Archived

This topic is now archived and is closed to further replies.

Recommended Posts


எங்கள் ஊரில் ஒருவர் டுவிஸ்ட் நடனம் ஆடி கின்னஸ் சாதனை படைப்பதற்கு முடிவெடுத்து அதற்கான ஒழுங்குகள் கே கே எஸ் வீதியில் உள்ள சந்தி ஒன்றில் ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அப்போது நான் காபொத உயர்தரம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தேன். எங்கள் ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் அது பெரிய வியப்பூட்டும் விடயமாக இருந்ததால், மாலையில் ஒரே சனக்கூட்டமாக இருக்கும்.

தொடர்ந்து பத்து நாட்கள் விடாமல் ஆடுவதுதான் சாதனை. ஏற்கனவே ஒருவர் ஆடி சாதனை படைத்திருந்தார். அவரை முறியடிப்பதற்காய் இது.

முதல் இரண்டுநாட்கள் என்னால் போக முடியவில்லை. மூன்றாம் நாள் நானும் தம்பி தங்கையும் அம்மாவுடன் போனோம். அங்கே மேடையில் பலர் நின்று ஆடிக் கொண்டிருந்தனர். எனது டியூசன் நண்பிகளும் பலர் வந்து நின்று பார்த்துக்கொண்டிருந்ததால் நான் அவர்களுடன் சென்று நின்று பார்ப்பதும் கதைப்பதும் பகிடிவிடுவதுமாக நின்றுகொண்டிருந்தோம்.


சிறிது நேரத்தில் போட்டிக்கு ஆடுபவர் சிறிது ஓய்வெடுப்பதற்காக கதிரையில் இருக்க, இன்னும் இருவர் புதிதாக மேடைக்கு வந்து ஆடத் தொடங்கினர். ஒருவன் நன்றாக ஆடுவதாக எண்ணிக்கொண்டு உடலை வளைத்து நெளித்து எதோ கோமாளித்தனம் செய்துகொண்டிருந்தான். மற்றவன் உண்மையிலேயே மிக நன்றாக இசைக்கேற்ப ஆடினான். அனைவரும் கதையைக் குறைத்து அவனது ஆட்டத்தையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

ஒரு அரைமணி நேரமாவது அவன் ஆடியிருப்பான். அதன்பின் போட்டியாளன் மீண்டும் மேடைக்கு வர நன்றாக ஆடும் இவன் மேடையை விட்டுக் கீழே இறங்கினான். அவன் மேடையை விட்டு இறங்கியதும் வெளிச்சமாக இருந்த மேடையில் வெளிச்சம் குறைந்த மாதிரி இருந்தது. நானும் நண்பிகளும் அவனின் ஆட்டத்தைப் பற்றிக் கிலாகித்தோம் கொஞ்ச நேரம். யாரடி அவன் எங்கள் ஊர் தானா என்று ஒருத்தியைக் கேட்டேன். ஓமடி எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறான். பெயர் ராம். அனால் நாங்களும் அவர்கள் வீடும் கதைப்பதில்லை என்றாள். பின் மேடையைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு வேறு கதைகள் பேச ஆரம்பித்தோம்.

என் தங்கை அம்மா வீட்டுக்குப் போக வரும்படி அழைப்பதாகக் கூறியவுடன், சரியடி நான் போகப் போறான் என்றுவிட்டுக் கிளம்ப இன்னும் கொஞ்ச நேரம் நின்றுவிட்டுப் போபடி என்றனர் எல்லோரும். உந்த விசர் ஆட்டத்தைப் பார்க்க நான் இனி நிக்க மாட்டன் என்றுவிட்டு அம்மாவைத் தேடித் போக, அம்மா சக ஆசிரியை ஒருவருடன் கதைத்துக்கொண்டு இருந்தார்.

அம்மாவுக்காகக் காத்துநின்ற வேளை பாடல் மாற ஆட்டமும் மாறுவது தெரிந்தது. நானும் திரும்பி மேடையைப் பார்க்க ராம் மேடையில் ஆடிக்கொண்டு நின்றான். எனக்கு அவனின் ஆட்டத்தைப் பார்க்கவேணும் போல் இருக்க, அம்மா இன்னும் கொஞ்சநேரம் பார்த்துவிட்டுப் போகலாமோ என அம்மாவைப் பார்த்துக் கேட்டேன். அம்மாவும் கதை ருசியில் சரி என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு கதைப்பதைத் தொடர்ந்தார்.

நான் மீண்டும் நண்பிகள் இருக்கும் இடம் தேடிச் செல்ல, என்னைக் கண்டதும் எல்லோரும் சிரித்தார்கள். ஏன் சிரிக்கிறியள் என்று நான் கேட்டதற்கு, உன்ர  பேரைச் சொல்லி  திரும்பவும் ஆடச்சொல்லி இவள்தான் தன தங்கையிடம் சொல்லி விட்டவள் என்றுவிட்டு மீண்டும் சிரிக்கவாரம்பித்தனர் நண்பிகள். இவர்கள்  சும்மா கூறுகிறார்கள் என எண்ணிக்கொண்டு நானும் அவனின் ஆட்டத்தை இரசிக்க ஆரம்பித்தேன்.

ராமும் அடிக்கடி நாம் இருக்கும் பக்கம் பார்த்தபடி ஆடுவதுபோல் எனக்குப் பட்டாலும், இவர்கள் நக்கலடித்தபடியால் எனக்கு அப்படித் தோன்றுகிறதோ என எண்ணியபடியே ஆட்டத்தை இரசித்தேன். மீண்டும் கால் மணி நேரம் கழிந்தபின் தங்கை வந்தாள். சரியடி அம்மா கூப்பிடுறா நான் போறான் என்றுவிட்டு அவர்களின் பதிலையும் எதிர்பார்க்காது வந்துவிட்டேன்.

தொடரும் ..............

Share this post


Link to post
Share on other sites

ஆகா.. பிறகு..?? ஆட்டம் தொடரட்டும்!! :)

Share this post


Link to post
Share on other sites

ஆகா.. பிறகு..?? ஆட்டம் தொடரட்டும்!! :)

 

தொடரும். தொடரும். கவலை வேண்டாம்.

 

Share this post


Link to post
Share on other sites
அக்காய் இப்படி   இடை நடுவிட்க விட்டிட்டியள்.
தொடருங்கோ- 

Share this post


Link to post
Share on other sites

ஒரு கடித்தத்தை ஒரே நாளில் முடிக்கணும் நண்பி!

Share this post


Link to post
Share on other sites

 

அக்காய் இப்படி   இடை நடுவிட்க விட்டிட்டியள்.
தொடருங்கோ- 

 

 

நட்ட நடுவில விட்டாத்தான் நாளைக்கு வாசிக்க நல்லா இருக்கும் 

 

ஒரு கடித்தத்தை ஒரே நாளில் முடிக்கணும் நண்பி!

 

அது கடிதத்தை மட்டும் போட்டால் எல்லோ அலை.

 

Share this post


Link to post
Share on other sites

அந்தநாள் நினைவு மீட்டும் காலமோ இப்ப யாழ்காலம் ?  சுமேயக்கா உங்களுக்கு புண்ணியம் கிடைக்குமப்பா இழுத்தடிச்சு சீரியல் மாதிரி எங்களை காக்க வைக்காமல் ஒரேதொடரில ஒரு கடித்தின் கதையை முடியுங்கோ....! நமக்கெல்லாம் பொறுமையா காத்திருந்து வாசிக்க இப்ப நேரமே கிடைக்குதில்ல.

ஆற அமர இருந்து பழைய நினைவுகளை மீட்க துணிந்த உங்கள் துணிச்சலுக்கு மீண்டுமொரு கைதட்டு.

klatsch.gif

Share this post


Link to post
Share on other sites

ஒரேயடியா முடிக்க நேரமும் மனமும் வரவேணுமெல்லோ சாந்தி. ஒரு பழசை  நினைவுபடுத்தினா ஒன்பது நினைவுகள் வந்து நிக்குது. நான் என்ன செய்ய??? :D

Share this post


Link to post
Share on other sites

சுமே அக்கா சாட்டுச் சாட்டா.. தான் பல கடிதங்களுக்குச் சொந்தக்காரின்னு கதை விடுறா போலவே இருக்குது. வேம்படி ஆக்களுக்கு கொஞ்சம் தற்புகழ்ச்சி அதிகம்..! உண்மையோ.. சுமே அக்கா..??! :lol::D

Share this post


Link to post
Share on other sites
உந்த டுவிஸ்ட் ஆட்டதை ஆழிக்குமரன் ஆனந்தன் தொடக்கி உலகசாதனையை முறியடிச்சதுதான் தாமதம்.......உள்ளூருக்கையே பெரிய போட்டியள் வரத்தொடங்கீட்டுது....உள்ள வைரவர்கோயில் அம்மன்கோயில் பள்ளிக்கூடங்கள் எண்டு மிச்சம்வைக்காமல் எல்லா இடத்திலையும் போட்டி நடக்கவெளிக்கிட்டுது.....ஒருவருசம் கோயில்திருவிழாக்களே கொஞ்சம் கலங்கிப்போச்சுது எண்டால் பாருங்கோவன் :D  ....அதோடை இன்னுமொண்டையும் சொல்லோணும் உந்த டுவிஸ்ட் ஆட்டபோட்டியளிலைதான் கன சுழட்டலும் நடந்து கலியாணம் வரைக்கும் இழுபறிப்பட்டவை எக்கச்சக்கம்.......   சில பள்ளிக்கூடங்கள் இரண்டொரு பாடம் லீவுகுடுத்து விட்டதெண்டால்  பாருங்கோவன் அந்த டுவிஸ்ட்டுக்கு இருந்த மதிப்பும் கவர்ச்சியும்....
 
எனக்கு முதல்வகுப்பு படிச்ச அக்கா ஒராள் டுவிஸ்ட் டான்ஸ் ஆடினவரை உற்சாகப்படுத்த மேடையேறி ஆடின பாட்டு இப்பவும் கண்ணுக்கை நிக்கிது.... :wub:
 

Share this post


Link to post
Share on other sites

 

 

 

அந்த காலத்தில் கதாநாயகிகள் எப்படி அழகாக இருக்கிறார்கள்.
 
இப்ப.. றோட்டில நிக்கிறவளகளும் கதாநாயகிகள்!
 
 
**********************
 
 
 
சுமோ காதல் மன்னி போல இருக்கே!  :D

Share this post


Link to post
Share on other sites

சுமே அக்கா சாட்டுச் சாட்டா.. தான் பல கடிதங்களுக்குச் சொந்தக்காரின்னு கதை விடுறா போலவே இருக்குது. வேம்படி ஆக்களுக்கு கொஞ்சம் தற்புகழ்ச்சி அதிகம்..! உண்மையோ.. சுமே அக்கா..??! :lol::D

 

கதை விட்டு நீங்கள் என்ன காசே தரப்போறியள் நெடுக்ஸ். :D

 

அந்த காலத்தில் கதாநாயகிகள் எப்படி அழகாக இருக்கிறார்கள்.
 
இப்ப.. றோட்டில நிக்கிறவளகளும் கதாநாயகிகள்!
 
 
சுமோ காதல் மன்னி போல இருக்கே!  :D

 

 

நான் இந்தத் தொடர் எழுதுறதை இத்தோட நிப்பாட்டிரன். :unsure:      

 

Share this post


Link to post
Share on other sites

வாங்கின பொருட்களை விட, வாங்கின கடிதங்கள் அதிகம் இருக்கும் போல. :lol:

 

 

 

 வேம்படி ஆக்களுக்கு கொஞ்சம் தற்புகழ்ச்சி அதிகம்..! உண்மையோ.. ..??! :lol::D

 

அவ்வளவு அழகிகளா? இங்க ஒன்றையே தாங்க முடியல்ல. ஒரு பள்ளிக்கூடத்தை எப்படிதான்  சமாளித்தீங்களோ. :D

 

முதல் இங்க இரண்டு அக்காமார் நாங்க 'வேம்படி' என்று பெருமையாகச் சொல்லுவாங்க. அவங்கட பழக்க வழக்கத்தைப் பார்த்து, புளியடி ஆலையடி மாதிரி இவங்க வேப்ப மரத்திற்க்கு கீழ இருந்து படிச்ச ஆட்களோ என்று யோசித்தேன். :lol:  

Share this post


Link to post
Share on other sites

கதாநாயகிகள் என்று சொன்னது பொதுவான சினிமா கதாநாயகிகள் பற்றிய ஒப்பீடு. உங்கட இந்த திரிக்கு அதுக்கும் சம்பந்தமில்லை. அந்தக்காலப் படங்களைப் பார்த்த போது எனக்குத் தோன்றிய ஒரு கருத்து. கன்ணும் மூக்குமாக எவ்வளவு அழகாக இருக்கிறார்கள். கு.சா வின் இணைப்புக்குப் பதிலாகப் போட்டேன்.

 

 

 

 

நான் இந்தத் தொடர் எழுதுறதை இத்தோட நிப்பாட்டிரன். :unsure:      
 

 

 

என்னை மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிற வேலை நடவாது.
 
இப்பிடி அதிர்ச்சி வைத்தியங்கள் குடுக்காம மிச்சத்தையும் எழுதுங்கோ. 
 
வாசிக்கும் போது சந்தோசமாக இருந்திச்சு. நான் தான் சூழ்நிலை தெரியாம வாயத்திறந்திட்டன் போல இருக்கு.
 
அம்மா.. தாயே..

Share this post


Link to post
Share on other sites

 ஊரில் உலக சாதனைகள் செய்யத் தொடங்கியவர்களை  பார்த்து நானும் ஒரு சாதனை செய்ய முயற்சித்தனான். அது பற்றி யாழிலும் முன்னர் இணைத்திருந்தேன்.  பல வருடங்களிற்கு முன்னர் எழுதிய பதிவொன்று

 

http://sathirir.blogspot.fr/2008/09/blog-post.html

Share this post


Link to post
Share on other sites

 ஊரில் உலக சாதனைகள் செய்யத் தொடங்கியவர்களை  பார்த்து நானும் ஒரு சாதனை செய்ய முயற்சித்தனான். அது பற்றி யாழிலும் முன்னர் இணைத்திருந்தேன்.  பல வருடங்களிற்கு முன்னர் எழுதிய பதிவொன்று

 

http://sathirir.blogspot.fr/2008/09/blog-post.html

 

ஆராருக்கு இதுவரை கடலை போட்டனீங்கள், எத்தினை பேருக்குப் போட்டனீங்கள், இனிமேல் யார் யாருக்கு போடப்போறீர்கள் என்ற விபரங்களைத் தந்தால் கின்னஸ்சில பதியலாமோ என்று முயற்சி செய்யலாம் சாத்திரி. :D

 

Share this post


Link to post
Share on other sites

நாங்களெல்லாம் காபன் பேப்பர் (அந்தக்கால போட்டோக்கொப்பி) வச்சு கடிதமெழுதி பலபேருக்கு ஒரே கடிதத்தைக் குடுத்த ஆக்கள். :wub:  :lol:  அந்தக் காலத்தில இப்ப மாதிரி மொபைல்போன் ஈமெயில் எல்லாம் இருந்திருந்தா இன்னும் நிறைய விளையாட்டுக் காட்டியிருக்கலாம். துரத்தித் துரத்தி சந்தர்ப்பம் பார்த்து கடிதத்தைக் குடுக்கிறதுக்குள்ள மனுசனுக்கு சீ எண்டு போயிரும்.  :wub::lol:

 

மிச்சத்தையும் எழுதுங்கோவன். :)

Share this post


Link to post
Share on other sites

அடுத்த நாள் என்னால் நடனத்தைப் பார்க்கப் போக முடியவில்லை. மறுநாள் சென்றபோது நண்பிகளும் ஏற்கனவே வந்திருந்தனர். என்னடி நேற்று உன்னைக் காணாமல் எங்கே நீ வரவில்லையா என்று ராம் இரண்டு மூன்று தடவை என்னைக் கேட்டுவிட்டான் என்றாள்  ராம் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவள். சும்மா பகிடி விடாதை என்றுவிட்டு நான் மேடையைப் பார்க்க ராம் உற்சாகமாக எம்மைப் பார்த்தபடி ஆடிக்கொண்டிருந்தான். ஆள் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். அனால் வயது கூட இருக்கும் போல் இருக்கே என நான் மனதில் எண்ணிக்கொண்டேன். எடி கவி நான் இவனை முன்பு ஒருநாளும் காணவில்லையே. எந்தப் பள்ளியில் படித்தான் என்று கேட்டேன். அவனின் தகப்பன் திருகோணமலையிலோ மட்டக்களப்பிலோ வேலை செய்ததாம். அங்க இருந்து இரண்டு வருசத்துக்கு முந்தித்தான் இங்க வந்தவை என்றாள். என்னடி உனக்கும் அவனில ஏதும் ....என்று அவள் இழுக்க, புதிதாக இருக்கிறானே என்றுதான் கேட்டேனே ஒழிய வேறு ஒன்றுமே இல்லையடி என்று கூறியும் அவள் என்னை நம்பாததுபோல் பார்த்தாள். அவளுக்கு என்னில் சந்தேகம் வந்துவிட்டது என்று எனக்கு விளங்கியது.
அதனால் அடுத்து வந்த நாட்களில் நான் நடனம் பார்க்கப் போகவே இல்லை.

நான்கு நாட்கள் கடந்திருக்கும். நான் குசினிக்குள் கை கழுவிக்கொண்டு இருந்தபோது தற் செயலாகப் பார்த்தால் சயிக்கிளில் என் வீட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தான் ராம். எனக்கு ஒரு செக்கன் நெஞ்சு திக்கென்றது. அவன் என்னைக் காணவில்லை. சில நேரம் தற்செயலாக எங்கள் வீதியால் செல்கிறானாக்கும் என எண்ணிக்கொண்டு உணவு அறைக்குச் சென்று திரை மறைவில் நின்று பார்த்தேன். என்வீட்டிலிருந்து இரண்டு வீடு வரை சென்றவன் சயிக்கிலைத் திருப்பிக்கொண்டு மீண்டும் வருவதைக் கண்டதும் எனக்குக் கொஞ்சம் பயம் வந்தது. ஏனெனில் முன்வீட்டுப் பாட்டியும் என் அம்மம்மாவும் எங்கள் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருந்தனர். என் அம்மம்மாவுக்குக் கண் பார்வை மிகக் கூர்மை அறுபத்தியைந்து வயதிலும் ஒவ்வொருநாளும் பேப்பர் படிப்பார். அதுகும் முன்வீட்டுப் பாட்டி உப்பிடியான விடயங்கள் என்றால் வாசம் பிடித்துவிடுவார். அதனால் எனக்குப் பயம் ஏற்பட்டது.

அடுத்தநாள் காலை பள்ளிக்குச் செல்ல பஸ்சுகாகக் காத்து நின்றால் முன்னால் உள்ள தேநீர்க் கடையில் ராம் அமர்ந்திருந்தான். இது என்னடா தலை வலி என்று எண்ணிக்கொண்டு என்பாட்டில் நின்றேன். நல்ல காலம் கவி என் பள்ளியில் படிக்காததால் தப்பினேன் என எண்ணி கொஞ்சம் ஆறுதலடைந்தேன். அதன் பின் ஒரு வாரம் எனைக் கடந்து ராம் சைக்கிளில் செல்வது அதிகரித்தது. . எனக்கு அவன் என்பின்னே திரிவது தெரிந்தாலும் நன் ஏன் வீணாக வாயைக் குடுப்பான் என்று பேசாமல் இருந்தேன். அடுத்த வாரம் என் பெரியம்மா ராம் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பொங்கல் வைக்கத் திட்டமிட்டு என்னை அழைத்தார். நான் மறுத்தாலும் அம்மா விடவில்லை. என் பெரியம்மாவுக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள். அக்காவுக்கு நீங்கள்தானே பெண் பிள்ளைகள் போய் உதவி செய்யுங்கோ என்று கூறியபடியால் வேறு வழியின்றிச் செல்லவேண்டியதாகி விட்டது.

என்னை வழியில் கண்ட கவியும் எம்முடன் கோவிலுக்கு வந்து பொங்கல் முடியும் மட்டும் கூட இருந்தாள். பெரியம்மா பொங்கி முடிந்து காத்திருந்தும் ஐயர் வரவில்லை. அதனால் அவர் வந்து பூசை செய்து படைக்கும் மட்டும் காத்திருக்க வேண்டும் என்று பெரியம்மா கூறியதால் நானும் கவியும் கதைத்துக்கொண்டு இருந்தோம். திடீரெனக் கவி எடி நீ என் வீட்டுக்கு ஒரு நாளும் வரவில்லை. ஐயர் வருவதற்கிடையில் போட்டு வருவம் வாடி என்றாள். பெரியம்மாவிடம் சொல்லிவிட்டு அவள் வீட்டுக்குச் சென்றால் அவளது வீட்டைப் பார்த்து நான் பிரமித்துவிட்டேன். அவ்வளவு அழகாக இருந்தது வீடு. விலை உயர்ந்த பொருட்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவளின் அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறார். அதனால் எல்லாம் இருந்தன. குளிர்மையாக பிறிச்சிலிருந்து சோடா கொண்டுவந்து தந்தாள்.


இருவரும் குடித்துக்கொண்டு அவள் வீட்டுப் பொருட்கள் பற்றிக் கதைத்துக்கொண்டு இருக்கிறம் கதவைத் தள்ளிக்கொண்டு ராம் உள்ளே வருகிறான். எனக்குக் குடித்த சோடா புறக்கேறாத குறை. கவியின் கண்களில் அதிர்ச்சியும் ஆச்சரியமும். இவள் என்னை வேண்டுமென்றேதான் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள் என்று நான் மனதில் எண்ணிக்கொண்டு இருக்க, என்ன ராம் ஏதும் அலுவலே என்று கவி கேட்கிறாள். ஒண்டும் இல்லை சும்மாதான் வந்தனான் என்று அவன் கூறுவது கேட்கிறது. நான் குனிந்து சோ டாவுக்குள் இருக்கும் குமிழிகளை எண்ண முயல்கிறேன். கவிக்கும் மேற்கொண்டு என்ன கதைப்பது என்று தெரியவில்லை ஒன்றும் கூறாது நிற்க, சரி நான் போட்டு வாறன் என்றபடி ராம் திரும்பிப் போகிறான்.

உதுக்குத்தான் என்னை வீட்டை கூப்பிட்டனியோ என்று நான் அவளைக் கோபத்துடன் கேட்க, எடி நானே அதிர்ந்து போனன். அவையோட நாங்கள் கதைக்கிறேல்ல. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குள்ள வந்திட்டான். தற்செயலா அம்மா வந்தா என்ன செய்யிறது எண்டு நெஞ்சு இடிச்சுப் போச்சு. நீ வேறை என்று அவள் நின்மதிப் பெருமூச்சு விட அவள் சொல்வது உண்மை என்று புரிகிறது. சொல்லி வைத்ததுபோல் நாம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். பேயறஞ்ச உன்ர முகத்தை இண்டைக்குத்தானடி நான் பாத்தனான் என்று அவள் சிரிக்க, உன் முகமும் தான் என்று கூறி நானும் சிரித்துவிட்டு வாடி கோயிலுக்கே போவமேன்று அங்கு செல்கிறோம்.

அவனுக்கு உண்மையில் உன்னில விருப்பம் போலடி. அல்லது வராத எங்கட வீட்டை வந்திருப்பானோ என்று என்னைப் பார்க்கிறாள் கவிதா. அதுக்கு நான் என்னடி செய்ய நான்... என்று தொடங்கிவிட்டு அவளிடம் என் விடயத்தைக் கூறுவது நல்லதல்ல என்று பேசாமல் இருந்துவிட்டேன். அடுத்து வந்த ஒரு வாரம் மீண்டும் எனக்குப் பின்னால் அவன். நான் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. ஆனால் அவனாக வாய் திறக்காமல் நான் ஏன் வலியக் கதைப்பான் என்று என்பாட்டில் சென்றுவிட்டேன்.

அடுத்து வந்த சனிக்கிழமை கவி என் வீட்டுக்கு வந்தாள். எடி உவன் றாமின்ர தொல்லை தாங்க முடியவில்லை. உன்னைக் கேட்டுச் சொல்லும்படி ஒரே கரைச்சல். அவன் என்னை மறிச்சுக் கதைக்க ஆரேனும் கண்டால் எனக்கல்லோ கதை கட்டி விடுவினம் என்று அங் கலாய்த்தாள். எனக்கு விருப்பம் இல்லையெண்டு போய் சொல்லடி என்றேன். பாவமடி என்றால் கவி. அதுக்கு நான் என்ன செய்யிறது என்றுவிட்டு அத்தோடு அக்கதையை நிறுத்திவிட்டேன். அவள் சொல்லியிருப்பாள். இனிமேல் அவன் தொல்லை இல்லை என்று நினைத்து அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றால் தரிப்பிடத்துக்கு முன் சைக்கிளோடு நிக்கிறான். நான் தூரத்திலேயே கண்டுவிட்டதனால் அவன் பக்கம் திரும்பாமலே நின்றுகொண்டேன். இரண்டு நாளின் பின் அவனைக் காணவில்லை. நானும் அவனை மறந்து நின்மதியாக இருக்க நாட்கள் ஓடிப் போனது.


தொடரும் ......

Share this post


Link to post
Share on other sites

காதலுக்கு கண் இல்லைஎண்டுறது உண்மைதான் .ஆழ்ந்த அனுதாபங்கள் ராம்  :(

Share this post


Link to post
Share on other sites

ம்ம்................. தொடருங்கள் சுமே, வாசிக்க மிக ஆவல்!

Share this post


Link to post
Share on other sites

ச்சே.. இப்பமாதிரி skype or mobile இருந்திருந்தால் காதல் கீதல்னு நேரத்தை வீணாக்கியிருக்கத் தேவையில்ல.. கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது ஒண்டை தொட்டிருக்கலாம்..  அட.. ரெலிபோன் நம்பரைச் சொன்னேன்.. :lol:

Share this post


Link to post
Share on other sites

காதலுக்கு கண் இல்லைஎண்டுறது உண்மைதான் .ஆழ்ந்த அனுதாபங்கள் ராம்  :(

 

 

காதலுக்குக் கண் இல்லாதபடியால் தானே நண்டனும் கரைசேர முடிந்தது  :lol:

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்  வாசிக்க மிக ஆவல்!

Share this post


Link to post
Share on other sites

கருத்தைப் பகிர்ந்த உறவுகள் அலை கரன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

.

நான் குனிந்து சோ டாவுக்குள் இருக்கும் குமிழிகளை எண்ண முயல்கிறேன்.

 

உப்பிடி எத்தினை ஜில்மாக்களை நாங்களுந்தான் கண்டிருப்பம். :D :D :D

Share this post


Link to post
Share on other sites