• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

அஞ்சரன்

விளங்கவில்லை ..!

Recommended Posts

மக்களின் தீர்ப்பை இனத்தின்
விதியை ஒருசிலர் கையில் எடுத்து
நாங்கள் சொல்வதை மட்டும் எழுத்து
என முனிவர் கணக்கா கதை சொல்ல
கொம்பு உடைத்து எழுதிய கணபதிகள்

சிங்க கொடிபிடித்து விட நீ இன துரோகி
சிங்களத்தின் அருவருடி மாமா வேலை என
தலைமை செய்த தெரிவை நாங்களே
மாற்றுவோம் என பொங்கினர் இங்கின
பல தலைமை விளங்கவில்லை ...

பலர் வெளிய போயினர் சிலர் உள்ளே வர
இவர்கள் சரிவறார் கொள்கையை விடுகிறார்
நாங்கள் தொடங்குவோம் புது கட்சி தேசியம்
பேசினோம் தேசியத்தை தூக்கலா பேசினோம்
எவரும் மதிக்கவில்லை காரணம் விளங்கவில்லை ..

காலம் நெருங்கி வர ஈழம் விடை சொல்லும்
நேரம் காத்திருந்த மக்கள் பழைய பாடம் மறவாது.
மேல்குடி மகன் வடக்கு தெரியாதவர் இவர் வேணாம்
புலம் பெயர்த்த புலிகள் என சொல்லிக்கொள்வோர்
வசைகளை கையில் எடுத்தனர் சிங்கள் உறவுக்காரன்
சம்மந்தி வேற கணவன் மனைவி எங்கிறான் ..

என்ன தெரியும் இவருக்கு புலி அல்ல பூனை
இது நேற்று வந்தவர் எமக்கு வகுப்பு வேற
இதுக்கும் ஈழத்து சில ஜால்ரா மணிகள் பாராட்டு
என்ன இது அவர் என்ன ஈழத்தை விக்கவா வந்தார்
மொத்தமா வாங்கா வந்தார் எதுக்கு இவ்வளவு குதியல்
யோசிச்சேன் விளங்கவில்லை ..

மையை கையில் எடுத்த என் உறவு ஈழ மக்கள்
பூசினர் வீடுக்கு மிகுதியை பூசினர் எதிரி முகத்தில்
அடித்து போட்டு நெற்றியில் துப்பாக்கி வைத்தாலும்
உன்னை சுட்டு எரிப்பேன் என அச்சுறுத்தல் இட்டாலும்
என் வாழ்வும் சாவும் மண்ணுக்கும் மக்களுக்கும் போனால்
என் வாழ்க்கை வரலாறு ஆகும் ...

அரியணை ஏற்றினர் எடுத்த முடிவை சரியாக்கி
சினிமா கூத்தாடியை நம்பி பிழைக்க நாங்கள் என்ன
முட்டாள்கள் அல்ல தலைவன் நிழலில் வளர்த்த மக்கள்
சிலர் மதில்மேல் பூனையை போல விழி பிதுங்கி நிக்க
துரோகி என கூவியோர் கூட்டமைப்பின் வெற்றியை
தங்களின் வெற்றி என்கிறார் இப்பொழுது

முன்னம் அதிகாரம் இல்லை பொம்மை வேணாம் என்றார்
இப்பொழுது அவர் அதை செய்ய வேணும் இதை செய்ய வேணும்
தலைவனை மறக்காமல் மாவீரரை மறக்காமல் நடக்க வேணும்
வேண்டுகோள் போடுகிறார் விமர்சனம் சொல்கிறார் அதுதான்
அதிகாரம் இல்லா பதவி எப்படி முடியும் அவர் இவளவும் செய்ய
அதுதான் எனக்கு விளங்கவில்லை .....!

Share this post

Link to post
Share on other sites
எனக்கும் விளங்கவில்லை ...............நீங்கள் பார்ப்பது மக்களின் மனங்களில் இருந்து வந்த உறங்கி கிடந்த உணர்வையா ,உண்மையையா ..............அல்லது ஏதோ ஒன்றை பழிவாங்கவேணும் என்பதற்காக தேடலின் ,மூலம் இலக்கை அடைவதற்காக பரிந்துரைக்கப்பட்ட விடை தேடிய கருத்துக்களையா .............அல்லது அர்த்தமற்ற பழிவாங்கும் நடவடிக்கையை காட்டும் உங்கள் தாழ்வு மனப்பான்மையா ................உண்மையாய் விளங்கவில்லை 
 
ஒன்றுமட்டும் கூறுகிறேன் இந்த தேர்தலின் வெற்றியில் மகிழ்ச்சியடையா எந்த தமிழனும் தமிழனாய் இருக்க முடியாது ........எனனில் அடக்கி ஒதுக்கப்பட்டு கொண்டிருக்கும் எம் உறவுகள் வீரமாக ,உணர்வாக தம் உண்மை முகத்தை காட்டினார்கள் அதற்காகவே .வேறொன்றுக்காகவும் இல்லை ,.......... 
 
சிறு விடயம் பாதுகாப்பான நாடுகளில் வாழும் நாமே எம் முகத்தை காட்டாமல் கணனிக்கு கணனி கருத்தேழுதும்போது .............அத்தனை பாதுகாப்பற்ற நிலையிலும் உண்மை முகத்தை காட்டிய  அந்த உறவுகளின் உள்மனதில் இருந்து வந்ததை ,அந்த விடுதலைப்புலிகள் காலத்து வீரத்தை வெற்றியாக கொண்டாடாமல் எந்த உணர்வுள்ள தமிழனும் இருக்க மாட்டான் .......................பொறுத்திருங்கள் இன்னும் பல உண்மைகள் உங்களுக்கு புலப்படும் .

Share this post

Link to post
Share on other sites

இன்னும் ஒரு துரும்பைத்தன்னும் விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்துவைக்கவில்லை. அதற்கிடையில் அவரைப்பற்றி துதிபாட ஆரம்பித்து ஆயிற்று. எவராவது இது ஒரு தனிமனிதனின் வெற்றி எனச்சொல்வாராயின் அவரது அறிவு அந்தளவே. நீதிபதி அவர்கள் கூட்டமைப்புக்குள் இருந்தபடியால் அதிக விருப்புவாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வரமுடிந்தது. எதிரணியில் நின்றிருந்தால் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். இவர் அரசின் பக்கம் சாயமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இவர் இல்லது வேறு எவராவது வடக்கின் முதல்வரானால்கூட ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் ஒரு எதிர்பார்ப்பு அவர்மேல் இருக்கும்.

மீண்டும் மீண்டும் ஒர் ஈழத்தமிழ் ஆதரவாளனை சினிமா கூத்தாடி என அழைப்பது வருந்தத்தக்கது.

இதனை நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

Super :D

Share this post

Link to post
Share on other sites

எனக்கும் விளங்கவில்லை ...............நீங்கள் பார்ப்பது மக்களின் மனங்களில் இருந்து வந்த உறங்கி கிடந்த உணர்வையா ,உண்மையையா ..............அல்லது ஏதோ ஒன்றை பழிவாங்கவேணும் என்பதற்காக தேடலின் ,மூலம் இலக்கை அடைவதற்காக பரிந்துரைக்கப்பட்ட விடை தேடிய கருத்துக்களையா .............அல்லது அர்த்தமற்ற பழிவாங்கும் நடவடிக்கையை காட்டும் உங்கள் தாழ்வு மனப்பான்மையா ................உண்மையாய் விளங்கவில்லை 
 
ஒன்றுமட்டும் கூறுகிறேன் இந்த தேர்தலின் வெற்றியில் மகிழ்ச்சியடையா எந்த தமிழனும் தமிழனாய் இருக்க முடியாது ........எனனில் அடக்கி ஒதுக்கப்பட்டு கொண்டிருக்கும் எம் உறவுகள் வீரமாக ,உணர்வாக தம் உண்மை முகத்தை காட்டினார்கள் அதற்காகவே .வேறொன்றுக்காகவும் இல்லை ,.......... 
உண்மைதான், நானும் மிக்கமகிழ்வுடன் இருக்கிறேன்...உப்புச்சப்பற்ற மாகாணசபையென்றாலும், இதைவைத்து எதையும் செய்யமுடியாதென்றாலும், "நாம் வீழ்ந்தது உண்மையாயினும் வீழ்ந்தே கிடக்கவில்லை" என்றெழுந்து, அடித்தவன் முகத்திலேயே திருப்பியடித்து தங்கள் மனதிருந்த கோபத்தையும் வெளிப்படுத்திவிட்டனர்.
 
சிறு விடயம் பாதுகாப்பான நாடுகளில் வாழும் நாமே எம் முகத்தை காட்டாமல் கணனிக்கு கணனி கருத்தேழுதும்போது .............அத்தனை பாதுகாப்பற்ற நிலையிலும் உண்மை முகத்தை காட்டிய  அந்த உறவுகளின் உள்மனதில் இருந்து வந்ததை ,அந்த விடுதலைப்புலிகள் காலத்து வீரத்தை வெற்றியாக கொண்டாடாமல் எந்த உணர்வுள்ள தமிழனும் இருக்க மாட்டான் .......................பொறுத்திருங்கள் இன்னும் பல உண்மைகள் உங்களுக்கு புலப்படும் .

துப்பாக்கிகளால் அடக்கியாளப்பட்ட உணர்வுகள்...பொங்கிவெடித்து புதுயுகம் படைத்தன.

"சுதந்திர வேட்கையைச் சுடுகலன்களும் வெல்லுமோ?"

Share this post

Link to post
Share on other sites

எனக்கும் விளங்கவில்லை ...............நீங்கள் பார்ப்பது மக்களின் மனங்களில் இருந்து வந்த உறங்கி கிடந்த உணர்வையா ,உண்மையையா ..............அல்லது ஏதோ ஒன்றை பழிவாங்கவேணும் என்பதற்காக தேடலின் ,மூலம் இலக்கை அடைவதற்காக பரிந்துரைக்கப்பட்ட விடை தேடிய கருத்துக்களையா .............அல்லது அர்த்தமற்ற பழிவாங்கும் நடவடிக்கையை காட்டும் உங்கள் தாழ்வு மனப்பான்மையா ................உண்மையாய் விளங்கவில்லை 
 
ஒன்றுமட்டும் கூறுகிறேன் இந்த தேர்தலின் வெற்றியில் மகிழ்ச்சியடையா எந்த தமிழனும் தமிழனாய் இருக்க முடியாது ........எனனில் அடக்கி ஒதுக்கப்பட்டு கொண்டிருக்கும் எம் உறவுகள் வீரமாக ,உணர்வாக தம் உண்மை முகத்தை காட்டினார்கள் அதற்காகவே .வேறொன்றுக்காகவும் இல்லை ,.......... 
 
சிறு விடயம் பாதுகாப்பான நாடுகளில் வாழும் நாமே எம் முகத்தை காட்டாமல் கணனிக்கு கணனி கருத்தேழுதும்போது .............அத்தனை பாதுகாப்பற்ற நிலையிலும் உண்மை முகத்தை காட்டிய  அந்த உறவுகளின் உள்மனதில் இருந்து வந்ததை ,அந்த விடுதலைப்புலிகள் காலத்து வீரத்தை வெற்றியாக கொண்டாடாமல் எந்த உணர்வுள்ள தமிழனும் இருக்க மாட்டான் .......................பொறுத்திருங்கள் இன்னும் பல உண்மைகள் உங்களுக்கு புலப்படும் .

நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தையும் நான் என்னை கேட்டதன் விளைவே எனது வரி இதில் சொல்லிய அனைத்தும் தேர்தலுக்கு முன் இணையங்களில் உலாவிய கருத்துக்கள் விமர்சனங்கள் என் சொல்ல    போனால் யாழில் கூட பல திரிகளில் போட்டு வாங்கினார்கள் விக்கினேஸ்வரன் இடத்தில் ஒரு அப்பனோ சும்மனோ இருத்தா கூட எமது மக்களின் தீர்ப்பு இதுவாதான் இருத்து இருக்கும் ஏனெனில் அவர்கள் தலைவரின் பாதையில் கடைசிவரை நடந்தவர்கள் என்பதால் ஆனால் நாம் அப்படி அல்ல சந்தர்ப்ப அரசியல் ஒரு சொல்லு பிழையா வந்தா போதும் உடனம் துரோகி ஆக்கி பச்சை குத்தி விடுவம் வெற்றி ஓவரு ஈழ தமிழனும் கொண்டாடவேண்டியது காலத்தின் கட்டாயம் .

தவறுகள் திருத்த படவேண்டியது நியாய படுத்த கூடாது ..

ஒரு நல்ல அரசியல்வாதிக்குச் சரியான வழிகாட்டி

மக்களிடமும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளிடமும் இருந்து வரும்

உண்மையான நேரடியான விமர்சனம் தான். தேவை வரும்போது

அரசியல்வாதிகள் விடும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் என்ன தப்பு.

நடந்து முடிந்த ஒரு பெரும் அவலத்தையே கொச்சைப்படுத்தி எழுதும் களத்தில்

அரசியல்வாதிகளை நேரடியாக விமர்சிப்பதை வரவேற்பவர்களில் நானும் ஒருவன். :D  :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

நன்றி அனைவருக்கும் வரவுக்கும் கருத்துக்கும் .

Share this post

Link to post
Share on other sites