யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
chinnavan

ஜில்லா படப்பிடிப்பின் போது சிறுமியிடம் சில்மிஷம்

Recommended Posts

´தலைவா’ வெளியீட்டு சிக்கலால் ’ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜய்.

வெளியீட்டுக்கான தடை நீங்கிய தகவல் கிடைத்ததுமே சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியது.

பொதுவாகவே விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் நுழையக்கூடாது என்பதால் ரொம்பவே கெடுபிடி இருக்கும்.

இப்போது அந்த கெடுபிடி பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆஜானபாகுவான பத்துக்கும் மேற்பட்டவர்களை சீருடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்கள் படக்குழுவினர்.

கடந்தவாரம் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.

படப்பிடிப்பின் இடைவேளையின்போது ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.

15 வயது சிறுமியான ஜூனியர் நடிகை ஒருவர் ஒரு ஓரமாக அமர்ந்திருக்க, பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஒருவர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட… அந்த பெண் கூச்சல் போட்டதையடுத்து அந்த அவரை வளைத்துப் பிடித்தனர் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள்.

ஒரே கூச்சலும் குழப்பமுமாக அந்த இடமே ரணகளப்பட… அந்த சிறுமியின் உறவினர்கள் பொலிஸில் புகார் கொடுக்கப்போவதாக சொல்ல ‘பிரச்சினையையை பெருசுபடுத்தாதீங்க’ என ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் சமாதானப்படுத்தியதோடு, நடந்த பிரச்சினைக்கு பிராயச்சித்தமாக ஒரு தொகையையும் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் பிரச்சினை ஓயாமல் இருந்துவர… ஜில்லா படத்தின் படப்பிடிப்பு வேலைகளை தினசரி கவனித்து வரும் ஆர்.பி.சௌத்ரியின் மகன் ‘ஜித்தன்’ ரமேஷ் இந்த பிரச்சினையில் தலையிட்டிருக்கிறார்.

நடந்த பிரச்சினையை கேட்டறிந்த ‘ஜித்தன்’ ரமேஷ், அந்த செக்யூரிட்டியை ஜில்லா படப்பிடிப்பிற்கு வரக்கூடாது என்று கூறியதோடு, அந்த சிறுமியையும் இனி படப்பிடிப்புக்கு நடிக்க வரவேண்டாம் என்று கூறிவிட்டதோடு இனி நடக்கும் பிரச்சினைகளை வெளியில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

வெளியேறிய அந்த சிறுமியின் உறவினர்கள் அந்த காவலாளியின் டூவீலரை எடுத்துக்கொண்டு ‘பிரச்சினைக்கு முடிவு கிடைச்சதும் வண்டியை வாங்கிக்கோ’ எனச் சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.

ஜில்லா திரைப்படத்தில் விஜய் பொலிஸ் கதாபாத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.http://goldtamil.com/?p=7519

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர உதவுங்கள்.. June 20, 2019 இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர ஐ.நா உதவி புரியவேண்டும் என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோர்ன் சேரேன்செனிடம் ( Joern Soerensen) கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Mr.Joern Soerensen, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (20) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். அதன் போதே ஆளூநர் அக் கோரிக்கையை முன் வைத்தார். மேலும், இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் அவர்களுக்கு விபரிக்கப்பட்டது. போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணமாக வடமாகாணம் காணப்படுவதால் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை பொருளாதார ரீதியாக உயர்த்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். இதேவேளை, வடமாகாண மக்கள் எதிர்கொண்டுவரும் நீர்ப்பிரச்சனையை தீர்வுக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கும் வடமராச்சிக்களப்பு திட்டம் உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் குறிப்பிட்ட ஆளுநர் அவர்கள் இதற்கு உதவிபுரியுமாறும் கோரிக்கை விடுத்தார். #இந்தியா #இலங்கைஅகதிகள் #சுரேன் ராகவன் #ஐக்கியநாடுகள்அபிவிருத்திநிகழ்ச்சித்திட்டம்   http://globaltamilnews.net/2019/124713/
    • அரசியல் செயற்பாட்டில், எவரையும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை.. June 20, 2019   அரசியல் செயற்பாட்டில் யாராவது ஒத்துழைக்காது விடின்  அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை – எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவிப்பு:- அர சியல் செயற்பாடுகளில் வேலை செய்யும் போது யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதவேண்டியதில்லை. மக்கள் நலனில் குறிக்கோளாக இருங்கள், என எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவித்தார் ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க செய்தல், தொடர்பான செயலமர்வுகள் , பயிற்சிப் பட்டறைகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்று வந்தது. இச்செயற் திட்டத்தின் மீளாய்வும் எதிர்கால செயற்பாடுகளும் குறித்த கலந்துரையாடல் சமூக செயட்பாட்டு மையத்தின் இணைப்பாளர். நடராஜா சுகிர்தராஜ் தலைமையில் யாழ்ப்பாணம் அலுவலக மண்டபத்தில் நேற்று [19.06.2019 ] காலை தொடக்கம் மாலை வரை இடம்பெற்றது. இச் செயற்பாட்டில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு பெண்மணி நகரசபை தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார். நிறைய செயற் பாட்டில் ஈடு பட்டார் . ஆனால் அவரிடம் எந்தவிதமான நிதி வசதியும் இல்லை. மக்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் இருந்தது, . அந்த பெண் நினைத்தார் தன்னுடைய வேலைகள் மூலம் கட் டாயம் தனக்கு அரசியல் பிரதி நிதித்துவம் கிடைக்கும் என்று , அங்குள்ள ஏனைய கட் சிகளின் உறுப்பினர்களை விட சிறப்பாக செயற்பட்டார் . ஆனால் அந்தப் பெண்ணிற்கு இடம் கிடைக்கவில்லை, அவரது கட் சி ஒத்துழைப்பு வழங்கவில்லை, மக்களுக்காக நிறைய நம்பிக்கையுடன் சேவை செய்தார். கட்சியில் எதிர்ப்பு இருந்தாலும் மக்கள் நலனுக்காக போராடி தேர்தலில் நின்றார் . எனவே இப்படி அரசியல் செயற்பாடுகளில் வேலை செய்யும் போது யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதவேண்டியதில்லை. மக்கள் நலனில் குறிக்கோளாக இருங்கள், உங்களின் சக்தி ஆளுமைகளை பார்க்கும் போது உற்சாகமாக உள்ளீர்கள் என்பது தெரிகிறது. நீங்கள் செய்யும் சேவை இந்த நாட்டின் ஜனாதிபதி , பிரதம மந்திரி வெளிநாட்டிற்கு சென்று யாரை சந்தித்தாலும் அவர்கள் செய்யும் கடமைகளை விட பெரியது. அடி மட்ட மக்களின் பிராச்சனைகளை வெளிக்கொண்டு வரும் செயற்பாடுகளில் பெண்களாகிய உங்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. அதனால் நீங்கள் தீவிரமாக செயற்படுகின்றீர்கள். என்றார். மேலும் இக் கலந்துரையாடலில் எஸ் டி கப் நிறுவனத்தின் மீளாய்வு ம் அறிக்கையிடலும் அதிகாரி ஜி . கஜனின் நெறிப்படுத்தலில் வடக்கில் பயிற்சி பெற்ற 125 பெண்களில் தெரிவு செய்யப்பட 25 பெண்கள் பங்கு பற்றி தமது கிராமங்களில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என்றும் , அவற்றில் எதிர்கொண்ட சவால்கள், தீர்வுகளும் ., எதிர்கால திட்ட்ங்கள் குறித்தும் விவாதிக்கப் பட்டன. குறிப்பாக. எந்த அரசியல் கட்சியினதும் அடையாளமின்றி பெண்கள் என்ற வகையில் ஒவ்வொரு கிராமங்களிலும் தங்களை அடையாளப் படுத்துவதிலும் , கட் சி சார் அதிகாரங்களின் இடையூறுகள் , இனந்தெரியாதோரின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கும் முகம் கொடுத்த போதும் மக்கள் சேவை என்ற வகையில் துணிந்து செயற்படும் திறனை இங்கு பெற்றுள்ளோம் .என்றும் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் கட் சியால் பாதிக்கப் பட் ட போது தேர்தலில் பங்கெடுப்பதில்லை என்று முடிவு செய்தேன் , ஆனால் இந்த பயிற்சிகள் ஊக்குவிப்பதாக இருப்பதால் பலதையும் தட்டிக் கேட்கும் தைரியத்தை பெற்று ள்ளோம் அந்தவகையில் அரசியலில் இறங்கி சாதித்து காட்டுவேன் என்று நம்புகின்றேன்,. அத்துடன் பெண் வேட்பாளர்களின் வீதத்தை அதிகரிக்கும் வகையில் செயற்படவுள்ளோம் என்று தமது கருத்துக்களை பலரும் பகிர்ந்து கொண்டனர் . இந் நிகழ்வில் ஆரம்பங்களில் சிறப்பு பேச்சாளராக பிரபல அரசியல் ஆய்வாளர்.நிலாந்தன் கலந்து கொண்டு பெண்களை அரசியலில் ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை வழங்கியதுடன்  அரசியல் பங்களிப்பில் உள்ள சட்டங்கள் , அடிப்படை பிரச்சனைகள் , பெண்கள் பிரதிநிதி துவத்தின் அவசியம் , சவால்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த சட்டவாளர் அபிராமி வன்னியசிங்கம் டிசில்வா வும் , ஊடகத் தொடர்பாடல் குறித்து எஸ்.கிஸோனும் , தலைமைத்துவம் குறித்து ந. சுகிர்தராஜ் ஜூம் , ஊடகப் பிரச்சாரம் குறித்து உமாச்சந்திரா பிரகாஷ் ஸும் , பரிந்துரை குறித்து சட் டத்தரணி ரஞ்சித் தும், தகவல் அறியும் உரிமை சட் டம் குறித்து சட் டத்தரணி ஐங்கரனும் , வளவாளர்களாக கலந்து கொண்டு வழிப்படுத்தியமை குறிப்பிடத் தக்கது. யாழ்.தர்மினி பத்மநாதன்   http://globaltamilnews.net/2019/124705/
    • பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம் June 19, 2019   கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளது. நாளை(20) கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில்  குறித்த சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே வேளை கல்முனை மாநகர வளாகத்தில் முக்கிய உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வர்த்தக சமூகத்தினரின் பங்குபற்றலுடன் இன்று மாலை நடைபெற்று முடிந்த முக்கிய கூட்டம் ஒன்றில் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாக முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டில் போராட்டமானது பொதுப்போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அவசரகால சட்ட விதிகளுக்கமைய அப்போராட்டத்தை சமூக நல்லிணக்கம் கருதி அகற்ற வேண்டும் என காவல்துறையிடம்  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மேலும் வலுவடைந்துள்ள இப்போராட்டமானது மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 30 வருடங்களாக தரமுயர்த்தப்படாமல் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இழுத்தடிக்கப்பட்டுவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு அரசை கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் 17 ஆம் திகதி கல்முனையில் ஆரம்பமாகிநடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #கல்முனை #உண்ணாவிரதப்போராட்டம் #முறைப்பாடு #பிரதேச செயலகத்தை (பாறுக் ஷிஹான்)   http://globaltamilnews.net/2019/124697/
    • உலக அகதிகள் தினம்! June 20, 2019 இன்று உலக அதிகள் தினம். பல்வேறு காரணங்களால் உலகில் அகதிகள் நாடற்று, வீடற்று அலையும் இன்றைய நாட்களில் ஈழத்திலும் மக்கள் அகதிகளாக அல்லல்படுகின்றனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விடுவிக்க இராணுவ ஆக்கிரமிப்பு முகாமின் முன்னே போராடுகின்றனர். உலக அகதிகள் தினத்தில் தத்தளிக்கும் அந்த மக்களின் துயரம் ஒரு குறியீடு. இலங்கையின் அரசியல் நிலமைகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார நிலமைகள் இன்னமும் அகதிகளாக பலர் புலம்பெயர்கின்றனர். உடமைகள், உறவுகள் மற்றும் உரிமைகளை இழந்து, எவ்வித ஆதரவும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ அகதிகளாக வாழ்கின்றனர். இவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டும், சூழ்நிலை காரணமாகவும் அகதிகளாக வாழும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையை முன்னேற்றும் நோக்கத்துடன், ஐ.நா., சார்பில் ஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் அகதிகள் உருவாவதற்கு இனவெறி, அரசியல், மதம், வன்முறை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவையே காரணம். இவர்களது உரிமைகளை திரும்ப வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. உலகளவில் 6 கோடி பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என யு.என்.எச்.சி.ஆர். ஆய்வு தெரிவிக்கிறது. இது மக்கள் தொகை அடிப்படையில் உலக நாடுகளின் வரிசையில் 24வது இடம். 122 பேருக்கு ஒருவர் அகதியாக உள்ளனர். சிரியாவின் உள்நாட்டுப் போர். தவிர தெற்கு சூடான், சோமாலியா, நைஜீரியா, காங்கோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அகதிகள் இடம் பெயர்கின்றனர். உலக அகதிகளின் எண்ணிக்கையில் இலங்கை அகதிகளும் கணிசமான இடத்தைப் பிடிக்கின்றனர். இன்னும் பல சர்வதேச நாடுகளில் அவர்கள் அகதிமுகாங்களில் வாழ்கின்றனர். தமிழ் நாட்டின் பல்வேறு அகதிமுகாங்களிலும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். #கேப்பாபுலவுமக்கள் #உலகஅதிகள்தினம் #இராணுவஆக்கிரமிப்பு   http://globaltamilnews.net/2019/124710/
    • வைத்தியர் ஷாபி விவகாரம் : முறைப்பாடளித்த தாய்மாருக்கு கொழும்பில் மருத்துவ பரிசோதனை   (எம்.எப்.எம்.பஸீர்) வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்ட விரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களில் சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பில் நேற்று வரை 758 பேரின் வாக்கு மூலங்கள் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.  கருத்தடை விவகாரத்தால் தாம் பாதிக்கப்பட்டதாக முறைப்பாடளித்துள்ள பெண்களில் 601 பேர், மகப்பேற்று மற்றும் பிரசவ விஷேட வைத்திய நிபுணர்கள் 7 பேர் உள்ளிட்ட 758 பேரின் வாக்கு மூலங்களே இவ்வாறு பதிவு செய்யப்ப்ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.  பொலிஸ் தலைமையகத்தில் நேற்று அவர் நடாத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். இந் நிலையில்  வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும்  சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான குழுவினர்  இந்த விசாரணைகளுக்கு தேவையான பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி சட்ட விரோத கருத்தடை தொடர்பில் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்துள்ள பெண்களை கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் கீழ்,  பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர்கள் இருவர் அடங்கிய  சிறப்பு குழு முன்னிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டுள்ளது. குறித்த மருத்துவ  பரிசோதனைகள் கொழும்பு காசல் வைத்தியசாலை மற்றும் டி சொய்ஸா பெண்கள் வைத்தியசாலைகளில் முன்னெடுப்பதற்கான அனுமதியை சி.ஐ.டி. பெற்றுக்கொண்டுள்ளது. அதன்படி சி.ஐ.டி. மன்றில்  குருணாகல் நீதிவானிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய,  குறித்த இரு வைத்தியசாலைகளுக்கும் குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்க தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளில் குறைபாடுகள் இருக்குமாயின் அதனை உடனடியாக நிவர்த்தி செய்துகொடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அத்துடன்  குருணாகல் போதனா வைத்தியசாலையில் செய்யப்பட்ட  சிசேரியன் சத்திர சிகிச்சைகள்  அவற்றில் பிரதி கூலங்கள்  தொடர்பில் பதிவான சத்திர சிகிச்சைகள் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி விரிவான  அறிக்கையை சி.ஐ.டி.க்கு கொடுக்கவும் சுகதார அமைச்சின் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை நேற்று வரை வைத்தியர் சாபி விவகாரத்தில் சி.ஐ.டி. பதிவு செய்துள்ள 758  வாக்கு மூலங்களின் விபரங்களும் கேசரிக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அதில் சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் வைத்தியருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்த தாய்மார்களில் 601 பேரிடமும்,  பிரசவ மற்றும் மகப்பேற்று  விஷேட வைத்திய நிபுணர்கள் 7 பேரிடமும், ஷாபி வைத்தியரின் தரத்துக்கு சமனான தரத்தை உடைய குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் ஒருவரிடமும்,  குழந்தைகள் தொடர்பிலான  6 வைத்தியர்களிடமும்,  சிசேரியன் வைத்தியர்களுக்கு உதவி வைத்தியர்களாக கடமையாற்றும் 11 வைத்தியர்களிடமும், உணர்விழக்கச் செய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் 10 வைத்தியர்களிடமும்  பதிவு செய்த வாக்கு மூலங்கள் உள்ளடங்குகின்றன. இதனைவிட, சிசேரியன் சிகிச்சைகளின் போது  இரு தாதியர்கள் அந் நடவடிக்கையில் பங்கேற்கும் நிலையில், அவ்வாறு அந்த சிகிச்சைகளில் பங்கேற்ற  பிரதான தாதி ஒருவர் உள்ளிட்ட 70 தாதியர்களிடமும்,  18 உதவியாளர்களிடமும் பாலியல் உறுப்புகள் தொடர்பிலான வைத்தியர் ஒருவரிடமும் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைவிட  குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளரின் வாக்கு மூலத்தையும் சி.ஐ.டி. பதிவு செய்துள்ளது. குருணாகல் வைத்தியசாலை பனிப்பாளரின் வாக்கு மூலத்தை பதிவு செய்ய முன்னர், சி.ஐ.டி. அவருக்கு எதிராக விஷேட நீதிமன்ற உத்தரவொன்றினைப் பெற்றிருந்தது. அதில் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில் வைத்தியர் ஷாபி விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் தொகுப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி குருணாகல் நீதிவானுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/58611