Jump to content

புரட்டாதி சனிக்கிழமை விரதம் - சனீஸ்வரன் விரதமும் அதன் சிறப்பும் - விஞ்ஞான விளக்கங்களுடன்


Recommended Posts

சனீஸ்வரன் காயத்ரி மந்திரம்:

பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!!

தந்நோமந்த ப்ரசோதயாத்!!

"புரட்டாதிச் சனி விரதம்" என அழைக்கப்படுவது புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் 21ம் திகதி (21.09.2013) முதலாவது புரட்டாதிச் சனி விரதமும்; அன்றிலிருந்து அடுத்து வருகிற (செப்ரெம்பர் 28, ஒக்ரோபர் 05, 12) நான்கு புரட்டாதிச் சனி விரத நாட்களாக இவ் வருடம் அமைகின்றது.

 

சனீஸ்வரன்; கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் ”பஞ்சம சனி” என்றும்; 8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் ”அட்டமத்துச் சனி” என்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் (இவ் மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் ஆகின்றமையால்) ”ஏழரைச் சனி” ன்று அழைப்பர்.

சூரிய பகவானுக்கும் சாயா தேவிக்கும் புரட்டாதி மாத முதல் சனிக்கிழமை சனீஸ்வரர் பிறந்தவர். இவர் மந்தகதி உடையவர். சனீஸ்வரர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. 12 இராசியையும் கடக்க 30 வருடங்கள் ஆகின்றன. ஆகவே ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு தடவை இத் தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன. அதனால் போலும் 30 வருடங்களுக்கு மேல் கஷ்டமாக வாழ்ந்தவர்களும் இல்லை சிறப்பாக வாழ்ந்தவர்களும் இல்லை என்ற முதுமொழி பிறந்தது.

வாழ்க்கையில் முதலில் வரும் ஏழரைச் சனி காலத்தை ”மங்கு சனி” என்றும், இரண்டாவதாக வருவதை ”பொங்கு சனி” என்றும், மூன்றாவதாக வருவதை ”மரணச் சனி” என்றும் அழைப்பர். இக்காலங்களில் பெயருக்கு ஏற்றாற்போல் மற்றைய கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலங்கள் கிடைக்கும் என்கின்றது ஜோதிடம்.

இவ் சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம். இவை யாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என ஜோதிடத்தில் கூறப்பெற்றுள்ளது. இத் தோஷத்தினால் பீடிக்கப் பெற்றவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால் சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்கள் குறைவடைந்து நன்மைகள் ஏற்படுவதாக ஐதீகம்.  இவற்றுள் ஏழரைச் சனிகாலம் மிகவும் கஷ்டமான காலமாக ஜோதிடம் கணிக்கின்றது.

அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.

"சனீஸ்வரனைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை" எனபது சோதிடப் பழமொழி. அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. இவ் இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஸ்டங்களையும் நஸ்டங்களையுந் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஸ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாதி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணைய் வைத்து ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்ளெண்ணை (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி, அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும்.

வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருந்துவர். மற்றைய விரதங்களின் போது எண்ணை வைத்து தோயும் வழக்கம் இல்லை. ஆனால் சனிக்கிழமை-சநீஸ்வரனுடைய விரதத்திற்கு மாத்திரம் எண்ணை வைத்துத் தோயும் முறை கடைப்பிடிக்கப் பெறுகின்றது. 

அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் சனீஸ்வரன் நீதி தவறாதவர். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவி மூலம் சனிபகவான் தோன்றினார்.சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.

சனிக்கிரகம்; நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடமானார் என்று புராணங்கள் கூறுகின்றன.

299x515x,PE0,PAE,P9A,PE0,PAE,PA9,PE0,PAFஇந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.

உலகிலேயே சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் இரண்டே இடங்களில் மாத்திரம் அமைந்துள்ளது. மற்றைய ஆலயங்களில் சனீஸ்வரர் பரிவார மூர்த்தியாக அல்லது நவக்கிரகங்களுடன் இணைந்து காணப்பெறுகின்றார்.

தென் இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில் திருநள்ளாறு என்னும் ஊரில் சனீஸ்வரனுக்கென தனிக்கோயில் உள்ளது. சனீஸ்வரனுக்கு அமைக்கப்பட்ட இரண்டாவது தனிக்கோயில் திருகோணமலை நகரில் மடத்தடிச்சந்திக்கு அருகில், ரயில் நிலையத்திற்குப் போகும் வீதியில் வலது புறம் அமைந்துள்ளது

இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.

இந்திரஜித்து இராவணனின் மகன்.  இவன் பிறப்பதற்கு முன் இராவணன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.

சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.

சனிக்கிழமை விரதம் எளிமையானது. புனிதமானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். சனிக்கொழமைகளில் பெருமாள் ஆலயத்தில் சனீஸ்வரனுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.

நல்லெண்ணை முழுக்கிற்கு விஞ்ஞானம், சோதிடம் கூறும் விளக்கம்

நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது. இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது. 

அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது. சனி கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்ளில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு.

இத் தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது. அந்த கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிச்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணையய் (நல்லெண்ணை வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் தோய வேண்டும், அதனால்தான் எமது முன்னோர்களும் சனிக்கிழமைகளில் எண்ணை வைத்து தோயும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் தற்போது நாகரீக மேலாதிக்கத்தினால் அவை  பின்பற்றப் பெறுவதில்லை.

329x429x,PE0,PAE,P9A,PE0,PAE,PA9,PE0,PAF

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு!

(முகநூலில் பகிரப்பட்டதகவல் - உங்களுக்காக)

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரளவைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச் சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநே ஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் ‘சனி பகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவ கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டி வைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்த அறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறிய வேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கட வுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்…

 

சனீஸ்வரன் தோத்திரம்:

 

முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலி னார்கள்

மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ

கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்

சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே !

நவகிரக தோத்திரம்:

ஓம் ஓங்காரசூக்கும உடலாய் போற்றி

ஓம் ஓராழித்தேர் ஊர்ந்தாய் போற்றி

ஓம் ஏழன் குதிரை ஏவினை போற்றி

ஓம் ஓர்முகம் எண்கர முடையாய் போற்றி

ஓம் இருதோட் கமலம் ஏந்தினாய் போற்றி

ஓம் பொற்ப்ட் டுடையி பொழிவாய் போற்றி

ஓம் வியாவிருதி ஏழ் விளங்குவாய் போற்றி

ஓம் பன்னிரு முனிதுதிப்பாற்கரா போற்றி

ஓம் மழைபருவம் மாற்றுவாய் போற்றி

ஓம் மூலாகினியில் முகிழ்த்தாய் போற்றி

ஓம் வீதிமுன்றிராசி பன்னிரண்டாய் போற்றி

ஓம் சூரியா வீரியா சுகமருள்வாய் போற்றி

ஓம் சங்கரன் முடிதவழ் சந்திரா போற்றி

ஓம் திருமகள் சோதரா திவ்யா போற்றி

ஓம் சவுக்கவடிவில் இருந்தாய் போற்றி

ஓம் முத்துவிமான வாகனா போற்றி

ஓம் சக்கரம் மூன்றுடைத்தேராய் போற்றி

ஓம் குருந்த மலர் நிறக் குதிரையாய் போற்றி

ஓம் கலைவளர் மதியே கருணையே போற்றி

ஓம் தேவர் பிழிந்துணும் அமுதே போற்றி

ஓம் சக்தியை நடுக்கொள் மண்டலா போற்றி

ஓம் வஞ்சம் மோகினிக் குரைத்தாய் போற்றி

ஓம் நிலப்பயிர் தழைக்கும் நிலவே போற்றி

ஓம் இருகண் பார்வைச் சுகமருள்வாய் போற்றி

ஓம் பூதேவி குமரா பெளமா போற்றி

ஓம் செந்நிற உருவாய் செவ்வாய் போற்றி

ஓம் அன்ன வாகனம் அமர்ந்தாய் போற்றி

ஓம் முக்கோண வடிவிருக்கையாய் போற்றி

ஓம் எண்பரித் தேர்மிசை இயல்பாய் போற்றி

ஓம் தவத்தால் உயர்பதம் அடைந்தாய் போற்றி

ஓம் தட்சன் யாகம் தடுத்தாய் போற்றி

ஓம் யோக நெருப்புடை யுடலாய் போற்றி

ஓம் மங்களாம் தரும் மங்கலா போற்றி

ஓம் அருங்கலை வல்லாய் ஆரல் போற்றி

ஓம் தைர்யம் வலிமை தருவாய் போற்றி

ஓம் அங்காரகனே அருள்வாய் போற்றி

ஓம் புதனெனும் தாரை புத்திரா போற்றி

ஓம் பசுமை மேனி கொண்டோய் போற்றி

ஓம் அம்பின் வடிவில் அமர்ந்தாய் போற்றி

ஓம் வெண்காந்தள் மலர்விரும்பினாய் போற்றி

ஓம் குதிரைவாகனங் கொண்டோய் போற்றி

ஓம் நால்பரித்தேர்மிசை அமர்ந்தாய் போற்றி

ஓம் தவத்தால் கோளென உயர்ந்தாய் போற்றி

ஓம் அசுவ யாகம் ஆற்றினாய் போற்றி

ஓம் இளையை மணந்த எழிலே போற்றி

ஓம் சிவனால் சாபம் நீங்கினாய் போற்றி

ஓம் இருக்கு வேததிருந்தாய் போற்றி

ஓம் ஞானமுங் கல்வியும் நல்குவாய் போற்றி

ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி

ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி

ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி

ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி

ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி

ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி

ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றோய் போற்றி

ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி

ஓம் தண்டன் நாடுகாடாக்கினாய் போற்றி

ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி

ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி

ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி

ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி

ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி

ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி

ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி

ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி

ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி

ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றோய் போற்றி

ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி

ஓம் தண்டன் நாடுகாடாக்கினாய் போற்றி

ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி

ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி

ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி

ஓம் சூரியபாலா சுபமருள் போற்றி

ஓம் அஞ்சன வண்ணா சனியே போற்றி

ஓம் வில்வடிவாசனம் விளங்கினாய் போற்றி

ஓம் காக்கை வாகனக் கடவுளே போற்றி

ஓம் கருங்கு வளைமலருகந்தாய் போற்றி

ஓம் எள்ளும் வன்னியும் ஏற்றாய் போற்றி

ஓம் மேற்றிசை நின்ற மேலோய் போற்றி

ஓம் நளனைச் சோதிதாண்டாய் போற்றி

ஓம் தேவரும் பார்வையில் தீய்த்தாய் போற்றி

ஓம் பற்றற் றாரையும் பற்றுவாய் போற்றி

ஓம் கலியென்றொரு பெயருடையாய் போற்றி

ஓம் தொழுதேன் சனியே தொடாதே போற்றி

ஓம் சிம்மிகை மைந்தா இராகுவே போற்றி

ஓம் கொடிவடிவமர்ந்த கோளே போற்றி

ஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றி

ஓம் தென்மேற்றிசையில் திகழ்வாய் போற்றி

ஓம் மந்தாரை மலர் மகிழ்ந்தாய் போற்றி

ஓம் உளுந்தும் அருகும் உகர்ந்தாய் போற்றி

ஓம் கரும்பாம் புருவம் கண்டாய் போற்றி

ஓம் நாலிரு குதிரைத் தேராய் போற்றி

ஓம் தேவர் அமுதம் உண்டோய் போற்றி

ஓம் ஓருட லிருகோளானாய் போற்றி

ஓம் தவமேம் பட்ட தலையே போற்றி

ஓம் இராஜபோகம் தரு இராகுவே போற்றி

ஓம் இராகுவினுடலே கேதுவே போற்றி

ஓம் சிவனால் தலையுயிர் பெற்றாய் போற்றி

ஓம் செம்பாம் புருவை வேண்டினாய் போற்றி

ஓம் முச்சில் வடிவில் முகழ்ந்தாய் போற்றி

ஓம் செவ்வல் லிமலர் சேர்த்தாய் போற்றி

ஓம் கொள்ளும் தர்ப்பையும் கொண்டாய் போற்றி

ஓம் அரிவாகனத்தில் அமர்ந்தாய் போற்றி

ஓம் ஆறு குதிரைத் தேராய் போற்றி

ஓம் வடமேற்றிசையில் நின்றாய் போற்றி

ஓம் நீதி நெறிசேர் கேதுவே போற்றி

ஓம் தவத்தால் கோள் நிலை பெற்றாய் போற்றி

ஓம் ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி

 

என்று தோத்திரம் சொல்லி வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள் கிட்டும். இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுட்டிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுட்டிக்க வேண்டும்.

 

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம்.

"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி

சனி பாம்பிரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல

அடியார‌வர்க்கு மிகவே."

"என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க

எருதேறி யேழை யுடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்

உடனாய நாள்க ள‌வைதாம்

அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார‌வர்க்கு மிகவே. "

"உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேல்

முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி

திசை தெய்வமான பலவும்

அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார‌வர்க்கு மிகவே. "

"மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து

மறையோது மெங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்

கொடுநோய்களான பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார‌வர்க்கு மிகவே."

"நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்

விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்

மிகையான பூதம‌வையும்

அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார‌வர்க்கு மிகவே."

"வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்

மடவாள் தனோடும் உடனாய்

நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்

கொடு நாகமோடு கரடி

ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார‌வர்க்கு மிகவே."

"செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக

விடையேறு செல்வ னடைவார்

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும் வாத மிகையான‌பித்தும்

வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார‌வர்க்கு மிகவே."

"வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து

மடவாள் தனோடும் உடனாய்

வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்

உளமே புகுந்த வத‌னால்

ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்

இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார‌வர்க்கு மிகவே."

"பலபல வேடமாகும் பரனாரி பாகன்

பசுவேறும் எங்கள் பரமன்

சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்

வருகால மான பலவும்

அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல

அடியார‌வர்க்கு மிகவே."

"கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு

குணமாய வேட விகிர்தன்

மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்

திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார‌வர்க்கு மிகவே."

"தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி

வளர் செம்பொன் எங்கும் திகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து

மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே."

சுபம்

 

http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=431:2010-10-03-05-26-39&catid=59:cricket&Itemid=387

Link to comment
Share on other sites

சனி என்பது சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒரு கிரகம். அதுக்கு உயிரும் இல்லை, அதில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. 93 வீதம் ஹைட்ரஜனும், மிச்ச சொச்சமாக ஹீலியமும் கொண்ட, ஆகக் குறைந்தது 760 பூமிகளை தனக்குள் அடக்கக் கூடிய பிருமாண்டமான, அதிக வேகமாக சுற்றும் ஒரு கிரகம். அதுக்கு கோபம், தாபம் எல்லாம் வராது. யாரையும் பிடிச்சு பழிவாங்காது. சிவனே என்று தன் 60 உபகோள்களுடன் சுற்றிக் கொண்டு இருக்கும் ஒரு அப்பாவி கிரகம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கீட்டாளவை.........புரட்டாதிசனியிலை தொடங்கினாளவையெண்டால் கந்தசஷ்டி திருவெம்பாவை முடியும் மட்டும் மச்சச்சட்டியை  கண்ணிலையும் காட்டாளவை.....வாற இறுளுக்கு பயித்தங்காய்ச்சட்டியை தூக்கி எறியோணும் போலை கிடக்கு :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி அலைமகள் .போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே! நிழலிக்கு இப்ப வேலைப் பிரச்சினை என்ட படியால்  அவர்ர ராசிக்கு முதல் ராசில சனீச்வரன் பிரவேசிக்கிறார் போலக் கிடக்கு. கு.சாக்கு இப்ப நாக்குல சனி, நாளைக்கு பதிலிடேக்க தெரியும். :D  :D

Link to comment
Share on other sites

ஆனாலும் 8 கிரககங்களும் ஒரு சூரியனும் எங்க சூரிய குடும்பத்தில் இருக்கு என்றதை அப்பவே இந்து சமயம் கண்டு பிடித்திருப்பது பிரமிப்பானது. விஞ்ஞானமே சில வருடங்கள் முன்பு தான் 8 கிரகங்கள் என்று சொன்னது. ( நாங்கள் 9 கிரகங்கள் என்று படித்த்திருப்போம்). தவிர விரததங்களில் மூலம் இறைவன் ஒன்றும் தரப்போவதில்லை. ஆனால் அதில் நன்மைகள் உள்ளன என்று கண்டுபிடித்த்திருப்பதும் பிரமிப்பானதே.

 

 

Many people observe fasting as a religious obligation but only few know the health benefits it has. Fasting is a good practice, if properly implemented. It promotes elimination of toxins from the body, reduces blood sugar ans fat stores. It promote healthy eating habits and boost immunity. Here are top 10 health benefits you ca derive from fasting.


1. Fasting Promotes detoxification

Processed foods contain lots of additives. These additives may become toxins in the body. Some of them promote production of advanced glycation end products (AGEs). Most of these toxins are stored in fats. Fat is burnt during fasting, especially when it is prolonged. And the toxins are released. The liver, kidneys and other organs in the body are involved in detoxification. 

2. Fasting Rests Digestive System

During fasting, the digestive organs rest. The normal physiologic functions continue especially production of digestive secretions, but at reduced rates. This exercise helps to maintain balance of fluids in the body. Breakdown of food takes place at steady rates. Release of energy also follows a gradual pattern. Fasting however does not stop production of acids in the stomach. This is reason patients with peptic ulcer are advised to approach fasting with caution. Some experts believe they should not fast.

3. Fasting Resolves Inflammatory Response

Some studies show that fasting promotes resolution of inflammatory diseases and allergies. Examples of such inflammatory diseases are rheumatoid arthritis, arthritis and skin diseases such as psoriasis. Some experts assert that fasting may promote healing of inflammatory bowel diseases such as ulcerative colitis.

4. Fasting Reduces Blood Sugar

Fasting increases breakdown of glucose so that the body can get energy. It reduces production of insulin. This rests the pancreas. Glucagon is produced to facilitate the breakdown of glucose. The outcome of fasting is a reduction in blood sugar.

5. Fasting Increases Fat breakdown

The first response of the body to fasting is break down of glucose. When the store of glucose is exhausted, ketosis begins. This is break down of fats to release energy. The fats stored in kidney and muscles are broken down to release energy.

6. Fasting Corrects high blood Pressure

Fasting is one of the non-drug methods of reducing blood pressure. It helps to reduce the risk of atherosclerosis. Atherosclerosis is clogging of arteries by fat particles. During fasting glucose and later, fat stores are used to produce energy. Metabolic rate is reduced during fasting. The fear-flight hormones such as adrenaline and noradrenaline are also reduced. This keeps the metabolic steady and within limits. The benefit is a reduction in blood pressure.

7. Fasting Promotes Weight loss

Fasting promotes rapid weight loss. It reduces the store of fats in the body. However fasting is not a good weight loss strategy. Reducing fat and sugar intake, and increasing fruits and rest are better measures to achieve weight reduction.

8. Fasting Promotes Healthy diet

It has been observed that fasting reduces craving for processed foods. It promotes desire for natural foods, especially water and fruits. This is one way fasting promote healthy lifestyle.

9. Fasting Boosts Immunity

When an individual is on balanced diet in between fasts, this can boost immunity. Elimination of toxins and reduction in fat store also helps the body. When individuals take fruits to break a fast, they increase the body's store of essential vitamins and minerals. Vitamins A and E are good antioxidants readily available in fruits. They help to boost immunity.

10. Fasting May Help to Overcome Addictions

Some authors show that fasting can help addicts reduce their cravings, for nicotine, alcohol, caffeine and other substance abuse. Although there are other regimens required to resolve addictions, fasting can play a role.

Despite these benefits, fasting has some demerits. It may cause reduction in body water called dehydration. This leads may lead to headaches and even trigger migraines in predisposed persons. It may worsen heartburn and peptic ulcer. Pregnant women, nursing mothers, malnourished people, and individuals with cardiac arrhythmias, renal or liver problems are advised not to fast. 

References

Seliger, S. & Haines, C.D. (2012) 'Is Fasting Healthy?' Accessed fromhttp://www.webmd.com/diet/features/is_fasting_healthy

Panjwani, M. (2009) '11 Health Benefits of Fasting', Accessed fromhttp://mushpanjwani.com/2009/08/23/11-health-benefits-of-fasting/

 

http://voices.yahoo.com/10-incredible-health-benefits-fasting-11621130.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று மச்சம் சாப்பிட்டன் :) சனி என்னைத் தண்டிப்பாரோ :(  ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 வருடங்களுக்கு முன்பு சனி வழிபாடு இருக்கவில்லை. சனி பிடித்ததினால் திருநாவுக்கரசர் சிவனை நினைத்து தேவாரம் பாடியிருக்கிறார். அதாவது அக்காலத்தில் சனி பிடிக்காமல் இருக்க சிவனைத்தான் வழிபட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 வருடங்களுக்கு முன்பு சனி வழிபாடு இருக்கவில்லை. சனி பிடித்ததினால் திருநாவுக்கரசர் சிவனை நினைத்து தேவாரம் பாடியிருக்கிறார். அதாவது அக்காலத்தில் சனி பிடிக்காமல் இருக்க சிவனைத்தான் வழிபட்டிருக்கிறார்கள்.

நீங்கள் சொல்லிறது சரி தான், கந்தப்பு!

 

நாங்கள் தொலைத்தவகளைத் தேடித் பிடிக்கவேண்டிய காலம் நெருங்கி வருகின்றது!

 

மீண்டுமொரு முறை நிமிர்ந்து நிற்போமாக! :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்டாதி 2ம் சனிக்கிழமை.

 

விரதம் இருக்கிறவர்கள் காகத்திற்கும் சாப்பாடு வைச்சுட்டு சாப்பிடுங்கோ..பாடு பட்டு ஒரு காகம் பிடிச்சுட்டு வந்து இருக்கிறன். :)
 

 

 

1236716_640531849313967_550957906_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியானம் பார்த்திருந்தால் இந்தக் காகத்துக்கே வைத்திருப்பேன்! தவறிட்டுது!! :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று... இரண்டாவது புரட்டாதி சனி நடந்து முடிந்து விட்டது.
முதல் கிழமை... சனி விரதம் இருந்து... அறுசுவை உணவுடன் பப்படம் உட்பட...
காகத்துக்கு சோறு வைத்து சாப்பிடுவோம் என்று...
வாழை இலை கிடைக்காததால்... "ரீ" குடிக்கிற சோசரில்.. சோறைப் படைத்து, காகத்தைக் கா... கா... என்று கூப்பிட்டும்,
ஒரு ஜேர்மன் காகமும்...  வீட்டுப் பக்கம் வரவில்லை என்று, கவலையாயிருந்தது.

இந்தக் கிழமை... தமிழ்க் கடையில், வாழையிலையில்... சோறு வைத்தவுடன் கன காகம் வந்திருந்தது அதிசயமாயிருந்தது.

எனக்கு சனியின், பார்வை நீங்கி விட்டது என்று... ஒரே.... குசியாக இருக்குது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரதங்களால் வாடின் ஞானம் என்னாவது?

- சாலினி -
images-60.jpeg
 
ஈழத்தமிழர்கள் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு கூட தம்மை சைவசமயத்தவர்களாக நியாயப் படுத்தியவர்கள். உலகெலாம் பரந்து வாழத்தொடங்கிய பின்பு மெல்ல மெல்ல இந்துசமயக் கருத்துகளின் பல பம்மாத்துகளுக்குள் அகப்பட்டு நின்று தம்மை இந்துசமயத்தவராகக் காட்ட முற்படுகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை பாடசாலைகளில் சமயபாடத்தை கற்பிப்பதில்லை. ஆதலால் கடந்த நாற்பது ஐம்பது வருடங்களுக்கு மேலாக மாணவப்பருவத்தில் சமயங்கள் என்ன சொல்கின்றன என்பதை எவரும் படித்து அறியவில்லை.
 
தமிழகத்தில் சுவாமிமார்களும் சஞ்சிகைகளில் எழுதுவோருமே இந்துசமயக் கொள்கைகளை தத்தமக்குத் ஏற்றவாறு எடுத்துச் சொல்கின்றனர். அதனால் சைவசமயத்திலுள்ள பல நல்ல கொள்கைகள் ஆழக்குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டன. காயத்திரி மந்திரத்தை ‘ஓம் பூர்; புவஸ்வக.. தத்சவிதுர் வரேண்யம்..’ எனச் சொல்லத் தெரிந்தவர்களுக்கு ‘சொற்றுணை வேதியன்’ என்றோ ‘தோடுடைய செவியன்’ என்றோ சொல்லத்தெரியாது. இவர்களின் வழியைப் பின்பற்றியே இன்றைய உலகெலாம் பரந்து வாழும் தமிழரும் செல்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும். நான் சமயங்களுக்கு முரணானவள் அல்ல. எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை உடையவள். ஆனால் ஒரு மதமும் முழுமையானது அல்ல. ஆதலால் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவள்.
 
முன்பெல்லாம் அறியப்படாத வகையில் எத்தனையோ விதங்களில் விரதங்கள் பிடிக்கின்றோம். ஏன் விரதங்களைப் பிடிகிறோம், எப்படி விரதம் இருப்பது என்ற தெளிவு இல்லாமல் அந்த ஐயர் அப்படிச் சொன்னார். இந்த மாமி இப்படிச் சொன்னா என ஏதோ ஏதோ கற்பனைக் கதைகளைக் கூறி விரதம் இருக்கிறோம். நாம் போற்றி வணங்கும் சைவசமயச் சான்றோர்களாகிய மாணிக்கவாசகர், அப்பர், சம்பந்தர் மூவரும் விரதத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் பார்ப்போமா?
 
சமயத்தின் ஒரு தொழிற்பாடாக விரதத்தை அறிமுகம் செய்து வைத்தோர் வேதியர்களே என்பதை மாணிக்கவாசகர்
“விரதமே பரமாக வேதியரும்
சரதமாகவே சாத்திரம் காட்டினர்” - (திருவாசகம்: 4: 50 -51)
எனப் போற்றித்திருவகவலில் எடுத்துச்சொல்கிறார்.
 
மறைகளின் ஞான காண்டத்தில் நம்பிக்கை இல்லாது, கரும காண்டத்தை விரும்புபவரே வேதியர்(பிராமணர்). நாம் முற்பிறவியில் செய்த வினையே (கன்மம்) பயன் தரும் என்ற கொள்கையால் அவர்கள் விரதத்தை முதன்மை ஆக்கினர். அது சைவசமயத்தின் மெய்ஞானக் கொள்கைக்கு முரணானது. ஆதலால் சைவசமயச் சான்றோர்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கவில்லை. அதனாலேயே மாணிக்கவாசகரும் பிராமணர்கள் தம் கொள்கை உண்மையானது என்று விளக்க விரதத்தை மேலான பொருள் எனக்கூறி சாத்திர நூலைக் காட்டினர் எனச்சொல்வதோடு
“பாம்பின் கலாபேதத்த கடுவிடம் எய்தி” - (திருவாசகம்: 4: 56 -57)
என்று அவற்றை பாம்பின் கடுமையான விடம் எனவும் போற்றித்திருவகவலில் இடித்துச் சொல்கிறார்.
 
திருநாவுக்கரசு நாயனார் சமண சமயத்தவராக இருந்த காலத்தில் கடுமையான விரதமும் தவமும் இருந்தவர். அப்படி விதரதம் பிடித்தும் தவம் செய்தும் மனம் நிலையாக இல்லையாம். ‘எமது உடலின் தன்மை எமக்கு உரியதல்ல என்ற உண்மையை உரைத்தேன்‘ ஆதலால் விரதம் செய்வதை விட்டு இறைவனை நினைத்தால் உய்வடையலாம் என ஆறாம் திருமுறையில் கூறுகிறார்.
 
“உரித்தன் றுனக்கு இவ்வுடலின் தன்மை
உண்மை உரைத்தேன் விரதமெல்லாந்
தரித்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே!.....
...... நினைந்தக்கால் உய்யலாமே” - (பன்.திருமுறை: 6: 42: 10)
 
இப்படித் தனது அநுபவத்தை திருநாவுக்கரசு நாயனார் கூற திருஞானசம்பரோ ‘முத்தியும் அதனை அடைய வழிகாட்டும் ஞானமும் உங்களுக்கு வேண்டுமென்றால் விரதங்கள் இருந்து உடல் வாடுவதால் அறிவு என்ன ஆகும்?’ எனக் கேள்வி கேட்டுள்ளார். அடிக்கடி விரதங்கள் இருப்பதால் நம் உடல் சோர்வடைய எமது உண்மையான அறிவும் சோர்வடையும். சோர்வைடையும் அறிவில் எப்படி ஞானம் நிலைபெற்றிருக்க முடியும்?
“வீடு ஞானமும் வேண்டுதி
ரேல் விரதங்களால்
வாடின் ஞானம் என்னாவதும்” - (பன்.திருமுறை: 2: 2: 11)
என இத்தேவாரத்தில் திருஞானசம்பந்தர் அறிவுவார்ந்த கேள்வியையே எழுப்பியுள்ளார். அவர் இப்படி கேள்விகேட்டும் நாம் எமது மூடநம்பிக்கையில் இருந்து மீளாது மறைகள் கூறுகின்றன என பொய்மையில் மூழ்கிக்கிடக்கிறோம்.
 
நம் சைவசமயச் சான்றோர் சொன்ன வழிப்படி இனியாவது நடப்போமா?
 
 
Link to comment
Share on other sites

வளர்ந்த பின்னர் மனக்கணிதத்தில் நீங்கள் கணனியையும் வெல்லலாம். ஆனால் நீங்கள் சிறுவர்களாக இருக்கும் போது தவறு வரமலிருக்க கைவிரலை மடியுங்கள்.

 

உங்களில் யாரும் இன்னும் திருஞான சம்பந்தரோ, மாணிக்கவாசகரோ, அப்பரோ ஆகவில்லை. இதில் திருஞானசம்பந்த்ர் மட்டும் 16 வயதுக்குள் 1 லட்சம் தேவாரம் பாடினாராம். எனவே அவரின் அத்தனை தேவரங்களீலும் ஒன்றின் இரண்டு வரிகளை பொறிக்கி எடுத்து வைத்துக்கொண்டு அதை மட்டும்தான் அவர் சொன்னார் என்று அலப்பர் அடிப்பதை நிறுதிவிட்டு மற்ற்வையையும் தேடிப்பிடித்து படிக்க பாருங்கள்.  

 

திருஞான சம்பந்தரின் நிலையை அடைந்துவிட்ட உங்களில் இருக்கும் யாரையும் சனியன் ஒன்றும் செய்யாது. அதை சம்பந்தரே தான் சொன்னார். 

 

"ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே" 

 

திருஞான சம்பந்தரளவுக்கு அல்லது அப்பரளவுக்கு, அல்லது மணிவாசகர் அளவுக்கு நல்ல அடியார்களாக மாறியிருக்கும் உங்களில் சிலருக்கு, சனியனும் மிகவும் நல்லதாகவே நடந்து கொள்ளும் என்பத்தால் நீங்கள் மட்டும் விரதம் இருக்கத்தேவை இல்லை. மற்ற்வர்கள் தங்களை யார் என்று தெரியாவிட்டால் பாதுகாப்பாக விரத்தை பிடிபது சமர்த்தியமான செயல் போலத்தான் எனக்குப் படுகிறது. 

Link to comment
Share on other sites

எல்லோரும் பயத்தால் ஓடிவிட்டார்கள். எதற்கும் இனி சும்மா சேட்டைகள் விட்டு, வம்புகள் பேசித்திரியாமல் ஒழுங்காக விரதத்தை பிடிக்கவும்.

 

திருஞான சம்பந்தர் 3ம் வயதில் ஞானப்பால் உண்டு தேவாரம் பாடியதும், 16ம் வயதில் திருமணப்பந்தலில் தோன்றிய சோதியில் கலந்ததும் தான் பிரபல்யம். ஆனால் அவரின் சரித்திரம் ஆராயப்பட்டு அவர் பாடிய பாடல்களின் ஆண்டுகள் கணிக்கப்பட்டிருக்கின்றன. (என்னிடம் இப்போது இல்லை).

 

அந்த நிலையில் அவர் வேயிறுதோழிபங்கன் பாடிய வயதை சொல்ல முடியும். அவர் அதை பாட நேர்ந்தது அவர் பாண்டி நாட்டுக்கு அனல் வாதம், புனல் வாதததிற்கு போக தயாரான போது அவருக்கு கிரகநிலைகள் சரியில்லை என்று கூறி தடுத்த போதே.

 

சமணத் துறவிகளின் கழுவேற்றல், தீயில் போடல், கடலில் ஏறிதல் போன்ற கொடுங்கோலுக்கெதிராக தமிழ் நாடு எங்கும் மதக்கலவரங்கள் பரவியிருந்தது. கலவரத்தை ஆரம்பித்துவைத்த திருநாவுக்கரசர் கவனமாக செயல்ப்பட்டார். இதனால் துறவியாக இருந்தும் 80 வயதுவரை வாழ்ந்தார். இளைஞனான சம்பந்தர் கவனமாக இருக்கவில்லை. பாண்டி நாட்டிற்கு அவர் துணிவாக வந்த போது அவரை அழைத்த அரசி மங்கையற்கரசி தானே பயந்து பந்தயங்களை நிறுத்த முயன்றாள்.  ஆனால் அவர் முன்னால் சென்று பந்தயங்களை வென்றார். இதனால் சமணர்களின் அதி உச்ச வெறுப்பை சம்பாதித்தார்.

 

அவரின் சேவைக்காலம் (16-3=) 13 ஆண்டுகளே. அதில் 7 1/2 நாட்டான் பிரச்சனை கொடுத்தாக இருந்திருந்தால் அவர் 5 1/2 வருடங்கள் மட்டும்தான் சாதாரண வாழ்க்கை அனுபவித்திருந்திருக்க முடியும். இதில் அவர் பாண்டிநாட்டுக்கு எத்தனை வயதில் சென்றார் என்பது தெரிந்தால், எத்தனையாவது வயதில் அவர் மணப்பந்தலில் ஏற்பட்ட தீயில் இறந்தார் என்பது தெரியும் என்பதால் அவரை ஏழரைநாட்டான்தான் பழிவாங்கியதா என்பதை இலகுவாக சொல்ல முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று... இரண்டாவது புரட்டாதி சனி நடந்து முடிந்து விட்டது.

முதல் கிழமை... சனி விரதம் இருந்து... அறுசுவை உணவுடன் பப்படம் உட்பட...

காகத்துக்கு சோறு வைத்து சாப்பிடுவோம் என்று...

வாழை இலை கிடைக்காததால்... "ரீ" குடிக்கிற சோசரில்.. சோறைப் படைத்து, காகத்தைக் கா... கா... என்று கூப்பிட்டும்,

ஒரு ஜேர்மன் காகமும்...  வீட்டுப் பக்கம் வரவில்லை என்று, கவலையாயிருந்தது.

இந்தக் கிழமை... தமிழ்க் கடையில், வாழையிலையில்... சோறு வைத்தவுடன் கன காகம் வந்திருந்தது அதிசயமாயிருந்தது.

எனக்கு சனியின், பார்வை நீங்கி விட்டது என்று... ஒரே.... குசியாக இருக்குது. :)

சாட்சாத் சனீஸ்வரனே, மினக்கட்டு வீடு தேடி வந்திருக்கிறார் என்றால்,

தமிழ் சிறியின் பெருமை சொல்லவும் எளிதோ? :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.