Jump to content

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பலமானது: கே.பி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DSCF3440.JPG
கிளிநொச்சியிலிருந்து ஏ.பி.மதன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பலமானது, எனவும் அந்த விஞ்ஞாபனம் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் கூறியுள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பலரின் விடுதலையை கூட்டமைப்பு தடுத்துவருகின்றது என்று இன்று குற்றஞ்சாட்டினார்.

விடுதலைப்புலிகளின்; சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் காரணமாக அவர்களை விடுதலை செய்யவேண்டாமென அதிகாரிகளிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வற்புறுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

தான் நடத்திவரும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வைத்து ஊடகவியலார்களை இன்று சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எஞ்சியுள்ள புலி அங்கத்தவர்களை விடுதலை செய்வதற்கு நான் என்னாலானதை செய்வேன். ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தான் ஒரேயொரு பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானம்,ஒஸ்லோ மாநாட்டில் புலி பிரதிநிதிகள் கொண்டுவந்த முன்மொழிவுகள் என்பவற்றின் கலவையாக உள்ளது. இப்போது நாடுக்கு தேவையானது இதுவல்ல என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய இலங்கைக்குள் 13 ஆவது திருத்தத்தையே இந்திய அமுலாக்குவதற்கு விரும்புகின்றது. அவர்கள் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சி.வி விக்னேஸ்வரன் தலைமை நீதியரசராக இருந்தபோது புலிகளின் சந்தேநபர்களுக்கு உச்ச தண்டனையை வழங்கிவந்தவர்.

இது சிங்கள நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனையை விடவும் கூடுதலாகவே இருந்தது. ஆனால் இப்போது தேர்தலில் வெல்வதற்காக முன்னாள் போராளிகளின் உரிமைகள் பற்றி பேசுகின்றார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கபட நாடகமாடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆனந்த சங்கரி சில வருடங்களுக்கு முன்னர் புலிகளை பயங்கரவாதியென்றார்.ஆனால், இப்போது புலிகள் வீரர்கள் என்று கூறிவருகின்றார். 
மேலும் 2009 இல் புலிகளை சம்பந்தன் பாராட்டினார். ஆனால் பின்னர் தான் புலிகளின் கொலைப்பட்டியலில் இருப்பதாக கூறினார். ஏன் இந்த இரட்டை வேடங்கள் ?' என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
DSCF3444.JPG
DSCF3456.JPG

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/82915-2013-09-18-12-47-52.html

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply

கூட்டமைப்பை தோற்கடிச்சு மகிந்த கூட்டணியை அமோகமாக வெற்றி பெற வைக்க சொல்லுறார்...  !   அதை நேரடியாக சொல்லுறது தானே தலைவரே...?? 

மலேசியாவிலை இருந்த உங்களை காட்டி குடுத்தது கூட கூடமைப்பு தான் எண்டு இப்ப சொல்லி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்...   நீங்கள் தான் வேறை குறூப் காட்டி குடுத்தது எண்டு ஏற்கனவே சொல்லிப்போட்டியளே...  

கைதியாக நீங்கள் வேறை என்ன செய்ய முடியும் எண்ட ஆதங்கம் எனக்கும் இருக்குதுதான்... 

Link to comment
Share on other sites

எதுக்கு தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிகின்ற இந்த நேரத்தில் அவசர அவசரமா பேட்டி ?

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பலமானது, எனவும் அந்த விஞ்ஞாபனம் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் கூறியுள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பலரின் விடுதலையை கூட்டமைப்பு தடுத்துவருகின்றது என்று இன்று குற்றஞ்சாட்டினார்.

கே.பிக்காக பேச வல்ல யாழ்கள பேச்சாளர் மேற்படி கூற்றுக்கு பூரண விளக்கம் தருவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றிலும் இரணுவப்புலனாய்வாளர்கள், ராஜீவ்காந்தி வழக்கு விசாரணை, கொலைக்கும்பல் இவற்றுக்குமத்தியில் நின்றுகொண்டு, கூத்தமைப்பின் தேர்தல் அறிக்கை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும்விடப் பலமானது எனவும் எல்லோரும் கூத்தமைப்புக்கே வாக்குப்போடும்படி சொல்லாமற் சொல்லுகிறார் நீங்கள்வேற அவரைத் துரோகி என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

எஞ்சியுள்ள புலி அங்கத்தவர்களை விடுதலை செய்வதற்கு நான் என்னாலானதை செய்வேன். ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தான் ஒரேயொரு பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கடந்த தேர்தலில் பொன்சேகவுடன் கூட்டுப்போட்ட கூத்தமைப்பு தமிழர்களுக்காக என்னத்தை கிழிக்கப்போகின்றது?

கூத்தமைப்புக்கு எதிராகக் கதைத்தால் ஏதோ குற்றம்போல் சிலர் கருத்தை முன்வைக்கின்றார்கள். கூத்தமைப்பு ஒன்றும் தமிழர் நலன் சார்ந்ததில்லை. தமிழர் நல்ன் சார்ந்து அவர்களால் ஒரு துரும்பைக் கூட செய்யவும் முடியாது. அவர்கள் அரசியல் வியாபாரிகள். அவர்களை தமிழர்களின் மீட்பர்கள் என்று கருதுவோர் யாரவரும் சிங்களப்பேரினவாதத்தின் நண்பர்களே.

வேறு திரியில் சொன்னதுபோல் டக்ளஸ் நேரடியாக அரசுடன் சேர்ந்து இயங்குபவர் கூத்தமைப்பு மறைமுகமாக தமிழர் கழுத்தறுப்பவர்கள். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

உண்மையிலும் உண்மை மாபெரும் உண்மை .......தமிழர்களுக்கு விமோசனம் ஒன்று கிடைப்பதாய் இருந்தால் இந்த குட்டைகளுக்குள் ஊறாமல் இறுதிவரை கொண்ட இலட்சியம் தவறாமல் செயல் பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை நாம் எல்லோரும் சேர்ந்து அழித்துவிட்டூம் என்பதும் உண்மையிலும் உண்மை .................

Link to comment
Share on other sites

கடந்த தேர்தலில் பொன்சேகவுடன் கூட்டுப்போட்ட கூத்தமைப்பு தமிழர்களுக்காக என்னத்தை கிழிக்கப்போகின்றது?

கூத்தமைப்புக்கு எதிராகக் கதைத்தால் ஏதோ குற்றம்போல் சிலர் கருத்தை முன்வைக்கின்றார்கள். கூத்தமைப்பு ஒன்றும் தமிழர் நலன் சார்ந்ததில்லை. தமிழர் நல்ன் சார்ந்து அவர்களால் ஒரு துரும்பைக் கூட செய்யவும் முடியாது. அவர்கள் அரசியல் வியாபாரிகள். அவர்களை தமிழர்களின் மீட்பர்கள் என்று கருதுவோர் யாரவரும் சிங்களப்பேரினவாதத்தின் நண்பர்களே.

வேறு திரியில் சொன்னதுபோல் டக்ளஸ் நேரடியாக அரசுடன் சேர்ந்து இயங்குபவர் கூத்தமைப்பு மறைமுகமாக தமிழர் கழுத்தறுப்பவர்கள். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

நீங்கள் சொல்லும் ஆக்களில் KP யும் ஒரு வகை... 

KP ஒரு சூள்நிலை கைதி எண்டு ஒரு சாராரும் , இல்லை சரண் அடைந்து இலங்கை அரச நிழலில் செயற்படுபவர் எண்று மறு சாராரும் சொல்கிறோம்... 

KP நல்லவர் கெட்டவர் என்பதுக்கும் மாறாக நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதுக்கு போதுமான எந்த ஆதரமும் கிடையாது அப்படி அவர் தமிழ் மக்களுக்காக செய்தவையும் இல்லை...  

மரத்திலை இருக்கும் போது நல்ல மலர்ச்சியாக  தெரியும் பூக்கள் வீழ்ந்த பிறகு எப்பிடி காய்ந்து சருகாகி மக்கி மண்ணாகிறது போல  மாதிரிதான்...   பிரபாகரனோடு இருக்கும் போது  மணமோடு இருந்தவர்கள் வீழ்ந்ததோ இல்லை விலை போன பின்னர்  சிலகாலம் மணத்தோடு இருக்கலாம் ஆனால் நீண்ட காலம் முடியாது... 

Link to comment
Share on other sites

சுற்றிலும் இரணுவப்புலனாய்வாளர்கள், ராஜீவ்காந்தி வழக்கு விசாரணை, கொலைக்கும்பல் இவற்றுக்குமத்தியில் நின்றுகொண்டு, கூத்தமைப்பின் தேர்தல் அறிக்கை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும்விடப் பலமானது எனவும் எல்லோரும் கூத்தமைப்புக்கே வாக்குப்போடும்படி சொல்லாமற் சொல்லுகிறார் நீங்கள்வேற அவரைத் துரோகி என்கிறீர்கள்.

போராட்டத்தை காட்டிக்  கொடுக்கவேண்டிய நிலையில் கேபி இருந்தால் தற்கொலை பண்ணி இருக்கலாம் .வாழ்வதற்க்காக எதுவும் செய்யலாம் என்றால் இவர்களுக்காக இறந்தவர்களை என்ன செய்வது?

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லும் ஆக்களில் KP யும் ஒரு வகை... 

KP ஒரு சூள்நிலை கைதி எண்டு ஒரு சாராரும் , இல்லை சரண் அடைந்து இலங்கை அரச நிழலில் செயற்படுபவர் எண்று மறு சாராரும் சொல்கிறோம்... 

KP நல்லவர் கெட்டவர் என்பதுக்கும் மாறாக நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதுக்கு போதுமான எந்த ஆதரமும் கிடையாது அப்படி அவர் தமிழ் மக்களுக்காக செய்தவையும் இல்லை...  

மரத்திலை இருக்கும் போது நல்ல மலர்ச்சியாக  தெரியும் பூக்கள் வீழ்ந்த பிறகு எப்பிடி காய்ந்து சருகாகி மக்கி மண்ணாகிறது போல  மாதிரிதான்...   பிரபாகரனோடு இருக்கும் போது  மணமோடு இருந்தவர்கள் வீழ்ந்ததோ இல்லை விலை போன பின்னர்  சிலகாலம் மணத்தோடு இருக்கலாம் ஆனால் நீண்ட காலம் முடியாது...

kp இரண்டு விடயங்களில் சம்மந்தப்படுகின்றார் ஒன்று சிறைப்பட்ட முன்னாள் போராளிகளின் விடுதலை மற்றது செஞ்சோலை போன்றன. ஒரு முன்னாள் புலி முக்கியஸ்த்தரால் சிங்களப்பேரினவாதத்தின் பிடிக்குள் இருந்தவாறு என்ன செய்முடியுமோ அதைச் செய்கின்றார். அதில் ஒரு வீத வெற்றி அல்லது பத்துவீத வெற்றி என்பது பிரச்சனையில்லை ஆனால் அது சார்ந்த ஒரு முயற்ச்சி இருக்கின்றது.

கூத்தமைப்புப்போ இல்லை இதர அரசியல் அடயாளப் பிழைப்புவாதிகளுக்கோ (நா க அரசு புலம்பெயர் கோஸ்டிகள் உட்பட்ட ) எவருக்கும் கே பி ஈடுபடும் விசயங்களில் நாட்டம் இல்லை. காரணம் ஒன்றுதான் இப்போது அரசின் பிடிக்குள் இருந்தாலும் கே பி ஒரு முன்னாள் புலி.

Link to comment
Share on other sites

போராட்டத்தை காட்டிக்  கொடுக்கவேண்டிய நிலையில் கேபி இருந்தால் தற்கொலை பண்ணி இருக்கலாம் .வாழ்வதற்க்காக எதுவும் செய்யலாம் என்றால் இவர்களுக்காக இறந்தவர்களை என்ன செய்வது?

தற்கொலை செய்யச் சொல்வதற்கு நீங்கள் யார் சார்? இன்று விடுதலையான பதுமன் இல்லை இதற்கு முன்னர் விடுதலையான புலிகள் அல்ல பிடிபட்டு கொல்லப்பட்ட புலிகள் எல்லோரும் புலம்பெயர்ந்து தனது பாதுகாப்பையும் தனது குழந்தைகுட்டிகள் படிப்பு பாதுகாப்பு பொருளாதரத்தையும் வளர்த்துக்கொண்டவனின் புளிச்சல் ஏவறைத் தேசியத்துக்காக அடுத்தவன் தற்கொலை செய்யவேண்டுமா? தேசீயத்தில் ஈடுபாடு இருந்தால் சிலர் நினைக்கின்றார்கள் தாங்கள் கட்டளையிடும் கடவுள்கள் என்று.

Link to comment
Share on other sites

kp இரண்டு விடயங்களில் சம்மந்தப்படுகின்றார் ஒன்று சிறைப்பட்ட முன்னாள் போராளிகளின் விடுதலை மற்றது செஞ்சோலை போன்றன. ஒரு முன்னாள் புலி முக்கியஸ்த்தரால் சிங்களப்பேரினவாதத்தின் பிடிக்குள் இருந்தவாறு என்ன செய்முடியுமோ அதைச் செய்கின்றார். அதில் ஒரு வீத வெற்றி அல்லது பத்துவீத வெற்றி என்பது பிரச்சனையில்லை ஆனால் அது சார்ந்த ஒரு முயற்ச்சி இருக்கின்றது.

கூத்தமைப்புப்போ இல்லை இதர அரசியல் அடயாளப் பிழைப்புவாதிகளுக்கோ (நா க அரசு புலம்பெயர் கோஸ்டிகள் உட்பட்ட ) எவருக்கும் கே பி ஈடுபடும் விசயங்களில் நாட்டம் இல்லை. காரணம் ஒன்றுதான் இப்போது அரசின் பிடிக்குள் இருந்தாலும் கே பி ஒரு முன்னாள் புலி.

KP அப்படி முயற்சி செய்கிறார் என்பது வெறும் பிரச்சாரம் மட்டுமே ... அப்படி KP யால் வெளியில் எடுத்து விடவோ அல்லது அப்படியான முயற்ச்சியின் பயனாய் ஏதும் நிகழவில்லை... அப்படி நடந்ததிற்கான ஆதாரங்களும் இல்லை...

வெளிப்படையாக சொன்னால் கருணா குழு, டக்ளஸ் தேவானந்தா ஒரு சில சிங்கள அமைச்சர்கள் போன்றவர்களின் குழுக்கள் பல போராளிகளை விடுவித்து இருக்கிறார்கள்... ( காரணம் நான் அறியேன் ) ஆனால் KP வெறும் பிரச்சார அளவில் தான் செயல் படுகிறார்... அரசாங்கத்துக்கும் கூட அதுதான் தேவையாக இருக்கிறது...

தவிரவும் KP சரண் அடைந்ததின் பின்னர் இலங்கை கடவு சீட்டு வைத்திருந்த வெளிநாடுகளில் இருந்த பல போராளிகளின் கடவு சீட்டுகள் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டதின் காரணத்தால் இலங்கைக்கு வெளி நாடுகளால் நாடுகடத்தப்பட்டு இருக்கிறார்கள்... ( அவர்களின் சொந்த பெயர் விபரங்களை கொடுத்தது KP யை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது..)

ஆக KP கைது செய்த போராளிகளை விடுவிக்க வில்லை மேலும் கைது செய்ய காரணமாக மட்டுமே இருக்கிறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை செய்யச் சொல்வதற்கு நீங்கள் யார் சார்?

இன்று விடுதலையான பதுமன் இல்லை இதற்கு முன்னர் விடுதலையான புலிகள் அல்ல பிடிபட்டு கொல்லப்பட்ட புலிகள் எல்லோரும் புலம்பெயர்ந்து தனது பாதுகாப்பையும் தனது குழந்தைகுட்டிகள் படிப்பு பாதுகாப்பு பொருளாதரத்தையும் வளர்த்துக்கொண்டவனின் புளிச்சல் ஏவறைத் தேசியத்துக்காக அடுத்தவன் தற்கொலை செய்யவேண்டுமா?

தேசீயத்தில் ஈடுபாடு இருந்தால் சிலர் நினைக்கின்றார்கள் தாங்கள் கட்டளையிடும் கடவுள்கள் என்று.

தற்கொலை  செய்யச்சொல்ல  நீங்க யார்??

இப்படி  ஒரு கேள்வியை  நானும்

ஒருவரிடம் கேட்டேன்

வந்த பதில்

எம்மவர்கள்  அருந்தி தற்கொலை செய்த குப்பிகளை  வாங்கித்தந்தவரே கேபி தான்  என்று.

அதைச்சொல்லும்  உரிமை தனக்கு இருக்கு

அதை அடித்தவர்களுடன்   இருந்தவன்  என்று.

யாழ்  அன்புவுக்கும் அப்படி  ஒரு காரணம்  இருக்கக்கூடும்

நீங்கள்  யார் அவர்  கருத்தை மறக்க.....

அப்படி  தங்களுக்க உரிமை  இருந்தால்

அவரது கருத்தையும்  மதிக்கலாமே சுதன்...

புலம்பெயர் தேசத்தில் இருந்தவாறு அடுத்தவன் தற்கொலை செய்வது குறித்து நினைக்கவே முடியாது. அவ்வாறு நீங்கள் கேட்க முற்படும்போதே புலம்பெயர் தேசத்தவன் ஏசமானன் ஆகவும் தாயகத்தில் உள்ளவன் அவனின் அடிமையாகவும் நிலமை மாறிவிடுகின்றது. நான் என்னைப் பாதுகாத்துக்கொண்டு அடுத்தவனை தற்கொலை செய்திருக்கலாம் அதற்கான காரணங்களை ஆராய்வதும் எந்தவிதத்திலும் பொருத்தமில்லாதது. போராட்டத்தை நடத்திய முதலாளிகள் அல்லது எசமானர்கள்போல் கேள்விகேட்பதை எப்படி மதிக்கமுடியும்? இவ்வாறான கேள்விகள் தவிர்க்கப்படவேண்டியவை என்பதையே என்னால் சொல்ல முடியும்.

தாய்லாந்தில் சொகுசா இருந்த மாதிரியே இருக்க வேண்டியது தானே எதுக்கு இந்த  நா... இற்கு இந்த காட்டிக் கொடுக்கும் வேண்டாத வேலை?  டக்லஸ் ,வரதர் போன்ற கீழ்த்தரமான பேர்வழிகளின் லிஸ்டில் கேபியும் சேர்ந்து விட்டாரே ஐயகோ நான் என்ன பண்ணுவேன் ?

Link to comment
Share on other sites

KP அப்படி முயற்சி செய்கிறார் என்பது வெறும் பிரச்சாரம் மட்டுமே ... அப்படி KP யால் வெளியில் எடுத்து விடவோ அல்லது அப்படியான முயற்ச்சியின் பயனாய் ஏதும் நிகழவில்லை... அப்படி நடந்ததிற்கான ஆதாரங்களும் இல்லை...

வெளிப்படையாக சொன்னால் கருணா குழு, டக்ளஸ் தேவானந்தா ஒரு சில சிங்கள அமைச்சர்கள் போன்றவர்களின் குழுக்கள் பல போராளிகளை விடுவித்து இருக்கிறார்கள்... ( காரணம் நான் அறியேன் ) ஆனால் KP வெறும் பிரச்சார அளவில் தான் செயல் படுகிறார்... அரசாங்கத்துக்கும் கூட அதுதான் தேவையாக இருக்கிறது...

தவிரவும் KP சரண் அடைந்ததின் பின்னர் இலங்கை கடவு சீட்டு வைத்திருந்த வெளிநாடுகளில் இருந்த பல போராளிகளின் கடவு சீட்டுகள் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டதின் காரணத்தால் இலங்கைக்கு வெளி நாடுகளால் நாடுகடத்தப்பட்டு இருக்கிறார்கள்... ( அவர்களின் சொந்த பெயர் விபரங்களை கொடுத்தது KP யை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது..)

ஆக KP கைது செய்த போராளிகளை விடுவிக்க வில்லை மேலும் கைது செய்ய காரணமாக மட்டுமே இருக்கிறார்...

இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்று அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதில் மாறாத கருத்தில் நான் உள்ளேன். ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக கே.பி.யால் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் போராளிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையூறாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

அடுத்து, கே.பி. எதுவித உதவியும் செய்யவில்லை என்று புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு கூறாதீர்கள்.

அவரால் விடுவிக்கப்பட்ட மூத்த போராளிகள் பலர் உண்டு. எனக்குத் தெரிய 20 பேரளவில் விடுதலையாகி தாமும் தம் பாடு என்று உண்டு உள்ளார்கள்.

அதேபோன்று அன்று போராளிகளாக இருந்த பலர் மலிவு விலையில் உறுதிப்பத்திரத்துடன் வாங்கிய காணிகள் மற்றும் வீடுகளை விற்பைன செய்தவர்கள் பலர், இன்று, இவர் ஏமாற்றி பறித்துவிட்டார் என்று கூறி பொலிசிடம் போய், முன்னாள் போராளிகள் பின்னர் கே.பி.யிடம் சென்று அவர் மீட்டுக் கொடுத்த காணி மற்றும் வீடுகள் தொடர்பில் அவற்றை பெற்ற முன்னாள் போராளிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு பல உதவிகளைச் செய்தவரைப் போய் புலத்தில் ஒய்யாரமாக இருந்து கொண்டு கருத்து எழுதாதீர்கள். எவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து கருத்துக்கள் எழுதுங்கள்.

இன்று பதுமன் வந்துவிட்டார். அவர்களைப் போன்றவர்கள் இனி வாழ வேண்டும். அவரைப் போன்றவர்களை எல்லாம் துரோகிகள் என்று குத்தாதீர்கள். அப்படி குத்த முயலும் போது உங்களையே நீங்கள் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

மீண்டும் தெளிவாகக் கூறுகின்றேன். கூட்டமைப்புத்தான் எனது தெரிவு. ஆனாலும், அவர்களிடம் பன்முக அரசியல் திட்டம் எதுவுமில்லை.

மக்களிடம் அவர்கள் அரசியல் செய்யவில்லை. பழைய மிதப்பில் தாமே வெல்வோம் என்றும் தாம் கூறும் கருத்துக்களையே மக்கள் நம்புவார்கள் என்றும் அவர்கள் அதீத நம்பிக்கையில் உள்ளனர். அவற்றை எல்லாம் கூட்டமைப்பு உடைத்தெறிந்து பலமாக வளர வேண்டும்.

இதே கூட்டமைப்புக்கு காஸ்ட்ரோ மற்றும் தமிழ்நெட் கும்பல்கள் எதிர்ப்பு வேலைகள் செய்கின்றார்கள் என்பதனையும் இந்த இடத்தில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அத்தோடு, சண்டமாருதனின் கருத்தோடு நான் பெருமளவில் உடன்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்று அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதில் மாறாத கருத்தில் நான் உள்ளேன். ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக கே.பி.யால் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் போராளிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையூறாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

அடுத்து, கே.பி. எதுவித உதவியும் செய்யவில்லை என்று புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு கூறாதீர்கள்.

அவரால் விடுவிக்கப்பட்ட மூத்த போராளிகள் பலர் உண்டு. எனக்குத் தெரிய 20 பேரளவில் விடுதலையாகி தாமும் தம் பாடு என்று உண்டு உள்ளார்கள்.

அதேபோன்று அன்று போராளிகளாக இருந்த பலர் மலிவு விலையில் உறுதிப்பத்திரத்துடன் வாங்கிய காணிகள் மற்றும் வீடுகளை விற்பைன செய்தவர்கள் பலர், இன்று, இவர் ஏமாற்றி பறித்துவிட்டார் என்று கூறி பொலிசிடம் போய், முன்னாள் போராளிகள் பின்னர் கே.பி.யிடம் சென்று அவர் மீட்டுக் கொடுத்த காணி மற்றும் வீடுகள் தொடர்பில் அவற்றை பெற்ற முன்னாள் போராளிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு பல உதவிகளைச் செய்தவரைப் போய் புலத்தில் ஒய்யாரமாக இருந்து கொண்டு கருத்து எழுதாதீர்கள். எவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து கருத்துக்கள் எழுதுங்கள்.

இன்று பதுமன் வந்துவிட்டார். அவர்களைப் போன்றவர்கள் இனி வாழ வேண்டும் அவரைப் போன்றவர்களை எல்லாம் துரோகிகள் என்று குத்தாதீர்கள். அப்படி குத்த முயலும் போது உங்களையே நீங்கள் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

மீண்டும் தெளிவாகக் கூறுகின்றேன். கூட்டமைப்புத்தான் எனது தெரிவு. ஆனாலும், அவர்களிடம் பன்முக அரசியல் திட்டம் எதுவுமில்லை.

மக்களிடம் அவர்கள் அரசியல் செய்யவில்லை. பழைய மிதப்பில் தாமே வெல்வோம் என்றும் தாம் கூறும் கருத்துக்களையே மக்கள் நம்புவார்கள் என்றும் அவர்கள் அதீத நம்பிக்கையில் உள்ளனர். அவற்றை எல்லாம் கூட்டமைப்பு பலமாக வளர வேண்டும்.

அத்தோடு, சண்டமாருதனின் கருத்தோடு நான் பெருமளவில் உடன்படுகின்றேன்.

ஒரு மூட்டையில் சாமான் வாங்கினால் அதிலை சாக்கின் பாரத்தை கழிச்சு விட்டுதான் பொருளுக்கு பணம் கொடுப்பது ஊரிலை வழமை...

இங்கை நீங்கள் கொண்டு வந்த சரக்கிலையும் பொருளை விட சாக்கின் பாரம் தான் அதிகமாக இருக்கு... அடுத்த தடவை வேறை விதமாக முயண்று பாருங்கோ...

முன்னாள் போராளிகளுக்கு KP உதவவில்லை அப்படி இலங்கை சிங்களவன் மத்தியில் உதவ முடியும் எண்டு சொன்னால் நம்பவும் முடியாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கே பி இன்று திருகிவிட்டால் ஆடும் பொம்மை..! அவரை சி ஐ ஏ கைது செய்ததில் இருந்து அவர் அப்படி ஆகிட்டார். விடுதலைப்புலிகளின் கப்பல்கள் பற்றிய விபரங்களை அமெரிக்காவிற்கும்.. இந்தியாவிற்கு இவரே வழங்கி இருக்கவும் கூடும்..!

இவர் சி ஐ ஏ யிடம் சிக்கியது தொடர்பில் தேசிய தலைமை அறியாமல் இருந்து இவருக்கு கடைசி நேரத்தி வழங்கிய பொறுப்பே ஆபத்தாகவும் முடிந்து விட்டது.

இருந்தாலும்.. இதனை எல்லாம் தாண்டி தமிழ் மக்கள் பயணிப்பார்கள்.. இலக்கு நோக்கி.!

நாடு கடந்த தமிழீழ அரசை இவர் உருவாக்கவில்லை. அது பிரேரிக்கப்பட்ட போது அதனை அன்று தன்னை புலம்பெயர் மக்கள் மத்தியில் புலி என்று காட்ட ஆதரித்தார். இன்று அந்தத் தேவை அவருக்கு இல்லை. இவரை நம்பி இன்று நாடு கடந்த தமிழீழ அரசும் இல்லை. தமிழ் மக்களும் இல்லை..! ஆனாலும் இவர் உள்ளூரில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு செய்து வரும் மனிதாபிமான உதவியை பாராட்டலாம். அந்தச் சிறார்களை சிங்களத்துக்கு தத்துக் கொடுக்காத வரை..! :icon_idea:

உங்கள் கற்பனைக் குதிரை அபாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபாரமாகவே இருந்திட்டுப் போகட்டும். உங்களின் அண்டைப் புழுகை விட இது எவ்வளவோ உசத்தி. விக்கிலீக்ஸ் அறிக்கை வரும் வரை காத்திருப்போம்..! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

ஒரு மூட்டையில் சாமான் வாங்கினால் அதிலை சாக்கின் பாரத்தை கழிச்சு விட்டுதான் பொருளுக்கு பணம் கொடுப்பது ஊரிலை வழமை...

இங்கை நீங்கள் கொண்டு வந்த சரக்கிலையும் பொருளை விட சாக்கின் பாரம் தான் அதிகமாக இருக்கு... அடுத்த தடவை வேறை விதமாக முயண்று பாருங்கோ...

முன்னாள் போராளிகளுக்கு KP உதவவில்லை அப்படி இலங்கை சிங்களவன் மத்தியில் உதவ முடியும் எண்டு சொன்னால் நம்பவும் முடியாது...

உதவவில்லை உதவவில்லை என்று நீங்கள் கூறி எதுவும் நடக்காது அப்பு. உதவி பெற்றவனையும் உதவி பெற்றவன் குடும்பத்தினையும் போய்க் கேட்க வேண்டியதுதானே. இதில் இருந்து ஒரே கருத்தினை மீள மீள அடித்துக் கொண்டிருந்தால் போல நீங்கள் கூறுவது சரி என்றாகிவிடுமா?

உண்மையான தகவல்களை வைத்துத்தான் நான் உரையாடுகின்றேன். நம்ப வேண்டியவர்கள் பலர் இந்த யாழ் களத்தில் உள்ளனர். அவர்கள் நம்பினாலே போதும். இதில் நான் உங்கள் அனைவரின் கருத்துக்களைப் பொருட்படுத்தாது எழுதுகின்றேன் எனில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைக்கும் ஆதரவுதான்.

தமக்கும் இவ்வாறு எழுத வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், யாழில் இருக்கின்ற கடுங்கோட்பாளர்கள் எதனையும் ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவம் அற்றவர்களாகவே உள்ளனர் என்று நான் கூறவில்லை. என்னோடு உரையாடியவர்கள் கூறினார்கள்.

அவரவர் வேலையை அவரவர் பார்திருக்க வேண்டும்.

அண்மையில் கனடா சென்றிருந்த சிறீதரன் எம்.பியை அங்கே உள்ளவர்கள் செஞ்சோலை என்று ஒன்று இயங்குகின்றதே என்று கேட்கப்பட்டபோது, அவர், இல்லையே செஞ்சோலை என்று ஒன்று அங்கே இயங்கவே இல்லை என்றாராம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் எம்.பியானவர் எப்படி ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்திருக்கின்றார் பாருங்கள்.

செஞ்சோலை இயங்குவது பிடிக்கவில்லை ஓ இயங்குகின்றது எமக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று விட்டிருக்கலாமே.

இன்று கே.பி.யை கூட்டமைப்பினை விமர்சிப்பதனை நான் ஏற்றுக்கொள்ளாது விட்டாலும். சிறீதரன் எம்.பி.தான் இன்று கே.பி. வாயால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடுமையாக விமர்சிக்க பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றார் என்பதனை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Pathmanathan was the subject of a worldwide manhunt, which involved police from cities including Johannesburg, Rangoon, Singapore and Bangkok. Some of the world's foremost intelligence agencies, including the American CIA and British MI-5, were on his trail.[7] He was believed to have had bank accounts in London, Frankfurt, Denmark, Athens and Australia and over 200 passports for his use.[8] In May 2011, he alleged that the United Nations and a "western country" worked to help many LTTE operatives escape from Sri Lanka.[17]

There were conflicting reports from Thailand that Pathmanathan had been arrested on 11 September 2007. The reports were preceded by the detention in Ranong Province of three other LTTE operatives the month before, for trying to buy guns and 45,000 rounds of ammunition.[8][12] However a number of Thai officials rejected the reports, claiming they had no information about such an arrest.[18] Thai immigration officers claimed that no such person had entered the country in the last two years.[18]

Pathmanadan was arrested in a South East Asian country on August 5, 2009. Initial reports suggested that he was captured in Thailand,[19] but this was denied by Thai authorities.[3] But it was later revealed that he had been arrested by a Sri Lankan military intelligence unit, with the cooperation of local authorities, in the Tune Hotel, downtown Kuala Lumpur, Malaysia.[20] The Sri Lankan Government announced on 7 August that he had been brought to Colombo.[21][22] Sources have termed him "crucial" to the uncovering of various Liberation Tigers of Tamil Eelam crime networks.[23]

After the arrest he began cooperating with the Sri Lanka government.[24] On 9 July 2010, Pathmanathan established the North-East Rehabilitation and Development Organization (NERDO), a Non-Governmental Organization for the provision of relief to the Internally Displaced Persons (IDPs) while upgrading facilities for better physical, mental and living conditions for them.[25] In October 2012, media sources reported that Pathmanathan was being released from custody, quoting the head of Media Center for National Security Lakshman Hulugalle.[26][27] Later he rejected the reports by saying Pathmanathan who is under special protection was permitted to engage in his NGO work and has not been released as claimed by media.[28]

http://en.wikipedia.org/wiki/Selvarasa_Pathmanathan

Though details are scanty there is reason to believe that Sri Lanka with the aid of “intelligence officials” from other countries had accomplished the feat of seizing and transporting KP from Kula Lumpur to Colombo. It is also assumed that the exercise amounted to an “extraordinary rendition” on the lines of what the US Central Intelligence Agency (CIA) had been doing in the aftermath of the twin towers assault on September 11th 2001. More details about “Operation KP” are likely to be revealed in the near future.

http://dbsjeyaraj.com/dbsj/archives/1033

Link to comment
Share on other sites

அபாரமாகவே இருந்திட்டுப் போகட்டும். உங்களின் அண்டைப் புழுகை விட இது எவ்வளவோ உசத்தி. விக்கிலீக்ஸ் அறிக்கை வரும் வரை காத்திருப்போம்..! :icon_idea::lol:

அவற்றையும் எங்கே அப்பு நம்பப் போகிறியள்? அதுவும் ஒரு அண்டப் புழுகு அதுதான் விக்கிலீக்ஸ் உரிமையாளரை அவுஸ்திரேலிய மக்களே தேர்தலில் தோற்கடித்துவிட்டனர் பின்னர் விண்ணானம் எழுத வருவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவற்றையும் எங்கே அப்பு நம்பப் போகிறியள்? அதுவும் ஒரு அண்டப் புழுகு அதுதான் விக்கிலீக்ஸ் உரிமையாளரை அவுஸ்திரேலிய மக்களே தேர்தலில் தோற்கடித்துவிட்டனர் பின்னர் விண்ணானம் எழுத வருவீர்கள்.

விக்கிலீக்சின் உரிமையாளரை எவர் நம்புக்கிறார்கள்....???! அவரை நம்பி அல்ல விக்கிலீக்ஸ் ஓடுது. விக்கிலீக்ஸ் தனக்கு கிடைக்கும் கேபிள் ஆதாரங்களின் அடிப்படையில் ஓடுது. ஆதாரங்களை வெளியிடுகுது. நீங்கள்.. என்ன ஆதாரத்தை இதுவரை வெளியிட்டு உங்கள் விவாதத்தை கொண்டு சென்றிருக்கிறீர்கள். பூச்சிய ஆதாரம்.. பூதாகர கற்பனை.. இதுதான் உங்கள் பிரச்சாரங்கள் நொய்ந்து போய் கிடக்கக் காரணம். அது கூட மக்களை உங்களிடம் இருந்து ஏமாறாமல்.. பாதுகாக்கிறது..! :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.