• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
அஞ்சரன்

நம்ம ஊரு பெண்கள் அழகிகள் தான்...!

Recommended Posts

வன்னியின் சந்தோஷங்களை கொண்டுவருவதில் ஒருநாள் திருவிழா காணும் கோயில்கள் முக்கியம் ஆனவை.... வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பொங்கல் செய்து எல்லா ஊர்களிலும் இருந்து வண்டிகட்டியும் உழவு இயந்திரங்களிலும் புறப்பட்டு வந்து சேர்த்து கூட்டமா ஒரு இடத்தில் பாய் விரித்து உறவுகள் ஒன்றுகூடி விரதங்கள் பிடித்து தீ மிதித்து படையல் போட்டு அந்த ஒரு இரவில் போதுமடா சாமி என சாமி சொல்லும் அளவிற்கு மக்களின் வேண்டுதலும் படையலும் இருக்கும்....

 

அப்படியான ஒரு கோயில்தான் மாங்குளம் மல்லாவி வீதியின் இடையில் உள்ள வன்னிவிளாங்குளம் அம்மன் கோயில்...அக்கோயிலின் சிறிது தூரத்தில்தான் மாவீரர் துயிலும் இல்லமும் அமைந்து உள்ளது... பின்னேரம் வர ஆரம்பிக்கும் மக்கள் கூட்டம் இரவு பத்து மணிவரை தொடரும்... கூடுதலா சைட் அடிக்கும் எண்ணங்களுடன் பாய்ந்து வரும் வாலிபர் அதிகம்.. பல காதல்கள் தொடங்கும் இடமும் முடியும் இடமும் இது.. போனவருடம் தொடங்கியவர்கள் இந்தவருடம் பிள்ளைக்கு மொட்டை போடவும் வந்து இருப்பார்... இப்படி இந்த இரவு திருவிழா கோயில்கள் முக்கியம் பெறும்...

 

அப்படி ஒரு அப்பாவி தனமா இடம்பெயர்ந்து வந்த புதிதில் வவுனிக்குளம் அருகில் இருந்த போது அந்த வீட்டுக்கார அண்ணை என்னை கூட்டி போனார்... அது எனக்கு ஒரு புது அனுபவம்... 500க்கு மேற்பட்ட கோழிகள் நூற்று கணக்கா ஆடு மாடு என நேத்திக்கு விட்டு கொண்டுவந்து கொடுக்கப்படும் அவைகள் விடியும் பொழுது ஏலத்தில் விடுவினம்... இதை வாங்கவேண்டு சந்தையில கோழி வியாபாரம் செய்கிறவ பூரா அங்க நிப்பினம்.. இது ஒருபுறம் இருக்கட்டும்..

 

எங்கபோய் பார்த்தாலும் திரும்புற இடம் எல்லாம் பெண் பிள்ளைகள்.. உள் ஊருக்குள்ள இருக்குற பிள்ளைகள் எல்லாம் இன்னைக்கு பார்த்தா தான் உண்டு.. அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்காது வீடு.. தேடியெல்லாம் போய் பார்க்க முடியாது... அப்புறம் இடியன் கட்டு துவக்கு தான் பதில் சொல்லும் என்பதால் இப்படியான இடத்தில் காதலை சொல்ல முடிஞ்சா சொல்லி போடவேணும்.. விட்டா அடுத்த வருடம் தான்.. நம்ம பெடியளும் அப்படித்தான் தோட்டம் வயல் எண்டு திரியுறவங்கள் இப்படி ஒருநாளுக்கு வடிவா வெளிக்கிட்டு மாப்பிளை கோடன் சாரம் மாட்டின் சேட்டு அதில முன்னுக்கு ஒரு மையில் தாள் வைத்து கொண்டு வந்து நிப்பினம் அம்புட்டு அழகு... .

 

அதை விட நம்ம பெண்ணுங்க ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சாக்கரை மாதிரி.. எல்லோரையும் கண்டா ஒருநேரத்தில் யாரை பார்ப்பது எண்டு ஒரு குழப்பம்.. கோயிலுக்கு நேத்திக்கு விட்ட சேவல் கணக்கா அழகா தலை வாரி இழுத்து இரட்டை பின்னல் போட்டு ஒன்றை முன்னுக்கு விட்டு மற்றதை பின்னாடி போட்டு நெற்றியில் ஒரு திருநீற்று கீறுபோட்டு ஓரக்கண் பார்வையும் பார்த்து வருவினம்.. யாரு யாரு யாருடன் வந்து நிக்கினம் எண்டு எல்லா தகவலும் பார்வையில் எடுத்து போடுங்கள்.. அப்ப ஊரில பரிசியன் எண்டு ஒரு பவுடர் இருந்தது.. அதுதான் அங்க உள்ளதில் விலை கூடியது.. அதை எடுத்து அப்பி நல்லா பூசி வாற பெட்டையளுக்கு என்ன வெள்ளை அடிச்சு கிடக்கு எண்டு நம்ம பையனுகள் நக்கல் வேற.. .

 

இப்படி காவல்துறைக்கு தெரியாமல் கடிதம் கொடுத்து முடிவு கேட்பது ஒரு திறில்.. பகிடி கூட குறைய விட்டதை கண்டால் முடிஞ்சுது கதை.. கூட்டிட்டு போய் கொட்டிலில இருத்தி போடுவினம் என்ட பயம் வேற.. மணிக்கடை கச்சான் கடை அலுமினிய பாத்திரக்கடை பிளாஸ்டிக் கடை எண்டு எங்க எல்லாம் நமக்கு பிடிச்ச பிள்ளை போகுதோ அங்கு எல்லாம் போய் பின்னாடி நிண்டு விலை கேட்டுட்டு வாறது.. ஒரு சாமம் 2 மணி வரை நல்ல பம்பலா பகிடியா போகும்.. அப்புறம் அவன் அவன் அங்க அங்க சுருண்டு படுக்க தொடக்கி போடுவாங்கள்.. அப்ப சந்திரிகா புட் பாய் ஒன்று வந்தது பெரிய பாய் இருவர் வடிவா படுக்கலாம்.. அதில் ஒன்றை வாங்கி அதை நம்ம பெடியள் நாலுபேர் போட்டு படுப்பம்.. பாட்டு சத்தம் மேளசத்தம் காவடி ஆட்டம் மணியோசை அரோகரா ஆர்ப்பரிப்பு மத்தியில் வாற நித்திரை சொர்க்கம்...

 

எல்லாம் முடிஞ்சு விடிஞ்சுது என்றால் இரவு அழகான பிள்ளைகள் எல்லாம் இப்ப காளி வேஷம் போட்டு நிக்கும்.. நித்திரை துக்கம் கண்களில் வழிய போட்ட பவுடர் இல்லாமல் போக கனகா கனகம்மவா தெரிவா பார்வதி பார்வதிபிள்ளையா தெரிவா.. ஓடிப்போய் முகத்தை கழுவி கழுவி ஓரளவு செகப்பாகும் வரை பெடியளை திரும்பியும் பார்க்காதுவள்.. அப்படி வெட்கம் வரும்.. பவுடரை கொண்டுவந்து இருக்கலாம் பேப்பரில் சுற்றி என்று அப்பதான் நினைவு வரும் அவைக்கு... கோயிலில் வாங்கிய கண்ணாடியும் பொட்டும் உடனம் பாவிக்கும் ஆக்கள்..

 

அண்ணனுக்கு தெரியாமல் மெதுவா தங்கைச்சியை கழட்டி விட்டு கதைக்க வந்தா பெடியளோட சேர்ந்து நித்திரை கொண்டுட்டு இப்ப எழும்பி நிண்டு பார்க்கிறாயடி என்று எமக்கு சொல்வதை தன் தோழிக்கு சொல்லிகாட்டி கடந்து போகும் நம்ம ஊரு பெண்கள் அழகிகள் தான்..

 

 • Like 12

Share this post


Link to post
Share on other sites

காலம் எப்படித்தான் மாறினாலும் இந்தக் கோலங்கள்மட்டும் சொல்லி வைச்சமாதிரி அப்பிடியேதான் இருக்குதுபோல.. :lol:

Share this post


Link to post
Share on other sites

சொல்லி வைச்சமாதிரி அப்பிடியே

Share this post


Link to post
Share on other sites

நன்றி உங்கள் விருப்புக்கும் கருத்துக்கும் ^_^

Share this post


Link to post
Share on other sites

நம்மூர்ப் பையன்களுக்கு நம்ம ஊர்ப் பெண்கள் எப்பவும் அழகுதான். புலம்பெயர்ந்து பல்வேறு இனத்தினரும் வாழும் நாட்டில் இருந்தாலும் நம்மினப் பெண்களைக் காணும்போது கண்கள் தானாகவே அலைபாய்வதைத் தடுக்க முடிவதில்லை!

"கதைப்பதற்கு" என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து வந்த பெண்ணோடு கதைக்காமல் நித்திரை கொள்ளும் வாத்துப் பையன்களை என்னவென்று சொல்வது!

Share this post


Link to post
Share on other sites
நித்திரையாகிப்போன பொடியனின் பொறுத்த இடத்தில் நூலைக்கட்டி அதைக்கொண்டுபோய் பக்கத்தில் நிக்கும் தேமாவில் கட்டிவிட்டு நித்திரையாக கிடப்பவனை வெருட்டி எழுப்ப அவனும் விழுந்தடிச்சு எழும்ப நூலும் அவனும் படும் பாட்டை பாத்து சிரிப்பது, நித்திரையான பையன்களின் முகத்தில் சிக்னல் பற்பசையை பூசுவது,கரியால் மீசை வைப்பது.. ரப்பர் பாண்டில் மரவள்ளி நெட்டை வைத்து அடிச்சுப்போட்டு தெரியாத மாதிரி இருப்பது.. இப்படி எத்தனை பம்பல்கள் ஊர்க்கோவில்களில் இரவுத்திருவிழாக்களில்.. இப்ப இவை எல்லாம் நமக்கு கதைகளிலும் நினைவுகளிலும் அசைபோட்டு பார்த்து மகிழ்பவை ஆகிவிட்டன..
 
 
நல்ல ஒரு நினைவுமீட்டல் அண்ணா..

"கதைப்பதற்கு" என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து வந்த பெண்ணோடு கதைக்காமல் நித்திரை கொள்ளும் வாத்துப் பையன்களை என்னவென்று சொல்வது!

கிகிகி.. :D

Share this post


Link to post
Share on other sites

ஊரின் ஞாபகங்கள் மீளக் கொண்டுவரும் பொது ஒரு புறம் மகிழ்ச்சியும் அந்த நாள் மீள வந்திடாதா என்ற ஏக்கமும் வந்து தொலைக்கிறது

Share this post


Link to post
Share on other sites

ஊரின் ஞாபகங்கள் மீளக் கொண்டுவரும் பொது ஒரு புறம் மகிழ்ச்சியும் அந்த நாள் மீள வந்திடாதா என்ற ஏக்கமும் வந்து தொலைக்கிறது

 

மறுபடியும் ஏக்கமா?!! :o

 

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு நினைவு மீட்டல் அஞ்சரன்!

 

அங்காலை கொஞ்சம் தள்ளித்தானே நாக தம்பிரான் கோவிலும் இருக்கு. அங்கும் வருடம் ஓரிருமுறை  உப்படித்தான் இரவுத் திருவிழா நடக்கும் .செம கலாட்டாவாய் இருக்கும்! :rolleyes:  :D

Share this post


Link to post
Share on other sites

மறுபடியும் ஏக்கமா?!! :o

 

 

ஊரின் ஞாபகங்கள் தொடர்பான ஏக்கம் என்று சொன்னேன்  :D

மறுபடியும் ஏக்கமா?!! :o

 

 

ஊரின் ஞாபகங்கள் தொடர்பான ஏக்கம் என்று சொன்னேன்  :D

Share this post


Link to post
Share on other sites

நல்லாத்தான் இளமைக் காலத்தை அனுபவிச்சு எழுதியிருக்கிறியள். பழசெல்லாம் நினைவு படுத்தியமைக்கு நன்றி அஞ்சரன்.

Share this post


Link to post
Share on other sites

இளமைக்காலக் கோவில்த் திருவிழா நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் அஞ்சரன் :D

Share this post


Link to post
Share on other sites

நன்றி வருகை தந்த அனைத்து உள்ளங்களுக்கும் :)

Share this post


Link to post
Share on other sites

அருமை அண்ணா... சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா....கோயில் போறது என்றால் தமிழீழத்தில் இருக்கும் கோவில் போறது போல வருமா...உங்களின் இளமைக் காலம் நல்லா தான் இருந்து இருக்கு....

Share this post


Link to post
Share on other sites

"அதெல்லாம் ஒரு காலம்......." என்று ஒரு நீண்ட பெருமூச்சோடு சொல்லி

பழைய நினைவுகளை மீட்டும்போது மனசு லேசாகக் கனக்கும்! :(

இனி  எப்பொழுதாவது... அதே வசந்தகாலமும் சந்தோசமும் மீண்டும் எம் வாழ்வில் வராதா...? என்ற ஏக்கம் ஆழமாய் வேர்விடுகிறது! :(

 

மிக்க நன்றி அஞ்சரன்! பாராட்டுக்கள்! :)

Share this post


Link to post
Share on other sites

நன்றி பையா ..கவிதை ..வரவுக்கு . :)

Share this post


Link to post
Share on other sites

பார்த்தது மட்டும் தானா ப்றோ? கடிதம் கிடிதம் குடுக்கேல்லையோ?

 

நல்லதொரு நினைவுப்பதிவு வாழ்த்துக்கள். :)

Share this post


Link to post
Share on other sites
தம்பி அருமையாய் எழுதுகிறீர்கள் , 
வன்னிவிளாங்குளம்,வடகாடு,பாலிநகர் ,வவுனிக்குளம் தம்பி அந்த ஊர்களைப்பற்றி கொஞ்சம் எழுதப்பா.எழுத்திலாவது பார்த்து சந்தோசப்படுவோம்.   

Share this post


Link to post
Share on other sites

கோவில் திருவிழாக்கள் என்றால் எப்போதுமே தனியான கலகலப்புத்தான். அஞ்சரன் நீங்கள் கோவிலில் காதலியைரை ரசித்து எழுதியிருக்கிறீங்கள். அருமையான ரசனை.எப்போதும் பழைய நினைவுகள் மீள நினைக்கையில் இழப்பின் துயர் மனங்களை ஊடறுத்துப் போகும். உங்கள் நினைவுகளுக்கு நன்றிகள்.


பார்த்தது மட்டும் தானா ப்றோ? கடிதம் கிடிதம் குடுக்கேல்லையோ?

 

இரகசியமான மேட்டரை இப்பிடிரோ ராசா பப்ளிக்கில கேக்கிறது ? :lol:

Share this post


Link to post
Share on other sites

கோவில் திருவிழாக்கள் என்றால் எப்போதுமே தனியான கலகலப்புத்தான். அஞ்சரன் நீங்கள் கோவிலில் காதலியைரை ரசித்து எழுதியிருக்கிறீங்கள். அருமையான ரசனை.எப்போதும் பழைய நினைவுகள் மீள நினைக்கையில் இழப்பின் துயர் மனங்களை ஊடறுத்துப் போகும். உங்கள் நினைவுகளுக்கு நன்றிகள்.

இரகசியமான மேட்டரை இப்பிடிரோ ராசா பப்ளிக்கில கேக்கிறது ? :lol:

 

ம்ம் மனைவி யாழ் வராதவரை ஓகே சாந்தி அக்கா :D

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ள, 1.1 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்குவர் என, உலக வங்கி எச்சரித்துள்ளது. சீனாவில் வூஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 202 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், கூடுதலாக 1.1 கோடி (11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது.   இதுகுறித்து உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்ய மேட்டூ கூறுகையில், 'கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நாடுகளின் வளர்ச்சியை தடுப்பதோடு, பெரும் பாதிப்பை உண்டாக்கும். சீனா இதனால் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். உலக மக்கள் தொகையில் 5ல் 2 பங்கு மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் வணிகம் முடங்கி உள்ளதால், நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளும். கிழக்கு ஆசியா, பசுபிக் நாடுகளில், சீனாவை தவிர்த்து, மற்ற நாடுகளின் அடிப்படை வளர்ச்சி 1.3% குறையும். இருப்பினும், விரைவில் இயல்பு நிலை திரும்பும்' இவ்வாறு அவர் கூறினார். நோய் தாக்குவதற்கு முன், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், 2020ல், 3.5 கோடி பேர் வறுமையிலிருந்து வெளியேறுவர் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   https://yarl.com/forum3/forum/34-உலக-நடப்பு/?do=add
  • முற்றிலும் உண்மை இணைய‌வ‌ன் அண்ணா / ஏன் இவ‌ர்க‌ள் இப்ப‌டி செய்கிறார்க‌ள் என்று புரிய‌ வில்லை / த‌லைவ‌ர் எங்க‌ எல்லாருக்கும் சொன்ன‌ ஒரு விடைய‌ம் உன‌க்கு தெரிந்த‌தை ம‌ற்ற‌வைக்கும் சொல்லி குடுக்க‌ சொல்லி / என‌க்கு தெரிந்த‌ சில‌ உண்மைக‌ளை ந‌ண்ப‌ர்க‌ளுக்கு சொல்லுவ‌துண்டு அண்ணா / 
  • ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கொரோனா தொற்றா? – ஜனாதிபதி மாளிகையின் அறிவிப்பு       by : Litharsan ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்து உரையாடியிருந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புடின்னு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை குறித்து ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவில், 2 ஆயிரத்து 337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மொஸ்கோவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையைப் பார்வையிட்ட ஜனாதிபதி புடின், தலைமை மருத்துவர் டெனிஸ் என்பவரிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அப்போது ஜனாதிபதி எந்த வித முகமூடியும் அணியாமல், மருத்துவருடன் கைகளைக் குலுக்கி சாதாரணமாக நடந்து கொண்டார். இந்நிலையில், புடினிடம் பேசிய மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி தனிமைபடுத்தப்பட்டுள்ளார். இதற்கு அடுத்தபடியாக, ஜனாதிபதி புடினுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியதாக ஜனாதிபதி மாளிகை கூறியுள்ளது. http://athavannews.com/ரஷ்ய-ஜனாதிபதி-புடினுக்கு/
  • ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது         by : Jeyachandran Vithushan 19 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) காலை தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மதியம் 2 மணிக்கு அமுலாகும் என்றும் இது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 06 மணிக்கே மீண்டும் தளர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவிப்பு வரும்வரை ஊரடங்கு தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது http://athavannews.com/ஊரடங்கு-தொடர்பான-அறிவிப்/
  • வடக்கில் தனிமைப்படுத்தலில் உள்ள 346 பேரும் சில நாட்களில் விடுவிக்கப்படுவர்- வைத்தியர் கேதீஸ்வரன்         by : Litharsan கொரோனோ தொற்று சந்தேகத்தில் வடக்கு மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் வரையில் தொற்று இணங்காணப்படாது விட்டால் அவர்கள் வரும் 6ஆம் திகதி விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர் கூறுகையில், “உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கமைய யாழ். மாவட்டத்திலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகல் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதற்கமைய யாழ். அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் உட்பட யாழ். மாவட்டத்தில் 319 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் இதுவரை கொரோனோ தொற்று இனங்காணப்படவில்லை. ஆனாலும் தனிமைப்படுத்தும் காலம் முடிவடையும் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். ஆகவே அந்தக் காலத்திற்குள் அவர்களுக்கு தொற்று ஏதும் காணப்படாதவிடத்து எதிர்வரும் 6 ஆம் திகதி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்றார். http://athavannews.com/வடக்கில்-தனிமைப்படுத்தல/