Jump to content

பூக்களும் உம் கண்ணுக்கு புலிகள் ஆகினவோ?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூக்களும் உம் கண்ணுக்கு புலிகள் ஆகினவோ

3jpgek1.jpg

எங்கள் மலர்களின்

முக்கத்தைப் பாருமையா

பெற்றோரை இழந்தனர்

உற்றோரை இழந்தனர்

அணைக்க கரங்கள் இன்றி

அலையா அலைந்தனர்

அலைந்த உள்ளங்களை

அணைத்தது இச்சோலை

அன்புக்கு ஏங்கிய உள்ளங்களை

அன்புகாட்டிய இச்சோலை

அழுத விழிகளை

அழகுறச் செய்யது இச்சோலை

அன்னையும் தந்தையுமாகி

அமுது அளித்தது இச்சோலை

துயரம் மறந்து

சிட்டாய் பறந்தது இச்சிட்டுக்கள்

அன்னையை பறித்தீர்

தந்தையும் பறித்தீர்

தப்பிய இக்குஞ்சுகளையும் பறித்துவிட்டீர்

பூக்களும் உம் கண்ணுக்கு புலிகள் ஆகினவோ

துளசி

Link to comment
Share on other sites

வணக்கம் துளசி

நேற்றும் என் வானொலி நிகழ்ச்சியில் தமிழினியின் கவிதையும், உங்கள் கவிதையும்சேர்த்து அஞ்சலி நிகழ்ச்சி ஒன்று செய்திருந்தேன். முதல் வரிகளை அடிக்கடி சொன்னே. உணர்வுபூர்வமான வரிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா? ஏதோ சிறு பங்களிப்பு செய்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

Dear Friends,The following News was printed repetatley in

TAMIL,MALAY AND CHINESH Newspapers in singapore.We always with you,never forget our Tamil Nation.

தேவாலயத் தாக்குதலில் தமிழ் மக்கள் 40 பேர் பலி.

----------------------------------------------

இலங்கையில் புலிகள் வசம் இருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆதரவற் றோர் இல்லம் ஒன்றில் ராணுவம் குண்டு போட்டதில் 61 மாணவிகள் கொல்லப் பட்டதாகவும் 129 பேர் காயம் அடைந்த தாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பு நேற்றுத் தெரிவித்தது.

புலிகள் அமைப்பு செஞ்சோலை என்ற ஆதரவற்ற சிறார் இல்லம் ஒன்றை நிர்வகித்து நடத்தி வருகிறது. அந்த இல்லத்தில் அரசு ஆகாயப் படை குண்டு போட்டுவிட்டது.

மாணவிகள், அந்த இல்லம் ஏற்பாடு செய்த முதலுதவி பற்றிய ஆய்வரங்கில் கலந்துகொண்டனர்.

அப்போது குண்டுகள் விழுந்தன. கொல்லப்பட்ட மாணவிகளின் எண் ணிக்கை அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

காயம் அடைந்த மாணவிகள் கிளிநொச்சி, முல்லைத் தீவு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் புலிகள் இணையத் தளம் கூறியது.

அரசாங்கத் தரப்பிலிருந்து உடனடித் தகவல் இல்லை. என் றாலும் தரைப்படைக்கு ஆதரவாக தாங்கள் ஆகாயத் தாக்குதலை அதிகமாக்கி இருப்பதாக ராணுவம் கூறியது.

இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் உயிர் தப்பிக்க அல்லைபிட்டியில் உள்ள புனித பிஷப் மரியான் தேவா லயத்தில் ஏராளமான தமிழர்கள் தஞ்சம் அடைந்து இருந்தனர். அந்த ஆலயம் மீது பீரங்கி குண்டு மற்றும் சிறிய ரக ஏவுகணைகள் மூலம் ராணுவம் தாக்கியதாகவும் இதில் சிக்கி 40 தமிழர்கள் வரை பலியாகி விட்டதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவித்தன. நுìற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மண்டை தீவில் விடுதலைப்புலிகள் தாக்கியதில் ராணுவ முகாம் முற்றி லும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் இரு ராணுவ டாங்கிகளை தகர்த்து விட்டதாகவும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

Mediacorp-Singapore.

18-08-2006.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுபூர்வமான கவிதை,சிட்னியிலே இன்பதமிழ் வானோலியில் இவ் கவிதை ஒளிபரப்பு செய்யபட்டது...

Link to comment
Share on other sites

தாயை இழந்து தந்தையை இழந்து திக்கற்று நின்றவர்களை அரவணைத்த செஞ்சோலை மண்ணிலே பல மலர்கள் கருகி போய்விட்டதே.

கவிக்கு பராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.