ஆதித்ய இளம்பிறையன்

விழிச் சுற்றலில் வீழ்வது....

Recommended Posts

இப்பொழுதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்தேன். கதை புதிதொன்றுமில்லை இருந்தாலும் பார்க்க பிடித்திருந்தது. ஒரு காட்சியில் நாயகி புருவத்தை வளைத்து ஒரு பார்வையை படர விடுவாள்....

மப்படித்த மறுநாள் மண்டை குடைவதைப் போல சில படங்களின் காட்சிகளும் சிலமணி நேரங்களாவது சிந்தையைச் சுழலச் செய்யும்.அந்த தாக்கம் தான் இந்த உளறல் ...கள் போலவே காதல் நினைவுகளும் உளறலை உற்பத்தி செய்கிறது ....

ஊடலுக்கு கூடலுக்கும் கண்களே உரிப்பொருள். சில காவியத்திற்கும் ஓவியத்திற்கும் கண்களே கருப்பொருள். பிறப்பிற்கும் இறப்பிற்கும் அவையே முதற்பொருள்.

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......
மதர்க்கண், மழைக்கண், குவளைக்கண், கழுநீர்க்கண் ....

விழிகளில் இவ்வளவு விந்தை எப்படி முடிகிறதோ இந்தப் பெண்களால் !!??

இதழில் சுழியும், மோகன முறுவலும், கருவிழிகளில் கர்வமும், நுதலில் வளைவுகளையும் நொடிகளில் பிரசவிக்க இவர்களால் மட்டுமே முடியும்.

மனம் ஒரு மாயச் சக்கரம்... விழிச் சுற்றலில் வீழ்வது  விந்தையொன்றுமில்லை.....

விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

இளம்பிறையன் ஆர் யூ ஓகே?! :lol:

நினைவோடை  சிந்தும் நீர்த்திவலைகளின் ஈரம் நீடித்திருப்பதில்லை. காலச் சூரியனின் கதிரொளிகளில் கரைந்துவிடுகின்றன.

Share this post

Link to post
Share on other sites

விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

ஜயோ.. வேண்டாம் அண்ணா.. போதை தெழிந்ததும் மைய்பூசிய விழியின் பொய் பூசிய சுவடுகள் வெளிப்படுகையில் பெருங்குளிரில் காற்று உறைவதைப்போல் உறைந்துவிடும் இதயம் பொய் உறைந்த விழி அறைந்த நெஞ்சறையின் விசும்பலுடன்.. :D

அழகு தமிழ் அண்ணா... நடனமிடுகின்றாள் உங்கள் வரிகளில் எல்லாம்.. ரசிக்கவைக்கின்றன..

Share this post

Link to post
Share on other sites

மை பூசிய விழிகளைப்பார்த்து மெய் மறந்துவிட்டு பின்னால் குய்யோ முறையோ என்றால் எப்படி? :D

Share this post

Link to post
Share on other sites

புலம்பல்களின் வரிசையில் புதிய வரவு சுபேஸ் அண்ணாச்சி.. :lol:

அதுசரி அந்த இணைப்பைத் தந்தால் நாங்களும் பார்ப்பமெல்லோ ஆதித்த இளைம்பிறை அண்ணா.. :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

இந்த பிகருக்கா இந்த படத்தைப் பார்க்கலாம். நல்ல கியூட்டா இருக்கா. நல்ல எளிமையான இளம் பெண்ணிற்கே உரித்தான நளினத்துடன் துடிப்புடன் கூடிய நடிப்பு..! :):lol:

http://youtu.be/QXopq4R_uaY

Share this post

Link to post
Share on other sites

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......
 
இத்தனை விழிகளைப் பார்த்தவன் வாழ்க்கை
எப்படிக் கிழியாமல் இருக்கும் :D  :lol:

இணைப்புக்கு நன்றிகள், ஆதித்த இளம்பிறையன்!

அது சரி, எங்களுக்கும் இரண்டு விழிகள் இருக்கே! 

அவற்றை ஏன் கவிஞர்கள் சிலாகிப்பதில்லை? :o

கோட்டான் முழி, ஆந்தை முழி, என்று முழி என்று தானே சொல்கின்றார்கள்! :wub:

காரணம், பெண் கவிஞர்கள் குறைவு. இருப்பவர்களுக்கும் சுதந்திரம் இல்லை. உங்கடை மனிசி ஒரு கவிஞராக இருந்து அவ ஆண்களின் மயக்கும் கண்களைப் பற்றிக் கவிதை எழுதினால்....... தாங்கிக்கொள்வீர்களா?

------------- என்னதான் இருந்தாலும் பெண்கள் (முக்கியமாகக் கவிஞர்களின் மனைவிகள்) நல்ல அண்டர்ஸ்ராண்டிங் உள்ளவர்கள்தான்.

Share this post

Link to post
Share on other sites

இப்பொழுதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்தேன். கதை புதிதொன்றுமில்லை இருந்தாலும் பார்க்க பிடித்திருந்தது. ஒரு காட்சியில் நாயகி புருவத்தை வளைத்து ஒரு பார்வையை படர விடுவாள்....

மப்படித்த மறுநாள் மண்டை குடைவதைப் போல சில படங்களின் காட்சிகளும் சிலமணி நேரங்களாவது சிந்தையைச் சுழலச் செய்யும்.அந்த தாக்கம் தான் இந்த உளறல் ...கள் போலவே காதல் நினைவுகளும் உளறலை உற்பத்தி செய்கிறது ....

ஊடலுக்கு கூடலுக்கும் கண்களே உரிப்பொருள். சில காவியத்திற்கும் ஓவியத்திற்கும் கண்களே கருப்பொருள். பிறப்பிற்கும் இறப்பிற்கும் அவையே முதற்பொருள்.

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......

மதர்க்கண், மழைக்கண், குவளைக்கண், கழுநீர்க்கண் ....

விழிகளில் இவ்வளவு விந்தை எப்படி முடிகிறதோ இந்தப் பெண்களால் !!??

இதழில் சுழியும், மோகன முறுவலும், கருவிழிகளில் கர்வமும், நுதலில் வளைவுகளையும் நொடிகளில் பிரசவிக்க இவர்களால் மட்டுமே முடியும்.

மனம் ஒரு மாயச் சக்கரம்... விழிச் சுற்றலில் வீழ்வது  விந்தையொன்றுமில்லை.....

விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

பாரதியே அன்று பாடினான்..'சுற்றும் விழிச்சுடரரே கண்ணம்மா...',  

இப்போ ஒருவன் பாடினான் 'சுற்றும் விழிச் சுடரே... சுற்றும் விழிச் சுடரே... என் உலகம் உன்னைச்சுற்றுதே.. "

இப்பிடியும் ஒருவன் பாடினான்...

http://www.youtube.com/watch?v=QCqG3tXF4k4

Share this post

Link to post
Share on other sites

விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

அங்கு அவள் விழியோ நர்த்தனம் ஆடுகையில் இங்கு

இவன் விழியோ புத்தியிருந்தும் சித்தமிருந்தும்

இரண்டும்கெட்டு திண்டாடுகிறது, தன்னிலை

மறந்து தடுமாறுகிறது...

அன்று மலர்ந்த செந்தாமரையோவென பறந்துவந்த

வண்டு தடுமாறுகிறதாம்...

ஐந்தறிவுகொண்டதுக்கு இந்நிலை

ஆற்றிவுகொண்டோனுக்கும் அந்நிலை அது

பெண்ணைப் பருகியபோதை இயற்க்கையின்

பாதை அது "விழியில் விழுந்து (அதுதான் விதி)

இதயம் நுளைந்து உயிரில் கலந்த(து) உறவே(வு)"

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

ஜயோ.. வேண்டாம் அண்ணா.. போதை தெழிந்ததும் மைய்பூசிய விழியின் பொய் பூசிய சுவடுகள் வெளிப்படுகையில் பெருங்குளிரில் காற்று உறைவதைப்போல் உறைந்துவிடும் இதயம் பொய் உறைந்த விழி அறைந்த நெஞ்சறையின் விசும்பலுடன்.. :D

காதல் கனிந்து விட்டால் காவியம் பாட முடியுமா?  :)

அதுசரி அந்த இணைப்பைத் தந்தால் நாங்களும் பார்ப்பமெல்லோ ஆதித்த இளைம்பிறை அண்ணா.. :rolleyes:

இங்கே (uyirvani.com) இந்தப் படத்தின் டாரென்ட் இருக்கும்... தியேட்டர் பிரிண்ட் தான்...தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 
குறிப்பு: திருட்டு டிவிடி படம் பார்ப்பது உடலுக்கு கேடு... :)
 
இந்த பிகருக்கா இந்த படத்தைப் பார்க்கலாம். நல்ல கியூட்டா இருக்கா. நல்ல எளிமையான இளம் பெண்ணிற்கே உரித்தான நளினத்துடன் துடிப்புடன் கூடிய நடிப்பு..! :) :lol:

அதுவே....

வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......

இத்தனை விழிகளைப் பார்த்தவன் வாழ்க்கை

எப்படிக் கிழியாமல் இருக்கும் :D  :lol:

பருவக் காற்று பட்டாள்தானே பயிர்களுக்கு சுகந்தம்....

இணைப்புக்கு நன்றிகள், ஆதித்த இளம்பிறையன்!

அது சரி, எங்களுக்கும் இரண்டு விழிகள் இருக்கே! 

அவற்றை ஏன் கவிஞர்கள் சிலாகிப்பதில்லை? :o

கோட்டான் முழி, ஆந்தை முழி, என்று முழி என்று தானே சொல்கின்றார்கள்! :wub:

உவமையை கொடுப்போம் உருவ(க)த்தைப் பெறுவோம்... நாணத்தைக் காண நாம்தானே நாண் தொடுக்க வேண்டும்... 

அங்கு அவள் விழியோ நர்த்தனம் ஆடுகையில் இங்கு

இவன் விழியோ புத்தியிருந்தும் சித்தமிருந்தும்

இரண்டும்கெட்டு திண்டாடுகிறது, தன்னிலை

மறந்து தடுமாறுகிறது...

அன்று மலர்ந்த செந்தாமரையோவென பறந்துவந்த

வண்டு தடுமாறுகிறதாம்...

ஐந்தறிவுகொண்டதுக்கு இந்நிலை

ஆற்றிவுகொண்டோனுக்கும் அந்நிலை அது

பெண்ணைப் பருகியபோதை இயற்க்கையின்

பாதை அது "விழியில் விழுந்து (அதுதான் விதி)

இதயம் நுளைந்து உயிரில் கலந்த(து) உறவே(வு)"

நன்று வதா.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.