Jump to content

தமிழ் இலக்கணப் பரீட்சை எழுத்ததிகாரம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கணப் பரீட்சை எழுத்ததிகாரம் 

1.தமிழ் மொழியில் இலக்கணம் ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை யாவை ?

1. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி .
 
2.உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து அவற்றைச் சார்ந்து பிறப்பதால் உயிர்மெய்யெழுத்துக்களை எவ்வாறு அழைப்பர் ?

2. சார்பு எழுத்துக்கள் என அழைப்பர்.
 
3.அ இ உ என்ற மூன்று உயிரேழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன ?

3.  சுட்டெழுத்துக்கள் .
 
4.அந்த இந்த உந்த என்ற சொற்களை எப்படி அழைப்பர்?

4.  புறச்சுட்டு என அழைப்பர்.

5. எ  ஆ ஓ ஏ என்ற எழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன?

5. வினா எழுத்துக்கள் .
 
6. எழுத்துக்களை இலக்கணத்தில் இரண்டுவகையாகப் பிரிப்பார்கள் அவை எவை?

6.  உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள்.
 
7.உயிரெழுத்துக்கள் எந்த எழுத்துவகையைச் சேர்ந்தவை?

7. முதலெழுத்து வகையைச் சேர்ந்தது.
 
8.மூன்றுவகையான மெய்யெழுத்துக்களின் பிரிவுகள் எவை?

8. வல்லினம்,மெல்லினம்,இடையினம்.
 
9.ஒலிக்கும்போது மூக்கினால் காற்று வெளிவரும் மெய்யெழுத்துக்களின் பெயர் என்ன ?

9. ங ஞ ன ந ம ண மூக்கால் ஒலிப்பவை.( மேல குத்து வரேல்ல பழைய காணி உறுதி வாசிப்பதுபோல் குத்துப் போட்டு மெய்யாக்கி வாசியுங்கோ.)
 
10. தமிழ் இலக்கணத்தில் உள்ள உயிர்மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?

10.  216.
 
11.தொல்காப்பியர் கூறும் சார்பெழுத்துக்கள் எவை?

11. உயிர்மெய், ஆய்தம், குற்றியலுகரம்,குற்றியலிகரம்.
 
12. நன்னூலார் கூறும் சார்பெழுத்துக்கள் எத்தனை?

12.  218. 
 
13.ஆய்தம் என்ற ஆயுத எழுத்தின் வேறு பெயர்கள் மூன்று தருக?

13. அகேனம், அடுப்பெழுத்து ,புள்ளி எழுத்து.
 
14.ஒரு சொல்லில் ஆயுத எழுத்தினை அடுத்து வரும் எழுத்து எப்படியான எழுத்தாக இருக்கும்?

14.  வல்லின உயிர்மெய் எழுத்து.
 
15.பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில் ஒலியை மிகைப்படுத்துவார்கள்.இலக்கணத்தில் அதை எவ்வாறு அழைப்பார்கள் ? அதன் இரு பிரிவுகளும் யாவை?

15.  அளபெடை என்றுஎன்று. உயிரளபெடை, ஒற்றளபெடை.
 
16.முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை எவ்வாறு அளந்தனர்?

16.  கண்ணிமைத்தல், கைநொடித்தல்.
 
17.ஒரு ஒலி அளவை எவ்வாறு அழைப்பர்?

17.  ஒரு மாத்திரை என்று.
 
18.நெடில் எழுத்துக்களின் ஒலி அளவு எத்தனை?

18.  இரு மாத்திரைகள்.
 
19.மகரக்குறுக்கத்தின்  ஒலி அளவு எத்தனை?

19.  கால் மாத்திரை.
 
20.ஆறு வகையான குற்றியலுகரங்களின் பெயர்களும் எவை?

20.  உயிர்த்தொடர், வன்தொடர், மென்தொடர் ,இடைத்தொடர் , நெடிற்தொடர், ஆய்தத் தொடர் .
 
21.கரும்பு என்ற சொல்லில் அமைத்துள்ள குற்றியலுகரம் எந்த வகையான குற்றியலுகரம்?

21.   மென்தொடர் .
 
22.முற்றியலுகரத்தில் உகரத்தின் இயல்பு (கூடும்) (குறையாது) (முழுமையாக) இருக்கும் எது சரியானது?

22.  குறையாது.
 
23.ஐகாரக்குறுக்கத்தில்  ஐ இன் ஒலி அளவு என்ன?

23.  இரு மாத்திரைகள்.
 
24.இலக்கணத்தில் முதல்நிலை எழுத்துக்கள் எத்தனை?

24.    இருபத்தியொன்று.
 
25.உடனிலை மெய்மயக்கத்தில் தம்முடன் தாமே மயங்கமுடியாத எழுத்துக்கள் எவை?

25.    ர் , ழ்  இரண்டும்.
 
26.ஒரு சொல்லில் சேரவேண்டிய எழுத்திற்குப்பதிலாக வேறு எழுத்துச் சேர்ந்து
ஒரே பொருளைக் கூறி நிற்பதற்கு என்ன பெயர்?

26.    போலி  எனப்படும்.
 
27.எழுத்துச் சாரியைக்கு  மூன்று உதாரணங்கள் தருக?

27.   ஆகாரம், ஈகாரம், ஊகாரம்.

28.சொல் சாரியைக்கு  ஐந்து உதாரணங்கள் தருக?

28.   வந்தான், படித்தான், எழுந்தது, கொடுத்தான், தொட்டான்.
 
29.தமிழ்மொழியில் மொத்தமாக எத்தனை   எழுத்துக்கள் உள்ளன?

29.    247.
 
30.மெய்யெழுத்துக்கள் எத்தனை?

30.   18.

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

16.முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை எவ்வாறு அளந்தனர்?

16.  கண்ணிமைத்தல், கைநொடித்தல்.

17.ஒரு ஒலி அளவை எவ்வாறு அழைப்பர்?

17.  ஒரு மாத்திரை என்று.

18.நெடில் எழுத்துக்களின் ஒலி அளவு எத்தனை?

18.  இரு மாத்திரைகள்.

கண்ணிமைத்தல், கைநொடித்தல், மாத்திரை மூன்றும் தொடுக்கப்படுவது எப்படி?

Link to comment
Share on other sites

கேள்விகள் எல்லாம் மிக இலகுவாக  இருப்பதால் விடை எழுதி பொன்னான நேரத்தை மண்ணாக்க அலை விரும்பவில்லை வாத்தியார்!

Link to comment
Share on other sites

இண்டைக்கு முதலாம் திகதி வாத்தியார் ஐயா . ஏன் இவ்ளவு சுணக்கம் :( :( ?? ஆரும் முக்கியமான ஆக்கள் வரவேணுமோ :wub: :wub: :lol::D ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ் இலக்கணப் பரீட்சை எழுத்ததிகாரம் விடைகள் 

1.தமிழ் மொழியில் இலக்கணம் ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை யாவை ?
தமிழ் மொழியில் இலக்கணம் ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது
 
எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி

என்பவையே அந்த ஐந்து அதிகாரங்களுமாகும்

2.உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து அவற்றைச் சார்ந்து பிறப்பதால் உயிர்மெய்யெழுத்துக்களை எவ்வாறு அழைப்பர் ?
சார்பெழுத்து என அழைப்பர்.
 
3.அ இ உ என்ற மூன்று உயிரேழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன ?
 சுட்டெழுத்துக்கள்

4.அந்த இந்த உந்த என்ற சொற்களை எப்படி அழைப்பர்?
 
அந்த இந்த உந்த என்பவை சுட்டுத்திரிபுகள் எனப்படும்
 அ + மனிதன் = அம்மனிதன்
 அ இ உ  என்பது பல இடங்களில் திரிபடைந்து  அந்த இந்த உந்த என வருகின்றன.
 அம்மனிதன் அந்தமனிதன் இரண்டும் ஒரே கருத்துடையவை. புறச்சுட்டு என்பதும்  சரியானதே

5. எ  ஆ ஓ ஏ என்ற எழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன?
 
வினாவெழுத்துக்கள்
 
 6. எழுத்துக்களை இலக்கணத்தில் இரண்டுவகையாகப் பிரிப்பார்கள் அவை எவை?
 
முதலெழுத்து, சார்பெழுத்து என்பனவே அவை இரண்டுமாகும்

7.உயிரெழுத்துக்கள் எந்த எழுத்துவகையைச் சேர்ந்தவை?
 
முதலெழுத்து வகையினைச் சேர்ந்தவை.
 
8.மூன்றுவகையான மெய்யெழுத்துக்களின் பிரிவுகள் எவை?
 
அவை வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும்

9.ஒலிக்கும்போது மூக்கினால் காற்று வெளிவரும் மெய்யெழுத்துக்களின் பெயர் என்ன ?
 
மெல்லினம்

10. தமிழ் இலக்கணத்தில் உள்ள உயிர்மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?
 
 216

11.தொல்காப்பியர் கூறும் சார்பெழுத்துக்கள் எவை?
 
தொல்காப்பியர் கூறுபவை கூற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்பவை மட்டுமே

12. நன்னூலார் கூறும் சார்பெழுத்துக்கள் எத்தனை?
 
10

13.ஆய்தம் என்ற ஆயுத எழுத்தின் வேறு பெயர்கள் மூன்று தருக?
 
இந்த எழுத்திற்கு தனி நிலை, புள்ளியெழுத்து, அடுப்பெழுத்து (அடுப்பின் வடிவத்தில் இருப்பதனால்)
எனவும் பெயர்கள் உண்டு.

14.ஒரு சொல்லில் ஆயுத எழுத்தினை அடுத்து வரும் எழுத்து எப்படியான எழுத்தாக இருக்கும்?
 
வல்லின உயிர் மெய்யெழுத்தாக இருக்கும்

15.பாடல்களில்  சொற்களின் ஒலி குறைவதாகத்  தோன்றும்போது அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் புலவர்கள் வேறு இனவெழுத்து ஒன்றைச் சேர்த்து அந்த இடத்தில் ஒலியை மிகைப்படுத்துவார்கள்.இலக்கணத்தில் அதை எவ்வாறு அழைப்பார்கள் ? அதன் இரு பிரிவுகளும் யாவை?
 
 1.அளபெடை
2. ஒற்றளபெடை ,உயிரளபெடை

16.முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை எவ்வாறு அளந்தனர்?
 
 கை நொடிக்கும் நேரம் அல்லது கண்ணிமைக்கும் நேரம்

17.ஒரு ஒலி அளவை எவ்வாறு அழைப்பர்?
 
மாத்திரை என அழைப்பர்

18.நெடில் எழுத்துக்களின் ஒலி அளவு எத்தனை?
 
இரண்டு மாத்திரை

19.மகரக்குறுக்கத்தின்  ஒலி அளவு எத்தனை?
 
1/4 மாத்திரை
 
20.ஆறு வகையான குற்றியலுகரங்களின் பெயர்களும் எவை?
 
1.வன்தொடர்க்
2.மென்தொடர்க்
3.இடைத்தொடர்க்
4.நெடிற்தொடர்க்
5.ஆய்தத்தொடர்க்
6.உயிர்த்தொடர்க்குற்றியலுகரம் 

 21.கரும்பு என்ற சொல்லில் அமைத்துள்ள குற்றியலுகரம் எந்த வகையான குற்றியலுகரம்?
 
மென்தொடர்க்குற்றியலுகரம்
 
22.முற்றியலுகரத்தில் உகரத்தின் இயல்பு (கூடும்) (குறையாது) (முழுமையாக) இருக்கும் எது சரியானது?
 
 குறையாது, முழுமையாக இருக்கும் 

23.ஐகாரக்குறுக்கத்தில்  ஐ இன் ஒலி அளவு என்ன?
 
ஒரு மாத்திரை
 
ஐ என்பது நெடில் எழுத்து அதன் அளவு இரண்டு மாத்திரைகள் ஆனால் ஐகாரக்குறுக்கத்தில்
ஐ யின் ஒலி அளவு குறைந்து ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்
 
24.இலக்கணத்தில் முதல்நிலை எழுத்துக்கள் எத்தனை?
 
    உயிரெழுத்துக்கள் 10 உயிர்மெய்யெழுத்துக்கள் 12 =22
+ உயிர்மெய்யெழுத்துக்களின் வர்க்க எழுத்துக்களும் (ஒரு சில எழுத்துக்கள் தவிர்த்து) என்பதும் சரியானதே 
 
25.உடனிலை மெய்மயக்கத்தில் தம்முடன் தாமே மயங்கமுடியாத எழுத்துக்கள் எவை?
 
ர் ழ் என்பன.  
 
26.ஒரு சொல்லில் சேரவேண்டிய எழுத்திற்குப்பதிலாக வேறு எழுத்துச் சேர்ந்து
ஒரே பொருளைக் கூறி நிற்பதற்கு என்ன பெயர்?
 
 போலி எனப்படும்

27.எழுத்துச் சாரியைக்கு  மூன்று உதாரணங்கள் தருக?

அகரம்  ஈகாரம் ஒளகான் 
 
28.சொல் சாரியைக்கு  ஐந்து உதாரணங்கள் தருக?
 
 கிளியை, எனக்கு , பதினொன்று ,காலை ,காலத்து
என்பன
 
29.தமிழ்மொழியில் மொத்தமாக எத்தனை   எழுத்துக்கள் உள்ளன?
 
247

30.மெய்யெழுத்துக்கள் எத்தனை?
 
18
  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்
 
கேள்வி இலக்கம் 4,6,7,9,11,16,23,27 என்பனவற்றின் விடைகளைத் தவறாக எழுதியுள்ளார்.
 
22 புள்ளிகள்

சுமேரியர்
 
கேள்வி இலக்கம் 6,21,23,24 என்பனவற்றின் விடைகளைத் தவறாக எழுதியுள்ளார்

26 புள்ளிகள்

பாஞ்ச்

கேள்வி இலக்கம் 23,24, 27 (இல் அரைவாசி)  என்பனவற்றின் விடைகளைத் தவறாக எழுதியுள்ளார்
 
27 1/2 புள்ளிகள்

சுவி அண்ணா

கேள்வி இலக்கம் 6,9,11, (பிழையான பதிலும் உள்ளது)12,23,24, என்பனவற்றின் விடைகளைத் தவறாக எழுதியுள்ளார்

24 1/2 புள்ளிகள்
 
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பெரிய தலையலே கவுண்டு போச்சினம் :lol:  நாங்க எம்மாத்திரம் ,படிச்சதே எட்டாப்பு  <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சு பாஞ்சு முதலிடம் பெற்ற பாஞ்சு, இதற்குத் தான் விடைத்தாளை மற்றவர்களுக்கு காண்பிக்கவில்லையா?

கடும் வாழ்த்துக்களையும் அதே நேரத்தில் கண்டனத்தையும் ஒருசேர தெரிவித்துக்கொள்கிறேன். :rolleyes:

மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சைக்குத் தோற்றிய மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
நான்கு பேர் பரீட்சையில் வெற்றி பெற்று, அடுத்த வகுப்பிற்கு போய் விட்டார்கள்.
நாங்கள் எல்லாரும் பெயில் விட்டதை நினைக்கக் கவலையாருக்கு.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ் இலக்கணப் பரீட்சை எழுத்ததிகாரம் விடைகள் 

14.ஒரு சொல்லில் ஆயுத எழுத்தினை அடுத்து வரும் எழுத்து எப்படியான எழுத்தாக இருக்கும்?

வல்லின மெய்யெழுத்தாக இருக்கும்

வாத்தியார், ஆய்த எழுத்தை அடுத்து உயிர்  மெய் எழுத்தல்லோ வரும்.

தனிய இருந்து படிக்க போரடிக்கும் அதனால பரீட்சை எழுதாதவையையும் வகுப்பேத்தி விடுங்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தா நான் பாசாயிட்டேன் ! :D

நன்றி வாத்தியார் !!  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், ஆய்த எழுத்தை அடுத்து உயிர்  மெய் எழுத்தல்லோ வரும்.

தனிய இருந்து படிக்க போரடிக்கும் அதனால பரீட்சை எழுதாதவையையும் வகுப்பேத்தி விடுங்கோ :D

உயிர் அழிந்து விட்டது.திருத்தியுள்ளேன்

சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள் சுமேரியர்

Link to comment
Share on other sites

கோமகன்

கேள்வி இலக்கம் 4,6,7,9,11,16,23,27 என்பனவற்றின் விடைகளைத் தவறாக எழுதியுள்ளார்.

22 புள்ளிகள்

சுமேரியர்

கேள்வி இலக்கம் 6,21,23,24 என்பனவற்றின் விடைகளைத் தவறாக எழுதியுள்ளார்

26 புள்ளிகள்

பாஞ்ச்

கேள்வி இலக்கம் 23,24, 27 (இல் அரைவாசி)  என்பனவற்றின் விடைகளைத் தவறாக எழுதியுள்ளார்

27 1/2 புள்ளிகள்

சுவி அண்ணா

கேள்வி இலக்கம் 6,9,11, (பிழையான பதிலும் உள்ளது)12,23,24, என்பனவற்றின் விடைகளைத் தவறாக எழுதியுள்ளார்

24 1/2 புள்ளிகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இதுக்கு மீளாய்வு செய்ய மாட்டியளோ வாத்தியார் ஐயா :unsure::lol::D ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், ஆய்த எழுத்தை அடுத்து உயிர்  மெய் எழுத்தல்லோ வரும்.

தனிய இருந்து படிக்க போரடிக்கும் அதனால பரீட்சை எழுதாதவையையும் வகுப்பேத்தி விடுங்கோ :D

வாத்தியார்... எங்களுக்கு, அ, ஆ... விலிருந்து ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கப் போகிறார்.

உங்களுக்கு... அது போரடிக்குமே சுமோ. :D

வாத்தியார்... எங்களுக்கு, ஸ்கூல் எப்ப திரும்ப ஆரம்பிக்குது. :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D 

வாத்தியார்... எங்களுக்கு, ஸ்கூல் எப்ப திரும்ப ஆரம்பிக்குது. :lol: 

சோதனையில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென அடுத்த வகுப்பு ஆரம்பிக்க முன்னர் எல்லோரிடமும் கையெழுத்து வாங்க  வேண்டும்.

அதன் பின்னரே வகுப்புக்கள் ஆரம்பிக்கும்

முதலில் இரு தரப்பு தலமை மாணாக்கர்களும் அதற்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும். :D  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதனையில் கட்டாயம் பிங்கேற்க வேண்டுமென அடுத்த வகுப்பு ஆரம்பிக்க முன்னர் எல்லோரிடமும்கையெழுத்து வாங்க  வேண்டும்.

அதன் பின்னரே வகுப்புக்கள் ஆரம்பிக்கும்

முதலில் இரு தரப்பு தலமை மாணாக்கர்களும் அதற்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும். :D  :D  :lol:

அப்ப பள்ளிக்கூடத்தை மூட வேண்டுயதுதான் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதனையில் கட்டாயம் பிங்கேற்க வேண்டுமென அடுத்த வகுப்பு ஆரம்பிக்க முன்னர் எல்லோரிடமும்கையெழுத்து வாங்க  வேண்டும்.

அதன் பின்னரே வகுப்புக்கள் ஆரம்பிக்கும்

முதலில் இரு தரப்பு தலமை மாணாக்கர்களும் அதற்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும். :D  :D  :lol:

பிங்க் சட்டை... ரிபன் கட்டிய வல்வை, ரதி எல்லோரும் வாங்கோடி...Controlling-Vomit-vomit-puke-sick-smiley

உங்களாலை... தான், எங்கடை படிப்பு நாசாமாய்ப் போனது. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்...
இனி பள்ளிக் கூடத்தை... கலவன் பாடசாலையாக இல்லாமால்,
ஆண்களுக்குத் தனியாகாவும், பெண்களுக்குத் தனியாகவும் நடத்தினால்...

நாங்களும், சோதினையில் நூற்றுக்கு மேலை... மார்க்ஸ் வேண்டுவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிங்க் சட்டை... ரிபன் கட்டிய வல்வை, ரதி எல்லோரும் வாங்கோடி...Controlling-Vomit-vomit-puke-sick-smiley

உங்களாலை... தான், எங்கடை படிப்பு நாசாமாய்ப் போனது. :D  :lol:

வாத்திக்கும் கால் வழுக்கும் கை சறுக்கும் :D 

ஆனா இது அதுவும் இல்லை எதுவும் இல்லை

கு சா அண்ணையின் சதி :lol: அப்பவும் சொன்னனான்

என்னை விடுங்கோ அண்ணை நான் வீட்டை போறான் எண்டு

மனுசன் கேட்டாத்தானே...... :D  :lol:

கு.சா. அண்ணையில் குற்றம் சாட்டி விட்டு, தப்பிக்க முயல வேண்டாம் வாத்தியார்.

அவர் மழைக்குக் கூட... பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கியதில்லை.

தூவானம் அடிச்சாலும்... கள்ளுக் கொட்டில் தாவாரத்தில், ஒதுங்குவாரே... தவிர,

பள்ளிக்கூடத்துக்கு வந்து, ஒதுங்க அவருக்கு... இன்னும் தலையில்... கிட்னி இருக்கு. :D  :lol:

என்ரை ஊரிலை பள்ளிக்குடமே இல்லையெண்டுறன்... நீங்கள்  இதுக்கை ஒதுங்கிற கதையை கதைக்கிறியள்?????  :lol:

Link to comment
Share on other sites

அதிக புள்ளைகளை எடுத்த பாஞ்ச்க்கு வாழ்த்துக்கள்!!

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அலைமகள். :D  சங்கீத அறிவற்றவன் சிலவேளைகளில் புல்லாங்குழலில் வாசிக்கும் பூபாள இராகம் புல்லரிக்க வைத்துவிடும். :o   

பாஞ்சு பாஞ்சு முதலிடம் பெற்ற பாஞ்சு, இதற்குத் தான் விடைத்தாளை மற்றவர்களுக்கு காண்பிக்கவில்லையா?

கடும் வாழ்த்துக்களையும் அதே நேரத்தில் கண்டனத்தையும் ஒருசேர தெரிவித்துக்கொள்கிறேன். :rolleyes:

மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

இதுவரை  7 1/2ச் சனியன் பிடித்திருந்த என்னை இப்போது 27 1/2ச் சனியன் பிடித்திருக்கு அதுக்கும் கண்டணமா..? :(  இருந்தும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள். :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதினை முடிஞ்சுதா? :rolleyes:

வாத்தியார் நான் சோதினைக்கு வராததுக்குக் காரணம் சொன்னா நீங்கள் நம்ப மாட்டீங்கள் அதால சொல்லேல்லை... அடுத்த முறை கண்டிப்பா நேரத்திற்கு வந்திடுவன்.....இப்ப நடந்தது முதலாந்தவணைதானே.... இன்னும் 2 தவணை இருக்குத்தானே... :lol:

இலையான் கொல்லி இது நல்லா இல்ல...நான் நீச்சல் குளத்திற்குப் போனா உங்களை அங்க வந்து ஆர் எட்டிப்பாக்கச் சொன்னது? இது சரி உங்களோட வந்த மற்ற இரண்டு பேரையும் நான் ஒரு நாளும் வகுப்பில காணேல்லையே.... யார் அவர்கள்?....... :icon_mrgreen:

பிங்க் சட்டை... ரிபன் கட்டிய வல்வை, ரதி எல்லோரும் வாங்கோடி...Controlling-Vomit-vomit-puke-sick-smiley
உங்களாலை... தான், எங்கடை படிப்பு நாசாமாய்ப் போனது. :D  :lol:

எங்களால் நாசமாப் போனதா? பொய் சொன்னா புண்ணாக்குக் கிடைக்காது சொல்லீட்டன்... என்னை பரீட்சை எழுத விடாமல் பண்ணிப்போட்டு இங்க வந்து எங்களால என்று புலம்பல் வேறையா? :icon_mrgreen: .....

இருடீ....நாளைக்கு வந்து திண்ணையில கும்முறன் :lol: :lol: :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.