Jump to content

வேதனை .!


Recommended Posts

கானகம் வயல் வெளி நடந்து

காரிருளில் கந்தகம் சுமந்து

இளமை துறந்து கல்வி துறந்து

வாழ்வின் வசந்தங்கள் தூக்கி தூரபோட்டு

 

என் மண் என் மக்கள் என சுவாசித்து

என் தலைவனை உயிரிலும் மேலாய்

விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு

தோழர்களுடன் சேர்ந்து பயணித்து

மீண்டு வரும்போது

 

அவர் உடல்கள் தூக்கிவந்து தாங்கி வந்து

வலி சுமந்து இளைப்பாறும் போது

விடுதலை தீக்கு ஒரு சுள்ளி ஏனும்

முறித்து போடாதவர் எம்மை நிக்க வைத்து

கேள்வி கேட்கிறார் நீ யார் எதுக்கு சாகவில்லை

 

எப்படி வந்ததாய் தாங்கள் கெட்டித்தனமா

முன்னமே வந்ததால் போராளிகள்

நாங்கள் முட்டாள் தனமா கடைசியா

வந்ததால் துரோகிகளாய் அனுப்பபட்டவர்கள்

 

தேசியம் குழப்ப செயல்வீரரை பிடிக்க

உண்மையை அறிய நிலைகளை கண்காணிக்க

கேட்காமல் சும்மா கிடைக்கும் துரோகிபட்டம்

நாம் நாலுபேர் இப்ப முடிவு எடுக்கும் வட்டம்

எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் எதுக்கு இந்த கூப்பாடு

 

40ஆயிரம் போராளிகள் 2லட்சம் மக்களின் இழப்பை

விடுதலை கனவை அவர்களின் தியாகத்தை

எனது என சொல்ல எவர் கொடுத்தார் உங்களுக்கு அனுமதி

ஈழ தமிழன் என்கிற அடையாளம் போதும்

உங்களின் வேஷம்களை கலைக்க

உங்கள் ஆட்டைகளை உலகம் அறிய செய்ய

 

மீண்டும் வருவார்கள் புலிகள் அதுக்கு முன்

புலிகளை வைத்து பிழைப்பவரிடம் இருந்து

புலிகளை காப்பற்ற வேணும் ஒரு தமிழனா

என் நெஞ்ச்சு பிளந்து என் தலைவனை காட்ட

நான் ஒன்றும் அனுமான் இல்லை வலிகள் பட்ட

அகதி தமிழன் வேஷம் போடா ஈழ தமிழன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஈழ தமிழன் என்கிற அடையாளம் போதும் உங்களின் வேஷம்களை கலைக்க உங்கள் ஆட்டைகளை உலகம் அறிய செய்ய
கவிதைக்கு நன்றிகள் ....ஈழத்தமிழன் என்று சொல்லலாமா?இல்லையா?
Link to comment
Share on other sites

என் நெஞ்ச்சு பிளந்து என் தலைவனை காட்ட

நான் ஒன்றும் அனுமான் இல்லை வலிகள் பட்ட

அகதி தமிழன் வேஷம் போடா ஈழ தமிழன் .

 

நெஞ்சுக்குள்ளில் இருந்து வரும் வார்த்தைகள்.

கவிதைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

என் மண் என் மக்கள் என சுவாசித்து

என் தலைவனை உயிரிலும் மேலாய்

விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு

தோழர்களுடன் சேர்ந்து பயணித்து

மீண்டு வரும்போது


அருமையான வரிகள் .  அஞ்சரன் என்னை நினைவு இருகிறதா ?லிவர்பூல் அஞ்சரன்  தானை  நீங்கள்


என் மண் என் மக்கள் என சுவாசித்து

என் தலைவனை உயிரிலும் மேலாய்

விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு

தோழர்களுடன் சேர்ந்து பயணித்து

மீண்டு வரும்போது


அருமையான வரிகள் .  அஞ்சரன் என்னை நினைவு இருகிறதா ?லிவர்பூல் அஞ்சரன்  தானை  நீங்கள்

 

Link to comment
Share on other sites

என் மண் என் மக்கள் என சுவாசித்து

என் தலைவனை உயிரிலும் மேலாய்

விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு

தோழர்களுடன் சேர்ந்து பயணித்து

மீண்டு வரும்போது

 

அவர் உடல்கள் தூக்கிவந்து தாங்கி வந்து

வலி சுமந்து இளைப்பாறும் போது

Link to comment
Share on other sites

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அவ்வாறு விமர்சிப்பவர்களை எல்லாம் நீங்கள் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதனால்நான் உங்கள் மனம் காயப்படுகிறது.

Link to comment
Share on other sites

தேசியம் குழப்ப செயல்வீரரை பிடிக்க

உண்மையை அறிய நிலைகளை கண்காணிக்க

கேட்காமல் சும்மா கிடைக்கும் துரோகிபட்டம்

நாம் நாலுபேர் இப்ப முடிவு எடுக்கும் வட்டம்

எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் எதுக்கு இந்த கூப்பாடு  //// 

 

கவிதைக்குப் பொய்யாமொழி என்ற பெயரும் உண்டு . ஆனால் அஞ்சரனின் கவிவரிகளில் அந்தப் பொய்யாமொழி பொய்த்துவிட்டது . உண்மை என்றுமே உறங்கியது கிடையாது , எனவே தொடருங்கள் அஞ்சாமொழியுடன் அஞ்சரன் . கவிதைக்கு எனது மனங்கனித்த வாழ்த்துக்கள் :) :) :) .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படைப்பாளியின் சமூகம்மீதான நியாயமான கோபமே அவனை நல்ல பல படைப்புகளை தர தூண்டிவிடுகிறது.. உங்கள் கவிதைகளில் கொந்தளிக்கும் கோபத்தையும் மனதின் உணர்வுகளையும் படம்பிடித்திருக்கிறீர்கள்.. வரிகளில் தெரியும் வலிகளில் ஆதங்கம்.. தொடர்ந்து எழுதட்டும் உங்கள் பேனா..

 

வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றி ...ஆதங்கம் அல்ல வலி போராட்ட களத்தில் பெரியவன் சிறியவன் கிடையாது அண்ணா போராடினான கடைசிவரை இங்கு எல்லோரும் கோலித் தாவீத்துக்களை பார்த்து சிரிக்கத்தான் செய்வர்

 

வரலாறை நாங்க எழுதத்க்கூடாது வரலாறு எம்மை எழுதவேணும் அதுதான் களம் .!

Link to comment
Share on other sites

எப்படி வந்ததாய் தாங்கள் கெட்டித்தனமா

முன்னமே வந்ததால் போராளிகள்

நாங்கள் முட்டாள் தனமா கடைசியா

வந்ததால் துரோகிகளாய் அனுப்பபட்டவர்கள்

 

 

களத்தில் உயிரைக்கொடுத்து உடலைச் சிதைத்து ஊனமாகி புலம்பெயர்ந்த போராளிகள் மீது இப்போது ஏவப்படும் துரோக அம்புகள் மீது கேள்வியெழுப்பிய துணிச்சலுக்கு பாராட்டுக்கள் அஞ்சரன். முந்தி வந்தவர்கள் நல்லவர் பிந்தி வலி சுமந்து வந்த போராளிகள் துரோகிகள் என்ன உலகமோ இது ?

உண்மைகள் ஒருநாள் தன் உண்மையான முகத்தைக் காட்டும்வரை தியாகிகளே நீங்கள் தப்பியிருந்திடுங்கள்.

Link to comment
Share on other sites

40ஆயிரம் போராளிகள் 2லட்சம் மக்களின் இழப்பை

விடுதலை கனவை அவர்களின் தியாகத்தை

எனது என சொல்ல எவர் கொடுத்தார் உங்களுக்கு அனுமதி

ஈழ தமிழன் என்கிற அடையாளம் போதும்

உங்களின் வேஷம்களை கலைக்க

உங்கள் ஆட்டைகளை உலகம் அறிய செய்ய

 

நான் வசனத்தில கேட்டன்.. தூக்கிட்டானுக! :):mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் கவிதைக்கு நன்றி சொல்லிக் கொண்டு.எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் மதிப்பு.புலிகள் அமைப்பில்,தலைவரின் கீழ் ஒழுங்காக இருந்திட்டு வந்த போராளிகள் எல்லாம் புலத்தில் போடும் கூத்தை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன் :(
 
Link to comment
Share on other sites

அஞ்சரன்... உங்கள் கவிதை சொல்லவரும் விடயம் குறித்து நிறையக் கதைக்கவேண்டும் என மனது உந்துகிறது. ஆனால்  இங்கு இப்பொழுது வேண்டாம் என சற்று ஓரமாக ஒதுங்குகின்றது அதே மனசு! பயத்தாலோ பரிதாபத்தாலோ அல்ல. அதற்கு இது நேரமல்ல. பொருத்தமில்லாத நேரத்தில்,இடத்தில் எதைச் சொன்னாலும் செய்தாலும் எங்களை முட்டாளாக்கிவிடுவார்கள்!!!

 

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. அவர்களுக்கும் எமக்குமான இடைவெளி அதுதான்! அந்த இடைவெளி குறைந்துகொண்டே வரும்பொழுது ஒரு சந்தர்ப்பத்தில் அதற்கான நேரம் வரும்!

கவிதைக்கு மிக்க நன்றி அஞ்சரன். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்... உங்கள் கவிதை சொல்லவரும் விடயம் குறித்து நிறையக் கதைக்கவேண்டும் என மனது உந்துகிறது. ஆனால்  இங்கு இப்பொழுது வேண்டாம் என சற்று ஓரமாக ஒதுங்குகின்றது அதே மனசு! பயத்தாலோ பரிதாபத்தாலோ அல்ல. அதற்கு இது நேரமல்ல. பொருத்தமில்லாத நேரத்தில்,இடத்தில் எதைச் சொன்னாலும் செய்தாலும் எங்களை முட்டாளாக்கிவிடுவார்கள்!!!

 

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. அவர்களுக்கும் எமக்குமான இடைவெளி அதுதான்! அந்த இடைவெளி குறைந்துகொண்டே வரும்பொழுது ஒரு சந்தர்ப்பத்தில் அதற்கான நேரம் வரும்!

கவிதைக்கு மிக்க நன்றி அஞ்சரன். :)

 

நன்றி கவிதை ,இதுதான் என்நிலையும்  வாய் மூடி இருப்பதே இப்போதைக்கு

நல்லது :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.