Jump to content

யாழ்ப்பாணத்தை புலிகள் கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்கப் போவதி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களே இடம்பெறுகின்றன. இதனைதவிர இராணுவ நடவடிக்கை எவையும் இடம்பெறவில்லை ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமாதானத்திற்காக அரசாங்கத்தின் கதவுகள் திறந்தேயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவன பிரதானிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தாம் சமாதானம் பற்றி பேசுவது இராணுவத்தின் அல்லது அரசாங்கத்தின் பலவீனம் என கருதக்கூடாது. மாவில் ஆறு அணை தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி இதன் போது ஜனாதிபதி விளக்கமளித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக செய்திகளை வெளியிடும் போது பொறுப்புடன் செயற்படவேண்டும் எனக்கேட்டுக்கொண்ட அவர் செய்த தணிக்கையை கொண்டு வருவதற்கு எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தகவல்களை தெரிந்து கொள்வது மக்களின் அடிப்படை உரிமையாகும். ஜனாதிபதி பதவிக்கு வரும் முன்னரும் இதனை தாம் வலியுறுத்தி வந்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பில் கடந்த மூன்று வருடங்களாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமை காரணமாக திருகோணமலை முற்றுகைக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது.

யாழப்பாணத்தை ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்ற அனுமதிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலான ஒலி ஒளி படமும் இந்த நிகழ்வின் போது காட்டப்பட்;டது.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தை கைப்பபற்ற விடாவிட்டால் நாங்களும் தென்னிலங்கையை நித்திரை கொள்ள விடமாட்டோம்.

பிரேதப் பெட்டிகள் வந்து கொண்டே இருக்கும்

Link to comment
Share on other sites

என்னது வரயறுக்கப்பட்ட அடி தான் வாங்கிகிறோம் இன்னும் முழு அடி வங்கேல எண்டு சொன்னதை இந்த வடிவேல் மாறி எழுதிற்றார்

வடிவு தகவல் தரும் போது உறுதிப்படுத்தவேண்டும் சரியா !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் இது நகைச்சுவை பகுதி என்பதை மறந்து விட்டீர் போல். :D

Link to comment
Share on other sites

ஏப்பியா இல்லை றொயிற்றேஸ் ஆ என்று மறந்து விட்டேன். அவர்கள் அண்மையில் ஒரு தமிழ் பொது மகனின் கருத்தை தமது கண்ணோட்டத்தில் புகுத்தி இருந்தார்கள். அந்த பொதுமகனின் கருத்துப்படி இந்த யுத்தம் ஒரு முடிவிற்கு வரும் யாழ்பாணத்தை புலிகளிடம் கையளித்தால் என்றும் அதுவரை இழப்புகளும் அவலங்களும் தொடரப்போவதாக கூறினார். அடுத்த பந்தியில் அந்த கண்ணோட்டத்தை எழுதியவர் தொடர்கிறார்... புலிகளின் முக்கிய இலக்கு யாழ்பாணம் தான் அதை கைப்பற்ற பல முறை முயற்சித்து விட்டார்கள். அது அவர்களது தலமைப்பீடத்தில் உள்ள பலரின் சொந்த ஊர். தமிழர்கள் தமது கலாச்சார தலைநகராக கருதும் இடம் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளபதி சொர்ணம் அவர்களின் ஊர் திருகோணமலை.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.