புலவர்

தமிழில் ஓரெழுத்து சொல் 47

Recommended Posts

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47 ======================================= தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் சீ -----> இகழ்ச்சி, திருமகள் சே -----> எருது, அழிஞ்சில் மரம் சோ -----> மதில் தா -----> கொடு, கேட்பது தீ -----> நெருப்பு து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு தூ -----> வெண்மை, தூய்மை தே -----> நாயகன், தெய்வம் தை -----> மாதம் நா -----> நாக்கு நீ -----> நின்னை நே -----> அன்பு, நேயம் நை -----> வருந்து, நைதல் நொ -----> நொண்டி, துன்பம் நோ -----> நோவு, வருத்தம் நௌ -----> மரக்கலம் பா -----> பாட்டு, நிழல், அழகு பூ -----> மலர் பே -----> மேகம், நுரை, அழகு பை -----> பாம்புப் படம், பசுமை, உறை போ -----> செல் மா -----> மாமரம், பெரிய, விலங்கு மீ -----> ஆகாயம், மேலே, உயரம் மு -----> மூப்பு மூ -----> மூன்று மே -----> மேன்மை, மேல் மை -----> அஞ்சனம், கண்மை, இருள் மோ -----> முகர்தல், மோதல் யா -----> அகலம், மரம் வா -----> அழைத்தல் வீ -----> பறவை, பூ, அழகு வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

 • Like 4
 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites

அருமையான பகிர்வு புலவரே. நன்றி

Share this post

Link to post
Share on other sites
ஒரேழுத்து சொற்கள் 47 தான் என்று அறுதியிட்டு கூற முடியாது என்று நினைக்கிறேன்.
 
ஒரெழுத்தில் இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம் 
 
எ  - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஒ - ஒழிவு
இ -  அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஒள - பூமி, ஆனந்தம்
கு - இருள்
ஞா - பொருத்து, கட்டு
ம -  சந்திரன், எமன் 
 
ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் 
ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் 
று -  எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம் 
 
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
எல்லாவற்றையும் சேர்த்து இணைத்துள்ளேன் 
 
அ -----> எட்டு 
ஆ -----> பசு 
இ ----->  அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி 
உ -----> சிவன் 
ஊ -----> தசை, இறைச்சி 
எ  -----> வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ -----> அம்பு 
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு 
ஒ  -----> ஒழிவு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை 
ஒள -----> பூமி, ஆனந்தம்
 
கா -----> சோலை, காத்தல் 
கூ -----> பூமி, கூவுதல்
கு  -----> இருள்
கை -----> கரம், உறுப்பு 
கோ -----> அரசன், தலைவன், இறைவன் 
 
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள் 
சே -----> எருது, அழிஞ்சில் மரம் 
சோ -----> மதில் 
 
தா -----> கொடு, கேட்பது 
தீ -----> நெருப்பு 
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு 
தூ -----> வெண்மை, தூய்மை 
தே -----> நாயகன், தெய்வம் 
தை -----> மாதம் 
 
ஞா  -----> பொருத்து, கட்டு
நா -----> நாக்கு 
நீ -----> நின்னை 
நே -----> அன்பு, நேயம் 
நை -----> வருந்து, நைதல் 
நொ -----> நொண்டி, துன்பம் 
நோ -----> நோவு, வருத்தம் 
நௌ -----> மரக்கலம் 
 
பா -----> பாட்டு, நிழல், அழகு 
பூ -----> மலர் 
பே -----> மேகம், நுரை, அழகு 
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை 
போ -----> செல் 
 
ம  ----->  சந்திரன், எமன் 
மா -----> மாமரம், பெரிய, விலங்கு 
மீ -----> ஆகாயம், மேலே, உயரம் 
மு -----> மூப்பு 
மூ -----> மூன்று 
மே -----> மேன்மை, மேல் 
மை -----> அஞ்சனம், கண்மை, இருள் 
மோ -----> முகர்தல், மோதல் 
 
யா -----> அகலம், மரம் 
வா -----> அழைத்தல் 
வீ -----> பறவை, பூ, அழகு 
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் 
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல் 
 
ள  -----> தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் 
ளு  -----> நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் 
று  -----> எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம் 

Edited by ஆதித்ய இளம்பிறையன்
 • Like 2
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

நல்லதொரு பகிர்வு!

ரு =  5 என்று வரும்!

Share this post

Link to post
Share on other sites

கோ என்பது எருதையும் குறிக்கும். கோ மாதா என்றால் பசு

Share this post

Link to post
Share on other sites

கோ என்றால் (கோன்)அரசன்,கடவுள்.பசு என்று பொருள்படும். ஜேர்மன் மொழியில் கூ உன்றால்பசு,கேனிக்(கோன்) என்றால் அரசன்,கோ(ட்) என்றால்கடவுள் ஆங்கிலத்தில் கோ(ட்) கடவுள்,கௌ-பசு,கிங்-அரசன்(ககரவரிசை) மூத்தமொழி தமிழ்ஆகவே மூலமொழியும் தமிழே!!!!!!

Share this post

Link to post
Share on other sites

500px-Arabic_numerals-en.svg.png

அடக் கடவுளே !  தமிழில் பூஜ்ஜியம் இல்லையா !   அப்பா ஏன்  நான் எடுத்த பரீட்சைகள் எல்லாவற்றிலும் முட்டை,முட்டையாய்  இட்டுத் தள்ளுனவை! :o

Share this post

Link to post
Share on other sites

உயிர் மவிலாறுந் தபநவி லைந்துங்
கவசவினாலும்
யவ்விலொன்று
மாகு நெடி நொது வாங்க்குறிலிரண்டோ
டோரெழுத்தியல்பத மாறேழ் சிறப்பின்.
                                                        
நன்னூல்  
 
சே என்பதற்கு சிவப்பு என்றும் பொருள் வரும்
இணைப்பிற்கு நன்று புலவர்

Share this post

Link to post
Share on other sites

அடக் கடவுளே !  தமிழில் பூஜ்ஜியம் இல்லையா !   அப்பா ஏன்  நான் எடுத்த பரீட்சைகள் எல்லாவற்றிலும் முட்டை,முட்டையாய்  இட்டுத் தள்ளுனவை! :o

பழந்தமிழில் பூஜ்ஜியத்துக்கு விசேட குறியீடு இருந்ததாம். "அன்று" என்று உச்சரிக்கப்பட்டதாம்.  

Share this post

Link to post
Share on other sites

நல்ல பதிவு வாழ்த்துகள். தமிழில் உள்ள ஓர் எழுத்துச் சொற்கள் பற்றி  தொல்காப்பியம் இப்படிச் சொல்கிறது. 

 “ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி

      இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட
      மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே” (தொல். மொழி. 12)

இங்கு மூன்று வகையாச் சொற்களில் ஒன்றாக  ஓர் எழுத்துச் சொற்கள் பற்றி ஆசிரியர் தொல்காப்பியர் சொல்கிறார்.

மேலும் நன்னூல் விருத்தியுரையில்...

உயிர்மவி லாறுந் தபநவி லைந்துங்
கவசவி னாலும் யவ்வி லொன்றும்
ஆகு நெடினொது வாங்குறி லிரண்டோ
டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின.

     எ-னின், மேல் எழுத்துத் தனித்தும் தொடர்ந்தும் ஒரு மொழி ஆம் என்றார்.
அவற்றுள் ஓர் எழுத்து ஒரு மொழி இவை என்பதூஉம் இத்துணைய என்பதூஉம்
உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: உயிர்வருக்கத்தும் மவ்வருக்கத்தும் அவ்வாறும் தவ்வருக்கத்தும
 பவ்வருக்கத்தும் நவ்வருக்கத்தும் ஐவைந்தும் கவ்வருக்கத்தும் வவ்வருக்கத்தும் சவ்-வருக்கத்தும் நந்நான்கும் யவ்வருக்கத்து ஒன்றும் ஆகும் நெட்டெழுத்தான் ஆகிய
மொழி நாற்பதும், நொவ்வும் துவ்வும் ஆகும் குற்றெழுத்தான் ஆகிய மொழி
இரண்டுடனே ஓர் எழுத்தான் ஆகிய மொழி இந்நாற்பத்திரண்டும் சிறப்பினவாம் எ-று.

     உ-ம்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ எனவும் மா, மீ, மூ, மே, மை, மோ எனவும் தா, தீ,
தூ, தே, தை எனவும் பா, பூ, பே, பை, போ எனவும் நா, நீ, நே, நை, நோ எனவும்
கா, கூ, கை, கோ எனவும் வா, வீ, வை, வௌ எனவும் சா, சீ, சே, சோ எனவும் யா
எனவும் நொ, து எனவும் வரும்.

     இவற்றுள் ஊ- இறைச்சி; ஓ- மதகுநீர் தாங்கும் பலகை; பே- நுரை; நே- அன்பு;
சோ- அரண். நொ, து என்னும் குறில் இரண்டும் துன்பி, புசி என்னும் ஏவல்.

     இவை, ‘சிறப்பின’ எனவே வகரவீற்றுச் சுட்டுப்பெயர்ப் பொருளை ஒப்புமையான்
உணர்த்தி நிற்றலான் ஒள என்னும் ஓர் எழுத்து ஒரு மொழியும் சுட்டு, வினா,
உவமைப்பொருளைத் தரும் இடைச்சொல் ஆதலால் குற்றுயிர் ஐந்தான் ஆய ஓர் 
எழுத்து ஒரு மொழிகளும் கௌ என்னும் உயிர்மெய்யான் ஆய ஓர் எழுத்து ஒரு 
மொழியும் இவை போல்வன பிறவும் சிறப்பு இல்லன எனக் கொள்க.

எனக் கூறியுள்ளார்.

ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்‌தில் தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது எனக் கூறியுள்ளார். அவையாவன...

ஆ - பசு 
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல் 
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு 

நன்றி

-தியா-

 • Like 2
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47 ======================================= தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் சீ -----> இகழ்ச்சி, திருமகள் சே -----> எருது, அழிஞ்சில் மரம் சோ -----> மதில் தா -----> கொடு, கேட்பது தீ -----> நெருப்பு து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு தூ -----> வெண்மை, தூய்மை தே -----> நாயகன், தெய்வம் தை -----> மாதம் நா -----> நாக்கு நீ -----> நின்னை நே -----> அன்பு, நேயம் நை -----> வருந்து, நைதல் நொ -----> நொண்டி, துன்பம் நோ -----> நோவு, வருத்தம் நௌ -----> மரக்கலம் பா -----> பாட்டு, நிழல், அழகு பூ -----> மலர் பே -----> மேகம், நுரை, அழகு பை -----> பாம்புப் படம், பசுமை, உறை போ -----> செல் மா -----> மாமரம், பெரிய, விலங்கு மீ -----> ஆகாயம், மேலே, உயரம் மு -----> மூப்பு மூ -----> மூன்று மே -----> மேன்மை, மேல் மை -----> அஞ்சனம், கண்மை, இருள் மோ -----> முகர்தல், மோதல் யா -----> அகலம், மரம் வா -----> அழைத்தல் வீ -----> பறவை, பூ, அழகு வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

உங்கள் பதிவின்படி 47 எழுத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் 46 எழுத்துக்கள் மட்டுமே பதிவிலுள்ளது. 42 எழுத்துக்களுக்கு பொருளுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். தொல்காப்பியரும், ஆறுமுகநாவலரும் தெரிவித்துள்ள 42 எழுத்துக்களை விடவும் மேலதிகமாக உங்கள் பதிவிலிருக்கும், அ, உ, நெள, மு என்ற 4 எழுத்துக்களுக்கும் பொருளுள்ளது. ஆதித்தியஇளம்பிறையனும் மேலதிகமாகப் 10 எழுத்துக்களான எ, ஒ, இ, ஔ, கு,ஞா, ம,ள, ளு, று ஆகியனவற்றை இணைத்துள்ளார். ஆகவே தமிழில் ஓரெழுத்து சொற்கள் எத்தனை என்பதை இப்பதிவு உறுதிபடுத்தவில்லை என்ற ஐயமுள்ளது. தமிழ் அகராதியின் துணையோடு, முடிந்தளவு எழுத்துக்களுக்குரிய மேலதிக பொருள்களையும் நிறுவி, இங்கு பின்னூட்டம் செய்துள்ளேன்.

----->     எட்டு, இன்மை, எதிர்மறை, குறைவு, சம்மதி, சாரியை, அந்த, சுட்டு, தடை, பிறிது, வியப்பு, சுக்கு, திப்பிலி, சிவன், விஷ்ணு, பிரமன். 

----->    பசு, இசை, இரக்கம், பெண்மரை, பெண்ணெருமை, சிவஞானம், வியப்பு,

----->     அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, உண்டி, கேட்டி, குறத்தி, வில்லி, ஊருணி, செவியிலி, எண்ணி.

----->      கொடு, பறக்கும் பூச்சி, அம்பு, அரைநாண், இந்திரவில், இலக்குமி, கொக்கு, சரசுவதி, தாமரையிதழ், பாம்பு, வண்டு.

----->     சிவன், உருக்கம், கட்டளை, கோபம், சம்மதி, செய்து, பிரமன்.

----->    தசை, இறைச்சி, உணவு, சந்திரன், சமாக்கியகலை, சிவன், ஊன்.

----->      வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்,

----->      அம்பு, சிவன், செலுத்துதல், விஷ்ணு, அடே, அம்பு, இகழ்ச்சிக்குறி, இசைநிறை, ஈற்றசை,

----->      ஐந்து, அழகு, தலைவன், வியப்பு, அரசன், ஆசான், கடுகு, சர்க்கரை, சன்னி, தும்பை, துர்க்கை, நுண்மை, மருந்து, பெருவியாதி, இருமல், கடவுள், குரு, கோழை, சிவன், பிதா,

                  வந்தனை.

----->     ஒழிவு,

----->     வினா, மதகு - நீர் தாங்கும் பலகை, அயன், அரன், அழைத்தல், இரக்கம்.

ஒள -----> பூமி, ஆனந்தம், அழைத்தல், வியப்பு, தடை, கடித்தல், பூமி.

கா ----->    சோலை, காத்தல், காவடி, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், வருத்தம்.

கு ----->      இருள், குற்றம், வருகுதி, சிறுமை, தடை, தொனி, நிந்தை, நன்கு, போக்கு, பூமி.

கூ ----->     பூமி, கூவுதல், மலங்கழித்தல்.

கை ----->  கரம், உறுப்பு, இடம், உடனே, ஒப்பனை, ஒழுக்கம், கடுக்கை, சாமர்த்தியம், சிறுமை, தங்கை, தொனி, பக்கம், படைவகுப்பு, துதிக்கை, வரிசை.

கோ -----> அரசன், தலைவன், இறைவன், அம்பு, ஆகாயம், ஆண்மகன், இடியேறு, இரக்கக்குறிப்பு, இலந்தை, உரோமம், எருது, கண், கிரகணம், சந்திரன், சூரியன், திசை, கோமேதயாகம்,

                  தேவலோகம், நீர், பசு, பூமி, பொறிமலை, மாதா, மேன்மை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம்.

சா ----->     இறப்பு, மரணம், பேய், சாதல்.

சீ ----->       இகழ்ச்சி, திருமகள், அடக்கம், இலக்குமி, காந்தி, சம்பத்து, சரச்சுவதி, சீதல், நித்திரை, பார்வதி, பிரகாசம், பெண், விடம், விந்து.

சே ----->    எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு, சேரான்மரம்.

சோ ----->  மதில், உமை

ஞா ----->   பொருத்து, கட்டு

தா ----->     கொடு, கேட்பது, அழிவு, குற்றம், கேடு, கொடியன், தாண்டுதல், பகை, பாய்தல், பிரமன், வருத்தம், வலி, வியாழம்.

தீ ----->       நெருப்பு, அறிவு, இனிமை, உபாயவழி, கொடுமை, தீமை, நரகம்.

து ----->       கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு, அசைத்தல், அநுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், நடத்தல், நிறைத்தல், பிறவினை, விகுதி, வருத்தல், வளர்தல்.

தூ ----->      வெண்மை, தூய்மை, சீ, தசை, பகை, பற்றுக்கோடு, புள்ளிறகு.

தே ----->     நாயகன், தெய்வம், கிருபை.

தை ----->   மாதம், தைத்தல், பூசநாள், மகராசி.

நா ----->      நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, நடு, பொலிவு

நீ ----->        நின்னை

நே ----->     அன்பு, நேயம்

நை ----->    வருந்து, நைதல், இகழ்ச்சிக்குறிப்பு

நொ ----->   நொண்டி, துன்பம், நோய், வருத்தம்

நோ ----->   நோவு, வருத்தம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி.

நௌ -----> மரக்கலம்

பா ----->      பாட்டு, நிழல், அழகு, கடிகாரவூசி, கிழங்குப்பா, நிழல், நெசவுபா, பஞ்சிநூல், பரப்பு, பரவுதல், பிரபை, வெண்பா

பூ ----->        மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குதல், இலை, ஓமாக்கினி,ஒருகண்ணோய், ஒருநரகம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பொலிவு,

பே ----->     மேகம், நுரை, அழகு

பை ----->    பாம்புப் படம், பசுமை, உறை, அழகு, குடர், சாக்கு, நிறம், பச்சைநிறம்,பொக்கணம், மந்தக்குணம், மெத்தெனவு.

போ ----->   செல், பிரியின்வாழாதென்போ.

----->        சந்திரன், எமன், என்மர், ஒருமந்திரம், காலம், சிவபிரான், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுனு.

மா ----->     மாமரம், பெரிய, விலங்கு, அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடித்தமா, இடை, இலக்குமி, எதிர்மறை, யுபசருக்கம், ஐயவுபசருக்கம், ஓரெண், ஒருமரம், கட்டு, கறுப்பு,

                    சரச்சுவதி, சீலை, செல்வம், தாய், துகள், நஞ்சுக்கொடி, நிறம், பரி, பிரபை, பெரிய, பெருமை, மகதமதுவம், மரணம், மிகுதி, மேன்மை, வண்டு, வயல், வலி, வெறுப்பு.

மீ ----->        ஆகாயம், மேலே, உயரம், மகிமை, மேல், மேற்புரம்.

மு ----->      மூப்பு

மூ ----->      மூன்று, மூப்பு.

மே ----->     மேன்மை, மேல், அன்பு.

மை ----->   அஞ்சனம், கண்மை, இருள், எழுதுமை, கருப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மலட்டெருமை, மேகம், மேடவிராசி, வெள்ளாடு.

மோ ----->   முகர்தல், மோதல், கேண்மோ.

யா ----->     அகலம், மரம், சந்தேகம், இல்லை, யாபன்னிருவர்.

வா ----->     அழைத்தல்

வீ ----->        பறவை, பூ, அழகு, கருப்பந்தரித்தல், சாவு, சொல்லுதல், நீக்கம், போதல், விரும்புதல்.

வை ----->    வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல், புல், வையகம்,

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

----->         தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு ----->        நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று ----->         எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

விளக்கத்திற்கு நன்றி.இந்தப் பதிவு பல ஆராய்ச்சிக்கு வித்திட்டது போலுள்ளது.தமிழறிந்தோர் மேலும் மேலும் விளக்கங்களுடன் இன்னும் எழுதுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.தமிழ்கடல் போன்றது.அதில் நான் சிறு துளி.

Share this post

Link to post
Share on other sites

நாம் இதுவரை குறிப்பிட்ட சொற்கள் எல்லாம் ஒரேழுத்து சொற்களுக்குள் அடங்குமா என்று பார்க்க வேண்டும். ஒரேழுத்து சொற்களுக்கு தொல்காப்பியர் என்ன விளக்கம் கொடுக்கிறார் என்று பார்ப்போம்.

“நெட்டெழுத்தேழே ஓரெழுத் தொருமொழி”
ஓரெழுத்து சொற்கள் அனைத்தும் நெட்டெழுத்துக்களால்(நெடில்) ஆகியவை.

"குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே"
குற்றெழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லவாதில்லை.

தொல்காப்பிய இலக்கண விதிப்படி இங்கு இணைக்கப்பட்ட குறில் எழுத்துகள் யாவும் ஓரெழுத்து சொற்களுக்குள் அடங்காது என தெரிய வருகிறது. ஆனால் தியா இணைப்பில், ஆறுமுக நாவலர் கூறிய 42 எழுத்துக்களில் குற்றெழுத்துக்களும் உள்ளது.

நை, கை , பை - > ஏகாரம், ஐகாரம் ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையும் பெறவல்லன என தொல்காப்பியர் கூறுகிறார். எனவே இவற்றை நெடிலுக்குள் அடக்கி விடலாம் என்றே நினைக்கிறேன்.வாத்தியார் இதற்க்கு நல்ல விளக்கம் கொடுக்க முடியும் என்று எண்ணுகிறேன்.

 நொ’ , ‘து’ எனும் இரு குற்றெழுத்துக்களும் ஓரெழுத்து ஒரு மொழிகள் என்று நான்னூலார் அழைக்கிறார்( ‘நோ’ என்பதின் விகாரவடிவே ‘நொ’ ஆகலானும், ‘துய்’ என்பதன் விகாரவடிவே ‘து’). ஆனால் சில ஆசிரியர்கள் தொல்காப்பிய விதிப்படி 'நொ’ , ‘து’ இரண்டும் ஒரேழுத்து சொல்லாகாது என்கிறார்கள்.

அப்ப குறில் எழுத்துக்கள் ஒரேழுத்து சொற்களுக்குள் அடங்காதா?? ஏன்?? இப்ப சொல் என்றால் என்ன கேள்வி எழக் கூடும்.

சொல் என்றால் என்ன ??
 
ஐ,கை ,மை, பை, தை  என்ற எழுத்துக்கள்  தனியாக உச்சரிக்கப்படும்போது

குறுகாமல் தனது இரண்டு மாத்திரை ஒலி அளவிற்கு ஒலிக்கும் நீண்ட ஒலி அளவைக்கொண்டவை.

ஆனால் ஒரு சொல்லின் ஆரம்பத்திலோ நடுவிலோ அல்லது இறுதியிலோ வரும் போது குறுகி ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கப்படுகின்றது

ஓரெழுத்தொரு  மொழியில் நொ து என்ற இரு குறில் எழுத்துக்களே இலக்கணத்தார் முறைப்படி பொருள் தரும் சொற்களாகின்றன. இந்த இரு சொற்களும் வழக்கின் படி தொல்காப்பியரின் காலத்தின் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

நன்னூல் தொல்காப்பியரைத் தழுவி எழுதப்பட்ட நூல்

மக்களின் பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் மாறும் போது அவற்றையும் ஏற்றுக்கொள்வது தான் இலக்கணவாதிகளின் இயற்கை வழமை.

இன்றைய காலத்தில் வேற்றுமொழிச் சொற்கள் பல கலந்துவிட்ட தமிழ் மொழியில் ஓரெழுத்தைக் கொண்ட சொற்கள் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை.  

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி உறவுகளே! :)

Share this post

Link to post
Share on other sites

விளக்கத்திற்கு நன்றி வாத்தியார்.

சொல் என்பது வினையையோ அல்லது பொருளையோ குறிக்க வேண்டும்.  அ, இ, உ என்பன சுட்டெழுத்துக்கள் இவை சொற்களுக்குள் அடங்காது, எனவே  அ, இ, உ என்ற ஒரேழுத்து ஒரு சொல்லாக கொள்ளப்பட மாட்டது என்று கூறப்படுகிறது. அப்படியெனில் வினாவெழுத்துக்களை ஒரு சொல்லாக கொள்ளலாமா ??

Share this post

Link to post
Share on other sites

ஓரெழுத்தில் பல சொற்கள் உண்டு
ஒரு சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டு
வினாவெழுத்துக்கள் அவை  வரும் இடத்தில் வினாவெழுத்துக்களாகவும்

வேறு பொருள்கோண்டு வருமிடத்தில் வேறு சொற்களாகவும் வரலாம் இல்லையா?
  
Share this post

Link to post
Share on other sites

ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன? 

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். 

உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும். 

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 66 ஆக இருக்கிறது. ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும்.

ஓரெழுத்து ஒரு மொழிச்  சொற்கள்
 சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
 பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
 சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
 பறக்கும் ஈ, தா, குகை, தேனீ
 சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
 இறைச்சி, உணவு, ஊன், தசை
 வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
 அம்பு, உயர்ச்சிமிகுதி
 அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை
 மதகு, (நீர் தாங்கும் பலகை)
 பூமி, ஆனந்தம்
 வியங்கோள்  விகுதி
கா
 காத்தல், சோலை
கி
 இரைச்சல் ஒலி
கு
 குவளயம்
கூ
 பூமி, கூவுதல், உலகம்
கை
 உறுப்பு, கரம்
கோ
 அரசன், தந்தை, இறைவன்
கௌ
 கொள்ளு, தீங்கு
சா
 இறத்தல், சாக்காடு
சீ
 லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
சு
 விரட்டடுதல், சுகம், மங்கலம்
சே
 காலை
சை
 அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ
 மதில், அரண்
ஞா
  பொருத்து, கட்டு
தா
 கொடு, கேட்பது
தீ
 நெருப்பு , தீமை
து
 உண்
தூ
 வெண்மை, தூய்மை
தே
 கடவுள்
தை
 தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா
 நான், நாக்கு
நி
 இன்பம், அதிகம், விருப்பம்
நீ
 முன்னிலை ஒருமை, நீக்குதல்
நூ
 யானை, ஆபரணம், அணி
நே
 அன்பு, அருள், நேயம்
நை
 வருந்து
நோ
 துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நௌ
 மரக்கலம்
 நூறு
பா
 பாட்டு, கவிதை
பூ
 மலர்
பே
 நுரை, அழகு, அச்சம்
பை
 கைப்பை
போ
 செல், ஏவல்
 சந்திரன், எமன்
மா
 பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்
மீ
 மேலே , உயர்ச்சி, உச்சி
மூ
 மூப்பு, முதுமை
மே
 மேல்
மை
 கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ
 மோதல், முகரதல்
 தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
யா
 ஒரு வகை மரம், யாவை, இல்லை
 நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
வா
 வருக, ஏவல்
வி
 அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ
 மலர் , அழிவு
வே
 வேம்பு, உளவு
வை
 வைக்கவும், கூர்மை
வௌ
 வவ்வுதல்
நோ
 வருந்து
 தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு
 நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று
 எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

https://www.tnpscgk.net/2012/08/oreluthu-oru-moli-sol.html

Share this post

Link to post
Share on other sites
On 10/5/2013 at 9:32 PM, Paanch said:

உங்கள் பதிவின்படி 47 எழுத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் 46 எழுத்துக்கள் மட்டுமே பதிவிலுள்ளது. 42 எழுத்துக்களுக்கு பொருளுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். தொல்காப்பியரும், ஆறுமுகநாவலரும் தெரிவித்துள்ள 42 எழுத்துக்களை விடவும் மேலதிகமாக உங்கள் பதிவிலிருக்கும், அ, உ, நெள, மு என்ற 4 எழுத்துக்களுக்கும் பொருளுள்ளது. ஆதித்தியஇளம்பிறையனும் மேலதிகமாகப் 10 எழுத்துக்களான எ, ஒ, இ, ஔ, கு,ஞா, ம,ள, ளு, று ஆகியனவற்றை இணைத்துள்ளார். ஆகவே தமிழில் ஓரெழுத்து சொற்கள் எத்தனை என்பதை இப்பதிவு உறுதிபடுத்தவில்லை என்ற ஐயமுள்ளது. தமிழ் அகராதியின் துணையோடு, முடிந்தளவு எழுத்துக்களுக்குரிய மேலதிக பொருள்களையும் நிறுவி, இங்கு பின்னூட்டம் செய்துள்ளேன்.

----->     எட்டு, இன்மை, எதிர்மறை, குறைவு, சம்மதி, சாரியை, அந்த, சுட்டு, தடை, பிறிது, வியப்பு, சுக்கு, திப்பிலி, சிவன், விஷ்ணு, பிரமன். 

----->    பசு, இசை, இரக்கம், பெண்மரை, பெண்ணெருமை, சிவஞானம், வியப்பு,

----->     அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, உண்டி, கேட்டி, குறத்தி, வில்லி, ஊருணி, செவியிலி, எண்ணி.

----->      கொடு, பறக்கும் பூச்சி, அம்பு, அரைநாண், இந்திரவில், இலக்குமி, கொக்கு, சரசுவதி, தாமரையிதழ், பாம்பு, வண்டு.

----->     சிவன், உருக்கம், கட்டளை, கோபம், சம்மதி, செய்து, பிரமன்.

----->    தசை, இறைச்சி, உணவு, சந்திரன், சமாக்கியகலை, சிவன், ஊன்.

----->      வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்,

----->      அம்பு, சிவன், செலுத்துதல், விஷ்ணு, அடே, அம்பு, இகழ்ச்சிக்குறி, இசைநிறை, ஈற்றசை,

----->      ஐந்து, அழகு, தலைவன், வியப்பு, அரசன், ஆசான், கடுகு, சர்க்கரை, சன்னி, தும்பை, துர்க்கை, நுண்மை, மருந்து, பெருவியாதி, இருமல், கடவுள், குரு, கோழை, சிவன், பிதா,

                  வந்தனை.

----->     ஒழிவு,

----->     வினா, மதகு - நீர் தாங்கும் பலகை, அயன், அரன், அழைத்தல், இரக்கம்.

ஒள -----> பூமி, ஆனந்தம், அழைத்தல், வியப்பு, தடை, கடித்தல், பூமி.

கா ----->    சோலை, காத்தல், காவடி, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், வருத்தம்.

கு ----->      இருள், குற்றம், வருகுதி, சிறுமை, தடை, தொனி, நிந்தை, நன்கு, போக்கு, பூமி.

கூ ----->     பூமி, கூவுதல், மலங்கழித்தல்.

கை ----->  கரம், உறுப்பு, இடம், உடனே, ஒப்பனை, ஒழுக்கம், கடுக்கை, சாமர்த்தியம், சிறுமை, தங்கை, தொனி, பக்கம், படைவகுப்பு, துதிக்கை, வரிசை.

கோ -----> அரசன், தலைவன், இறைவன், அம்பு, ஆகாயம், ஆண்மகன், இடியேறு, இரக்கக்குறிப்பு, இலந்தை, உரோமம், எருது, கண், கிரகணம், சந்திரன், சூரியன், திசை, கோமேதயாகம்,

                  தேவலோகம், நீர், பசு, பூமி, பொறிமலை, மாதா, மேன்மை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம்.

சா ----->     இறப்பு, மரணம், பேய், சாதல்.

சீ ----->       இகழ்ச்சி, திருமகள், அடக்கம், இலக்குமி, காந்தி, சம்பத்து, சரச்சுவதி, சீதல், நித்திரை, பார்வதி, பிரகாசம், பெண், விடம், விந்து.

சே ----->    எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு, சேரான்மரம்.

சோ ----->  மதில், உமை

ஞா ----->   பொருத்து, கட்டு

தா ----->     கொடு, கேட்பது, அழிவு, குற்றம், கேடு, கொடியன், தாண்டுதல், பகை, பாய்தல், பிரமன், வருத்தம், வலி, வியாழம்.

தீ ----->       நெருப்பு, அறிவு, இனிமை, உபாயவழி, கொடுமை, தீமை, நரகம்.

து ----->       கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு, அசைத்தல், அநுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், நடத்தல், நிறைத்தல், பிறவினை, விகுதி, வருத்தல், வளர்தல்.

தூ ----->      வெண்மை, தூய்மை, சீ, தசை, பகை, பற்றுக்கோடு, புள்ளிறகு.

தே ----->     நாயகன், தெய்வம், கிருபை.

தை ----->   மாதம், தைத்தல், பூசநாள், மகராசி.

நா ----->      நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, நடு, பொலிவு

நீ ----->        நின்னை

நே ----->     அன்பு, நேயம்

நை ----->    வருந்து, நைதல், இகழ்ச்சிக்குறிப்பு

நொ ----->   நொண்டி, துன்பம், நோய், வருத்தம்

நோ ----->   நோவு, வருத்தம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி.

நௌ -----> மரக்கலம்

பா ----->      பாட்டு, நிழல், அழகு, கடிகாரவூசி, கிழங்குப்பா, நிழல், நெசவுபா, பஞ்சிநூல், பரப்பு, பரவுதல், பிரபை, வெண்பா

பூ ----->        மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குதல், இலை, ஓமாக்கினி,ஒருகண்ணோய், ஒருநரகம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பொலிவு,

பே ----->     மேகம், நுரை, அழகு

பை ----->    பாம்புப் படம், பசுமை, உறை, அழகு, குடர், சாக்கு, நிறம், பச்சைநிறம்,பொக்கணம், மந்தக்குணம், மெத்தெனவு.

போ ----->   செல், பிரியின்வாழாதென்போ.

----->        சந்திரன், எமன், என்மர், ஒருமந்திரம், காலம், சிவபிரான், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுனு.

மா ----->     மாமரம், பெரிய, விலங்கு, அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடித்தமா, இடை, இலக்குமி, எதிர்மறை, யுபசருக்கம், ஐயவுபசருக்கம், ஓரெண், ஒருமரம், கட்டு, கறுப்பு,

                    சரச்சுவதி, சீலை, செல்வம், தாய், துகள், நஞ்சுக்கொடி, நிறம், பரி, பிரபை, பெரிய, பெருமை, மகதமதுவம், மரணம், மிகுதி, மேன்மை, வண்டு, வயல், வலி, வெறுப்பு.

மீ ----->        ஆகாயம், மேலே, உயரம், மகிமை, மேல், மேற்புரம்.

மு ----->      மூப்பு

மூ ----->      மூன்று, மூப்பு.

மே ----->     மேன்மை, மேல், அன்பு.

மை ----->   அஞ்சனம், கண்மை, இருள், எழுதுமை, கருப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மலட்டெருமை, மேகம், மேடவிராசி, வெள்ளாடு.

மோ ----->   முகர்தல், மோதல், கேண்மோ.

யா ----->     அகலம், மரம், சந்தேகம், இல்லை, யாபன்னிருவர்.

வா ----->     அழைத்தல்

வீ ----->        பறவை, பூ, அழகு, கருப்பந்தரித்தல், சாவு, சொல்லுதல், நீக்கம், போதல், விரும்புதல்.

வை ----->    வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல், புல், வையகம்,

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

----->         தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு ----->        நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று ----->         எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

Share this post

Link to post
Share on other sites

வாருங்கள் வீரையா, வணக்கம்.! 

என் பதிவொன்றை இன்று மீட்டியமைக்கு நன்றி.! நானா இதனைப் பதிந்தேன்....!! எனக்கே மலைப்பாக இருக்கிறது. வேறொன்றும் இல்லை ஐயா, இப்போ வயது போட்டுது...😒

கடலுக்கு கரையுண்டு. தமிழுக்கு கரை இல்லை. எப்போ தமிழுக்கு என்று ஒரு கரையை, அதாவது மண்ணைச் சொந்தமாகக் காண்கின்றோமோ அன்று தமிழின் முழுமையை தமிழனோடு இந்த உலகமும் காணும்.:) 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • பிடிக்காத மண உறவில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல விடுபடும் இருவருக்கும் தத்தம் எதிர்காலத் துணையைத் தேடும் உரிமை இருவருக்கும் உண்டு. இவர்கள் விடயத்தில் மணவாழ்வில் இருந்து விலகிய தனது கடந்தகால மனைவி( விலகிய பின்னர் இந்தச் சொற்பதமே தவறு) வேறு யாரையும் தெரிவு செய்து வாழ்ந்துவிடக்கூடாது என்பதே அடிப்படை ஆணவமாக இருக்கிறது. உண்மை என்ன என்பது எவருக்கும் தெரியாது ஆனால் சட்டப்படி விலகியவர்கள் தமக்கான வாழ்வை தெரிவு செய்வது நியாயமானதே... பிடித்தமில்லாத இருவர் சேர்ந்து வாழ முடியாது...அதில் ஒருவருக்குப் பிடிப்பிருந்து மற்றவருக்கு இல்லையென்றாலும் அதுதான் நிலை.... இன்று புலம் பெயர்ந்த நம்மவர்களை எடுத்துக் கொண்டால் பல வீடுகளில் துணைவனும் துணைவியும் தனித்தனி அறைகளில் வீட்டுக்குள்ளும்,..... வெளியே புறத்தோற்றத்தில் சமூகத்திற்கு ஒஞ்சி கணவன் மனைவியாகவும் தம்மைத்தாமே ஏமாற்றி வாழ்கிறார்கள். ஒவ்வாத திருமணங்களிலிருந்து விலகுவதும் தமக்கான எதிர்காலத்தை நிர்ணயிப்பதும் தற்சமயம் கனடாவில்  வாழும் இளையவர்களிடம் பரவலாக நிகழ்ந்து வருகின்றது. விகிதாசாரத்தில் அதிகமாகவே இருக்கிறது. என்னுடைய திருமண சேவையில் முதல் திருமணத்திற்கு விண்ணப்பிப்பவர்களைக்காட்டிலும் மறுவாழ்வுக்கு விண்ணப்பிப்பவர்களே அதிகமாக இருக்கின்றனர். ஆதலால் அவர்களுடைய கடந்த காலத்தை கேட்டும் விசாரித்தும் அறியவேண்டிய தேவை எனக்கு அதிகம் ஏற்படுகிறது. அநேகமானவை தாயகத்திலிருந்து திருமணம் செய்து இங்கு வந்த பின்னர் ஏதோ காரணம் உருவாக்கி பெண்கள் பிரிவதாகவும் அதன் பின்னர் அவர்கள் வேலை செய்து தமது கடந்த கால (திருமணத்திற்கு) முன்னராக தாம் காதலித்தவரை ஸ்பொன்சர் செய்து அழைப்பதாகவும் அதிக குற்றச்சாட்டுக்களை பெண்கள் மீது போட்டபடிதான் ஆண்பிள்ளைகளின் பெற்றோர் தம் மகனுக்கான வரனைத் தேடுகிறார்கள். இவ்விடயத்தில் உண்மைகள் இல்லாமலும் இல்லை.... வெளிநாட்டுக்கு வரும் சந்தர்ப்பத்திற்கு இலட்சக்கணக்கான பணத்தைச் செலவு செய்யாமல் சில பெண்கள் திருமணம் என்னும் பெயரில் ஒரு ஆணின் வாழ்வை கபாளீகரம் செய்துவிட்டு தன் துணையை அழைத்து வாழும்போது, கடந்த திருமணம் தனக்கு விபத்து என்று கூறி தட்டிக்கழித்துச் செல்லும் நிலையையும் கண்கூடாகப் பார்க்கநேர்கிறது. ஆக திருமணம் என்பது மலினப்பட்டுப்போகிறது. தாயகத்திலிருக்கும் பெற்றோரும் உள்ளூர் வரன்களைக்காட்டிலும் வெளிநாட்டு வரன்களையே அதிகம் விரும்புகிறார்கள்  உண்மையில் மகளுக்கு பிடிக்கிறதா என்று அவர்கள் சிந்திப்பதே இல்லை... மகளை ... அவளின் கனவுகளைக் காவு கொடுத்து தங்கள் குடும்பத்தை முன்னேற்றவே அரும்பாடுபடுகிறார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளை எத்தகைய பழக்கவழக்கம் உடையவர் என்று சிறிதும் கவலைப்படுவதே இல்லை. அதிகமான வெளிநாட்டு மணமக்கள் அதாவது இரு பாலரும் போதைக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். ஏகப்பட்ட கனவுகளோடு வாழவரும் மணமகளுக்கு இங்கு வந்தபின்னரே உண்மைகள் மெல்ல மெல்லத் தெரிய வரும். உண்மைகள் தெரியும்போது காலம் கடந்திருக்கும். அதற்குப் பின்னான துயரம் என்பதும் ஏமாற்றம் என்பதும் மன அழுத்தத்தை உருவாக்கி தற்கொலை முயற்சிகள், அடிதடி வன்முறைகளாக வடிவம் கொள்ளும். விவாகரத்துகளும் எதிர்காலம் பற்றிய திண்டாடல்களும் சூழ இன்னொரு வாழ்வை தேடலாமா என்றும் ஏற்கனவே பட்டதே போதும் என்று முடக்கமும் பலர் வாழ்வில் நடந்தேறிக்கொண்டிருக்கும் ஒன்று. இந்த கொலை செய்தவருக்கும் , கொலை செய்யப்பட்டவருக்கும் இடையில் ஏதேனும்  ஏமாற்றம், துயரம் பிணைந்திருக்கலாம். விடுபட்டு சென்ற பின்னர் ஒருவரின் தனிமனித வாழ்வில் தலையிடவே கூடாது.. ஆனால் இவ்விடத்தில் ஆதிக்கவெறி , ஆணவம் ஆத்திரம் என பல்வகைப்பரிமாணங்களில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இன்று கொலை செய்யப்பட்ட பெண்ணை அவதூறு செய்யும் யாராகட்டும் இன்று கொலையாளி ஆகி நிற்கும் அந்த மனிதனுக்கு நல்வழிகாட்ட எண்ணினார்களா? கொலையாளி முன்பே அவளைக் கொல்லவேண்டும் என்று கறுவிக் கொண்டிருந்தார் என்று வெளிப்படுத்தும் எவரேனும்.... அந்தப் பையனை ஆற்றுப்படுத்த எண்ணவில்லையா?
  • அமெரிக்க அரசு தனது நட்பு நாடுகளுக்கு அவ்வாறான 'கேட்க்கும்' சேவையை வழங்கி வருகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னராக அவ்வாறான ஒரு தகவல் அடைப்படையில் கனடா நாட்டின் தேசிய காவல்துறையின் ஒரு உயர் அதிகாரி நாட்டின் இரகசியங்களை வேறு ஒரு நாட்டிற்கு கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ளார். இவர் எந்த நாட்டிற்கு உளவு பார்த்தார் என கூறப்படவில்லை.    A senior RCMP official arrested in a case that sent shockwaves through Canada’s national security community on Friday was uncovered by U.S. authorities who tipped off Ottawa, a source told Global News. Cameron Ortis faces seven counts dating as far back as 2015, including breach of trust, communicating “special operational information,” and obtaining information in order to pass it to a “foreign entity.” The charges did not specify which foreign entity or what type of information, but a source said he had amassed “terabytes of information,” including a list of undercover operatives, when he was arrested in Ottawa on Thursday. https://globalnews.ca/news/5899146/senior-rcmp-arrested-charged/
  • 🥴 எனக்கு சிரிப்பை அடக்குறதா அழுகையை அடக்குறதா என்றே விளங்கேல்ல! "என்ன சட்டச் சிக்கல்?" எண்டு வேற கேக்கிறார் பாருங்களன் அப்பாவித் தனமா!  அது சரி, ஊரில சாதாரண உடையில் சிலர் இருக்கிறார்களாம். உங்களுக்கு யுனிபோம் வேற இருக்கா? கொடுமை சரவணா! 
  • உயிலும் நன்கொடையும்  பொதுவாக நன்கொடையாக கிடைக்கும் சொத்துக்கள் ஒரு குடும்பம் புலம்பெயர் தேசத்தில் பிரியும் பொழுது அது நூறு வீதம் அதற்கு உரித்தானவர்க்கே கிடைக்கும்.  நபர் அ ஒரு வீட்டை நன்கொடையாக பெறுகிறார். பத்து வருடங்கள் அந்த வீட்டில் வசித்து பின்னர் பிரிக்கிறார். இந்த பத்து வருடத்தில் எவ்வளவு பணம் அதிகரித்ததோ அதில் ஐம்பது வீதம் நபர் ஆக்கு செல்லும். நபர் அ  ஒரு குடியிருந்த, ஆனால் சொந்தமில்லாத வீட்டிக்கும் இது பொருந்தும்.  அதுபோன்று வீடல்லதா சொத்துக்களையும் நன்கொடையாக பெறலாம். நகைகள், கோடைகால வீடுகள் மற்றும் வேறு பெறுமதிமிக்க பொருட்கள்.     
  • ஒரு அரச உத்தியோக பெற்றோரின் மகனான எட் ஸ்னோடன் பற்றி அறிந்திருப்பீர்கள். இவருடன் விக்கி லீக்சின்  இணைக்கப்பட்டு செய்திகளும் வந்தன. இவர் தற்பொழுது உருசியாவில் வாழ்கிறார். அமெரிக்காவிற்கு வர முடியாத நிலை, காரணம் அமெரிக்காவின் மூன்றாம் தர உளவில் வேலைசெய்த இவரும் ஒரு 'விசில்' ஊதியவர்.  தான் வேலை செய்த என்.எஸ்.ஏ. அமைப்பானது சாதாரண அமெரிக்கர்களின் மீதும் உளவு பார்க்கின்றது என்பதை உறுதிப்படுத்தியமையே. இவர் இன்றும் கூறுவது, உங்கள் கணனியில் நீங்கள் உலகில் எங்கிருந்து அதை செய்தாலும் அதை இந்த அமெரிக்க அமைப்பும் செய்யும் வலிமை கொண்டது.  அமெரிக்க அரசு இவருக்கு புகலிடம் அளிக்க எண்ணும் அரசுகளை மிரட்டி வருகின்றது. ஸ்னோடன் அண்மையில் பிரான்ஸ் நாட்டடையும் புகலிடம் அளிக்க கேட்டிருப்பதாக செய்திகள் வந்தன,