Sign in to follow this  
வல்வை சகாறா

அன்புள்ள மன்னவனே. குறுந்தொடர் - 1

Recommended Posts

அன்புள்ள மன்னவனே.

குறுந்தொடர் - 2

 

12835209249673.jpg

 

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தக் காவலரனில் நரேனும், கரனும் விழிப்பாக எதிரியை அவதானித்தபடி இருந்தனர். திடீர் திடீரென செல்களும், துப்பாக்கிச் சன்னங்களும் தலைக்கு மேலால் கூவிக்கொண்டு செல்வதும் வெடிப்பதுமாக அந்த இரவு நகர்ந்து கொண்டிருந்தது. நாளாந்தம் இத்தகைய சூழலிலேயே சென்ரியில் நிற்பதால் இருவரிடமும் பதற்றம் இல்லை. ஆனால் கண்கள் மட்டும்  மண்மூடைகளுக்கு இடையிலான சிறிய வெளிகளினூடாக மாறி மாறி நாலாபக்கமும் அந்த இருளை துலாவிக்கொண்டிருந்தன. ஒரு நீண்ட மௌனம் வழமையில்லாமல் இருவருக்கும் இடையில் தங்கியிருந்தது.

 

நரேனுடன் பழகும் எவரும் இயல்பாகவே அவனுடன் மனம் விட்டுப் பேச ஆரம்பித்து விடுவார்கள். அப்படி ஒரு ஈர்ப்பை எப்போதுமே நரேனின் பேச்சும், செயலும் கொண்டிருக்கும். எதிர்காலம் பற்றிய தூரநோக்கும், தெளிவான பேச்சும், இயல்பான தோழமையும் மனக்குழப்பம் கொண்ட பலரை அவன்பால் அணுக வைப்பதும்…., சமூகம், போராட்டம் பற்றிய தெளிவான பதில்களையும், திடமான விளக்கங்களையும் கேட்டு குழப்ப நிலை தீர்த்து தெளிவு பெற்றவர்களின் வெற்றிகளும் அதற்கு சான்று கூறத் தயங்கவில்லை.

 

கரனும் நரேனுக்கு சளைத்தவன் அல்லன். நரேனைப் போல ஆழமான சிந்தனை இல்லாவிட்டாலும் துடிப்பும், குறும்பும், சாதுரியமான பேச்சும், செயலும், எல்லோரையும் சிரிக்கவைக்கும் விகடமும் கரனுக்கான பிரத்தியேக அம்சங்களாகி அவனை எல்லோராலும் விரும்பும் ஒருவனாக உலா வர வைத்தன.

 

இந்த இருவருக்கும் உள்ள தோழமை என்பது காவியங்கள் எழுதவல்லன. சில வருடங்களுக்கு முன்னர் முதன் முதலாக இருவரும் ஒருவரை ஒருவரை ஒருவர் சந்தித்ததே இப்படியான ஒரு காவலரனில்தான். அன்று தொட்டு இன்று வரை அவர்களின் நட்பு தொடர்தே இருப்பினும், காதல் என்னும் கள்ளத்தனம் கரனின் மனதில் பூத்து குலுங்கத்தான் செய்தது அதனை திருட்டுத்தனமாக தனக்குள்ளேயே கோட்டையைக்கட்டி இரசிக்க முற்பட்ட கரனின் செயல்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நரேன் உணர்ந்தாலும் நண்பன் தானாக கூறாதவரை அவ்விடயம் பற்றி எதுவும் கேட்பதில்லை என்ற கோட்பாடோடு இருந்தான். கரனுக்கு நண்பனுக்கு மறைக்க விருப்பமில்லாவிட்டாலும் தான் யாரை நேசிக்கிறேன் என்பதை நரேனிடம் சொல்ல பெருந்தயக்கம் தடைபோட்டுக்கொண்டே வந்தது. இத்தயக்கமே கரனின் இயல்பான குணநலன்களை நரேனின் முன்னால் முற்றிலும் இல்லாமல் ஆக்கியது. நண்பனிடம் காட்டும் அட்டகாசத்தனங்கள் பவ்வியமாக அடங்கிக் கொண்டன.

 

துடிப்பும், விகடமும் மௌனமாவதும், இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போவதும் இந்தக் காதல் ஒன்றால்தான்போலும் என்று சிறிது காலமாக பல சந்தர்ப்பங்களில் கரனுடன் இருக்கும்போது நரேன் நினைப்பதுண்டு. எப்போதுமே மிக நெருங்கிய நண்பனாக இருந்தாலும் அவனுடைய அனுமதியின்றி அவனைத் துருவிப்பார்ப்பது, ஆராய முற்படுவது என்பதெல்லாம் நாகரீகமற்ற செயல்கள் என்பதை திடமாக நம்பும் நரேன் கரனாக பேசும்வரை அவனிடம் எதுவும் கேட்கக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தான். கரனின் மனதில் எதையும் கேட்காமல் இருக்கும் தோழன் மரியாதையின் உச்சப்படிகளை எட்டிக் கொண்டிருந்தான். நரேனைப் பார்க்கும் கணங்களெல்லாம் மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு எழுவதும், அதை இல்லாமல் பண்ண வேண்டும் என்றால் உண்மையை நண்பனிடம் சொல்லவேண்டும் என்ற எண்ணமும் ஓங்கத்தான் செய்தன. மனம் நினைப்பதை சொல்லும் அளவுக்கு நாவுக்குத் துணிச்சல் இல்லை…. அப்படியே நா சொல்ல முற்பட்டால் வார்த்தைப் பஞ்சம் தலைவிரித்தாடி பேச நினைத்த விடயத்தையே திசைமாற்றி சென்றன.

 

இருளின் நீண்ட பொழுதில் முன்னெப்போதும் இல்லாதவாறு கரன் மனதால் தவித்துக் கொண்டிருப்பதை நரேனால் அவதானிக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் எல்லைகடந்து ஊடறுத்து உள்நுழைந்து சங்கடப்படுத்துவதையும் விரும்பாததால் இறுக்கமான மௌனத்திற்கு தன்னைத் தாரை வார்த்துவிட்டிருந்தான்.

 

காதலிக்கும்போது இருந்த மகிழ்ச்சி இப்போது எள்ளளவும் இல்லாத சூழலில் சரியா? தவறா என்று மனதிற்குள் எழுந்த கேள்விக்கணைகளால் கரன் காயப்பட்டுக்கொண்டிருந்தான்………

தொடரும். 

Edited by வல்வை சகாறா
  • Like 8

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் அக்கா 

Share this post


Link to post
Share on other sites

கதை தொய்வின்றிப் போகின்றது , பாராட்டுக்கள் வல்வை சகாறா .

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this