• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தயா

புலிப்பாய்ச்சல் அனுபவம்

Recommended Posts

காளமேகம் இப்போதும் சம்பந்தமே இல்லாது திசை மாற்றுவதும்  தாங்களே.  

 

nkwd.png

இது விடுதலை புலிகள் பத்திரிகையில் வந்த படம் இது.

இரண்டு பகுதிகளாக சண்டை நடந்து இருப்பின் ஒண்றுக்கு பால்ராஜ் இன்னும் ஒண்றுக்கு சொர்ணம் தலைமை தாகினார். கரும்புலிகள் வேவுப்பிரிவினருடன் சேர்ந்து சண்டைக்கு போனதாக காளமேகம் சொன்னவைகளுக்கு ஆதாரங்கள் ஏதும் கிடையாது. அவை புனையப்பட்டவைகளாக இருக்கலாம்.

ஆக பால்ராஜ் சொர்ணம் இரண்டு பேரும் தாக்குதலில் நேரடியாக பங்காற்றினால் தலைமை ஒருங்கிணைப்பு கட்டளையை வளங்கியது யார். Alpha Hotel சங்கேத பெயரில் அந்த சமரில் தொலைத்தொடர்பு ஊடாக சம்பந்த பட்ட தளபதி யார்.?

இவைக்கான பதில்களை காளமேகம் இன்னும் தரவில்லை.

Share this post


Link to post
Share on other sites

மிக் 27 அடிவாங்கி வந்தவன் எல்லாம் சிவனே எண்டு இருக்க புக்காரக்கரன் கிளித்தட்டு மறிப்பது சிரிப்பை கொண்டுவரும் வரலாறை திரித்து எழுதி என்ன இலாபம் யோசியுங்கோ சீமான் மாதிரி அடிச்சு விடாமல் இப்படி எழுத தொடங்கினா வன்னியில் இருத்து வந்தவன் பக்கம் பக்கமா கதை எழுதலாம் .லைக்கும் ஆதரவும் நீளும் ஆனால் உண்மை செத்து கிடக்கும் .

புக்காரா அடி வாங்கினவன் திரும்ப குடுத்த அடிதான் சிங்களவனை MIG 27 வாங்க திணிச்சது. 2000ம் ஆண்டுக்கு பிறகு அவன் மிக் 27 வாங்கும் வரைக்கும் போராட்டம் விற்பனை தான் செய்யப்பட்டது.

அந்த போராட்டத்தை முள்ளிவாய்க்காலிலை விட்டு போட்டு வந்தது கூட ஒண்டும் வீரம் இல்லை.

அதோடை நீங்கள் சொல்லுறது மட்டுமே வரலாறு ஆகாது தம்பி.

Share this post


Link to post
Share on other sites

முன்னாள் போராளிகள் எண்டது ஒண்டும் பெருமை கிடையாது, அது அவமானம். வெளிநாடுகளிலை வந்தும் துணிவாய் நான் போராடினான் எண்டு சொல்லி வாலை ஆட்டுறீயள் எண்டால் சந்தேகம் வராமல் ?

அதே சமயங்களில் புலிகளின் அமைப்போடை சம்பந்தப்பட்டவர்களை. பின் தொடர்கிறார்கள். கைது செய்து விசாரிக்கிறார்கள் பிடிச்சு உள்ளை போடுகிறது ஐரோப்பிய அரசுகள். சிந்திச்சால் எங்கையோ இடிக்குது.

நான் சொல்ல வந்ததை சொல்லீட்டன். இதோடை முடிச்சிடலாம். வணக்கம் .

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

Share this post


Link to post
Share on other sites

புக்காரா அடி வாங்கினவன் திரும்ப குடுத்த அடிதான் சிங்களவனை MIG 27 வாங்க திணிச்சது. 2000ம் ஆண்டுக்கு பிறகு அவன் மிக் 27 வாங்கும் வரைக்கும் போராட்டம் விற்பனை தான் செய்யப்பட்டது.

அந்த போராட்டத்தை முள்ளிவாய்க்காலிலை விட்டு போட்டு வந்தது கூட ஒண்டும் வீரம் இல்லை.

அதோடை நீங்கள் சொல்லுறது மட்டுமே வரலாறு ஆகாது தம்பி.

 

வரலாறு எவர் இங்கு பேசுகிறார் சொல்லுங்கள் நான் நான் மட்டும் என்பதே இங்கு நடக்கு நான் சொல்வதை கேளு நான் சொல்வது சரி அது அப்படிதான் நடந்தது இப்படி நடக்க வில்லை என்றுதான் கருத்து போகுது தவிர எவரும் இங்க சண்டையின் உண்மை வெளியில் வரவில்லை பல போராளிகளை இழந்த ஒரு வழிமறிப்பு சமரை ஒருவர் நான் செய்தேன் என்று வாதம் நடக்கு அதுக்கு தலைவர் ஒரு கதாபாத்திரம் அவளவுதான் நியாயம் தேடுறம் தியாகங்களை மறந்து வாதிட எதுகும் இல்லை இங்கு .

 

அல்பா ஹோட்டல்  இன்னைக்குதான் இப்படி ஒரு சங்கேத மொழி புலிகளில் இருந்தது எனக்கு தெரியுது பல அரிய தகவல் வருது தொடருங்கோ பொழுது போகுட்டும்  இன்னும் 24 ஆங்கில எழுத்து இருக்கு அதுக்கும் சங்கேத மொழி இருக்கு அடிச்சு விடுங்கோ யாரு கேட்கிறது .

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்

 

இந்த திரியில் எழுதுவதில்லை  என  ஒதுங்கியிருந்தாலும்

தயா  பற்றி  எனக்குத்தெரியும் 

தயா பற்றி  யாழ்  களம் அறியும் ஆகையால்....

 

அவர் பற்றிய  அவதூறுகளை  நிறுத்தமாறு யாழ்கள  நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இதன்  நான்  எவரையும் குறை  சொல்லவோ

அல்லது குறைத்து மதிப்பிடவோ இல்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

 

எமக்காக தன்னையே  தந்த ஒரு போராளியை  இதற்கு மேலும் 

அவமதிக்க

அவமானப்படுத்த

இவர்களுக்காகவா என்னை  இழந்தேன் என அவர் மனம்நோகச்செய்வதையாவது நிறுத்துவோம்

எமக்காக  மடிந்த மாவீரர்களை நோகடிப்பதைவிட

தயா போன்றோரை  நோகடிப்பது

உயிரோடு கொல்வதற்கு சமன் ஐயாமார்களே.

நன்றி

 

 

 

Share this post


Link to post
Share on other sites

வரலாறு எவர் இங்கு பேசுகிறார் சொல்லுங்கள் நான் நான் மட்டும் என்பதே இங்கு நடக்கு நான் சொல்வதை கேளு நான் சொல்வது சரி அது அப்படிதான் நடந்தது இப்படி நடக்க வில்லை என்றுதான் கருத்து போகுது தவிர எவரும் இங்க சண்டையின் உண்மை வெளியில் வரவில்லை பல போராளிகளை இழந்த ஒரு வழிமறிப்பு சமரை ஒருவர் நான் செய்தேன் என்று வாதம் நடக்கு அதுக்கு தலைவர் ஒரு கதாபாத்திரம் அவளவுதான் நியாயம் தேடுறம் தியாகங்களை மறந்து வாதிட எதுகும் இல்லை இங்கு.

 

அல்பா ஹோட்டல்  இன்னைக்குதான் இப்படி ஒரு சங்கேத மொழி புலிகளில் இருந்தது எனக்கு தெரியுது பல அரிய தகவல் வருது தொடருங்கோ பொழுது போகுட்டும்  இன்னும் 24 ஆங்கில எழுத்து இருக்கு அதுக்கும் சங்கேத மொழி இருக்கு அடிச்சு விடுங்கோ யாரு கேட்கிறது .

உந்த முட்டையிலை மயிர் புடுங்கிறதை தான் நானும் சொல்கிறேன்.

நான் சண்டையிலை நிண்ட இடத்துக்கு எங்களை காப்பத்த தலைவர் வந்தார் எண்டு ஒருத்தர் சொன்னால். போராளிகள் மீதான தலைவரின் பாசமே அங்கே படிக்கும் போது புரிந்தது.

ஆனால் நீங்களும் கொஞ்ச முன்னாள் போராளிகள் எண்று சொல்லிக்கொள்ளும் கூட்டம் என்ன செய்கிறீர்கள் ? அதிலை மயிர் புடுங்குகிறீர்கள். இதை தான் போராட்டமும் தலைமையும் உங்களுக்கு சொல்லித்தந்ததா ? ஒரு போராளி எண்டவன் எப்படி இருக்க வேண்டும் என்பதுக்கு உதாரணமாக நாங்கள் பல போராளிகளை கண்டிருக்கிறோம். அப்போது எல்லாம் போராட்டம் மக்களின் மத்தியில் செல்வாக்கோடு இருந்தது.

இப்போ உங்களை போண்றவர்கள் இந்த போராட்டம் ஏன் தோற்று போனது எண்டதற்கு காரணத்தை புரியவைக்கிறீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆக பால்ராஜ் சொர்ணம் இரண்டு பேரும் தாக்குதலில் நேரடியாக பங்காற்றினால் தலைமை ஒருங்கிணைப்பு கட்டளையை வளங்கியது யார். Alpha Hotel சங்கேத பெயரில் அந்த சமரில் தொலைத்தொடர்பு ஊடாக சம்பந்த பட்ட தளபதி யார்.?

இவைக்கான பதில்களை காளமேகம் இன்னும் தரவில்லை.

 

தயா ”வோக்கியில கேட்ட தகவல்களை வைச்சுக்கொண்டு சம்பந்தமேயில்லாமல் கேள்வி கேக்கிற மாதிரி” நீங்களும் அதைத்தான் செய்யிறீங்கள். 

 

புலிப்பாய்ச்சல் சண்டைபற்றிய அதிகாரபூர்வமான, தேவையான தகவல் வேணுமென்றால் நெடுக்ஸ் இணைத்த இந்த லிங்கில் உள்ளது http://www.eelamhomeland.com/vp_paper/V_P_59.pdf

 

ஐந்தாவது பக்கத்தில், அதாவது நீங்கள் வெட்டி ஒட்டிய படத்துக்கு கீழே உள்ளது. 

 

ஆனால், கீழே இருப்பதுதான் தயா சொன்ன சம்பவம். இந்த சம்பவம்தான் விவாதத்திற்கு வந்தது. 

 

 

 

 சீரணிப்பாலத்துக்கு ஒரு பக்கம் வட்டுக்கோட்டை பக்கமாக  ஒரு நாள் முழு நிலவு எண்டும் பார்க்காமல்  மறு நாள் சண்டைக்காய் சொர்ணம் அண்ணை எங்களை ( விசேட வேவு பிரிவில் இருந்த )வேவுக்காக  விட்டிருந்தார்...    அடுத்த அணியை  சண்டிலிப்பாய் பக்கம்  விட்டிருந்தார்...   நாங்கள் இருந்த சாக்கு எல்லாம் வெட்டி சுத்தி கொண்டு  இரவெல்லாம் தவண்டு திரிஞ்சு இரண்டு சாதகமான பாதையை கண்டிருந்தோம்... 

 

அடுத்தநாள்  கூலாக வந்த  சொர்ணம் அண்ணை உங்கட பாதை வேண்டாம் நாங்கள் மற்ற அணி பாத்த பக்கம் தான் இறங்க போறம் எண்டு சொல்லி போட்டு போட்டார்... 

 

நாங்கள் ஒரு ஐஞ்சு பேர் பிறகு தீவகம் அராலிக்கை வேவுக்காக பொன்னாலையில நிண்ட இன்னும் 5 பேரையும் சேர்ந்து 10  பேரா ஒரு இடத்திலை விட்டிச்சினம்...    

 

சண்டை காலை 5 மணிக்கு ஆரம்பிச்சுது ஒரு 7 மணி அளவிலை எங்களை கூப்பிட்டு  சண்டை பிடிப்பவர்களுக்கு  பக்கவாட்டாக எந்த தாக்குதலும் வராமல் இருக்க  ஒரு கட்டவுட் போட சொன்னதால் மேலை நான் குறிப்பிட்ட இடத்துக்கு போய் சேர்ந்தோம்...  ஏற்கனவே இருந்த இராணூவ நிலை இடத்திலை எதிர்பாராமல் ஒரு சின்ன சண்டை எங்களை முன்னாலை எதிர்ப்பார்த்து இருந்து இருபான் நாங்கள் பக்கவாட்டாக போய் ஏறி இருந்தோம்... !  

 

இரவு முதல் சும்மா இருந்ததால் எங்களின் வோக்கிகளின் நடந்த சண்டையின் நெர் முக வர்ணனை கேட்ப்பதுக்காக அணைக்காமல் இருந்ததாலும் , கேட்டு கொண்டு இருந்ததால்  மின் கலன் முடிஞ்சு போச்சு...   பிரதான சண்டையிலை நாங்கள் இல்லாததாலை எங்களுக்கு மேலதிகமாக தரவும் இல்லை... 

 

அதுக்கும் மேலை நான் முன்னமே எழுதி இருந்தது தான் நடந்தது...   நாங்கள் இருந்த பகுதிக்கு தலைவர் வந்தார் என்பது மட்டுமே நான் குறிப்பிட்டது...  பிரதான சண்டையில் எங்களின் பங்குகள் இருந்தமை பற்றி கூட சொல்ல வில்லை...  எனது கூற்றை  உறுதிப்படுத்த  விசேட வேவுப்பிரிவில் இருந்தவர்களை நீங்களே விசாரித்து கொள்ளலாம்...  மற்றும் படி தான் முன்னணிக்கு போனதை தலைவர் விளம்பர படுத்தும் அரசியல் வாதி கிடையாது...

 

மாட்டைப்பற்றி எழுதச்சொன்னால், மாட்டைக்கொண்டுபோய் மரத்தில கட்டிப்போட்டு மரத்தில உள்ள நாலாவது கிளையில இருக்கிற இலையில ஒரு எறும்பு இருக்கெண்டு எழுதினால். மாடு என்றால் என்ன என்பதற்கான விடை வராது. மாடு என்றால் என்னென்று தெரியாதவர் அதை வாசித்தால் எறும்பைத்தான் மாடு என்று நினைக்க வேண்டிவரும். 

Edited by காளமேகம்

Share this post


Link to post
Share on other sites

இங்கு ஈழத்தில் வாழ்த்த அனைவரும் போராளிகள் தான் ஆயுத பயிற்ச்சி எடுத்தவர்கள் தான் எல்லைப்படை துணைப்படை என அனைவரும் களம் புகுந்தவர்கள் எவரும் நான் செய்தேன் அவர் செய்தார் என மற்றவரை நீ என்ன செய்தாய் எண்டு கேள்வி கேட்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை நான் செய்தது  எனது மண்ணுக்கு எனது மக்களுக்கு எனது வாழ்விற்கு இதில் தனியா பெருமை தேட வேண்டிய அவசியம் இல்லை தவறுகள் திருத்த படவேண்டியது நியாய படுத்த கூடாது என்பது புலிகளின் ஒரு தத்துவம் பெரியவர்களே 

லம்போ என்னும் 25வருட போராளி தற்கொலை செய்தார் அண்மையில் யாரு அவன் எப்படியான போராளி தலைவருடன் எவளவு காலம் நின்றன் என்பது புலிகள் இல்லது போனதால் அவனின் வரலாறு அப்படியே போயிட்டு ஆனால் நாங்கள் இங்க பட்டங்களும் பதவிகளும் இன்னும் கொடுத்த வண்ணம் இருக்குறம் அதுதான் கால கொடுமை .

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இங்கே எழுத வேண்டாம் என்று தான் இருந்தேன். எம் இனம்  இப்படி கேவலமாக வந்துவிட்டது என்பதை நினைக்க எழுதாமல் இருக்க முடியவில்லை. 

 

இந்த திரி பற்றி ஆயுதப்போரட்டத்திலோ அல்லது அது நடந்த இடங்களிற்கோ எந்த விதத்திலும் சம்மந்தப்படாத ஒருவரின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எழுதுகின்றேன்.தயவுசெய்து யாரையும் மனம் நோகச்செய்வதற்காக நான் எழுதவில்லை. தவறிருந்தால் மன்னிக்கவும்.

 

முதலில் தயவுசெய்து "பிரபாகரன்" என்று எழுதுவதை நிறுத்துங்கள். எமக்காக தனது வாழ்நளை அற்பணித்த ஒருவரிற்கு நாம் செய்யும் மரியாதையா இது? ஒரு வயதில் மூத்தவரை பெயர் சொல்லி அழைப்பதையே கேவலமாக நினைக்கும் கலாச்சாரத்தில் பிறந்த நாம் இப்படி செய்வது சரியா? உங்களிற்கு அவரின் கொள்கைகளை பிடிக்காமல் இருக்கலாம். அவரின் வயதிற்கென்றாலும் மரியாதை கொடுங்கள். "தலைவர்" என்றால் அது தமிழினத்தில் எப்பொழுதும் ஒரேயெருவர் தான். வேறு சில இயக்கங்களை சேர்ந்தவர்களுடன் நான் பேசியபோது கூட அவர்கள் "தம்பி" என்ற சொல்லை தான் பாவித்தார்கள். இது எல்லோருக்கும் பொருந்தாது. ஆனால் அவர்களிற்கு இருக்கும் குறைந்தபட்ச நல்லெண்ணம் கூட இங்கே தமிழ் தேசியம் பேசும் நண்பர்களிற்கு இல்லாமல் போனது கவலையளிக்கின்றது. 

 

இங்கே விவாதிக்கப்படும் சண்டைகளில் யாழ்களத்தில் பலர் பங்குபற்றியிருக்கிறீர்கள் என்பதை அறியமுடிகிறது. ஒரு சண்டை என்பது ஆயிரக்கணக்கான போராளிகள் பங்குபற்றியது. இந்த ஆயிரம் பேரும் வெவ்வேறு இடங்களில் நின்று சண்டை பிடித்திருப்பார்கள். ஒவ்வொருவரிற்கும் ஒரு அனுபவம் இருந்திருக்கும். ஒருவர் கண்டதை இன்னொருவர் கண்டிருக்கமுடியாது. எனவே ஒவ்வொருவரும் அடுத்தவர் சொல்வது பிழை என்பதற்கு ரெம்ப நேரம் ஆகாது. 

 

இங்கே யார் சொல்வது சரியென்ற விவாதத்தை தவிர்த்துவிட்டு பார்ப்போம்.  

 

இதில் அனுபவங்களை பகிர்கின்றவர்களை ஆதராங்கள் காட்டச்சொல்வது கடலிற்குள் ஆணியை தேடுவது போன்றது. முடியாத விடயம் அல்ல. ஆனால் நடைமுறை சாத்தியமற்றது. 

 

இங்கே அனுபவங்களை பகிர்ந்து கொள்பவர்களை ஒருவர் மட்டுமே கேள்வி கேட்டமுடியும். அது அவர்களின் மனசாட்சி மட்டுமே.  :icon_idea:

 

"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்...." என்பது இங்கேயும் பொருந்தும். அனுபவங்களை பகிர்ந்துகொள்பவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் எது உண்மை பொய் என்று. எனவே அவர்களாய் திருந்தாவிட்டால் நாம் எதுவும் செய்யமுடியாது (இது இரு தரப்பினர்க்கும் பொருந்தும்).

 

இப்படியான திரியை தொடங்குபவர்களும் சற்று சிந்தித்துப்பாருங்கள். இப்படியான கேள்விகள் எப்படியும் வரும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 2009ற்கு பின்னர் இதுவே யதார்த்தம். 

 

போராளிகள் மீது ஒரு உன்னதமான மரியாதை உள்ளது. அதை சிதைக்கும் வேலையை தான் இங்கே பலரும் செய்கின்றீர்கள். ஒரு காலத்தில் மக்களிற்குள் ஒற்றுமையில்லை என்று குற்றம் சாட்டினோம். இப்பொழுது அது போராளிகளிற்குள்ளும் வந்துவிட்டது என்பது வேதனையான விடயம். 

 

"புலி பசி பொறுக்கும்

துன்பங்கள் தாங்கும்

தனித்து நிற்கும்

எத்தனை காலமானாலும் பதுங்கியே இருக்கும்

காலம் வரும் போது ஒரே அடியில் வீழ்த்தும்"

 

என்றாவது ஒரு நாள் அந்த காலம் வரும். அது வரை காத்திருங்கள் தலைவர் வளர்த்த போராளிகளே.

 

இதில் விவாதிப்பதில் பலனில்லை எனவே போராளிகளின் மேல் இருக்கும்  மதிப்பை கொஞ்சம் என்றாலும் காப்பாற்றுவோம் என ஒதுங்கி நிற்கும் போராளிகளிற்கு நன்றி. 

 

மைன்ட் வாய்ஸ்: ஒரு பத்து பேர் சேர்தாலே ஒற்றுமையா இருக்க முடியேலையே. தலைவர் எப்படி தான் இத்தனை ஆயிரம் பேரை சமாளிச்சாரோ. தலைவணங்குகிறேன் தலைவா! :wub: 

Edited by செங்கொடி
  • Like 5

Share this post


Link to post
Share on other sites

தலைவரின் பாசறைக்குள்தான் புலி.. வெளியே வந்தவிட்டால்..??

அவர்களும் சாதாரண மனிதர்தான்..!

Share this post


Link to post
Share on other sites

புலி நக்கினால் கூட  சாகிற ஆக்கள்  கூட  புலி இல்லை என்றவுடன் புலி என்று கத்தினால்  வாற  பிரச்சனை  இது

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்

 

இந்த திரியில் எழுதுவதில்லை  என  ஒதுங்கியிருந்தாலும்

தயா  பற்றி  எனக்குத்தெரியும் 

தயா பற்றி  யாழ்  களம் அறியும் ஆகையால்....

 

அவர் பற்றிய  அவதூறுகளை  நிறுத்தமாறு யாழ்கள  நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இதன்  நான்  எவரையும் குறை  சொல்லவோ

அல்லது குறைத்து மதிப்பிடவோ இல்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

 

எமக்காக தன்னையே  தந்த ஒரு போராளியை  இதற்கு மேலும் 

அவமதிக்க

அவமானப்படுத்த

இவர்களுக்காகவா என்னை  இழந்தேன் என அவர் மனம்நோகச்செய்வதையாவது நிறுத்துவோம்

எமக்காக  மடிந்த மாவீரர்களை நோகடிப்பதைவிட

தயா போன்றோரை  நோகடிப்பது

உயிரோடு கொல்வதற்கு சமன் ஐயாமார்களே.

நன்றி

 

விசுகு, குறிப்பிட்ட மாதிரி... இந்தத் தலைப்பு ஆரோக்கிய விவாதமாக இருக்கப் போவதில்லை.

சிலர்... பல்லைத் தோண்டி, மணந்து பார்க்கத்தான்... ஆசைப் படுகின்றார்கள் என்று தெரிகின்றது.

அந்த மணத்தை... அவர்களின், வீட்டிற்குள் வைத்துக் கொள்ளட்டும்.

இனியும்... இதில், நிர்வாகம் வேடிக்கை... பார்த்துக் கொண்டிருக்காமல், திரியை பூட்டி விடுவதே... யாழ்களத்திற்கு அழகு.

Share this post


Link to post
Share on other sites

யாழ் கள நிர்வாகத்துக்கு எனது அன்பான வேண்டுகோள் இவ்விடையத்தை மேலும் நீட்டிக்கொண்டுபோக அனுமதிக்கவேண்டாம் இவ்விடுகையை முற்றாக எடுத்துவிடுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

போராட்டம் சம்மந்தமாக ஒரு விடயத்தை சொல்பவரும் முன்னாள் போராளி அதை மறுப்பவரும் முன்னாள் போராளி. இது ஒரு போட்டிநிலையாக மாறுகின்றது. அன்றய காலச் சூழலில் தாயகத்தில் இருந்து அறிந்த வியடங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு முன்னாள் போராளி சொல்வது சாத்தியமானது என்ற கருத்தை முன்வைத்தேன். அக் கருத்துக்கு ஒரு மதிப்பையும் கொடுக்கவேண்டும் காரணம் அவர் களத்தில் இருந்திருக்கின்றார். புலிகள் தலைவர் சண்டை நடக்கும் ஒரு இடத்திற்கு வந்தார் என்று அச் சண்டையில் பங்குபற்றிய ஒருவர் சொல்கின்றார் அவ்வளவுதான் இது ஒரு பெரியவிசயமில்லை. அதை மறுதலிப்பவர்களும் அதற்கான கட்டமைப்பு நிர்வாக அலகுகள் அது இது என்று முன்வைப்பவர்களும் அதனால் என்னத்தை சாதிக்கமுடியும்? தலைவர் அப்படி ஒரு இடத்துக்கு வந்தார் என்றால் அதில் என்ன கெட்டது இருக்கின்றது? முன்னாள் புலிகளே புலிகள் வரலாற்றில் நடந்த சம்பவங்களை நம்பமுடியாதபடி செய்கின்றார்கள். எந்தவிதத்திலும் மக்கள் விடுதலைக்குப் பயன்படாத இந்த திரி மற்றும் இப்படியான திரிகள் முற்றாக நீக்கப்படுதலே ஆரோக்கியமானது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

எந்தவிதத்திலும் மக்கள் விடுதலைக்குப் பயன்படாத இந்த திரி மற்றும் இப்படியான திரிகள் முற்றாக நீக்கப்படுதலே ஆரோக்கியமானது.

 

இதைத்தான் ஆரம்பத்திலேயே (சுண்டலால்)சொல்லப்பட்டது.  யாரும் செவி மடுக்கவில்லையே..! எவ்வளவு காலம் தான் காயங்களையே சுரண்டி மேலும் மேலும் புண்ணாக்கிக் கொண்டிருப்பீர்கள்?

 

Share this post


Link to post
Share on other sites

அதை மறுதலிப்பவர்களும் அதற்கான கட்டமைப்பு நிர்வாக அலகுகள் அது இது என்று முன்வைப்பவர்களும் அதனால் என்னத்தை சாதிக்கமுடியும்? தலைவர் அப்படி ஒரு இடத்துக்கு வந்தார் என்றால் அதில் என்ன கெட்டது இருக்கின்றது?

 

முன்னாள் புலிகளே புலிகள் வரலாற்றில் நடந்த சம்பவங்களை நம்பமுடியாதபடி செய்கின்றார்கள்.

எந்தவிதத்திலும் மக்கள் விடுதலைக்குப் பயன்படாத இந்த திரி மற்றும் இப்படியான திரிகள் முற்றாக நீக்கப்படுதலே ஆரோக்கியமானது.

 

நன்றி  ஐயா

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this