Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்
விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம்.

தமிழ் மொழிக்கு இலக்கணம் இலக்கியம் என்று இரு கண்கள் உள்ளன.

இலக்கியம் மக்களின் இன்ப துன்பங்கள் அடங்கிய வாழ்க்கையினை சொற்களின் மூலம் மக்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதாகும்.

இலக்கணம் என்பது இலக்கியங்களைச் சீராக உருவாக்கவும் தமிழ்மொழியின் அடையாளம் பாதுகாக்கப்படவும் அதன் மரபு கெடாமல்  எழுதி  வ ரவும்  கற்று வரவும் உதவி செய்து நிற்கின்ற விதிகளாகும்.

அதாவது இலக்கணம் என்பது தமிழ்மொழியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கருவி என்று கூடக் கூறலாம்.
 
பெருக்கெடுத்தோடும் ஆற்று வெள்ளம் திசை திரும்பாமல் பல திசைகளில் சிதறி ஓடாமல் ஒரே திசையில் ஓடுவதற்குத் துணையாக இருக்கும் ஆற்றின் கரையைப் போலவே தமிழ் மொழிக்கு இலக்கணமும் துணையாக இருக்கின்றது. 

இலக்கணத்தைப் பற்றி விரிவாகப் படிப்பதற்கு இந்த ஆக்கம் எல்லோருக்கும் உதவியாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

ஏதாவது தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டும்படி கள உறவுகளை வேண்டிக்கொள்கின்றேன்  

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி வாத்தியார், வரவேற்கிறேன் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி வாத்தியார். எத்துணை கற்றவர்கள் கூட தமிழில் இலக்கணப் பிழைகளை விடுவதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இடையில் விட்டுவிட்டு ஓடாது, எங்களையும் ஓட வைக்காது தொடர்ந்து உங்கள் பணி செய்ய வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி வாத்தியார், நானும் வரவேற்கிறேன் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியில் இலக்கணம் ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது
 
எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி
என்பவையே அந்த ஐந்து அதிகாரங்களுமாகும் .

எழுத்துக்களின் வகைகள் அவற்றின் பெயர்கள்
எழுத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன,

மற்றும் சொற்கள் மற்றைய  சொற்களோடு எவ்வாறு சேர்கின்றன,

அவ்வாறு சொற்கள் பிறசொற்களோடு
சேரும்போது எப்படி மாறுகின்றன என்பவற்றுடன் இன்னும்  பல
விளக்கங்கள் எழுத்ததிகாரத்தில் காணப்படுகின்றது.

 அடுத்ததாக  எழுத்ததிகாரத்தை விரிவாகப் பார்ப்போம் படிப்போம் :D

Link to comment
Share on other sites

இதுக்குதான் ஒரு வாத்தியார் வேணும் என்கிறது . நன்றி வாத்தியார் வாழ்த்துக்கள் தொடருங்க உங்கள் பணிய  :icon_idea:

Link to comment
Share on other sites

எல்லோருக்குமே பிரையோசனமான தொடர் . பெரும்பகுதியான பிழைகள் வல்லின , மெல்லின , இடையினங்களிலேயே வருவது கண்கூடு .  தொடருங்கள் வாத்தியார் :) :) .

Link to comment
Share on other sites

நான் முதியவன். என்னிலும் இளமையான இளம் வாத்தியார் உங்களிடம், தமிழ் இலக்கணம் படிப்பதில் ஆட்சேபனை இல்லை. என்னை முறிக்காமல் வளைப்பதற்கு உங்களிடமுள்ள உபகரணங்கள் என்ன? அதாவது பிரம்பு, பேனா, பென்சில், கைகால்கள் இவற்றின் தீட்சைகளை நான் எவ்வாறு பெறமுடியும்?. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முக்கியமாக தேவையான ஒன்று :D தொடருங்கோ வாத்தியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து என்பது இரு வகைப்படும்
முதலெழுத்து, சார்பெழுத்து என்பனவே அவை இரண்டுமாகும்.
 
பிற எழுத்துக்கள் எல்லாம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருப்பதனால் அவை  முதலெழுத்து எனப்படுகின்றன.
 
முதலெழுத்துக்கள் இரண்டு வகைப்படும்
 
1. உயிரெழுத்து
2.மெய்யெழுத்து

உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேரும் போது உயிர்மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன முதலெழுத்துக்களாகிய  உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து அவற்றைச் சார்ந்து பிறப்பதால் உயிர்மெய்யெழுத்துக்களை சார்பெழுத்து எனகூறுவர்.
 
தொல்காப்பியர் சார்பெழுத்துக்கள் மூன்று வகை எனக் கூறினலும் நன்னூலார் சார்பெழுத்துக்கள் பத்துவகைப்படும் என்கின்றார்.சார்பெழுத்துப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்

உயிரெழுத்து

பிற ஒலிகளின் துணை இல்லாமல் தானே இயங்குவது உயிரெழுத்து ஆகும். உயிரெழுத்து ஏனைய மெய்யொலிகளுடன் சேர்ந்து அவற்றையும் இயக்கும் வல்லமை கொண்டது 

 ,,,,, ,,, ,,,ஔ   என்ற பன்னிரண்டு எழுத்துக்களே உயிரெழுத்துக்களாகும்.

உயிரெழுத்துக்கள் அனைத்தும் குறில் நெடில் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன
குறில் என்பது குறுகிய ஓசையுடையதாகவும் குறுகிய நேரத்திற்கு ஒலிக்கக்கூடியதாகவும் இருக்கும்.அவை அ,இ,உ, எ,ஒ என்பனவாகும்   

நெடில் என்பது நீண்ட ஓசையுடையதாகவும் நீண்ட நேரத்திற்கு ஒலிக்கக்கூடியதாகவும் இருக்கும். அவை ஆ,ஈ,ஊ,ஈ,ஐ,ஓ,ஔ என்பனவாகும்.
    
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கம் அளிக்கும் நுணா, சுவி அண்ணா, சுமேரியர், தமிழரசு, யாழ் அன்பு, கோமகன், களான், பான்ச், மற்றும் புத்தன் அனைவருக்கும் நன்றிகள். நாளைக்கு வகுப்பிற்கு எல்லோரும் கட்டாயம் வரவேண்டும் :D

நான் இண்டையான் வகுப்புக்கும் வந்தனான் நீங்கள் காணேல்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இண்டையான் வகுப்புக்கும் வந்தனான் நீங்கள் காணேல்லை. :lol:

இன்று பலருக்கு ஏடு தொடக்கி ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுத்ததால் பின் வாங்கில் இருந்தவர்களைக் கவனிக்கவில்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பலருக்கு ஏடு தொடக்கி ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுத்ததால் பின் வாங்கில் இருந்தவர்களைக் கவனிக்கவில்லை :D

கடைநிலை மாணவரையும் கருத்தாப் பாக்கிரவர்தான் உண்மையான வாத்தி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் சொன்னவர் நான் தான் வகுப்பு மொனிட்டர் என்று......எல்லோரும் சத்தம் போடாமல் இருங்கோ .....வாத்தியார் வரமட்டும்...:D

Link to comment
Share on other sites

வாத்தியார் சொன்னவர் நான் தான் வகுப்பு மொனிட்டர் என்று......எல்லோரும் சத்தம் போடாமல் இருங்கோ .....வாத்தியார் வரமட்டும்... :D

உப்பிடித்தான் இப்ப ஊர்உலகமெல்லாம் நான்தான் மொனிட்டர் என்று சொல்லி வெளிக்கிட்டினம். இருந்தாலும் நான் உங்களுக்கு வாழ்த்துச் சொல்வதோடு இன்ரவலுக்கு ஐஸ்பழமும் வாங்கித்தாறன்.

ஐஸ் பழத்திற்க்கு நன்றிகள்....பகிடி என்னவென்றால் இன்னும் வாத்தியாருக்கு தெரியாது நான் தான் மொனிட்டர் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் சொன்னவர் நான் தான் வகுப்பு மொனிட்டர் என்று......எல்லோரும் சத்தம் போடாமல் இருங்கோ .....வாத்தியார் வரமட்டும்... :D

எனக்கும் உப்பிடித்தான் சொன்னவர். எதுக்கும் வாத்தி வரட்டும் நேரே கிளியர் பண்ணுவம் ஆர் மொனிற்ரர் எண்டு. :lol:

Link to comment
Share on other sites

நான் இண்டையான் வகுப்புக்கும் வந்தனான் நீங்கள் காணேல்லை. :lol:

இத்தனை ஆண்களுக்கு நடுவில் நீங்கள் ஒரே ஒரு பெண்பிள்ளை. அதனால்தான் நாணிக்கோணி அடக்கஒடுக்கமாக தலைகவிழ்ந்து பின்னால் இருந்திருப்பியள். ஒருக்கா தலையை நிமித்தி வாத்தியாருக்கு முகத்தைக் காட்டுங்கோ. பிறகு பாருங்கோ வாத்தியார் உங்களுக்கு முதலில் குட்மார்னிங் சொல்வது அடுத்த கிளாசுக்கும் கேக்கும். :wub:

வாத்தியாரிடம் ஒரு கேள்வி: உயிர் எழுத்துக்கள்ள கடைசியா ஔ வுக்குப் பிறகு மூண்டு குத்துப்போட்டு ஒண்டு இருக்கும் அது எங்க ஒண்டுக்குப் போட்டுதே காணல்ல. அதுக்கு விளக்கம் தருவீங்களோ அல்லது மடக்கேள்வி எண்டு நுள்ள வருவீங்களோ? <_<   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரிடம் ஒரு கேள்வி: உயிர் எழுத்துக்கள்ள கடைசியா ஔ வுக்குப் பிறகு மூண்டு குத்துப்போட்டு ஒண்டு இருக்கும் அது எங்க ஒண்டுக்குப் போட்டுதே காணல்ல. அதுக்கு விளக்கம் தருவீங்களோ அல்லது மடக்கேள்வி எண்டு நுள்ள வருவீங்களோ? <_<   

இந்தக் காலத்துக்கு அது தேவை இல்லை எண்டு விட்டிருப்பார்.வாத்தியாரை கேள்வி கேக்கிறது சரியில்லை. வாத்தியார் கேக்கிறதுக்கு மட்டும் பதில் சொன்னாக் காணும். :D

அது ஆயுத எழுத்தாம்.....புலிகள் ஆயுத்தத்தை மெளனித்தபின்பு அதுவும் மெளனித்துவிட்டதாம் ஃ பாவம் அந்த மூன்று குத்து.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்!

திரியைக் கவனிக்கப் பிந்திப் போச்சுது!

அழகாகக் கொண்டு செல்லுகின்றீர்கள்! தொடருங்கள்! :D

Link to comment
Share on other sites

அது ஆயுத எழுத்தாம்.....புலிகள் ஆயுத்தத்தை மெளனித்தபின்பு அதுவும் மெளனித்துவிட்டதாம் ஃ பாவம் அந்த மூன்று குத்து.......

இந்தக் காலத்துக்கு அது தேவை இல்லை எண்டு விட்டிருப்பார்.வாத்தியாரை கேள்வி கேக்கிறது சரியில்லை. வாத்தியார் கேக்கிறதுக்கு மட்டும் பதில் சொன்னாக் காணும். :D

புலிகள் ஆயுதத்தை மெளனித்தபின்பு,  வாத்தியாரை கேள்வி கேக்கிறதுக்கு எலிகளென்ன! எலிக்குஞ்சுகளுக்கே பவர் வந்துவிட்டது!.... நண்பனே! நண்பியே! மூன்று குத்துக்கு வாத்தியார் பதில்சொல்லியே தீரவேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.