அப்படி இல்லை அருமையான ஆள் வீடுக்கு தன் மகனுடன் வரும் நண்பர்களை வாங்கோ தம்பி இருக்கு என்ன சாப்பிடிறியல் என தனது கஸ்ரம் காட்டாது உபசரிப்பு செய்வதில் எங்கள் மனம் நெகிழ்த்து போகும்

இப்படி இருத்த பார்வதி அக்காக்கு சமாதான காலம் வர போக்குவரத்து சுகம் ஆக பிரிந்து இருத்த உறவுகள் எல்லாம் தேடிவந்து உதவி செய்ய கொஞ்சம் வசதியா வர தொடங்கினா அவாவின் செயல்பாடுகளும் ஓவரா போக ஒரு மாமன் முறையான ஒருவரின் உதவியுடன் மகன் வெளிநாடு வந்தான் பின்னர்

அவன் உழைத்து யுரோ ரூபாவா மாற பார்வதி அக்காவும் மாற தொடங்கினா அக்கம் பக்கம் எல்லாம் போகமாட்ட ஒரு போன் எப்பவும் கழுத்தில் தொங்கும் இப்படி கடும் அலப்பரை

வீட்டுக்கு முதல் சுற்றி சுவர் கட்டினா எல்லோரும் வாயை பிளந்து நிண்டினம் பார்த்தியா அந்தபெடி அள்ளி அனுப்புது பார்வதி விட்டு விசுக்குது என்று நாடு நகரம் எல்லாம் பேச்சு மகனும் அம்மா கஸ்ரபட்டு வளர்த்த்வா சந்தோஷமா இருக்கடும் எண்டு பார்த்து பாராமல் இங்க வட்டிக்கு வேண்டி அனுப்பிறது பாருங்கோ


பின்னர் ஒருவருடத்தில் வீடும் கட்டி எல்லாம் புதுசா வாங்கி போட்டு ஐரோப்பா மெடலில வாழ்ந்த பார்வதி அக்கா அக்கம் பக்கம் எவரையும் அண்டுவது இல்லை எல்லாம் வசதி செய்கிற வேலை ஆனாலும் அவாக்கு ஒரு கவலை தன்னிடம் இருக்கும் வசதி ஒருவருக்கும் தெரியாது எப்படி சொல்லுவது யாராவது வந்து போனா சொல்லுவினம் இங்கதான் எவரும் வருவது இல்லையே என்கிற ஏக்கம் இருந்தது ஒருநாள் கடும் சத்தம் அவாவின் வீட்டுல் பக்கத்துக்கு சனம் என் எண்டும் கேட்கவில்லை சரி காலையில் பார்ப்பம் எண்டு இருந்துட்டு

சரி நம்ம ஊர்காரி எண்டு சரசு அக்கா என்ன இரவு ஒரே சத்தம் என்ன புதினம் எதாவது பிரச்சினையா எண்டு கேட்க ஓம் சரசு இரவு புதுசா கட்டின கொமட்டுக்குள்ள தண்ணி குளிர்மைக்கு பாம்பு வந்து படுத்திட்டு நான் லையிட்ட போட பார்த்து திகைச்சு போனன் ஆ பிறகு என சரசு விழிய விரிக்க பிறகு என்ன அடிப்பம் எண்டு தடிய எடுத்து வந்தன் புது கொமட்டு வேற உடைச்சாலும் எண்டு பாம்பை மெதுவா தள்ளி விட அது அப்படியே போய் நாற்பதுனாயிரம் ரூபா பிறிச்சுக்கு கிழபோட்டுது என்ன சனியன் எண்டு அதால தட்டி எடுத்து விட திரும்பவும் ஊர்த்து சம்ஸுக் டிவி பிளாஸ்மா கிழ போட்டுது சரசு வாயை திறந்து பெரியா டிவியா என கேட்க ஓம் அது ஒருலட்சம் எண்டு பதில் சொல்லிட்டு தொடரத்தா

அட கருமம் என்ன இது எண்டு தடிய அதுக்குள்ளே விட்டு இழுத்து பாம்பை எடுக்க அது அப்படியே டவுள் வெட் கட்டிலுக்க போட்டுது பிறகு ஐந்து பற்ரி டச் எடுத்து அடிச்சு பார்த்தா மூலைக்குள்ள  கிடக்கு அந்த வளமா வந்து அடிக்க முடியாது என சொல்ல சரசு மறுபடியும் என் அக்கா என அந்த மூலையில்தான்  கொம்புயுட்டர் கிடக்கு சரசு பெருமுச்சு விட்டபடி ஆஆ என பிறகு ஒருமாதிரி தட்டி தட்டி கொண்டுவர அது கதவு ஒட்டையல குசினிக்க போட்டுது

அது வெளிய போக இடம் தெரியாமல் எலைர்ரிக் அடுப்பால ஏறி மைக்குரோனுக்கு மேலால ஊர்த்து அப்படியே பாண்  சூடுபண்ணுறது ஆல கீழல வந்து சுடுதண்ணி வைக்கிற கிற்றர்க்கு மேலால போய் ஏசி பூட்டின வயரால நழுவி சோனி பாக்ஸ் செட்டுக்கு மேல விழுந்து ஒடதொடங்க நான் எட்டி அடிக்க அடி பிடிக்க வில்லை பிறகு முன் போர்ட்டிக்கோ கதவால வெளிய ஓடிட்டு என்று பார்வதி அக்கா சொல்லி முடிக்க சரசுக்கு தலை சுற்ற வெளிக்கிட பாம்பு வந்ததா வரவைக்க பட்டதா என்கிற குழப்பம் நிறைச்ச கேள்வியோட சரசு நகர ஒருபடிய ஊர் குருவிக்கு நான் வாங்கின பொருள் எல்லாம் சொல்லியாச்சு எங்கிர சந்தோஷத்துடன் பார்வதி அக்கா சந்தைக்கு போக தனது குலின்க்  கிளாசை தேடினா .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதைத்தான் சொல்லுறது அற்பனுக்கு மவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்று நல்ல கதை வாழ்த்துக்கள் -

புதுசா பணம் வசதி வந்தா எங்கட ஆக்கள் படுற பாட்டை பார்க்கணுமே செப்பா சொல்லி முடியாது . :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியும் ஒரு வழியிருக்கா...களத்தில் ஒருவர் இதைவிட சொல்லுவார்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல படிப்பினையுடன், நகைச்சுவையாக கதை கூறிய விதம் அழகு, அஞ்சரன். :) 
பார்வதி அக்காவைப் போல்... எம்மில் பலர், புலம் பெயர் தேசங்களிலும்... வாழ்கிறார்கள் என்பதை கண்கூடகக் கண்டுள்ளேன். :D  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பாம்பு பிரிட்ஜில் ஏறி கொமட்டுக்குள் போன கதையை அடிக்கடி மற்றவர்களைக் கடிக்கப் பாவிப்பதுண்டு. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள் அஞ்சரண். தொடர்ந்தும் எழுதுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்  அஞ்சரன் ! :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 நகைச்சுவையாக கதை கூறிய விதம் அழகு.தொடர்ந்து எழுதுங்கள்.

Link to post
Share on other sites

இதை ஊரில் பாம்புகதை என்று சொல்வார்கள் . கதையும் அது சொல்லிய விதமும் உங்களை ஓர் மாறுபட்ட கதை சொல்லியாக  அடையாளப் படுத்துன்கின்றது . தொடர்ந்து உங்கள் பாணியில் எழுத எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் அஞ்சரன் :) :) .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஊக்கம் தரும் அனைவருக்கும் நன்றி எழுத்து பிழைகளை மன்னியுங்கள் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=ZbaC6zmqjSI

 

இது தான்... பார்வதி அக்கா வீட்டு... கக்கூஸ் அறைக்குள், வந்த பாம்பு.

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 

இது தான்... பார்வதி அக்கா வீட்டு... கக்கூஸ் அறைக்குள், வந்த பாம்பு.

 

 

தலீவா,நம்ம ஊருக்கு வந்து, திரும்பிப் போறவைக்கு, கொஞ்சநாளைக்கு எல்லாம் பெரிசு, பெரிசா இருக்கும்!

 

 

http://cdn.themetapicture.com/media/funny-gif-toilet-spider.gif

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் மருவிய வடிவமாகவே சில இடங்களில் முகப்புத்தகத்தையும் நோக்கவேண்டியுள்ளது.

முகப்புத்தகத்தில் பகிர வேண்டும் என்றே சில கண்றாவியை எல்லாம் போடுகிறார்கள். :wub:

 

இப்படிப் பலர் ஊரெல்லாம் இருக்கிறார்கள். நல்ல கரு வாழ்த்துக்கள் ப்றோ .. :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்வதி அக்காவும் பாம்பும் எண்டு தலைப்பை பாத்திட்டு  ஏதோ அந்தமாதிரி கதை எண்டு  நினைச்சு உள்ளை வந்திட்டன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாத்தையும் விலாவாரியாய் கேட்டிட்டு அடுத்த நாள் ஓடு பிரிச்சு இறங்கி இருக்கவேணும் பார்வதி அக்கா வீட்டை.. :D சரசு பிழை விட்டிட்டா... நல்லாயிருக்கு அஞ்சரன் அண்ணை.. தொடர்ந்து எழுதுங்கள்...

Link to post
Share on other sites

நகைச்சுவை பாம்புக்கதை நன்றாக உள்ளது, அஞ்சரன்.

Link to post
Share on other sites
 • 5 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.