Jump to content

வணக்கம் AUSTRALIA உறவுகளே.......


SUNDHAL

Recommended Posts

வணக்கம் AUSTRALIA உறவுகளே.......

நாம் ஆவலுடன் எதிர்பாத்திருந்த பொது தேர்தல் வருகின்ற சனிக்கிழமை நடைபெற இருக்கின்றது.........

ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்த தொழில் கட்சியும் 2007 இல் ஆட்சியை பறி கொடுத்த லிபரல் கட்சியும் பிரதான கட்சிகளாக மோது கின்றன.....

2007 இல் பதவியில் அமர்ந்த தொழில் கட்சியானது பல குளறுபடிகள் இருந்த ஆட்சியாக அமைந்து மக்களின் தீர்ப்பிற்காக காத்து இருகின்றது......

இரண்டு கட்சிகளுமே ஒருவரை ஒரு குற்றம் சாட்டியும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கியும் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வண்ணம் இருகின்றார்கள்

ஏகப்பட்ட கடன் சுமை கட்டுகடங்காத அகதிகளின் வருகை என்று அடுத்து ஆட்சி அமைக்க போகின்றவர்கள் முன்னாள் பாரிய பணி இருகின்றது.........

அகதிகளின் வருகையை தடுத்து நிறுத்தி AUSTRALIA பொருளாதரத்தையு, நிலைநிறுத்துவதாக எதிர்க்கட்சி அறிவித்து இருகின்றது

பொதுவாகவே சிறப்பாகவே பொருளாதரத்தை கட்டி அமைக்க கூடிய கட்சியாக லிபரல் கட்சி இருந்து வருகின்றது..........

அதே நேரம் ஆஸ்திரேலியா நடுத்தர மக்களின் கட்சியாக தொழிலாளர் நலன் பேணும் கட்சியாக தொழில் கட்சி திகழ்கின்றது

ஆகவே யாழ் கள ஆஸ்திரேலியா உறவுகள் உங்கள் வாக்குகளை சிந்தித்து ஆஸ்திரேலியா எதிர்கால நலன்கருதி நீங்கள் விரும்புகின்ற கட்சிக்கு போடுங்கள்

மக்களின் தீர்ப்பிற்காக சனிக்கிழமை இரவு வரை காத்திருப்போம்......

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
தமிழ்மக்கள் "பசுமை"க்கு முதலிடத்தையும் "தொழில்" இற்கு இரண்டாந்தெரிவையும் போடும்படி அடியேன் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
 
நீங்கள் எந்தக்கட்சியிலும் இருக்கலாம். அவர்களுக்கே வாக்களிப்பாதாக‌ச் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் வாக்கு "பசுமை"க்கு மட்டும் இருக்கட்டும். இரண்டாம் தெரிவாக லேபறை போடலாம்.
 
லிபரலோ, லேபறோ யார் வந்தாலும் அவுஸ் நன்றாகத்தான் இருக்கப் போகிறது. ஆனால் தமிழ் மக்களைப் பொருத்தவரை வித்தியாசம், யார் எமது பிரச்சனைகளைப் பற்றி கதைக்கப் போகிறார்கள், ஏதாவது செய்யப் போகிறார்கள் என்பதிலேயே உள்ளது.
 
அந்த வகையில் பசுமை கட்சியினர் பல முயற்சிகளைச் செய்துள்ளார்கள். அவர்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதற்கு எம்மால் முடிந்தது எமது வாக்குகளை அவர்களுக்குப் போடுவதே.
 
இனவாதிகளான லிபரல் கட்சிக்கு எமது வாக்குகளைப் போடுவாமாகில் நாம் வாழும் மடையருக்கு உதாரணமாகி விடுவோம்.
 
லேபறை நம்புவோமாகில் நாம் ஏமாளிகளுக்கு உதாரணமாகி விடுவோம்.
 
ஆகவே.. சிந்தியுங்கள்.
Link to comment
Share on other sites

இந்த அகதிப் பிரச்சினை என்பது துவேச அரசியலின் வெளிப்பாடு. கனடாவுக்குள்ளும் அகதிகள் ஆயிரக்கணக்கில் வருடம்தோறும் வருகிறார்கள்.. sponsor செய்தும் வருகிறார்கள்.. அப்படி வந்தவர்களில் சிலரும் அகதிகளாக இங்கே தங்கிவிடுகிறார்கள்.. இதையெல்லாம் மீறி கனேடிய பொருளாதாரம் நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு.. :D

முக்கியமாக அகதிகளாக வந்த தெற்காசியர்கள் சிறந்த நடுத்தர வர்க்கமாக பொருளாதார அனுகூலங்களுக்குக் காரணிகளாக உள்ளார்கள்.. தெற்காசியர்களின் பங்களிப்பு பற்றி சிறப்பாக கடந்த ஒரு அரச அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.. பெருமளவில் உபயோகமில்லாதவர்களாக கரீபியன் தீவுகளில் இருந்து வருகிறவர்களைக் குறிப்பிட்டிருந்தார்கள்..

ஆகவே அகதி அரசியல் ஒரு பம்மாத்து.. :D கிரிமினல்களாகப் போய் இறங்கிய வெள்ளைகளுக்கு யாரைப் பார்த்தாலும் கிரிமினல்களாகவே தெரிகிறது.. :D

Link to comment
Share on other sites

 

தமிழ்மக்கள் "பசுமை"க்கு முதலிடத்தையும் "தொழில்" இற்கு இரண்டாந்தெரிவையும் போடும்படி அடியேன் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
 
நீங்கள் எந்தக்கட்சியிலும் இருக்கலாம். அவர்களுக்கே வாக்களிப்பாதாக‌ச் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் வாக்கு "பசுமை"க்கு மட்டும் இருக்கட்டும். இரண்டாம் தெரிவாக லேபறை போடலாம்.
 
லிபரலோ, லேபறோ யார் வந்தாலும் அவுஸ் நன்றாகத்தான் இருக்கப் போகிறது. ஆனால் தமிழ் மக்களைப் பொருத்தவரை வித்தியாசம், யார் எமது பிரச்சனைகளைப் பற்றி கதைக்கப் போகிறார்கள், ஏதாவது செய்யப் போகிறார்கள் என்பதிலேயே உள்ளது.
 
அந்த வகையில் பசுமை கட்சியினர் பல முயற்சிகளைச் செய்துள்ளார்கள். அவர்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதற்கு எம்மால் முடிந்தது எமது வாக்குகளை அவர்களுக்குப் போடுவதே.
 
இனவாதிகளான லிபரல் கட்சிக்கு எமது வாக்குகளைப் போடுவாமாகில் நாம் வாழும் மடையருக்கு உதாரணமாகி விடுவோம்.
 
லேபறை நம்புவோமாகில் நாம் ஏமாளிகளுக்கு உதாரணமாகி விடுவோம்.
 
ஆகவே.. சிந்தியுங்கள்.

 

 

எனக்கு லேபரின் சில கொள்கைகள் பிடிக்கவில்லை. முக்கியமாக பொருளாதாரக் கொள்கைகள். பசுமைக் கட்சியும் பச்சோந்திகள். இந்தமுறை லிபரல் தான் வரும் எண்டு ஒரு பட்சி சொல்லுது. 

Link to comment
Share on other sites

இந்த அகதிப் பிரச்சினை என்பது துவேச அரசியலின் வெளிப்பாடு. கனடாவுக்குள்ளும் அகதிகள் ஆயிரக்கணக்கில் வருடம்தோறும் வருகிறார்கள்.. sponsor செய்தும் வருகிறார்கள்.. அப்படி வந்தவர்களில் சிலரும் அகதிகளாக இங்கே தங்கிவிடுகிறார்கள்.. இதையெல்லாம் மீறி கனேடிய பொருளாதாரம் நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு.. :D

முக்கியமாக அகதிகளாக வந்த தெற்காசியர்கள் சிறந்த நடுத்தர வர்க்கமாக பொருளாதார அனுகூலங்களுக்குக் காரணிகளாக உள்ளார்கள்.. தெற்காசியர்களின் பங்களிப்பு பற்றி சிறப்பாக கடந்த ஒரு அரச அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.. பெருமளவில் உபயோகமில்லாதவர்களாக கரீபியன் தீவுகளில் இருந்து வருகிறவர்களைக் குறிப்பிட்டிருந்தார்கள்..

ஆகவே அகதி அரசியல் ஒரு பம்மாத்து.. :D கிரிமினல்களாகப் போய் இறங்கிய வெள்ளைகளுக்கு யாரைப் பார்த்தாலும் கிரிமினல்களாகவே தெரிகிறது.. :D

 

அகதிப் பிரச்சனை முந்திய தேர்தல்களிலும் வந்த விடயம் தான், ஆனால் இப்போது மக்கள் நன்றாக சலித்து விட்டார்கள். லேபரின் No Visa கொள்கையின் பின்னர் அவர்களின் மவுசு அதிகரித்துருக்கிறது. உங்களுக்கென்ன, கனடா காசுக்கார நாடு. இடியப்பமே அஞ்சு சதமாம். நாங்கள் பாலைவனத்தில பிச்சை எல்லே எடுக்கிறம். இருக்கிற யுரேனியமும், நிலக்கரியும் முடிய (அது முடிய கனகாலம் செல்லும்) எங்கட கதை குளோஸ்.

Link to comment
Share on other sites

அகதிப் பிரச்சனை முந்திய தேர்தல்களிலும் வந்த விடயம் தான், ஆனால் இப்போது மக்கள் நன்றாக சலித்து விட்டார்கள். லேபரின் No Visa கொள்கையின் பின்னர் அவர்களின் மவுசு அதிகரித்துருக்கிறது. உங்களுக்கென்ன, கனடா காசுக்கார நாடு. இடியப்பமே அஞ்சு சதமாம். நாங்கள் பாலைவனத்தில பிச்சை எல்லே எடுக்கிறம். இருக்கிற யுரேனியமும், நிலக்கரியும் முடிய (அது முடிய கனகாலம் செல்லும்) எங்கட கதை குளோஸ்.

தும்பளையான்.. இயற்கை வளத்தில் கனடாவுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல அவுஸ்.. இங்கிருந்து அவுஸ் போய் வேலை எடுப்பவர்கள் நிறைய உள்ளார்கள்..

கனடாவுக்கும் கப்பலில் அகதிகள் வந்து இறங்கியபோது இந்த அரசு ஆ ஊ என்று குதித்தது.. இப்ப ஒரு பேச்சும் இல்லை..

எண்பதுகளின் பிற்பகுதியில் என்று நினைக்கிறேன்.. தமிழர்கள் ஒரு கப்பலில் வந்து இறங்கினார்கள்.. கிட்டடியில் அவர்கள் எவ்வாறு இப்போது உள்ளார்கள் என்கிற விவரணம் வெளிவந்தது.. வந்தவர்கள் எவ்வாறு கடும் உழைப்பினால் முன்னேறினார்கள் என்பதையும் விளக்கியது.. இந்த கப்பல்காரர் தனியான ஒன்றுகூடல்களையும் செய்கிறார்கள்.. :D

ஆக, அவுஸ் கட்சிகள் செய்வது கிட்டத்தட்ட சிங்களக்கட்சிகள் செய்வதன் இளகிய பாகம்.. சிங்களம் தமிழரின் செல்வாக்கை, வாழ்க்கைத்தரத்தை அழித்து பெரும்பான்மை வாக்கை கவர்வதுபோல அகதிகளை பொருளாதாரப் பிரச்சினையாக வரித்து வாக்குகளை கவர நினைக்கிறது அவுஸ்.. இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே.

அதற்காக எல்லோருக்கும் நாட்டைத் திறந்துவிடவேண்டும் என்பதில்லை.. உண்மையான அகதிகளுக்கு ஐநாவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஆதரவு தரவேண்டும்.. அவர்களுக்குப் பாதுகாப்பு தருவதே முக்கியமானது.. ஆனால் குடியுரிமை வழங்குவதற்கு யோசிப்பதில் தவறில்லை.. சுவிஸ் மற்றும் ஜேர்மனியில் கூட அவ்வளவு இலகுவில் குடியுரிமை தந்துவிடுவதில்லை..

Link to comment
Share on other sites

Tony-Abbott-008.jpg
Tony Abbott has promised mothers up to $75,000 for six months' leave as part of a parental leave scheme. Photograph: Patrick Hamilton/AFP/Getty Images

Australia is poised for a lurch to the political right this weekend when the ruling Labor party faces electoral defeat at the hands of Tony Abbott and his conservative Coalition.

Opinion polls predict a convincing victory for Abbott, a social conservative and political pugilist who has toned down his aggressive persona, narrowed policy differences with Labor and boosted his personal popularity during the five-week election campaign.

An Abbott victory would end six years of Labor rule dominated by leadership tensions between Kevin Rudd and Julia Gillard, who between them achieved something of a political precedent by unseating each other within three years.

Gillard overthrew Rudd to become Australia's first female prime minister just before the 2010 poll, after which she clung to power by forming a minority government with the support of the Greens and an assortment of independents. But with opinion polls predicting a wipeout, a desperate Labor then moved against Gillard to return Rudd to the prime ministership only six weeks before he called the 2013 poll.

At first the switch appeared to have paid off, with Labor's vote recovering to almost 50:50, but over the course of the campaign Abbott has again pulled ahead. Most recent polls show the Liberal National party Coalition with 53% or 54% of the vote after second preferences have been redistributed in Australia's complex voting system. This would deliver Abbott a majority of between 10 and 15 seats in the 150-seat lower house.

Abbott, a 56-year-old fitness fanatic, was a Rhodes scholar, a Catholic seminarian, the director of the monarchist movement that successfully opposed Australia's 1999 referendum to become a republic, a journalist and a political adviser before he entered politics in 1994 and became a long-serving minister in the Coalition government led by John Howard.

He was widely considered an unlikely candidate when he became opposition leader in late 2009, but doggedly pursued Labor during a period marked by its internal divisions, a bitter debate over pricing carbon emissions, Labor's gradual acceptance of the Coalition view that Australia needs harsh policies to stop asylum seekers arriving by boat, and a political contest about whether Labor's A$42bn (£24bn) stimulus spending in response to the 2008 financial crisis aved Australia's economy or contributed to what Abbott has claimed is a "budget emergency".

Having built his standing as opposition leader on the contention that Labor's carbon tax would destroy jobs and hurt households, Abbott has promised his first legislative act as prime minister will be to repeal it. He promises to replace it with a capped $3.2bn fund for competitive grants to pay for voluntary carbon dioxide abatement, which independent modelling has found will be insufficient to meet even Australia's minimum international commitment to reduce emissions by 5% of 2000 levels by 2020.

His biggest election promise is a more generous paid parental leave scheme, offering mothers up to $75,000 for six months' leave at an annual cost of $5.5bn – a policy deeply unpopular with his party and the business community but which Abbott cites as evidence that he and his party "get" the lives and needs of modern women, despite Gillard's now-famous speech labelling him a misogynist.

Abbott is also promising $4bn for city roads in a pitch to suburban commuters angry about traffic jams. Abbott says he aims "to be an infrastructure prime minister who puts bulldozers on the ground and cranes into our skies".

He will cut company tax by 1.5%, except for the 3,000 largest businesses who will continue to pay the existing 30% tax rate, but with the final 1.5% now termed a temporary levy to help to pay for the expensive parental leave plan.

Kevin-Rudd-008.jpgKevin Rudd, has promised to protect blue-collar jobs if Labor is re-elected. Photograph: Tertius Pickard/AP

Abbott's central message to voters disillusioned by three years of political turmoil has been that the Coalition will end the instability of Labor's leadership feuding and the perceived instability of the minority parliament.

"The worst deficit is not the budget deficit but the trust deficit," he told the excited party faithful at his campaign launch in Brisbane two weeks ago.

"This election is all about trust … The last time Mr Rudd was prime minister, his own party sacked him. When a desperate party put him back, one-third of the cabinet resigned rather than serve with him. So my question is this: if the people who've worked with Mr Rudd don't trust him, why should you?" Abbott said.

He repeatedly tells voters Australia is a great country but "can't afford another three years like the last six".

Rudd's campaign has centred on the allegation that Abbott is "hiding" $70bn worth of spending cuts to services such as health and education, and the promise that Labor will protect blue-collar jobs.

"Mr Abbott's plan for cutting the future to ribbons remains hidden. That's because he knows that if the Australian people knew which jobs, schools and hospitals he would cut, then the people would be too frightened to vote for him. So I would simply say this to the Australian people: if you don't understand how Mr Abbott's $70bn of cuts will affect your job, your school, your hospital then don't vote for him," Rudd has said.

But Abbott insists the $70bn figure is wrong, and that there are only "modest" savings yet to be unveiled on top of the already announced cuts to government payments for schoolchildren, superannuation top-ups for low-income earners and tax breaks for small business, which are just sufficient to pay for spending plans. He has quietly shifted from the suggestion that Australia needs a rapid tightening of fiscal policy and says the country would be on track for a budget surplus by the end of his first three-year term – the same timing as Labor's forecast for a small surplus in 2016/17.

Labor has failed to win many plaudits for Australia's relatively strong economy, which has recorded 22 years of uninterrupted economic growth, with low unemployment and relatively low interest rates. Both parties accept that voters feel under pressure about the cost of living despite studies showing the average Australian household is in fact $5,302 better off in real terms than in 2008.

With the lower house result apparently so certain that bookmaker Sportsbet paid out on its bets on the Coalition nine days before the election, the result in the Senate, the Australian upper house, will be closely watched on Saturday.

It is highly unlikely the Coalition will win control of the upper house, but possible it will be able to pass legislation with the support of a more friendly collection of centrist and centre-right independents senators, rather than the Greens party, which opposes central elements of Abbott's agenda.

The result is difficult to predict, with a plethora of minor parties standing, including the Katter's Australia party led by colourful north Queensland protectionist Bob Katter, the Palmer United party, led by mining billionaire Clive Palmer and the anti-multiculturalism One Nation party, led by former MP Pauline Hanson.

If the Senate blocks his carbon price repeal Abbott has vowed to use the deadlock-breaking provisions in the Australian constitution for another election of the House of Representatives and the full Senate.

http://www.theguardian.com/world/2013/sep/04/tony-abbott-poised-victory-austalia-elections

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதிப்பிரச்சினை  என்பது

தற்பொழுது பிரச்சினைகளுக்கு முகம்  கொடுக்கும்  அனைத்து நாடுகளிலும் 

தேர்தல்களில் முக்கிய  பங்காற்றி  வருகிறது.

 

ஊரில்  சொல்வார்கள்

ஒரு நோயைப்பற்றி  தெரியாது விட்டால்

அது அம்மன்  வருத்தம்  என்று.

அது போலத்தான்  இதுவும்............... :(

Link to comment
Share on other sites

லேபர் ஆட்சியிதான் எனக்கு வேலை போனது. (இன்னும் பலருக்கும்). லிபரல் மட்டுந்தான் வேலைகளை அவுட்சோ(ர்)ஸ் பண்ணும் என்றில்லை. இரண்டும் ஒரு குளத்து மட்டைகள்.

Link to comment
Share on other sites

நேற்று இலங்கையில் இருந்து அகதியாய் கடந்த வருடம் படகில் வந்த திருமணம் ஆனா ஒரு சிங்கள இளஞன் 15வயது பெண்ணிடம் பாலியல் ரீதியான உறவு வைத்ததற்காக கைது செய்யப்பட்டு இருக்கின்றார்

Link to comment
Share on other sites

1240159_648387391852877_646732459_n.jpg

மை லாட் அவர் இலங்கை ராணுவத்தில் இருந்திருந்தால் பல  தமிழ் பெண்களை கற்பழித்து இருப்பார் .இதற்க்காக அரசிடம் பல பதக்கங்களும்  பெற்று இருப்பார். பாவம் என் கட்சிக் காரர் இந்த வயதில் அவுஸ்இல் அல்லவா இருக்கூரார்  அவர் ஒரு பொண்ணை கூடவா கர்ப்பளிக்க கூடாது?இது என்ன நியாஜம்?

Link to comment
Share on other sites

தும்பளையான்.. இயற்கை வளத்தில் கனடாவுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல அவுஸ்.. இங்கிருந்து அவுஸ் போய் வேலை எடுப்பவர்கள் நிறைய உள்ளார்கள்..

கனடாவுக்கும் கப்பலில் அகதிகள் வந்து இறங்கியபோது இந்த அரசு ஆ ஊ என்று குதித்தது.. இப்ப ஒரு பேச்சும் இல்லை..

எண்பதுகளின் பிற்பகுதியில் என்று நினைக்கிறேன்.. தமிழர்கள் ஒரு கப்பலில் வந்து இறங்கினார்கள்.. கிட்டடியில் அவர்கள் எவ்வாறு இப்போது உள்ளார்கள் என்கிற விவரணம் வெளிவந்தது.. வந்தவர்கள் எவ்வாறு கடும் உழைப்பினால் முன்னேறினார்கள் என்பதையும் விளக்கியது.. இந்த கப்பல்காரர் தனியான ஒன்றுகூடல்களையும் செய்கிறார்கள்.. :D

ஆக, அவுஸ் கட்சிகள் செய்வது கிட்டத்தட்ட சிங்களக்கட்சிகள் செய்வதன் இளகிய பாகம்.. சிங்களம் தமிழரின் செல்வாக்கை, வாழ்க்கைத்தரத்தை அழித்து பெரும்பான்மை வாக்கை கவர்வதுபோல அகதிகளை பொருளாதாரப் பிரச்சினையாக வரித்து வாக்குகளை கவர நினைக்கிறது அவுஸ்.. இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே.

அதற்காக எல்லோருக்கும் நாட்டைத் திறந்துவிடவேண்டும் என்பதில்லை.. உண்மையான அகதிகளுக்கு ஐநாவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஆதரவு தரவேண்டும்.. அவர்களுக்குப் பாதுகாப்பு தருவதே முக்கியமானது.. ஆனால் குடியுரிமை வழங்குவதற்கு யோசிப்பதில் தவறில்லை.. சுவிஸ் மற்றும் ஜேர்மனியில் கூட அவ்வளவு இலகுவில் குடியுரிமை தந்துவிடுவதில்லை..

 

எங்களிட்ட வளங்கள் இல்லை என்று நான் முதல் உங்களுக்கு ஒரு நகைச்சுவையாகத்தான் கூறினேன். உங்களுக்கும் விளங்கியிருக்கும். இலங்கை அளவு சனத்தொகை உள்ள அவுசுக்கு தேவைக்கு அதிகமாக வளங்கள் இருக்கின்றன. அதிலும் புதிதாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும்  ஏற்றுமதி செய்யப்போகும் இயற்கை வாயு, இந்தியாவிற்கான யுரேனியம், குவீன்சிலாந்து அலுமினா திட்டம் எண்டு எங்கட பாடு பரவாயில்லை. கனடா மட்டும் இல்லை, ஐரோப்பா அமெரிக்காவில் இருந்து கூட குடும்பமாக வெள்ளைகள் வருகிறார்கள்.

அவுஸ் அகதிகளைத் தடுப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமானது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் நாடுகடந்த தீவிரவாதத்தை தடுப்பது. படகில் வருபவர்களில் 97% அகதி எனத் தங்களைக் கூறுபவர்கள் இரான், இராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து வருபவர்கள். இவர்கள் எதிர்காலத்தில் அவுஸின் நலன்களுக்கு எதிராகச் செயற்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. உள்ளே விட்டவர்கள் தொடர்ந்தும் அவதானிக்கப்படுவார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இது பற்றி மேலும் கூற முடியாது அண்ணா. எமக்குத் தெரிந்த அண்மைய உதாரணம் ராஜினி என்ற அகதி. இவர் பற்றி யாழிலும் ஒரு திரி பார்த்தேன். அவரை வெளியிலே விட்ட பின்னர்தான் திரும்பவும் பிடித்தார்கள்.

அடுத்தது, காசுக்காக ஆட்களைக் கடத்துவது ஒரு சட்ட விரோத செயல். கெரோயின், கொகேயின் கடத்துவது சரியான செயலா? அதுக்கு நிகரானது சட்ட விரோதமாக ஒரு நாட்டின் சட்ட ரீதியான எல்லையினுள் மனித சரக்குகளை (human cargo) நகர்த்துவது. இக்கடத்தலுக்கு காசு கொடுத்தவரில் இருந்து இதை சரி என வாதிடுபவர்கள் வரை உள்ளே போடா சட்டத்தில் இடம் உண்டு. இதற்கும், ஐ.நா, அகதிகள், மனித உரிமை எதற்கும் தொடர்பு இல்லை. உதாரணமாக ஒரு தவறு செய்தவருக்கும் மனித உரிமை உண்டு, ஆனால் சட்டப்படி அவருக்கு வரும் தண்டனையை அந்த மனித உரிமை தடுக்க முடியாது.

மனிதர்களை கடத்துவதை காசுக்கான வியாபாரமாக, மிகவும் நன்கு திட்டமிட்டு, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கும்பல் செய்யும்போது சட்ட ரீதியான அரசாங்கமாக அவுஸ் கைகட்டி இருக்க முடியுமா? அதோட கனடாவுக்கு த்தனை அகதிகள் படகுகளில் வருகிறார்கள்? அவர்களில் எத்தனை சத வீதம் நிரந்தர உரிமை பெற்றார்கள் எனவும் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல கதை நினைவுக்கு வருகின்றது!

 

ஒரு குடியானவன் தனது கழுதையுடன் பயணம் செய்து கொண்டிருந்தான்! அப்போது, அவனது எதிரிகள் அவனை நோக்கி வருவதை, அவன் அவதானித்தான்!

 

உடனே கழுதையைப் பார்த்துக், 'கழுதையே எனது எதிரிகள் வருகின்றார்கள். நாங்கள் ஓடிப்போவோம் என்று கூறினான்"

 

அப்போது கழுதை, எஜமானனே, நீ வேண்டுமானால் ஓடிப்போ! ஆனால் நான் எதற்காக ஓடிப்போகவேண்டும்? உன் எதிரியும், என்னை மூட்டை தூக்கத்தானே உபயோகிக்கப் போகிறான்!

எனது வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்துவிடப்ப் போவதில்லையே, என்று ஆதங்கத்துடன் கூறியது!

 

இதே போலத்தான், நாங்கள் எந்த அரசியல் கட்சிக்கு வாக்களித்தாலும், எம்மைப் பொறுத்த வரையில், எந்த மாற்றங்களும் வந்துவிடப்போவதில்லை!

 

என்னைப் பொறுத்த மட்டில், அகதிகள் பிரச்னைக்கு அரசியல் சாயம் பூசப்படக்கூடாது! மனிதாபிமானக் கண்களால், நோக்கப்பட வேண்டிய பிரச்சனை ஒன்றை, அரசியல் மயப்படுத்துகின்றார்கள்!

 

எனினும், மனிதக்கடத்தலை, வியாபாரமாகச் செய்வது தடுக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே!

 

நான், எப்போதுமே, தொழில் கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளேன்! ஆனால், அவர்களின் பொருளாதாரக் கொள்கையில் நம்பிக்கையிழந்து விட்டதால், எனது வாக்கு 'லிபரல்' கட்சிக்கே!

 

செனேற்றைப் பொறுத்த வரையில், எப்போதுமே பசுமைக்கட்சி தான்! :D

Link to comment
Share on other sites

ஒரு நல்ல கதை நினைவுக்கு வருகின்றது!

 

ஒரு குடியானவன் தனது கழுதையுடன் பயணம் செய்து கொண்டிருந்தான்! அப்போது, அவனது எதிரிகள் அவனை நோக்கி வருவதை, அவன் அவதானித்தான்!

 

உடனே கழுதையைப் பார்த்துக், 'கழுதையே எனது எதிரிகள் வருகின்றார்கள். நாங்கள் ஓடிப்போவோம் என்று கூறினான்"

 

அப்போது கழுதை, எஜமானனே, நீ வேண்டுமானால் ஓடிப்போ! ஆனால் நான் எதற்காக ஓடிப்போகவேண்டும்? உன் எதிரியும், என்னை மூட்டை தூக்கத்தானே உபயோகிக்கப் போகிறான்!

எனது வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்துவிடப்ப் போவதில்லையே, என்று ஆதங்கத்துடன் கூறியது!

 

இதே போலத்தான், நாங்கள் எந்த அரசியல் கட்சிக்கு வாக்களித்தாலும், எம்மைப் பொறுத்த வரையில், எந்த மாற்றங்களும் வந்துவிடப்போவதில்லை!

 

என்னைப் பொறுத்த மட்டில், அகதிகள் பிரச்னைக்கு அரசியல் சாயம் பூசப்படக்கூடாது! மனிதாபிமானக் கண்களால், நோக்கப்பட வேண்டிய பிரச்சனை ஒன்றை, அரசியல் மயப்படுத்துகின்றார்கள்!

 

எனினும், மனிதக்கடத்தலை, வியாபாரமாகச் செய்வது தடுக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே!

 

நான், எப்போதுமே, தொழில் கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளேன்! ஆனால், அவர்களின் பொருளாதாரக் கொள்கையில் நம்பிக்கையிழந்து விட்டதால், எனது வாக்கு 'லிபரல்' கட்சிக்கே!

 

செனேற்றைப் பொறுத்த வரையில், எப்போதுமே பசுமைக்கட்சி தான்! :D

 

 

People smuggling

People smugglers are individuals or groups who assist others to enter a country through irregular methods. In the case of Australia, people smugglers provide air or sea access.

People smuggling is a crime under Australian law and it puts lives at risk. To break the people smugglers' business model it is important that those who make people smuggling their business face the full force of Australian law.

People smuggling is of concern to the Australian Government because:

  • there are serious security and criminal concerns when people arriving in Australia are not properly identified

    and

  • it infringes Australia's sovereignty, giving us less control over our borders.
People smuggling and human trafficking

People smuggling is a very different crime from human trafficking.

People smuggling is the organised, irregular movement of people across borders on a payment-for-service basis, whereas human trafficking is the physical movement of people domestically or across borders through deceptive means, coercion or force. Importantly, people traffickers are motivated by the prospect of exploiting their victims once they reach the destination country.

 

source - http://www.ag.gov.au/CrimeAndCorruption/Peoplesmuggling/Pages/default.aspx

 

 

People smuggling legislation Australia's people smuggling legislation

Australia's legislative framework criminalising people smuggling is set out in the Migration Act 1958 for people smuggling ventures entering Australia and the Criminal Code for other ventures.

The Migration Act and Criminal Code were amended by the Anti-People Smuggling and Other Measures Act 2010, which came into force on 1 June 2010. The Anti-People Smuggling and Other Measures Act brought together anti-people smuggling offences in the Migration Act and Criminal Code, and introduced a new offence in both acts of supporting people smuggling.

Attorney-General's direction

On 27 August 2012, the Attorney-General directed that the Commonwealth Director of Public Prosecutions (CDPP) shall not institute, carry on or continue to carry on a prosecution for an aggravated people smuggling offence under section 233C of the Migration Act unless the person had committed a repeat offence, their role in the people smuggling venture extended beyond that of a crew member or a death occurred during the people smuggling venture. Instead, the CDPP was directed to consider instituting or carrying on prosecutions under section 233A of the Migration Act.

Prosecution for an aggravated offence would only apply, if:

  • the person had committed a repeat offence

    and/or

  • their role in the people smuggling venture had extended beyond that of a crew member

    and/or

  • a death occurred during the people smuggling venture.

Instead, the CDPP was directed to consider instituting or carrying on prosecutions under section 233A of the Migration Act.

The direction applied to people who had not been sentence before 27 August 2012. It also included those people who had already been convicted or who had pleaded guilty, but had not yet been sentenced.

However, as stated in the direction, it does not apply to 'any proceedings, including appeals, in relation to an offence a person has been sentenced for' before 27 August 2012, in accordance with Australian law.

 

source - http://www.ag.gov.au/CrimeAndCorruption/Peoplesmuggling/Pages/Peoplesmugglinglegislation.aspx

 

Anti-People Smuggling and Other Measures Act 2010 - C2010A00050

 

 

Criminal Code Act 1995

 

Migration Act 1958

 

source - http://www.comlaw.gov.au

 

ஒரு நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. அந்த அரசாங்கமே சட்டத்தை மீற வேண்டும் எனக் கேட்பது எந்த வகையில் நியாயம்? அத்துடன் வரும் வழியில் ஏற்படும் உயிரிழப்புக்களும் அவுஸ் அரசின் தலையிலேயே கட்டப்படுகின்றன.  உள்ளே வருபவர்களும், அவுஸ் அரசாங்கைத்தை ஏய்ப்பதையே குறியாகக் கொள்ளுகிறார்கள். வாற ஒவ்வொரு இரானியனுக்கும் அஞ்சு ஆறு பிள்ளை என்று கணக்குப் பார்த்தால் அவுசும் இலகுவில் முஸ்லீம் நாடாக மாறிவிடும். படகில் வருபவர்கில் 3% இலும் குறைவானவர்களே இலங்கையர்கள்/தமிழர்கள்.

 

Link to comment
Share on other sites

CNN இல் வெளி வந்த ஒரு செய்தி. லிபரல் ஆட்சியப் பிடிக்கும் போது கெதி கெதியாக அலுவலை முடிப்பார்கள்.   Opinion: Australian parties in 'race to bottom' on asylum seeker policy

By Jane McAdam, Special to CNN
September 4, 2013 -- Updated 0857 GMT (1657 HKT)
130724102130-australia-boat-ciduan-story
 
An Indonesian police man carries an exhausted asylum seeker boy rescued from waters off West Java on July 24, 2013.

 

STORY HIGHLIGHTS
  • Labor government sending people who arrive by boat to offshore processing centers
  • Opposition Coalition says thousands already in Australia won't be allowed to stay
  • McAdam: "Queue jumper" narrative has permeated Australian society
  • Public perception is that asylum numbers are much higher than reality
 

Editor's note: Jane McAdam is a professor of law at the University of New South Wales and an Australian Research Council Future Fellow. She is a non-resident senior fellow at the Brookings Institution in Washington DC, and a research associate at the University of Oxford's Refugee Studies Centre.

 

Sydney (CNN) -- It might be surprising that in a country as wealthy, multicultural and big as Australia, one of the key election battles is about asylum seekers and refugees. Both major parties are engaged in a race to the bottom about how best to shut down Australia as a place of refuge for people who take to the sea.

Asylum seekers are an easy target for anxieties about national security, unemployment and demographic composition. Politicians have fueled fears that asylum seekers present a threat not only to the integrity of our borders, but to the national fabric as a whole.

Their policies rely on a spurious dichotomy between the "good refugee" (who waits patiently in a camp to be resettled in a faraway land) and the "bad refugee" (who "jumps the queue" by engaging people smugglers to come by boat). International law makes no such distinction because a person either has a well-founded fear of persecution and is in need of protection, or does not.

Australia's bid to stop 'queue jumpers'

The "queue jumper" narrative has permeated so deeply that it has enabled both political parties to construct extraordinary legislative and policy interventions: Mandatory detention for all unlawful arrivals; the excision of the whole Australian mainland from Australia's "migration zone;" the removal of boat arrivals to offshore processing centers in small Pacific island countries, with no prospect for resettlement in Australia; and the creation of temporary protection visas, barring "genuine" refugees from family reunion and permanent residence.

 

Despite originally decrying such draconian measures as inhuman and illegal, the Labor government, led by Prime Minister Kevin Rudd, has built upon many of them and increased their severity. For a time, it explained that its deterrence measures had an underlying humanitarian objective -- to "save lives at sea." But the latest iterations of its policy reveal a strong message of punitive deterrence.

OPINION: Why Australia's asylum plan won't work

In 2012, the Labor government reopened offshore processing centers in Nauru and Papua New Guinea, despite vowing it would never do so. The idea was that the inferior conditions there, lack of legal advice and review mechanisms, and delayed resettlement (around five years) would deter asylum seekers from getting on boats. But it didn't work, largely because it ignores the reasons why people seek protection in the first place.

So the government took it a step further, declaring in July 2013 that asylum seekers arriving by boat would now be sent to PNG for processing and resettlement. As full-page newspaper advertisements explained: "If you come here by boat without a visa you won't be settled in Australia."

 

The Opposition's political plan

 

The opposition Coalition, led by Tony Abbott, countered with disincentives of its own. First, if elected in a federal vote on September 7, it will expand offshore processing and actively seek other resettlement countries for boat arrivals found to be refugees. Though it will be possible for them to be resettled in Australia, it will be a "last resort" -- and temporary. Refugee status will be reassessed every three years, family reunion will be banned, and only work for the dole will be allowed. The deleterious psychological effects of this "limbo" protection have been well documented. Furthermore, the last time the policy was used, more women and children got on to boats because of the bar on family reunions. Many died in the process.

 

Secondly, the Coalition would appoint a three-star commander to protect Australia's borders. This is because it views the continued arrival of boat people as a national emergency requiring a military-led response. But according to a former chief of Australia's defense force, this is a misguided policy that would change nothing. Asylum seekers are not a defense issue.

Thirdly, the Coalition also promises to "turn back the boats" when it is safe to do so. But it rarely will be because it is illegal to expose people to a risk of persecution or turn back an unseaworthy vessel and place the lives of passengers at risk. It also suggested it would buy up Indonesian fishing vessels to stop those boats being used by people smugglers, a suggestion that was dismissed by the Indonesian government as unworkable and derogatory.

 

Given Australia's relative affluence and political stability, most voters have no conception of what it means to fear persecution or other forms of serious harm.

Jane McAdam

 

Fourthly, the Coalition has threatened to abolish the Refugee Review Tribunal (RRT), the independent body that reviews decisions made by government officials about whether or not people are refugees. This is because the RRT has found that many governmental decisions are flawed. But rather than probing the quality of government decision making, the Coalition has decided to get rid of the reviewer. This undermines a central tenet of a functioning administrative law system. Life or death decisions cannot be reviewed. Further, the Coalition's weekend announcement that it will strip legal aid from asylum seekers increases this risk of poor initial decision making and heightens the chance of refoulement -- or the expulsion of people with the right to be recognized as refugees.

 

A 'breach of international human rights'

Both Labor and Coalition policies breach Australia's international human rights obligations in various ways. At the very least, they undermine the humanitarian purpose of the Refugee Convention. More significantly, they violate concrete legal obligations -- such as the individual right to seek asylum (and the right not to be subjected to penalties for arriving without a visa in such cases), the right to be free from cruel, inhuman or degrading treatment, the right not to be arbitrarily detained, and the right to non-discrimination. A recent report by the U.N. Human Rights Committee underscored this. But because Australia has no bill of rights, it is very difficult to challenge such policies in domestic courts.

 

Experience tells us that these policies do not "stop the boats." As former Australian Prime Minister Malcolm Fraser recently observed, "No amount of deterrence can match the terror from which those who are genuine refugees are fleeing." Instead, they lead to increased levels of trauma and mental illness among refugee communities, exorbitant financial costs, and desperate family members undertaking dangerous boat voyages to try to join their loved ones. Moreover, asylum seekers get on boats because Australia tries to prevent their arrival by other means. There is no such thing as a "refugee visa" to apply for before departure, and it is highly unlikely that refugees would be able to get a tourist or work visa because of the presumption that they would apply for asylum on arrival. It is a Catch-22. Australia is one of the few countries in the Asia-Pacific region that could offer durable protection to refugees, since most of its neighbors have not ratified the Refugee Convention and do not have the legal, financial or technical capacity to offer real protection.

 

How many asylum seekers are there?

 

To put all of this into context, in 2012 Australia received 17,202 asylum seekers by boat, its highest annual number, but only 1.47% of the world's asylum seekers. In the same period, it accepted 190,000 people through its skilled and family migration scheme.

On a positive note, both parties will continue to resettle refugees directly from camps and urban settlements in other countries, as well as asylum seekers who come by plane who are found to be refugees. The total number of refugees accepted by Australia -- whether by overseas resettlement, plane arrivals or boat arrivals -- will be capped at 13,750 by the Coalition. Labor will increase that number to 20,000, and possibly up to 27,000 if there is a significant decline in the number of asylum seekers arriving by boat.

 

Public perception at fault?

 

The public perception is that asylum numbers are much higher than this, and many people do not understand why people flee in the first place. Given Australia's relative affluence and political stability, most voters have no conception of what it means to fear persecution or other forms of serious harm.

In fact, perhaps the saddest irony of all is that precisely because the asylum issue has such a negligible impact on most Australians' everyday lives, they can choose to remain ignorant about the issue. Yet it still drives votes.

Finally, the more that asylum seekers are made to disappear from our community, the less chance there is for Australians to get to know them as neighbors, colleagues or friends. As this happens, the chance for greater empathy and understanding also disappears.

Link to comment
Share on other sites

பெருமளவில் உபயோகமில்லாதவர்களாக கரீபியன் தீவுகளில் இருந்து வருகிறவர்களைக் குறிப்பிட்டிருந்தார்கள்..

 

 

இசை இது ஒரு பிழையான கூற்று...

Toronto/Canada வில் பிழைகள் செய்யும் கருப்பரில் 99% அங்கேயே பிறந்தவர்கள்....

 

Caribien இலிருந்து வேலைக்காக (பெரும்பாலானவர்கள் கீழ்நிலை வேலைகளுக்கே) தான் பெரும்பாலானவர்கள் வருகிறவர்கள்...அப்படி வருகிறவர்கள்  எமது தமிழரிலும் பார்க்க குணம், அடுத்தவருக்கு உதவும் பண்பு, பழக்கவழக்கங்களில் மேலானவர்கள்......

 

கனடாவில் ஏதாவது ஏமாற்று வேலைகளில் அடிக்கடி இடம்பிடிக்கும் பெயர்கள் தமிழ்பெயர்களே :)

புலிகள் தோற்றபோது தமிழரின் இழப்பை இதயபூர்வமாக உணர்ந்து ஆறுதல் கூறியது (எனக்கு :) )என்றால் இந்த கருப்பரே - நான் 20 வருடத்துக்கு மேலாக இவர்களோடு பழகியவன் என்ற முறையில் கூறுகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசுமைக்கட்சியினரால் செனட் சபையில் தெரிவித்த கருத்துக்கள் சில, செயல்பாடுகள் (யாழ் இணையத்தில் வந்தவை). யாழ் இணையத்தில் வாராதவை பல.

1)ஈழத்தமிழர்களின் நிலங்களில் சிங்களக்குடியேற்றம், தமிழர்கள் கடத்தப்படுதல், காணாமல் போவது உட்பட ஈழத்தமிழர்களின் முக்கிய பிரச்சனைகள் பற்றிய ஆற்றிய உரை
http://www.yarl.com/forum3/index.php?showtopic=106550
http://lee-rhiannon.greensmps.org.au/content/speeches/speech-sri-lanka

2)சிங்கள நாட்டின் துடுப்பாட்டத்திற்கு எதிராக நடைபெறும் கவனயீர்ப்பினை நிறுத்த முடியாமல் தோல்வியுற்ற அவுஸ்திரெலியாவில் இருக்கும் சிங்கள நாட்டுத்தூதரகம்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=115235

3)பிறையன் செனவிரட்ன சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=113184
http://www.radioaustralia.net.au/international/radio/program/connect-asia/australian-tamil-rights-advocate-decries-deportation-from-singapore/1062012

4)மாவீரர் நாளில் அவுஸ்திரெலியா பாராளுமன்றத்தில் மாவீரர் பற்றி உரையாற்றிய அவுஸ்திரெலியா பசுமைக்கட்சியின் செனட்சபை உறுப்பினர் Lee Rhiannon.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=112058

5)இலங்கை உயர்ஸ்தானிகரை நாடு கடத்த வேண்டும் - லீ ரியன்னன்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=105074

6)அவுஸ்திரேலிய செனட் சபையில் 2012 மார்ச் 21 இல் தீர்மானமான மனு பற்றிய செய்தி
http://www.yarl.com/forum3/index.php?showtopic=99650

7)அவுஸ்ரேலியாவில் கிறீன் கட்சியின் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன
http://www.yarl.com/forum3/index.php?showtopic=92059

8)
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து இலங்கை நீக்க வேண்டும் என கோரி, அவுஸ்திரேலிய செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அவுஸ்திரேலியாவின் கிரீன்ஸ் கட்சி, செனட் உறுப்பினர் லீ ஹனன் சமர்ப்பித்தார்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=92060

9)சிறிலங்காவுக்கான அவுஸ்திரெலியாத்தூதுவரும் முன்னாள் சிறிலங்கா கடற்படைத்தளபதியுமான திசரா சமரசிங்கா ஒரு போர்க்குற்றவாளி
http://www.yarl.com/forum3/index.php?showtopic=93067

10)நோபல் சமாதானப் பரிசுக்கு சனல் 4 தொலைக்காட்சி பரிந்துரைப்பு!
http://www.yarl.com/forum3/index.php?showtopic=97609

11)ஆணைக்குழுவின் அறிக்கை - கெவின் ரூட்டின் அமைதி! சர்வதேச அக்கறையை ஒதுக்கித் தள்ளும்படி அமைந்துள்ளது. அவுஸ்திரேலிய பசுமை கட்சி விமர்சனம்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=97837

12)தமிழர்கள் அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தந்தமைக்கு பசுமைக்கட்சியினர் வாழ்த்துக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=98322

 

 


அவுஸ்திரேலியாவில் இருக்கும் Liberal Party நீண்ட காலமாக பாதுகபப்பை தேடிவரும் அகதிகளுக்கும், எங்களின் தூய்மையான விடுதலைப்போராட்டத்திற்கும் வெவ்வேறு வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.

எதிர்கட்சியின் துணைத் தலைவர்  Julie Bishop அவர்கள் சிறிலங்காவிற்கு சென்று வந்ததும் அங்கே தமிழர்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திவரும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் சிறிலங்காவை பாராட்டினார். ஆனால் எங்கள் மக்களுக்கு சிறிலங்கா அரசு தொடர்ந்தும் கொடுத்து வரும் பெரும் துயரங்களை நாங்கள் யாவரும் அறிவோம்.

பாதுகாப்பை தேடிவரும் தமிழீழ அகதிகளின் வரவை எதிர்ப்பவர்களின் வாக்கை தம் பக்கம் திருப்புவதற்காகவும். அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தமது ஆட்சியை கொண்டுவருவதற்காகவும், தமிழர்கள் படும் துன்பங்களை அறிந்திருந்தும், தமிழ் இனத்தை அழிப்பதற்காகவே செயற்படும் சிறிலங்காவோடு இன்று நெருங்கிய உறவை வைத்திருக்கிறார்கள். இதை தெரிந்தும் நாங்கள் Liberal Party க்கு வாக்களிக்கலாமா?

2008ம் ஆண்டு முதல், Labor Party ஆளும்காட்சியாக இருந்தது வந்துள்ளது. எமது மக்கள் 2009இல் பேர்  அழிவை சந்தித்த போது, பல்லாயிரக்கணக்கில் எமது மக்கள் அழிந்துபோவதை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமும், பிரதமராக இருந்துவந்த Kevin Rudd அவர்களிடமும் நாங்கள் எமது மக்களின் அழிவை தடுப்பதற்கு  முயற்சிகளை எடுங்கள் என்று பல்வேறு வகையில் கேட்டிருந்தோம் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தோம் அதற்கு எந்த ஒரு பதிலும் தராமல் இருந்தவர்தான் இந்த Kevin Rudd.

சிறிலங்கா நேவியின் முன்னாள் தளபதி, சமரசிங்காவையும் சிறிலங்கா High Commissioner ஏற்றுக்கொண்டதும் Labor Party தான். பாதுகப்பை தேடிவரும் அகதிகளை சிறிலங்காவின் சித்திரவதை கூடங்களுக்கு திருப்பி அனுப்புபவர்களும், Labor Party தான்.

இனஅழிப்பில் இருந்து தப்பி வந்தவர்களை, பொருளாதாரத்திற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்று அசிங்கப்படுத்தினார்கள், இன்று சிறிலங்காவில் ஒரு பிரச்சினையும் இல்லை, CHOGM  2013 அங்கே  நடக்க வேண்டும் நாங்கள் அங்கே அந்த சந்திப்பிற்கு சமூகம் அளிப்போம்  என்று கூறுவதும் Labor Party தான். இவர்களுக்கும் நாங்கள் வாக்களிக்கலாமா?

அவுஸ்திரேலிய மக்களின் வாக்குகளை எதிர்பார்க்காது தூயமனத்துடன் தமிழர் படும் அவலங்களை உணர்ந்து தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பவர்வர்கள் The Greens Party மட்டுடம் தான்.

2009ம் ஆண்டில் உலகமே எங்களை பயங்கரவாதிகள் என்று சொன்ன போதிலும் The Greens Partyயின் தாலைர் Bob Brown னும் Lee Rhiannon அவர்களும் தான் தொடர்ச்சியாக எங்களுக்காக குரல் கொடுத்தார்கள். இன்றைக்கும் எந்தவொரு நினைவு நாளோ, ஆர்பாட்டங்களோ நடந்தாலும் The Greens Party யை சேர்ந்த ஒரு உறப்பினர் அங்கே எங்களுக்கு பக்க பலமாக நிற்பார்கள்.

உலகத்திலே முதல் முறையாக பாராளுமன்றத்தில் மாவீரர் நாள் அன்று எங்களின் மாவீரர்களை நினைவு கூர்ந்தவர்களும் இந்த The Greens Party சேர்ந்தவர்கள் தான்.

தமிழ் இளம் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் Liberal/Labor க்கு எமது எதிர்ப்பை தெரிவிப்பதற்காகவும் அவர்கள் தமிழர்களை பகடைக்காயாக பாவித்து விளையாடும் அரசியல் விளையாட்டுக்கு துணைபோகப் போவதில்லை என்பதை காட்டுவதற்காவும், எங்களுடன் பக்கபலமாக இருந்து எமது அவலங்களிலும் அழிவுகளிலும் தூய்மையாக பங்காற்றிவரும் The Greens Partyக்கு எமது ஆதரவை கொடுப்பது என்று முடிவு செய்துள்ளோம்.  அதே போல தமிழ் மக்கள் அணைவரும் The Greens Partyக்கு தமது ஆதரவை வழங்கி அவர்களுக்கே உங்களுடைய வாக்குகளையும் அளிக்கவேண்டும்  என்று வேண்டி நிற்கின்றோம்.

 
நன்றி

தமிழ் இளம் செயற்பாட்டாளர்கள்.

Link to comment
Share on other sites

இசை இது ஒரு பிழையான கூற்று...

Toronto/Canada வில் பிழைகள் செய்யும் கருப்பரில் 99% அங்கேயே பிறந்தவர்கள்....

Caribien இலிருந்து வேலைக்காக (பெரும்பாலானவர்கள் கீழ்நிலை வேலைகளுக்கே) தான் பெரும்பாலானவர்கள் வருகிறவர்கள்...அப்படி வருகிறவர்கள் எமது தமிழரிலும் பார்க்க குணம், அடுத்தவருக்கு உதவும் பண்பு, பழக்கவழக்கங்களில் மேலானவர்கள்......

கனடாவில் ஏதாவது ஏமாற்று வேலைகளில் அடிக்கடி இடம்பிடிக்கும் பெயர்கள் தமிழ்பெயர்களே :)

புலிகள் தோற்றபோது தமிழரின் இழப்பை இதயபூர்வமாக உணர்ந்து ஆறுதல் கூறியது (எனக்கு :) )என்றால் இந்த கருப்பரே - நான் 20 வருடத்துக்கு மேலாக இவர்களோடு பழகியவன் என்ற முறையில் கூறுகிறேன்...

நான் சொன்னது அரச அறிக்கையில் இருந்ததை.. அது பிழையாக இருந்தால் அவர்களைத்தான் கேட்கவேணும்.. :D

நிற்க.. அவர்கள் சொன்னது கனேடியப் பொருளாதார ஊக்கிகள் பற்றியது.. அதாவது அதிக வரி கட்டியவர்கள்.. தெற்காசியர் என்று சொல்லும்போது இந்தியர், பாகஸ்தானியர் எலலோரும் உள்ளடங்குகின்றனர்.

நான் அவுஸில் இருந்தால் பசுமைக்கட்சிக்குத்தான் போடுவேன்..

Link to comment
Share on other sites

நான் சொன்னது அரச அறிக்கையில் இருந்ததை.. அது பிழையாக இருந்தால் அவர்களைத்தான் கேட்கவேணும்.. :D

 

 

அந்த அறிக்கையின் link ஐ கொடுக்க முடியுமா?

(அறிந்து கொள்ள தான்) :)

Link to comment
Share on other sites

நான் 20 வருடத்துக்கு மேலாக இவர்களோடு பழகியவன் என்ற முறையில் கூறுகிறேன்...

அண்ணாச்சி.. எப்படிப்பட்டவர்களுடன் பழகுவர் என்பது யாழறிந்த விஷியமாச்சே..

Link to comment
Share on other sites

அண்ணாச்சி.. எப்படிப்பட்டவர்களுடன் பழகுவர் என்பது யாழறிந்த விஷியமாச்சே..

 

ஒரு dealing தான் :)

 

Link to comment
Share on other sites

தேர்தலில் படுதோல்வி நிலையை நோக்கி தற்போதைய அரசாங்கம்...

 

 

தற்போதய நிலை
 
கெவின் றட் - 51 seats
எதிர் கட்சி  - 73 seats
 
(48% counted so far..)
Link to comment
Share on other sites

கள்ள தோணியில் ஆஸ்திரேலியா க்கு வந்த வர்கின்றவர்களுக்கு எல்லாம் புதிய பிரதமர் அபோட் ஆப்பு இருக்க போறார்......:D

புதியபிரதமருக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.