Jump to content

புண்ணாக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தில் உறவுகளையோ

ஏனைய மக்கள் கூட்டத்தையோ புண்ணாக்கு/புண்ணாக்குகள் 

என அழைப்பதைத் தடைசெய்யவேண்டும் எனக்
கள நிர்வாகத்திடம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

 

இப்படிக்கு

 

புண்ணாக்கு எதிர்ப்புப் போராட்டக்குழு  :)  :D
யாழ் கருத்துக்களம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாத்தியார் மனசை ரொம்ப  புண்ணாக்கிட்டுது  போல !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாத்தியார் மனசை ரொம்ப  புண்ணாக்கிட்டுது  போல !

இல்லை சுவி அண்ணா

 

இதுவரை என்னை யாரும் களத்தில் நேரடியாகப்  புண்ணாக்கு என அழைக்கவில்லை.

 

ஆனால் வேறு பல உறவுகளையும்

புலம்பெயர்ந்த தமிழ் மக்களையும் (இதில் நானும் அடங்குவேன்) புண்ணாக்குகள் எனப் பலமுறை கள உறவு கோசான் அவர்கள் நோகடித்துள்ளார்.

 

அதே நேரம் கோசானைப் புண்ணாக்கு என அழைத்தபோது அங்கு நிர்வாகம் தலையிட்டுள்ளது.

பாராபட்சமின்றி நடப்பதாக இருந்தால் இரண்டு பக்கமும் திருத்தப்படவேண்டும். :D

Link to comment
Share on other sites

இது என்ன புதுசா புண்ணாக்கு பிரச்சினை ...நேற்று என்னை விவசாயி விக்கி பேஸ்புக்கில் பெண்களுக்கு கடலை போட்டு கலைக்க பட்ட அஞ்சரன் என நாகரிகம் அற்று எழுதினார் இங்க சிலருக்கு பொதுவெளியில் எப்படி கதைப்பது என்று தெரிவது இல்லை என்பது உண்மை . :(

Link to comment
Share on other sites

வாத்தியார் புண்ணாக்காலை இந்திய பொருளாதாரமே ஆட்டம் கண்டிருக்கு. புண்ணாக்கு என்பது அனாகரீகமான சொல் இல்லையே.இத்தனை பெறுமதியான சொல்லை அதுவும் தமிழில் உள்ளதொரு அழகான சொல்லை யாழில் தடை செய்யலாமா?? புண்ணாக்கு என்கிற தமிழ் சொல்லை யாழ் இணையம் தடை செய்யவதற்கான  அதிகாரமும் அவர்களிற்கில்லை.

 

போங்கடா புலம் பெயர் புண்ணாக்குகளா........... :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

புண்ணாக்கு என்பது பேச்சுத்தமிழ். இலக்கணத் தமிழில் அதன் பெயர் பிண்ணாக்கு. பிண்ணாக்கு என்பது, நிலக்கடலை, எள் முதலிய வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்தபிறகு மிஞ்சும் சக்கை.

Link to comment
Share on other sites

பொருள்

பிண்ணாக்கு (பெ)

220px-A_closeup_of_coconut_cake.JPG
magnify-clip.png
தேங்காய் பிண்ணாக்கு
220px-A_gingelly_oil_cake.JPG
magnify-clip.png
எள் பிண்ணாக்கு
  1. நிலக்கடலைதேங்காய்எள் முதலிய வித்துகளை ஆட்டி எண்ணெய் எடுத்தபின் மிஞ்சும் சக்கை
  2. something/someone considered worthless
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. oil-cake made of the residue of oil seeds; oilcake left in the oil-press after oil extraction
  2. something/someone considered worthless
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன், 'பிண்ணாக்கு' என்று இரண்டு கருத்துக்களில் சொல்கிறார்கள் என்று!

 

அவரவர் வேலை செய்யும் நாடுகளில்,அந்த நாட்டு முதலாளிகளால் பிழியப்பட்ட 'சக்கைகள்'  :o

'எண்ணெய்' மட்டும் புலத்திலிருந்து 'நிலத்தில்' இருப்பவர்களுக்கு வேண்டும்! :D

 

பிழியும் வரை பிழிந்தாயிற்று! இனிப் பிழிவது கொஞ்சம் 'கஸ்ரம்' :icon_idea:

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன், 'பிண்ணாக்கு' என்று இரண்டு கருத்துக்களில் சொல்கிறார்கள் என்று!

 

அவரவர் வேலை செய்யும் நாடுகளில்,அந்த நாட்டு முதலாளிகளால் பிழியப்பட்ட 'சக்கைகள்'  :o

'எண்ணெய்' மட்டும் புலத்திலிருந்து 'நிலத்தில்' இருப்பவர்களுக்கு வேண்டும்! :D

 

பிழியும் வரை பிழிந்தாயிற்று! இனிப் பிழிவது கொஞ்சம் 'கஸ்ரம்' :icon_idea:

 

கல்லில் நார் உரிப்பம் நாங்க :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறவையின் நாக்கை எப்படிச் சொல்லலாம்?

புள் + நாக்கு = புள்நாக்கு அல்லது புந்நாக்கு அது மருவி புண்ணாக்கு என வந்தது.

 

எனவே புண்ணாக்கு என்றால் பறவையின் நாக்கு என்பதே சாலப்பொருந்தும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறவையின் நாக்கை எப்படிச் சொல்லலாம்?

புள் + நாக்கு = புள்நாக்கு அல்லது புந்நாக்கு அது மருவி புண்ணாக்கு என வந்தது.

 

எனவே புண்ணாக்கு என்றால் பறவையின் நாக்கு என்பதே சாலப்பொருந்தும் :D

கவனம், வாலி! :D

 

இப்படியே சொல்லாராச்சியில போனால், இது எங்க கொண்டுபோய் விடுமென்று உங்களுக்குக் கட்டாயம் விளங்கும்! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

210px-Cocos_nucifera1.jpg

 

புண்ணாக்கு என்ற சொல்லை.... அனுமதித்தால்,
பன்னாடை என்ற சொல்லும்.... தவறான சொல் அல்ல,
அதனையும்.... கள உறகள் தராளமாகப் பாவிக்க, நிர்வாகம் முன்வர வேண்டும்.

Link to comment
Share on other sites

டோண்ட் வொர்ரி guys யாழ் களத்தில இப்பிடி தான் ஒவொரு சீசன் க்கு ஒருத்தர் தமிழ் தேசியத்துக்கு எதிரா விஷம் பரப்ப வருவினம் என்ன சோகம் எண்டா கொஞ்ச நாளையால காணமல் போயிடுவினம் இதெல்லாம் சப்பை மேட்டரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய் என்பதும் தவறல்ல. அது செல்லப் பிராணி. நன்றி உள்ளது.

 

யாழ் கள விதிகளை நிர்வாகமே சரியா அமுல்படுத்தல்லைன்னா.. அப்புறம்.. என்னத்துங்க.. விதின்னு எழுதி வைச்சுக்கிட்டு..????!

 

நாங்க எழுதினா தப்பு.. அதையே.. பிரச்சார நோக்கில் எழுதினா.. தப்பில்லை என்றாங்க..! முடியல்ல.... இவங்க கொள்கையை நினைச்சா..! :lol:

Link to comment
Share on other sites

வாத்தியார் அண்ணாவின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். :rolleyes:

 

அவ்வாறில்லாதவிடத்து தமிழ் சிறி அண்ணா, நெடுக்ஸ் அண்ணா கேட்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலமுறை  சுட்டிக்காட்டியாச்சு

ரிப்போட்டும் செய்தாச்சு

ஒரு இடத்தில் நாரதர் இது பற்றி  எழுதியிருக்க அவருடன்  உடன்பட்டு எழுதியிருந்தேன்.

உடனேயே  காணாமல்ப்போச்சு.

அதன்படி நான் நினைக்கின்றேன்

 யாழும் ஒரு வியாபார நிலைக்கும்  சேவைக்கும் இடையில் தளம்புவதால்

கொதிநிலையை  வைத்திருக்க விரும்புகிறது என்று.

எனவே நடக்கட்டும்.  நடக்கட்டும்

ஆனால் விட்டுக்கொடுக்க வெளிக்கிட்டால் என்ன என்று முன்னாள் இயக்கங்கள் வரலாறாக எம் முன்.. :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே... போல், பரதேசி என்பதும்.....
"கல்தோன்றா... மண் தோன்றா... காலத்தின், முன் தோன்றிய தமிழர்களால்" பாவிக்கப் பட்டு வந்தது என்பதால்...
அதனையும்.... நாம் பாவிக்க, அனுமதிக்க வேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே... போல், பரதேசி என்பதும்.....

"கல்தோன்றா... மண் தோன்றா... காலத்தின், முன் தோன்றிய தமிழர்களால்" பாவிக்கப் பட்டு வந்தது என்பதால்...

அதனையும்.... நாம் பாவிக்க, அனுமதிக்க வேண்டும். :icon_idea:

 

 

தமிழ் இலக்கியம் பேசுகின்றார்  என்றால்

நாம் எல்லோரும் உடன்  உணருவது எது??

எனவே அவற்றையும் அனுமதித்தால்

களம் மிகவும் அபாராமாக கமகமக்கும் என்பதனையும் அறியத்தருகின்றேன்...

Link to comment
Share on other sites

அதே... போல், பரதேசி என்பதும்.....

"கல்தோன்றா... மண் தோன்றா... காலத்தின், முன் தோன்றிய தமிழர்களால்" பாவிக்கப் பட்டு வந்தது என்பதால்...

அதனையும்.... நாம் பாவிக்க, அனுமதிக்க வேண்டும். :icon_idea:

அதுதானே.. :D பிரான்சில் பரதேசி என்ற பெயரில் restaurant ஒன்று தமிழர்களால் நடத்தப்படுகிறது. :D எனவே அந்த சொல்லிலும் தவறில்லை. நிர்வாகத்தினர் அதற்கும் அனுமதிக்க வேண்டும். :icon_idea:

பலமுறை  சுட்டிக்காட்டியாச்சு

ரிப்போட்டும் செய்தாச்சு

ஒரு இடத்தில் நாரதர் இது பற்றி  எழுதியிருக்க அவருடன்  உடன்பட்டு எழுதியிருந்தேன்.

உடனேயே  காணாமல்ப்போச்சு.

அதன்படி நான் நினைக்கின்றேன்

 யாழும் ஒரு வியாபார நிலைக்கும்  சேவைக்கும் இடையில் தளம்புவதால்

கொதிநிலையை  வைத்திருக்க விரும்புகிறது என்று.

எனவே நடக்கட்டும்.  நடக்கட்டும்

ஆனால் விட்டுக்கொடுக்க வெளிக்கிட்டால் என்ன என்று முன்னாள் இயக்கங்கள் வரலாறாக எம் முன்.. :(  :(

 

உண்மை அண்ணா, மக்களுக்கான சேவை என்பதை விட்டு யாழை சூடாக வைத்திருக்க தான் நிர்வாகம் முற்படுகிறது.

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன், ஒரு தனி மனிதனைக் குறிக்காமல் ஒரு குழுமத்தை திட்டினால் நிர்வாகம் அனுமதிக்கும் என்று.. :rolleyes:

ஆகவே நீங்கள் திட்ட நினைப்பவரை முதலில் ஒரூ குழுமத்துக்குள் சேர்த்துவிட்டு பிறகு அந்தக் குழுவை திட்டலாம்.. :lol:

ஆனால் இவர்களின் திட்டமே அதுதானே.. இருக்கிறவர்களையும் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து விடுவது..

Link to comment
Share on other sites

நான் பன்னாடை என்று எழுதியது தனிப்பட ஒருவர் மீதல்ல. மேலும் அரசியலில் இருப்போர் வழமையில் தம்மீதான விமர்சனைகளை ஏற்க வேண்டும். அத்ன் பின்னால் அது சம்பந்தமாக நான் எழுதியவையையும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பன்னாடை என்று எழுதியது தனிப்பட ஒருவர் மீதல்ல. மேலும் அரசியலில் இருப்போர் வழமையில் தம்மீதான விமர்சனைகளை ஏற்க வேண்டும். அத்ன் பின்னால் அது சம்பந்தமாக நான் எழுதியவையையும் காணவில்லை.

 

மல்லையூரான்....

நீங்கள் பன்னாடை என்று, எழுதிய கருத்தை.... நான் இன்னும் வாசிக்கவில்லை.

சும்மா.. பொதுவாகச் சொல்ல, நீங்கள்... அளவான தொப்பியைப் போட்டுக் கொண்டு வந்து நிற்கிறீர்களே.... :D

 

நல்லதுகளை விட்டு, விட்டு.... கழிவுகளைச் சேமித்து வைத்திருப்பதால்...

பன்னாடை என்பது, ஒட்டுக்குழு உறுப்பினர்களுக்கு.... பொருத்தமான பெயர் என நினைக்கின்றேன். :lol:

Link to comment
Share on other sites

யாழ் களவிதிகளின்படி அரசியல் ரீதியான தூற்றுதலுக்குரிய சொற்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும். எனவே சக கள உறுப்பினர்களைச் சீண்டும்/ஆத்திரமூட்டும் பதங்கள் யாவும் கட்டாயம் தவிர்க்கக்கபடல்வேண்டும். இத்தகைய பதங்கள் கருத்துக்களில் வைக்கப்பட்டால் கருத்துக்கள் முழுமையாக நீக்கப்படும் என்பதைக் கள உறவுகள் கவனத்தில் கொள்ளுங்கள்.

மேலும் புண்ணாக்கு என்ற சொற்பிரயோகத்தை தவிர்க்குமாறு குறித்த கள உறுப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதாலும், இத்தகைய சொல்லாடல் இனி வைக்கப்படும் கருத்துக்களில் அனுமதிக்கப்படமாட்டா என்பதாலும் இத்திரி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.