Jump to content

காது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்?


Recommended Posts

காது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்?
 
metty.jpgmookuthi.jpg
 
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு.
 
கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.
 
ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.
 
ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.
 
அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.
 
நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.
 
அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.
 
இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.
 
இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.
 
பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
 
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
 
இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா
 
சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.
 
ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
 
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.
 
தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.
 
மோதிரம் அணிவது ஏன்?
 
விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக் கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.
 
அரைநாண் கொடி அணிவது ஏன்?
 
உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது சம நிலைக்கு கொண்டு வர இந்த அரை நாண் கொடி உதவுகிறது.
 
மகாபாரத்தில் திருதாஷ்திரன் தன் மகன் துரி யோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும் போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்கொடியால் இடுப்பு க்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரை நாண்கொடி உடல் பாதுகாப்பு க்கும் பயன்படுகிறது
 
மெட்டி அணிவது ஏன்?
 
 
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இரு க்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம் பெண்கள் கர்பம் அடை யும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்
.
கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையா கவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.
 
கொலுசு அணிவது ஏன்?
 
கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம். பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.
 
உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. சில விவாகரமான விஷயங்கள் "இலை மறை கனியாக" இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்.
 
 

http://madurai-pcl-sivakumar.blogspot.in/2012/12/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காது குத்துவது, மூக்குத்தி, மோதிரம் அணிவது ஏன்?

 
ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

 

ஆண்கள்... வலது புறம், காது குத்தினால்... கிளிஞ்சுது கிருஷ்ணகிரி.

வீதியில்.... நம்மைத் திரத்திக் கொண்டு, ஒரு கூட்டமே... வரும். :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 
அரைநாண் கொடி அணிவது ஏன்?
 
 
மகாபாரத்தில் திருதாஷ்திரன் தன் மகன் துரி யோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும் போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்கொடியால் இடுப்பு க்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரை நாண்கொடி உடல் பாதுகாப்பு க்கும் பயன்படுகிறது

 

http://madurai-pcl-sivakumar.blogspot.in/2012/12/blog-post.html

 

 

எது திருதராஸ்டினனா? அப்படி ஒன்றும் படிக்கவேயில்லையே?  :unsure:  காந்தாரி தானே அப்படிப் பண்ணினது ? அதுவும் தாய் காந்தாரி குளித்து விட்டு நிர்வாணமாக வரச் சொல்ல, வரும் வழியில் கிருஷ்ணர் கண்டுவிட்டு நடந்ததைக் கேட்டபின்னர், ஆடவனான நீ அதுவும் தாய் முன் நிர்வாணமாக நிற்பாயா என்று கேட்டதுக்கு, அவ்ன் வாழை இலையைக் கட்டிக்கொண்டு போய் தாய் முன் நிற்கும் போது தான் கந்தாரியின் கண்பட்ட இடம் வஜ்ஜிரமாகியதாகவும்,  தொடை மட்டும் பலவீனமான பகுதியாய் இருக்க வீமன் அதை உடைத்துக் கொன்றான் எனறு தானே படித்தோம். :o

 

யாராச்சும் விளக்கம் சொல்லுங்கப்பா ... :(

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள்... வலது புறம், காது குத்தினால்... கிளிஞ்சுது கிருஷ்ணகிரி.

வீதியில்.... நம்மைத் திரத்திக் கொண்டு, ஒரு கூட்டமே... வரும். :D  :lol:  :icon_idea:

விசயம் தெரியாமல் வலது காதில் குத்தீட்டு இப்ப கழட்டி வச்சிருக்கன் :D ...இப்பதான் மெல்ல மெல்ல ஓட்டை மறையுது.. இனி இடக்காதில் குத்தணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசயம் தெரியாமல் வலது காதில் குத்தீட்டு இப்ப கழட்டி வச்சிருக்கன் :D ...இப்பதான் மெல்ல மெல்ல ஓட்டை மறையுது.. இனி இடக்காதில் குத்தணும்..

 

ஐயனுக்கு சமர்ப்பணம். :lol:

 

 

http://www.youtube.com/watch?v=uPAd-jOedeU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசயம் தெரியாமல் வலது காதில் குத்தீட்டு இப்ப கழட்டி வச்சிருக்கன் :D ...இப்பதான் மெல்ல மெல்ல ஓட்டை மறையுது.. இனி இடக்காதில் குத்தணும்..

 

வலது காதில் குத்திய ஓட்டை மறையுமுன்னம்..... கிறீஸ், கொலன்ட் பக்கம் போயிடாதீங்க. சுபேஸ்.

எங்கையெண்டு பாத்துக் கொண்டிருந்து, ஓட்டையை தூர் வாரிப் போடுவாங்க... பாவிங்க. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லொள்ளுப்பிடிச்சதுவள்கிட்ட ஒண்டும் சொல்லக்குடாது இனிமேல்.. கூடி இருந்து கும்மி அடிக்குதுகள்.. :D

Link to comment
Share on other sites

மகாபாரதம் இப்பொழுதும் நினைவில் உள்ளவர்கள் ஜீவாவின் கேள்விக்கு பதிலளியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூக்குத்தி குத்துவது கோபத்தைக் குறைக்கும்.

Link to comment
Share on other sites

மூக்குத்தி குத்துவது கோபத்தைக் குறைக்கும்.

 

குறைஞ்ச மாதிரி தெரியேல்லையோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தர் வேணுமென்றால் நீங்களும் மூக்குத்தி குத்திப் பாருங்கள். :D

 

என் அனுபவத்தில் மூக்குத்தி குத்திக் கொண்ட பின்னர் கோபம் மிகுதியாக வருவதில்லை. அதற்கு முன்னர் பொல்லாத கோபக்காரியாக்கும் :lol:

Link to comment
Share on other sites

சாத்தர் வேணுமென்றால் நீங்களும் மூக்குத்தி குத்திப் பாருங்கள். :D

 

என் அனுபவத்தில் மூக்குத்தி குத்திக் கொண்ட பின்னர் கோபம் மிகுதியாக வருவதில்லை. அதற்கு முன்னர் பொல்லாத கோபக்காரியாக்கும் :lol:

 

அப்படியா?? யாருக்கு குத்துவது நீங்கள் ஏற்கனவே குத்தியிருக்கிறீங்கள். மனிசியும் குத்தியிருக்கு குத்துவதற்கு புதிசா யாரையாவது தேடவேணும் முயற்சி பண்ணி பாக்கிறன்.யாருக்காவது மூக்குத்தி குத்த வேண்டுமா என்னை தொடர்பு கொள்ளுங்கள். :lol:

எனக்கும் மூக்குத்தி குத்த விருப்பம். ஆனால் பயமாய் இருக்கு.

 

அய்...அலை கிடைச்சிட்டுது  ஆனால் மொன்றியல்  வர செலவாகும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... உங்களுக்குக் குத்திக் கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா?? யாருக்கு குத்துவது நீங்கள் ஏற்கனவே குத்தியிருக்கிறீங்கள். மனிசியும் குத்தியிருக்கு குத்துவதற்கு புதிசா யாரையாவது தேடவேணும் முயற்சி பண்ணி பாக்கிறன்.யாருக்காவது மூக்குத்தி குத்த வேண்டுமா என்னை தொடர்பு கொள்ளுங்கள். :lol:

 

அய்...அலை கிடைச்சிட்டுது  ஆனால் மொன்றியல்  வர செலவாகும். :lol:

 
அய்ய்...கோடு போட சொன்னா, றோடு போடுறியளே... :D
Link to comment
Share on other sites

நானும் அப்ப சரியான பக்கத்திலை தோடு குத்தி திரிஞ்சன் :icon_mrgreen: . ஆரோ ஒரு கிரகம் பெடி தோடுடைய செவியனாய் பரிசிலை சுத்துறான் எண்டு அம்மையப்பனிட்டை போட்டுகுடுக்க வீடு ரணகளமாய் போச்சுது  :(  :(  என்னை காவாலி களிசறை எண்டே முடிவு கட்டிப் போட்டங்கள் :lol::D .

 

Link to comment
Share on other sites

பார் சாத்தர் வாற வேகத்தை ....... :lol: சுண்டு எடு அந்த செருப்பை :lol:

இந்த செருப்பு கள்ளராலை பெரிய பிரச்சனையா இருக்கு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலது காதில் குத்திய ஓட்டை மறையுமுன்னம்..... கிறீஸ், கொலன்ட் பக்கம் போயிடாதீங்க. சுபேஸ்.

எங்கையெண்டு பாத்துக் கொண்டிருந்து, ஓட்டையை தூர் வாரிப் போடுவாங்க... பாவிங்க. :D  :lol:

 

 

TOOOOOOOOOOOOO late........... :lol:  :D  :D

running20stick20man.gif

 

 

சாத்திரி

பரிசாலதானே வாறியள்

பரிசில    ஓய்வெடுங்கோ

நான்  மிச்சத்தை ஓடி  முடிக்கிறன்............ :lol:  :D

Link to comment
Share on other sites

lip_piercing_by_rivjern.jpg

இதுக்கு ஒரு பலனும் இல்லையா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

lip_piercing_by_rivjern.jpg

இதுக்கு ஒரு பலனும் இல்லையா? :rolleyes:

 

 

எனக்கு இதுக்கும்  தெரியணும்

vi2u.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

lip_piercing_by_rivjern.jpg

இதுக்கு ஒரு பலனும் இல்லையா? :rolleyes:

 

விசுகு, on 12 Sept 2013 - 8:54 PM, said:snapback.png

எனக்கு இதுக்கும்  தெரியணும்

vi2u.jpg

மார்ப்பதக்கம் அப்பப்ப செல்லமாய் தொல்லை குடுக்கிறமாதிரி இதுவும் அப்பப்ப கரைச்சல் தந்து குட்டிசந்தோசத்தையும் தரும். :D
இசை,விசுகு இரண்டு பேரும் நேர்கோட்டிலை நிக்கிறபடியாலை........இரண்டுபேருக்கும் ஒரேபதில் :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகம் கேக்கிற ஆக்களும் அதுக்கு பதில் சொல்லுற ஆக்களும்.. அரசியல் துறைக்காரர் ஊரில அலம்பல் சுள்ளியால காலுக்கீழ குடுத்தமாதிரி குடுக்கவேணும்...மனிசிமாரிட்ட சொல்லி... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.