• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

தயா

புலிப்பாய்ச்சல் அனுபவம்

Recommended Posts

முனேறிபாய்தல் நடவடிக்கை  மூலம் வட்டுக்கோட்டை , சங்கானை கரையோரமான யாழ்ப்பாணத்து ஆறு  வழுக்கியின் கரை வரைக்கும் இராணுவம்  முன்னேறி இருந்த போது புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலம்  முறை அடிக்கும் சமருக்கு தலைவர் பிரதான கட்டளை இட்டு கொண்டு இருந்தார்...    பால்ராஜ் அண்ணை, சொர்ணம் அண்ணை, பாணு அண்ணை அனைவரும் முன்களங்களின் நிண்றார்கள்....   

 

நானும் இன்னும் 10 பேர் வரை சங்கானை சண்டிலிப்பாய் எல்லையில் இருந்த வயல் கரையோரம் இருந்த ஒரு வீதியும்( மானிப்பாய் வீதியாக இருக்க வேண்டும்)  சின்ன மதகு கொண்ட எல்லை பிரதேசத்தை பிடிச்சு  அதில் ஒரு பாதுகாப்பு அமைக்க சொல்லி   வந்த சொர்ணம் அண்ணையின் கட்டளையை நிறைவேற்ற போன போது த்னது முதலாவது  அரனை ஆயுதங்களோடு  கைவிட்டு போட்டு இரண்டாவது அரணாக இருந்த ஒரு  வீட்டின் பின்னர் எதிரி பதுங்கி கொள்கிறான்...    அதற்கு மேலை நகர வேண்டாம் அதில் பாதுகாப்பு அமைக்க பணிக்க பட்டு இருந்தோம்...

 

கனகரக ஆயுதங்கள் ஏதும் இருக்காத போதும் , ஏற்கனவே இராணுவம் விட்டு ஓடி இருந்த ஒரு பெல்ஜியம் 50 கலிபர் , மற்றும் இரண்டு GPMG (MAC)  ஆயுதங்களும் மிக பெருந்தொகையான  வெடி பொருட்களும் எங்கட கைகளில் கிடைச்சது... எங்களில் இருந்து ஒரு 20 மீற்றர் தொலைவில் இருந்த வீட்டை அரனாக்கி இராணுவம் எங்கள் மீது தாக்குதல்  தொடங்கி இருந்தான்...     எடுத்த ஆயுதங்களை திருப்பி போட்டு வேலிக்கரை யோரமாக நிண்டு ஆள்க்கு ஆள் மாறி மாறி  அடிக்க ஆரம்பிக்கிறோம்...   சண்டை எங்களுக்கு வேடிக்கையாக போனது என்னவோ உண்மைதான்... எங்களுக்கு மகிழ்ச்சிக்கு அளவில்லை என்டால்  மிகை இல்லை.... 

 

சண்டை ஆரம்பித்தது முதல் அலைவரிசையை மாற்றி மாற்றி கட்டளை கேட்டதால்  தொலைத்தொடர்புக்கான மின் கலங்கள் செயல் இளந்து போய் இருந்தது...  பின்னேரம் ஒரு  நாலு மணி இருக்கும் வேகமாக வந்த ஒரு வாகனம் எங்களவர் பக்கம் வந்து நிற்பதுவும் அதில் ஒருவர் வேகமாக இறங்கி வயல் வெளியை தாண்டி குனிந்தபடி கையில் பிஸ்ரலுடன் ஓடி வருவது தெரிகிறது...   அவருக்கு பின்னால்  அவரின் வாகன ஓட்டி இறங்கி பின்னாலேயே ஓடி வருகிறார்...  

 

இப்ப வருவது யார் இராணுவமா இல்லை எங்களவரா...??  எங்களுக்குள் குழப்பம்....  

 

முன்னால் வந்தவரை அடையாளம் கண்டதும் அனைவருக்கும் அதிர்ச்சி...  எனக்கு கைகள் எல்லாம் உதற ஆரம்பித்து இருந்தது...  வந்தது தலைவர் பிரபாகரன்...   சில மீற்றர் தூரத்தில் எதிரி தாக்குதல் நடத்தியவாறு இருக்கிறான்...  இவர் ஏன் முன்களத்துக்கு வாறார்... ??? 

 

 கோபத்தின் உச்சியில் இருந்த கிர்மானி ( கொப்பேகடுவ மீதான குண்டு தாக்குதலுக்கு தலைவரிடம் இருந்து பரிசு பெற்ற மட்டக்களப்பை சேர்ந்த போராளி  பின்னரான காலங்களில் வீரச்சாவடைந்து இருந்தான்.. )  தலைவரி ஓட்டியை அறைந்து விடுகிறான்...   அவனை சமாதானப்படுத்திய தலைவர் உங்கட தொடர்பு யாரிட்டையும் இல்லை  அதுதான் நான் வந்தனான் நான் தான் கிட்டை நிண்டதாலை வந்தனான் என்கிறார்... 

 

இந்த பகுதியாலை பெரிய உடைப்பை எடுத்து எங்களிட்டை மாட்டின ஆக்களை மீட்க்க படை குவிப்பு இந்த பகுதியிலை செய்து இருக்கிறான்... உங்களை பின்வாங்க சொல்லவே நான் வந்தனான் என்கிறார்... 

 

எல்லா ஆயுதங்களையும் போட்டு ஒரு பெரிய தாக்குதல் போல ஒரு சூட்டை எதிரி மீது நாங்கள் செய்யும் போது தலைவரை மீண்டும் அந்த வெளியை தாண்டி அனுப்பி வைத்தோம்... பின்னர் நாங்களும் வந்து சேர்ந்தோம்... 

 

நான் புரிந்து கொண்டது 10 போராளிகளை காக்க முடியும் எண்டால் தலைவர் தன்னை பற்றி கவலை இல்லாதவர்...   தனது பொறுப்பை தன்னால் முடிந்தவற்றை வேறு ஒருவர் மீது திணிப்பது இல்லை...   ஏற்கனவே மதிப்பால் உயர்ந்து நிண்ட தலைவர் அண்டைக்கு முதல் இன்னும் உயர்வாக தெரிந்தார்... 

Share this post


Link to post
Share on other sites

சொன்ன சொல்லுக்கு செயல்வடிவமாவும் நின்று காட்டியதால்தான் அவர் தலைவனாக மக்கள் மனங்களில் நிறைந்துள்ளார்.. அனுபவப் பகிர்வுக்கு நன்றி தயா..

Share this post


Link to post
Share on other sites

 

நான் புரிந்து கொண்டது 10 போராளிகளை காக்க முடியும் எண்டால் தலைவர் தன்னை பற்றி கவலை இல்லாதவர்...   தனது பொறுப்பை தன்னால் முடிந்தவற்றை வேறு ஒருவர் மீது திணிப்பது இல்லை...   ஏற்கனவே மதிப்பால் உயர்ந்து நிண்ட தலைவர் அண்டைக்கு முதல் இன்னும் உயர்வாக தெரிந்தார்... 

 

அதனால்தான்

தலைவனாக

தாயாக

தந்தையாக

தமையனாக

தம்பியாக

ஏன் கடவுளாக   அவர் ஒருவரே உயர முடிந்தது.........

 

அனுபவப் பகிர்வுக்கு நன்றி தயா..
தொடர்ந்து எழுதுங்கள்
 

 

Share this post


Link to post
Share on other sites
தயா!  முன்னேறிப்பாய்ச்சல் நடவடிக்கையின் மேலோட்டமான தகவலை வைத்து அதுக்குள் பொய்யையும் கலந்து வரலாற்றைத் தப்பான கோணத்தில் திருப்பாதீர்கள். தலைவரைப்பற்றி பொய்யான, நடைமுறைச்சாத்தியமற்ற கருத்துக்களைப்பதியாதீர்கள். தளபதிகளான சொர்ணம், பால்ராஜ், பானு ஆகியோர் சண்டையை வழி நடாத்தும் போது, நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்திற்காக தலைவர் வரவேண்டியளவிற்கு எந்தத் தேவையும் இல்லை. அதைத் தளபதிகள் அனுமதிக்கவும் மாட்டார்கள். இப்படியான விடயங்களை சரிபார்ப்பதற்கு ஒரு தளபதிகூட இல்லாமல் தலைவர் நேர வந்தவர் என்று தவறான தகவல்களைப்பதியாதீர்கள். 
 
தலைவரின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக கடாபி அண்ணை இருந்தவர் அவரை மீறி சும்மா ஒரு வாகனத்தில் தலைவர் வந்து தொடர்பு பிரச்சனையை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் தலைவருக்கிருக்கவில்லை. பாதுகாப்பை மீறி வரவும் முடியாது. அப்படி வந்து பார்க்குமளவிற்கு அங்கேயிருந்த போராளிகள் தளபதிகள் தலைவரை விட்டுவிட்டு சும்மா இருந்திருப்பார்கள் என்று விடுதலைப்போராட்டம் தொடர்பான தவறான, பொய்மையான கருத்துக்களை எழுதாதீர்கள். 
 
மற்றும் ஒரு இயக்கத்தின் தலைவர், அவரை (மட்டுமே) நம்பி ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு சிறிய சண்டையில் தலைவரை இழப்பதற்கான அல்லது ஆபத்திற்குள்ளாக்க யாரும் அனுமதியளிக்க மாட்டார்கள். அவர் மிகவும் எளிமையான மனிதர்தான். ஆனால் சில பொதுவான கட்டுப்பாடுகள் அவருக்கும் இருந்தது. 
 
நான் நினைக்கிறன் யாரோ உங்களிற்கு தெரியாத தளபதி ஒருவரைத்  தலைவர் என்று எழுதியிருக்கிறீர்கள்.
 
அனுபவப்பகிர்வு என்பது முற்றுமுழுதாக உண்மைகளை மட்டுமே கொண்டதாக அமையவேண்டும். அதிலும் எங்களுடைய போராட்டம் தொடர்பாக எழுதும்போது எல்லோரும் அதை ஒரு ஆவணமாகத்தான் பார்ப்பார்கள். அதில் பொய்களைக் கலந்துவிட்டால் எங்களது போரட்டத்தின் வராற்றுக்கு களங்களம்தான் ஏற்படும். 
 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

தயாவும் சிலநேரம் சறுக்கிறார் .அதுவும் தலைவர் கையில்  பிஸ்ரலுடன் வருவதும் ,கிர்மானி தலைவரின் வாகன ஓட்டுனரை 

அடித்ததும் கொஞ்சம் ஓவரான கற்பனை  <_<

Share this post


Link to post
Share on other sites

காளமேகம்...  ! 

 

யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது... !   

 

நான் சொல்வது பொய் எண்று நினத்தால் அது உங்களின் பிரச்சினை...   அதை உங்களின் கற்பனை ஒப்பனைகளை விடுத்து யார் எங்கு நிண்றார்கள் எண்று நிறுவுவது அவசியம்... 

 

போர்க்களத்தின் முன் நிலைக்கு தலைவர் போனது இது முதல் தடவையும் இல்லை கடைசி தடவையும் கிடையாது....   அப்படி அவர் போகவில்லை என்பதையும் தாங்களே நிரூபிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது... 

 

Share this post


Link to post
Share on other sites

தம்பி தயா! 

 

உங்களை நீரூபிக்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் எமது போராட்டத்தையும் தலைவரையும் பற்றி எழுதும்போது கற்பனை முலாம் தடவி எழுதக்கூடாது. இது போராட்ட அமைப்பு சம்பந்தமானது. இதனால் உண்மையை உள்ளபடி சொல்லவேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. மற்றப்படி நீங்கள் தனிப்பட்டவராக உங்கள் வாழ்க்கையை எந்தக் கற்பனையிலும் எழுதலாம். 

 

தலைவர் முன்னணி நிலைக்குப் போவாரா? இல்லையா என்பதல்ல பிரச்சினை.  நீங்கள் சொன்ன சம்பவம் அப்பட்டமான கற்பனை. சாத்தியமற்ற யதார்த்தம். 

 

ஒரு போராளி தலைவரின் வாகனச் சாரதியை அறைந்தார் என்று சொல்லும் அபத்தம். கற்பனைக்கும் எட்டாதது என்பது உங்களுக்குப் புரியவில்லையா? வீரச்சாவடைந்த ஒரு போரளியைப்பற்றி தப்பாக எழுதுவது களங்கம். சாட்சிக்கு வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் எழுதுவது அந்த ஆத்மாக்களை நிந்திப்பதற்குச் சமமானது. கற்பனைக்கும் ஒரு எல்லை உண்டு. 

 

சம்பவங்களில் புற வழுக்கள் இருந்தால் திருத்தலாம் அல்லது ஆதரத்துடன் நிறுவலாம். ஆனால் சம்பவமே தப்பாக இருக்கும் போது அதை வாசித்துவிட்டு எனக்கென்ன என்று போக முடியாது. அது என்னுடைய பிரச்சினை, உங்களுடைய பிரச்சினை என்று விட்டுவிட முடியாது. இது எமது வரலாறு. முப்பது வருடங்களாகப் பயணித்த எமது பயணம். 

 

பல ஆயிரம் உயிர்களைக் கொடுத்த அந்த வலி தெரிந்தால் நிச்சயம், வரலாற்றில் கற்பனைகளைக் கலக்கும்போது உங்களுடைய பேனா எழுத மறுக்கும். 

 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

காளமேகம்... 

 

யாழ்ப்பாணம் புவியியல் தெரிஞ்ச புத்தியை பாவிக்க கூடிய ஒருவருக்கு புரிய கூடிய விசயம் உங்களுக்கு புரியாதது ஆச்சரியமாக இல்லை...  இது உங்களின் அறிவு சம்பந்தமான விடயம்... 

 

 

பால்ராஜ் அண்ணை யாழ்தேவி நடவடிக்கையிலை 1993ல் காயம் அடைந்து  வந்த முதலாவது சண்டை...   1995 ல் நடந்த புலிப்பாய்ச்சலில் கலந்து கொண்டார்...  அவரது அணி  சண்டிலிப்பாயில் இருந்து மூளாய் வரை முன்னேறி இருந்தது...  

 

சொர்ணம் அண்ணையின் அணி  சண்டிலிப்பாய் சங்கானை பகுதியை கைப்பற்றி இருந்தது... 

 

பாணு அண்ணையின் அணி வளங்கலுக்கு பொறுப்பாக இருந்தது...  

 

அங்கை நடந்த சண்டை வெறும் ஊடறுப்பு மட்டும் தான்.... வட்டுக்கோட்டை பக்கமாக வும் தெல்லிப்பளை பக்கமாகவும்  எந்த தாக்குதலும் நடத்தப்பட்டு இருக்கவில்லை... ! 

 

நாங்கள் இருந்தது  சண்டிலிப்பாய் சுண்ணாகம் தெல்லிப்பளை க்கு இடைப்பட்ட பிரதேசம்...   தெல்லிப்பளை இருந்து வந்த  இராணுவ நகர்வுக்கு எதிராக....  பலாலியில் இருந்து வரக்கூடிய ஆதரவு படைப்பிரிவை கண்காணிக்க அல்லது சிறிது நேரம் தடுத்து நிறுத்த...   

 

இதிலை நீங்கள் சொல்லும் பாணு அண்ணை, பால்ராஜ் அண்ணை,  சொர்ணம் அண்ணை  யார் எங்களுக்கு அருகில் இருந்தவர் எண்டதை உங்கட அறிவுக்கண்ணை  திறந்து நீங்கள் தான் கண்டு பிடிக்க வேணும்... 

 

அதோடை சண்டிலிப்பாய் சீரணி பாலம்  இராணுவ கட்டுப்பாட்டிலை இருந்த வேளை எந்த வாகனத்தில் வந்திருக்க முடியும்....?? எண்டதையும் சொல்ல வேணும்...  அல்லது  இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை சுற்றி நடந்து வர எவ்வளவு நேரம் எடுக்கும் எண்டதையும்  நீங்களே கணித்து சொல்லவும்... 

 

மற்றது உங்கட ஜதார்த பிழையே மோட்டு தனமானது...  புலிப்பாய்சல் சண்டையின் போது தலைவருக்கு பாதுகாப்பாக கடாபி அண்ணை இருக்கவில்லை... அவர் விமான எதிர்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார்...  அண்று ஒரு புக்காரா விமானத்தை சுட்டு விழுத்தியும் இருந்தார்கள்... 

 

அதை விட மிக முக்கியமாக  தலைவருக்கு பாதுக்காப்புக்கு அணிகள் எப்போதும் நகர்வதில்லை...  தனி ஒரு வாகனத்திலேயே பயணம் செய்வது வளக்கம்  அவரது பயணம் எப்போது வித்தியாசமாக இருந்தது கிடையாது... 

 

எதை சொல்வதாகிலும் அதை பற்றிய அறிவை வளர்த்த பிறகு வியாக்கியானம் சொல்ல முயலுங்கள்...   அப்படி ஒண்டு இல்லை எண்டால் நான் பொறுப்பேற்க்க முடியாது...   

 

இதுக்குமேலை இந்த தலைப்பை திசை  திருப்ப விரும்பவில்லை...  

 

Share this post


Link to post
Share on other sites

அதோடை சண்டிலிப்பாய் சீரணி பாலம்  இராணுவ கட்டுப்பாட்டிலை இருந்த வேளை எந்த வாகனத்தில் வந்திருக்க முடியும்....?? எண்டதையும் சொல்ல வேணும்...  அல்லது  இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை சுற்றி நடந்து வர எவ்வளவு நேரம் எடுக்கும் எண்டதையும்  நீங்களே கணித்து சொல்லவும்... 

 

மற்றது உங்கட ஜதார்த பிழையே மோட்டு தனமானது...  புலிப்பாய்சல் சண்டையின் போது தலைவருக்கு பாதுகாப்பாக கடாபி அண்ணை இருக்கவில்லை... அவர் விமான எதிர்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார்...  அண்று ஒரு புக்காரா விமானத்தை சுட்டு விழுத்தியும் இருந்தார்கள்... 

 

அதை விட மிக முக்கியமாக  தலைவருக்கு பாதுக்காப்புக்கு அணிகள் எப்போதும் நகர்வதில்லை...  தனி ஒரு வாகனத்திலேயே பயணம் செய்வது வளக்கம்  அவரது பயணம் எப்போது வித்தியாசமாக இருந்தது கிடையாது... 

 

எதை சொல்வதாகிலும் அதை பற்றிய அறிவை வளர்த்த பிறகு வியாக்கியானம் சொல்ல முயலுங்கள்...   அப்படி ஒண்டு இல்லை எண்டால் நான் பொறுப்பேற்க்க முடியாது...   

 

 

 

மிக மிக  கோடி நன்றி தம்பி,

 

தங்களுடைய இந்த தெளிவான வாக்க மூலத்திற்கும் தெளிவு படுத்தியத்திற்கும். இதன் மூலம் நீங்கள் தலைவரையல்ல, அவரது பிம்பத்தைக் கூடப் பார்க்கவில்லை என்பதைத் தெளிவாகத் தந்துள்ளீர்கள்.  அதுமட்டுமன்றி அவர்தொடர்பான எந்த விதிமுறைகளையும் நீங்கள் அறிந்திருக்கவி்லலை. எனவே நீங்கள் கற்பனைகளை இலகுவாக எழுதமுடியும். அதைத்தான் செய்துள்ளீர்கள் என்பதைத் தெளிவாக நிரூபித்துள்ளீர்கள். 

 

இன்னுமொன்று, யாழ்ப்பாணம் அல்ல, அந்தச் சண்டையும் அதன் ஒவ்வொரு தாக்குதலும் அனுபவத்தில் இருந்ததால்தான், நீங்கள் சொன்னது கற்பனை என்று 100%  நிறுவ முடிந்தது. அதை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க ந்ன்றி. 

 

பொய்யை நீண்ட காலம் வாழவைக்க முடியாது என்பதற்கு நீங்கள் தெளிவான சான்று. 

Share this post


Link to post
Share on other sites

தயாவும் சிலநேரம் சறுக்கிறார் .அதுவும் தலைவர் கையில்  பிஸ்ரலுடன் வருவதும் ,கிர்மானி தலைவரின் வாகன ஓட்டுனரை 

அடித்ததும் கொஞ்சம் ஓவரான கற்பனை  <_<

 

 

 

நன்றி சகோ!

 

இது இதுதான் உங்கட பதிவை வாசிச்ச பலரின் விளக்கம் தயாத்தம்பி!

 

நீங்கள் சொன்னதைக் கற்பனை என்றுகூட விளங்கமாட்டினம் என்று நீங்கள் நினைச்சீங்கள் பாருங்கோ ...... அது உங்கட வடிகட்டின முட்டாள்தனமே தவிர....... 

 

தம்பி, இன்றைய சூழலில் எதையும் சொல்லலாம் என்று நினைக்காதையுங்கோ. எல்லாரும் இருக்கிறாங்கப்பா! 

Share this post


Link to post
Share on other sites

வாணன் தேசியத்தலைவர் பற்றிய தங்களது தொடரை வாசித்து வருகின்றேன். தலைவரைப்பற்றி  நல்ல கருத்துக்களைப்பதிவதற்கு நன்றி. உங்களின் உண்மையான பதிவுக்குள் பொய்களையும் கற்பனைகளையும் கலந்து பதிவின் தன்மையை பலவீனப்படுத்த முயற்சிக்கும் தன்மையையும் அவதானிக்க முடிகின்றது. போராட்ட காலத்தில் அங்கு வாழ்ந்த சாதாரண மக்கள் அறிந்தளவிற்குகூட தலைவரைப்பற்றி அறியாத, தம்மை முன்னாள் போராளிகள் என்ற அடையாளத்திற்கு வெளிப்படுத்தும் சிலர் சொல்லும் தவறான கருத்துக்களில் இருந்து  தங்களின் பதிவை  காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

 

அவ்வாறான பிழையான வரலாற்றுப்பதிவுகளைக்கண்டு நீங்கள் குழப்பமடையாமல் தொடர்ந்து உங்களது பதிவுகளை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

காளமேகம் தலைவரின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவர் மாதிரியல்லவா தோன்றுகின்றார்!

அதிகாரபூர்வமற்ற பதிவுகள் எல்லாம் வரலாற்று உண்மைகளாகிவிடாது. எனவே உண்மை பொய்களை நிரூபிப்பதை விட்டுவிட்டு நடந்த கதைகளை எழுதுங்கள். வாசிக்க நிறையப்பேர் இருக்கின்றோம். :)

 

 

Share this post


Link to post
Share on other sites

தயா  யார்  என்பது யாழ்  களம்  அறிந்தவிடயம்

 

எனவே

குற்றச்சாட்டுக்களை  விடுத்து

வரலாறு தப்பாக   எழுதப்பட்டுவிடக்கூடாது என்று உண்மையிலேயே  எவராவது விரும்புவார்களாயின்

அதை திருத்தி 

தமது கருத்தை 

அல்லது

தமது வரலாற்றைப்பதியணும்.

அதைவிடுத்து

இப்படி   நடந்திருக்கவே முடியாது என்று நழுவுவது

இந்த திரியின்  நோக்கத்தையே  பாழடித்துவிடும்

அத்துடன் எமது வரலாற்றையும் தான்.

 

 

குறிப்பு  :

இது போன்ற  திரிகள் ஆரம்பிக்கப்பட்டபோதே

தமிழர்  சார்ந்து இருக்கும்  அனுபவம்   காரணமாக

இப்படி  பலரும் வந்து எழுதி

இந்த அனுபவப்பதிவுகளை

கேலியாக்கலாம் என  நினைத்தேன்.

அது இன்று நடந்திருக்கிறது. :(  :(  :(  :(

 

 

Share this post


Link to post
Share on other sites

கிருபன், 

 

இதுக்கெல்லாம் மெய்ப்பாதுகாவலராக இருக்கத்தேவையில்லை. ஒரு சாதரண போரளியாக இருந்தாலே போதும். புலிகளின் கட்டளை ஒழுங்கு (Chain of Command) பற்றியும், தலைவரின் பாதுகாப்பு நடைமுறை விதிகள் பற்றியும் தெரியாமல் இருந்துகொண்டு எழுதுவதுதான் கொஞ்சம் அபத்தமாக இருக்கின்றது. 

  நடந்த கதைகளை எழுதுங்கள். வாசிக்க நிறையப்பேர் இருக்கின்றோம். :)

 

இதைத்தான் தம்பி நானும் சொல்லிறன். நடந்ததை எழுதுங்கோ....... உண்மையை உண்மையாக எழுதுங்கோ. அனுபவப்பகிர்வு என்பது அதுதான். 

 

அது தனிப்பட்ட நபருடைய சம்பவம் என்றால் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. எமது அமைப்பு சம்பந்தமாக எழுதும்போது அதில் வரும் வழுக்கள், அமைப்பு சார்ந்த வழுவாக மாறிவிடும். 

 

மற்றப்படி கற்பனைக் கதைகளை எழுதி பொழுதுபோக்காக வாசிப்பதில் நமக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையப்பா...... 

 

கிருபன் உங்களுடைய பதிவுகளை விரும்பிப் படிக்கிறனான்.. யாதார்தவாதி என்று நினைச்சன். உங்களிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவில்லை. 

Share this post


Link to post
Share on other sites

யதார்த்தவாதி என்று நினைச்சன். உங்களிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவில்லை.

ஏமாற்றியதற்கு மன்னியுங்கள்.

தலைவரின் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் எப்படி இருந்திருக்கும் என்பது ஓரளவு புரியும். ஆனாலும் அவர் நினைத்ததைச் செய்யவிடாமல் தடுக்க எவரும் இருந்திருப்பார்கள் என்பதை நம்புவது கடினமாகத்தான் உள்ளது.

இங்கு பதியப்படுபவை எல்லாம் ஒவ்வொருவரின் சொந்த அல்லது கேள்விப்பட்ட அனுபவங்கள்தான். அவையெல்லாம் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான ஆவணங்களாக வந்தால்தான் வரலாறாகக் கருதமுடியும் என்பதில் தெளிவாக இருக்கின்றேன்!

Share this post


Link to post
Share on other sites

யாழ்ப்பாணத்தில்  ஆறு எதுவும் இல்லை .  அதற்கு பெயர் ஆறு வழுக்கையல்ல ..வழுக்கியாறு. மழைக்காலத்தில்  நீர் வழிந்தோடும்  பெரிய வாய்க்கால்  அது சங்கானையால்  போனதும் இல்லை.  அளவெட்டி பகுதிகளின்  வயல் வெளிகளிகளில் சிறு  வாய்க்கால் போல தோற்றமெடுத்து  கந்தரோடைக் குளத்தில்  கலந்து  அகலமெடுத்து சண்டில்லிப்பாய் ஊடாக  நவாலி கடந்து அராலி கடலோடு  இணைகிறது.சண்லிப்பாய் மானிப்பாய் விதியில்  உள்ள கட்டுடை என்கிற இடத்தில் 5 கண் மதகு  சீரணி  என்கிற இடத்தை தாண்டி வருகிறது இங்குதான் வழுக்கியாறு பிரதான வீதியை கடக்கின்றது. இந்த இடம்வரைதான் முன்னேறிப்பாச்சல்  நடந்து முடிந்திருந்தது. இந்த சண்டை நடந்தபோது பிரபாகரன்  நேரடிநாக அங்கு வந்ததும் இல்லை.அதற்கான தேவையும் இருந்திருக்கவில்லை.அதற்கான  தகவல்களும் எதுவும் அன்று சண்டையில் நின்றவர்களால் தெரிவித்திருக்கப்பட்டிருகக்வும் இல்லை.

 

Share this post


Link to post
Share on other sites

 

இப்படி   நடந்திருக்கவே முடியாது என்று நழுவுவது

இந்த திரியின்  நோக்கத்தையே  பாழடித்துவிடும்

அத்துடன் எமது வரலாற்றையும் தான்.

 

 

இப்படி நடக்கவேயில்லை. அந்த தாக்குதல், அங்கு நின்ற அணிகள் எல்லாம் அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்தபடியால்தான் அப்பட்டமான தவறு என்று சொல்கின்றேன். அதுக்காக எல்லாத்தையும் இங்கு எழுத முடியவில்லைத் தம்பி!.... 

 

கட்டளைத் தளபதிகள், களமுனைத் தளபதி, பகுதித் தளபதிகளையும் தாண்டி தலைவரை அனுப்பவில்லை. அது முடியாது. 

Share this post


Link to post
Share on other sites

சண்லிப்பாய் மானிப்பாய் விதியில்  உள்ள கட்டுடை என்கிற இடத்தில் 5 கண் மதகு  சீரணி  என்கிற இடத்தை தாண்டி வருகிறது இங்குதான் வழுக்கியாறு பிரதான வீதியை கடக்கின்றது. இந்த இடம்வரைதான் முன்னேறிப்பாச்சல்  நடந்து முடிந்திருந்தது. இந்த சண்டை நடந்தபோது பிரபாகரன்  நேரடிநாக அங்கு வந்ததும் இல்லை.அதற்கான தேவையும் இருந்திருக்கவில்லை.

 

 

உந்த ரோட்டாலை எங்கை இருந்து வந்தவன் எண்டு சொல்ல முடியுமா...  ??   

 

புலிப்பாய்ச்சல் சண்டை தலைவரின் நேரடி வளிநடத்தலில் எண்டு வந்த செய்டிகளை படிக்க கூட இல்லை எண்டது மட்டும் விளங்குது...  


இப்படி நடக்கவேயில்லை. அந்த தாக்குதல், அங்கு நின்ற அணிகள் எல்லாம் அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்தபடியால்தான் அப்பட்டமான தவறு என்று சொல்கின்றேன். அதுக்காக எல்லாத்தையும் இங்கு எழுத முடியவில்லைத் தம்பி!.... 

 

கட்டளைத் தளபதிகள், களமுனைத் தளபதி, பகுதித் தளபதிகளையும் தாண்டி தலைவரை அனுப்பவில்லை. அது முடியாது. 

 

2009 ல் சண்டை முடிஞ்சு இந்தனை காலம் போனாப்பிறகு இரகசியம் காக்கிறீர்களோ...?? 

 

ஒரு கோப்பை தேத்தண்ணிக்காக இயக்க்கதை வித்த கூட்டம் விடும் கதைகள் இப்படி தான் வளமையாக இருக்கிறது... 

Share this post


Link to post
Share on other sites

தெளிவாகச் சொன்னீர்கள் சாத்திரி,

 

இதைத்தான் நான் விடிய விடிய சொல்லுறன் அந்த தயாத் தம்பி விளங்கிற மாதிரித் தெரியேல்லை. வழுக்கியாத்துக்கால வழுக்குவன் என்றுதான் நிக்கிறார். 

 

தலைவரின் வழிநடத்தல்ல நடந்த சண்டை எண்டுறதை தம்பி தப்பாய் விளங்கிட்டார்போல இருக்கு. 

 

 

Share this post


Link to post
Share on other sites

தெளிவாகச் சொன்னீர்கள் சாத்திரி,

 

இதைத்தான் நான் விடிய விடிய சொல்லுறன் அந்த தயாத் தம்பி விளங்கிற மாதிரித் தெரியேல்லை. வழுக்கியாத்துக்கால வழுக்குவன் என்றுதான் நிக்கிறார். 

 

தலைவரின் வழிநடத்தல்ல நடந்த சண்டை எண்டுறதை தம்பி தப்பாய் விளங்கிட்டார்போல இருக்கு. 

 

சரி...  புலிப்பாச்சலிலை  எந்த படை அணியள் எங்கை நிண்டவை எண்டதை இன்னும் சொல்ல இல்லை...??   என்னாச்சு ...    தேத்தண்ணி குடிக்க போன வீடுகளிலை உந்த விடுப்பை சொல்ல இல்லையோ....?? 

 

வேணும் எண்டால் தேட வசதியாய் திகதிகளையும் தாறன்...  07/07/1995  இலை இராணுவம் உடைப்பை எடுத்து இருந்தான்,  09/07/1995  அண்டு நவாலியிலை குண்டு போட்டு 142 பேரை கொலை செய்தான்...  14/07/1995 அண்டு  புலிப்பாய்ச்சல் நடவடிக்கை நடந்தது...  15/07/1995 அண்டு பழைய நிலைகளுக்கு இராணுவம் திரும்பினது... 

 

புலியை பற்றி வேண்டாம் இராணுவம் எங்கை உடைப்பு எடுத்தான் எந்த பகுதிகளுக்காலை ஊடுருவினான் எண்டு சொன்னால் கூட நம்பலாம்.... ! 

 

பறவாய் இல்லை நல்லா விசாரிச்சு போட்டு எழுதுங்கோ...   இரகசியம் காக்க தேவையே இல்லை... ! 

Share this post


Link to post
Share on other sites

இதை அலசுவதற்கு பெரிய போராட்ட அனுபவம் எல்லாம் தேவையில்லை.. இறுதிச்சண்டையில் தொண்ணூறுகளில் இருந்ததைவிட கனரக ஆயுத, விமானத் தாக்குதல்கள் நடந்தபோது தலைவர் சிறிய நிலத்தில்தான் நின்றார்.. அவர் பாதுகாப்பு அணியுடன் மணலாற்றுக்குள் நின்றிருக்க முடியும்.. (வன்னிக்காடுகளை பேன் சீப்பு வைத்து கிளியர் பண்ணினான் எதிரி என்பதை நம்புவதற்கில்லை..)

ஆக, களத்தின் தேவைக்கேற்ப நடவடிக்கைகள் இருந்தன என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதம்.. மற்றும்படி இந்த வியாக்கியானங்கள் எல்லாம் பெருமளவில் குருடன் பேய் பார்த்த கதைதான்.. :D

Share this post


Link to post
Share on other sites

தலைவரின் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் எப்படி இருந்திருக்கும் என்பது ஓரளவு புரியும். ஆனாலும் அவர் நினைத்ததைச் செய்யவிடாமல் தடுக்க எவரும் இருந்திருப்பார்கள் என்பதை நம்புவது கடினமாகத்தான் உள்ளது.

 

 

உண்மை அதுதான், 

 

தலைவா் - கட்டளைத் தளபதி - களமுனைத்தளபதி - பகுதித்தளபதி - அணிப்பொறுப்பாளர் என்றுதான் கட்டமைப்பு இருக்கும். கட்டளைகள் மேலிருந்து கீழாகவும், தகவல்கள் கீழிருந்து மேலாகவும் பரிமாறப்படும். ஒரு இடத்தில் பிழைக்கும் போது அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் பொறுப்பானவர் பதில் சொல்லவேண்டும். தலைவர் நினைத்ததைச் செய்ய முடியாது என்பதல்ல. பொறுப்பான கட்டளைத் தளபதிகளின் தொடர்பைக்கடந்து தலைவர் செல்ல மாட்டார். அப்படி என்றால் ஒட்டு மொத்த திட்டத்தையும் நகர்த்த முடியாது. 

சரி...  புலிப்பாச்சலிலை  எந்த படை அணியள் எங்கை நிண்டவை எண்டதை இன்னும் சொல்ல இல்லை...??   என்னாச்சு ...    தேத்தண்ணி குடிக்க போன வீடுகளிலை உந்த விடுப்பை சொல்ல இல்லையோ....?? 

 

 

 

ஏன் அந்தத் தகவலை வைச்சு இன்னொமொரு கற்பனைக் கதை எப்பிடி எழுதலாம் என்று யோசிக்கறிங்களோ தம்பி.. 

Share this post


Link to post
Share on other sites

உண்மை அதுதான், 

 

தலைவா் - கட்டளைத் தளபதி - களமுனைத்தளபதி - பகுதித்தளபதி - அணிப்பொறுப்பாளர் என்றுதான் கட்டமைப்பு இருக்கும். கட்டளைகள் மேலிருந்து கீழாகவும், தகவல்கள் கீழிருந்து மேலாகவும் பரிமாறப்படும். ஒரு இடத்தில் பிழைக்கும் போது அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் பொறுப்பானவர் பதில் சொல்லவேண்டும். தலைவர் நினைத்ததைச் செய்ய முடியாது என்பதல்ல. பொறுப்பான கட்டளைத் தளபதிகளின் தொடர்பைக்கடந்து தலைவர் செல்ல மாட்டார். அப்படி என்றால் ஒட்டு மொத்த திட்டத்தையும் நகர்த்த முடியாது. 

 

 

கட்டமைப்பு சரி ஆனால் உந்த விசேட வேவு பிரிவுக்கு யார் அண்ணை கட்டளை வளங்குறது...???   அந்தக்காலம் பொறுப்பாக இருந்த சசிகுமார் வாத்தியா...?? 

Share this post


Link to post
Share on other sites

ஏன் அந்தத் தகவலை வைச்சு இன்னொமொரு கற்பனைக் கதை எப்பிடி எழுதலாம் என்று யோசிக்கறிங்களோ தம்பி.. 

 

 

ஒண்டுமே தெரியாமல் சும்மா பீலா விடும் உங்களை விடவா...??    புலிப்பாய்ச்சல் சண்டை அக்குவேறு ஆணி வேற புடுங்குவன் எண்ட போதே நினைச்சன்..   அண்ணை அந்த பக்கம் கூட் வந்திருக்க மாட்டார் ஊரிலை அரசியல் செய்து மூசிலை இருந்து இருப்பார் எண்டு...  

Share this post


Link to post
Share on other sites

இதை அலசுவதற்கு பெரிய போராட்ட அனுபவம் எல்லாம் தேவையில்லை.. இறுதிச்சண்டையில் தொண்ணூறுகளில் இருந்ததைவிட கனரக ஆயுத, விமானத் தாக்குதல்கள் நடந்தபோது தலைவர் சிறிய நிலத்தில்தான் நின்றார்.. அவர் பாதுகாப்பு அணியுடன் மணலாற்றுக்குள் நின்றிருக்க முடியும்.. (வன்னிக்காடுகளை பேன் சீப்பு வைத்து கிளியர் பண்ணினான் எதிரி என்பதை நம்புவதற்கில்லை..)

ஆக, களத்தின் தேவைக்கேற்ப நடவடிக்கைகள் இருந்தன என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதம்.. மற்றும்படி இந்த வியாக்கியானங்கள் எல்லாம் பெருமளவில் குருடன் பேய் பார்த்த கதைதான்.. :D

 

 

நான்  களத்தில  நிற்கல

ஆனால  களத்தில  நின்ற  முரளிதரன் (கருணா)

இங்கு வந்தபோது சொன்னது

 

திட்டங்களுக்கான விளக்கங்கள்  முடிந்து

தலைவரிடமிருந்து விடைபெற்று

சண்டைகள் நடக்கும்போது

 

அங்கால அடியுங்கோ

இங்கால ஆளனுப்பு

அது இது என்று தலைவரின் குரல்  வருமாம்

தங்களுக்கு பலகாலமாக விழங்காதது

வன்னியில் நடந்த ஓயாத அலைகளின் போது 

தலைவர் பக்கத்தில் நிற்பதைப்பார்த்ததும் தான் புரிந்தது என்றார்.

வேண்டுமென்றால் சுவிசில் பேசும் போதும் இதைச்சொன்னதாக ஞாபகம்

காணொலியைப்போட முடியுமா என பார்க்கின்றேன்.

 

அதன்படி  பார்க்கும்போது

தலைவர்  சண்டைகளுடன் நின்றிருக்கின்றார்  என்பது தெரிகிறது

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.