Jump to content

ஒரு போராளியின் குறிப்பேடு ..!


Recommended Posts

ஊரை உறங்க செய்து

நாய்களுக்கு தெரியாமல் நடந்து

வெள்ளி பார்த்து திசை பிடித்து

அவன் எல்லையை தொடும்போது

ஆந்தைகள் முழித்து இருக்கும்

 

அவன் மட்டும் விடிகாலை பொழுதில்

குறக்கண்ணில் தூங்கி விழித்து இருக்க

அவன் கால் அருகில் அரவம்போல் நகர்ந்து

அவனை கடந்து போகும்போது

உள்ளம் மகிழ்ந்து இருக்கும் உள்ளுக்குள்

 

உள்ளே வந்துவிட்டோம் என இறுமாந்து நிமிர்ந்து

நடந்து போகையில் எதிரே ஒரு கேள்வி வரும்

யாரு நீ எங்க போறா .....பதில் யோசிக்க முன்

சுடும் விசை கீழ் நோக்கி போகும் அதன் டிக் ஒலி

அவன் காதிலும் விழும் இருவருக்குள்ளும்

ஒரு நொடி மவுனம் பேசும் அத்துடன் கலைக்கப்படும்

 

சொன்ன இடத்துக்கு வந்து சேர் என உரக்க கூறி விட்டு

வலம் இடமா பாய்ந்து வேட்டுக்களை தீர்த்து

எம்மை காப்பற்றி விட்டு மறுநொடி மனது சொல்லும்

இவன் மாட்டிட்டானோ இல்லை இருக்காது

போய் இருப்பான்

இல்லை எதுக்கும் ஒருமுறை பார்த்து வருவம்

 

என மீண்டும் அவன் நிலைக்கு மெதுவா வந்து

உற்று நோக்கி ஓகே போயிட்டான் என

மனது ஒரு முடிவுக்கு வர முனகல் சத்தம்

பக்கத்தில் மச்சான் என இருளில் தடவி

என்ன ஆச்சு என சைகையில் கேட்டு

அவன் கைகளை இறுக்க பற்றி

 

நீ போயிடு நான் முடிவு எடுத்துட்டன் என

சொல்லி எம்மை அனுப்ப அவன் தன்னை

அழிக்க நினைத்து நான் கவர் கொடுக்குறன் நீங்க

வேலிய தாண்டுங்கோ என்று பிடிவாதம் பிடிப்பவனை

இல்லை மச்சி அடிச்சு பிரிச்சு போவம் வாறது வரட்டும்

அது ஒண்டும் பெரிய சிக்கல் இல்லை

என சகதோழன் கூறி

 

இவனை நான் தோளில் போடுறன்

நீ குண்டை கழட்டி கையில வைச்சு இரு

நிலைமை மோசம் எண்டா அடி அல்லது

போயிடுவம் விடிய முதல் ஓகே என

ரகசியம் பேசி அவன் கம்பி வேலியை வெட்டி

கடந்து வந்தவுடன் ஒரு துள்ளல் வரும்

உலகில் அப்பொழுது போல் ஒரு ஆனந்தம்

இல்லை நட்பை மீட்டு வருவது

 

ஒரு போராளியின் குறிப்பேடு ..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உரைநடைக் கவிதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்தும் பகிருங்கள்.

Link to comment
Share on other sites

அஞ்சரன்,

ஒரு போராளியின் குறிப்பேடு இன்னும் கவிதையை மெருகுபடுத்தலாம். உணர்வு வெளிப்பாடு ஆளமாக கூறக்கூடிய கருத்தாளம் கவிதைக்குள் இருக்கிறது. அவசரத்தில் எழுதி முடித்தமாதிரியிருக்கு.
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவனை நான் தோளில் போடுறன்

நீ குண்டை கழட்டி கையில வைச்சு இரு

நிலைமை மோசம் எண்டா அடி அல்லது

போயிடுவம் விடிய முதல் ஓகே என

ரகசியம் பேசி அவன் கம்பி வேலியை வெட்டி

கடந்து வந்தவுடன் ஒரு துள்ளல் வரும்

உலகில் அப்பொழுது போல் ஒரு ஆனந்தம்

இல்லை நட்பை மீட்டு வருவது

 

அவர்களின் தியாகங்கள் கதைகள் பாசங்கள் ஒரு பாயில் படுத்து ஒரு தட்டில் உன்று ஒன்றாகவே மரணித்த கதைகள் காலமும் கண்ணீர்வடிக்கும் காவியங்கள்... நன்றி அண்ணா கவிதைக்கு..

Link to comment
Share on other sites

சாந்தினி அக்கா எழுத வரும் இலக்கியம் வராது நமக்கு முயற்சி செய்கிறன் நன்றி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.