Jump to content

புலம்பெயர் சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்களா புலம்பெயர்ந்த முன்னாள் போராளிகள் ?

Recommended Posts

அண்மையில் பல முன்னாள் போராளிகள் ஆக்கங்களை யாழில் எழுதத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள் கடைசி வரையும் போர்க்களத்தில் நின்று வந்தவர்கள். ஆனால் அவர்களது பதிவுகளில் சிலர் தங்கள் ஞாபகங்களையும் பகிர்ந்து சில வரலாற்றுத் தவறுகள் வரக்கூடிய சம்பவங்களால் ஏற்பட்ட விவாதம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது.

களத்தில் பல கருத்தாளர்கள் இந்தப் புதியவர்களை சந்தேகித்தும் இவர்களது வருகையை துரோகம் போலவும் கருத்தெழுதியிருந்தார்கள். இந்த எழுத்து சில போராளிகளை தொடர்ந்து எழுத விடாமல் மௌனமாக்கியுள்ளது.

சிலம் மீதுள்ள அதீத அன்பினால் புதிய கருத்தாளர்களை அவமதிப்பது மனங்களை நோகடிப்பது சந்தேகிப்பது அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் துயரைவிட கடுமையான தண்டனையாகவே இருக்கிறது. இங்கு  இவர்தான் கௌரவத்தக்கு உரியவர் என்ற தகுதி வகுப்பு சரியானதா ?

இல்லை இவர் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி புலம்பெயர்ந்ததால் இங்கு எழுதவோ வரலாறுகளைச் சொல்லவோ தகுதியில்லையென்று புறக்கணித்தல் அவர்களது மனங்களை நோகடித்தல் எவ்வகையில் நியாயமாகும் ?

இந்தப் புலம்பெயர்ந்த முள்ளிவாய்க்கால் வரையும் சென்று உயிர் மீண்டிருக்கிற ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஆயிரம் துயரங்கள் அவர்களோடு பழகுகிறேன். தொடர்புகளோடு இருக்கிறேன். அவர்களது மனநிலமையை புரிந்து கொண்ட வகையில் எனது ஆதங்கத்தை இங்கு வெளிப்படுத்துகிறேன்.

தங்கள் துயரைச் சொல்லக்கூட ஆட்களின்றி எத்தனையோ போராளிகள் ஐரோப்பிய வீதிகளிலும் அகதி முகாம்களிலும் அலைகிறார்கள். ஒரு காலம் எங்களால் கதாநாயகர்களாகவும் வீரத்தின் அடையாளமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் இன்று சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் இந்த சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பதற்கான காரணி என்ன ? ஏன் நாங்கள் இப்படியானோம் ?

ஆரோக்கியமான கருத்தாடலை இத்தலைப்பில் மேற்கொள்வதன் மூலம் பல முன்னேற்றமான பணிகளையும் செய்ய முடியும் என்பது என் கருத்து.

உங்கள் கருத்துக்களை பகிருங்கள். மௌனமாக ஒதுங்கியிருக்கும் போராளிகள் மீளவும் நீங்கள் எழுத வர வேணும்.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது போன்று ஒரு ஆதங்கம் அன்றிலிருந்து எனது மனதிலும் ஆறாது உள்ளது சாந்தி.

ஆனால் அன்றைய  விவாதம்  சம்பந்தமாக கருத்துக்கூறிய  புதியவர்களின் எழுத்தில்  பெரும் மமதை இருந்தது.

எடுத்தெறிதல் இருந்தது.

ஒருவரை மட்டம் தட்டவேண்டும் என்ற குறியே  பிரதானமாக இருந்தது.

இதை நீங்களோ

மற்ற  கருத்தாளர்களோ

ஏன் எழுதிய புதியவர்களோ ஏற்பீர்களா???

அதனால்தான்  கடைசியில் எமக்குத்தெரிந்த ஒரு போராளியையாவது காப்பாற்றும்   நோக்கமாக

திரியைப்பூட்டும் படி கேட்டேன்.

உண்மையில் இதை எழுதும் பொது என்  கண்களில்  கண்ணீர்........... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியம் என்பார்கள்...ஒன்றும் பிரச்சினை இல்லை அக்கா.. இதெல்லாம் நீண்ட நாட்கள் நிலைக்க முடியா.. பல முன்னால் போராளிகள் மெதுமெதுவாக தம்மை கட்டி எழுப்பி பொருளாதாரத்தில் நிலையாக தொடங்குகிறகாலம் இது.. புலம்பெயர்ந்த போராளிகள் பலரும் மெதுமெதுவாக விசாகிடைத்து பொருளாதரத்தையும் ஊரில் உள்ள தமது குடும்பங்களையும் ஸ்திரப்படுத்துக்கொண்டிருக்கிறார்கள்..இன்னும் பல புலம்பெயர்ந்த போராளிகள் விசாக்களுக்கும் ஊரில் உள்ளவர்கள் நல்ல வேலைகளுக்கும் காத்திருக்கிறார்கள்.. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் இரண்டாயிரம்களிலும் வந்து துரோகிப்பட்டம் கொடுக்கும் பல உறவுகளும் இந்த நிலையை தாண்டி வந்துதான் தம்மை பொருளாதாரத்தில் ஸ்திரப்படுத்திக்கொண்டு இப்பொழுது பட்டம் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்..காலம் மெதுமெதுவாக மாறும்..இந்த முன்னால் போராளிகளின் கைகளும் பொருளாதாரத்தால் மேம்படும்..காட்சிகள் மாறும்.. தீர்மானிக்கும் சக்திகளும் மாறும்..அதுவரைக்கும் இவைகள் அங்கங்கு மெதுவாக தொடரத்தான் செய்யும்..மெளனமாக ஒதுங்கி இருக்காமல் முன்னால் போராளிகள் தமது எண்ணங்களை எழுதவேண்டும்.. உங்கள் கருத்துக்களை பகிர்வதற்கு முன்னால் போராளிகள் என்பதை சொல்லி முட்டுக்கட்டைகள் வருகின்றன என்றால் அதுவும் ஒரு அடக்குமுறைதான் என்பதை புரிந்துகொண்டால் தொடர்ந்து எழுதுவீர்கள்..(இதை யழை மையப்படுத்தி எழுதவில்லை... யாழில் இப்படியான நிகழ்வுகள் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.. ஆனால் வெளியே தமிழ் சமூகத்தில் இவற்றில் சிலதை அவதானித்ததில் எழுதுகிறேன்..)..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்குச் 'செய்தி' சாந்தி! :o

நீங்கள் சொல்லும் போராளிகளுக்கும், அவர்களது பதிவுகளுக்கும் யாழில் மிகுந்த வரவேற்பிருந்தது ! :D

அவர்கள் பதிவுகள் குறைந்த போது, அவர்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை எனவும் பல உறவுகள் கேள்வியெழுப்பி இருந்ததையும் கண்டேன்!

நீங்கள் கூறுவது போன்ற எதையும் நான் அவதானிக்கவில்லை!

இதை ஏன் ஒரு விவாதப் பொருளாக்க வேண்டும் என்றும், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

எதற்கும் மற்றைய உறவுகளின் கருத்துக்களையும் பார்ப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஒரு சந்தர்ப்பத்தில் யாழில் முன்னாள் போராளிகளின் அதிகரிப்பு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது என்று எழுதியிருந்தேன் அது யாரையும் குறைசொல்ல அல்லது குற்றம் கண்டுபிடிக்க அல்ல முன்னாள் போராளிகள் என்ற பெயரில் கறுப்பாடுகள் வந்துவிடக் கூடாது

என்பதற்காகத் தான். நான் தெரிந்தோ, தெரியாமலோ எழுதியவை யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக உளப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இதற்கு என்ன கருத்து எழுதுவது? ஏற்கெனவே ஒருவன் தன்னைச் சுற்றி ஒரு 'இருப்பை' கட்டி எழுப்பி அகதி என்ற பெயரை மறந்திருக்கும்போது.. புதிதாக வருபவனால் அந்த இருப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற மனோவியாதிதான் இதற்கெல்லாம் காரணம்.

தனியே இதில் மட்டுமல்ல.. பொதுவாக எந்த துறையை எடுத்தாலும் அடிப்படையில் இவ்வாறான மனோவியாதிகள் ஏராளம்.... தாராளம்!!

'வெற்றி வேண்டுமா போட்டுப் பாராடா எதிர்நீச்சல்' என்றவாறு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்! :)

Link to comment
Share on other sites

சாந்தி அக்காக்கு ஒரு சலூட்  மிக முக்கிய கேள்வி உங்களுடையது ஒரு குறிப்பிட்ட வட்டம் தங்களுக்குள் நில் அல்லது நீ அவன் ஆளே என நோக்குவது வேதனையிலும் வேதனை ஒரு பக்கத்தை மட்டும் போற்றி புகழ்த்து எழுதி அல்லது நீ புறக்கணிக்க படுவாய் என்பதை பலர் மறைமுகமா புத்திசாலித்தனமான கேள்விகள் கேட்கிறோம் என நினைத்து சில விடைசொல்ல முடியா கேள்விகளை எடுத்து முன் வைப்பது எமக்கு பதில் நன்கு தெரிந்தாலும் சொல்ல முடியா சொன்னால் துரோகி ஆக்கபடுவோம் என்பது எமக்கு நன்கு தெரியும் அதனால் நாங்களா விலகவேண்டிய நிர்ப்பந்தம் வரும் என்கிற சூழ்ச்சிமத்தை புரிந்து வைத்து இருக்குறார்கள் என்பதுதான் உண்மை .

சிரித்த படி இருக்க புகைப்படம் போல் வாழ்க்கை இல்லை என்பதை அவர்கள் புரிய வேணும்

தங்களுக்கு வகுத்து வைத்து இருக்கும் எல்லையை விட்டு வெளியில் வந்து யன்னல் திறந்து பாருங்கள் மாற்றம் கண்கள் ஊடா மனதுக்கு தெரியும் .

நன்றி அக்கா உங்கள் முக்கிய பதிவுக்கு மிண்டும் ஒருமுறை . :(

இதற்கு என்ன கருத்து எழுதுவது? ஏற்கெனவே ஒருவன் தன்னைச் சுற்றி ஒரு 'இருப்பை' கட்டி எழுப்பி அகதி என்ற பெயரை மறந்திருக்கும்போது.. புதிதாக வருபவனால் அந்த இருப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற மனோவியாதிதான் இதற்கெல்லாம் காரணம்.

தனியே இதில் மட்டுமல்ல.. பொதுவாக எந்த துறையை எடுத்தாலும் அடிப்படையில் இவ்வாறான மனோவியாதிகள் ஏராளம்.... தாராளம்!!

'வெற்றி வேண்டுமா போட்டுப் பாராடா எதிர்நீச்சல்' என்றவாறு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்! :)

முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைக்க கூடாது என்பதில் நாங்கள் தெளிவா இருக்குறம் என்பதே உண்மை .

Link to comment
Share on other sites

இதேபோல 80களில் இருந்து பலவிடயங்களை நான் வசிக்கும் ஜேர்மனியில் பார்த்திருக்கிறேன். இலங்கையில் முறையாக training college ஆசிரியர்களாகக் கடமையாற்றியவவர்ர்களைப் புறம்தள்ளி எவவ்வித ஆசிரியத் தகுதியும் அற்றவர்கள் ஆனா ஆவன்னா தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக தமிழாலயங்களில் கற்பித்த கற்பிக்கும் கொடுமைகளை எல்லாம் கண்டிருக்கிறேன். இவ்வாறு பலவற்றை கூற முடியும். ஆனால் இவற்றால் எதுவுமே விளையப் போவதில்லை.. எனினும் சில பதிவுகளுக்காகவாவது நான் எழுதும் தொடரில் வரலாம் விரிவாக. :)

Link to comment
Share on other sites

உலகில் விடுதலை வீரர்களையும், போர் வீரர்களையும் மதித்து அவர்களை கதாநாயகர்களாக போற்றி அவர்களுக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி மரியாதை செய்யும் பழக்க வழக்கம் எங்கும் உள்ளது. அதில் உயிருடன் இருக்கும் முன்னால் வீரர்களை தனியாக கெளரவிக்கும் பண்பாடும் இருக்கின்றது. அதனுடன் ஒப்பிடும் போது, நாம் அந்தளவுக்கு ஒன்றும் செய்வதில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

ஆனால், எனக்கு இதற்கும் அப்பால் ஒரு முக்கிய கேள்வி முன்னாள் போராளிகள் என்று தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் மீது உண்டு.

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியினை ஆரம்பத்தில் இருந்தே அனுமதிப்பதில் நான் தயக்கமாக இருந்தேன். ஆனால் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரச்சனை இருக்கவில்லை என்பதால் அத் திரி கொஞ்ச நாட்களுக்கு தொடரப்பட்டது. என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

இது தான்  எனது நிலைப்பாடும்.

அதனாலேயே

தெரிந்த போராளிக்காக திரியைப்பூட்டும்படி கேட்டேன்

அதைத்தான்  இப்படியான சூழலில் எம்மால்  செய்யமுடியும்.

நன்றி  நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

எனது கேள்வியும் இதுவே சாந்தி அக்கா.

Link to comment
Share on other sites

உலகில் விடுதலை வீரர்களையும், போர் வீரர்களையும் மதித்து அவர்களை கதாநாயகர்களாக போற்றி அவர்களுக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி மரியாதை செய்யும் பழக்க வழக்கம் எங்கும் உள்ளது. அதில் உயிருடன் இருக்கும் முன்னால் வீரர்களை தனியாக கெளரவிக்கும் பண்பாடும் இருக்கின்றது. அதனுடன் ஒப்பிடும் போது, நாம் அந்தளவுக்கு ஒன்றும் செய்வதில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

ஆனால், எனக்கு இதற்கும் அப்பால் ஒரு முக்கிய கேள்வி முன்னாள் போராளிகள் என்று தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் மீது உண்டு.

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியினை ஆரம்பத்தில் இருந்தே அனுமதிப்பதில் நான் தயக்கமாக இருந்தேன். ஆனால் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரச்சனை இருக்கவில்லை என்பதால் அத் திரி கொஞ்ச நாட்களுக்கு தொடரப்பட்டது. என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

முன்னாள் போராளிகள் என்பதுக்கு தகட்டிலக்கம் படையணி சேர்த்த காலம் விலகிய காலம் எல்லாம் ஒரு அறிக்கையா தந்து விட்டு எதை வேணும் என்றாலும் எப்படி யான புனைகதை என்றாலும் எழுதினா அதை இந்த சமூகம் நம்புமா ஏனெனில் வன்னியின் சுழலில் வாழ்த்த அனைவருக்கும் ஆயுதம் பற்றிய அறிவு போரியல் பற்றிய அறிவு சண்டைகள் பற்றிய அறிவு எந்த சண்டையை எந்த தளபதி வழிநடத்தி போனார் என்பது தொடக்கம் அக்குவேறா ஆணி வேறா தெரியும் இதில் பொய்களை உடனம் பிடிப்பார் என்பது மிக பழைய போராளிகளுக்கு தெரியாமல் இருப்பது தான் கவலை .

வாதம் அதுவல்ல கருத்தை முறியடிக்க அல்லது தங்களின் கட்டுக்குள் கொண்டுவர இங்கு சிலர் வைக்கும் சொல்லாடல் மிக தவறு அதி உச்ச விசுவாசிகளாக தங்களை காட்டுவதும் மற்றவனை பார்வையாளனா பார்ப்பது நிறுத்த படவேண்டும் .

Link to comment
Share on other sites

ஆனால், எனக்கு இதற்கும் அப்பால் ஒரு முக்கிய கேள்வி முன்னாள் போராளிகள் என்று தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் மீது உண்டு.

சாந்தி, ஒருவர் வந்து தான் ஒரு முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதும் போது உண்மையிலேயே அவர் முன்னால் போராளியா என்று எவ்வாறு தெளிவாக அறிந்து கொள்வது? சாத்திரி / தயா போன்று தம்மை இன்னார் என்று மிக தெளிவாக இனம்காட்டி எழுதுபவர்கள் மீது இக் கேள்வி வராது, ஆனால் முகம் காட்ட/ அடையாளம் காட்ட முடியாத ஒரு அரசியல் சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி முகம் மறைத்துக் கொண்டு ஒருவர் தான் முன்னால் போராளி என்று சொல்லும் போது எந்தளவு தூரத்துக்கு அதனை நம்பமுடியும்?

என் கேள்வி சில நேரம் உங்களுக்கு கோபத்தினைக் கூட கிளப்பலாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியினை ஆரம்பத்தில் இருந்தே அனுமதிப்பதில் நான் தயக்கமாக இருந்தேன். ஆனால் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரச்சனை இருக்கவில்லை என்பதால் அத் திரி கொஞ்ச நாட்களுக்கு தொடரப்பட்டது. என்னுடைய முக்கிய கேள்வியாக இருந்ததே ஒருவர் முன்னால் போராளி என்று விட்டு ஒரு வரலாற்றினை எழுதும் போது அவர் உண்மையிலேயே முன்னால் போராளி தான் என்று எவ்வாறு நம்புவது என்பதுதான்.  என் சமூகத்தினை நன்கு புரிந்து கொண்டமையால் தான் இந்தக் கேள்வி எழுகின்றது.

இதில் முதலில் நிழலியின் கருத்துக்கு எனது பதில்.

நிழலி இத்திரியை ஆரம்பித்ததன் முதல் நோக்கம் கோவப்படவோ அல்லது கொழுத்தியெரிக்கவோ அல்ல. நிதானமாக கருத்தாடவும் இனிமேலும் நீ முள்ளிவாய்க்காலில் இருந்து எப்பிடி வந்தாய் அதன் வழியென்ன உன்னை எப்படி நம்புவது ? அல்லது ஒரு வரலாற்றுத்தவறை சுட்டிக்காட்டினால் அதற்கு பதில் சொல்லாமல் அந்தச்சமரில் நின்றாயா இந்தச் சமரில் எந்தச் சென்றியில் நின்றாய் என ஒருவரின் கருத்தை முறியடிக்க அல்லது தன்னை நியாயப்படுத்த பழி சுமத்தும் தன்மை இல்லாது போக வேணும். அதற்காகவே இங்கு எழுதுகிறேன்.

முதலில் இங்கு நான் பெயர்கள் குறிப்பிடாத போராளிகள் எந்த இடத்திலும் தங்கள் எழுத்துக்கள் தவிர தங்களை முன்னாள் போராளிகள் என்று அடையாளப்படுத்தியதுமில்லை. அந்த கௌரவத்தை யாரிடமும் எதிர்பார்க்கவும் இல்லை.  ஆனால் அவர்கள் பழிவாங்கப்பட்டது போல பல கருத்தாளர்களால் அவமதிக்கப்பட்டார்கள். இந்த அவமதிப்பு அவர்களை ஒரு விரக்தி நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. அதற்கான காரணிகளாக பல கருத்தாளர்கள் இருந்திருக்கிறோம்.

நிழலி நீங்கள் வாழும் வீதியில் ஒரு தழிழர் ஒரு தவறைச் செய்துவிட்டால் அந்த வீதியில் வாழும் உங்களையும் சேர்த்து அந்த வீதியில் வாழும் தமிழர்கள் அப்பிடித்தான் என்ற பார்வையில் உங்களையும் சேர்த்து பழிக்கப்படும் போது உங்களுக்கு இயல்பாக வரும் ஆதங்கமும் விரக்தியுமே இங்கும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

தங்களை மூச்சுக்கு மூச்சு முன்னாள் போராளிகள் என பிரகடனப்படுத்துவோர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவர்கள் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. ஆனால் மறுத்து நான் இங்கு இன்னொரு தாக்குதல் வாங்க தயாராகவும் இல்லை.

சாவடையாதவன் முழுமையான போராளி இல்லையென்று கருத்தை எழுதிக்கொண்டு தானொரு போராளியென்று தன்னை நிறுவுகிற ஒருவர் மீதுள்ள நம்பிக்கையை முகம்காட்ட முடியாத இக்கட்டில் அன்றாட வாழ்வோடு போராடும் ஒரு அகதிப்போராளி அதுவும் கடைசிவரை மண்ணுக்குள் நின்று வந்து இன்று ஏதோ உயிரோடு வந்தாயே என அவர்களை நேசித்தவர்கள் ஆறுதல்படும் நேரத்தில் நீ முன்னாளா எப்படி நம்ப என்ற கேள்விக்கான பதிலை இப்போதைக்கு இந்தப் போராளிகள் யாராலும் தர முடியாது.

காலம் இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கும் வரை நான் காத்திருக்கத் தயாராகவே இவர்களை இந்த களத்தில் எழுதுங்கள் என வேண்டுகிறேன்.

80களில் , 90களில் துண்டு குடுத்து வெளியேறியவர்கள் 2009 வரையும் கடைசிவரை நடந்தது இதுதான் எனச் சொல்வதையும் எழுதுவதையும் நம்பும் நாங்கள் இறுதிவரை நின்று உயிர்களை மட்டும் கொண்டு வந்து இன்னும் போராட்டம் முடியாமல் தினம் தினம் நோயோடும் பழைய நினைவுகளோடு அல்லாட முடியாத மனஅழுத்தம் இன்ன பிற நோய்களோடும் அவலப்படுகிறவர்களை நீ முன்னாள் போராளியா எப்படி நம்ப உன்னையென்று கேட்டு அவமதிக்காமல் அவர்களையும் சக கருத்தாளராக சக மனிதராக மதித்தால் போதும். அதுவே அவர்களது எதிர்பார்ப்பும்.

ஒவ்வொருவராக அழைத்து நான் முன்னாள் போராளி என்னை ஏற்றுக் கொள்ளென்று எந்தப்போராளியும் தன்னை அடையாளம் காட்டி எழுதும் நிலமையை இன்னும் இந்த மேற்குலகமும் கொடுக்கவில்லை. நாங்களும் கொடுக்கவில்லை.

Link to comment
Share on other sites

வாதம் அதுவல்ல கருத்தை முறியடிக்க அல்லது தங்களின் கட்டுக்குள் கொண்டுவர இங்கு சிலர் வைக்கும் சொல்லாடல் மிக தவறு அதி உச்ச விசுவாசிகளாக தங்களை காட்டுவதும் மற்றவனை பார்வையாளனா பார்ப்பது நிறுத்த படவேண்டும் .

இது நீண்ட காலமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது .உண்மைகள் உறங்குவதில்லை .

Link to comment
Share on other sites

இங்கு உதாரணத்துக்கு ஒரு போராளியை சொல்கிறேன். ( என்னையும் நீ காட்டிக் குடுத்திட்டியோ அக்காச்சி என அடிக்க வராதையடா தம்பி பகலவன்)
நகைச்சுவையாக எழுதும் சுவாரசியமான எழுத்துக்களை எழுதும் ஒருவனாகவே பகலவனை இங்கு பலரும் அறிந்திருப்பீர்கள்.பகலவனால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் பயிற்சியளிக்கப்பட்டவர்கள் ஒன்றாய் வாழ்ந்தவர்கள் என பலர் ஆனால் யாராலும் பகலவன் அறியப்படாத ஒரு முன்னாள் போராளி.

பகலவன் எந்த இடத்திலும் தன்னை ஒரு முன்னாள் போராளி என அடையாளப்படுத்தவில்லை. ஆனால் அவன் இறுதிவரை சாக்களத்தில் நின்றவன். தன்கையால் சாவுகளை அழைந்தவன் , தனது நேசிப்புக்கு உள்ளான எல்லாத்தையும் எல்லாரையும் இழந்தவன். ஆனால் அவனால் நான் இன்னார் இப்படி இருந்தேன் என அடையாளம் காட்ட முடியாது. அவனை அறிந்தவர்களுக்கு மட்டுமே அவனது கண்ணீரின் கனமும் அவனால் உறங்க முடியாது அந்தரிக்கும் நித்திரையிழப்பையும் அவன் தனக்குள்ளே ஒடுங்கிப் பொவதையும் அறிய முடியும்.

எங்களை நியாயப்படுத்துவதற்காக இத்தகையவர்களை காயப்படுத்தாமல் கருத்தாடலை செய்யுங்கள். அது போதும்.

நானும் ஒரு சந்தர்ப்பத்தில் யாழில் முன்னாள் போராளிகளின் அதிகரிப்பு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது என்று எழுதியிருந்தேன் அது யாரையும் குறைசொல்ல அல்லது குற்றம் கண்டுபிடிக்க அல்ல முன்னாள் போராளிகள் என்ற பெயரில் கறுப்பாடுகள் வந்துவிடக் கூடாது

என்பதற்காகத் தான். நான் தெரிந்தோ, தெரியாமலோ எழுதியவை யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக உளப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.

கறுப்பாடுகளை நாங்கள் இராமர்களாக நம்பிவிடுகிறோம். கறுப்பாடுகள் கள்ள மௌனத்தோடு காரியத்தை சாதித்துக் கொண்டு போகிறது. நாங்கள் நேர்மையானவர்களையே திரும்பத்திரும்ப சந்தேகிக்கிறோம்.

Link to comment
Share on other sites

இது போன்று ஒரு ஆதங்கம் அன்றிலிருந்து எனது மனதிலும் ஆறாது உள்ளது சாந்தி.

ஆனால் அன்றைய  விவாதம்  சம்பந்தமாக கருத்துக்கூறிய  புதியவர்களின் எழுத்தில்  பெரும் மமதை இருந்தது.

எடுத்தெறிதல் இருந்தது.

ஒருவரை மட்டம் தட்டவேண்டும் என்ற குறியே  பிரதானமாக இருந்தது.

இதை நீங்களோ

மற்ற  கருத்தாளர்களோ

ஏன் எழுதிய புதியவர்களோ ஏற்பீர்களா???

அதனால்தான்  கடைசியில் எமக்குத்தெரிந்த ஒரு போராளியையாவது காப்பாற்றும்   நோக்கமாக

திரியைப்பூட்டும் படி கேட்டேன்.

உண்மையில் இதை எழுதும் பொது என்  கண்களில்  கண்ணீர்........... :(  :(  :(

புதியவர்கள் இந்தக் களத்தில் சாய்ந்து போனால் தான் தாங்களும் நிலைக்கலாம் என்ற உண்மையை உணராதவர்கள். அதனால் நேர்மையாக எழுதிய கருத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது போனது. இதைக்கூட மமதை என்று தயவு செய்து கருதிவிடாதீர்கள். மிகைப்படுத்தலையே பார்த்துப்பழகிய கண்களுக்கு யதார்த்தத்தை புரிந்து கொள்ள கடினமாகவே இருக்கும்.

அண்ணா நீங்கள் ஒருவரைக் காத்த நிம்தியில் இருக்கிறீர்கள். இங்கு எத்தனையோ பேரை காயப்படுத்தியது மட்டுமன்றி அவர்களை ஒதுங்கவுமல்லவா செய்து விட்டீர்கள்.

இங்கு அவமதிக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்த வாழ்வை கேள்விக்குள்ளாக்கி சந்தேகித்த கருத்துக்களால் இதெல்லாம் வேண்டாமென ஒதுங்கிப்போனவர்களுக்காக நானும் உங்கள் போல கண்ணீரோடு அவர்களுக்காக இங்கு வாதாடுகிறேன் புரிந்து கொள்ளுங்கள்.

இது எனக்குச் 'செய்தி' சாந்தி! :o

நீங்கள் சொல்லும் போராளிகளுக்கும், அவர்களது பதிவுகளுக்கும் யாழில் மிகுந்த வரவேற்பிருந்தது ! :D

அவர்கள் பதிவுகள் குறைந்த போது, அவர்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை எனவும் பல உறவுகள் கேள்வியெழுப்பி இருந்ததையும் கண்டேன்!

நீங்கள் கூறுவது போன்ற எதையும் நான் அவதானிக்கவில்லை!

இதை ஏன் ஒரு விவாதப் பொருளாக்க வேண்டும் என்றும், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!

எதற்கும் மற்றைய உறவுகளின் கருத்துக்களையும் பார்ப்போம்!

அடிக்கடி பல திரிகளில் 2009 வரை களத்தில் நின்று வந்த போராளிகள் மீது எழுப்பப்படும் சந்தேகங்கள் பல இடங்களில் விவாதமாகியிருக்கிறது அதற்காகவே இந்தத் திரி புங்கை. உங்கள் கருத்திற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

இதில் முதலில் நிழலியின் கருத்துக்கு எனது பதில்.

நிழலி இத்திரியை ஆரம்பித்ததன் முதல் நோக்கம் கோவப்படவோ அல்லது கொழுத்தியெரிக்கவோ அல்ல. நிதானமாக கருத்தாடவும் இனிமேலும் நீ முள்ளிவாய்க்காலில் இருந்து எப்பிடி வந்தாய் அதன் வழியென்ன உன்னை எப்படி நம்புவது ? அல்லது ஒரு வரலாற்றுத்தவறை சுட்டிக்காட்டினால் அதற்கு பதில் சொல்லாமல் அந்தச்சமரில் நின்றாயா இந்தச் சமரில் எந்தச் சென்றியில் நின்றாய் என ஒருவரின் கருத்தை முறியடிக்க அல்லது தன்னை நியாயப்படுத்த பழி சுமத்தும் தன்மை இல்லாது போக வேணும். அதற்காகவே இங்கு எழுதுகிறேன்.

முதலில் இங்கு நான் பெயர்கள் குறிப்பிடாத போராளிகள் எந்த இடத்திலும் தங்கள் எழுத்துக்கள் தவிர தங்களை முன்னாள் போராளிகள் என்று அடையாளப்படுத்தியதுமில்லை. அந்த கௌரவத்தை யாரிடமும் எதிர்பார்க்கவும் இல்லை.  ஆனால் அவர்கள் பழிவாங்கப்பட்டது போல பல கருத்தாளர்களால் அவமதிக்கப்பட்டார்கள். இந்த அவமதிப்பு அவர்களை ஒரு விரக்தி நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. அதற்கான காரணிகளாக பல கருத்தாளர்கள் இருந்திருக்கிறோம்.

நிழலி நீங்கள் வாழும் வீதியில் ஒரு தழிழர் ஒரு தவறைச் செய்துவிட்டால் அந்த வீதியில் வாழும் உங்களையும் சேர்த்து அந்த வீதியில் வாழும் தமிழர்கள் அப்பிடித்தான் என்ற பார்வையில் உங்களையும் சேர்த்து பழிக்கப்படும் போது உங்களுக்கு இயல்பாக வரும் ஆதங்கமும் விரக்தியுமே இங்கும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

தங்களை மூச்சுக்கு மூச்சு முன்னாள் போராளிகள் என பிரகடனப்படுத்துவோர் மட்டுமே நம்பிக்கைக்கு உரியவர்கள் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. ஆனால் மறுத்து நான் இங்கு இன்னொரு தாக்குதல் வாங்க தயாராகவும் இல்லை.

சாவடையாதவன் முழுமையான போராளி இல்லையென்று கருத்தை எழுதிக்கொண்டு தானொரு போராளியென்று தன்னை நிறுவுகிற ஒருவர் மீதுள்ள நம்பிக்கையை முகம்காட்ட முடியாத இக்கட்டில் அன்றாட வாழ்வோடு போராடும் ஒரு அகதிப்போராளி அதுவும் கடைசிவரை மண்ணுக்குள் நின்று வந்து இன்று ஏதோ உயிரோடு வந்தாயே என அவர்களை நேசித்தவர்கள் ஆறுதல்படும் நேரத்தில் நீ முன்னாளா எப்படி நம்ப என்ற கேள்விக்கான பதிலை இப்போதைக்கு இந்தப் போராளிகள் யாராலும் தர முடியாது.

காலம் இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கும் வரை நான் காத்திருக்கத் தயாராகவே இவர்களை இந்த களத்தில் எழுதுங்கள் என வேண்டுகிறேன்.

80களில் , 90களில் துண்டு குடுத்து வெளியேறியவர்கள் 2009 வரையும் கடைசிவரை நடந்தது இதுதான் எனச் சொல்வதையும் எழுதுவதையும் நம்பும் நாங்கள் இறுதிவரை நின்று உயிர்களை மட்டும் கொண்டு வந்து இன்னும் போராட்டம் முடியாமல் தினம் தினம் நோயோடும் பழைய நினைவுகளோடு அல்லாட முடியாத மனஅழுத்தம் இன்ன பிற நோய்களோடும் அவலப்படுகிறவர்களை நீ முன்னாள் போராளியா எப்படி நம்ப உன்னையென்று கேட்டு அவமதிக்காமல் அவர்களையும் சக கருத்தாளராக சக மனிதராக மதித்தால் போதும். அதுவே அவர்களது எதிர்பார்ப்பும்.

ஒவ்வொருவராக அழைத்து நான் முன்னாள் போராளி என்னை ஏற்றுக் கொள்ளென்று எந்தப்போராளியும் தன்னை அடையாளம் காட்டி எழுதும் நிலமையை இன்னும் இந்த மேற்குலகமும் கொடுக்கவில்லை. நாங்களும் கொடுக்கவில்லை.

சாந்தி,

என் பதிலை எழுதியதன் காரணமும் கோபப்படவோ அல்லது கொழித்தியெறிக்கவோ அல்ல.

ஒரு புனைகதையையோ, அல்லது புனைவு மிக்க ஒரு கவிதையையோ எழுதும் போது தான் இன்னார் என்பதன் அடையாளத்தினை காட்ட வேண்டிய அவசியம் அந்த ஆக்கத்தினை எழுதியவருக்கு இல்லை. ஆனால், ஒரு வரலாற்றினை எழுத முற்படும் போது, ஒரு போராட்ட இயக்கத்தின் தலைவர் பற்றி எழுத முற்படும் போது எழுதியவர் மீதான நம்பகத்தன்மை கண்டிப்பாக அவசியம். அது ஒரு முன்நிபந்தனையாகவும் வைக்கப்படல் வேண்டும். இல்லாவிடின் எவராலும் தான் - முற்றிலும் சம்பந்தப்படாத ஒருவராலும் கூட - கேட்டுத் தெரிந்த, வாசித்து அறிந்த விடயங்களை வைத்து வரலாறு என்ற போர்வையில் எதனையும் எழுதி செல்ல முடியும்.

ஒரு கருத்துக்கு பதில் கருத்து எழுதும் போது கடைப்பிடிக்க வேண்டிய நாகரீகம் பற்றிய புரிதல்கள் இல்லாமைதான் எழுதியவர் மீதான தனிமனித தாக்குதல்களாக, "நீ அது செய்தாயா, அங்கு நின்றாயா" என்று பரிணமிக்கின்றது. இது நம்பகத்தன்மை சார்ந்த விடயம் அல்ல. கருத்துக்கு பதில் கருத்து வைக்கும் நாகரீகம் சம்பந்தமான விடயம்.

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்றால், ஒருவர் தான் முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதியதை அப்படியே நம்ப வேண்டும். அவர் உண்மையிலேயே முன்னால் போராளியா என சரிபார்ப்பது கூட தவறு. எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது என்று. மன்னிக்கவும், ஒருபோதும் என்னால் இந்த வாதத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி

தங்களது நேரத்தை தொடர்ந்து வீணாக்கவிரும்பவில்லை

யாழ்  களம் போன்ற முகமறியாத ஒரு கருத்துக்களத்தில்

முன்பின் எழுதாத ஒருவர்

அல்லது முன்பே பலமுறை தாயகம்  சம்பந்தமாக தாறுமாறாக எழுதப்பட்ட போது

அதை தட்டிக்கேட்காத ஒருவர்

திடீரென ஒரு குறிப்பிட்ட திரியில் மட்டும்

ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் குறி  வைத்து

ஒரு வழித்தாக்குதல் மட்டுமே செய்தது சந்தேகத்தக்குள்ளாகியது என்பதே உண்மை.

இதை இங்கு எழுதும் தாயக விரும்பிகள் பலரும் அறிவர்.

எனவே அவர்கள்  தொடர்ந்து இங்கு எழுதுவதன் மூலம் தங்களது தாயகம் சம்பந்தமானதும்

தமிழர் தேசியம்  சம்பந்தமானதுமான கருத்துக்களை  பதிவதனூடு மட்டுமே

அவர்களை நாம் புரிந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியும்.

இல்லாது விட்டால்

திடீரென மீண்டும இது போன்று ஒரு திரிக்கு மட்டும் திரும்பி  வரும் போதும் அதேநிலையே  ஏற்படும்

இது தவிர்க்கமுடியாதது.

சாந்தி,

என் பதிலை எழுதியதன் காரணமும் கோபப்படவோ அல்லது கொழித்தியெறிக்கவோ அல்ல.

ஒரு புனைகதையையோ, அல்லது புனைவு மிக்க ஒரு கவிதையையோ எழுதும் போது தான் இன்னார் என்பதன் அடையாளத்தினை காட்ட வேண்டிய அவசியம் அந்த ஆக்கத்தினை எழுதியவருக்கு இல்லை. ஆனால், ஒரு வரலாற்றினை எழுத முற்படும் போது, ஒரு போராட்ட இயக்கத்தின் தலைவர் பற்றி எழுத முற்படும் போது எழுதியவர் மீதான நம்பகத்தன்மை கண்டிப்பாக அவசியம். அது ஒரு முன்நிபந்தனையாகவும் வைக்கப்படல் வேண்டும். இல்லாவிடின் எவராலும் தான் - முற்றிலும் சம்பந்தப்படாத ஒருவராலும் கூட - கேட்டுத் தெரிந்த, வாசித்து அறிந்த விடயங்களை வைத்து வரலாறு என்ற போர்வையில் எதனையும் எழுதி செல்ல முடியும்.

ஒரு கருத்துக்கு பதில் கருத்து எழுதும் போது கடைப்பிடிக்க வேண்டிய நாகரீகம் பற்றிய புரிதல்கள் இல்லாமைதான் எழுதியவர் மீதான தனிமனித தாக்குதல்களாக, "நீ அது செய்தாயா, அங்கு நின்றாயா" என்று பரிணமிக்கின்றது. இது நம்பகத்தன்மை சார்ந்த விடயம் அல்ல. கருத்துக்கு பதில் கருத்து வைக்கும் நாகரீகம் சம்பந்தமான விடயம்.

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்றால், ஒருவர் தான் முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதியதை அப்படியே நம்ப வேண்டும். அவர் உண்மையிலேயே முன்னால் போராளியா என சரிபார்ப்பது கூட தவறு. எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது என்று. மன்னிக்கவும், ஒருபோதும் என்னால் இந்த வாதத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்தனையும்  உண்மை

நன்றி நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் தலைப்பை,திரியை ஆரம்பித்தமைக்காக சாந்தி அக்காவுக்கு ஒரு நன்றியை சொல்லிக் கொண்டு விடயத்திற்குப் போவோம்.
 
80/90 களுக்கு முதல் வந்த போராளிகளாக இருக்கட்டும் அல்லது மு.வாய்க்காலில் நின்றுட்டு வந்த போராளிகளாக இருக்கட்டும் புலம் பெயர் நாடுகளில் எப்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தான் அவர்களை ஏற்க வேண்டுமா அல்லது அல்லது தவிர்க்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும்.ஈழத்தில்,தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்கள் [ஒரு சிலரைத் தவிர]80,90 களில் வந்தவர்களும் ஏன் மு.வாய்க்காலில் இருந்து தப்பி வந்தவர்கள் கூட எவ்வளவு கேவலமாக இங்கு நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறம்.சுபேஸ் சொன்ன மாதிரி எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் சிறப்பு.
 
சாதரணமாக என்னைப் போன்றவர்கள் பிழை செய்தால் என்ட வளர்ப்பு சரியில்லை என்று சொல்லி என்னுடைய பெற்றோரை திட்டுவினம்.ஆனால் இப்படியான ஒரு கட்டுக்கோப்பான அமைப்பில இருந்திட்டு வந்து ஒருவர் பிழை செய்தால் யாரை திட்டுவினம்.இவர்கள் பிழை செய்வதை என்னால் கொஞ்சம் கூட ஏற்க முடியாது.
 
முன்னால் போராளி என்பதற்காக அவர்கள் சொல்வதை, அது தயா அண்ணாவாக இருக்கட்டும் அல்லது உங்கள் அன்புத் தம்பி பகலவனாக இருக்கட்டும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டும் இல்லைத் தானே!
 
அந்தத் திரியில் நான் கருத்து எழுதியிருந்தேன்.அதில் தயா அண்ணாவைக் காக்க இங்குள்ள சில பெரிய மனிசர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டார்கள் என்பதையும் பார்த்தேன்.ஆனால் அதில் தயா அண்ணா என்ட போராளியைக் காப்பாற்ற வேண்டும் என்பதை விட தயா அண்ணா ஒரு பழைய உறுப்பினர்கள்,தங்களோடு சேர்ந்து தேசியத்திற்கு ஆதரவாக எழுதுபவர் என்ட முனைப்பே காணப்பட்டது.இப்படி எத்தனையோ திரிகளில் இந்த பெரிய மனிசர்கள் பக்கச் சார்பாக நடந்து கொண்டுள்ளார்கள்.அவர்களுக்கு பிடித்த உறவு,பிடிக்காத உறவொன்றுக்கு கேவலமாக எழுதினால் கண்டும்,காணமல் இருப்பார்கள்....இது போன்ற கண விடயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.அதுக்கும்,புலிக்கும் சம்மந்தமில்லை என்பது என் கருத்து
 
புலியில் சேர்ந்து போராடப் போகையில் தாங்கள் புலத்திற்கு தப்பி வருவோம் அவர்களை நாங்கள் மதிக்க வேண்டும் அல்லது அவர்கள் கருத்தை ஏற்க வேண்டும் என்று எதிர் பார்த்தா புலியில் சேர்ந்தார்கள் அர்ப்பணிப்புடன் சேர்ந்தவர்கள் இதை எல்லாம் எதிர் பார்க்க மாட்டார்கள்.யாழில் அவர்கள் சொல்வதை மற்றவர்கள் ஏற்கவில்லை,அவர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை.இதனால் யாழை விட்டு ஒதுங்கி விட்டார்கள் என்று சரியான கருத்தில்லை.
 
ஒரு கருத்தை,தங்கள் அனுபவத்தை,உண்மை சொல்வதற்கு எதற்கு பயப்பட வேண்டும்? அவர்கள் சொல்வதை கருத்தாடும் எதிராளி ஏற்க வேண்டும் என்பதை யாழை வாசிக்கும் உறவுகள் வாசித்து எது உண்மை/பொய் என்று பகுத்தறிந்து கொள்வார்கள்.
 
கடைசியாக ஒரு புதுத் திரியில் வந்து தயா அண்ணாவோ அல்லது சாஸ்திரியோ எதாவது பிழையாக எழுதினால் அது பிழை என்று பல பேர் சொல்ல வருவினம்.அவர்கள் தொடர்ந்து யாழில் எழுதும் ஆட்கள் இல்லை.சந்தர்ப்பத்திற்கேற்ப சரி,பிழைகளை சுட்டிக் காட்ட வருவினம்.
 
புலிகள் இருக்கும் போது அவர்கள் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு ஆமாம் போட்டதால் தான் இன்று இந்த நிலை[அதைத் தான் இப்பவும் கொஞ்சப் பேர் யாழில் செய்யினம்].யார் சொல்கிறார்கள் என்று பார்க்காமல் என்ன சொல்கிறார்கள் அது சரியா/பிழையா என்று பார்த்தால் ஒரு பிரச்சனையுமில்லை :)  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி அக்கா

நீங்கள் குறிப்பிட்ட அந்த திரியில் நானும் கருத்தை எழுதியிருந்தேன். முடிந்தளவு யாரையும் காயப்படுத்தாமல் எழுதுவதில் கவனம் செலுத்தியிருந்தேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளும்படி வேண்டுகின்றேன்.

இந்த "முன்னாள் போராளி" என்ற வார்த்தையே தவறு என்று நினைக்கின்றேன். இது ஒருவர் முன்னர் தான் போராளி தற்பொழுது அவர் போராளி இல்லை என்பதை தானே குறிக்கின்றது. எனக்கு தெரிந்து பலர் இப்பொழுதும் மனதளவில் போராளியாகவே உள்ளனர். என்ன ஆயுதம் தான் அவர்களிடம் இல்லை. ஆனால் கொள்கையில் சற்றும் மாற்றமில்லை. ஆயுதம் இல்லாவிட்டால் ஒருவன் முன்னாள் போராளியா? 

இதில் யாரை குறை சொல்வது யாரை நியாயப்படுத்துவது என்று தெரியவில்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த போராளிகளிடமும் சரி இங்கு வாழ்கின்ற போராளிகளிடமும் சரி, இருவரிடமுமே ஏமாந்துள்ளேன். அதற்காக என்றும் வருந்தியதும் இல்லை ஒதுங்கியதும் இல்லை. 

எத்தனை தடைகள் வந்தாலும் ஒரு போராளி அதனை உடைத்து வெளி வர வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்கள் ஒதுங்குவதால் அதனை பலர் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். இங்கு யாரும் யாருக்கும் துரோகி பட்டம் கொடுக்கும் தகுதியைபெறவில்லை. 

இந்த சண்டை போராளிகளிற்குள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தேசங்களில் எங்குமே உள்ளது.

பொதுச்சேவை என்று சொல்லி புதிய அமைப்புகள் வரும்பொழுது ஏற்கனவே அந்த துறையில் இருக்கும் அமைப்புகள் அவர்களை ஓரங்கட்ட முயற்சிக்கின்றன. 

கலைநிகழ்ச்சிகள் என்று இன்று வாரம் ஒன்று நடைபெறுகின்றது. ஏற்கனவே நடத்தியவர்கள் புதியவர்களை துரோகி என்று ஓரங்கட்ட பார்க்கின்றனர் (ஒரு சிலரின் நடவடிக்கைகள் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான  நடவடிக்கையாக உள்ளது உண்மையே).

ந.க.த.அ., அமைப்பு, மன்றம், ஒன்றியம் என்று நாளுக்கொன்று தோன்றுகின்றது. மாறி மாறி குற்றம் சொல்வதிலும் அறிக்கை விடுவதிலும் பலரின் வேலை முடிந்துவிடுகின்றது. 

இப்படிக்கு 

முன்னாள் துரோகி

(துரோகி பட்டம் வழங்கியவர்களை காணவில்லை. எனவே அவர்கள் வந்து நிரூபிக்கும் வரை நான் ஒரு முன்னனாள் துரோகி தான்) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிக்கு 

முன்னாள் துரோகி

(துரோகி பட்டம் வழங்கியவர்களை காணவில்லை. எனவே அவர்கள் வந்து நிரூபிக்கும் வரை நான் ஒரு முன்னனாள் துரோகி தான்) :D

உங்களது முழுக்கருத்துடனும் உடன்படுவேன்.

இந்த வரிகள்  இல்லாதவிடத்து..........

முள்ளிவாய்க்காலுக்குப்பின்

இதுவும் ஒரு நடைமுறையாகி  வருகிறது

தனக்குத்தானே துரோகிப்பட்டம்  கொடுத்தபடி தொடங்குவது.

மற்றும்படி

நீங்கள்   எழுதியது போல்

உங்களைப்பற்றி  எனக்கொரு கருத்தும் பார்வையும்  உண்டு

அது

நீங்கள்  இங்கு எழுதியவற்றை  வைத்து வந்தது மட்டுமே.

அதை வைத்தே எனது கருத்தை நான்  சொல்லமுடியும்.

அதைத்தவிர வேறு வழி இங்கு (யாழில்) இல்லை.

Link to comment
Share on other sites

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்றால், ஒருவர் தான் முன்னால் போராளி என்று கூறிவிட்டு எழுதியதை அப்படியே நம்ப வேண்டும். அவர் உண்மையிலேயே முன்னால் போராளியா என சரிபார்ப்பது கூட தவறு. எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது என்று. மன்னிக்கவும், ஒருபோதும் என்னால் இந்த வாதத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது.

நான் சொல்ல வந்தது இதுதான் நிழலி. முன்னாள் போராளியென்றோ அல்லது இன்னாள் போராளியென்றோ ஒருவர் தன்னை அடையாளப்படுத்தாமல் எழுதப்படும் விடயத்தில் கருத்தாளர்களாகிய நானும் நீங்களும் தெளிவோடு அவர்களை புறம் தள்ளாமல் கருத்தாட வேணும். அது இப்போ புதிதாய் வந்தவர்களாகட்டும் பழையவர்களாகட்டும்.

பொதுவாகவே எல்லாப் போராளிகளையும் கொச்சைப்படுத்தும் விதமான கருத்துக்களை அங்கீகரித்தலும் புதிய கருத்தாளர் என்பதற்காக ஒதுக்கி வைப்பதுமே தவிர்க்கப்பட வேணும். இங்கு குறித்த போராளிகளை கண்மூடித்தனமாக துரத்தியடித்ததே இங்கு நடந்தது. எல்லோருக்கும் ஒரே நீதியை நீங்கள் கொடுக்க வேணும். இதையே சொல்ல வந்தேன். சிலவேளை எனது தமிழ் கருத்து மயக்கத்தை தந்ததோ தெரியாது.

தங்களை அடையாளப்படுத்தியவர்களை அதாவது உங்களுக்கு தாங்கள் இன்னார் என்று அடையாளப்படுத்தியவர்களைக் கூட அவர்கள் தாங்கள் இவர்கள் என்று சொன்னதைத் தானே நம்பியிருக்கிறீர்கள். நீங்கள் அவர்களை அவர்கள் சொன்ன சமர்க்களங்களில் போய்  நின்று பார்த்து உறுதிப்படுத்திவிட்டு நம்பவில்லைத்தானே ?

Link to comment
Share on other sites

சாந்தி

தங்களது நேரத்தை தொடர்ந்து வீணாக்கவிரும்பவில்லை

யாழ்  களம் போன்ற முகமறியாத ஒரு கருத்துக்களத்தில்

முன்பின் எழுதாத ஒருவர்

அல்லது முன்பே பலமுறை தாயகம்  சம்பந்தமாக தாறுமாறாக எழுதப்பட்ட போது

அதை தட்டிக்கேட்காத ஒருவர்

திடீரென ஒரு குறிப்பிட்ட திரியில் மட்டும்

ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் குறி  வைத்து

ஒரு வழித்தாக்குதல் மட்டுமே செய்தது சந்தேகத்தக்குள்ளாகியது என்பதே உண்மை.

இதை இங்கு எழுதும் தாயக விரும்பிகள் பலரும் அறிவர்.

இங்கு நீங்கள் திடீரென ஒருவர் வந்து எதிர் கருத்து வைத்தார் அதனால் சந்தேகித்தோம் என்கிறீர்கள்.

இதேபொலொருவர் குறித்த கருத்தாளரை திடீரென ஒருவர் புதிய பெயரொன்றில் வந்து தாக்கியடித்ததை நீங்கள் கவனிக்கவில்லையா ? அப்போ அவர் யார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நீங்கள் திடீரென ஒருவர் வந்து எதிர் கருத்து வைத்தார் அதனால் சந்தேகித்தோம் என்கிறீர்கள்.

இதேபொலொருவர் குறித்த கருத்தாளரை திடீரென ஒருவர் புதிய பெயரொன்றில் வந்து தாக்கியடித்ததை நீங்கள் கவனிக்கவில்லையா ? அப்போ அவர் யார் ?

சாந்தி

நான் நல்லதையே  நினைக்கின்றேன்.

அவர்கள்  எழுதுவதை  வைத்துத்தானே அவர்களது நிலையை  கொள்கையை  ஏன் முகத்தைக்கூட அறிந்து கொள்ளமுடியும்.

ஆனால் சிலர் ஏமாற்றலாம்

அது என்  தப்புக்கிடையாது

அவர்களது தப்பு

அவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்  என்பது தான்  உண்மை.

இங்கு முன்னரும்  சிலர்  நடித்திருக்கிறார்கள்

வேசங்கள் கலைந்ததும் ஓடி இருக்கிறார்கள்

இன்றும்  கூட அதே பெயரில் வரமுடியாதுள்ளார்கள்.

பல நாளைக்கு ஒருவர்  நடிக்கவும் முடியாது

ஒழிக்கவும் முடியாது.

முகங்கள்  தெரியும் காலமிது

அது தெரியவந்தே ஆகும்..

அதற்கு அவர்கள்  இங்கு   தொடர்ந்து எழுதணும்.

Link to comment
Share on other sites

இங்கு யாரும் யாருக்கும் துரோகி பட்டம் கொடுக்கும் தகுதியைபெறவில்லை. 

நல்ல ஒரு தலைப்பு இன்றைய சூழலுக்கு ஏற்ப ஆரோக்கியமாக விவாதித்து நாம் தெளிவு பெற வேண்டிய முக்கியமான தலைப்பு .இணைப்பிற்கு நன்றிகள் சாந்தி அக்கா ...............
 
இந்த திரியில் உறவுகள் கருத்தாடும் கருத்துகளுக்கு அப்பால் என் மனதில் அன்று தொட்டு இன்று வரை உள்ள உணர்வை இங்கே குறிப்பிடுகிறேன் ..........செங்கதிர் கூறியது போல முன்னாள் போராளிகள்  அல்ல அவர்கள் போராளிகள் ,,,அந்த போராளிகளாய் இருந்தாலும் சரி ,போராளி இல்லாமல் ஆதரவு கொடுப்போராய் இருந்தாலும் சரி எமது இலட்சியத்தை நோக்கி எத்தனை எத்தனை இடையூறுகள் வந்தாலும் தொடர்ந்து பயனிக்கவேண்டும் .இந்த பயணத்திற்கு எம் அர்ப்பணிப்பையும் ,தியாகத்தையும் எப்பவும் எந்த சந்தர்ப்பத்திலும் வழங்க கூடியவராய் இருக்கவேண்டும் .அதற்கு நாம் தயாராகும் பட்சத்தில் அவை நாம் பதிவிடும் கருத்துக்களில் பிரதிபலிக்கும் .............நன்றிகள் 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.