Jump to content

'டேவிட் ஐயா...' - டி.அருள் எழிலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

David.jpg

நடுங்கும் விரல்களால் ஒரு இட்லி யைக்கூட அவரால் பிய்த்து உண்ண முடியவில்லை. அதிகபட்சம் ஓர் இட்லி அல்லது பாதி தோசைதான் அவருடைய உணவு. 

ஒழுங்கு செய்யப்படாமல் கலைந்துகிடக்கும் நூல்கள், ஒரு தண்ணீர் கேன், பழைய கட்டில் - இவைதான் 90 வயது டேவிட் ஐயாவின் வசிப்பிடத்தை அலங்கரிக்கும் பொருட்கள்.

S.A.David%20iya.jpg

யார் இந்த டேவிட்? 

''என்னை எல்லோரும் 'டேவிட் ஐயா’ என்றுதான் சொல்வார்கள். என் பெயர் சாலமோன் அருளானந்தம் டேவிட். இலங்கை அரசின் பயங்கரவாதப் பிரிவு போலீஸிலும், இந்தியாவிலும் இந்த 90 வயதுக் கிழவனின் பெயரை இப்படித்தானப்பா பதிந்திருக்கிறேன்!'' என்று மெலிதாகச் சிரிக்கும் டேவிட் ஐயா, தன் அந்திமக் காலத்தை யாருமற்ற தனிமையோடு சென்னையில் கழிக்கிறார். 

''இலங்கையின் கரம்பனில் 1924-ம் ஆண்டு பிறந்தேன். ஆணும் பெண்ணுமாக நாங்கள் ஆறு பேர். சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் கீறுவதில் ஆர்வம். மிட்டாய் டப்பாவில் இருக்கும் படங்களை, பெரிய கட்டடங்களை எல்லாம் கீறுவேன். அந்தப் பிரியமோ என்னவோ, ஒருவழியாக டிராஃப்ட்ஸ்மேன்ஷிப் (கட்டட வரைவியலாளர்) படிப்பை முடித்து 'ஆர்க்கிடெக்ட்’ ஆனேன். அழகான பூக்களையும் பறவைகளையும் வரைவதுதான் எனது விருப்பமாக இருந்தது!'' என்று குழந்தையைப்போலப் பேசும் டேவிட் ஐயா, இலங்கைப் பொதுப் பணித் துறையில் கட்டடக் கலைஞராகப் பணி செய்தவர். மேற்படிப்புக்காக 50-களில் ஆஸ்திரேலியா சென்று, நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் நகர வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர். 

''மாதம் ஒன்றுக்கு சுமாராக 50,000 ரூபாய் வரை ஊதியம் கிடைத்தது. 60-களில் இது பெரிய பணம். கென்யாவின் மும்பாஸாவில் ஒரு வாசகச் சாலை இருந்தது. அங்குதான் எனக்கு காந்தியடிகளின் அறிமுகம் கிடைத்தது. எனது சொந்த தேசத்தின் இனவெறியைப் புரிந்துகொள்ள, காந்தியின் எழுத்துக்கள் எனக்கு உதவின. ஒரு பக்கம் தாயகத்தில் மக்களின் துயரமும், காந்தியை வாசித்த உத்வேகமும் என்னை வேலையைத் துறந்துவிட்டு ஈழத்துக்குச் செல்லத் தூண்டியது. 70-களின் தொடக்கத்தில் நான் ஈழத்துக்கு வந்தேன். கல்வியும் விவசாய உற்பத்தியுமே சுயமான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்பதால், நானும் லண்டனில் இருந்த புகழ்பெற்ற மருத்துவர் ராஜசுந்தரமும் 'காந்தியம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். அவரும் லண்டனைவிட்டு வவுனியாவுக்கு வந்தார். 

மலையக மக்களின் கல்வியில் பெரும்பங்காற்றியது 'காந்தியம்’ அமைப்பு. தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே 'காந்தியம்’ அமைப்பு வளர வளர, அரசியல் சூழலில் ஆயுதப் போராட்டத்தின் வீச்சும் இளைஞர்களிடம் வேகம் பெற, எங்களின் கல்விப் பண்ணைக்கு பல போராளிகள் வந்து செல்லத் தொடங்கினர். இலங்கை அரசின் பார்வை, எங்கள் மீது விழுந்தது. 

இலங்கையில் ஆயுதப் போராட்டம் வேர்விட்டபோது, தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கையும் ஆர்வமும் இருந்தது. அப்போது 'சந்ததியார்’ என்றொருவர் எங்கள் பண்ணைக்கு வருவார். அவர் 'பிளாட்’ அமைப்பின் முக்கியப் பிரமுகராக இருந்தார். சில கட்டுரைகளைக் கொடுத்து மொழியாக்கம் செய்யச் சொல்வார். நானும் செய்து கொடுப்பேன். அவருடன் ஆயுதப் போராட்டம் பற்றி விவாதிப்பேன். 

போராளிக் குழுக்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது எங்களின் 'காந்தியம்’ அமைப்பை, பயங்கரவாத அமைப்பு என்று இலங்கை அரசு தடைசெய்தது. 1983 ஏப்ரலில் நானும் ராஜசுந்தரமும் கைதாகி 'நான்காவது மாடி’ என்ற சித்ரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வெலிக்கடை சிறையில் அடைபட்டோம். அங்கே ஏராளமான போராளி கள் ஏற்கெனவே அடைபட்டு இருந்தார்கள். முக்கியமான பல பிரமுகர்கள், மேல் மாடியில் வைக்கப்பட்டு இருந்தனர். அப்போதுதான் அந்தப் பயங்கரம் நடந்தது. ஒரு ஜூலை 25-ம் தேதி அங்கு அடைக்கப்பட்டிருந்த 35 தமிழ் கைதிகள் சிங்களக் கைதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.


David%20iya%20story.jpg

உயிர் தப்பியிருந்த நாங்கள், எங்களை வேறு சிறைக்கு மாற்றக் கேட்டோம். ஆனால், இலங்கை அரசு காது கொடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து சிறைக்கதவுகள் திறந்துவிடப்பட்டு மீண்டும் தாக்கப்பட்டோம். அதில் 18 பேர் வரை கொல்லப்பட்டார்கள். டாக்டர் ராஜசுந்தரம் நன்றாக சிங்களம் பேசுவார். அவர் தாக்க வந்தவர்களிடம், 'எங்களை ஏனப்பா தாக்குகின்றீர்கள்... நமக்குள் என்ன பிரச்னை?’ என்றுதான் கேட்டார். அவரது தலை பிளக்கப்பட்டு தரையில் விழுந்து இறந்தார். ஒரு கம்பிக்குள் அடைபட்டிருந்த நாங்கள் இதை வேடிக்கை பார்த்தோம். ஜெகன், குட்டிமணி, தங்கதுரை உட்பட முக்கியப் பிரமுகர்கள் 53 பேர் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, மிச்சம் இருந்தவர்களை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். அங்கே சில மாதங்கள் இருந்தோம். 

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. 'பிளாட்’ அமைப்பு மட்டக்களப்பு சிறையை உடைத்து எங்களை விடுவித்தார்கள். நாங்கள் காட்டையும் கடலையும் கடந்து, உடுத்திய உடையோடு இந்தியாவுக்கு வந்தோம். 

தமிழகம் வந்த புதிதில் நல்ல மரியாதை இருந்தது. என்னை மீட்டவர்கள் 'பிளாட்’ அமைப்பினர் என்பதால், நான் அவர்களுடன் வேலை செய்தேன். சந்ததியாரும் சென்னையில்தான் இருந்தார். நான் தங்கியிருந்த இடத்துக்கு அடிக்கடி வந்து போவார். ஒரு கட்டத்தில் 'பிளாட்’ தலைவர் உமா மகேஸ்வரனோடு சந்ததியாரும் நானும் முரண்பட்டோம். அமைப்பிலிருந்து விலகி சுதந்திரமாக இருக்க விரும்புவதாகக் கூறி வெளியேறினேன். திடீரென்று ஒருநாள் சந்ததியார் காணாமல் போனார். அவருக்கு என்ன நடந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியாது. ஆனால், ஊகிக்க முடிந்தது! 

தாயக விடுதலைக்காக எந்த அமைப்பை நம்பி இளைஞர்கள் வந்தார்களோ, அந்த அமைப்புகளின் தலைமைகளாலேயே இளைஞர்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதில் அருவருப்படைந்து அன்றைக்கு ஒதுங்கியவன்தான் நான். அதன் பின்னர் எந்த ஓர் அமைப்பையும் நான் ஆதரிக்கவில்லை. அதேநேரம் சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகவும், ஈழ மக்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தேன்!'' எனும் டேவிட், Tamil Eelam Freedom Struggle’ உள்ளிட்ட சில நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். 

''இதோ தமிழகம் வந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓர் ஆற்றில் நீந்துவதைப்போல நீந்தித்தான் மறுகரை சேர்ந்தேன். ஆரம்பத்தில் ஆங்கில வகுப்பு எடுத்து அதில் வரும் வருவாயைக்கொண்டு வாழ்ந்தேன். ஆனால், இப்போதைய இளைய தலைமுறையுடன் எனக்கு சரிவரலை. அதான் தனியா வந்துட்டேன். இப்போ வெறுமை மட்டும்தான் எஞ்சியிருக்கு. இப்போது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை போலீஸிடம் பதிய வேண்டும். எங்கு தங்குகிறேன் என்ற விவரத்தை போலீஸுக்குக் கொடுக்க வேண்டும். 

90 வயதைத் தொட்டாலும், என்னால் நடக்க முடியாவிட்டாலும் நானும் ஒரு பயங்கரவாதியாகவே இங்கே பார்க்கப்படுகிறேன்.'' எனும் டேவிட் ஐயாவின் ஒரே கவலை, தனது 1,500 நூல்களை தனக்குப் பிறகும் பத்திரப்படுத்த வேண்டும் என்பதுதான்!

வழிமூலம் : ஆனந்த விகடன் 04 Sep, 2013 - ஓவியம்: ஸ்யாம், படம்: கே.ராஜசேகரன்

 

http://www.puthinappalakai.com/view.php?20130829108961

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைமைகளால் இவ்வாறு எத்தனை மனிதர்கள்?! :(

Link to post
Share on other sites
90 வயதைத் தொட்டாலும், என்னால் நடக்க முடியாவிட்டாலும் நானும் ஒரு பயங்கரவாதியாகவே இங்கே பார்க்கப்படுகிறேன்

 

 

ஜெயலலிதாவாலோ அல்லது கருணாநிதியாலோ தமிழருக்கு இதைவிட பெரிதாக என்ன செய்ய முடியும்? தீபத்தியர்கள் என்றால் தீபம் கூட ஏந்துவார்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சமூகம் மறந்து போன போராளி. எங்கிருந்தாலும் நல்லாயிருங்கள் ஐய்யா.  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தாலும் நல்லாய் இருங்கள்  ஐயா !

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவாலோ அல்லது கருணாநிதியாலோ தமிழருக்கு இதைவிட பெரிதாக என்ன செய்ய முடியும்? தீபத்தியர்கள் என்றால் தீபம் கூட ஏந்துவார்கள்.

 

திபெத்தியர்கள் இந்தியாவின் அரசியலில் தலையிடுவதில்லை...குண்டுகள் வெடிப்பதில்லை....ஆட்சி மாற்றும் அளவுக்கு அதிகாரம் உடையவர்கள் இல்லை.... திபெத்தியர்கள் இந்தியர்களில் தங்கியுள்ளார்கள் :)

 

Link to post
Share on other sites

சுய நல அரசியல்வாதிகளின் மத்தியில் சமூகத்தின் மீதும் அதன் வளர்ச்சியிலும் அதீத சிரத்தை காட்டிய ஒரு சமுதாயப்போராளி இன்று காந்தீய நாட்டில் பயங்கரவாதியாக நோக்கப்படுவது காந்தீயத்திற்கே இழுக்கையும் அவமானத்தையும் தருகின்றது

Link to post
Share on other sites

திபெத்தியர்கள் இந்தியாவின் அரசியலில் தலையிடுவதில்லை...குண்டுகள் வெடிப்பதில்லை....ஆட்சி மாற்றும் அளவுக்கு அதிகாரம் உடையவர்கள் இல்லை.... திபெத்தியர்கள் இந்தியர்களில் தங்கியுள்ளார்கள் :)

 

 

 

இந்தியாவுக்கு அகதியாக வந்த தமிழர்கள் எந்த அரசியலில் யாரை புரட்டி எடுத்தார்கள்? எத்தனை குண்டுகளை தமிழ் நாட்டில் வெடிக்க வைத்தார்கள் போன்ற விபரங்களை தர முடியுமா?

Link to post
Share on other sites
 
 
இந்திய அகதிகள் முகாம்களில் ஈழ அகதிகள்
 
அண்மையில் ஈழ தமிழ் அகதிகள் சிலர் பெண்கள் குழந்தைகள் உட்பட படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்கு முனைந்த போது இந்திய காவல் படையினால் கைது செய்யப்படதாக செய்திகள் வெளிவந்தன. அதனை தொடர்ந்து தமிழக ஊடங்களில் தமிழ் அகதிகள் முகாம்களை விட்டு மிகவும் அபாயகரமான உயிர்களை பணயம் வைத்து கடல் மார்க்கமான பிரயாணத்தை ஏன் தெரிந்து எடுக்கிறார்கள் என்பது பற்றி பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் வெளிவந்தன
 
இந்த படகில் பயணமாக இருந்த சிலரையும் சில ஊடகங்கள் நேரடியாக பேட்டி கண்டு இருந்தன. அப்போது அவர்கள் கூறிய காரணம், முகாம்களில் பல வருடங்களாக எந்தவொரு முனேற்றம் இல்லாமல் எவ்வளவு காலத்திற்கு அகதிகளாகவே வாழ்வது என்றும் இலங்கைக்கு போகவும் முடியாமல் இந்தியாவில் எமக்கு ஒரு நிரந்தர வதிவிட உரிமையோ அல்லது இந்திய பிரஜா உரிமையோ இல்லாமல் எப்படி தொடர்ந்து முகாம்களில் அடைபட்டு கிடப்பது என்றும் தங்களது வேதனைகளை கூறினார்கள் அவர்களுடைய வேதனைகளில் நியாயமும் அந்த வேதனைகளுக்குரிய விடயங்களில் தீர்வு காணபடவேண்டியதன் அவசியம் பற்றியும் பல்வேறு கரிசணைகள் இப்போது பல்வேறு மட்டங்களிலும் வெளிகாட்டபடுகின்றன.
 
இந்த விடயம் தொடர்பாக நாம் செய்த சில ஆய்வுகளின் அடிப்படையில் இந்த கட்டுரையை இங்கு வெளியிடுகின்றோம். இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட சில தரவுகளும் தகவல்களும் இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள அரச நிர்வாகிகளிடமும் அங்குள்ள அகதிகளிடமும் தமிழகத்தில் ஈழ அகதிகளுக்காக சேவை செய்யும் தன்னார்வ நிறுவனமான ஓFஏற்ற் (ஈழம் அகதிகளுக்கான புனர்வாழ்வு கழகம் போன்றோகளிடம் இருந்து பெற்றுகொள்ளபட்டது.
 
இந்தியாவில் 132 முகாம்களில் சுமார் 80 ஆயிரம் தமிழ் அகதிகள் வாழ்வதாகவும் அவர்களில் தமிழ்நாடில் 112 முகாம்கள் இருபதாகவும் அதில் சுமார் 70 ஆயிரம் மக்கள் வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. முகாம்களுக்கு வெளியில் சுமார் 35 ஆயிரம் ஈழ தமிழ் அகதிகள் வாழ்வதாக இந்திய அரசின் கணிப்பீடுகள் இருந்தாலும் தமிழகத்தில் முகாம்களுக்கு வெளியில் வாழும் அகதிகளின் எண்ணிக்கை அதிகமானது என்றும் சுமார் 2 இலட்சம் ஈழ தமிழ் அகதிகள் இந்தியாவில் வாழ்வதாக சில அகதிகளுக்காக சேவை செய்யும் தன்னார்வ நிறுவனங்கள் நம்புகின்றன.
 
ஈழ தமிழ் அகதிகள் வாழ்கின்ற முகாம்களின் நிலைமைகள் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களினாலும் தனிபட்டவர்களினாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி பொதுவாகவே குறைவான தரத்தில் (போர் cஒன்டிடிஒன்) இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றன.
 
ஒரு புறம் முகாம்களில் உள்ள வசதி குறைபாடுகள் மறு புறம் நிர்வாக மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகள் தங்களின் நாளாந்த சாதாரண இயல்பு வாழ்க்கையை நடத்துவதில் பெரும் கஷ்டங்களுக்கு முகம் கொடுப்பதாக முகாம்களில் வாழும் அகதிகள் கூறுகின்றார்கள்
 
அதே வேளை முகாம்களில் வாழும் அகதிகளுக்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பானவர்கள். அதனால் அகதிகளின் நலன்களையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சில நிர்வாக ஒழுங்கு முறைகள் கடைபிடிக்கபடுகின்றன. இவை எந்த வகையிலும் மக்களை கஷ்டத்துக்குள் உள்ளக்குவதர்க்காக கடைபிடிக்கப்படவில்லை என அகதிகள் நிர்வாகம் கூறுகின்றது
 
இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளுக்கு சென்றவர்கள் நல்ல வசதியாகவும் தங்கள் உறவினர்களையும் அந்த நாடுகளுக்கு அழைத்து சந்தோசமாக வாழ்கிறார்கள். அந்த நாடுகளில் குடி உரிமையும் பெற்று வாழ்கிறார்கள். ஆனால் இதியாவில் அகதியாக வந்து சுமார் 25 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தும் எமக்கு எந்த வித உரிமைகளும் இங்கு இல்லை. நாம் இலங்ககைகும் திரும்பி போக முடியாது. சாகும் வரை அகதிகளாகவே இந்த முகாம்களில் அடைபட்டு கிடக்க வேண்டுமா என முகாம்களில் வாழும் அகதிகள் தங்கள் வேதனையை கொட்டுகின்றார்கள்
 
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு அகதியாக வந்த தமிழர்கள் எந்த அரசியலில் யாரை புரட்டி எடுத்தார்கள்? எத்தனை குண்டுகளை தமிழ் நாட்டில் வெடிக்க வைத்தார்கள் போன்ற விபரங்களை தர முடியுமா?

 

அகதியா போனவன் எல்லாம் Jail இலும் கேவலமான முகாம்களில்...அல்லது David ஐய்யா மாதிரி சீரழிகிறார்கள்...

 

அகதி தமிழனின் பெயரை "யாரோ" பாவித்தபடியால் தான் இந்த நிலைமை....இல்லை என்றால்

 

ஈழ தமிழர்கள் வாயில் விரல் வைத்தாலும் சூப்ப தெரியாத அப்பாவிகள் என்று இந்தியர்கள் நினைப்பதால் எங்களை வதைக்கிறார்களோ தெரியவில்லை :)

 

இலங்கையில் சண்டை முடிந்தது என்று இலங்கை கூறுகிறது தானே..அதன் அடிப்படையில்

தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் யாராவது இந்த அகதி மக்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பவும் என்றாவது போராட வேண்டும்....

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நானும் கேள்விபட்டிருக்கின்றேன் எங்கிருந்தாலும் நல்லாய் இருங்கள்  ஐயா !

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.