Jump to content

புலிப்பாய்ச்சல் அனுபவம்


தயா

Recommended Posts

தயாண்ணா நான் ஒரு பக்கச் சார்பாகவும் எழுதேல்ல.அப்படி எழுதுறது என்டால் உங்கட பக்கம் தான் நின்று எழுதியிருப்பேன்.ஏனெனில் அவர்கள் யாழுக்கு வர முதலே நீங்கள்,என்னோட யாழில் இருக்கிறீங்கள் :)

 

சாத்திரி வாசிக்க தெரியாமல்  நான் வழுக்கை ஆறு எண்டு எழுதி இருப்பதாக சொல்கிறார்...  !   சீரணி பாலத்தில் தான்  சண்டை நடந்து இருக்க வேணுமாம்... :D    இதுக்கு என்னத்தை எழுத சொல்கிறீர்கள்...?? 

 

காளமேகம் தனக்கு அக்கு வேறு ஆணி வேறாக தெரியுமாம் புலிப்பாய்ச்சல் சண்டை....   இராணுவம்  வழுக்கி ஆற்று கரைக்கு வந்த நேரம்...  விசேட வேவு பிரிவு போராளிகள் எத்தினை பேர் இராணுவ கட்டுப்பாட்டுக்கை இருந்தார்கள் எண்று கேட்டனான் பதில் இல்லை... ! ( அவர்களின் பெயர் வேண்டுமானால் நான் சொல்கிறேன்) 

 

வாணன் புலிப்பாய்சல் சண்டை சம்பந்தமாக இண்று காலை ஒரு படம் இணைச்சார்...  அவர்களின் வாதத்துக்கு சரி வராது எண்டதால் படத்தை நீக்கி  ஒரு கவலை குறியை போட்டார்... ! 

 

நந்தன் தலைவர் கையிலை பிஸ்ரலோட போக மாட்டாராம்...  பின்னை என்னத்துக்கு அவர் பிஸ்ரல் வைச்சிருக்கிறாரோ கடவுளுக்கு தான் வெளிச்சம்...

 

இதிலை வேறை என்னத்தை நான் சொல்ல வேணும் எண்டுறீர்கள்...??  

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply

வாணன் புலிப்பாய்சல் சண்டை சம்பந்தமாதிண்று காலை ஒரு படம் இணைச்சார்...  அவர்களின் வாதத்துக்கு சரி வராது எண்டதால் படத்தை நீக்கி  ஒரு கவலை குறியை போட்டார்... ! 

 

தயா  நான் படத்தை இணைத்தது விவாதத்திற்காகவல்ல விவாதிப்பவர்களின் தெளிவுக்காக, மேலும் அந்தப்படத்தின் அளவு சிறிதாக தெளிவு இல்லாமல் இருப்பதாக கருதியதால் நீக்கிவிட்டேன்.  

Link to comment
Share on other sites

தயா  நான் படத்தை இணைத்தது விவாதத்திற்காகவல்ல விவாதிப்பவர்களின் தெளிவுக்காக, மேலும் அந்தப்படத்தின் அளவு சிறிதாக தெளிவு இல்லாமல் இருப்பதாக கருதியதால் நீக்கிவிட்டேன்.

நம்பி விட்டன்... !

Link to comment
Share on other sites

உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சினை எண்டு விளங்கேல்லை... 

 

நான் 1990 ல் இருந்து 1999 வரைக்கும் புலிகளிலை இருந்தனான்....   கிட்டத்தட்ட 9 வருடம் என் இளமையின் பெரும் பகுதியை துலைச்சு போட்டு  ஏற்கனவே பட்ட காயங்களால்  குளிர் கஸ்ரப்பட்டு கல்வியும் வேலையும் எண்று என்னை முதலில் இருந்து வளர்த்து இருக்கிறேன்...    இண்டைக்கு வரைக்கும்  கடந்து போன 9 வருடங்களை பெருமையாக நினைத்ததும் கிடையாது  கவலைப்பட்டதும் கிடையாது என்னாலை முடிந்த வரைக்கும் ஏதாவது செய்தன் எனும் நிலைதான்.... !  

 

இங்கை எனது கடந்த காலத்தை அறிய ஏன் துடிக்கிறீர்கள் என்பதோ அதை கேவலப்படுத்துவதால் உங்களுக்கு எல்லாம் என்ன நன்மை என்பதோ எனக்கு புரியவில்லை... 

 

உங்கள் எல்லாரையும் போல  கீழ்த்தரமான கூட்டத்துக்காகவும் சேர்த்து தலைவர் போராடினார் நாங்களும் போனோம் எண்ற மன நிலை மட்டும் தான் இப்போது இருக்கிறது... 

 

 

நான் உங்களுக்கு மட்டும் எழுதேலை தயா எல்லோருக்கும் சேர்த்துத்தான் எழுதினனான். ஒவ்வொருவரும் தாங்கள் யார் என்று அறிமுகப்படுத்தினால் சந்தேகங்களுக்கு இடம் இராது என்று சும்மா ஒரு கதைக்குத் தான் எழுதினனான். அதுக்கெல்லாம் நீங்கள் ரென்ஷன் ஆகீட்டீங்கள். நீங்கள் 9 வருடமாய் இயக்கத்தில் இருந்தீர்கள், இங்கு கருத்தெழுதும் பலர் 1 நால் கூட இருக்கவில்லை .

நானும் தான்!

நானும் தான்!

Link to comment
Share on other sites

நான் உங்களுக்கு மட்டும் எழுதேலை தயா எல்லோருக்கும் சேர்த்துத்தான் எழுதினனான். ஒவ்வொருவரும் தாங்கள் யார் என்று அறிமுகப்படுத்தினால் சந்தேகங்களுக்கு இடம் இராது என்று சும்மா ஒரு கதைக்குத் தான் எழுதினனான். அதுக்கெல்லாம் நீங்கள் ரென்ஷன் ஆகீட்டீங்கள். நீங்கள் 9 வருடமாய் இயக்கத்தில் இருந்தீர்கள், இங்கு கருத்தெழுதும் பலர் 1 நால் கூட இருக்கவில்லை .

நானும் தான்!

நானும் தான்!

ஒரு போராளி விரச்சாவைந்த போதுதான் அவன் ஒரு போராளியாக முழுமை அடைகிறான் எண்று தலைவர் சொல்லி இருக்கிறார்... விலகியவர்கள் யாரும் தங்களின் பணியில் முழுமை எய்தாதவர்கள் என்பதால் அப்படி சொல்லி இருக்கலாம்... இராணுவத்தின் புலநாய்வாளர்களாக கூட பல முன்னாள் போராளிகள் இருக்கிறார்கள்...

இருந்தமைக்கு எனக்கு கிடைச்ச சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்கவில்லை... அதுக்காக உங்களின் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நீங்கள் ஏதும் செய்ய முடியாது எண்றில்லை... அப்போ நீங்களும் போராளிதான்...

என்னை பற்றி சொல்ல இனி அனேகம் இல்லை... அதை சொல்ல எனக்கு இனி சந்தர்ப்பம் வராமல் பார்த்துக்கொள்கிறேன்...

நண்றி..

Link to comment
Share on other sites

நான் போராளியாக இருந்ததாக இந்த களத்திலை இணைஞ்சது முதல் என்னை பிரபல்யப்படுத்தியது கிடையாது... ஒரிரு தடவை அர்சுணின் கேவலப்படுத்தல்களுக்காக சொல்ல வேண்டி வந்திருக்கலாம்...

அப்படி ஒரு அடையாளம் என்னை களத்தில் இருந்து பலரிடம் இருந்து அன்னியப்படுத்தி வைக்கும் என்பதால் நான் அப்படி சொல்வதில் நாட்டமும் கொண்டிருக்கவில்லை...

ஆனால் தலைவர் பற்றிய தகவல் கோவையில் நான் அடைந்த அனுபவத்தை சொல்லவேண்டும் எண்று நினைத்தமையை ஆதாரமே இல்லாமல் சிலர் கொச்சை படுத்துவதை கூட ஓரிரு பதிகளோடு தவிர்க்கவே பர்த்தேன்... ஆனால் கிருபன் , விசுகு , இசைக்கலைஞன் நயமாக பேசிய பின்னரும் விடுவதாக இல்லை...

போராளி என்பவன் எப்படி இருந்து இருப்பான் இருக்க வேண்டும் எனும் உங்களின் எண்ணத்துக்கு விரோதமாக பொதுமக்களையோ இல்லை முன்னாள் போராளிகளையோ கொச்சை படுத்துவதையோ வதைப்பதையோ விடுதலைப்புலிகள் அமைப்பு எப்போதும் அனுமதித்தது கிடையாது... போராளியாக இருந்த எல்லாருக்குமே அது தெரியும்... அப்படி நடந்து கொள்ளும் போராளிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவதும் இயக்க மரபு...

இருக்கும் போது தங்களை முன்னாள் போராளிகள் எண்று சொல்லிக்கொள்ளும் சிலரால் செய்யப்படும் இந்த விதமான கேவலப்படுத்தல்கள், அவர்கள் செயற்பாடுகள் , தனி மடல்கள் இப்படி எல்லாம் எண்று பார்க்கும் போது இப்போதும் இவர்கள் ஒரு குழு நிலையில் இயங்குவது மட்டும் உறுதியாக தெரிந்தது... நான் இங்கு அவர்களை விட தனித்து இயங்குவதாக அவர்கள் நினைத்து என் மீது கொண்ட காள்புணர்வால் நடத்தப்படும் அவதூறான தாக்குதல் என்பதும் புரிந்தது... இதில் சாத்திரியாரின் பங்கும் அதை உறுதிப்படுத்தியது... !

இப்படி கேவலமானவர்களை முன்னாள் போராளிகளாக இருப்பார்கள் எண்று கூட என்னால் நினைக்க முடியவில்லை... அதுக்கு தேவையான கண்ணியம் இவர்களிடம் கிடையாது ... மற்றும் இப்படி இவர்களால் ஏற்படுத்தப்படும் மன உளச்சல் இதை போல் வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதினால் மட்டுமே ஆரம்பித்தேன்...

( இது உங்களின் மனதை காயப்படுத்தி இருந்தால் உங்களிடம் தனிப்பட மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்)

அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் தேசியத்திற்காகவும் எமது விடுதலைக்காகவும் குரல் கொடுத்து வரும் உறவு நீங்கள் அது மட்டும் அல்லாமல் நேரடியாக பங்களிப்பும் செய்தவர் உங்கள் கருத்து மேல் எமக்கு என்றுமே சந்தேகம் ஏற்பட்டதில்லை அண்ணா

உங்கள் பணி தொடரட்டும்

மற்றம்படி வேணும் என்று வம்பு செய்பவர்களுடனும் மட்டும் தட்டுபவர்களுடனும் நீங்கள் மோத வேண்டிய அவசியமே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  உறவுகளே

 

நான்  இதற்குள் எழுத விரும்பல.

 

ஒரு கதை  உண்டு

ராமரால் காயப்பட்டு

நொந்து போன தவளையைப்பார்த்து

ராமர் கேட்டாராம்

என் பெயரைச்சொல்லி  அழைத்திருக்கலாம் அல்லவா  என்று.

அதற்கு தவளை  சொல்லிச்சாம்

வேறு எவராவது செய்திருந்தால்

உங்களை  அழைத்திருப்பேன்

நீங்களே நோகடித்தால்

எவரைக்கூப்பிடுவேன்  என்று.

அதே நிலைதான்  எனதும்.

 

ஆனால்  இதையெல்லாம்  தாண்டி

போராளிகள் பற்றி  எமக்கென்று ஒரு தெளிவு உண்டு

காலம் அதை கண் முன்  கொண்டுவரும்

 

புலிகள் பின்னால் மக்கள் போனார்கள் என்பதற்குள் பெரும்  தியாகம்  உள்ளது.

அதை எல்லோராலும் செய்துவிடமுடியாது.

அதை நாடகங்கள் மூலம் மட்டும் காட்டியவர்களை

தமிழர்கள் எங்கு வைத்தார்கள் என்பது வரலாறு.

 

 

முடிவாக

எனது மகளுக்கு அகிலா என்று தான் பெயர்.

புலிப்பாய்ச்சல் எனது வீட்டிற்குள்ளும் இருக்கிறது.

 

(நான் இங்கு ஒவ்வொரு நாளும் மாவீரர்களுக்கு  வணக்கம் செலுத்துவேன்.

சிலர் அதை வேறு பார்வை  பார்க்கக்கூடும்.

ஆனால் நான் நினைப்பது

அவர்களது  முழுப்பெயரையும்  வாசித்து

ஒரு சில செக்கன்கள்  கண்மூடி அவர்களை  நான் நினைப்பதையாவது ஒவ்வொரு நாளும் செய்யணும் என்று.

இழப்பு அதிகமாக இருந்தால் அதை திண்ணையிலும் போட்டுவிடுவேன். இவ்வளவு பேர் இன்று எமக்காக உயிர் தந்துள்ளனர் என்பது எல்லோர் மனத்திலும் இறங்கட்டுமே என்று.

அதைத்தான் உங்களுக்கும் சொல்கின்றேன்.

இன்று மட்டும்  85 பேர்  எமக்காக.

ஏன் உங்கள்  எவரையாவது காப்பாற்றக்கூட தன்னைக்கொடுத்திருக்கலாம். அவர்களை  மனதில் இருத்துவோம்.)

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் எல்லாம் கிருபனின் கருத்தில் ஒரு நீதி,நியாயம் இருக்கும்.தற்போது அது காணக் கிடைக்குதில்லை :) பழகினவர்கள்/தெரிந்தவர்கள்,முகப் புத்தக நண்பர்கள் என்று பார்த்து ஆதரவாக கருத்தெழுதுவதும்,பச்சை குத்துவதும் :icon_mrgreen: என்னையா நடந்தது :unsure:

நீதி, நியாயம் என்றெல்லாம் கருத்துக்களை வைப்பதில்லை. எது சரி என்று படுகின்றதோ அதைத்தான் கருத்துக்களாக வைக்கமுடியும்.

பழகினவர்கள், தெரிந்தவர்கள், முகநூல் நண்பர்களுக்கு முதுகு சொறிவதில்லை. அப்படி எங்காவது பச்சை போட்டிருந்தால் ஆதாரத்தைக் காட்டுங்கள்!

இந்தத் திரியில் கருத்து வைத்தபோது அதனைப் பொதுவாகவே வைத்தேன். நண்பர் தயாவுக்கு ஆதரவாக வைக்கவில்லை. புலிகளில் இணைந்தவர்கள்/ஆதரவாளர்கள்/எதிரிகள் எல்லோருக்கும் புலிகள் அமைப்பின் தலைவரை ஒருதடவையாவது நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசை கட்டாயம் இருந்திருக்கும். அவரைப் பார்க்காமலேயே அவரின் இலட்சியத்திற்காக தம்முயிரை ஈந்தவர்கள் எத்தனையோ ஆயிரங்களாக இல்லையா? அதனால்தான் தயாவுக்குத் தலைவரைக் சந்தித்த அந்தத் தருணம்/நிகழ்வு மிகவும் பொக்கிஷமாக உள்ளது. அதனை இல்லையென்று நிரூபிக்காமல் அப்படி ஒன்று நடந்திருக்கச் சாத்தியமில்லை என்று அமைப்பின் நடைமுறைகளை மட்டும் காரணங்களாகக் காட்டிச் சொல்லமுடியாது. சில புறநடைகள் (0.001%) ஆவது சாத்தியப்படும்தானே!

Link to comment
Share on other sites

இந்தத் திரியில் கருத்து வைத்தபோது அதனைப் பொதுவாகவே வைத்தேன். நண்பர் தயாவுக்கு ஆதரவாக வைக்கவில்லை. புலிகளில் இணைந்தவர்கள்/ஆதரவாளர்கள்/எதிரிகள் எல்லோருக்கும் புலிகள் அமைப்பின் தலைவரை ஒருதடவையாவது நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசை கட்டாயம் இருந்திருக்கும். அவரைப் பார்க்காமலேயே அவரின் இலட்சியத்திற்காக தம்முயிரை ஈந்தவர்கள் எத்தனையோ ஆயிரங்களாக இல்லையா? அதனால்தான் தயாவுக்குத் தலைவரைக் சந்தித்த அந்தத் தருணம்/நிகழ்வு மிகவும் பொக்கிஷமாக உள்ளது. அதனை இல்லையென்று நிரூபிக்காமல் அப்படி ஒன்று நடந்திருக்கச் சாத்தியமில்லை என்று அமைப்பின் நடைமுறைகளை மட்டும் காரணங்களாகக் காட்டிச் சொல்லமுடியாது. சில புறநடைகள் (0.001%) ஆவது சாத்தியப்படும்தானே!

Superb

Link to comment
Share on other sites

 

அதனை இல்லையென்று நிரூபிக்காமல் அப்படி ஒன்று நடந்திருக்கச் சாத்தியமில்லை என்று அமைப்பின் நடைமுறைகளை மட்டும் காரணங்களாகக் காட்டிச் சொல்லமுடியாது. சில புறநடைகள் (0.001%) ஆவது சாத்தியப்படும்தானே!

 

தயா என்ன தலைவரே வந்து சொன்னால் கூட அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இதுதான் யதார்த்தம். புலிகள் கட்டமைப்பு குறித்த பிம்பங்களை அவரவர் வசதிக்கேற்ப புறநிலையில் வடிவமைத்துள்ளனர். இருப்பில் அது சார்ந்து ஒரு கருத்து நிலையாக இருக்கின்றது. அதை மாற்ற தயாராக இல்லை. எனவே கேள்விகள் இருப்பில் இருக்கும் கருத்துக்களுக்கு சார்பாக சரிமாரியாக எழும். அதற்கான பதில்கள் நிராகரிக்கப்படும். கருத்துக்கள் ஊடாக தன்னை முன்னிலைப்படுத்தும் நிலை சில நேரம் உண்மைகளையும் வரலாற்றையும் மாற்றி அமைத்துவிடும்.

இச் சம்பவம் நடநத் காலப்பகுதியில் கொக்குவில் பகுதியில் இருந்தேன். நான் அறிந்தவரையில் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கை ஏற்கனவே புலிகளால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கை. புநகரி சமர் வெற்றிச் சமர் என்று அறிவிக்கப்பட்டாலும் அது ஒரு படுதோல்விச் சமர். ஒரு டாங்கியும் மூன்று நாலு வாட்டர் ஜெட்டும் தான் மிச்சம். திறமைமிக்க வீரர்கள் உட்பட 500 பேர்வரையில் காவுகொண்டு 1000 பேருக்கும் மேல் காயமடைந்து புலிகளின் இராணுவ பலத்தை மிகவும் பலவீனப்படுத்திவிட்டது. பூநகரியை கைப்பற்றி பாதையை திறப்பது இல்லையேல் யாழைக்கைவிடுவது என்பது படைபலச் சமநிலை அடிப்படையில் தவிர்க்கமுடியாத விதி. அடுத்தது மாத்தயாவின் பிரச்சனையால் உளவியல் ரீதியாக புலிகள் தளர்ந்திருந்தனர். இவ்வாறான பலவீனங்களை கணக்கில் கொண்டு ராணுவம் முன்னேற தயாராகிக்கொண்டிருந்தது. அதே நேரம் புலிகள் வன்னிக்கு நகர தயாராகிக்கொண்டிருந்தார்கள். கட்டமைப்புகள் படிப்படியாக நகரத்தொடங்கிவிட்டது. புலிகள் எதிர்பார்த்ததற்கு முதல் ஒரு ஒத்திகையை ராணுவம் செய்தது. அதுதான் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கை. இது இராணுவத்தின் யாழைப் பிடிப்பதற்கான ஒத்திகை என்பது பின்னரே புலிகளுக்குத் தெரியும். முன்னேறிப்பாய்தலை என்னவிதப்பட்டாவது தடுத்தே ஆகவேண்டும் அல்லது தாமதிக்கச் செய்யவேண்டிய கட்டாயம் அந்தவகையில் கட்டமைப்புகளை கிளாலி ஊடாக வன்னிக்கு உடனே நகர்த்துவது சாத்தியமில்லை. இந் நிலையில் நடந்தது புலிப்பாய்ச்சல் நடவடிக்கை. இந்தக் காலப்பகுதியில் கட்டமைப்புகளை வன்னிக்கு நகர்த்துவது குறித்து ஒரு வாழ்வா சாவா போராட்டம். இந் நிலையில் கட்டளைப்பீடங்கள் நிர்வாகங்கள் ஒழுங்குமுறைகள் எதுவும் அதனதன்படி நடக்கவாய்பில்லை. சூழ்நிலைக்கேற்ப எல்லா நிர்வாக அலகுகளையும் மாற்றக்கூடிய நிலையே புலிகள் கொண்டிருந்தனர். கட்டளைத்தளபதி காயப்படுவதும் கட்டளைத்தளபதி இராணுவப் பிரதேசத்துகள் ஊடுருவி சண்டை பிடிப்பதும் புதிதான ஒரு விடயமில்லை. இது எல்லா மக்களுக்கும் தெரிந்த பொதுவான விடயம்.

சம்பவங்களின் காலம் சூழ்நிலைகளை பொறுத்தவரை தயா சொல்வது சாதராணமாக சாத்தியமானது. புலிகளுக்கு எப்படி வேவுப்போராளியின் தகவலும் கருத்தும் முன்னணி அரங்கில் உள்ள போராளியின் கருத்தும் முக்கியமானதோ அதேபோல் அக்காலப்பகுதியில் களத்தில் நின்றவரின் கருத்தும் தகவலுமே முக்கியமானது தவிர அப்படி இருந்திருக்காது இப்படித்தான் இருக்கும் என்ற புறநிலைக்கருத்துக்கள் இரண்டாம் பட்சமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதி, நியாயம் என்றெல்லாம் கருத்துக்களை வைப்பதில்லை. எது சரி என்று படுகின்றதோ அதைத்தான் கருத்துக்களாக வைக்கமுடியும்.

பழகினவர்கள், தெரிந்தவர்கள், முகநூல் நண்பர்களுக்கு முதுகு சொறிவதில்லை. அப்படி எங்காவது பச்சை போட்டிருந்தால் ஆதாரத்தைக் காட்டுங்கள்!

இந்தத் திரியில் கருத்து வைத்தபோது அதனைப் பொதுவாகவே வைத்தேன். நண்பர் தயாவுக்கு ஆதரவாக வைக்கவில்லை. புலிகளில் இணைந்தவர்கள்/ஆதரவாளர்கள்/எதிரிகள் எல்லோருக்கும் புலிகள் அமைப்பின் தலைவரை ஒருதடவையாவது நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசை கட்டாயம் இருந்திருக்கும். அவரைப் பார்க்காமலேயே அவரின் இலட்சியத்திற்காக தம்முயிரை ஈந்தவர்கள் எத்தனையோ ஆயிரங்களாக இல்லையா? அதனால்தான் தயாவுக்குத் தலைவரைக் சந்தித்த அந்தத் தருணம்/நிகழ்வு மிகவும் பொக்கிஷமாக உள்ளது. அதனை இல்லையென்று நிரூபிக்காமல் அப்படி ஒன்று நடந்திருக்கச் சாத்தியமில்லை என்று அமைப்பின் நடைமுறைகளை மட்டும் காரணங்களாகக் காட்டிச் சொல்லமுடியாது. சில புறநடைகள் (0.001%) ஆவது சாத்தியப்படும்தானே!

 

கிருபன் நான் முந்தி புலியில் இருந்தனான்.தலைவர் மீது அளவில்லாத பாசம் கொண்டனான் என வையுங்களேன்.என்னாலும்,தலைவரை நேரில் கண்டது போல எழுத முடியும்.ஏன் என்டால் தலைவர் மேல் கொண்ட பாசம் அப்படி.இதற்காக தயாண்ணா பொய் சொல்கிறார் என்று நான் சொல்லேல்ல.அவர்களுக்குரிய தகுந்த பதிலை தயாண்ணா கொடுக்கவில்லை அல்லது கொடுக்க முடியவில்லை என்பது தான் என் ஆதங்கம்.
 
நான் உங்களை நேரே சந்தித்து விட்டு அதை யாழில் எழுதுவதற்கும் இன்னொரு கள உறவு உங்களை பற்றி சொல்லி அதை கற்பனையில் நான் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்குமல்லவா :lol:   
 
தயாண்ணா பத்து வருடமாவது போராளியாக இருந்தவர்.அவரை அவமதிப்பதோ அல்லது மனநோக வைப்பதோ என் நோக்கமல்ல.தலைவர் மேல் உள்ள பாசத்தால் அல்லது புலிகள் மேல் உள்ள பாசத்தால் உணர்ச்சிவசப்பட்டு எழுதி அவரது பெயரை அவர் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் என் கவலை
Link to comment
Share on other sites

 

கிருபன் நான் முந்தி புலியில் இருந்தனான்.தலைவர் மீது அளவில்லாத பாசம் கொண்டனான் என வையுங்களேன்.என்னாலும்,தலைவரை நேரில் கண்டது போல எழுத முடியும்.ஏன் என்டால் தலைவர் மேல் கொண்ட பாசம் அப்படி.இதற்காக தயாண்ணா பொய் சொல்கிறார் என்று நான் சொல்லேல்ல.அவர்களுக்குரிய தகுந்த பதிலை தயாண்ணா கொடுக்கவில்லை அல்லது கொடுக்க முடியவில்லை என்பது தான் என் ஆதங்கம்.
 
நான் உங்களை நேரே சந்தித்து விட்டு அதை யாழில் எழுதுவதற்கும் இன்னொரு கள உறவு உங்களை பற்றி சொல்லி அதை கற்பனையில் நான் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்குமல்லவா :lol:   
 
தயாண்ணா பத்து வருடமாவது போராளியாக இருந்தவர்.அவரை அவமதிப்பதோ அல்லது மனநோக வைப்பதோ என் நோக்கமல்ல.தலைவர் மேல் உள்ள பாசத்தால் அல்லது புலிகள் மேல் உள்ள பாசத்தால் உணர்ச்சிவசப்பட்டு எழுதி அவரது பெயரை அவர் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் என் கவலை

 

 

ரதியின் கருத்தே எனதும்.. தயாவை அவமதிப்பதோ அல்லது மனம் நோக வைப்பதோ இங்கு நோக்கமல்ல.. :unsure:  ஆனாலும் அதை நடத்தியே காட்டுவோம்.. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தயா என்ன தலைவரே வந்து சொன்னால் கூட அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இதுதான் யதார்த்தம். புலிகள் கட்டமைப்பு குறித்த பிம்பங்களை அவரவர் வசதிக்கேற்ப புறநிலையில் வடிவமைத்துள்ளனர். இருப்பில் அது சார்ந்து ஒரு கருத்து நிலையாக இருக்கின்றது. அதை மாற்ற தயாராக இல்லை. எனவே கேள்விகள் இருப்பில் இருக்கும் கருத்துக்களுக்கு சார்பாக சரிமாரியாக எழும். அதற்கான பதில்கள் நிராகரிக்கப்படும். கருத்துக்கள் ஊடாக தன்னை முன்னிலைப்படுத்தும் நிலை சில நேரம் உண்மைகளையும் வரலாற்றையும் மாற்றி அமைத்துவிடும்.

இச் சம்பவம் நடநத் காலப்பகுதியில் கொக்குவில் பகுதியில் இருந்தேன். நான் அறிந்தவரையில் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கை ஏற்கனவே புலிகளால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கை. புநகரி சமர் வெற்றிச் சமர் என்று அறிவிக்கப்பட்டாலும் அது ஒரு படுதோல்விச் சமர். ஒரு டாங்கியும் மூன்று நாலு வாட்டர் ஜெட்டும் தான் மிச்சம். திறமைமிக்க வீரர்கள் உட்பட 500 பேர்வரையில் காவுகொண்டு 1000 பேருக்கும் மேல் காயமடைந்து புலிகளின் இராணுவ பலத்தை மிகவும் பலவீனப்படுத்திவிட்டது. பூநகரியை கைப்பற்றி பாதையை திறப்பது இல்லையேல் யாழைக்கைவிடுவது என்பது படைபலச் சமநிலை அடிப்படையில் தவிர்க்கமுடியாத விதி. அடுத்தது மாத்தயாவின் பிரச்சனையால் உளவியல் ரீதியாக புலிகள் தளர்ந்திருந்தனர். இவ்வாறான பலவீனங்களை கணக்கில் கொண்டு ராணுவம் முன்னேற தயாராகிக்கொண்டிருந்தது. அதே நேரம் புலிகள் வன்னிக்கு நகர தயாராகிக்கொண்டிருந்தார்கள். கட்டமைப்புகள் படிப்படியாக நகரத்தொடங்கிவிட்டது. புலிகள் எதிர்பார்த்ததற்கு முதல் ஒரு ஒத்திகையை ராணுவம் செய்தது. அதுதான் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கை. இது இராணுவத்தின் யாழைப் பிடிப்பதற்கான ஒத்திகை என்பது பின்னரே புலிகளுக்குத் தெரியும். முன்னேறிப்பாய்தலை என்னவிதப்பட்டாவது தடுத்தே ஆகவேண்டும் அல்லது தாமதிக்கச் செய்யவேண்டிய கட்டாயம் அந்தவகையில் கட்டமைப்புகளை கிளாலி ஊடாக வன்னிக்கு உடனே நகர்த்துவது சாத்தியமில்லை. இந் நிலையில் நடந்தது புலிப்பாய்ச்சல் நடவடிக்கை. இந்தக் காலப்பகுதியில் கட்டமைப்புகளை வன்னிக்கு நகர்த்துவது குறித்து ஒரு வாழ்வா சாவா போராட்டம். இந் நிலையில் கட்டளைப்பீடங்கள் நிர்வாகங்கள் ஒழுங்குமுறைகள் எதுவும் அதனதன்படி நடக்கவாய்பில்லை. சூழ்நிலைக்கேற்ப எல்லா நிர்வாக அலகுகளையும் மாற்றக்கூடிய நிலையே புலிகள் கொண்டிருந்தனர். கட்டளைத்தளபதி காயப்படுவதும் கட்டளைத்தளபதி இராணுவப் பிரதேசத்துகள் ஊடுருவி சண்டை பிடிப்பதும் புதிதான ஒரு விடயமில்லை. இது எல்லா மக்களுக்கும் தெரிந்த பொதுவான விடயம்.

சம்பவங்களின் காலம் சூழ்நிலைகளை பொறுத்தவரை தயா சொல்வது சாதராணமாக சாத்தியமானது. புலிகளுக்கு எப்படி வேவுப்போராளியின் தகவலும் கருத்தும் முன்னணி அரங்கில் உள்ள போராளியின் கருத்தும் முக்கியமானதோ அதேபோல் அக்காலப்பகுதியில் களத்தில் நின்றவரின் கருத்தும் தகவலுமே முக்கியமானது தவிர அப்படி இருந்திருக்காது இப்படித்தான் இருக்கும் என்ற புறநிலைக்கருத்துக்கள் இரண்டாம் பட்சமானது.

 

கடைசி வரை மு.வாய்க்காலில் இருந்தோம் என்று கருணாகரன்,நிலாந்தன்,யோ.கர்ணன் ஆகியோர் அங்கு நடந்தவற்றை [நடந்தது என்டு சொல்லி]எழுதுகினம்.இதில சுகனுக்கு பச்சை குத்தினவை எந்த வித கேள்வியும் இல்லாமல் அவற்றையும் ஏற்றுக் கொள்வினமோ அல்லது யார் சொல்லினம் எனப் பார்த்துத் தான் ஏற்பினமோ :unsure:

ரதியின் கருத்தே எனதும்.. தயாவை அவமதிப்பதோ அல்லது மனம் நோக வைப்பதோ இங்கு நோக்கமல்ல.. :unsure:  ஆனாலும் அதை நடத்தியே காட்டுவோம்.. :D

 

 

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் உங்கள மாதிரி என்னால தலையாட்டியாக அல்லது மெளனமாக இருக்க முடியவில்லை மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

யார் சொல்லுவினம் என்று மட்டும் இல்ல எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்படுகிறது என்றும் பார்ப்பார்கள் இங்கு பலர் ரதி. இங்கு பலருக்கு வசதியான தேவைப்படும் இடத்தில் சுகன் எழுத்தியதால் எதிர்க்கருத்துக்கள் வரவில்லை.இதையே கருணாகரன் அல்லது நிலாந்தன் எழுதியவை சம்பந்தமான திரியில் சுகன் எழுதி இருந்தால் கதை வேறு.(வேறு திரிகளில் இதை ஒத்த இடங்களில் துள்ளிவிட்டு இங்கு சுகனுக்கு எதிர்க்கருத்துவைக்காமல் பம்முகிறவர்களுக்கு மற்றவர்களுக்கு அல்ல)

Link to comment
Share on other sites

கடைசி வரை மு.வாய்க்காலில் இருந்தோம் என்று கருணாகரன்,நிலாந்தன்,யோ.கர்ணன் ஆகியோர் அங்கு நடந்தவற்றை [நடந்தது என்டு சொல்லி]எழுதுகினம்.இதில சுகனுக்கு பச்சை குத்தினவை எந்த வித கேள்வியும் இல்லாமல் அவற்றையும் ஏற்றுக் கொள்வினமோ அல்லது யார் சொல்லினம் எனப் பார்த்துத் தான் ஏற்பினமோ :unsure:

 

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் உங்கள மாதிரி என்னால தலையாட்டியாக அல்லது மெளனமாக இருக்க முடியவில்லை மன்னிக்கவும்

 

கருணாகரன்,நிலாந்தன்,யோ.கர்ணன் எழுதியதையும் வாசித்தேன்.வவுனியா முகாமில் சகோதரி உட்பட பலருடன் ந்நெரடியாக 2009ல் உரையாடி உள்ளேன். 300 பேர் முள்ளிவாய்க்காலில் இருந்து இங்கு வந்துள்ளார்கள். அவர்களுடனும் உரையாடி உள்ளேன். 
 
புலிகளின் குறிப்பிட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களுக்குள் தான் ரகசியங்கள் காக்கப்படும். வெளியில் உள்ள போராளிகளுக்கு எல்லா விடயங்களும் தெரிய வாய்ப்பில்லை.
Link to comment
Share on other sites

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் உங்கள மாதிரி என்னால தலையாட்டியாக அல்லது மெளனமாக இருக்க முடியவில்லை மன்னிக்கவும்

 

மௌனமாக இருக்க வேண்டிய தேவை ஒன்று உள்ளது.. m1521.gif

Link to comment
Share on other sites

யாழ்கள உறவுகளுக்கு!
 
தயா புலிப்பாய்ச்சல் சண்டையில் இருந்தபோது, தலைவர் வந்ததாக அவர் கூறும் சம்பவத்தின் மீது   நடைமுறைச்சாத்தியமில்லை என்ற விவாதம் வைத்தேன். 
 
இங்கு தயா சண்டையில் நின்டாரா? இல்லையா என்பது விவாதத்திற்குட்படவில்லை. விவாதத்திற்கு காரணமாகவிருப்பது தலைவர் தொடர்பான செய்திதான்.
 
விவாதம் ஏன் தொடர்ந்தது என்ற காரணத்தை, தயாவினால் கொடுக்கப்பட்ட  கருத்துக்கள் மூலம் மீளவும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். 
 
அந்த இடத்திற்கு வந்ததற்கு தலைவர் வந்ததற்கான காரணமாக தயா கூறியிருப்பது ‘தலைவரி ஓட்டியை அறைந்து விடுகிறான்... அவனை சமாதானப்படுத்திய தலைவர் உங்கட தொடர்பு யாரிட்டையும் இல்லை அதுதான் நான் வந்தனான் நான் தான் கிட்டை நிண்டதாலை வந்தனான்” ‘இந்தப் பகுதியாலை பெரிய உடைப்பை எடுத்து எங்களிட்டை மாட்டின ஆக்களை மீட்க படை குவிப்பு இந்த பகுதியிலை செய்து இருக்கிறான்... உங்களை பின்வாங்க சொல்லவே நான் வந்தனான்” என்கிறார். (42 வது பின்னுாட்டம்) 
 
இது தவறானது என்பதற்கான காரணங்கள். 
 
நானும் இன்னும் 10 பேர் வரை சங்கானை சண்டிலிப்பாய் எல்லையில் இருந்த வயல் கரையோரம் இருந்த ஒரு வீதியும்(மானிப்பாய் வீதியாக இருக்க வேண்டும்) சின்ன மதகு கொண்ட எல்லை பிரதேசத்தை பிடிச்சு அதில் ஒரு பாதுகாப்பு அமைக்க சொல்லி வந்த சொர்ணம் அண்ணையின் கட்டளையை நிறைவேற்ற போன போது’ - (42 வது பின்னுாட்டம்)
 
எனவே சொர்ணம் அண்ணையின் கட்டளைத் தொடர்புடன்  தயா நின்ற செக்சன் ஒரு பிரதேசத்தில் நிலையமைக்கச் சென்றிருக்கின்றது. சொர்ணம் அண்ணைக்கும் அவரது கட்டளைமையத்திற்கும்தான்  இவர்கள் எங்கு நிற்கின்றார்கள் என்ற தகவல் தெரியும்.
 
இங்கு எழும் ஐயம்,  சொர்ணம் அண்ணையின் நேரடித் தொடர்புடன் விடப்பட்ட 10 பேர்கொண்ட அணி, எங்கு நிக்கின்றது என்ற தகவல்  தலைவருடன் தொடர்பற்ற ஒருவிடயம். அவருடைய பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் நிச்சயம் சொர்ணம் அண்ணையின் கட்டளைமையத்தில்த்தான் இத்தகவலைப் பெறமுடியும். 
 
திட்டமிட்ட சண்டை நடக்கும் பிரதேசத்திற்குள் அணிகள் பாதுகாப்புச் சமரில் நிலையமைத்திருப்பதைப்போல இருப்பதில்லை. எனவே தலைவர் சொர்ணம் அண்ணையின் தகவலுடன்தான்  தயா நின்ற செக்சனின் இடத்தை  தெரியமுடியும். 
 
எனவே சொர்ணம் அண்ணையின் கட்டளைமையத்தில் தொடர்பு கொண்டு தயா நின்ற செக்சனின் இடத்தைக்கேட்டு (பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான மாற்று ஒழுங்குகள் செய்யாமல், தகவல் எதுவும் பரிமாறாமல்) அதைத்தேடிப்பிடித்து தானே தனது பாதுகாப்பையும் கருதாது நேரடிகச் சென்று சொல்லவேண்டும் என்ற கருத்து பொருத்தப்பாடற்றது. 
 
இந்த இடத்தில்தான் உதைக்கின்றது.
 
ஏனென்றால் ஒரு இடத்தில் சண்டைக்கு விடப்பட்ட செக்சனின் தொடர்பை சரிபார்ப்பது தலைவரின் வேலையல்ல, (இதில் இரண்டு விதமான கருத்துக்களை தயா சொல்கின்றார் 01) ஒரு கட்டவுட் போட சொன்னதால் 02) சின்ன மதகு கொண்ட எல்லை பிரதேசத்தை பிடிச்சு அதில் ஒரு பாதுகாப்பு அமைக்க சொல்லி வந்த சொர்ணம் அண்ணையின் கட்டளையை நிறைவேற்ற போன போது)  இது சம்பந்தப்பட்ட பொறுப்பாளரின் வேலை. இத்தகவலை தாக்குதலுக்கான நிலையில் விட்ட  சம்பந்தப்பட்ட பொறுப்பாளரிடம் சொல்லாமல் , அந்தப் பொறுப்பாளருடன் தொடர்பு கொண்டு தயா நின்ற செக்சனின் இடத்தை அறிந்து நேரடியாகச் சென்று ‘உங்கட தொடர்பில்லை அதுதான் பின்வாங்குவாங்கச் சொல்லவே வந்தனான்‘  என்று  சொல்லப்பட்ட கூற்று சாத்தியமில்லாத ஒன்று. 
 
இதைச் சாதாரணமாகவே சம்பந்தப்பட்ட தளபதியூடாக தனது இடத்திலிருந்தே சிறிய செய்தியை அனுப்பி செய்து விடுவாரே. என்ன தலைவர் அவ்வளவுக்கு ஆற்றல், தலைமைத்துவம் இல்லாமலா இந்த விடுதலை இயக்கத்தை  கட்டினார்?
 
தலைவரைப்பார்க்காமலே தலைவரின் கட்டளைப்படி செயற்பட்டு வீரச்சாவடைந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். மற்றும் ஒரு சொல்லுச் சொன்னால் சொன்ன இலக்கைத்தகர்க்கும் எத்தனை தியாக மனப்பான்மையுள்ள போராளிகளை தன்னிடம் வைத்திருக்கும் தலைவருக்கு, இரண்டு போராளிகளை அனுப்பி  தயா நின்ற செக்சனை பின்வாங்கச் செய்யக்கூடிய ஆழுமையற்றவரா? தமிழ் சினிமாவின் கற்பனைக் கதாநாயகன் அல்ல. யதார்த்தமாக வாழந்து காட்டிய தலைவன்.
 
அடுத்தது
 
‘பின்னேரம் ஒரு நாலு மணி இருக்கும் வேகமாக வந்த ஒரு வாகனம் எங்களவர் பக்கம் வந்து நிற்பதுவும் அதில் ஒருவர் வேகமாக இறங்கி வயல் வெளியை தாண்டி குனிந்தபடி கையில் பிஸ்ரலுடன் ஓடி வருவது தெரிகிறது... அவருக்கு பின்னால் அவரின் வாகன ஓட்டி இறங்கி பின்னாலேயே ஓடி வருகிறார்... (எனவே தலைவரும் சாரதியுமாக இருவர் மட்டும்)
இப்ப வருவது யார் இராணுவமா இல்லை எங்களவரா...?? எங்களுக்குள் குழப்பம்.... 
முன்னால் வந்தவரை அடையாளம் கண்டதும் அனைவருக்கும் அதிர்ச்சி... எனக்கு கைகள் எல்லாம் உதற ஆரம்பித்து இருந்தது... வந்தது தலைவர் பிரபாகரன்... சில மீற்றர் தூரத்தில் எதிரி தாக்குதல் நடத்தியவாறு இருக்கிறான்... இவர் ஏன் முன்களத்துக்கு வாறார்... ??? 
 
மாத்தையா அண்ணை மற்றும் கிருபனின் சதிவேலைத்திட்டத்திற்குப்பின் தலைவரின் பாதுகாப்பு மேலும் இறுக்கப்பட்டது. தளபதிகள் கூட கைத்துப்பாக்கியுடன் தலைவருக்கு கிட்டச் செல்வதில்லை. 
 
குறைந்தது இரண்டு அடுக்குப்பாதுகாப்பு மற்றும் தலைவரின் நேரடி புலனாய்புப்போராளிகளின் வீதிப்பாதுகாப்பு உறுதிப்படுத்திய பிறகே வீதியில் கூட பயணிக்கும்  தலைவர் ஒரு சிக்கலான களமுனைக்கு சாரதியுடன் மட்டும் வந்தார் என்பதுவும்
 
தலைவர் அங்கு வரும்போது  இராணுவமா? இல்லை எங்களவரா? என்று  தயா குழப்பமடையக்கூடிய இடம் ஒன்று என்றால் எவ்வளது சிக்கலான களமுனை அதற்கு தலைவர்  சாரதியுடன் வந்தார் என்பதுவும்
 
சில மீற்றர் தூரத்தில் எதிரி தாக்குதலை நடத்தியவாறு இருக்கும்போது (என்றால் அண்ணளவாக 50 மீ்ற்றருக்குள்)  அவ்வளவு ஆபத்தையும் எதிர்கொண்டு சென்றது தயா நின்ற செக்சனை பின்வாங்கச் செல்ல   வந்தது என்பதும்
 
சாதாரணமாக தலைவரின் முகாம் தவிர்ந்த எந்த இடத்தில் வாகனம் நின்றாலும் அங்கு  தலைவரின் போராளிகளைத்தவிர யாரும் வாகனத்திற்கு கிட்டக்கூட செல்லமுடியாது. குறிப்பாக சாரதி வாகனத்துடனேயே நிற்பார். காரணம் உடனடியாக புறப்படுவதற்கும் வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் வைத்துவிடக்கூடாது என்பதற்காகவும்.  இப்படியான நடைமுறை உள்ள நிலையில் வாகனச்சாரதியும் தலைவருடன் வாகனத்தை விட்டுவிட்டு வந்தார் என்பதும் நடைமுறைக்சாத்தியமில்லை என்பதே  தயாவின் பதிவின் மீது வைக்கப்படும் கேள்வி.
 
மேலும் தலைவரின் பாதுகாப்பு, தாக்குதல் சமயங்களில் கட்டளை பரிமாறப்படும் நடைமுறை போன்றவற்றை அறிந்திருக்கும் போராளிகளிற்கு மட்டும் இது தெளிவாக விளங்கும்.  
 
அத்துடன்
 
தயா அங்கு நிக்கவில்லை என்று சொல்லவும் வரவில்லை. ஆனால் அவர் பதிவு செய்த கருத்தில்‘நாங்கள் ஒரு ஐஞ்சு பேர் பிறகு தீவகம் அராலிக்கை வேவுக்காக பொன்னாலையில நிண்ட இன்னும் 5 பேரையும் சேர்ந்து 10 பேரா ஒரு இடத்திலை விட்டிச்சினம்... சண்டை காலை 5 மணிக்கு ஆரம்பிச்சுது ஒரு 7 மணி அளவிலை எங்களை கூப்பிட்டு சண்டை பிடிப்பவர்களுக்கு பக்கவாட்டாக எந்த தாக்குதலும் வராமல் இருக்க ஒரு கட்டவுட் போட சொன்னதால் மேலை நான் குறிப்பிட்ட இடத்துக்கு போய் சேர்ந்தோம்.’ எனவே தயாவுக்கு சண்டையின் முழுமையான திட்டம் அது தொடர்பான தகவல் தெரியுமா? என்பதை உங்களின் முடிவுக்கு விட்டு விடுகின்றேன்.
 
இப்படிப்பட்ட கருத்துக்கள்தான் பதிவின் மீதான சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றது.
 
மற்றும் அவரின் பதிவின் மீதான சந்தேகத்தை எழுப்பும் போது அதற்கான பதிலைக் கொடுக்காமல் அந்த விடயத்திற்கு பதிலளிக்காமல் அதைச்சுற்றி தான் அறிந்த, தெரிந்த பல தொடர்பற்ற தகவல்களைப்பதிந்து விவாதத்திற்கான மையக்கருத்தை உருமறைப்புச் செய்வதும்  தனது பதிவின் மீதான சந்தேகத்தை எழுப்புபவர்களின் மீது சேறு பூசுவதையும் தவிர்த்து  அவர்களின் சந்தேகத்திற்கான  பதிலை வழங்க வேண்டும். ஆரோக்கியமான விவாதத்தை முன்வைக்க வேண்டும். அவருக்குப் பல சம்பவங்கள் தெரியும் ஆனால் அவை இந்த விவாதத்திற்கு அவசியப்படாதவை.
 
அத்துடன் சாதாரணமாக தலைவரின் சந்திப்புக்கே ஆயுதங்களுடன் செல்ல முடியாது. பாதுகாப்பு பரிசோதனை முடிந்தே போராளிகள்  தலைவரின் சந்திப்புக்கே செல்லமுடியும் என்பதும் உங்களிற்கு தெரியும் என்று நம்புகின்றேன்.
 
 
தெல்லிப்பளையில் இருந்த நகர்ந்த இராணுவம், அளவெட்டி, சண்டிலிப்பாய், சங்கரத்தை, துணைவி, வட்டுக்கோட்டைக்கு செல்ல மாதகலில் இருந்து நகர்ந்த இராணுவம் பொன்னாலை, மூளாய், வட்டுக்கோட்டைக்கு வந்து கைகோர்ததது இது தான் இராணுவத்தின் முன்னேறிப்பாச்சல் நடவடிக்கை . 
 
அவர் சொல்லுகின்றார் ‘நாங்கள் இருந்தது சண்டிலிப்பாய் சுண்ணாகம் தெல்லிப்பளை க்கு இடைப்பட்ட பிரதேசம்... தெல்லிப்பளை இருந்து வந்த இராணுவ நகர்வுக்கு எதிராக.... பலாலியில் இருந்து வரக்கூடிய ஆதரவு படைப்பிரிவை கண்காணிக்க அல்லது சிறிது நேரம் தடுத்து நிறுத்த... ’  (50வது பின்னுாட்டம்) 
 
அத்துடன் சண்டைக்கான கட்டவுட்டில் நின்டதாக கூறும் அதேநேரம் ‘இந்த பகுதியாலை பெரிய உடைப்பை எடுத்து எங்களிட்டை மாட்டின ஆக்களை மீட்க்க படை குவிப்பு இந்த பகுதியிலை செய்து இருக்கிறான்... உங்களை பின்வாங்க சொல்லவே நான் வந்தனான் ... ’ இப்படியும் கூறுகிறார்.
 
இதில குழப்பம் என்னென்றால், தாயாவுடன் பத்துப்பேரும், நகரும் இராணுவத்தை கண்காணித்து ஒரு தொல்லைப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொண்டு தாமதப்படுத்தும் நோக்கத்துடன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அப்ப  மாட்டின இராணுவத்தை மீட்க நகரப்போகும் இராணுவத்தை தடுப்பதற்கான படையைணியை அனுப்பாமல் தலைவர்  நேர வந்து  அவர்களைப் பின்வாங்க சொல்லவந்ததும் , அவருடைய சாரதிக்கு அடித்ததும், பிறகு ஒரு பிரதேச கண்காணிப்பு வேவு நடவடிக்கைக்காக விடப்பட்ட அவர்கள் எந்த ஆமியைச் சுட்டு தலைவரை பின்னுக்கனுப்பினார்கள். புரியவே புரியலை. 
 
இப்படி கனக்க இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்.
 
அவரின் ஆரம்ப விவாதமும் பின்னர்  அதைத்திருப்பிச் சொன்னதற்கும் இடையில் முரண்பாடு இருக்கு .
 
எனவே தயா தனது பின்னூட்டம்- 91 இல் சொன்னதிலிருந்து புரிந்து கொள்வது, 5 பேர் கொண்ட வேவு அணியில் சீரணிப்பாலத்துக்கு ஒரு பக்கம் வட்டுக்கோட்டை பக்கமாக வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றார். இவர்களது பாதை சண்டைக்கு தேர்வு செய்யப்படவில்லை. எனவே இவர்களையும் இவர்களுடன் இன்னுமொரு அணியையும் இணைத்து ஒரிடத்தில் விடப்பட்டுள்ளனர். சண்டைக்கான பிரதான முனைகள் வேறு இடத்தில் இருந்தன. சண்டை தொடங்கிய பின் இவர்களை கட்டவுட் போட அனுப்பியிருக்கின்றார். கட்டவுட்டில் நின்று, பிரதான சண்டை தொடர்பாக வோக்கியில் கேட்டுக்கொண்டிருந்ததால் மின்கலம் செயலிழந்ததும், அதனால் தொடர்பற்றுப்போக, அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களைப் பின்வாங்க வைக்க, ஒரேயொரு சாரதியுடன் தலைவர் வந்தார் என்பதும்தான்அவருடைய பதிவின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்ப வைத்தது. 
 
முதலாவதாகச் சொன்னது
 
முனேறிபாய்தல் நடவடிக்கை மூலம் வட்டுக்கோட்டை , சங்கானை கரையோரமான யாழ்ப்பாணத்து ஆறு வழுக்கியின் கரை வரைக்கும் இராணுவம் முன்னேறி இருந்த போது புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலம் முறை அடிக்கும் சமருக்கு தலைவர் பிரதான கட்டளை இட்டு கொண்டு இருந்தார்... பால்ராஜ் அண்ணை, சொர்ணம் அண்ணை, பாணு அண்ணை அனைவரும் முன்களங்களின் நிண்றார்கள்.... 
நானும் இன்னும் 10 பேர் வரை சங்கானை சண்டிலிப்பாய் எல்லையில் இருந்த வயல் கரையோரம் இருந்த ஒரு வீதியும்( மானிப்பாய் வீதியாக இருக்க வேண்டும்) சின்ன மதகு கொண்ட எல்லை பிரதேசத்தை பிடிச்சு அதில் ஒரு பாதுகாப்பு அமைக்க சொல்லி வந்த சொர்ணம் அண்ணையின் கட்டளையை நிறைவேற்ற போன போது த்னது முதலாவது அரனை ஆயுதங்களோடு கைவிட்டு போட்டு இரண்டாவது அரணாக இருந்த ஒரு வீட்டின் பின்னர் எதிரி பதுங்கி கொள்கிறான்... அதற்கு மேலை நகர வேண்டாம் அதில் பாதுகாப்பு அமைக்க பணிக்க பட்டு இருந்தோம்...
கனகரக ஆயுதங்கள் ஏதும் இருக்காத போதும் , ஏற்கனவே இராணுவம் விட்டு ஓடி இருந்த ஒரு பெல்ஜியம் 50 கலிபர் , மற்றும் இரண்டு GPMG (MAC) ஆயுதங்களும் மிக பெருந்தொகையான வெடி பொருட்களும் எங்கட கைகளில் கிடைச்சது... எங்களில் இருந்து ஒரு 20 மீற்றர் தொலைவில் இருந்த வீட்டை அரனாக்கி இராணுவம் எங்கள் மீது தாக்குதல் தொடங்கி இருந்தான்... எடுத்த ஆயுதங்களை திருப்பி போட்டு வேலிக்கரை யோரமாக நிண்டு ஆள்க்கு ஆள் மாறி மாறி அடிக்க ஆரம்பிக்கிறோம்... சண்டை எங்களுக்கு வேடிக்கையாக போனது என்னவோ உண்மைதான்... எங்களுக்கு மகிழ்ச்சிக்கு அளவில்லை என்டால் மிகை இல்லை.... 
சண்டை ஆரம்பித்தது முதல் அலைவரிசையை மாற்றி மாற்றி கட்டளை கேட்டதால் தொலைத்தொடர்புக்கான மின் கலங்கள் செயல் இளந்து போய் இருந்தது... பின்னேரம் ஒரு நாலு மணி இருக்கும் வேகமாக வந்த ஒரு வாகனம் எங்களவர் பக்கம் வந்து நிற்பதுவும் அதில் ஒருவர் வேகமாக இறங்கி வயல் வெளியை தாண்டி குனிந்தபடி கையில் பிஸ்ரலுடன் ஓடி வருவது தெரிகிறது... அவருக்கு பின்னால் அவரின் வாகன ஓட்டி இறங்கி பின்னாலேயே ஓடி வருகிறார்... 
இப்ப வருவது யார் இராணுவமா இல்லை எங்களவரா...?? எங்களுக்குள் குழப்பம்.... 
முன்னால் வந்தவரை அடையாளம் கண்டதும் அனைவருக்கும் அதிர்ச்சி... எனக்கு கைகள் எல்லாம் உதற ஆரம்பித்து இருந்தது... வந்தது தலைவர் பிரபாகரன்... சில மீற்றர் தூரத்தில் எதிரி தாக்குதல் நடத்தியவாறு இருக்கிறான்... இவர் ஏன் முன்களத்துக்கு வாறார்... ??? 
கோபத்தின் உச்சியில் இருந்த கிர்மானி ( கொப்பேகடுவ மீதான குண்டு தாக்குதலுக்கு தலைவரிடம் இருந்து பரிசு பெற்ற மட்டக்களப்பை சேர்ந்த போராளி பின்னரான காலங்களில் வீரச்சாவடைந்து இருந்தான்.. ) தலைவரி ஓட்டியை அறைந்து விடுகிறான்... அவனை சமாதானப்படுத்திய தலைவர் உங்கட தொடர்பு யாரிட்டையும் இல்லை அதுதான் நான் வந்தனான் நான் தான் கிட்டை நிண்டதாலை வந்தனான் என்கிறார்... 
இந்த பகுதியாலை பெரிய உடைப்பை எடுத்து எங்களிட்டை மாட்டின ஆக்களை மீட்க்க படை குவிப்பு இந்த பகுதியிலை செய்து இருக்கிறான்... உங்களை பின்வாங்க சொல்லவே நான் வந்தனான் என்கிறார்... 
எல்லா ஆயுதங்களையும் போட்டு ஒரு பெரிய தாக்குதல் போல ஒரு சூட்டை எதிரி மீது நாங்கள் செய்யும் போது தலைவரை மீண்டும் அந்த வெளியை தாண்டி அனுப்பி வைத்தோம்... பின்னர் நாங்களும் வந்து சேர்ந்தோம்... 
நான் புரிந்து கொண்டது 10 போராளிகளை காக்க முடியும் எண்டால் தலைவர் தன்னை பற்றி கவலை இல்லாதவர்... தனது பொறுப்பை தன்னால் முடிந்தவற்றை வேறு ஒருவர் மீது திணிப்பது இல்லை... ஏற்கனவே மதிப்பால் உயர்ந்து நிண்ட தலைவர் அண்டைக்கு முதல் இன்னும் உயர்வாக தெரிந்தார்...  (42 வது பின்னுாட்டம்)
 
இரண்டாவதாகச் சொன்னது
 
நாங்கள் ஒரு ஐஞ்சு பேர் பிறகு தீவகம் அராலிக்கை வேவுக்காக பொன்னாலையில நிண்ட இன்னும் 5 பேரையும் சேர்ந்து 10 பேரா ஒரு இடத்திலை விட்டிச்சினம்... 
 
சண்டை காலை 5 மணிக்கு ஆரம்பிச்சுது ஒரு 7 மணி அளவிலை எங்களை கூப்பிட்டு சண்டை பிடிப்பவர்களுக்கு பக்கவாட்டாக எந்த தாக்குதலும் வராமல் இருக்க ஒரு கட்டவுட் போட சொன்னதால் மேலை நான் குறிப்பிட்ட இடத்துக்கு போய் சேர்ந்தோம்... ஏற்கனவே இருந்த இராணூவ நிலை இடத்திலை எதிர்பாராமல் ஒரு சின்ன சண்டை எங்களை முன்னாலை எதிர்ப்பார்த்து இருந்து இருபான் நாங்கள் பக்கவாட்டாக போய் ஏறி இருந்தோம்... ! 
 
இரவு முதல் சும்மா இருந்ததால் எங்களின் வோக்கிகளின் நடந்த சண்டையின் நெர் முக வர்ணனை கேட்ப்பதுக்காக அணைக்காமல் இருந்ததாலும் , கேட்டு கொண்டு இருந்ததால் மின் கலன் முடிஞ்சு போச்சு... பிரதான சண்டையிலை நாங்கள் இல்லாததாலை எங்களுக்கு மேலதிகமாக தரவும் இல்லை... 
 
அதுக்கும் மேலை நான் முன்னமே எழுதி இருந்தது தான் நடந்தது... நாங்கள் இருந்த பகுதிக்கு தலைவர் வந்தார் என்பது மட்டுமே நான் குறிப்பிட்டது... பிரதான சண்டையில் எங்களின் பங்குகள் இருந்தமை பற்றி கூட சொல்ல வில்லை. (91வது பின்னுாட்டம்)
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி சண்டையை விட்டுவிட்டு அடுத்த சம்பவத்தை சொல்லுங்கோ.

 

காளமேகம் நீங்கள் உண்மையிலேயே ஒரு பெரிய ஆளாக்கத்தான் இருக்க வேண்டும். உங்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவையே.

 

தயா நீங்கள் சொல்லுவதை நம்புவது என்பதை விட  ஏற்றுக்கொள்வது  கடினமாக இருக்கிறது.

 

இந்த சண்டை நடந்தது 95 ...அந்த காலத்தில் பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்பது ஒரு பெரிய  விடயம்.  அந்த நேரத்தில் சண்டை பிரதேசத்தில் 10 பேரை காணவில்லை என்று பார்க்க வந்தவர் என்பது நடைமுறை சாத்தியமல்லாது. ஆனால், இன்னும் நாலு பேர் இப்படியான அனுபங்களை சொன்னால், தலைவர் இப்படியான யுத்த முனைகளிலும் வந்து நின்ற அனுபவங்களை சொன்னால், தயா நீங்கள்தான் இப்படியான செய்தியை வெளியிட்ட முதல் ஆளாக இருப்பீர்கள்.

 
அதைத்தவிர;
காளமேகம் மற்றும் சரியான வரலாறு மட்டும்தான் பதிய வேண்டும் என்கிற நண்பர்களுக்கு;

ஒன்றுமே எழுத்தில் இல்லாத வரலாறுகளை ஒருதரம் இருதரம் சரிபாத்து எழுத முடியாது. எழுத முன்னமே பிழை பிடித்தால் வெறும் வெற்றுதாள்களே மிஞ்சும். இன்னுமொரு பதிவில் மீரா எழுதுகிற தொடரில், வருகிற அருளை பற்றி எனக்கு தெரிந்ததை நான் எழுத முடியும். ஆனால் ஏனோ அதில் எழுத விருப்பம் இல்லை.அந்த தொடரை பலரும் விரும்பாவாதவிடத்து மல்லுக்கட்டுவதில் யாருக்கும் பிரயோசனம் இல்லை. ஏனெனில் அதில்  ஏதாவது பழைய விடயங்களை அறிவோம் என்கிற உணர்வைவிட, எழுதுபவரை ஒதுக்கி வைத்து விமர்சிக்கவே நிர்வாகமும் முண்டு கொடுக்கிறது.  நாலு வருடதிர்ர்க்கு முன் என்ன நடத்து என்பதே தெரியாத இடத்தில் 15 -20 வருடங்களுக்கு முதல் நடந்தவற்றை 100 க்கு 100 வீதம் சரியாக சொல்லுவது என்பது இயலாத காரியம்.

இந்தகைய பதிவுகளில் ??வாசிப்பவர்களின் மனநிலை "ஒரு விதமான அசைபோடுகிற" இயல்பே தவிர 100 க்கு 100 வீதம் சரி பிழை காணும் நோக்கம் அல்ல- நான் அப்படித்தான் வாசிப்பேன். ஒரு சிறிய சதவீதம் இதில் இருந்து ஏதாவது வருங்காலதிற்றக்கு  எடுத்து செல்ல இருக்க என்று பார்ப்பேன். யாராவது அப்படி எழுத வேண்டும், அல்லது எழுத முடியும் என்று நினைத்தால், நானும் ஒருவாராய் இயன்றளவு உதவி செய்வேன்..
உங்களை போன்றவர்கள் சிறிது சிறிதாக எழுதுவதே ஒரு பெரிய உதவி. அவை உண்மையான, பற்றாளர்களையும் இணைத்து வைக்கும்.
நன்றி வணக்கம்.  

Link to comment
Share on other sites

ஏனெனில் அதில்  ஏதாவது பழைய விடயங்களை அறிவோம் என்கிற உணர்வைவிட, எழுதுபவரை ஒதுக்கி வைத்து விமர்சிக்கவே நிர்வாகமும் முண்டு கொடுக்கிறது.

 

 

எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள் என அறிய முடியுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள் என அறிய முடியுமா??

 

சிலவேளைகளில் இப்படி இந்த திரியில் எழுதியது சரியோ தெரியவில்லை. ஆனாலும், எனது கருத்திற்ற்கு செவி சாய்த்ததிற்கு நன்றி.

தேவை எனில் பொருத்தமான பகுதிக்கு மற்றவும்

 

அடிப்படையில் அந்த திரியை பார்த்தால் எந்தனையோ கேள்விகள் எழுதியவரை நோக்கி கேட்டபட்டிருக்கிறது. அவர் தான் தனது அனுபவத்தை, தனக்கு தெரிந்த மாதிரி சொல்லுகிறேன் என்று சொன்ன பிற்பாடும். அவர் அதை யாரோ சிலரின் தூண்டுதலில் எழுதுவதாகவும், அவர் தனது கருத்துக்களை புகுத்த பவிப்பதாகவும் பல முறை சொல்லி இருக்கிறார்கள். நிர்வாகவும் அந்த என்ன விதத்தில் தொடர்து அனுமதிக்கிறதோ தெரியவில்லை. அதை யாரும் இலகுவாக விளங்கி கொள்ளலாம்.

 

எனது அனுபவம் என்னவென்றால்;

ஒருவர் தனது கருத்தை, பிரதான கருத்தாளருக்கு/ கருத்திக்கு எதிரான கருத்தை தனது பக்க நியாயங்களுடன் வைத்து பிற்பாடு, இப்படி பதிவது ஒரு தேவையற்ற வேலை என்று சொன்னார். அந்த தேவையற்றது என்பது, முதலில் பதியும் போது, தனது கருத்தே தேவையற்றது என்றோ இப்படி கருத்துக்களை-பழையவற்றை பதிவதுமே தேவையற்றது என கருதக்கூடிய வகையில் பாதிந்திருந்தார்

அவருக்கு நான் ஒரு பதில் போட்டேன்; நீங்கள் எழுதினதையே இன்னுமொருவர் எழுதினது என்று வாசித்தால் அதுவும் தேவையற்றது போலவே இருக்கும் என்று. - இப்படி பதிவது தேவையற்றது என்றால் என்ன நோக்கத்திற்காக அவர் அந்த இடத்தில் அந்த "தேவையற்ற கருத்தை" பதிய வேண்டும் என்ற கருத்திலும்.அவர்  பிரதான கருத்தை தேவை இல்லை என்பது போல, அவருடைய  கருத்தையும் தேவை இல்லை என்று எடுக்கலாம்தானே என்கிற கருத்திலும். அத்துடன், இப்படி நீங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுவது போல மற்றவர்களும் தங்கள் கருத்தை சொல்ல அனுமதியுங்கள் என்று.

 

அதற்க்கு அவர் பதில் போட்டார், ? அண்ணா, என்கிற ஏளனத் தொனியுடன், தனது கருத்தை நான் பிழையாக விளங்கி கொண்டு விட்டேன் என்றும், தான் எழுதியாதைத்தான் தேவையற்றது என்று எழுதியதாகவும் சொன்னார். ஆனால் அதே பந்தியில், தொடர்ந்து எழுதி இருந்தார், ""பொதுவில் இப்படியான பதிவுகள் தேவையற்றது""" என்று.

அதற்க்கு நான் பதில் போட்டிருந்தேன், இதில் எது தேவையற்றது? அதற்க்கு அவர் மிரட்டும் தொனியில் பதில் போட்டிருந்தார். நான் அதை கோட் பண்ணி நன்றி உங்களை இனம் கட்டியதிற்ற்கு என்று போட்டிருந்தேன்.

 

சில நேரத்திக்கு பிற்பாடு, அவர் தனது முதலாவது கருத்தை - முதல் முதலில் பதிந்த கருத்தை மாற்றினார்,-குளப்பத்திர்க்குறிய பகுதியை, ஒரு புதிய சொல் சேர்த்து புதிய நிறத்தால் மாற்றினார்.

பின் எனது முதலாவது பதில் கருத்தும், அவரது பதில் கருத்துக்களும் நீக்கபடிருந்தன. ஏன் நீக்கபட்டது என்று கேட்டதிற்க்கு, ஒருவர் மாறி ஒரு மற்றையவரின் கருத்து தேவையற்றது என்று எழுதியதால் என்று விளக்கம் சொல்லபட்டது.

 

நடுநிலை என்று  யோசித்தால், முதலில் அவர் எழுதிய கருத்தை நீக்க வேண்டும், அதை பற்றி கேள்வி கேட்பதால் எனது கருத்தில் இருந்து நீக்க தொடங்க தேவை இல்லை. யாராவது ஒருவர் பிரதான கருத்து தேவையற்றது என்று கருதி அதை பற்றி எழுதுவது தேவையற்றது என்று எழுதினால், அப்படி எழுதுவதையும் தேவையற்றது என்று சொல்லாம்- அதைத்தான் நிர்வாகம் சரி என்று எடுக்குமாயின். ஏனெனில் அங்கே ஒரு விவாதத்திற்க்குரிய சந்தற்பத்தையே அது தடை செய்வதால் அல்லது அந்த திரியையே தடை செய்து விடலாம்.

 

நிறைவாக;

ஒருவர் பிரதான கருதிற்கு எதிர் கருத்து வைக்கிறார் என்பதற்காக, விவாதம் என்று வந்த பிற்பாடு என்ன விதத்தில் பிரதான கருத்தை மாற்றலாம் என்று எனக்கு தெரியவில்லை. அதேபோல், "இன்னுமொருவருடைய திரியில் இப்படி எழுதுவது தேவையற்றது" என்று ஒருவர் சொன்னால்; அதை இன்னுமொருவர் "அதை ஏன்/எப்படி  தேவைஇல்லை என்று சொல்ல முடியும்" என்று  கேட்டமுடியாது ஏன்  என்பது எனக்கு விளங்கவில்லை. 

இதுதான் அந்த திரியில் எனக்கு ஏற்பட்ட அனுபவம்.

Link to comment
Share on other sites

முட்டையிலை மயிர் புடுங்கிறது எண்டு கேள்விப்பட்டு இருக்கிறன் இப்பதான் பாக்கிறன்.    

 

கூட போராடின ஒருவனின் உணர்வுக்கே மதிப்பு கொடுக்க தெரியாதவர்கள் மக்களுக்காக போராடினார்கள் எண்டால் நம்பவா முடிகிறது ?   பிரபாகரன் தலைவராக இல்லாமல் விட்டிருதால் அப்பவே அடிபட்டு செத்திருப்பாங்கள்.  இப்ப இங்கை வெளிநாட்டிலை அடிபடுகிற மாதிரி. 

Link to comment
Share on other sites

இங்கு என்னுடன் யாரும் சண்டைக்கு வர வேண்டாம். இங்கு தலைவர் வந்ததாக குறிப்பிடப்பட்ட பகிர்வின் தொடராய் காளமேகம் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக கூறும் உண்மைகளை மறுத்து காளமேகம் ஏதோ வேண்டுமென்றே ஒருவரை அவமதிப்பது போல எழுதப்படும் கருத்துக்கள் பற்றிய  விவாதத்திற்கே பதில் எழுதுகிறேன்.

 

இன்னும் உயிரோடு வாழும்  புலிப்பாய்ச்சல் முன்னேறிப்பாய்தல் சமரில் பங்கெடுத்த போராளிகள்  ,தளபதிகளிடம் இவ்விடயம் பற்றி கேட்ட போது அவர்கள் தந்த உண்மைகளையே இங்கு குறிப்பிடுகிறேன்.

 

மூஸ் வந்தவர்களுக்கு  தேனீர் குடுத்தாயோ எனவும் சிலர் என்மீது சந்தேகப்படலாம் அல்லது மூஸ் போன வீடுகளில் ஒன்றிலிருந்தது எழுதப்படுவதாகக்கூட கருதலாம். சில நடைமுறை உண்மைகளை ஆயிரக்கணக்கில் கருத்துகளை வாசிக்கும் வாசகர்கள் தவறான புரிதல்களை அடையக்கூடாது என்பதற்காகவே எழுதுகிறேன்.

 

புலிப்பாச்சல் நடவடிக்கையை அண்டிய காலப்பகுதியில் தலைவரால் உருவாக்கப்பட்டது  கூட்டுப்படைத்தலைமையகம் (JOC) இப்பொறுப்பை தளபதி சொர்ணம் அவர்களே பொறுப்பேற்றிருந்தார். இந்த நேரம்தான் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கை தொடங்கியது. இச்சமரில் தளபதிகளான பாணு, பால்ராஜ், சொர்ணம்,  ராம் , சாள்ஸ் போன்ற  பல தளபதிகள் பங்கெடுத்திருந்தார்கள்.

 

அப்போது அரசியல் பிரிவின் துணைப்பொறுப்பாளராக தளபதி கரிகாலன் அவர்கள் யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பில் இருந்தார். தளபதி கரிகாலன் ஒரு சிறந்த சண்டைக்களவீரனும் கூட. சண்டை நடந்து கொண்டிருந்த தயா இங்கு குறிப்பிட்ட சம்பவத்தின் தொடரில் கரிகாலன் அவர்களும் பஜீரோவில் சென்று பார்வையிடச் சென்றிருந்தார்.

 

இந்நேரம் எற்கனவே இராணுவம் உள்புகுந்திருந்தது. இதனை அறியாது இராணுவம் உள்புகுந்த இடத்திற்குள் கரிகாலன் அவர்களின் பஜீரோ பிரவேசித்த போது இராணுவத்தினர் RCLஎன்ற ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியிருந்தது. பஜீரோவினுள் பல ஆயுதங்களும் இருந்தது. இத்தாக்குதல் நடந்த போது கரிகாலன் அவர்களும் அவரது உதவியாளரும் பிஸ்ரலோடு தப்பித்தனர்.

 

அப்போது போராளிகளாலும் பொறுப்பாளர்களாலும் கரிகாலன் அவர்களின் பஜீரோ மீதான தாக்குதல் பற்றி நகைச்சுவையாக பரபரப்பாக பேசப்பட காலம் அது. இது தொடர்பாக இச்சமரில் சம்பவங்களோடு நிகழ்ந்த நகைச்சுவையான கருத்தாடல்களை இவ்விடயத்தை சொன்ன போராளியின் கருத்தை தவிர்க்கிறேன். அது கூட மேலும் விவாதங்களை இங்கு நீட்ட வழியமைத்துவிடும்.

 

இச்சமர் நடைபெற்ற நேரம் தலைவர் அவர்கள் பொற்பதி வீதியில் பாதுகாப்பாக இருந்தார் என்பதனையும் அவரது பாதுகாப்பணியில் நின்றவரின் கதையிலிருந்து அறிய முடிகிறது.தலைவரின் பாதுகாப்பில் எல்லாக்காலங்களிலும் அவரது பாதுகாப்பு அணி ஒரேமாதிரியாகவே இருந்தது.

இங்கு தலைவர்  வந்ததென குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் கரிகாலன் அவர்கள் என்றே இச்சமரோடு சம்பந்தப்பட்ட இன்னும் சாகாமல் உயிரோடு புலம்பெயர் நாடுகளில் வாழும் தளபதிகள் போராளிகள் சொன்ன தரவுகளிலிருந்து கிடைத்த உண்மை இதுதான். உருவத்தால் தூரப்பார்வையில் தலைவரும் கரிகாலன் அண்ணாவும் ஒற்றுமையாக இருந்திருக்கலாம்.

 

இச்சமரில் தளபதி ராமண்ணாவுடன் நின்ற கேணல் சாள்ஸ் அண்ணா (புலனாய்வுப்பிரிவு)  காயமுற்றிருந்தார். சாள்ஸ் அண்ணாவுடன் இருந்த ஒரு போராளி இச்சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.

களநிர்வாகம்  தலைவர் பற்றிய தயாவின் தொடரை தனியே ஒரு திரியில் கருத்தாட பிரித்துவிட்டால் நல்லதென்பது எனத கருத்து. வாணன் எழுதத்தொடங்கியிருக்கும் நல்லதொரு பதிவினும் இவ்விடயம் தொடர்பான விவாதம் வாணனின் எழுத்துக்களை புறம்தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. இப்படி நான் சொல்வது தவறெனில் யாரும் சண்டைக்கு வர வேண்டாம். இது எனது கருத்து மட்டுமே.

 

ஒருவர் தனது அனுபவப்பகிர்வுகளை தனித்திரியில் எழுதுவதே விவாதங்களை சரியான பாதையில் இட்டுச் செல்லும். இன்னொருவரின் அனுபவப் பகிர்வுக்குள் இன்னொருவர் தனது பகிர்வை சேர்ப்பது ஏற்கனவே எழுதிக் கொண்டிருக்கிற வாணனின் பகிர்வுகளின் நல்லெண்ணத்தை நம்பகத்தை சிதைப்பதாகவே அமையும்.

இதில் நிர்வாகமும் குறித்த பகிர்வை எழுதியவர்களுமே முடிவெடுக்க வேண்டும். இங்கு எல்லோரையும் போல எனக்குள்ள கருத்தையே எழுதியுள்ளேன். யாரையும் எனது கருத்து புண்படுத்தினால் அல்லது சங்கடப்படுத்தினால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

 

முன்னேறிப்பாய்தல் என்றதை புலிப்பாய்ச்சல் என பிழையாக எழுதிவிட்டேன். புலிப்பாய்ச்சல் இல்லை முன்னேறிப்பாய்தல் என்று மாற்றியுள்ளேன்.

Link to comment
Share on other sites

நல்ல நகைச்சுவை உணர்வு சாந்தி.  புலிப்பாய்ச்சல் சண்டைநடப்பதோ  இல்லை இராணுவம் ஊருக்குள் நகர்ந்து ஒருவாரம் போனதின் விடயம் தெரியாமல்  யாழ்மாவட்ட தளபதி கரிகாலன்  பஜிரோவில் சுற்றிப்பார்க்க போனாரா.?   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.