Jump to content

மருதப் பாட்டு -- வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

மருதப் பாட்டு

...ஜெயபாலன்

 

கருகும் நீரில்

தலைகீழாக மருத மரங்களும்

என் நினைவுகளும் நெளிய

சிற்றாறு நடக்கிறது.

 

பறக்கிற குறு மணலோடு

பார்வையில் தென்படும்

இராணுவத் தடங்கள்

கண்ணை உறுத்தியபோதும்

போர் ஓசைகள் மவுனித்த துணிச்சலில்

பாலியாற்றம் கரையில் இருந்தேன்.

 

இருந்தும் என்ன

நம் வீர விந்துகள்

இன்னும் சிறையில் என்பது நெருடும்.

 

தென்றலிலோ

வரால் மீன்களின் இராப்போசனத்திலோ

நாணல்கள் அசைகின்றன.

வண்டின் பாடலில் மயங்கி மொட்டுகள்

துகில் அவிழ்க்கிற மாலை.

 

அழிக்கப்பட்ட காடுகளும்

காடு மண்டிய வயல்களுமானதே

நீர்ப் பறவைகளை இழந்த

என் மருத வழி.

 

எனினும் நீர் ஓடி நெல்தழைத்து

நீர்ப்பறவை வான் நிறைய

ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய்

முட்டையாய் காத்திருக்கும் மண்

 

2013

 

நியானி: கவிதை poet அவர்களின் வேண்டுகோளின்படி மீளவும் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கிறது அண்ணா

Link to comment
Share on other sites

எனினும் நீர் ஓடி நெல்தழைத்து

நீர்ப்பறவை வான் நிறைய

ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய்

முட்டையாய் காத்திருக்கும் மண்.  ////  இது தான் வ செ ஐ :) :) தொடருங்கோ.

 

 

 

Link to comment
Share on other sites

 

அழிக்கப்பட்ட காடுகளும்

காடு மண்டிய வயல்களுமானதே

நீர்ப் பறவைகளை இழந்த

என் மருத வழி.

 

கருகும் நீரில் ............அருமையான ஆரம்பம். 

 

மருத நிலத்தின் எழில் மீளுவும்,

 

///இருந்தும் என்ன

நம் வீர விந்துகள்

இன்னும் சிறையில் என்பது நெருடும்.//// இந்த நிலை மாறவும் 

என்ன செய்யப்போகிறோம் ???????

 

கற்றுக்கொள்ள வைக்கிறது கவிதை .நன்றிகள் ஐயா பகிர்வுக்கு 

Link to comment
Share on other sites

ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய்

முட்டையாய் காத்திருக்கும் மண்

 

வீரம் விளைநிலமான வன்னி மருது மண் ஒரத்தில் ஒதுங்கி நின்று ஆம்பலில் வரால் மறைய காத்திருப்தில்லை.  கெட்டாலும் செட்டி, கிழிந்தாலும் பட்டுத்தான் கூட்டமைப்பின் வன்னி மைந்தன் சிறீதரன். அவரின் அலுவலகத்திற்குள் பலதடவைகள் நெடுந்தீவு தேவானந்தாவின்  காடைகள் கூட்டம் நுளைந்துவிட்டது. "கொண்டம்" கொண்டுபோய் வைத்து படம் எடுத்து பத்திரிகைகளில் போட்டது. அரசு பத்து முறை அவரை இழுத்து 4 ம் மாடியில் அவரை தனிய வைத்து மிரட்டியிருக்கிறாகள். ஆனால் நெடுந்தீவில் வைத்து கூட்டமைப்பினருடன் சணடித்தனம் காட்டியவுடன், காத்திராமல் அம்பாக போனான் நெடுந்தீவுக்கு அந்த வன்னி வீரன். சூரியனை கண்ட ஆம்பல்கள் போல சுருங்கி மூடிக்கொண்டன நெடுந்தீவின் காடை தேவானந்தாவின் அடியார்கள். 

 

சூரியக்கடவுளை காண கூசும் ஆம்பலின் நிழலில் வரால்கள் வாழலாம். நீர் பறவைகளை கண்டு, சூரிய கடவுளின் முன்னால் தானே வர தயங்கிய ஆம்பலின் கீழ் போய் தஞ்சம் கேட்கலாம் வரால்கள். ஆனால் அவை எல்லாம் வீரம் விளையும் வன்னி மருத மண்ணின் பிரதிநிதிகளா. இல்லை வன்னிக் குள்த்தில், பாலியாற்றில், மருத நிலைத்தில் நெல்லோடு நெல்லாக பிறந்து வளந்திருக்கும் நாணல் களைகளா ? ஆடும் காற்றோடு ஆடியும், ஓடும் நீரோடு வளைந்தும் வளைந்தும் சீவியம் பண்ணும் நாணல்கள் வன்னி சிறுத்தை சிறிதரனுக்கு, வன்னி சிங்கம் சிவசிதம்பரத்துக்கு உதாரணமாகுமா?

 

சரித்திரம் பூரா வீரம் விளந்த மண்ணின் விந்துகள் அல்ல காத்திருப்பவை. கவிதையில் வன்னி மண்ணின் தனித்துவமான வீரம் தோன்றவில்லை. ஓடு மீன் ஓடவிட்டு காத்திருக்கும் நாரைத்தனம் வன்னி மண்ணில் விளைவதும் அல்ல. 

Link to comment
Share on other sites

இது மிகவும் நெருக்கடியான காலக்கட்டம். போர் இழப்பு நம்மை மோசமாக பாதித்துள்ளது. இராணுவ விஞானத்தின் அடிப்படையில் காடுகளுக்கு பின்வாங்கியிருக்க வேண்டிய போராளிகளை கடற்கரைக்கு செல்லுங்கள் அமரிக்க கப்பல் ஏற்பாடு செய்துள்ளோம் என்று கெடுமதி உரைத்து அழிவுக்குக் காலான தான்தோன்றி அறிஞர்கள் சிலர் குற்ற உணர்வால் மனம் பாதிப்படைந்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் நலம்பெற பிரார்திக்கிறேன்.

கவிதை தெரிந்தவர்களாவது தெளிவாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த வகையில்  தோழர்கள் மொசபோத்தோமியனுக்கும், கோமகனுக்கும். மற்றும் நேற்கெழுதாசனுக்கும் எனது நன்றிகள்

எனது கவிதை புத்தகம் பெற : http://www.crea.in/publicationsdetails.php?id=42&customer=inr&page=0&category=

 

 

 

www.crea.in 

Link to comment
Share on other sites

இது மிகவும் நெருக்கடியான காலக்கட்டம்.

 

காலம் அப்படியான நெருக்கடி காலம் அல்ல. நிறைய மாற்றம்  அடைந்துவிட்டது. ஒரு காலத்தில் சம்பந்தர் ஜெனிவா போனால் புலியாக கருதப்பட்டு பிரேரனை தோற்கடிக்கப்படும் என்று எழுத்தி மிரட்ட முயலாம் என்றிருந்தது. அரசு தான் கலவரம் உண்டாகுக்குவேன் என்று மிரட்டியது. இன்று மேர்வின் சில்வாவின் கதைக்கு மகிந்தா மன்னிப்பு கேட்கும் காலம் வந்து விட்டது. இன்று யாரும் புலியை காட்டி மிரட்ட முடியாது. முதல் அமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரன் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று பேசும் தைரியம் அங்கு - தாயகத்தில் - இருக்கிறது. காலத்தை யாரும் காட்ட இப்போது யாரும் மிரளுவதில்லை. 

 

போர் இழப்பு நம்மை மோசமாக பாதித்துள்ளது.

 

அதில் 2009 இருந்து 5 வருடம் கடந்த பின்னர் புதிதாக படிக்க எதுவும் இல்லை. அந்த அறிவுடன் பார்த்தால் மிஞ்சியிருப்பது இது வெறும் மிரட்டல்க் கதை மட்டும்தான் கொள்ள முடியும்.  அரசின் அபிவிருத்தி நாடகம் தேர்தலில் பின்னர் விழுந்து படுக்கும். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் வடக்கில் தங்கள் பணிகளில் இறங்க இராணுவம், அரசு தடுத்து வருகிறது என்று அவர்கள் நேராக குறைப்பட்டிருக்கிறார்கள். அதே நேரம்  சீனாவிடம் 50% வீத கமிசன் பணத்துக்கு இராணுவம்  வடக்குக்கு வந்து போக அரசு நெடும் சாலைகள் போடுகிறது. இது அபிவிருத்திகளுக்கு கொடுக்கப்பட்ட பணம். இந்த நாடகம் தேர்தல் முடியும் வரைதான். அது தேரதலுடன் முடியாவிட்டால் இன்றைய 10 வயது சிறுவன் கூட வருங்காலத்தில் திரும்பவும் ஆயுதம் ஏந்த வைக்கிறார் விமல் என்றி சுரேஸ் நேராக அவர்களின் பிழைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார். இனி மேல் நம்மை அடித்து முடக்கிவிட்டு, "நீ நன்றாக வாங்கிக் கட்டினாய், இனி அடங்கியிருப்பதுதான் உனக்கு ஒரே வழி" என்று யாரும் சொல்ல முடியாது. அதை கேட்டு யாரும் மருளப் போவதில்லை என்றதைதான் சுரேஸ் இதில் சொல்லியிருக்கிறார். இந்த அரசியல் வாதிகள் துணிசலுடன் நடை போடும் ஜனநாயக வாதிகள். இவர்களை யாரும் இனிமேல் புலி பிராந்தி ஊட்டி  பின்னால் இழுக்க முடியாது. 

 

இராணுவ விஞானத்தின் அடிப்படையில் காடுகளுக்கு பின்வாங்கியிருக்க வேண்டிய போராளிகளை

இதில் எள்ளவும் உணமை இல்லை. இது போராட்ட துறைகளை அறியாத இராணுவ ஆராச்சி.  வன்னி காடுகள் ஆப்கானிஸ்த்தான் மலை இருக்குகள் அல்ல காலம், போராளி கணக்கு இல்லாமல் காடுகளில் ஒழிக்க.  மரபுச் சண்டைக்கு பயிற்றப்பட்ட போராளிகள் காடுகளுக்கு போக முடியாது. போராளிகள் மக்களுடன் வன்னியில் இருந்தவர்கள். அவர்களின் பாதுகாப்பையும் சேர்த்து கவலைப்பட்டவர்கள். வேறும் ஆராயாத ஊகமாக வைக்காமல், பகுத்துப் பகுத்து எப்படி எந்த காட்டுக்குள் யார் ஒதுங்கியிருக்கலாம் என்ற ஆராச்சியை விபரமாக வைப்பது எல்லோருக்கும் ஆரோக்கியமானது. அப்போது புலிகளின் தவறு, சரி எது என்பது எல்லோரும் விளங்கிகொள்வார்கள்.  2006 பின்னர் நாட்டில் இல்லாதவர்கள் களத்தில் இருந்து 30 வருடம் போர் புரிந்தவர்களுக்கு சொல்ல எதுவும் இருந்தால் அதை இனித்தானும் கேட்பதில் தப்பில்லை.

 

கடற்கரைக்கு செல்லுங்கள் அமரிக்க கப்பல் ஏற்பாடு செய்துள்ளோம் என்று கெடுமதி உரைத்து

இது வெறும் இட்டுக்கட்டுக்கதை என்று முன்னர் ஒரு திரியில் விளங்க வைத்தாயிற்று. வெளியிடத்தக்க ஆதரம் இருந்திருந்த்தால் அந்த திரியில் வெளியிட்டிருக்கலாம். அது இல்லாமல்திரும்ப திரும்ப சொல்லி பொய் ஒன்றை உண்மையாகும் முயற்சியா இது என்பது புரியவில்லை.  அகோர போர் நடை பெற்றுக்கொண்டிருந்த போது, போரை வெல்லாமல், அல்லது போரை நிறுத்தாமல்,  மக்கள் 450,00 பேரை கப்பலில் ஏற்றும் திட்டத்தை புலிகளுக்கு யாரோ சொன்ன போது அதையும் அப்படியே நம்பி புலிகள் செயல்படுத்த முயன்றார்கள் என்பதின் நிரூபணங்களை யாரிடமாவது இருந்தால் அதை இனித்தன்னும் வெளியே சொல்லாம். 

 

 

அழிவுக்குக் காலான தான்தோன்றி அறிஞர்கள் சிலர் குற்ற உணர்வால் மனம் பாதிப்படைந்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் நலம்பெற பிரார்திக்கிறேன்.

 

இதில் எழுதியிருப்பது குழப்பமான ஒரு கருத்து.  படு மோசமான தமிழை பாவித்து நேரிடையாக எழுதுவது தவிர்க்கப்பட்டிருக்கிறது போலிருக்கு. அப்படியானால் இரண்டு விளக்கங்கள் சாத்தியம். . ஒருகரையில் என்னை போல ஒருவர் புலிகளை தவறாக வழிநடத்தியதாகவும் இதனால் நான் கவலைப்படுவதாகவும் மறை முகமாக சொல்வதுதான் இதன் பொருள் என்றால் இதை உண்மையில் எழுதுபவர்கள் இன்றைய அரசியல் விபரங்களில், யார் யார் என்ன செய்தார்கள் என்ற அறிவில்  மிக்கவும் பின்னல் நிற்பது தெளிவு.

 

மறு பொருள் ஒன்று இருக்கானால்:  உண்மையில் ஆயுத மௌனத்தின் பின்னர் புலிகளின் போராடத்தை தொடர்பவர்கள் இரண்டு நிலைப்பாடுகளுடன் இருக்கிறார்கள். இன்று புலிக்கொடியுடன் புலம் பெயர் தேசம் எங்கும் சென்று அரசுகளை நாட்டில் நடந்தவற்றை கவனிக்க செய்பவர்கள்(TGTE,GTF,BTF..... முதலாம் வகையும் பெரும் பான்மையானவர்களும் இவர்கள். இரண்டாம் வகை, சர்வதேசம் தனது நலங்களுக்கான நேரம் பார்க்கும் வரையும் காத்திருக்க விரும்பாதவர்கள். இந்த இரண்டும் தான் புலிகளின் ஆயுத மௌனத்தின் பின்னர் போராட்டங்களை தொடர்பவர்கள். இவர்களுக்கு பிராத்தனை செய்பவர்கள் ஒருதடவை சந்திரன் மாதிரி "கறை இருளை நீக்காமல், உலகின் நிறை இருளை நீக்கும்" அதி உன்னத்த மனநிலையாளர்களாக இருக்கலாம். ஆனாலும் அவர்கள் தங்களும் கொஞ்சம் பிராத்தனை செய்தால் நல்லது. 

 

கவிதை தெரிந்தவர்களாவது தெளிவாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

கவிதை தெரிந்தவர்கள் விரும்பினால்  மற்றவர்களுக்கும் பொருளை விளங்க வைப்பது கருத்துக்களத்தில் ஒரு பண்பாடான செயல் முறை. அதை அவர்கள் செய்யாவிட்டால் அது அவர்களின் தனி விருப்பு வெறுப்பு.  இதில் நான் வலிந்து அவர்களை ஒருகரைக்கு தள்ளப்போவதில்லை. 

 

இந்த வகையில்  தோழர்கள் மொசபோத்தோமியனுக்கும், கோமகனுக்கும். மற்றும் நேற்கெழுதாசனுக்கும் எனது நன்றிகள்

எனது கவிதை புத்தகம் பெற : http://www.crea.in/publicationsdetails.php?id=42&customer=inr&page=0&category=

www.crea.in 

யாழில் சில புத்தகங்களின் பெயர்கள் சொல்லப்பட்டன. ஆனால் விவாதிக்க தக்க கருத்துக்களாக அவை யாழில் பதியப்படவில்லை. எனவே அவற்றை இங்கே விவாதிப்பதில் பொருள் இல்லை. ஆனால் அவற்றின் உள்ளடக்கம் விவாதங்களை கடந்தவைகள் அல்ல என்பது படித்த பின்னர் புரிந்துகொள்ள முடிந்தது.  பொருத்தமான இடங்களில் அவை விவாதிக்கப்படும். 

Link to comment
Share on other sites

நன்றி. தோழர்கள் மொசபோத்தோமியனுக்கும், கோமகனுக்கும். நேற்கெழுதாசனுக்கும் KKaran னுக்கும் எனது நன்றிகள்.

எனக்கு ஒரு பாடல் நினைவு வருகிறது தோழர்களே.

 

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்போல்

    கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா 
    மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
    காக்கை உகக்கும் பிணம்.

Link to comment
Share on other sites

எனக்கும் சில பாடல்கள், பழமொழிகள், கவிதைகள் சில சண்முகம் சிலவலிங்கம், நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) மாதிரி பலராலும் மதிக்கப்பட்ட பேராரியர்களின் கருத்துக்களும் நினைவுக்கு வருகின்றன.

 

கற்றோர் இப்படியும் வர்ணிப்பார்கள்.

“பல்கலைக்கழகப் பிரவேசம் கிடைக்குமா என அங்கலாய்த்துக் கொண்டிருந்தாய். ரொம்ப பனித்தனமாக பேசுகிறாயே என நான் வினோதப் பட்டது நினைவிருக்கிறது.” -சண்மிகம் சிவலிங்கம்

 

சாகித்திய அக்கடமின் அதிபராக இருந்து கொண்டு எழுத்தாளர்களை தரமாரய்ந்து பரிசில் வழங்கிய மணிவண்ணன் ஒரு தடவை எழுதியது: ”இன்றைய புலவர்களும், கவிஞர்களும் காமசூத்திரத்தையும், கலிங்கத்து பரணியை மட்டும் படித்து விட்டு, தம்மை வடமொழி, தமிழில் பணடித்தர்களாக காட்டிகொள்ள முனைகிறார்கள்”.அவர் சொல்ல வருவது காங்கள் தாங்கள் நடக்கும் போது தங்களைத் தாங்கள் அன்னங்ககளாக நினைத்து அன்னம் போல நடக்க முயலுகின்றனவாம் 

.

அப்போ காகம் எது அன்னம் எது என்று கண்டுபிடிப்பது எப்படி?: உணவு நேரத்தில் சுத்தமான நீரையும் பலையும் கலந்து கொடுத்தாலும் அன்னம் பாலை மட்டும் குடிக்கும்.

 

ஆனால் காகம்  உண்பது:

1.பாடல் என்றால்: முதுகாட்டிற்  காக்கை உகக்கும் பிணம்.

2.பழமொடி என்றால்: வயித்துளைவுக்காரன் குந்தும் இடம்…..

3.கவிதை என்றால்: "உங்கள் தொழுகைப் பாயில் புணர்ந்தோம், மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம்" ( என்று தூஷனமாக எழுதியிருக்க மாட்டாய்-சண்முகம் சிவலிங்கம்)

 

வீரம் முட்டி வழியும் வன்னி மண்ணில் நீர்முட்டி வழியும் மருத நிலத்து  ஆம்பல் என்ன உயரத்துக்கு வளரும் என்றதை, அவ்வையின் இந்தப் பாடல் சொல்கிறது.

 

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகும் குணம்.

 

அத்தோடு அருமையான கருத்துகள் உவர் நீர் பண்டிதர்களிடம் கிடைப்பத்தில்லை மகிழ் போன்ற சின்னவற்றில் மட்டும்தான் கிடைக்கும் என்றும் சொல்கிறார் அவ்வை.

மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா (து) அதனருகே சிற்றூறல்

உண்ணீரும் ஆகி விடும். 

Link to comment
Share on other sites

யாழ்கள தோழர்களே

சோதிடர்கலின் ஆலோசனைப்படி திருநள்ளாறுபோய் வழிபட்டுவிட்டு நாளைவா என என் முதுகில் பச்சை குத்தியிருக்கிறேன்.

உலக தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு கவிஞனாக திரைக் கலைஞனாக என்னை தெரியும். தெரியாதவர்கள் இனி என் முதுகைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

 

சனிபகவானும், விநாயகரும்:ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். இதனை அறிந்த விநாயகர், தன் முதுகில் நாளை வா என்ற வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு முதுகைப் பார் என்கிறார். அவர் முதுகில் நாளை வா என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு, அதன்படி மறுநாள் வந்தார் சனி பகவான். மறுநாளும் அந்த வாசகத்தைப் படித்துவிட்டு திரும்பிச் சென்றார். இதுவே தொடர்கதையாக, அன்று முதல் இன்று வரை விநாயகரை சனியால் பிடிக்கவே முடியவில்லை என்று புராணம் கூறுகிறது.

Link to comment
Share on other sites

காகம் தன்னை அன்னம் மட்டும் அல்ல எப்படிலேப்படி எல்லாமோ கற்பனை செய்யும்.  ஆனால் காகம் தான் உண்பதை கண்டால் அதில் போய குத்தாமல் தவிர்த்திருந்ததும் இல்லை. 

 

ஆனால் சனிபகவான் அதன் மூக்கில் நாணயம் குத்தி அதன் முதில் சவாரிசெய்யாமல் இலகு பயணம் செய்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

 

ஒருதடவை விநாயகர் அகத்தியரின் கமண்டத்தில் கையை வைத்து விட்டு ஓடாத ஓட்டம் ஓடி ஒழித்து திருந்தவர். அப்போது "ஆளை விடு" என்று அவரின் நெற்றியில் எழுதி வைத்திருந்ததை எல்லோரும் பார்த்தார்கள். ஆளை அறியாமல் சிவனை எதிர்த்து  தலையே சொந்த முகம் போய் பொய் முகத்துடன் வாழ்நாள் கழிப்பவர்.

 

தேவானந்தா தெரிவு குழுவுக்கு வரசொல்லி கூட்டமைப்பை  கேட்டு பார்த்தார். அவருக்கு தெரியும் அங்கு தனக்கு என்ன நடக்கப் போகிறது என்று. அதானால் தனிய போக பயந்து கூட்டமைப்பை தொடர்ந்து உதவிக்கு அழைக்கிறார். 
 
ஆனால் முதுகை காட்டுவது வன்னி வீரம் அல்ல.  கருத்துவைக்க பயந்து உதாரணம் என்ற முதுகை காட்ட வேண்டையது நிலைமை. ஆனால் முகம் தெரியும் வரை காத்திருப்பதில் இழுக்கு வராது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  நடக்குது இங்க...........

 

இரு பெரும் தூண்கள்  இருவரும்

 

தங்கள் பொன்னான நேரத்தை இவ்வாறு செலவளிப்பதில்

இச்சிறியவனுக்கு கொஞ்சமும் பிடிப்பு இல்லை

தவிர்ப்பீர்களாக

 

பொன்னான நேரத்தை

தங்களது கருத்துக்கள்

கவிதைகளில்

பதிந்து வரலாற்றை எழுதுவீர்களாக.

 

கன காலம்  கவனித்து எழுதுகின்றேன்

சிறியவனின் வேண்டுகோளை  ஒரு கணம்   ஒதுக்கி  சிந்தியுங்கள்

Link to comment
Share on other sites

நன்றி விசுக்கு. எனக்கு தலைக்குமேலே வேலை இருக்கு. ஒரு நாவல் - 1824ல் உடுவில் மகளிர் கல்லூரி ஆரம்பித்ததில் இருந்து மலேசிய புலப்பெயர்வு இன்றைய புலப்பெயர்வுகள் வரைக்கும் மாறிவரும் எங்கள் பெண்கள் பற்றி - 350 பக்கம் எழுதி நெடுநாளாக கிடப்பில் இருக்குது. அதை எழுதி முடிக்கவேனும். இலங்கை தமிழர்களின் சமூக வரலாறு தொடர்பான என் கட்டுரைகலையும் சேர்த்து இன்னும் எழுதி ஒரு நூலாக்கவேணும். என் ஆய்வுப் பயணங்களுக்கு  பணம் திரட்ட நடித்தாக வேணும். நன்றி விசுக்கு. எனக்கு தலைக்குமேலே வேலை இருக்கு.

Link to comment
Share on other sites

இப்படியான உண்மை ததும்பும் வேத வாக்கியங்களை காணும் போது நமக்கு இருப்பது ஒரே ஒரு வேலை.

 

 

உண்மையை புட்டு வைப்பது.

 

அது 350 பக்கம் அல்ல 1000 பக்கம் எடுத்தாலும் செய்வோம். நமக்கு துணை தேவை இல்லை.  யாராவது வந்து காப்பாறுவார்களா என்று நினைத்து தவம் இருப்பதும் இல்லை.

 

ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய்

முட்டையாய் காத்திருக்கும் மண். 

 

 

இன்று போய் நாளை வர நாம் இங்கேதான் காத்திருப்போம். எங்கும் மறையமாடோம்.

Link to comment
Share on other sites

நல்ல கவிதை கவிஞரே.

 

 

 

எனினும் நீர் ஓடி நெல்தழைத்து

நீர்ப்பறவை வான் நிறைய

ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய்

முட்டையாய் காத்திருக்கும் மண். 

 

 

 

அந்த மண்ணும் சேர்ந்து மக்கி, வீடாய் போய்விடும் போல தெரிகிறது.

Link to comment
Share on other sites

நம் வீர விந்துகள்

இன்னும் சிறையில் என்பது நெருடும்.

........................................................................

........................................................................

 

முட்டையாய் காத்திருக்கும் மண்

 

 

Link to comment
Share on other sites

அடுத்த புத்தக விளம்பரம் தேவை படும் வரை.


சிறையில் வாடாவிடில் கப்பலில் ஏற்றியிருப்போம். அதுதான் கவலை.

Link to comment
Share on other sites

மானம் இருக்க வேண்டும் கப்பலுக்காக கரைக்கு அழுத்து போய்த்தான் வீரவிந்துகள் சிறையில் மாட்டி வாடுகிறது என்று எழுத. தருமி பிழைபில் திறம்.

Link to comment
Share on other sites

கலையாடிகளே
கள்ளத் தீர்க்கதரிசிகளே
உங்களுடைய இதயம்
அழுகி
நாவால் வழிகிறது.


உங்களுடைய
உணர்கொம்பின் மீது
ஒரு முதிய யுகத்தின்
பாசியும் பூஞ்சணமும்
படிந்திருக்கின்றன.


குற்றவுணர்ச்சியால்
உங்களுடைய
பணப் பைகள் கனக்கின்றன. - நிலாந்தன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை ஐயாவின் நீண்ட கருத்துக்கள் முழுக்கவே கவிஞர் மீதுள்ள காழ்ப்பின் வெளிப்பாடாகவே உள்ளது. தமிழர்களின் வீரத்தையும் வரலாற்றையும் குத்தகைக்கு எடுத்து எல்லைக்குள் வெளியால் கவிஞரை வைத்திருக்கவேண்டும் என்ற வெறி இருக்கின்றது. தனிப்பட்ட குரோதத்தையும் வன்மத்தையும் வைத்துக்கொண்டு உணர்வுகள் அதிகம் உள்ள படைப்பாளியை கோபமூட்டி அவரைச் சிதைப்பதுதான் மல்லை ஐயாவின் நோக்கம்.

இதற்கும் பத்தாயிரம் சொற்களில் கைவிரல்கள் வலிக்க வலிக்க பதில் எழுதுவார். ஆனால் கண்டுகொள்ளப்போவதில்லை. ^_^

Link to comment
Share on other sites

நிலாந்தன் புலிகளை பாடினாரா தருமிகளை பாடினாரா? 

 

கப்பலில் போக அழைத்து சென்றார்கள் என்று நடந்ததையே உணரத்தெரியாத அறிவிலிகள் வரும்கால தீர்க்க தரிசனத்தை பற்றி கூற என்ன தரம் இருக்கு?

 

தீர்க்க தரிசிகள் சொன்ன தமிழ் ஈழம் எங்கும் போகவில்லை என்றதை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை படித்தவர்கள் புரிவார்கள். 

 

நாடுகடந்த அரசு கை அளித்த கோரிக்கைகள் பலவற்றை, நவநீதம் பிள்ளை இலங்கையை விட்டு வெளியேற முதல் வெளிவிட்ட தன் அறிக்கையில் சேர்த்திருந்தார். இரண்டும் யாழிலும் பதியப்பட்டிருக்கு

 

புற்றுக்குள் ஒழிந்து இருந்துவிட்டு பழம் பழுக்கிறது என்று அதை பிடுங்க வெளியே வர முயலும் சுய நல பாம்புகளாக RAW உழைத்தவர்களின் சாதனை பட்டியல் தெரியாதா?  அறியாதா?

 

புலிகொடி பிடித்து பிருத்தானியாவில் தமிழின் சின்னமாக அதை ஏற்க வைத்திருக்கிறார்கள் இந்த பணப்பை கனக்கும் குற்ற உணவாளர்கள். தருமிகள் கப்பலுக்கு அழைத்து சென்றார்கள் என்று பொய் எழுதி புத்தகங்கள் விற்றர்கள். அதை விட என்ன செய்தார்கள்?

 

.ஐ.நா வின்  நிரந்த கண்காணிப்புக்கள் வேண்டும் என்று பிரதமர் உருத்திரகுமாரன் விட்ட கோரிக்கைக்கு சமனாக ஈழத்தில் இருந்து கொண்டு விக்கினேஸ்வரன் தானும்  விட்டதும் அல்ல. புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று தமிழ் ஈழத்தில் நின்று பேசியிருக்கிறார். ஆனால் RAW கையாட்கள் 13ம் திருத்தத்தை நேற்றுதான் கொண்டுவர வேண்டுமென்றார்கள்.   இன்று அப்படியான தீர்வுகூட கிடைத்விட்டாலும் என்ற பயத்தால் அதையும் கூட கைவிட்டு விட்டு கப்பல் கதை எழுதி ஏமாறுகிறார்கள்.  

 

 

 


மல்லை ஐயாவின் நீண்ட கருத்துக்கள் முழுக்கவே கவிஞர் மீதுள்ள காழ்ப்பின் வெளிப்பாடாகவே உள்ளது. தமிழர்களின் வீரத்தையும் வரலாற்றையும் குத்தகைக்கு எடுத்து எல்லைக்குள் வெளியால் கவிஞரை வைத்திருக்கவேண்டும் என்ற வெறி இருக்கின்றது. தனிப்பட்ட குரோதத்தையும் வன்மத்தையும் வைத்துக்கொண்டு உணர்வுகள் அதிகம் உள்ள படைப்பாளியை கோபமூட்டி அவரைச் சிதைப்பதுதான் மல்லை ஐயாவின் நோக்கம்.

இதற்கும் பத்தாயிரம் சொற்களில் கைவிரல்கள் வலிக்க வலிக்க பதில் எழுதுவார். ஆனால் கண்டுகொள்ளப்போவதில்லை. ^_^

உங்கள் காழ்புணர்வு முன்னர் பல தவைகள் பார்த்ததுதான். கண்டுகொள்ள அவசியப்பட தேவை இல்லை என்று நீங்கள் சொல்லும் உங்கள் மூன்று விரகள் சுட்டும் போது உங்களுக்கு பதில் அனாவசியமானது. குதகைக்கு எடுத்து பாட முயன்றது நான் அல்ல என்றதை அவரின் வரிகளில் இருந்து புரிந்து கொள்ள முடியாத உங்களின் அறிவுக் கூர்மை அலாதி 

நம் வீர விந்துகள்

கவிதையைப் படித்துவிட்டு காழ்புணர்வு இல்லாமல் கருத்து எழுதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் காழ்புணர்வு முன்னர் பல தவைகள் பார்த்ததுதான். கண்டுகொள்ள அவசியப்பட தேவை இல்லை என்று நீங்கள் சொல்லும் உங்கள் மூன்று விரகள் சுட்டும் போது உங்களுக்கு பதில் அனாவசியமானது. குதகைக்கு எடுத்து பாட முயன்றது நான் அல்ல என்றதை அவரின் வரிகளில் இருந்து புரிந்து கொள்ள முடியாத உங்களின் அறிவுக் கூர்மை அலாதி 

நம் வீர விந்துகள்

கவிதையைப் படித்துவிட்டு காழ்புணர்வு இல்லாமல் கருத்து எழுதலாம்.

 

மல்லை ஐயா இப்படி இருக்கின்றாரே!

troll.png

 

எனக்கு எதுவும் உங்கள் கைவிரல் நகங்கள் மாதிரிக் கூட கூர்மையாக இல்லை. ஆளை விடுங்க.. ஓடிடுறன்.. <_<

Link to comment
Share on other sites

முன்னாடி மல்லைஊரானின் எழுத்தில் நல்ல அபிப்ராயம் இருந்தது எப்ப தண்ட கோபத்தை தீர்க்க ஒரு சின்னத்தனமான ஆளாய் இறங்கி பொயட்டுக்கு சேறடிக்க தனது அறிவை பயன்படுத்தினாரோ அப்பவே அவர் மனசு தெரிஞ்சிட்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.