• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
யாழ்அன்பு

இந்து மதம் என்பது தமிழர் மதமே!

Recommended Posts

1236127_513842545375636_1547100445_n.jpg
இந்து மதம் என்பது தமிழர் மதமே!

இந்து மதம் என்பது சைவம், வைணவம் ஆகிய இரண்டு சமயங்களின் இணைப்பே ஆகும்.

சைவ மதத்தை உருவாக்கிய நாயன்மார் அறுபத்து மூவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.

வைணவ மதத்தை உருவாக்கிய ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.

சைவ மத இலக்கியமான பன்னிரு திருமுறை தமிழிலேயே இருக்கிறது.

வைணவ மத இலக்கியமான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழ்மொழியிலேயே இருக்கிறது.

இந்தியாவில் உள்ள பழமையான சைவக் கோவில்கள் இருநூற்று எண்பது ஆகும். அவற்றுள் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன.

வைணவத் திருப்பதிகள் நூற்று எட்டில் தொண்ணூற்று ஆறு திருப்பதிகள் தமிழ்நாட்டில் தாம் இருக்கின்றன.

சைவ மதத்தின் தலைமைக் கோவில் சிதம்பரத்தில் இருக்கிறது.

வைணவர்களின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் இருக்கிறது.

ஆகவே சைவமும் வைணவமும் தமிழர் சமயங்கள் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'இந்துத்துவாவின் பிடியிலிருந்து இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து எடுத்து வெளியிடப்பட்டுள்ளது)

 

https://www.facebook.com/photo.php?fbid=513842545375636&set=a.481685671924657.1073741828.481230528636838&type=1&theater

Share this post


Link to post
Share on other sites

நாயன்மார்கள் உருவாக்கிய சைவமும், ஆழ்வார்கள் உருவாக்கிய வைணவமும் சேர்ந்தே இந்து மதம் ஆனது என்றால், இந்து மதத்தின் காலம் எவ்வளவு?

Share this post


Link to post
Share on other sites

நாயன்மார்கள் உருவாக்கிய சைவமும், ஆழ்வார்கள் உருவாக்கிய வைணவமும் சேர்ந்தே இந்து மதம் ஆனது என்றால், இந்து மதத்தின் காலம் எவ்வளவு?

இந்து மதம் என்பது, சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம், கௌமாரம், காபாலம்,சௌரம் என ஏழு மதங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பாகும்!

 

இந்து மதம் என்று பொதுவாகக் கூறப்படுகின்றதேயன்றி, அது தனியான மதம் இல்லை!

 வேண்டுமானால் ஒரு மார்க்கம் என்று கூறலாம்

 

சைவம் என்பது சிவனை முழு முதற்கடவுளாக ஏற்றுக்கொண்ட மதம்!

 

சைவம் மற்றைய எல்லா மதங்களுக்கும் முற்பட்டது என்பது எனது கருத்தாகும்!

Share this post


Link to post
Share on other sites

நாயன்மார்கள் உருவாக்கிய சைவமும், ஆழ்வார்கள் உருவாக்கிய வைணவமும் சேர்ந்தே இந்து மதம் ஆனது என்றால், இந்து மதத்தின் காலம் எவ்வளவு?

 

 

Hindu 

1662, from Persian. Hindu (adj. & noun) "Indian," from Hind "India," from Skt. sindhu "river," specifically theIndus; hence "region of the Indus," gradually extended across northern India. Hinduism, blanket term for"polytheism of India," is from 1829. The Hindu Kush mountain range means lit. "Indian killer,"
 
 
நன்றி: dictionary

Share this post


Link to post
Share on other sites

தமிழனின் வாழ்க்கையையும் பண்பாடும் சாதியையும் சமயத்தையும் கொண்டிருந்த ஒரு இனமல்ல. இதனை வெளிப்படுத்துவதற்கு இன்றுவரையில் உள்ள உறுதியான சாட்சிகளுள் தைப்பொங்கலும், ஆடிப்பிறப்பும் சிறந்து விளங்குகின்றன. இக்கொண்டாட்டங்கள் இயற்கையை ஆதாரப்படுத்தியே கொண்டாடப்படுகின்றன. இவை தமிழர்களுக்கே சொந்தமானது. இன்று ஆரிய மாயையில் தமிழன் மயங்கிப்போயுள்ளதால் சாதி, சமய ஆராச்சிகளும், மேற்படியான பதிவுகளும் அவனால் அரங்கேற்றப்படுகிறது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்து மதம் சுமேரியாவில் இருந்திருந்தால் தமிழரின் மதம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்! :D

Share this post


Link to post
Share on other sites

சைவம் தமிழர்களின் தொன்மை மிகு மதம். அதற்குள்.. இந்து என்ற சொல்லை ஹிந்தியர்கள் திணித்துவிட்டிருக்கிறார்கள்.  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கட்டுரை சொல்கிறது "நாயன்மார்கள் சைவத்தை உருவாக்கினார்கள்" என்று. ஆகவே நாயன்மார்கள் காலத்தில்தான் சைவம் உருவானது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம். வைணவமும் அப்படியே.

அதன் பிறகுதான் இரண்டும் இணைந்து இந்து மதம் உருவானதாம். அப்படியென்றால் இந்து மதம் உருவாகி ஒரு 500 ஆண்டுகள் இருக்குமா?

Share this post


Link to post
Share on other sites

இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லையென்று சங்கராச்சாரியாரே சொல்லியிருக்கிறாராம்... :o

சென்னை உயர்நீதிமன்றமும், இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லையென்று சொல்லியிருக்கிறதாம். இவை உண்மையா? யாருக்காவது தெரியுமா? :icon_idea: 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this