Jump to content

Recommended Posts

உன் எழுத்தில் அம்சம் இல்லை

உன் கருத்தில் ஆழம் இல்லை

உன் சொல்லில் கூர்மை இல்லை

உன் கவியில் உணர்ச்சிகள்  இல்லை

என்னை நோக்கிய கேள்வி

என் பாணியில் போகட்டுமா 

நான் என்ன பெண்ணு பார்க்கவா போகிறேன்

நான் என்ன கிணறு வெட்டவா போனேன்

நான் என்ன சானை பிடித்தா தந்தேன்

நான் என்ன பிட்டு படமா எடுத்தேன்

என்னுள் எழும் இயல்பை உன்னுள்

கொன்று புதைக்காமல் என் சமூகத்தின் 

முன் வீசி நின்றேன் பணம் என்றால்

பிடித்து இருப்பார் தமிழ் ஆகிட்டே

விலகி போகிறார் விமர்சனம் செய்கிறார் 

தெளிவெண்ணை கசக்கும் ஆனால்

உடலுக்கு நல்லதாம் தமிழும் அப்டியே

நான் பாரதி அல்ல பாமரன் .

Link to comment
Share on other sites

கவிதையின் பொருள் அள்ளித்தர ஒருவரையும் காணோம். விலை அதிகமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் ஒண்டும் புரியலை ப்றோ...  :unsure:  (உங்க கவிதை அல்ல, உலகம் போற போக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுள் எழும் இயல்பை உன்னுள்

கொன்று புதைக்காமல் என் சமூகத்தின் 

முன் வீசி நின்றேன் பணம் என்றால்

பிடித்து இருப்பார் தமிழ் ஆகிட்டே

விலகி போகிறார் விமர்சனம் செய்கிறார் 

தெளிவெண்ணை கசக்கும் ஆனால்

உடலுக்கு நல்லதாம் தமிழும் அப்டியே

நான் பாரதி அல்ல பாமரன் .

 யாருக்காகவும் உங்கள் இயல்பை தொலைத்துவிடாதீர்கள்... உங்கள் வழியில் உங்கள் நடையில் தொடருங்கள்.... வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

கவிதைவரிகள் ருசித்தபோது வரியொன்று கரித்தது.

பொருள் தேடினேன், அறிந்து தந்தவர் யாருமில்லை!

தமிழ் எப்போ தெளிவெண்ணைபோல் கசந்தது!.

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே. :wub: 

Link to comment
Share on other sites

உன் எழுத்தில் அம்சம் இல்லை

உன் கருத்தில் ஆழம் இல்லை

உன் சொல்லில் கூர்மை இல்லை

உன் கவியில் உணர்ச்சிகள்  இல்லை

என்னை நோக்கிய கேள்வி

என் பாணியில் போகட்டுமா 

நான் என்ன பெண்ணு பார்க்கவா போகிறேன்

நான் என்ன கிணறு வெட்டவா போனேன்

நான் என்ன சானை பிடித்தா தந்தேன்

நான் என்ன பிட்டு படமா எடுத்தேன்

என்னுள் எழும் இயல்பை உன்னுள்

கொன்று புதைக்காமல் என் சமூகத்தின் 

முன் வீசி நின்றேன் பணம் என்றால்

பிடித்து இருப்பார் தமிழ் ஆகிட்டே

விலகி போகிறார் விமர்சனம் செய்கிறார் 

தெளிவெண்ணை கசக்கும் ஆனால்

உடலுக்கு நல்லதாம் தமிழும் அப்டியே

நான் பாரதி அல்ல பாமரன் .

முதலில் அஞ்சரனின் கவிதைக்குப் பாராட்டுக்கள் . கவி மொழியைப் பொய்யாமொழி என்றும் கூறுவார்கள் . ஏனெனில் அது சொல்லும் செய்தி பல்வேறுபட்ட கோணங்களில் வாசகர் மனதில் பதிவதாலேயே அவ்வாறு கூறுவார்கள் . அஞ்சரனின் தெளிவெண்ணை கசக்கும் ஆனால் ///  , இந்த வரிகளில் நான் விளங்கிக் கொண்டது என்னவென்றால் ,

தெளிவெண்ணை = தெளிந்த எண்ணை , நல்லெண்ணை .  நல்லெண்ணை கசக்கும் ஆனால் உடலுக்கு நல்லது தமிழும் அது போலவே என்பதாகும் .  இதில் யாருக்காவது வேறு புரிதல்கள் இருந்தால் உங்கள் புரிதல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் எழுத்தில் அம்சம் இல்லை

உன் கருத்தில் ஆழம் இல்லை

உன் சொல்லில் கூர்மை இல்லை

உன் கவியில் உணர்ச்சிகள்  இல்லை

என்னை நோக்கிய கேள்வி

என் பாணியில் போகட்டுமா 

பய புள்ளகள் தெரியாமல் 

சொல்லிப்புட்டாங்க

:D  

நீங்கள் நிலைமாறாமல் உங்கள் கவிதைகளை வடியுங்கள் .

அடிக்கடி கருத்தெழுதாவிட்டாலும்

உங்கள் கவிதைக்கு ரசிகன் யான்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞனுக்கே உரிய மிடுக்கு இருக்கு அப்பிடியே பத்திரமா வைத்துக் கொள்ளுங்கள் தம்பி :)

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றி .

லகர ளகரங்களை கூடுதலா சேர்த்து எழுதினா தான் அதை கவிதை என்கிறர்கள் இலக்கியம் என்கிறார்கள் அதுதான் எனக்கு புரீல

உதாரணம் _விழி வழி எழுதி உன் இதழ் ஓரம் உருகி மருகி தனன்னா தன்னன்னா இப்படி போனால் இலக்கிய காவியம் ..உண்மையா படிச்சனியல் சொல்லுங்க ஐயாம் அப்பாவி அங்குசாமி  :unsure:

மரபுக் கவிதைகள் அல்லது பாடல்கள் என்றால் அவற்றுக்கு வரைமுறை இருக்கும்.. உதாரணமாக வெண்பா.. புதுக்கவிதைக்கு எதுவும் தேவையில்லை. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரியாது இருக்கும் வரைக்கும் தான், உலகம் புதுமையாக இருக்கும்!

புரிந்து கொண்டால் நீ மனிதனல்ல, ஞானி! :D

அஞ்சரனை நல்லாக் குழப்பிப்போட்டினம் போல! :icon_idea:

Link to comment
Share on other sites

அஞ்சரன் உங்களுக்குரிய பாணியில் எழுதுங்கள் அஞ்சரன்....! ஏனெனில் அதுதான் உங்களுக்குரிய அடையாளம்.

உங்கள் அடையாளங்களை எதற்காகவும் மாற்றிக்கொள்ளாதீர்கள்!

அத்துடன் முக்கியமான இன்னொரு விடயம்... மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தினை வளர்த்துக்கொள்ளுங்கள்.

இங்கு யாரோ சொன்னதைப்போல கவிஞனுக்கு செருக்கும்,மிடுக்கும் இருக்கோணும் என்று அவசியமேயில்லை.

அது கவிஞனின் எழுத்தில் இருக்கவேண்டுமே ஒழிய...  கவிஞனின் மனதில் இருக்கக் கூடாது. எழுத்தில் நிதானமும், உறுதியும் இருந்தால் போதும்.

வாழ்த்துக்கள் அஞ்சரன். தொடரட்டும்! :)

அப்படி இல்லை அண்ணா எனக்கு அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை நான் சந்தோகம் அதுதான் கேட்டேன் மற்றும் படி நான் எனக்கு முடிந்ததை தான் எழுதுவேன் நிதானம் நிறைய இருக்கு :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆகாஹா அருமை தொடருங்கள் ....
 
பகிர்விற்கு நன்றி அஞ்சரன்.  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாஹா அருமை தொடருங்கள் ....
 
பகிர்விற்கு நன்றி அஞ்சரன்.  :)

அவர் தொடருவார் அண்ணை..தொடரணும்.. அது விதி.. இல்லாட்டி இங்கினை எல்லாருமாய் சேர்ந்து அடித்தே தொடரவைப்பம்... :D

Link to comment
Share on other sites

 அஞ்சரனின் தெளிவெண்ணை கசக்கும் ஆனால் ///  , இந்த வரிகளில் நான் விளங்கிக் கொண்டது என்னவென்றால் ,

தெளிவெண்ணை = தெளிந்த எண்ணை , நல்லெண்ணை .  நல்லெண்ணை கசக்கும் ஆனால் உடலுக்கு நல்லது தமிழும் அது போலவே என்பதாகும் .  இதில் யாருக்காவது வேறு புரிதல்கள் இருந்தால் உங்கள் புரிதல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் :) :) .

தெளிவெண்ணை, அதன் தன்மையும் புரிகிறது. அது கசக்கும்! அதுவே சிலருக்கு சுவைக்கும்! எனது புரிதல் இங்கு உவமானம் பற்றியதல்ல, உவமேயம் பற்றியே எழுந்துள்ளது. தமிழ் கசக்கும் என்பதாக நீங்கள் ஏற்றுக்கொண்டதன் விளைவே, உவமானம் பற்றிய உங்கள் விரிவான விளக்கம் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா?.

Link to comment
Share on other sites

கவிதைக்கு பாராட்டுக்கள். ஆனால் நல்லதொரு கவிதைக்கு புரீல என்று  தென்னிந்திய சினிமாத் தாக்கத்தின் தலைப்பு போட்டிருக்கிறீர்கள் உறுத்தலாக உள்ளது.இது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல யாழிலும் பலரிற்கு தொற்று நோயாக மாறியுள்ளது. பேசணும். வரணும்.பசங்க.என்று  எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.இவற்றை கவனத்திலெடுங்கள். அல்லது அட்வைஸ் பண்ண வந்துட்டாரு இவரு பெரிய பீட்டரு என்று நினைத்தாலும் பரவாயில்லை நன்றி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இழவுடா கவிதைக்கான விமர்சனத்தை எதிர்பார்த்து கவிஞன் நின்றால் அதற்கு முடிந்தால் விமர்சனத்தை முன்வைக்கவேண்டும் மற்றவர் என்ன எழுதியிருக்கிறார் என்று ஏன்தான் முடியைப்பிய்க்கிறார்களோ? :D 

சாத்திரிக்கு தொப்பி அளவென்றால் அதற்கு நான் பொறுப்பில்லை :lol::D

Link to comment
Share on other sites

கவிதைக்கு பாராட்டுக்கள். ஆனால் நல்லதொரு கவிதைக்கு புரீல என்று  தென்னிந்திய சினிமாத் தாக்கத்தின் தலைப்பு போட்டிருக்கிறீர்கள் உறுத்தலாக உள்ளது.இது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல யாழிலும் பலரிற்கு தொற்று நோயாக மாறியுள்ளது. பேசணும். வரணும்.பசங்க.என்று  எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.இவற்றை கவனத்திலெடுங்கள். அல்லது அட்வைஸ் பண்ண வந்துட்டாரு இவரு பெரிய பீட்டரு என்று நினைத்தாலும் பரவாயில்லை நன்றி. :lol:

 உண்மைதான் அண்ணா இவ்வாறான சொல்லாடல் பார்ப்பவரை கவரும் என்பதால் பாவிக்க முயன்றேன் கவனத்தில் எடுக்கிறேன் .

தவறுகள் திருத்தப்படவேண்டியது நியாய படுத்துவது அல்ல என்பது யாம் அறிவோம் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு பாராட்டுக்கள். ஆனால் நல்லதொரு கவிதைக்கு புரீல என்று  தென்னிந்திய சினிமாத் தாக்கத்தின் தலைப்பு போட்டிருக்கிறீர்கள் உறுத்தலாக உள்ளது.இது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல யாழிலும் பலரிற்கு தொற்று நோயாக மாறியுள்ளது. பேசணும். வரணும்.பசங்க.என்று  எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.இவற்றை கவனத்திலெடுங்கள். அல்லது அட்வைஸ் பண்ண வந்துட்டாரு இவரு பெரிய பீட்டரு என்று நினைத்தாலும் பரவாயில்லை நன்றி. :lol:

சாத்திரி அண்ணை போற போக்கில பொதுவாய் அடிச்சதில நாலைஞ்சு அடி எனக்கு மேலயும் விழுந்திட்டு :D .. என்ன இழவோ தெரியல எழுதேக்க இந்திய நாவல்களை படிச்சாக்கும் அவங்கட மொழி நடையே வருது..மாத்தவும் முடியலப்பா :( .. ஆனால் பேசும்போது தமிழக உறவுகள் கேட்டால் சொல்லுவாங்க சுத்த யாழ்ப்பாணத்தான் பேச்சு எண்டு.. எழுதேக்கதான் வில்லங்கமாய் இருக்கு.. :(

Link to comment
Share on other sites

தெளிவெண்ணை, அதன் தன்மையும் புரிகிறது. அது கசக்கும்! அதுவே சிலருக்கு சுவைக்கும்! எனது புரிதல் இங்கு உவமானம் பற்றியதல்ல, உவமேயம் பற்றியே எழுந்துள்ளது. தமிழ் கசக்கும் என்பதாக நீங்கள் ஏற்றுக்கொண்டதன் விளைவே, உவமானம் பற்றிய உங்கள் விரிவான விளக்கம் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா?.

சிலர் இங்கு தமிழ் கதைப்பதை கூட வெட்கமாக நினைப்பதை பார்க்க முடில என் பிள்ளை அதை படிக்குறா இதை படிக்குறா எண்டு சொல்லினம் ஒழிய எவரும் தமிழ் படிக்குறா என்று சொல்வது குறைவு ஐரோப்பாவில்

Link to comment
Share on other sites

சிலர் இங்கு தமிழ் கதைப்பதை கூட வெட்கமாக நினைப்பதை பார்க்க முடில என் பிள்ளை அதை படிக்குறா இதை படிக்குறா எண்டு சொல்லினம் ஒழிய எவரும் தமிழ் படிக்குறா என்று சொல்வது குறைவு ஐரோப்பாவில்

புரிந்தது அஞ்சரன், வெண்சங்கில் பழுதில்லை அதனை ஊதுவோர் வாய் பழுதென்று.

கவிதைக்கு வாழ்த்துக்கள்! யாசிக்கிறேன், மேலும் மனதைப் புடம்போடும் கவிதைகள் வேண்டி இங்கு.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் 'புரியவில்லை' என்பதுகூடப் படைப்புக்கான உந்துதலைத் தருகிறதல்லவா? எனவே தொடருங்கள்.  புதுவையவர்களின் சொல்லிய விடயமொன்று கவிஞனென்பவன் கலகக்காரனென்று... குமுகாயத்தை பொதுநோக்கில் கலகம் செய்வதே நியாங்களைத் தேடியே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இயல்பாய் உங்கள் ஆதங்கத்தைச சொல்கிறது. நன்றாக உள்ளது. இயல்பாகவே எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.