யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
அஞ்சரன்

அப்பா சொன்ன கதை .!

Recommended Posts

70வதுக்கு முந்திய இலங்கை தமிழர்களின் ஆதிக்கம்  நிறைத்து இருத்தது சிங்களவனை எவரும் மதிப்பது இல்லையாம் கேட்டால் மோட்டு சிங்களவன் எண்டு சொல்லுவார்கள் எதுக்கும் அவன் தமிழ் வர்த்தகர்கள் முதலாளிகளிடம் கைகட்டி நின்று ஊதியம் வாங்குவது இவர்கள் சொல்வதை செய்வது ஆக தென்னிலங்கையில் நாங்கள் தான் ராஜாக்கள் என்கிற நினைப்பில் எம்மவர் இருத்தனர் என்பது உண்மை

 

ஒரு உதாரணம் கொழும்பு செக்கட்டி தெருவில ஒருமுறை கோயில் திருவிழா நடத்து கொண்டு இருந்தது தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் மக்கள் கூட்டம் மிக அதிகம் அரோகரா ஒலிகள வானை பிளக்க

நடந்த திருவிழாவில் தேர் அசைந்து வர தேரின் சில்லுக்கு கட்டை வைத்து திருப்பிய படி ஒருவர் வர அதை கவனித்த படி இருத்த சிங்கள போலிஸ்காரன் கட்டை வைத்தவரை பிடித்து இழுத்து இரண்டு சாத்து சாத்தி இருக்குறார் அங்கு நிண்ட அனைவருக்கும் குழப்பம் என்ன நடக்கு என உடனம் விசியம் தெரிந்த ஒருசிலர் போலீசிடம் என்ன பிரச்சினை என கேட்க அவன் சொன்ன விளக்கம் தான் நகைச்சுவை

 

அப்படி என்ன சொல்லி இருப்பான் அவன் சொன்னான் "அடோ தெய்வம் வருது குறுக்க குறுக்க கட்டைய வைக்கிற " என்பதுதான் பின்னர் அவன் அவரை விடமாட்டன் எண்டு சொல்லி போட்டான்  அதால் உயர் அதிகாரி வரவழைக்க பட்டு என்ன என வினாவினால் தெய்வத்துக்கு குறுக்க கட்டை வைக்குறான் என அவன் விளக்கம் சொல்ல உயர் அதிகாரி சொன்னாராம் தேருக்கு திருப்புறத்துக்கு வாகனத்தில் உள்ளது போல இஸ்தேரின்க்  இல்லை ஆதலாதான் கட்டை வைத்து திருப்புறர்கள் என்று

 

அதன் பின்னரே அவன் மன்னிப்பு கேட்டு அனுமதி கொடுத்தானாம் இப்படி இருத்த சிங்களவன் இப்ப எப்படி முன்னேறி இருக்குறான் நாங்கள் புத்திசாலிகள் என நினைத்து வாழ்ந்தது தான் மிச்சம் .

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

உங்கள் அப்பா நல்ல கதை சொல்லியாகத் தான் இருந்திருக்கிறார். வழ்த்துக்கள் ப்றோ.

 

கொஞ்சம் விபரித்து எழுதியிருந்தால் இன்னும் கதை அழகாக இருந்திருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

நல்லா இருக்குது அண்ணை தொடர்ந்து எழுதுங்கோ 

Share this post


Link to post
Share on other sites

அப்படி என்ன சொல்லி இருப்பான் அவன் சொன்னான் "அடோ தெய்வம் வருது குறுக்க குறுக்க கட்டைய வைக்கிற " என்பதுதான்

 

உங்கள் அப்பா சொல்லாமல் சில விடையங்களைச் சொல்ல முயன்றிருகின்றார் . ஆனாலும் தேருக்கு கட்டை வைச்சது காணாது வாழ்த்துக்கள் அஞ்சரன் .

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அஞ்சரன்

இப்போதும்  தமிழன் தான் கல்வி மற்றும் பொருளாதாரம் என்பவற்றில்

சிங்களவனை விட முன்னேற்றத்தில் இருக்கின்றான்

 

ஆனால் இன்றைய உலக நியதி என்பது தான் தமிழனை பின் தள்ள முயற்சிக்கின்றது.
 

புவியியல்ரீதியில் தமிழன் என்றோ உலகைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தவன்
அந்த நிலை மீண்டும் வரும் அப்போது சிங்களம் சிதறிப்போயிருக்கும்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • இலங்கை தமிழர் மத்தியில் சீமானை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும், இரு சாராருக்குமே எஞ்சி இருப்பது குழப்பமே. 1. தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர வேண்டியது எம் சுய நல நோக்கில் அவசியம். 2. தமிழ் நாட்டில் திராவிடம் என்பதை மூர்கமாக எதிர்க்காமல், நைசாக திராவிடத்தை தமிழ்தேசியம் பிரதியீடு செய்ய வேண்டும். அதாவது பெரியாரிய கொள்கைகளை வரித்துக்கொண்டு, நாயக்கர்களையும், முதலியாரையும் இதர சாதிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். திராவிட அரசியலை பெரியார்க்கு முன்/பின் எனப் பிரித்து. பெரியார்க்கு பின்னான தலைவர்களை  கட்சிகளை போதுமானா அளவுக்கு விமர்சிக்கலாம். மொழி வழி மாநிலங்கள் அமைந்த பின் நாமும் திராவிட அரசியலை தமிழ்தேசிய அரசியாலக கூர்ப்படைய செய்வதில் தவறில்லை என மக்களை உணரச்செய்ய வேண்டும். கொள்கை ரீதியில் பெரியாரின் பேரன் என்பதற்கு சகல விதத்திலும் உரித்துடையவர்கள் நா.த. ஆனால் இவ்வளவு மூர்கமாக பெரியாரை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. 3. அடுத்தது சீமான் பற்றிய எனது தனிப்பட்ட மதிப்பீடு - இதுவரை இவர் காட்டிய தகிடு தத்தங்கள், புலிகள், பிரபாகரனுடன் தன் நெருக்கம் பற்றி இவர் அள்ளிவிடும் புழுகுகள் - இவரை நிச்சயமாக இன்னொரு கருணாநிதி என்றே எண்ண வைக்கிறது. இப்போ சீமானை நம்பியதை விட கருணாநிதியை அப்போ அதிகம் நம்பியது தமிழ் கூறும் நல்லுலகு. அத்தனையையும் காசாக்கி குடும்பத்தை வாழவைத்தார் அவர். சீமானும் இதையேதான் செய்வார் என்பது என் எதிர்வுகூறல். எதிர்வுகூறல் மட்டுமே.  4. இதில் ஒரே ஒரு நம்பிக்கை -சுயலாபத்துக்காக சீமான் தூண்டிவிடும் இந்த நெருப்பு அவரையும் பொசுக்கி, இந்திய வரைபடத்தை மாற்றி அமைக்க ஒரு வாய்பிருக்கிறது. அப்படி ஒரு நிலைவரும் போது, இந்த நெருப்பில் நீரை வாரி வாரி இறைப்பவர்களில் முதல் ஆளாய் நிக்கப் போவவரும் சீமானே. 5. முன்னேற்றம் என்று பார்தால், சீமானின் வளர்ச்சி கணிசமானதே. தொடர்ந்தும் தனியாக நிப்பது, நீண்ட நோக்கில் பலந்தந்தே ஆகும். சீமான் கபட நாடகம் ஆடினாலும் அவருடன் கூட நிற்பவர்கள் உண்மையானவர்கள். இந்த கட்சிக்கு வேலை செய்ய காசு கிடைக்காது. ஆனாலும் நிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நிற்பார்கள், பதவி இல்லை என்றால் தலைவரை நச்சரிக்க மாட்டர்ர்கள். ஆகவே வைகோ போலன்றி சீமான் நீண்ட காலம் தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம். இதுவே சீமானின் பலம். தினகரனிடம் இந்த பலம் இல்லை. 2 தேர்தலுக்கு மேல் தனியே நிண்டால் கட்சியே காணாமல் போய்விடும். எல்லாரும் பெரிய கட்சிக்கு ஓடி விடுவார்கள். கமலுக்கு இது பெரும் பிரச்சினை இல்லை ஆனால் ரஜனியும் களத்தில் குதித்தால், கமல் எவ்வளவு காலம் தனியே ஓடுவார் என்பதும் கேள்விக் குறியே. ஆகா நீண்ட காலம் தனியே தாக்குப் பிடிக்கும் வல்லமை நா.த வுக்கே இருக்கிறது. சீமானின் போக்கும் 2 வருடத்தில் எவ்வளவோ மாறி விட்டது. இப்போதைக்குச் சொல்லக் கூடியது இவ்வளவே.
  • கொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது
  • அண்ணர் கடித இலக்கியம் உண்மையிலேயே தமிழில் அரியதொன்று. நீங்கள் உங்களுக்கே உரிய நடையில் பின்னுறியள். கார் வேண்ட காசில்லாம, ஆற்றையோ காருக்கு முன்னால நிண்டு போட்டோ எடுத்தவையும் உண்டு. இப்பெல்லாம் பஸ் டக்கு, டக்கெண்டு வருது. அடுத்த பஸ் நேரத்தை போனில பாக்கலாம். முன்னம் எண்டா ஆடிக்கொருக்கா அமவாசைக்கொருக்கா வரும் பஸ்சுக்கு குளிருக்க கால்கடுக்க நிக்கோணும். கூடப் படிச்ச அண்ணரிட்ட கொம்புளைன் பண்ணினா - தம்பி 120 ம் வாய்ப்பாட்டை பாடமாக்கு எல்லாம் மறந்து போகும் என்பார் 😂 (1£=120Rs). 
  • பச்சைகள் தந்த உறவுகள் புங்கை, யெகதா துரை, ராசவன்னியன் அண்ணா, ஏராளன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.
  • இவ்வளவு காலமும் எங்கு போனீர்கள் ராசா?????? கண்டதில் மிக்க மிக்க சந்தோசம். 👍