Jump to content

சிம்பு தயாரித்து இயக்கும் மன்மதன் 2 படத்திலும் ஹன்சிகாதான் ஜோடி.


Recommended Posts

 நடிகர் சிம்பு இயக்கியதாக கூறப்படும் மன்மதன் படத்தை உண்மையிலேயே சிம்பு இயக்கவில்லை வெறொருவர் இயக்கியதை தன்னுடைய பெயரை இயக்குனராக போட்டுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்து சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மன்மதன் 2 படத்தை தானே தயாரித்து இயக்கவும் முடிவு செய்திருக்கிறாராம் சிம்பு.

தனுஷ் எதை செய்தாலும் உடனே அதற்கு போட்டியாக செய்யும் குணம் படைத்த சிம்பு, தனுஷ் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருவதை கண்டு பொறுக்காமல் தான் உடனே தயாரிப்பில் இறங்குவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

‘மன்மதன்’.படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். குறிப்பாக, மொட்டை கேரக்டரில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்மதன் 2 படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹன்சிகாவே  ஹீரோயினாக நடிக்க உள்ளார். ஏற்கனவே வாலு, வேட்டை மன்னன் ஆகிய இரண்டு படங்களிலும் ஹன்சிகாதான் ஹீரோயின். இந்த படத்திலும் ஹன்சிகாவே நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் படத்தயாரிப்புக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டாராம்.
சிம்பு தற்போது ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய படங்களில் பிசியாக உள்ளார். இப்படங்களை முடித்த பிறகு ‘மன்மதன்-2’-வை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.http://goldtamil.com/?p=7956

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.