Jump to content

பர்வதத்தின் சிவலையன் .!


Recommended Posts

பர்வதம் ஆச்சி இரண்டுநாளா போன சிவலையை காணம் எங்க போனானோ..? ஒன்னும் தெரியாது யாருட்ட கேட்க..? தனிக்கட்டை எண்டு தெரியும் நேரகாலத்துக்கு வீட்டுக்கு வராமல் எங்க மேயுறான்...? வரட்டும் குறி இழுக்கிறன்.. என பேசியபடி களனித்தண்ணியை பழைய வாளியில் ஊறினார்.

 

சிவலை எப்படியாவது தன்னை பிணையெடுக்க கிழவி வரும் என்ற நம்பிக்கையில் கொடுத்ததை சாப்பிட்டபடி நின்றிருந்தான்... ஆனாலும் மனதில் நான் பரமர் வீட்டுப்பக்கம் போனது பிழைதான் என எண்ணி வேதனை பட்டபடி எவ்வளவு பணம் கட்டவேண்டி வருமோ தெரியல்லை ஆச்சி பாவம் என் யோசினையில் நின்று இருந்தான்...

 

அடே முனியாண்டி எங்கால போற..? வடக்கால போனால் இவன் சிவலை நிண்டா அனுப்பி விடு நேற்று பூரா தேடி களைச்சு போனன்.. இன்னும் வீடு வாசல் வராமல் என்ன உத்தியோகம் எண்டுதான் விளங்கவில்லை எனக்கு.

 

வழமையா கிழக்க போறவன் அவள் சரசு வீட்டில பெட்டையள் அதிகம் எண்டதால நான்தான் அங்கால போகவேணாம் என்று மறிச்சன்.. என்னுடைய பிழைதான்.. சரசு நம்ம சாதிசனம் ஒன்று என்றாலும் கதைத்து பேசி இருக்கலாம்.. இப்ப பாரு போனவனை காணம்.. நாளைக்கு பேரனை வரசொல்லி இருக்குறன் ஒருக்கா போலீசில் போய் ஒரு முறைப்பாடு போடுவம் எண்டு .

 

அப்பொழுது முருகேசர் எனை ஆச்சி சிவலை இரண்டுநாளா பிடிச்சு வைத்து இருக்கினம் நீ என்ன இங்க நின்று அலம்பிற..? போ இண்டைக்கு பிணை எடுக்காட்டி நாளைக்கு இடம் மாற்ற போறான்கள் போல.. கெதியா போனை.. ஆட்டோ சண்முகம் வீட்டுக்கு பக்கத்தில்தான் ஆறு ஏழுபேர் ஒன்றா வைத்து இருக்கு.. போகும்போது குடும்பகாட்டு கொண்டு போணை.. என சொல்லி கடக்க ஆச்சி ஒப்பாரி தொடங்கிச்சு.. நாசமா போவார் என்னட்ட காசை புடுங்க நிக்கினம் நல்லாவே வரமாட்டினம் வயிறு எரிஞ்சு சொல்லுறன் அவன் ஒரு பிரச்சினைக்கும் போகமாட்டான் எல்லோருடனும் பழகுவான் மெதுவா கூட்டி போயிட்டு இப்ப காசுக்கு நிக்கினம் போல வாறன் போய் நாலு கிழி கிழிச்சா சரிவரும்...

 

சிவலை உன்னை எடுக்க ஒருவரும் வரக்காணம் என்ன செய்ய போற என கேட்க.. சிவலை ஆச்சியின் சேலை கலரை கண்டு கண்களை அகல விரிக்க புரிந்தது அவருக்கு யாரவோ வருவது.. நேர வந்த பார்வதம் ஆச்சி சிவலையை கட்டி அணைத்து என்னடா ஆச்சு அடிச்சு போட்டங்களா படுபாவிகள் நல்லாவருவினம் கொழுப்பெடுத்து திரியுறவ.. என வசைபாட குறுக்கிட்டு பார்வதம் ஆச்சி சிவலை பரமரின் வேலி பாய்ந்து போய் இருக்குறான் அங்க நிண்ட இளசுகளை மொட்டு பூ எண்டு பாராமல் கடிச்சு வைத்து இருக்குறான் சும்மா விளங்காமல் கத்தாதை.

 

அதுக்கு என்னிடம் வந்து சொல்லாமல் எதுக்கு இங்க கொண்டு வந்தனியள் இரண்டுநாள் அன்னம் தண்ணி இல்லாமல் கிடக்கு பெடி வாடிபோனான் வேற.. சரி இப்ப என்ன நான் செய்யவேணும் பரமத்தான் எவ்வளவு கேட்கிறான் எண்டு கேட்டு சொல்லு எனக்கு ஆயிரம் அலுவல் இருக்கு .

 

சரியன ஆச்சி எல்லாமா இளம்கண்டு ..கச்சான் என்று ஒரு கால் ஏக்கர் மேய்ந்து இருக்கு 3000 ரூபா கொடுத்துட்டு மாட்டை அவிழ்த்திட்டு போ.. இனியாவது கட்டி வைத்து வள பயிர் செய்யும் நேரம் அவிழ்த்து விடாத பார்க்க ஆக்கள் இல்லை என்றால்.. என கூறி முடிக்க முந்தானை முடிச்சில் கொண்டுவந்த காசை எண்ணி கொடுத்து போட்டு சிவலையுடன் வெளியில் வந்தா பர்வதம் ஆச்சி மூணு..நாள் களனி தண்ணி இருக்கு தவுட்டோட கலந்தது தாரன் வடிவா குடிக்கலாம் என சிவலையுடன் பேசியபடி வீடுநோக்கு நடந்தார் கிழவி..

 

Link to comment
Share on other sites

சிறிய கதையானாலும் அதில் வரும் செய்தி கனதியானது . தனது வயது போன நேரத்திலையும் மிருகங்கள் மீதான பாசங்கள் நெஞ்சை நெகிழ வைக்கின்றன . தொடருங்கள் அஞ்சரன்  :)  :)  .

Link to comment
Share on other sites

நன்றி கோமகன் வருகைக்கும் விருப்புக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாக இருக்கு அஞ்சரன். நீங்களும் ஒருகை பாக்கிறது எண்டுதான் நிக்கிறியள். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

எங்கள் ஊர்களில் கால்நடைகளும் எங்கள் வாழ்வோடு ஒன்றானவை. அத்தைகயதொரு கால்நடையே சிவலை. அஞ்சரன் ஆச்சியின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

நன்றி கருத்துக்கும் வரவுக்கும் :D

Link to comment
Share on other sites

கிராமங்களில இப்படியான பாசத்தை நிறையவே காணலாம். நானும் இப்படி ஒரு பாசத்தைப்பற்றி 1991இல் எழுதினேன்.

 

'இதற்காக இவைகளை..'

 

பாராட்டுகள்!! தொடருங்கள்!!!

Link to comment
Share on other sites

நன்றி சோழியன் அண்ணா .

 

உங்கள் கதை படித்தேன் அருமை  நிங்கள் ஏன் இப்ப எழுதுவது இல்லை :)

 

Link to comment
Share on other sites

உண்மையைச் சொன்னால்.... எனக்கே தெரியவில்லை! :lol: நன்றி!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உண்மையைச் சொன்னால்.... எனக்கே தெரியவில்லை! :lol: நன்றி!

 

அது உண்மைதான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கின்றது. கிராமத்துக் கிழவியின் உணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டி வெற்றிபெற்றிருக்கிறீர்கள் என எண்ணத் தோன்றுகின்றது!

Link to comment
Share on other sites

நன்றி யாழ்வாலி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்துக் கிழவியின் உணர்வுகளை காட்டும் கதைக்கு என் பாராட்டுக்கள். ....மேலும் தொடர்ந்து எழுதுங்கள். ..

Link to comment
Share on other sites

நன்றி நிலாமதி .

Link to comment
Share on other sites

  • 1 month later...

நன்றி வருகை தந்த அனைவருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு யாழ்ப்பாணத்தில  வீதியில் நிக்கும் நாய்களைப் பிடிக்க வண்டிலுடன் முனிசிப்பாலிட்டியில் இருந்து வருவார்கள்! சாதாரணமாய்  அது தெரிந்ததும் வளவுக்குள் நாயைக் கட்டி விடுவோம். அப்படியும் சில நேரங்களில் அவர்கள் பிடித்து விடுவினம். அப்ப அவர்களுக்கு காசு கொடுத்து நாயை மீட்பதுண்டு. அதுவும் வண்டிலில் ஏற்ற முதல்!! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.