Jump to content

சிறிலங்கா: மறையும் நம்பிக்கைக் கீற்று! - 'தி இந்து' ஆசிரியர் தலையங்கம்

Recommended Posts

கோசன் என்பவர் புலம் பெயர் புண்ணாக்குகள் சொல்வதை விட்டு விட்டு நிலாந்தன் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டால், கள யதார்த்தம் தெரியும்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=8JfHos_OenU#t=460

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply

தனிநாட்டை கேட்டது புலம்பெயந்தவை இல்லை... !   இதே போல ஒரு இக்கட்டான காலத்தில்  தந்தை செல்வாவே முன் மொழிந்தார்.... !  

சாத்வீக வளியிலையோ இல்லை அரசியல் வளியிலையோ முடியாது எண்ட போதுதான் ஆயுதங்களை கையிலை பிடிச்சவை... 

ஆயுத போருக்கு முன்னால் தமிழர்கள் இப்போதைய கால அடக்கு முறைக்கு கொஞ்சமும் இணை இல்லாத கொடுமைகளை அனுபவித்தனர் எண்டதை நீங்கள் அறியாமல் இருப்பது ஆச்சரியமாக இல்லை...   வேண்டும் எண்டால் சொல்லுங்கோ தேடிப்பிடிச்சு  பட்டியல் போடுகிறன்... 

அந்த கொடுமைகளில் இருந்து மீள் படவே தந்தை செல்வா தமிழீழத்தை முன் மொழிந்தார்... 

இந்த அமிர்தலிங்கம் தியாகரிட்டை வட்டுக்கோட்டையில் தோற்ற பிறகு... தனது அரசியல் எதிர்காலத்துக்காக பாவம் வயதான காலத்தில செல்வாவை தமிழீழத்தை முன்மொழிய வைச்சதாக அப்ப கதைச்சவை.. எங்கடை தலைவர்மாரும் கட்டைல போகேக்கைதான் சுடலைஞானம் வந்து கொஞ்சமாலும் விட்டுக் கொடுக்கிறவை.. இதுக்கு இராமநாதன் பொன்னம்பலம் செல்வா யாருமே விதிவிலக்கில்லை. ;)

சிங்களம் எப்போதும் உங்களுக்கு எதையும் தராது எண்டதை 75 வருட வரலாறு சொல்கிறது...  இதை புரிய முடியாமல் நீங்கள் இருப்பது எங்களின் தவ்று இல்லை... 

Link to comment
Share on other sites

நிச்சயமாக. அயுத பயிற்ச்சி வழங்கியது ஜே ஆரை மாகாண சபை வரைக்கும் படிய வைக்க. உங்களுக்கு தனிநாடு தர அல்ல. இந்தியாவை நீங்கள் இன்னும் புரியவில்லை.

இந்தியாவில் இந்திரா காந்தி, மொராஜி, சந்திர சேகர், ராவோ, ரஜீவ், வாஜ்பாய்,  மன்மோகன் சிங் என்றேல்லாம் வேறுபட்ட கொள்கைகள் உடைய பிரதமர்கள் இருந்தார்கள். 

1971ல் JVP , 1971 பங்களாதேஷ் யுத்தம், 1974 கச்ச தீவு உடன்படிக்கை, இந்திரா காந்தி கொலை..... என்றேல்லாம் தமிழ் ஈழத்தை பாதித்த செயல்ப்பாடுகள் அங்கு நடந்தன.

இலங்கையில் சிறிமா, JR, பிறேமதாசா, சந்திரிக்கா, மகிந்த என்று இந்திய, மேற்கு நாடுகளின் ஆதரவு/எதிர் தலைவர்கள் பலர் ஆட்சிக்கு வந்தார்கள்.  இதனால் சிக்கலான நடவடிக்கையாக இந்திய இலங்கை உறவு கடந்த 50 வருடங்களாக இருநது வருகிறது. இதை 1987ல் இருந்து ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் 22 கூட்டத்தொடர் வரையும்  குழப்பாமான பாணியில் அரசியல் ஆய்வாளார்கள் இந்திய பாதுகாப்பு கொள்கையாக வ்ர்ணித்தார்கள். ஆனால் இந்த காலம் இந்தியாவில் ஊழலின் பொற்காலமாகவும் அமைந்துவிட்டது. அதாவது எதிவுகள் கூற மிகவும் தோதில்லாத நாட்கள்.

எனவே இந்தியாவை அறிந்து கொள்ள்வதை தனிய "தனி நாடு  கொடுக்க/மறுக்க" என்ற ஒற்றை வசனங்களால் விளங்க வைக்க முடியாது. இதனாலேயே "இந்திய பாதுகாப்பு கொள்கை" வாதிகள் கூட்டத்தொடர் 22ன் பின்னர் அடங்கினார்கள்.  கனடா கொண்டுவந்த மனித உரிமைகள் பிரேரணையை மாற்றி அமைத்த இந்தியா 22ம் தொடரில் கையறு நிலையில் நின்றது. 4 மணித்தியால உண்ணாவிரதம் புகழ் கருணாநிதி கூட்டை விட்டு விலகினார்.

அரசியலை ஒற்றை வரியில் எழுதும் போது அது சரியாக இருப்பதில்லை என்பதை அப்போதுதான் "பாதுகாப்பு கொள்கை" ஆயவார்கள் புரிந்து கொண்டார்கள் அன்றுதான் அவர்கள் தங்களுக்கு இந்தியாவை மட்டும் அல்ல, அரசியலும் கூடத்தான் விளங்காத பாடம் என்றதை உணர்ந்தார்கள். 

இப்போது வடமாகாணத்தேர்தல் அவர்களுக்கு 22ம் கூட்டத்தொடர் இந்தியாபக்கம் கொடுத்த அதே சிக்கலை இலங்கை பக்கத்தில் இருந்து கொடுக்கிறது. இதனால் அவர்கள் இலங்கையை எப்படி இனி ஆராய்வது என்று தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். 

சிக்கல் வருவது, அவர்கள் ஆராய்வை தொடங்க முதல் தங்கள் கோடு ஒன்றில் வைத்து தங்களை நீதிபதிகளாக்கி தீர்ப்பை கொடுத்துவிடுகிறார்கள். இது அவர்களின் பொருளாதார அடிப்பையில் தங்கியிருக்கிறது. உண்மை ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகும் போது ஆராய்ந்தவர்களின் பெயர்களை கூட கண்டுபிடிப்பது கடினமாகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா யாரும் எங்கட பிரச்சினைய தீர்க்க மாட்டீனம் என்று வடிவா தெரிஞ்ச படியாத்தான் சொல்லுறன், நடக்காத தீர்வை விட்டுட்டு நடக்க கூடிய தீர்வை கேளுங்கோ என்று. கொள்கை புண்ணாக்கெல்லாம் எங்கள் மக்களை எங்கே கொண்டு போய்விட்டது என்று 2009 பார்த்தாச்சு. இனி கழுவுற நீரில் நழுவுறை மீனாய் வாழ்ந்து சூழலுக்கு ஏற்ப காய்நகர்தி வாழவே மக்கள் விரும்புகிறார்கள். அதைதான் கூட்டமைப்புச் செய்கிறது.

இசை அதுவும் நடக்கும் ஆனால் அப்போதும் அவருக்கு பதில் இன்னொருவரை பிரதியீடு செயுமே தவிர உங்களுக்கு தனிநாடு வர அனுமதியாது.

நாரதர் இதே நிலாந்தன் 2009 முன்பு திருநாவுக்கரசோடு சேர்ந்து TNT டிவியில் சொன்ன விசயங்களை ஒருக்கா பாருங்கோ, ஒரே சிரிப்பாயிருக்கும். புலம்பெயராத புண்ணாக்குகளும் சிலது உண்டு. உதாரணம் நிலாந்தன்.

யாரும் எண்டால் அதில்  கூட்டமைப்பும் சேர்த்தி தானே...??  

நாங்கள் எங்கட பிரச்சினையை பேசாமல் மற்றவர்களிடம் பொறுப்பை கொடுத்தமையால் தான் செயல் பாடுகள் கூட வேறு யாரிலை தங்கி இருக்க வேண்டி வந்தது...  

வாக்கு அரசியலில் இருக்கும் கட்ச்சி ஒண்று தனது வாக்குக்களையும் செல்வாக்கையும் நிமிர்த்தி நிக்க வைக்க பலதையும் செய்யும் சொல்லும்...  அதை அப்படியே நம்பும் தொண்டர்களை பார்க்கும் போது  பாவமாக மட்டுமே இருக்கும்... 

கூட்டமைப்பு ஒரு தீர்வை வாங்கி தரும் எண்ட நம்பிக்கை இருக்கும் ஆக்களை பார்க்கும் போது  ஆச்சரியம் வருவதை தவிர்க்க முடியவில்லை... 

கூட்டமைப்பு என்ன தங்களால் முடியுமோ அதை சொல்லி செய்யட்டும்...    அதுதான் இண்றைய தேவை... 

கூட்டமைப்பால் முடிந்த பல விடயங்கள் இருக்கிறது...    அச்சநிலை அகற்றுதல் , அதில் மீள் கட்டுமானம் , குடியேற்றம் ,  வாழ்வாதாரத்துக்கான முன்னேற்றம் ,  கல்வி ,  சுகாதாரம் ,  இப்படி மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சினைகள் நிறையவே இருக்கிறது...  அவைகளை விட்டு போட்டு  தீர்வு திட்டத்திலை நாலுவருடமாக செலவளித்து வீணாக்கினது போல இல்லாமல் செயற்பட்டால் நல்லது...   

2001 புலிகள் கூட அரசோடு பேசியது கூட மக்களின் மீள்கட்டமைப்பு குடியேற்றம் பற்றிய மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றியே...  

இவைகளை தீர்த்து வையுங்கள் பிறகு பெடலறிசமா இல்லை இடறலிசமா எண்டதை மக்கள் தீர்மானிக்கட்டும்... 

Link to comment
Share on other sites

கோஷான்.. உங்களாலும், என்னாலும், நம்மாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.. ஊகங்களை வேண்டுமானால் மேற்கொள்ளலாம்..

மாறாக, நடந்து முடிந்தவைகளை அசைபோட ஒரு பெரிய விற்பன்னராக இருக்கவேண்டிய அவசியமில்லை..

1935 ஆம் ஆண்டில் இந்தியச் சுதந்திரம் என்பதே சாத்தியமான விடயம் அல்ல.. சூரியன் அஸ்தமிக்காத நிலப்பரப்பு இராச்சியத்தினுள் தற்போதைய இந்திய நிலப்பரப்பும் அடங்கியிருந்தது..

அன்று தனி இந்திய தேசம் சாத்தியமில்லை என்று சொன்னவர்கள் அதிகமானவர்கள் இருந்திருப்பார்கள்.. இங்கிலாந்து ராணிக்கு விசுவாசமாக இந்தியாவில் வேலை செய்திருப்பார்கள்.. ஆனால் வரலாற்றில் அவர்களின் முகவரிகளை இன்று காணக்கிடைக்காது.. காரணம் வரலாறு என்றுமே ஒரே பாதையில் செல்வதில்லை..ஹிட்லரின் வருகையும், உலகப்போரின் தாக்கமும், அமெரிக்காவின் எழுச்சியும் பல நாடுகளை உருவாக்கின்..

இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் காந்தியின் அகிம்சைப் போராகிலும் சரி, சுபாஷ் சந்திரபோசின் ஆயுதப்போராகிலும் சரி.. அவை இந்திய சுதந்திரத்தைப் பெற்றுத்தந்திருக்கப்போவதில்லை.. ஆனால் சுதந்திரத்திற்கான வாய்ப்பு வந்தபோது அவர்களது போராட்டங்கள் நிலத்தை தயாரான நிலையில் வைத்திருந்தன..

பிரித்தானியாவுடன் மோத முடியாது என்று இராஜதந்திரத்துடன் இந்தியத் தலைமைகள் நடந்துகொண்டிருந்தால் இன்றைய நிலை என்ன?

ஆக, போரைக் கைவிடலாம். ஆனால் கோரிக்கையை ஒருநாளும் கைவிட முடியாது. கைவிடக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்..தமிழீழம் கேட்ட போது.. அதை முடக்க... கிள்ளிப் போட்டதே இந்த மாகாண சபைகள்..! இப்போ.. சம்பந்தன் சமஸ்டியைக் கேட்டால்.. எதைக் கிள்ளிப் போடுவார்கள்.. வாய்க்கரிசி மட்டுமே..!

இங்கு சிலர்.. இந்து எமக்காக உருகி வழிகிறது என்று படம் காட்டுகிறார்கள். இந்து.. ஹிந்தியாவின் தேவைக்கு ஊதுது.... எமக்கு மாகாண சபைகள் கிடைக்கனுன்னு இல்லை. 13 கொடுத்து சம்பந்தனை ஒரு வழி பண்ணிட்டால்.. சிங்களத்தோடு வெளிப்படையாக..பகைக்க வேண்டிய சூழல் வராது.. சம்பந்தன் மிச்சத்தைப் பார்த்துக் கொள்வார்... இது தான் இந்தியாவின் நோக்கம்.  அதற்காகவே இந்து உருகி வழிகிறதே தவிர.. தமிழ் மக்கள் மீதான அக்கறை அதற்கு என்றுமே இருந்ததில்லை..! :icon_idea:

புலம்பெயர் மக்களின் தமிழீழத் தனியரசின்.. சுயாட்சிக்கான.. கோரிக்கையின் பலத்தில் தான் எனி.. தாயக மக்களுக்கு கிடைக்கப் போகும் அரசியல் வெற்றியின் அளவே தங்கி உள்ளது..! இந்துவின் உருகலில் அல்ல..! :icon_idea:

Link to comment
Share on other sites

தயா யாரும் எங்கட பிரச்சினைய தீர்க்க மாட்டீனம் என்று வடிவா தெரிஞ்ச படியாத்தான் சொல்லுறன், நடக்காத தீர்வை விட்டுட்டு நடக்க கூடிய தீர்வை கேளுங்கோ என்று. கொள்கை புண்ணாக்கெல்லாம் எங்கள் மக்களை எங்கே கொண்டு போய்விட்டது என்று 2009 பார்த்தாச்சு. இனி கழுவுற நீரில் நழுவுறை மீனாய் வாழ்ந்து சூழலுக்கு ஏற்ப காய்நகர்தி வாழவே மக்கள் விரும்புகிறார்கள். அதைதான் கூட்டமைப்புச் செய்கிறது.

இசை அதுவும் நடக்கும் ஆனால் அப்போதும் அவருக்கு பதில் இன்னொருவரை பிரதியீடு செயுமே தவிர உங்களுக்கு தனிநாடு வர அனுமதியாது.

நாரதர் இதே நிலாந்தன் 2009 முன்பு திருநாவுக்கரசோடு சேர்ந்து TNT டிவியில் சொன்ன விசயங்களை ஒருக்கா பாருங்கோ, ஒரே சிரிப்பாயிருக்கும். புலம்பெயராத புண்ணாக்குகளும் சிலது உண்டு. உதாரணம் நிலாந்தன்.

நிலாந்தன் அல்ல எவருக்கும் எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணித்து விட முடியாது. நான் சுட்டிக் காட்டியது தற்போது நாட்டில் இருக்கும் அரசியல் யதார்த்தம் என்ன என்பதை அவர் அங்கிருந்து சொல்கிறார் அதையாவது கேளுங்கள்.

கூட்டமைப்பிடம் எந்த ஒரு திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மகிந்த அரசிடம் இருக்கும் வெறுப்பை கூட்டமைப்பிற்கு வழங்கி இருக்கிறார்கள்.கூட்டமைப்பின் தேர்தல் உறுதி மொழிகள் அவர்களின் 2009 ஆண்டிற்கு முன்னரைப் போன்ற உணர்ச்சிகரமான பேச்சுக்கள் இவைகள் தான் வாக்குகளாக்கப் பட்டுள்ளன. இதில் கூட்டமைப்பு தாம் சொல்லியவற்றை மக்களுக்கு வழங்க முடியாத நிலை ஒன்று வரும். அந்த நிலை எத் தகைய அரசியற் சக்திகளை உருவாக்கும் என்பவை எவராலும் சொல்லி விட முடியாது.

ஆனால் கூட்டமைப்பு முற்று முழுதாக இந்தியாவை நம்பி இதில் இறங்கி இருக்கிறது. இந்தியாவை நம்பி இறங்குபவர்களுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பல வரலாறுகள் இருக்கின்றன. அதனால் தான் சொல்கிறோம் கூட்டமைப்பின் தலமை இந்தியாவை நம்பி இறங்கட்டும் அதற்காக , ஒட்டு மொத்த தமிழனும் நம்பி இறங்க வேண்டியதில்லை.

ஏனென்றால் நாம் எல்லோரும் ஒரே அடியாக எமது போராட்டத்தை அழித்துக் கொள்ள முடியாது.முள்ளிவாய்க்கால் இராணுவத் தோல்வியை விட தமிழர்கள் மிகப் பலமான ஒரு அரசியல் தோல்வியைத் தழுவி, சிங்கள அரசின் நிரந்தர அடிமைகளாக வாழ நேரிடும்.இதனை புத்தியுள்ள எவரும் செய்ய மாட்டார்கள்.புலி அழின்சா விடிவு கிடைக்கும் என்று சொன்ன மேதாவிகளைப் போல் தான் உங்கள் எழுதுக்களும் இருக்கின்றன.இப்படிப் பல பேரை இக் களம் கண்டிருக்கிறது.பலர் அவர்களின் வாக்குக்கள் பொய்த்து இங்கிருந்து காணாமால் போய்விடுவார்கள் அல்லது இன்னொரு முகமூடியைப் போட்டுக் கொண்டு வருவார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

காந்தி கூட மாறி வரும் சூழலை புரிந்து கடைசி 5 வருசமா தான் தனிநாடு கேட்டவர். அதுக்கு முதல் மாகாண சபையை ஒத்த தீர்வுக்கு அவர் போனவர் எண்டுதான் சுபாஸ் விலகினவர். ஆக காலம் வரும் போது தான் காய் நகர்த்த முடியும். காந்தியே ஆகினும்.

இந்தியா அதற்க்கு முன்னும் கட்டபொம்மன், வேலூர் கலகம் முதல் சிப்பாய் கலகம் என்று பலதை கண்டது, ஆனால் அவை எல்லாம் காலம் தோற்கடித கதை. காலத்தை கணித்து அதற்கேப்ப மாறியதால் காந்தி வெண்டர். உங்கள் கோரிக்கைக்கான காலம் இன்னும் 100 ஆண்டுகளிற்காவது வராது.

இப்போ இருப்பதை காக்க, சமச்டியை கூத்தாடியாவது பெற கூட்டமைப்பே சரி என்பது மக்கள் தெரிவு.

தயா, நெடுக்ஸ் -

மாவீரர் தினத்தையே மூன்றாக பிரிந்து நடத்தும் நீங்கள் புலத்தில் புரட்சி செய்து தனிநாடு எடுத்து தருவீர்கள் என்று சொல்லுவதை நினைத்து அழவும் முடியவில்லை.

நான் முன்பே டில்லி விட்டேன் நீங்கள் உங்கள் அறிவுக்கு எட்டிய படி புலத்தில் என்ன கண்றாவியையாவது செய்யுங்கள், நிலத்தவர்க்கு அவர்களின் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களிகு கட்டளை மட்டும் போடாதீர்கள்.

புலம் பெயர்ந்த நாட்டில் ஒற்றுமை எண்டதில் ஒண்டாக இல்லாவிட்டாலும் எல்லாருக்கும் இலக்கு ஒண்று தான்...   அப்படி பல அரசியல் அமைப்புக்கள் செயற்படுவதில் பிழை கூட இல்லை...  

பிழை எண்று சொல்வதாக  பார்த்தால் தேர்தலுக்காக கூட்டணி அமைத்து இருக்கிற தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட தனித்த கட்ச்சி கிடையாதே...   மக்களின் வாக்குகளை வாங்க வசதியாக இணைக்க பட்ட ஒரு சந்தர்ப வாத கூட்டமைப்புதான்... 

கூடமைப்பில் இருக்கும் யாரும் புலத்தில உங்கட கோஸ்டிகள் செய்யுமாப்போல ஆளையாள் கழுத்தறுப்பு செய்வதில்லை. ஐநாவில் தீக்குளித்த ஒருவரின் நினைவடத்தை வைத்து அரசியல் செய்த நீங்கள், ஒரே நாட்டில் பீடிஎப் ஜீடீஎப் என பிரிந்து அரசியல்ம்செய்யும் நீங்கள், தமிழ்ச் போர் ஒபாமாவில் இருந்து தமிழ போர் ஜஸ்டிஸ் எனப்பிரிந்த நீங்கள் கூடமைப்புக்கு ஒருமை பாடம் எடுப்பதை என்ன சொல்ல?

நீங்கள்தான் இன்னும் ஆயிரம் வருடம் இந்த நெருப்பை அணையாது காக்கப்போற்ரீகள். இதை நாங்கள் நம்பணும்.

Link to comment
Share on other sites

இசை,

காந்தி கூட மாறி வரும் சூழலை புரிந்து கடைசி 5 வருசமா தான் தனிநாடு கேட்டவர். அதுக்கு முதல் மாகாண சபையை ஒத்த தீர்வுக்கு அவர் போனவர் எண்டுதான் சுபாஸ் விலகினவர். ஆக காலம் வரும் போது தான் காய் நகர்த்த முடியும். காந்தியே ஆகினும்.

இந்தியா அதற்க்கு முன்னும் கட்டபொம்மன், வேலூர் கலகம் முதல் சிப்பாய் கலகம் என்று பலதை கண்டது, ஆனால் அவை எல்லாம் காலம் தோற்கடித கதை. காலத்தை கணித்து அதற்கேப்ப மாறியதால் காந்தி வெண்டர். உங்கள் கோரிக்கைக்கான காலம் இன்னும் 100 ஆண்டுகளிற்காவது வராது.

இப்போ இருப்பதை காக்க, சமச்டியை கூத்தாடியாவது பெற கூட்டமைப்பே சரி என்பது மக்கள் தெரிவு.

இந்த நூறாண்டுக் கணக்கை கண்டுபிடிப்பதற்கு எந்தச் சமன்பாட்டை பாவித்தீர்கள்? :rolleyes:

Link to comment
Share on other sites

இந்த நூறாண்டுக் கணக்கை கண்டுபிடிப்பதற்கு எந்தச் சமன்பாட்டை பாவித்தீர்கள்? :rolleyes:

சபேசனும் முன்னர் ஒருதடவை இப்படியாக கணித்திருந்தார். 

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் பிரச்சனைகளை கையாழும் சிங்கள  இந்திய அரசுகள் தாம் எதை விரும்புகின்றதோ அதையே செய்கின்றது. அவ் விருப்பத்துக்கு மாறாக கூட்டமைப்பு எதுவும் செய்யமுடியாது.

தனிநாடோ இல்லை மாகாணசபை அதிகாரமோ இல்லை அதைவிடக் குறைந்த அதிகாரமோ தமிழர்கள் கேட்கவேண்டும் அதை சிங்களவர்கள் மறுக்கவேண்டும். இதுதான் இவர்களின் அடிப்படைச் சூத்திரம்.

புலிகளுக்கு முதல் அரசியல் வழியில் உரிமை கேட்டார்கள் பின்னர் புலிகள் ஆயுதப்போராட்ட வழியில் உரிமை கேட்டார்கள் அதன் பிறகு ஒரு வெற்றிடம். அவ்வெற்றிடத்தை ஒரு தோர்தல் ஊடாக நிரப்பியுள்ளார்கள். தற்போது அதிகாரத்தை கேட்க்கும் ஒரு தரப்பை தேர்தல் ஊடாக உருவாக்கியுள்ளார்கள். இது கூட்டமைப்பின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விசயம்.

தேர்தலில் சிங்களவர்கள் வாக்குகள் ஒரு பக்கம் தமிழர்கள் வாக்குகள் ஒருபக்கம். இத்தேர்தலில் சிங்களப்பேரினவாதமும் இந்திய அதிகாரவர்க்கமும் தமிழர்களை கையாழும் விதத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.

ஒரு தரப்பு அதிகாரம் கேட்கும் மறுதரப்பு மறுக்கும். இதற்கு இரண்டு தரப்புக்கள் அவசியம் . அதை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களுக்கிடையில் விலக்குப்பிடிக்கும் தலையீடுகள் தொடரும்.

தமிழர்களின் அதிகாரம் பெறும் அரசியல் பலம் என்பது கூட்டமைப்பின் கைகளில் இல்லை. கூட்டமைப்பு இந்திய இலங்கை அரசுகளின் தேவைகளுக்கேற்ப ஆடும் பொம்மைகள். இது அவர்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிலை. இதனால் கூட்டமைப்பை குறை கூற முடியாது.

ஏதோ ஒரு வகையில் புலம்பெயர் தமிழனின் தலையீடு ஈழத்தில் தமிழர்கள் அதிகாரம் பெறுவது தொடர்பாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இதற்கு அர்த்தம் கூட்டமைப்பை அதிகாரம் செய்வதோ கட்டளையிடுவதோ என்று கிடையாது. புலம்பெயர் தமிழனின் நீதிக்கான குரல் கூட்டமைப்பை விட பலமானது. புலம்பயெர் தமிழன் இந்திய இலங்கை அரசுகள் தமிழர்களை கையாழும் நிகழ்ச்சிநிரலுக்கு அப்பாற்பட்டவன். ஆனால் அதன் பெறுமதியை அவன் உணரவில்லை என்பது தூரதிஸ்டம்.

Link to comment
Share on other sites

ஏதோ ஒரு வகையில் புலம்பெயர் தமிழனின் தலையீடு ஈழத்தில் தமிழர்கள் அதிகாரம் பெறுவது தொடர்பாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இதற்கு அர்த்தம் கூட்டமைப்பை அதிகாரம் செய்வதோ கட்டளையிடுவதோ என்று கிடையாது. புலம்பெயர் தமிழனின் நீதிக்கான குரல் கூட்டமைப்பை விட பலமானது. புலம்பயெர் தமிழன் இந்திய இலங்கை அரசுகள் தமிழர்களை கையாழும் நிகழ்ச்சிநிரலுக்கு அப்பாற்பட்டவன்

இருந்தாலும் புத்தமும் சமணமும் தாயகத்தில் பரவி இருக்காவிட்டால் இப்படி தேர்தல் ஒன்று நடந்து மாற்றம் வந்திருக்குமா? 

தமிழர்களின் அதிகாரம் பெறும் அரசியல் பலம் என்பது கூட்டமைப்பின் கைகளில் இல்லை. கூட்டமைப்பு இந்திய இலங்கை அரசுகளின் தேவைகளுக்கேற்ப ஆடும் பொம்மைகள். இது அவர்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிலை. 

அது சரி என வைத்துகொள்வோம்.அப்போ இது யாரின் சூத்திடம்.

தனிநாடோ இல்லை மாகாணசபை அதிகாரமோ இல்லை அதைவிடக் குறைந்த அதிகாரமோ தமிழர்கள் கேட்கவேண்டும் அதை சிங்களவர்கள் மறுக்கவேண்டும். இதுதான் இவர்களின் அடிப்படைச் சூத்திரம்

சூதிரத்திற்கு பின்னால் ஆன  அவர்களின் வாழ்க்கை எத்தகையது? ஏன் இந்த சூத்திரம். அப்போ புலம் பெயர் தமிழர்  பாதுகாப்பு கொள்கைகளை எதிர்க்க வேண்டுமா? ஆதரிக்க வேண்டுமா? புலிகள் பாதுகாப்பு கொள்கைகளை எதிர்த்தது சரியா? தவறா?

இதற்கு இரண்டு தரப்புக்கள் அவசியம் . அதை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களுக்கிடையில் விலக்குப்பிடிக்கும் தலையீடுகள் தொடரும்.

எப்படி இந்த இரண்டு தரப்புக்களை ஏற்படுத்தினார்கள். 1500 ஆண்டுகளுகு முன்னர் மகாவம்சம் என்று ஒரு பொய்யை எழுதியா? அல்லது 43 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்திய பாகிஸ்தானிய போரில் போர் கலங்களுக்கு எண்ணை நிரப்பியா?

அல்லது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தத்தை இலங்கையில் பரப்பியா? அத்ற்கா தீர்வு த்மிழர் எல்லோரும் பௌத்தர்களாக மாறுவது?

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் பிரச்சனைகளை கையாழும் சிங்கள  இந்திய அரசுகள் தாம் எதை விரும்புகின்றதோ அதையே செய்கின்றது. அவ் விருப்பத்துக்கு மாறாக கூட்டமைப்பு எதுவும் செய்யமுடியாது.

தனிநாடோ இல்லை மாகாணசபை அதிகாரமோ இல்லை அதைவிடக் குறைந்த அதிகாரமோ தமிழர்கள் கேட்கவேண்டும் அதை சிங்களவர்கள் மறுக்கவேண்டும். இதுதான் இவர்களின் அடிப்படைச் சூத்திரம்.

புலிகளுக்கு முதல் அரசியல் வழியில் உரிமை கேட்டார்கள் பின்னர் புலிகள் ஆயுதப்போராட்ட வழியில் உரிமை கேட்டார்கள் அதன் பிறகு ஒரு வெற்றிடம். அவ்வெற்றிடத்தை ஒரு தோர்தல் ஊடாக நிரப்பியுள்ளார்கள். தற்போது அதிகாரத்தை கேட்க்கும் ஒரு தரப்பை தேர்தல் ஊடாக உருவாக்கியுள்ளார்கள். இது கூட்டமைப்பின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விசயம்.

தேர்தலில் சிங்களவர்கள் வாக்குகள் ஒரு பக்கம் தமிழர்கள் வாக்குகள் ஒருபக்கம். இத்தேர்தலில் சிங்களப்பேரினவாதமும் இந்திய அதிகாரவர்க்கமும் தமிழர்களை கையாழும் விதத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.

ஒரு தரப்பு அதிகாரம் கேட்கும் மறுதரப்பு மறுக்கும். இதற்கு இரண்டு தரப்புக்கள் அவசியம் . அதை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களுக்கிடையில் விலக்குப்பிடிக்கும் தலையீடுகள் தொடரும்.

தமிழர்களின் அதிகாரம் பெறும் அரசியல் பலம் என்பது கூட்டமைப்பின் கைகளில் இல்லை. கூட்டமைப்பு இந்திய இலங்கை அரசுகளின் தேவைகளுக்கேற்ப ஆடும் பொம்மைகள். இது அவர்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிலை. இதனால் கூட்டமைப்பை குறை கூற முடியாது.

ஏதோ ஒரு வகையில் புலம்பெயர் தமிழனின் தலையீடு ஈழத்தில் தமிழர்கள் அதிகாரம் பெறுவது தொடர்பாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இதற்கு அர்த்தம் கூட்டமைப்பை அதிகாரம் செய்வதோ கட்டளையிடுவதோ என்று கிடையாது. புலம்பெயர் தமிழனின் நீதிக்கான குரல் கூட்டமைப்பை விட பலமானது. புலம்பயெர் தமிழன் இந்திய இலங்கை அரசுகள் தமிழர்களை கையாழும் நிகழ்ச்சிநிரலுக்கு அப்பாற்பட்டவன். ஆனால் அதன் பெறுமதியை அவன் உணரவில்லை என்பது தூரதிஸ்டம்.

புலம் பெயர் தமிழர் என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியல் இட்டால் இந்த உரையாடலை மேலும் நகர்த்திச் செல்லலாம்.

ரெண்டு சிங்குக்கு பெற்றோல் செட்டில வேலை குடுத்திட்டா இந்தியாவே என்னிடம் கைகட்டி நிக்குது எண்டு மிதக்குதுகள் சில *** 1980 இல் இல்லை 2009 லும் நமக்கு நகரமுடியாமல் ஆப்பு அல்ல நங்கூரமே அடித்த்கதும் இந்தியா தான். இதை அறியாமல் அலட்டுவதற்க்கு பெயர்தான் புண்ணாக்கு வியாபாரம்.

ஆப்பு வைத்த அதே இந்தியாவை நம்பி இப்போது கூட்டமைப்பு இறங்கி இருப்பதை கண்னை மூடிக் கொண்டு ஆதரிப்பதன் மர்மம் என்ன?

புலம் பெயர்ந்தவர்களின் இன்னொரு மினக்கெட்ட வேலை,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கு,

உங்களுக்கு இந்தியா மேல இருக்கும் இந்திய வெறுப்புணர்ச்சியை விட எனக்கு 100 மடங்கு இருக்கு. ஆனா கடைசில எங்கள் எல்லாரையும் சிங்கு குனிய வச்சு நொங்கு நொங்குன்னு நொங்கீட்டான். இதுதான் உண்மை. இப்போ எமக்கோ கூட்டமைப்புக்கோ இந்தியாவை தலையில் வைத்து கும்பிடுபோடுவதை தவிர வேறுவழியில்லை. நாரதர் உங்களுக்கான பதிலும் இதுவே. இந்தியா வை பகைச்சுகிட்டோம் என்றால் நிலத்தில் நம் இனம் இருந்த அடையாளமும் இல்லாமல் அழித்து விடுவார்கள்.

இந்தியா என்பது ஒரு தனி நபர்  அல்ல பகைத்துக் கொள்ள. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை எவ்வாறு மாற்றுவது அதனூடாக நாம் எவ்வாறு அமது இலக்கை அடைவது இது தான் எமக்குத் தேவை. இந்தியாவின் வெளியுறவுக் கொளகையில் எவ்வாறு நாம் மார்றங்களைக் கொண்டு வர முடியும்? இந்திய அதிகாராம் யாரிடம் இருக்கிறது? அங்கே நிகழும் அதிகார மாற்றங்கள் என்ன ? அங்கே இருக்கும் அதிகாரச் சக்திகள் என்ன என்ன? அவற்ரை நாம் எவ்வாறு எமக்குச் சாதகமாகப் பயன் படுத்த முடியும்? எவ்வாறு எமது நேச சக்திகளை வளர்ப்பது, எவ்வாறு இந்திய மக்கள் ஆதரவைத் திரட்டுவது என்பதைத் தான் நாம் செய்ய வேண்டும்.

அதை விட்டு விட்டு கருவறுக்க நிற்க்கும் ஒருவனின் கபட நாடக்த்தில் ஒரு பாத்திரம் ஏற்று நடிக்க வெளிக்கிட்டால் , ஈற்றில் பெருமாளுக்கு நடந்தது தான் விக்கிக்கும் நடக்கும்.

Link to comment
Share on other sites

சிலருக்கு புலம் பெயர் புண்ணாக்கு வியாபாரம் மட்டும்தான் புரிகிறது. மன்மோகன் சிங் "நாம் சொன்னால் இலங்கை கேட்குதில்லையே" என்று 2011 யூனில் அங்கலாய்த்தது தெரியாது.  தமிழருக்கு ஆப்படிக்க வந்த நாராயணை கொட்டேல் வரைக்கும் நடக்கவிட்டுவிட்டு கோத்தி வாகனங்களை வேண்டுமென்றே அனுப்பி வைத்து விட, மனோகனேசன் "நாராயணை வெள்ளை வான் வந்து கடத்திக்கொண்டு போயிருந்தால் அதன் பொறுப்பு யாருக்கு?" என்று கேட்டது தெரியாது.

ஐ.நா மனித உரிமைகள் சபை 2012 பங்குனி கூட்டமும், 2013 பங்குனி கூட்டமும் முடிய மன்மோகன் சிங் மகிந்தவிடம் மன்னிப்பு கேட்ட கதைகளும் மறந்து போய்விட்டது. இதில் இந்தியா செய்த புண்ணாக்கு வியாபாரம் புதிய அரசியல் ஆய்வாளர்களுக்கு விளங்கவில்லை. இன்றைய பலம் இந்த்தியாவுக்கு வந்த காரணம் கனடா பொது நலவாய கூட்டத்தில் இலங்கைக்கு கொடுக்கும் அடி உதைகளும், அமெரிக்கா மனித உரிமைகள் சபையில் கொடுக்கும் அடிஉதைகளுமே. Lion king படத்தில் " They Call me MR. Pig என்று கூறிவிட்டு Pumbaa கையீனாகளை அடித்துக்கலைத்து முடிய Timon வந்து வீரம் காட்டியது மாதிரி  கனடாவும் அமெரிக்காவும் இலங்கையை வாட்டி எடுத்து முடிய இளகிப் போன இரும்பை பினவளத்தை தூக்கி அடித்து தேர்தல் நடித்தியது இந்தியா. இந்தியாவின் இந்த புண்ணாக்கு வியாபாரத்தை மேற்கு நாடுகள் அவதானித்துக்கொண்டிருக்கின்றன. வடக்குக்கு காணி, பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் 2015 பங்குனியில் சர்வதேச விசாரணை. இதை இந்தியாவுக்கு செய்ய முடியாவிட்டால் 2014 பங்குனியில் சர்வதேச விசாரணை. 

காங்கிரஸ் ஐ.நா 2014 பங்குனிக்கூட்டம் சர்வதேச விசாரணைக்கு இடம் அளிக்கபோகிறது என்று மிரள்கிறது. காங்கிரசுக்கு இலங்கையை அந்தக் கூட்டத்தில் காப்பாற்ற முடியாமல் போனால் பெரிய சிக்கல்கள் எழப் போகிறது. இந்த இடத்தில் இலங்கை காங்கிரசுடன் சேர்ந்து உழைக்காவிட்டால் காங்கிரஸ்  அரச குடும்பத்தைக்க் காட்டிக்கொடுப்பதும்,  கோத்தா காங்கிரசை காட்டிகொடுப்பதும் தான் செய்யத்தக்கவை. இந்த கடைசி விளிம்புக்கு வந்த பின்னர்த்தான் கோத்தா இந்தியாவின் "போரை நாங்கள் நடத்தினோம், முள்ளிவாய்க்கால் வைத்திய சாலைகளை நடத்தியது இந்தியா, எனவே அந்த இறப்புக்களுக்கு இந்தியாதான் பொறுப்பு" என்று கூறி இந்தியாவை அரைகுறையாகக்காட்டிக்கொடுத்து blackmail செய்வதை நிறுத்தினார். இதன் பின்னர்தான் இந்தியா கேட்ட தேர்தல் நடத்தப்பட்டது.

பொதுநலவாயம், 25ம் கூட்டத்தொடர் என்று இரண்டு துரும்புகள் இந்தியாவுக்கு வடக்குத் தேர்தலை நடத்த உதவின. இந்த் இரண்டும் 2014 ஆண்டு மத்திய தேர்தலுக்காக சாண்ஸ்ஸெடுத்து இந்தியாவால் பாவிக்கப்பட்ட துரும்புகள். காங்கிரஸ் அரசகுடும்பத்தை இந்த இரண்டிலும் காப்பாற்றினால், இதை வைத்து தானும் தேர்தலில் வென்றால் அதன் பின்னர் தமிழ் நாட்டில் அரசியல் எந்த பக்கம் போகும் என்றதை ஜெயலலிதாவால் நிர்ணையிக்க முடியாமல் போகும். இதை ஆடுமாட்டு தீவனங்ககுமட்டும்தான் தான் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. சோனியாவின் பாதுகாப்பு கொள்கையை ஆராய்ந்த அரசியல் ஆய்வாளர்கள் "நடக்க முடியாதது" என்று அரசின் அடிவருடிகள் சவால் விடுத்து கனவு கண்டு வந்த வடக்கு தேர்தலில் அரச குடும்பம் தோற்க போகிறது என்பதற்காக மட்டும் ID மாற்றினால் இது புரியும் எனபதில்லை.

Link to comment
Share on other sites

நாரதர்.. நீங்கள் இணைத்த காணொளியைப் பார்த்தேன். சமகாலத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியக்கூடியவாறு இருந்தது.. அருகில் ஜெஃப் ராபின்சனும் இருந்தார்.. அவரது உரையையும் கேட்க ஆவல்..

இணைப்பிற்கு நன்றி!

Link to comment
Share on other sites

ஒவ்வொரு மனித உரிமைக் கூட்டத் தொடருக்கும் சொந்தப் பணத்தில் சென்று வேலை செய்வது, பனியிலும் மழையிலும் வீடு வீடகச் சென்று காசு சேத்தது, கடன் பட்டு கண்காணத உறவுகளுக்கு உதவி செய்து என்று புலத் தமிழர் பலர் செய்தவற்றை இழிவு படுத்திக் கதைப்பவர்கள் உண்மையில் நேர்மையானவர்கள் அல்ல.போராட்டத்திற்கும் செயற்பாட்டிற்கும் அன்னியமான , இணைய பொழுதுபோக்குப் புரட்ச்சியாளர்கள்.

புலம் பெயர்ந்த உண்மையான செயற்பாட்டளர்களின் வலி தெரிந்த எவரும் கோசன் பாவிக்கும் மிகவும் கீழ்த் தரமான சொல்லாடல்களைப் பாவிக்க மாட்டர்கள்.

விக்கி சம்பந்த்தன் சுமந்த்ரைனை விட புலத்தில் இருக்கும் பல செயற்பாட்டாளர்கள் போராட்டத்திற்காக தியாகங்களை வலிகளைச் சுமந்தவர்கள். வோடலு சுரேசைப் போன்று இள வயதில் தமது வாழ்க்கையினைத் தொலைத்த பல புலம் பெயர்ந்த செயற்பாட்டளர்கள் இருக்கிரார்கள். புலம்பயர்ந்த புண்னாக்குகள் என்னும் பதம் இவர்கள் அனைவரையும் பொதுமைப் படுத்தி அவ மரியாதை செய்கிறது.

இதனை யாழ்க் களம் தொடர்ந்தும் அனுமதிப்பது வருத்தத்தை தருகிறது.

Link to comment
Share on other sites

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் Geoffrey Robertson QC, Prof Francis Boyle, Prof Sornarajah, Dr David Matas, Emeritus Prof Dr Peter Schalk, Attorney Ali Beydou, Senator Robert Evans and Ron Ridenour ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை இம் மாநாட்டிற்கு சிறப்பைக் கொடுத்ததோடு சிறீலங்கா அரசிற்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Link to comment
Share on other sites

ஜெஃப் ராபின்சன் என்று எழுதிவிட்டேன்.. ராபேர்ட்சன் என்று வந்திருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா உதார் விடாதீங்கப்பா. நீங்கள் 25 நாட்டில் நின்று கூரையில் ஏறி கத்தினாலும் ஒன்றும் ஆகாது. தமிழ் நாட்டில் பூகம்பம் வெடிக்கும் என்பதெல்லாம் சும்மா லுலிலுலா. தமிழ் நாட்டில் சில காலம் வாழ்தவர்கலுக்கு தெரியும் சாதிக்கு கொடுக்கும் மரியாதையை கூட தமிழ்நாட்டுக்காரன் இனத்துக்கு தரதில்லை. ஒருசிலர் தீக்குளிப்பினம் அவளவே.

புலத்தில் பொயில் சில்லக் என்று காலமும் அவரவர் நாட்டு அரசுகளும் கைவிட்ட சில முன்னாள் பிரபலங்களியோ அல்லது தமிழர் வசிக்கும் பகுதி எம்பி மாரையோ வைத்து நீங்கள் செய்யும் போராட்டங்கள், அந்த நாட்டு வெளியுறவு அமைச்சின் பியூனின் கவனத்துக்கு போவதற்க்குள் சர்மாவும் நம்பியாரும் ஐநா விலும் காமன்வெல்திலும் ஆப்பை அழகாய் இறக்கி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுவார்கள். இதுதான் உண்மை.

கனடாவின் கன்சேவெடிவ் வை தவிர நீங்கள் வைக்கும் அத்தனை நாடுகளும் அம்பாந்த்ஹோட்டையில் போய் அழகாய் கிரிபத் தின்பார்கள்.

ஆக உங்கள் சாமர்தியத்தால் தான் சர்வதேசம் இலங்கையை நெருக்கிரது என்பது காக்காய் இருக்க பனம்பழம் வீழ்ந்த்ஹ கதை.

உங்கள் சாமர்தியத்தால் இந்த்ஹியாவை, உலகின் மிகபெரும் ஜனநாயக நாடாககாட்டிக்கொள்லும் இந்த்ஹியாவை, அமெரிக்காவின் 4 ம் பெரிய சகாவை நீங்கள் உலக அரங்கில் தனிமைப்படுத்தி உங்கள் கோரிக்கையை வெல்வீர்கள் என்பது அக்மார்க் மனப்பால்.

நீங்கள் இப்படியே உங்களின் இயலுமை பற்றிய அதீத கற்பனைகளிலும், 2009 முன்னரான நிலை பற்றிய பழங்கதைகளிலும் நேரத்தை கடத்தலாம் ஏனென்ரால் இது உங்களுக்கு 1000 வருட பிரச்சினை. ஆறப்போட்டு, உங்கள் தலைமுரையிடம் விட்டிஸ் செல்லலாம். சுதந்த்ஹிர வேட்க்கை அழியாது எனறு வீரம் பேசலாம்.

ஆனால் நிலத்தவர்க்கு இது உடனடிபிரச்சினை. கொக்கிளாயில், மாதகலில், ம்கிளிநொச்சியில், நாவற்குழியில் நிலம் விழுங்கப்படுகிறது.

நிர்க்கதியாய் நிற்கும் மக்கள் சாதாரண கான்ஸ்டபிள்களாலே அடிமை போல் நடத்த படுகிறனர். விதவைகலின் மீது பாலியல் அழுத்தம். திட்டமிட்ட கலாச்சார சீரழிவு, கல்வியில் வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு. நிலைமையை இப்படியே விட்டால் இன்னும் 20 வருடத்தில் வடக்கிலேயே தமிழர்கள் சிருபான்மையாகி விடுவர். பின்னர் நீங்கள் எதற்காக போராடிவீர்கள்.

மக்களும் நன்றாக களைத்து விட்டார்கள். இல்லை சலித்து விட்டார்கள். குளிரில் சொந்த செலவில் ஜெனிவா போவதே எமக்கு பெரிதாய் தெரியும் போது, அவர்கள் 30 வருடம் உயிரை கொடுத்து வாழ்ந்த்ஹார்கள். அந்த அர்பணிப்பும் ஒரு பயனுமில்லாமல் போனது. ஆக அவர்களும் போராட்டத்தை தொடர விரும்பவில்லை.

இந்நிலையில் இருப்பதை காப்பதற்க்கு ஒரேவழி, இந்தியா வை அனுசரித்து, தனி நாட்டை கைவிட்டு, மாகாண சபையில் தொடங்கி சம்ஸ்டி வரை போக எத்தனிபதே. இது நடக்கும் நடக்காமல் போகும் ஆனால் இது மட்டுமே இப்போது ஓரளவுக்கேனும் நடமுறைசாத்தியமானது.

இதைதான் மக்கள் புரிந்து கொண்டு கூட்டமைப்பை அமோகமா ஆதரித்தனர். கூட்டமைப்பும் இதை செய்ய விளையும். ஆறு அவர்களை தடுக்கும், கோமாளிப்பட்டம் கட்டும், நையாண்டி பண்ணும், ஏன் சிறையிலும் இடும்.

ஆனால் இப்படி ஒரு காரியத்தை ஏற்றுகொண்ட மக்கள் தலைவர்களை புலத்திலிருந்து கொண்டு நாமே நக்கல் அடிப்பதும், திட்டுவதும், அவர்களுக்கு அப்படி செய் இப்படி செய் எனறு ஓடர் போடுவதும் நல்லயில்லை. இல்லை அநியாயம். அக்கிரமம்.

நிலத்தில் கூட்டமைப்பில் இருப்பவர்கள் காட்டும் துணிவில் 10%கூட இல்லாதபடியால் தான் நாம் புலத்துக்கு ஓடிவந்தோம். இங்கே வந்த்ஹிருந்த்ஹ படி இன்னும் ஆருதலாய் காய் நகர்தல்லாம், இந்திய ஆளும் வர்கத்தை வளைக்களாம் என்று சொல்வது அபத்தம். இந்தியாவின் சவுத் பிளாக் புலத் தமிழர் எவரையும் சீந்தாது, காரணம் அவர்களை பொறுத மட்டில் நீங்கள் பிரிவினைவாதிகள். இந்திய விடுதலையில் 2 ம் உலக யுத்தம் போல ஒரு பெளதீக புறக்காரணி மாற்றம் வரும் வரையில் இந்தியாவின் இலங்கை கொள்கை மாறாது. அதுவரைக்கும் நிலத்தில் மக்கள் காத்துகொண்டிருந்தால் இன்னும் 20 வருட்ச்த்தில் நீங்கள் கொலிடே போகும் யாழ்ப்பாணம், நீர்கொழும்பை போல காட்சி தரும்.

இதைதடுப்பதே கூட்டமப்பின் பிரதான நோக்கம்.

இதில் அவ்ர்கள் வெல்லுவதை விட தோர்க்க தான் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் இதை விட வேறு வழியில்லை. ஏனென்ரால் நாம் இப்போது இருப்பது கையறு நிலையில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.