Jump to content

தமிழீழ தேசிய ஆங்கில தொலைக்காட்சி.


Recommended Posts

ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ ஜோன் ஸ

http://www.lankasritv.com/ntte.wmv

தாயகத்தில் இன்றைய நெருக்கடியான போர் மேகங்கள் சூழ்ந்த காலகட்டத்திலும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியானது ஆங்கிலத்திலும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. தமிழீழத்தின் செய்திகளையும், தமிழ்த்தேசியத்தின் உண்மை நிலைமைகளையும் உலகிற்கு எடுத்தியம்பவும் இச்சேவை உலகிலுள்ள ஆங்கில ஊடகங்களுக்கு இணையான தரத்தில் தொடங்கப்பட்டதாக அறிய முடிகிறது. இச்சேவையானது சிறீலங்கா இனவாத அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன அழிப்புகளின் உண்மைகளை சர்வதேசத்தின் கண் முன்னால் கொண்டுவருமென்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் ஏற்கனவே புலத்தில் பெருக்கெடுத்திருக்கும் தொலைக்காட்சி, வானொலி ஊடகங்கள் இன்றும் தென்னிந்திய சினிமாக்களிலும், சின்னத்திரைகளிலும் மூழ்கிக் கிடப்பதை வேதனையுடன் பார்க்க வேண்டியுள்ளது. இன்று ஈழத்தமிழினம் பன்மொழி பேசும் நாடுகளில் வாழ்ந்து வந்த போதிலும் எமது பிரச்சாரங்களை அந்தந்த நாடுகளில் அந்தந்த மொழிகளிலும் தீவிரப்படுத்தவோ அல்லது அந்தந்த நாடுகளில் வளரப்போகும் எமது அடுத்த தலைமுறையினருக்கு தாயக நிகழ்வு-நிலைமைகளை இலகுவாக எடுத்துச் செல்லவோ இவ்வூடகங்கள் தவறிவிட்டன. தினமும் பலமணிநேரம் தென்னிந்திய சினிமாவெனும் கனவுத் தொழிற்சாலைக்காகவும், நேரத்தைப் பாழடிக்கும் சின்னத்திரைகளையும் ஒலி-ஒளிபரப்பும் இவர்கள் ஓரிரு மணிநேரத்தையாவது பிறமொழி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கலாம். இனியாவது இவர்கள் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று எமது வாசகர்கள் பலர் எமக்கு தொலைநகல்களினூடே தெரிவித்திருக்கிறார்கள்.

http://www.nitharsanam.com/?art=20121

Link to comment
Share on other sites

  • 1 month later...

இதைப் பற்றி யாருக்காவது மேலதிக தகவல் தெரியுமா?

விடியேபவில் சொல்லப்படும் இணயம் இன்னமும் செயற்பட தொடங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவிடயம் இணைப்புக்கு நன்றிகள் நாரதர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.