Jump to content

தமிழ்த் தேசிய ஆதரவு ஊடகங்களின் நடத்தை


Recommended Posts

சிறீலங்காவின் போரியல் அறிக்கைகள் என்பது இராணுவத்தின் மனோதிடத்தை அதிகரிக்கவும்..போராளிகளின் தமிழ்மக்களின் மனோதிடத்தை வலுவிழக்கச் செய்யவும் என்றுதான் அமையும். இதைத்தான் பொஸ்னிய..கொசொவோ...ஈராக்..ஆப்கன்.

யுத்தத்தில் அமெரிக்காவும்..மத்திய கிழக்கில் இஸ்ரேலும்...காஷ்மீரில் இந்தியாவும் செய்து வருகின்றன..! அதற்கு ஒத்தாசை புரிவது போல..பல தமிழ் ஊடங்கள் செயற்பட்டுவருகின்றன. இதைக் கடந்த காலங்களில் இங்கு குருவிகள் சுட்டிக்காட்டிய போதும்..பலர் சண்டைக்கு வந்தனரே தவிர...சொன்னதை புரிந்து கொள்ள முனையவில்லை...!

புலிகள் பற்றி மக்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை வழங்குவது தமிழ் ஊடகங்களின் முக்கிய பணி என்றுதான் பல ஊடகங்கள் செயற்படுகின்றன. ஆனால் அந்த எதிர்பார்ப்பு தகர்ந்து விடும் போது..எதிரியின் பிரச்சாரத்துக்கு இடமளிக்காமலே மக்கள் மனதளவில் சோர்வடைகின்றனர் என்ற உண்மையை அவர்கள் உணர்பவர்களாக இல்லை..!

எனவே மக்களுக்கு மிகைப்படுத்தல்கள் செய்திகளை வழங்காமல்...யதார்த்ததுக்கு உரியதும் மக்களை பாதுகாக்க கூடியதும்..மக்கள் எதிரியின் பிரச்சாரங்களுக்குள் தங்களை சமாளித்து போராட்டத்தின் நியாயமான யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு..அதற்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்தவும் இடமளிக்க வேண்டும்..!

அதைவிடுத்து..எதிர்பார்ப்புக்

Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply

தாயகத்திலுள்ள மக்களின் எதிர்பார்ப்புகள் புலம்பெயர்ந்த நாடுகளில் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும் ஊடகங்களால் உருவாக்கப்படுகிறது என்பது பற்றி விளங்கவில்லை. இதை கட்டுப்படுத்துவது தாயகத்து ஊடகங்கள். தாயகத்து ஊடகங்கள் ஒப்பீட்டளவில் இதை திறம்பட செய்கிறார்கள். இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் குறைபாடுகள் பற்றி தமிழ்சமூகத்தில் பல ஆய்வுகள் விமர்சனங்கள் வந்திருக்கு. வெளிநாட்டில் இருந்து கொண்டு தாயகத்து ஊடகங்கள் பற்றி விமர்சிக்கி முடியாது அதற்கு அருகதையும் இல்லை.

இங்கு என்னுடைய விமர்சம் எல்லாம் இணையங்கள் தொலைக்காட்சிகள் வானொலிகள் என்று புலம் பெயர்ந்த சமூகத்தை நோக்கிய ஊடகங்கள் பற்றியது.

போர்சூழ்நிலையில் தாயகத்து ஊடகங்கள் செய்யவதற்கு ஒரு பணியிருக்கிறது. புலம்பெயர்ந்த ஊடகங்கள் செய்வதற்கு வேறு ஒரு பணியிருக்கிறது. தாயகத்து ஊடகங்களில் வருபவற்றை வெட்டி ஒட்டியோ அல்லது அந்த பாணியில் கண்ணோட்டத்தில் புலம்பெயர்ந்த ஊடகங்களும் நடப்பது தவறு மாத்திரமல்ல பல சந்தர்பங்களில் எமக்கு பாதகமானதும் கூட.

சர்வதேச ஊடகங்களில் செய்திகளை அவதானித்தால் தெரியும் 2..3 வசனங்களில் தான் இராணுவ விடையம் சார்ந்த இழப்புகள் வெற்றிகள் தோல்விகள் பற்றிய விபரங்களை எழுதுவார்கள். மற்றும்படி 90வீதத்திற்கு மேற்பட்ட அந்த செய்தியில் தலையங்கம் முதல் ஆரம்பம் முடிவு என்பன எல்லாம் மனிதநேயப் பிரச்சனைகள், அவலங்கள், அரசியல் பின்னணிகள், இராஜதந்தி பின்னணிகள் சம்பந்தப்பட்ட வரலாறு பற்றிய சிறு குறிப்பு என்று முழுமையாக அது இருக்கும்.

அவ்வாறான ஒரு கண்ணோட்டத்தில் தரத்திலான கருத்தியல் தாக்கத்தை சர்வதேச அளவில் தேசிய ஆதரவுத்தளத்தில் இருந்து செய்ய வேண்டியது தான் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் அனைத்து ஊடகங்களின் கடமை. அது IBC, CMR போன்ற வானொலிகளோ TTN, TVI போன்ற தொலைக்காட்சிகளோ பலதரப்பட்ட இணைய ஊடகங்களே சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. குறுக்ஸ் அண்ணா!

என் கருத்தினைத் தெரிவித்ததற்கு காரணம். நாங்களாகவே, எம்மைத் துகிலுரிக்க கூடாது என்பதற்காகத் தான். உங்களின் விமர்சனத்தில் தலையிட விரும்பவில்லை.

ஆனால், இதை சில சந்தர்ப்பவாதிகள் பயன்படுத்தும்போது, அதற்கு பதிலளிக்க வேண்டிய தேவையும் உங்களையே பொறுத்தது.

நான், என்ன பிரச்சனையிருந்தாலும் தேசிய ஆதரவு நிலையை வெளிப்படுத்தும் எதையுமே, விவாதம் என்ற பெயரில் மலினப்படுத்தக் கூடாது என்றே நினைத்தேன்.

உங்களின் எண்ணங்கள் பலனளிக்க வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

சிறீலங்காவின் போரியல் அறிக்கைகள் என்பது இராணுவத்தின் மனோதிடத்தை அதிகரிக்கவும்..போராளிகளின் தமிழ்மக்களின் மனோதிடத்தை வலுவிழக்கச் செய்யவும் என்றுதான் அமையும். இதைத்தான் பொஸ்னிய..கொசொவோ...ஈராக்..ஆப்கன்.

யுத்தத்தில் அமெரிக்காவும்..மத்திய கிழக்கில் இஸ்ரேலும்...காஷ்மீரில் இந்தியாவும் செய்து வருகின்றன..! அதற்கு ஒத்தாசை புரிவது போல..பல தமிழ் ஊடங்கள் செயற்பட்டுவருகின்றன. இதைக் கடந்த காலங்களில் இங்கு குருவிகள் சுட்டிக்காட்டிய போதும்..பலர் சண்டைக்கு வந்தனரே தவிர...சொன்னதை புரிந்து கொள்ள முனையவில்லை...!  

புலிகள் பற்றி மக்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை வழங்குவது தமிழ் ஊடகங்களின் முக்கிய பணி என்றுதான் பல ஊடகங்கள் செயற்படுகின்றன. ஆனால் அந்த எதிர்பார்ப்பு தகர்ந்து விடும் போது..எதிரியின் பிரச்சாரத்துக்கு இடமளிக்காமலே மக்கள் மனதளவில் சோர்வடைகின்றனர் என்ற உண்மையை அவர்கள் உணர்பவர்களாக இல்லை..!

எனவே மக்களுக்கு மிகைப்படுத்தல்கள் செய்திகளை வழங்காமல்...யதார்த்ததுக்கு உரியதும் மக்களை பாதுகாக்க கூடியதும்..மக்கள் எதிரியின் பிரச்சாரங்களுக்குள் தங்களை சமாளித்து போராட்டத்தின் நியாயமான யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு..அதற்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்தவும் இடமளிக்க வேண்டும்..!  

அதைவிடுத்து..எதிர்பார்ப்புக்

Link to comment
Share on other sites

தாயகத்திலுள்ள மக்களின் எதிர்பார்ப்புகள் புலம்பெயர்ந்த நாடுகளில் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும் ஊடகங்களால் உருவாக்கப்படுகிறது என்பது பற்றி விளங்கவில்லை. இதை கட்டுப்படுத்துவது தாயகத்து ஊடகங்கள். தாயகத்து ஊடகங்கள் ஒப்பீட்டளவில் இதை திறம்பட செய்கிறார்கள். இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் குறைபாடுகள் பற்றி தமிழ்சமூகத்தில் பல ஆய்வுகள் விமர்சனங்கள் வந்திருக்கு. வெளிநாட்டில் இருந்து கொண்டு தாயகத்து ஊடகங்கள் பற்றி விமர்சிக்கி முடியாது அதற்கு அருகதையும் இல்லை..

குறுக்ஸ் நீங்கள் சொல்லவதின் உண்மைத்தன்மை புரியாமல் நான்கூடா உங்களுடன் முரண்டு பிடிக்கவில்லை...

ஆனாலும் இண்றைய தேவையின் முக்கிய விடயங்களாக சிலதை நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.... இலங்கையில் சண்டையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்க படாத மக்கள் எவரும் இல்லை... அப்படி இலங்கை இராணுவத்தால் இன்னலுக்கு உள்ளான எங்களை போண்ற எல்லாரும் வேண்டுவது இலங்கை படைகளின் வீழ்ச்சி இதை மறுக்க முடியாது... அவன் படும் துன்பதை கேட்பதில் இருக்கும் இன்பம் வேறு எதிலும் இல்லை.. காரணமாக நாங்கள் பட்ட துன்பங்கள் ஓடி ஒளிவுகள் சுற்றிவளைப்புக்கள் பூட்ஸ்காலால் உதை படல் எண்று பலவிடயங்கள் இருக்கின்றது.... அப்படி இலங்கை படைகளை எம்மவர்கள் விரம்டும் செய்திகள் போய்சேரும் வேகம் இங்கு ஊடகங்களில் வரும் ஆராட்ச்சி கட்டுரைகள் போய் சேருவதும் இல்லை....!

இங்கு இருக்கும் ஊடகங்கள் அதைதான் செய்கிறார்கள் மக்கள் வேண்டும் செய்தியை அவர்கள் வேண்டிய முறையில் கொண்டு சேர்ப்பது. அதை தவறி எண்றும் சொல்ல முடியாது... அதே ஊடகங்கள் தான் ஈழத்தையும் புலம்பெயர் நாட்டையும் பிணைத்து நிற்கிண்றது....! அங்கு நடக்கும் அவலங்கள் கூட நிமிடங்களில் எங்களை ஆடவைக்கிறது... செய்தி தடை விதித்து இந்த ஊடக பலத்தைத்தான் சிதறடிக்கவேண்டும் என்பதில் இலங்கையும் பாடு படுகிண்றது....!

நீங்கள் சொல்வது போல இருக்கும் ஊடகங்கள் மேலதிகமாக செய்திகளையும் பேட்டிகளையும் கொண்டு வருவதில் தவறும் ஏதும் இல்லை... ஆனால் இருப்பதை இப்போதைக்கு மாற்ற வேண்டியதில்லை...!

இங்கு இங்கிலாந்தை அறிந்த நீங்கள் இங்குள்ள பத்திரிகைகளை பற்றி அறிந்து இருப்பீர்கள்.... இங்குள்ள பத்திரிகைகளிலேயே அதுகமாக விற்பனையாவது SUN பத்திரிகை... அப்படியானால் INDIPENTAN பத்திரிகை நல்லதல்ல எண்று அர்த்தம் ஆகாது ஆனாலும் ஒரே செய்திகள் மக்களிடம் போய்சேரும் விதம் வேறாக இருக்கிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//இங்கு இருக்கும் ஊடகங்கள் அதைதான் செய்கிறார்கள் மக்கள் வேண்டும் செய்தியை அவர்கள் வேண்டிய முறையில் கொண்டு சேர்ப்பது. அதை தவறி எண்றும் சொல்ல முடியாது...//

ரெண்டாம் தரமாக கட்டுநாயக்காவை அடிச்சாச்சு எண்டு அடுத்த செய்தியைப் போட்டாச் சரி.

:D:lol:

Link to comment
Share on other sites

நல்லவன்

போறபோக்கைப் பார்த்தால் நீங்களே ஐடியா கொடுப்பீர்கள் போலுள்ளது. தப்பித்தவறி இதை சபேசன் பார்த்தால் அவரது தளத்தில் தனக்கு நம்பகமானவரிடமிருந்து கிடைத்ததாக தலைப்புச் செய்தியாகவே போட்டுவிடுவார். :roll: :lol: :roll: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அப்படிச் செய்வார் என்று உமக்கு எப்படித் தெரியும். எதிர்வு கூறல் மூலம் அவரின் ஊடகத்தை மட்டம் தட்டுகின்ற வேலையை நிற்பாட்டும்.

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் Sun போன்ற அதிகம் விற்பனையாகும் tabloids தான் அதன் மக்களை தமது தேசியம் நாடு சம்பந்தப்பட்ட முக்கிய விடையங்கள் பற்றி அறிவூட்டல்களை செய்கிறது அதற்கான அவர்களது பங்குகள் நடவடிக்கைகளுக்கு அவர்களை தயார்படுத்துகிறது. ஆனபடியா எமது புலம்பெயர்ந்த சமூகத்து ஊடகங்கள் தற்போது உள்ள tabloid பாணியில் இருந்தால் போதும் மாற்றங்கள் தேவையில்லை. ஏன் என்றால் அவை புலம்பெயர்ந்துள்ள மக்களை மகிழ்விக்கும் அவர்களுடைய கடந்த கால தாயகத்து கசப்பான அனுபவங்கள் சார்ந்த மகிழ்ச்சியான செய்திகளை கொண்டு வருகிறார்கள்.

ஆக எமது ஊடகங்கள் எங்களை மகிழ்விக்க தான் இருக்கு இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதும் அது தான். சிங்கள படை வீழ்நத்தது தோற்றது என்ற வற்றை நேர்முகம் செய்து நல்ல வியாபாரத்தை நடத்த வேண்டும்.

மொத்தத்தில் இங்கு கவனமும் முக்கியமும் கொடுக்கப்படுபவையை பார்த்தால் புலம்பெயர்ந்தவர்களை மகிழ்விக்க பொழுபோக்கத்தான் ஊரிலை... அதை இங்குள்ள ஊடகங்கள் கரணம் தவறாது அறிவிக்கினம் போட்டி போட்டுக் கொண்டு world Cup, Olympicபோலை. சாரம்சமாக கூறக்கூடியது நல்லதொரு entertainment business with lots of happy customers!

Link to comment
Share on other sites

//இங்கு இருக்கும் ஊடகங்கள் அதைதான் செய்கிறார்கள் மக்கள் வேண்டும் செய்தியை அவர்கள் வேண்டிய முறையில் கொண்டு சேர்ப்பது. அதை தவறி எண்றும் சொல்ல முடியாது...//

ரெண்டாம் தரமாக கட்டுநாயக்காவை அடிச்சாச்சு எண்டு அடுத்த செய்தியைப் போட்டாச் சரி.

:D:lol:

அதன் உண்மைத்தன்மை என்ன எண்று ஆராயமல் நம்ப தயாராகும் நீங்கள் இருக்கும் போது செய்தி போடுபவர்களும் இருப்பார்கள்.... குற்றங்களை மற்றவர்களிடம் தேடுவதை விடுத்து உங்களை திருத்த முயற்ச்சி செய்யலாமே....???

எதுக்கு ஆதரவு எண்று இருக்கிறது எண்று உணர்ந்து அந்த வளியில் செய்திகள் சொல்வது உலக பத்திரிகை தர்மம்....

முடிந்தால் நீங்கள் ஒரு இணைய பத்திரிகை ஆரம்பித்து வெற்றி ஈட்டிக்காட்டுங்கள்.... எந்த மொழியில் வேண்டுமானாலும் அது இருக்கட்டுக்கும்...! :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

மொத்தத்தில் இங்கு கவனமும் முக்கியமும் கொடுக்கப்படுபவையை பார்த்தால் புலம்பெயர்ந்தவர்களை மகிழ்விக்க பொழுபோக்கத்தான் ஊரிலை... அதை இங்குள்ள ஊடகங்கள் கரணம் தவறாது அறிவிக்கினம் போட்டி போட்டுக் கொண்டு world Cup, Olympicபோலை. சாரம்சமாக கூறக்கூடியது நல்லதொரு entertainment business with lots of happy customers!

வியாபார நோக்கம், விளம்பரம் இன்னொண்று, எண்று இலகுவாக சொல்லலாம் ஆனால் அவர்கள் இந்த நிலையில் பலரும்படிக்கும் நிலைக்கு வருவதற்கு இலகுவாக இருந்திருக்காது....

செஞ்சோலை படுகொலைகளின் போது TTN செய்திகளை விரைவாகவும் பொறுப்பாகவும் தரவில்லை எண்று யாழ்களத்தில் சொன்னவர்கள் ஏராளம்.... இணையங்கள்தான் பொறுப்பாக சொல்லுவதாயும் பலர் ஆதங்கப்பட்டனர்... அதேபோல பொறுப்பாக நடப்பதாக எண்ணி இணையங்கள் அந்த செய்தியைசொல்லாமல் விட்டு ஊர்ஜிதப்படுத்த முயண்று இருந்தால் யாரோ ஒருவர் BBCயில் படித்ததாக புலிகளின் சிறுவர் பயிற்ச்சி முகாம் தான் தாக்கப்பட்டதாக சொல்லி இங்கும் கொண்டுவந்து ஒட்டி இருப்பார்.....

பல குளப்பத்தின் மத்தியில் நாங்களும் விளிபிதுங்கித்தான் இருந்திருக்க வேண்டும்...

இப்போதும் சொல்லக்கூடியது பத்திரிகைகள் தங்களின் தரத்தை உயர்த்த மேலதிக சேவைகளை கொண்டு வருதல் நல்லமே தவிர அவர்களின் பாணியை மாற்ற வேண்டியது இல்லை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thala wrote:

//அதன் உண்மைத்தன்மை என்ன எண்று ஆராயமல் நம்ப தயாராகும் நீங்கள் இருக்கும் போது செய்தி போடுபவர்களும் இருப்பார்கள்.... குற்றங்களை மற்றவர்களிடம் தேடுவதை விடுத்து உங்களை திருத்த முயற்ச்சி செய்யலாமே....???

//

அட்ரா சக்கையெண்டானாம் அம்மன் கோயில் புக்கையெண்டானாம்.

செம்மறியாடுகள் மாதிரி எல்லாச் செய்தியையும் நம்பிக்கொண்டிருக்கிற கூட்டம் ஆர்?

நான் இதுவரை எழுதின கருத்துக்களைப் பார்த்தால் அதில தெளிவாகவே சொல்லியிருக்கிறன்.

ஊடகங்களோடு மல்லுக்கட்டுவதைவிட அவை சொல்பவற்றை நம்பிக்கொண்டிருக்கும் அப்பாவிகளிடத்தில் அவை பற்றிக் கதைப்பதே சிறந்தது என்று நேரடியாகச் சொல்லியிருக்கிறேன்.

அப்படி ஊடகங்கள் வெளியிட்ட பொய்களுக்காக வக்காலத்து வாங்கியவர்கள் யார்? நானா?

போட்டியளே ஒரு போடு பிளேட்டை அப்பிடியே திருப்பி.

மக்களைச் சந்தோசப்படுத்த, அவர்கள் எதிர்பார்ப்பவற்றைத் தருவதே ஊடகங்களின் கடமை என்ற பொருளில் நீங்கள் சொன்ன கருத்துக்குத்தான் அந்தக் கட்டுநாயக்கா கதை.

இப்ப கேக்கிறன். இஞ்ச எத்தினைபேர் அப்பிடி ஒரு செய்தி வந்தா உடன நம்பாமல் தீர விசாரிப்பியள்?

அப்படி யாராவது இருந்தா ஏற்கனவே வந்த தவறான செய்திகள் மட்டில் ஆக்கபூர்வமாகக் கதைத்திருப்பார்கள். குறைந்தபட்சம் அவற்றை விமர்சித்த எங்களைப் போன்றவர்களை திட்டாமலாவது இருந்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொரு முக்கிய பிரச்சினை.

ஊரில துரோகி எண்ட பேரில மண்டையில போடுற ஆக்களை குறிப்பிட்ட படைகள் உரிமைகோருவதையும் அவர்களின் அறிவித்தலையும் என்ன தேவைக்காக புலத்தில் இயங்கும் இணையத்தளங்கள் பிரசுரிக்க வேண்டும்?

அந்த அறிவித்தல் சம்பந்தப்பட்ட இடத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குப் போய்ச்சேரும்தானே? புதினத்தில் பார்த்துத்தானா சம்பந்தப்பட்டவர்கள் அவ்வறிவித்தலை அறிந்துகொள்ளவேண்டும்.

இவற்றை வெளியிடுவதால் ஏற்படும் பாதகங்கள் பற்றி இங்கு நான் சொல்லத் தேவையில்லை.

எனவே இம்மியளவும் பயன்பாடற்ற, அதேநேரம் பெரியளவில் பாதகமான இச்செய்திகளையும் அறிவிப்புக்களையும் புலத்திலுள்ள செய்திநிறுவனங்கள் தவிர்ப்பது நன்று.

இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

Link to comment
Share on other sites

செம்மறி ஆடுகள் எண்டா என்னத்துக்கு இங்க புடுத்துறீயள் நேரடியாக எங்க சொல்ல வேணுமோ அங்க போய் வெட்டி புடுங்க வேண்டியதுதானே...??

மற்றவனை மடையன் எண்டு சொல்லபவன் தான் எந்த ரகம் என்பதில் சுய பரிசோதனை செய்து கொள்வதில்லை போலகிடக்கு... ஆட்டு மந்தைகள் கூட தங்களின் தேவை என்ன எண்று தெரிந்து கொண்டு செயல் படும்..

ஆனால் நீர் எதிலும் மயிர் புடுங்க வேணும் எண்டு சொல்லிக்கொள்ளும் கூட்டத்தில் ஒண்டு....

பிந்திய செய்திகளை எடுத்து நம்பக்கூடிய விதத்தி வெறும் கட்டுரைகளாய் எழுதிக்கொண்டு இருங்கள் நீங்கள் நன்குவிளங்கி விடலாம்.... அந்த கட்டுரைகளை மக்கள் ஏன் படிப்பதில்லை எண்டு வேற ஒரு தளத்தில போய் கருத்தாடலாம் அப்போ கட்டுரைகள் பற்றிய முட்டையில் மயிர் புடுங்கலாம்...!

தானும் செய்யான் தள்ளியும் படான் எண்ட கூட்டத்தில் இருகும் நீங்களு நல்ல தளங்களை ஆரப்பிக்க மாட்டீர்கள் மற்றவன் தான் அறிந்த, விரும்பும் விதத்தில் நடாத்தமாட்டீர்கள்... இதுதான் கருத்தாடும் ரகமாம் எண்டுவேற சொல்லுறீர்...

Link to comment
Share on other sites

இன்னுமொரு முக்கிய பிரச்சினை.

ஊரில துரோகி எண்ட பேரில மண்டையில போடுற ஆக்களை குறிப்பிட்ட படைகள் உரிமைகோருவதையும் அவர்களின் அறிவித்தலையும் என்ன தேவைக்காக புலத்தில் இயங்கும் இணையத்தளங்கள் பிரசுரிக்க வேண்டும்?

அந்த அறிவித்தல் சம்பந்தப்பட்ட இடத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குப் போய்ச்சேரும்தானே? புதினத்தில் பார்த்துத்தானா சம்பந்தப்பட்டவர்கள் அவ்வறிவித்தலை அறிந்துகொள்ளவேண்டும்.

உம்மட சொந்தக்காறன் யாராவது மண்டையை போட்டால் ஏன் போட்டார் எண்டு தெரியத்தான்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தல!

அது தனி வருத்தம். நல்லவன் கூட, செம்மறியாடுகள் மாதிரி என்ற சொல்லைப் பாவித்தபோது, அதைக் கண்டு கொள்ள முடியாதவர். உம்மைக் கணக்கில் எடுக்க முனைகின்றார் என்றால் என்ன அர்த்தம்? இத்தனைக்கும் நீர் செம்மறிஆடுகள் என்று நல்லவன் சுட்டியதைத் தான் சுட்டிக் காட்டினீர்!

ஆக, கொள்கை என்று ஒன்றில்லை. எங்கவே பிரிவினைகளை உருவாக்கி கூட்டம் சேர்க்கலாம் என அலைவு. இதைக் குருவிகள் புரிந்து கொண்டதாலோ என்னவோ, இப்போது பக்குவமாக எழுதுகின்றார்!

Link to comment
Share on other sites

தல!

அது தனி வருத்தம். நல்லவன் கூட, செம்மறியாடுகள் மாதிரி என்ற சொல்லைப் பாவித்தபோது, அதைக் கண்டு கொள்ள முடியாதவர். உம்மைக் கணக்கில் எடுக்க முனைகின்றார் என்றால் என்ன அர்த்தம்? இத்தனைக்கும் நீர் செம்மறிஆடுகள் என்று நல்லவன் சுட்டியதைத் தான் சுட்டிக் காட்டினீர்!

ஆக, கொள்கை என்று ஒன்றில்லை. எங்கவே பிரிவினைகளை உருவாக்கி கூட்டம் சேர்க்கலாம் என அலைவு. இதைக் குருவிகள் புரிந்து கொண்டதாலோ என்னவோ, இப்போது பக்குவமாக எழுதுகின்றார்!

எங்கட கருத்துக்களை நசுக்க வேணும் என்பதுக்காக சொல்லப்படும் கருத்துக்களுக்கு அவர்கள் பாணியில் பதில் போடுவதுதான் நல்லது..

மதி தனக்கான கூட்டத்தை சேர்க்க முயல்கிறார்.... எண்றாலும் சேர்பவர்களுக்கு மூளை எண்ற ஒண்று இருக்கல்லவா...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல,

எல்லாச் செய்திகளையும் அப்பிடியே நம்பிக்கொள்ளிறது நானா அல்லது யாழ்க்களத்தில இருக்கிற மற்ற ஆக்களா?

இதை ஒருக்காத் தெளிவுபடுத்துங்கோ.

பிறகு கண்டபடி கத்தலாம்.

செம்மறிஆடு எண்டது ஒரு உவமை. சாதாரண பேச்சுவழக்கில பாவிக்கிறது. ஏன் பாவிக்கறது தெரியுமோ?

சொந்தப் புத்தியில்லாமல் எல்லாத்துக்கும் இழுபட்டுத் திரியிறதுக்கு.

தமிழ்ச் செய்தித்தளங்களை யாரும் விமர்சிக்கக்கூடாது எண்டு யாழ்க்களத்தில ஒரு கட்டுப்பாடு கொண்டுவாங்கோ. சத்தம் போடாமல் இருக்கலாம். அதவிட்டுட்டு பிழைகளைச் சுட்டிக்காட்டினால் அதை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் வேற கதை கதைக்கிறது.

இதுவரை நான் சொன்னதில ஏதாவது பிழையிருந்தா வெளிப்படையா சொல்லுங்கோ பாப்பம். நான் வைச்ச விமர்சனம் ஏதாவது பொய் எண்டா சொல்லுங்கோ பாப்பம்.

Link to comment
Share on other sites

இங்கே தமிழ் ஊடகங்கள் மீது விமர்சனமென்று வைப்பவர்கள் தாங்கள் எவ்வாறான மொழியைப் பாவிக்கின்றனர் என்று சுய விமர்சனம் செய்வது நல்லது.விமர்சனம் என்பதற்கும் ஒரு நாகரிகம் இருக்கிறது.அதுவும் நான் முன்னர் கூறியதைப் போல் இவற்றைச் செய்பவர்கள் புலத்தில் பல கஸ்ட்டங்கள், இன்னல்கள் காட்டிக் கொடுப்புக்களுக்கு மத்தியில் தான் இதனைச் செய்கிறார்கள்.மற்ற எல்லாரையும் போல் இவர்களும் தங்கள் குடும்பம்,சொந்தமென்ற வரையறைக்குள் நின்று கொள்ளலாம்.அவர்கள் இதனைச் சம்பளத்திற்கோ அன்றி தனிப்பட்ட லாபத்திற்கோ நடாத்தவில்லை.ஆகவே நீங்கள் எழுதும் 'விமர்சனம்' ஈற்றில் யாரிற்கு எவ்வாறு பயன் படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு சிந்தனையுடன் எழுதுங்கள்.விமரிசனம் என்று எழுதுவது மிக இலகுவானது,ஆனால் செயற்படுவது எவ்வளவு அபாயகரமானது என்பதை அண்மைய நிகழ்வுகள் உங்களுக்கு உணர்த்தட்டும்.

புலத்திலே ஆங்கிலப்பத்திரிகைகளிலையே எத்தினையோ வகையான பத்திரிகைகள் இருக்கின்றன, இவற்றின் செய்தி சேகரிக்கும்,வெளியிடும் தன்மைகளில் பாரிய வேறு பாடுகள் இருக்கின்றன.ஒவ்வொரு பத்திரிகையும் தனக்கென ஒரு குறிப்பிடப்பட்ட வாசகர் வட்டத்தைக் கொண்டதாக இருக்கின்றன.அந்த அந்த நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்றதாக அவர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் அவை செய்திகளை வழங்குகின்றன.இவற்றிற்கு விதி விலக்காக எவ்வாறு தமிழ் ஊடகங்கள் செயற்பட முடியும் என்று விளங்க வில்லை.தமிழரின் ஆங்கில ஊடகமான தமிழ் நெற்றின் செய்திகளை மற்றவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும்? புதினத்தின் வாசகர் வட்டமும் தமிழ் நெற்றின்வாசகர் வட்டமும் வேறானவை.இங்கிலாந்தில் இருந்து வரும் சன் பத்திரிகையும் கார்டியனும் எவ்வாறு ஒரே மாதிரிச் செய்திகளைத் தர முடியும்? இரண்டினதும் targeted audience வேறாக இருக்கும் போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் இதனைச் சம்பளத்திற்கோ அன்றி தனிப்பட்ட லாபத்திற்கோ நடாத்தவில்லை..

மன்னிக்கனும்

சம்பளம் வாங்கி வேலை செய்யும் ஊடகம் பற்றி நான் உமக்கு அறியத்தந்தால் நீர் யாழ் களப்பக்கமே வர மாட்டீரா?

வெறும் சம்பளம் என்றால் பறவாயில்லை. வேலை இல்லை என்று அரசாங்கத்திடமும் சிலர் பணம் வாங்குகிறார்கள்!

Link to comment
Share on other sites

புதினத்தில் சில மாற்றங்கள் இருப்பது போல் உள்ளது. காலம் தான் பதில் சொல்லும்.

Link to comment
Share on other sites

தல,

எல்லாச் செய்திகளையும் அப்பிடியே நம்பிக்கொள்ளிறது நானா அல்லது யாழ்க்களத்தில இருக்கிற மற்ற ஆக்களா?

இதை ஒருக்காத் தெளிவுபடுத்துங்கோ.

பிறகு கண்டபடி கத்தலாம்.

செம்மறிஆடு எண்டது ஒரு உவமை. சாதாரண பேச்சுவழக்கில பாவிக்கிறது. ஏன் பாவிக்கறது தெரியுமோ?

சொந்தப் புத்தியில்லாமல் எல்லாத்துக்கும் இழுபட்டுத் திரியிறதுக்கு.

யாழ்களத்தில் படிக்கிறார்கள் என்பதை இங்கு நான் எப்போதும் மறுக்க வில்லை... பொய்யான செய்தியாக இருந்தாலும் அது இராணுவத்தால் வேதனைப்பட்டவன் எல்லாருக்கும் மகிழ்ச்சியை அள்ளித்தருகிறது.... இதையும் நான் மறுக்க வில்லை...! ஆனால் அந்த பொய்யான செய்தி வேண்டுமானால் சிறிது நேரம் உண்மையான செய்திபோல தேண்றத்தை தந்தாலும் அதுவே பிழையான செய்தி என்பது இங்குள்ளவர்களால் புரிந்து கொள்ள முடியாதது என்கின்ற வகையில் நீர் சொன்ன விடயம்தான் இங்கு பிரச்சினை யாக்கப்பட்டது... இங்குள்ளவர்கள் அவ்வளவு அறிவற்றவர்கள் கிடையாது என்பது உமக்கும் தெரியும்...!

செம்மறி ஆடுகளை உவமானம் சொல்லும் அளவுக்கு இங்கு யாரும் கேடுகெட்டு வாழவில்லை... யாரையும் பின் தொடர்ந்து தற்கொலை செய்யும் அளவுக்கு யாரையும் பின்பற்றவும் இல்லை... விமர்சனம் என்பது எதை நோக்கி வருகின்றது அதன் தேவை என்ன என்னும் அளவு பகுத்து அறியும் ஆற்றல் எல்லாருக்கும் உண்டு...! செம்மறி ஆடுகள் எப்போதும் ஒரு நோக்கம் கொண்டவை... ஆனால் இங்குள்ள எல்லாருமே பலகருத்துக்கள் கொண்டவர்கள் பலர் தேசிய விடுதலை என்பதில் மட்டும்தான் ஒருமித்த கருத்து கொண்டவர்கள்... அதைத்தான் நீர் சொம்மறித்தனம் என்கிறீரா..??? இங்கு நானும் தூயவனும்தான் தமிழ் ஊடகங்கள் பக்கம் உள்ள நியாய தன்மையை சொன்னவர்கள்... அப்போ இங்குள்ளவர்கள் செம்மறிகள் எண்டு யாரை விளிக்கிறீர்...??

தமிழ்ச் செய்தித்தளங்களை யாரும் விமர்சிக்கக்கூடாது எண்டு யாழ்க்களத்தில ஒரு கட்டுப்பாடு கொண்டுவாங்கோ. சத்தம் போடாமல் இருக்கலாம். அதவிட்டுட்டு பிழைகளைச் சுட்டிக்காட்டினால் அதை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் வேற கதை கதைக்கிறது.

இதுவரை நான் சொன்னதில ஏதாவது பிழையிருந்தா வெளிப்படையா சொல்லுங்கோ பாப்பம். நான் வைச்ச விமர்சனம் ஏதாவது பொய் எண்டா சொல்லுங்கோ பாப்பம்.

தமிழூடகங்கள் விமர்சனத்துக்கும் அப்பால் பட்டவை கிடையாது.... அவர்கள் நீங்கள் விமர்சிக்கும் அளவில் பாதகம் செய்யவில்லை என்பதுதான் என் வாதம்...

செய்திகள் என்பது உண்மைத்தன்மை அறிந்து சேர்ப்பது அல்ல தேவையான செய்தியை தேவையான இடத்துக்கு கொண்டு சேர்ப்பதும் சிறந்த செய்தி சேவைதான்.... தகவல் சேகரிக்கும் போது சில தவறுகளால் செய்தி திரிபடைவது வளமைதான் அதுக்காக ஊடகங்கள் மன்னிப்பு கோராததோ இல்லை செய்தி மாற்றம் போடாத்தோ தவறு எண்று சொல்லலாம் ஆனால் அப்படியான எந்த செய்திகளும் வேண்டாம் என்பது ஏற்புடையது அல்ல...!

வதந்திகள் பரப்பி மக்களை அல்லோலகல்லோல படுத்தி விடுவது என்பது ஒரு ரகம் ஆனால் அப்படியான ஈனச்செயல்களை தமிழ் இணைய ஊடகங்கள் செய்வதில்லை.... இராணுவத்துக்கு ஏற்பட்ட இளப்புக்கள் மிகைப்படுத்தப்படுவதால் தமிழர்கள் பாதிக்கப்படுவதும் இல்லை.....! நம்பகத்தன்மை பற்றி வேண்டுமானால் கவலை கொள்ளலாம். ஆனாலும் சில மாற்றுக்கருத்து ஊடகங்கள் போல எல்லாவற்றிலும் புனையப்படுகின்றன என்பது மிகத்தவறான கருத்து அந்தளவு பாதகர்களாக தமிழ் இணையங்களை சித்தரிப்பது உண்மையானதும் அல்ல...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவன்!

நான் நீர் உவமித்ததைப் பற்றிச் சொல்லவில்லை. அதில் தலையிட விரும்பவில்லை. ஆனால் சிலபேர் சாடியதைத் தான் சுட்டிக் காட்டினே;ன.

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.