Jump to content

தானமா?? சேவையா??


Recommended Posts

தானமா?? சேவையா??

பரமஹம்ச சிறீ நித்யாந்தர்

ஒரு சாதாரண மனிதனுக்கும், ஒரு ஞானிக்கும் நடந்த உரையாடலின் தொகுப்பு இதோ:

தானங்கள் செய்வது நல்லதா?

நல்லது. ஆனால், தானம் செய்பவருக்கு அந்த தானங்களே ஆபத்தாகவும் திரும்பலாம்.

எப்படி?

தானமளிக்கும்போது, மனதளவில் நீங்கள் சிம்மாசனமிட்டிருப்பீர்கள். தானம் பெறுபவர் உங்களிடம் கையேந்துவார். இதனால் அகங்காரத்தை வளர்க்கும் வாய்ப்புகள்தான் அதிகம்.

அப்படியென்றால் உண்மையாய் உதவ நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

தானம் செய்யக்கூடாது. சேவை செய்ய வேண்டும்.

தானம், சேவை என்ன வேறுபாடு?

தானம், ‘நான் கொடுக்கிறேன்’ என்ற மறைமுக கர்வத்தை அச்சாணியாய் கொண்டது.

சேவை, ‘மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா’ எனும் பண்பை அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது.

சேவையின் மகத்துவம்?

சேவை செய்யும் போது மனதளவில் நீங்கள் ஒரு சேவகராக மாறியிருப்பீர்கள். உங்களைமறியாமல் எளிமைத்துவத்தை கடைப்பிடிக்க ஆரம்பிப்பீர்கள்.

சேவையை யார் செய்யலாம்?

திமிர்பிடித்தவன்கூட பத்து பைசாவை பிச்சைக்காரனுக்கு தூக்கியெறிந்து விட்டு... ‘நான் தானம் செய்தேன்!’ என காலரை தூக்கிவிட்டுப் பேசலாம்.

சேவை, சேவகனால் மட்டுமே சாத்தியம். பக்தன் கடவுளுக்கு, சீடன் குருவுக்கு என்று யாருக்கு நீங்கள் சேவை செய்தாலும் உங்கள் முன்னிருக்கும் பிச்சைக்காரருக்குள் தெய்வத்தையும் பார்க்க முடியும்.

அன்பு என்பது?

வெறுப்பு கலக்காத நேசம். எதிர்பார்ப்பு இல்லாத ஊக்கம்.

காமம், காதல், அன்பு ஒப்பிடுங்கள்.

காமம் _ ஹார்மோன்களின் குட்டி கலாட்டா.

காதல் _ உணர்ச்சிகளின் குட்டி கலாட்டா.

அன்பு _ உணர்வுகளின் சங்கமம்.

சந்தர்ப்பவசத்திற்காக பொய் பேசினாலும் அது அநீதிதானே?

பொய் என்பதே பொய். இதில் அநீதி எனும் பேச்சுக்கு இடமேயில்லை.

பொய்யே பொய்யா?

குடித்ததால் அடித்து சித்ரவதைச் செய்யும் குடிகாரன், ‘‘என் மகன் உள்ளே ஒளிந்திருக்கிறானா?’’ என கேட்கும்போது ‘‘அவன் இங்கில்லை. முதலில், நீ இங்கிருந்து இடத்தை காலி செய்’’ எனச் சொல்வதை அநீதி என்பதுதான் அநீதி. இங்கு பொய்யே பொய்யாகிறது.

இன்னும் கொஞ்சம் விளக்குங்கள்?

ஒரு பாவமும் செய்யாத ஒருவனை ஒரு துன்பத்திலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு சின்ன பொய் சொல்லலாம் என்றால் அதை பொய் என்று சொல்லத் தேவையில்லை. உண்மை பற்றி...

மற்றவரை நோகடித்து, நாசம் செய்யவல்ல, ஒரு கிராம் பொய்கூட கலக்காத உண்மை, பேசும் பொய்யைவிட மோசமானது அது அநீதி. இது பொய் பேச போடப்படும் தூபம் அல்ல. நீதி நெறிகளால் நெறிக்கக் கூடாது. என உணர்ந்தும் ஒரு முயற்சி.

ஏன் மனிதன் மீண்டும் மீண்டும் துன்பப்படுகிறான்?

இன்பத்தின் உச்சத்தை ஒருமுறை கூட தொடாததாலும், தொடர்ந்து தவறாகவே அதைத் தொட முயற்சிப்பதாலும் துன்பங்களில் விழுகிறான்.

வெளி வர வழிதான் என்ன?

ஞானிகள் சொல்லும் ஆனந்தத்தை ஒரே ஒருமுறையாவது சுவைத்துப் பாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

(பொங்கும்)

நன்றி குமுதம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நல்ல சிந்தனைகள் நீங்கள் இதை கதைகள் எண்டதைவிட தத்துவம் எண்டதுக்கை போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இணைப்புக்கு நன்றி வசம்பு

Link to comment
Share on other sites

நன்றி சண்முகி மற்றும் இரசிகை உங்கள் கருத்துக்களுக்கு. இரசிகை நீங்கள் சொல்வது போல் தத்துவம் பகுதியில் தான் இதனை இணைத்திருக்க வேண்டும். அவசரத்தில் தவறாக இணைத்துவிட்டேன். மட்டுறுத்தினர் யாராவது இதனை தத்துவம் பகுதியில் இணைத்து விடுவார்கள் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

அட...டா...

என்ன

தத்துவாத்தம்....

எப்படிய்யா

இப்படி

எல்லாம்

வருகுது....???

உன்மையை

சொல்லிறன்

சும்மா

தூக்குதய்யா

தூக்குது.....

எனக்கொரு

சந்தேகம்..

ஆம

யாரு

இங்க

பயங்கர வாதி...??

ஏன்ன

நிங்க

சொல்லிறியள்

புதிதாக

யாரும்

வேனாம்னு...

ஆது தான்

கேட்டன்

யாரப்பா

அது....??

அப்ப

அந்த குற்றவாளிக்கு

எநத் சிறை...???

களுத்துறையா...

வெலிக்கடையா

புசாவா....??

சொல்ல

முடியுமா

சாமியோ....??

பதில்

எதர் பார்ப்பான்

-வன்னி மைந்தன்-

Link to comment
Share on other sites

முதலில் ஒரு கருத்திற்கு பதில் எழுதமுன் என்ன எழுதியிருக்கின்றது என்பதை முற்றாக வாசித்துவிட்டு கருத்தெழுதப்பாரும். வெறும் புலம்பல்கள் எந்தவித பிரயோசனமுமின்றி கருத்துக்களின் எண்ணிக்கையைத் தான் அதிகரிக்க உதவும்.

Link to comment
Share on other sites

_________________

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

எனக்கொரு

சந்தேகம்..

ஆம

யாரு

இங்க

பயங்கர வாதி...??

ஏன்ன

நிங்க

சொல்லிறியள்

புதிதாக

யாரும்

வேனாம்னு...

ஆது தான்

கேட்டன்

யாரப்பா

அது....??

அப்ப

அந்த குற்றவாளிக்கு

எநத் சிறை...???

களுத்துறையா...

வெலிக்கடையா

புசாவா....??

சொல்ல

முடியுமா

சாமியோ....??

யாரு நானோ

புலம்புறன்...???

அது சரி....

கண்ணாடி போடல

அது தான்

சரிய

விளங்கல

போல கிடக்கு....

காதும்

கொஞ்சம்

கேடக்கிற

குறைவு...

அப்ப

பிள்ளை

நீர்

சொன்ன

சரியாத்தான்

இருக்கும்...

ஏனன்டா

நீர்

பெரியவர் தானே....

( தலைக்கனம தன்னழிவை தரும்)

-வன்னி மைந்தன்-

Link to comment
Share on other sites

சரியான பகுதியில் சேர்த்தமைக்கு மிக்க நன்றிகள் யாழ்பாடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு இலவும் விளங்க இல்லை ஆனால் இதை கூறியவறிற்கு கோயில் கட்டி சிலை வைக்க போகிறேன் தயவு செய்து அவருடைய விவரத்தை அறிய தரவும்..... :idea:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தானம், சேவை என்ன வேறுபாடு?

தானம், ‘நான் கொடுக்கிறேன்’ என்ற மறைமுக கர்வத்தை அச்சாணியாய் கொண்டது.

சேவை, ‘மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா’ எனும் பண்பை அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது.

சேவையின் மகத்துவம்?

சேவை செய்யும் போது மனதளவில் நீங்கள் ஒரு சேவகராக மாறியிருப்பீர்கள். உங்களைமறியாமல் எளிமைத்துவத்தை கடைப்பிடிக்க ஆரம்பிப்பீர்கள்

அருமையான கருத்துக்கள். இணைப்பிற்கு நன்றி வசம்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.