Jump to content

தங்கக் கடியாரம்....வைர மணியாரம்,,,,,!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

marriage.jpg

 

சந்திரனுக்கு அது ஒரு குறுகுறுத்த பருவம்!

 

பாவாடை, சட்டையோட என்னத்தைப் பார்த்தாலும் வடிவாத் தெரியிற காலம்!

அண்டைக்கும் சரசு வழக்கம் போல, படலையைக் கடந்து சென்றாள். ஒரு கொஞ்ச தூரம் நடந்து போய்த் திரும்பிப் பார்த்து, கழுத்தைத் திருப்பி ஒரு சின்ன “‘வெட்டு"!

சும்மா ‘வெட்டு' எண்டு எழுதமட்டுமே முடியுமே தவிர, அதை எழுதி விளங்கப்படுத்திறது கொஞ்சம் கடினமான காரியம்!

 

ஆனால், அடி வளவுக்குள்ள பனங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த ஆச்சிக்கு, அந்த ‘வெட்டின்' அர்த்தம் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்!

மனுசி நேர சந்திரனிட்டை வந்து, ஒரு ஒளிவு மறைவுமில்லாமல், தம்பி, உனக்கும் அந்தப் பெடிச்சிக்கும் இடையில ஏதாவது இருக்கோ? என்று கேட்கவும், இப்படியான நேரடித்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத சந்திரனும்  அப்பிடியொண்டும் இல்லையணை எண்டு வார்த்தைகளைத் தேடவும், மனுசியும், தம்பி உனக்குத் தங்கச்சிமாரெல்லாம் இருக்கினமப்பு! இந்த ‘எடுபட்டதுகளைப்’ பாக்கிறதை விட்டிட்டுக் கவனமாப் படிச்சுப் பெரிய உத்தியோகத்திலை இருந்தாய் எண்டால், நானா, நீயா எண்டு தங்கட பெட்டையளைக் குடுக்கப் போட்டி போடுவாங்களப்பு! வீடென்ன, வாசலென்ன, நகையென்ன, நட்டென்ன எல்லாம் தந்து அள்ளிக்கொண்டு போவாங்களெல்லோ. எண்டு ஒரு பிரசங்கமே செய்து முடிச்சுது!

இதுக்குப் பிறகு, வீட்டுக்கு வெளியால சந்திரன் வாற நேரமெல்லாம், ஆச்சியும் விறகு பொறுக்க வாறதும் வழக்கமாகிப் போனது!  

 

இந்த முதலாவது சம்பவத்துக்குப் பிறகு, ஊருக்குள்ள கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது நல்லது எண்டு சந்திரன் முடிவு செய்து விட்டான்! ஆச்சியும் தனது ‘புலனாய்வு முயற்சிகளைக்' கொஞ்சம் தளர்த்தின மாதிரி இருந்தது! பிறகு சந்திரனும்,யாழ்ப்பாணத்துக்குப் படிக்கப் போகத் தொடங்க, எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக அவனது நினைவிலிருந்து விலகிப் போனது! சந்திரனது படிப்பும், ஒரு மாதிரி முடிஞ்சு, கொழும்புக்கு வேலைக்கும் போகத் தொடங்கியிருந்தான்!

ஆராவது ஊருக்கிள்ள கொஞ்சம் படிச்சுக் கிடிச்சு வந்திட்டால், கலியாணப் புறோக்கர் மாருக்கு ஒரு விதமான ‘அரிப்பு' ஏற்படும்!. அவர்களும் சந்திரனது வீட்டாரை அணுகி, ஒரு மாதிரி அடிக்க வேண்டிய ;குழை’ எல்லாம் அடிச்சு, ஒரு மாதிரி, ‘புரிந்துணர்வு உடன்படிக்கை' ஒன்றை முடித்திருக்க வேண்டும்!

 

சந்திரனோட ஏதாவது முக்கியமான விசயங்கள் கதைக்க வேண்டுமெண்டால், தாய், தகப்பன் அவனை அணுகிறது குறைவு. ஆச்சி தான், அனேகமாக ஒரு நல்லெண்ணத் தூதுவராக அனுப்பப் படுவது வழக்கம்! சின்னனா இருக்கேக்க, நல்லெண்ணெய் தடவித் தடுக்கில ‘பிரள' விட்டதிலையிருந்து, இண்டைக்கும் சனிக்கிழமையில தலைக்கு எண்ணெய் வைச்சுத் தப்பி விடுகிறதால, மனுசி கொஞ்சம் நெருக்கம் கூடத் தான்!,அண்டைக்கும் ஆச்சியும் சந்திரனிட்டை வந்து வழக்கத்துக்கும் மாறாகக் குழைஞ்ச மாதிரிக் கிடக்கச் சந்திரனும், என்னணையாச்சி, கொஞ்சம் விளக்கமா விசயத்தைச்  சொல்லணை, எண்டு கேட்க மனுசியும் கதையைத் துவங்கிச்சுது.

 

‘தம்பி, நீயும் படிச்சு முடிச்சிட்டாய். உனக்கும் காலா காலத்திலை, ஒரு கலியாணத்தைக் கட்டி வைக்கலாம் எண்டு அம்மாவும், அப்பாவும் முடிவு பண்ணியிருக்கினம். அவை எப்பவும் உனக்கு நல்லது தானே செய்வினம். தங்கச்சியளுக்கும் வயசாக முந்திச் செய்ய வேண்டுமெல்லோ எண்டு ஆச்சியின் கதை தொடர்ந்து கொண்டே போனது!ஆச்சியோடை சண்டை பிடிச்சு ஒண்டும் ஆகப்போவதில்லை, என்று அனுபவத்தில் தெரிந்திருந்தபடியால், கொஞ்சம் விட்டு ப்பிடிப்பம் எண்டு யோசிச்ச சந்திரனும், ஆரணை பெட்டை எண்டு கேட்க, வேறை ஆரு, நம்மடை ராசாத்தி தான் எண்டு சொல்லவும்,’கிர்ர்' எண்டு தலைக்குள் என்னவோ சத்தம் கேட்டது மாதிரியிருக்கச் சந்திரனும் அப்படியே நிலத்தில் அமர்ந்து விட்டான்!

 

அட கடவுளே, சில வேளையில அவசரமான அலுவலாப் போகேக்குள்ள, உன்னைக் கும்பிடாமல் கோயிலைக்கடந்து போயிருப்பன், அதுக்காக இப்பிடியா என்னைத் தண்டிக்க வேண்டும்? என நினைத்துக் கொண்டான், இவ்வளவுக்கும் ‘ராசாத்தி  பெரிய அழகு எண்டு சொல்லாவிட்டாலும், நிச்சயமாக ‘அலங்கோலம்; இல்லை. அழகும் சந்திரனுக்குப் பெரிய பிரச்சனையில்லை. ஏனெனில் அவனும் பெரிய ‘மன்மதக்குஞ்சு’ இல்லையென்று அவனுக்குத் தெரிந்தே இருந்தது.. அவளது அப்பா ஒரு பெரிய முதலாளி என்பது அவனுக்கு முதலாவது பிரச்சனை. அடுத்ததாக, ராசம்மா பள்ளிக்கூடத்தில படிக்கிற காலத்தில,ஆங்கில வாத்தியார் அவளுக்கு நாற்பதாம் வரிசையும், ஐம்பதாம் வரிசையும் சொல்லிக்குடுக்கப் பட்ட பாடு, பள்ளிக்குடம் முழுக்கத் தெரியும்.

அந்த ‘எவ்'  சத்தம் மட்டும் அவளுக்கு ‘எப்' எண்டு தான் வரும்.அதால அவளின்ர பட்டப்பெயரே ‘பவுண்டின்' . அந்தக்காலத்திலை ‘சியால்' எண்டொரு பேனை இருந்தது. அதால, ராசம்மாவும், பேனையப் பற்றிக்கதை வந்தால், அந்த இடத்தில் ‘சியால்' என்றே பேனைக்குப் பதிலாகக் கதைப்பாள். அது ‘பைலட்' எண்டாலும், அதுக்கும் பேர் ‘சியால்' தான்!  அவளும் கடைசி வரைக்கும் ‘எப்'' எண்டே பிடிவாதம் பிடிக்கக் கடைசியாக் களைச்சுப் போன வாத்தியும், நீ சொல்லுறது தான் சரியெண்டு சொல்லிச் சரண்டர் பண்ணின கதை அவனுக்கும் தெரிந்திருந்தது!.  

அவளுக்கு உன்னில, படிக்கிற காலத்திலேயிருந்து நல்ல விருப்பமாம்!

ஆச்சியின் பேச்சு அவனை இந்த உலகத்துக்குத் திரும்பக் கொண்டு வந்தது!

நல்ல ‘சீதனமும்' கொடுக்கினமாம் எண்டு கேள்வி, எண்டு ஆச்சியும் ஒண்டும் தெரியாதமாதிரி, சந்திரனுக்குத் தலையில நல்லெண்ணெய் தடவிற மாதிரிக் கதையை நகர்த்த, அவனுக்கும் தங்கைகளின் ‘முகங்கள்' வரிசையாக நினைவில் வந்து போயின!

 

(சந்திரனின் ;சித்திரவதை' அடுத்த பாகத்தில் முடியும்) :o 

 

இறுதிப்பாகத்தைப் பாகத்தைப் பார்க்க.............

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130443&hl=

Link to comment
Share on other sites

அண்ணை என்ன இப்படி கொல்லுறியள் .உடன மிச்சத்தையும் போடுங்கோ. 

Link to comment
Share on other sites

சித்திரவதையையும் அறிந்துகொள்ள ஆவல்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

சந்திரனுக்கு அது ஒரு குறுகுறுத்த பருவம்!

 

பாவாடை, சட்டையோட என்னத்தைப் பார்த்தாலும் வடிவாத் தெரியிற காலம்!

அண்டைக்கும் சரசு வழக்கம் போல, படலையைக் கடந்து சென்றாள். ஒரு கொஞ்ச தூரம் நடந்து போய்த் திரும்பிப் பார்த்து, கழுத்தைத் திருப்பி ஒரு சின்ன “‘வெட்டு"!

சும்மா ‘வெட்டு' எண்டு எழுதமட்டுமே முடியுமே தவிர, அதை எழுதி விளங்கப்படுத்திறது கொஞ்சம் கடினமான காரியம்!

 

ஆனால், அடி வளவுக்குள்ள பனங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த ஆச்சிக்கு, அந்த ‘வெட்டின்' அர்த்தம் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்

--------

 

(சந்திரனின் ;சித்திரவதை' அடுத்த பாகத்தில் முடியும்) :o 

 

புங்கையூரான்... இந்தக் கதையின் ஆரம்பமே.... எமது ஊர்ப் பேச்சின் கதையுடன் ஆரம்பிக்குது.

நன்றாக உள்ளது. இது, தான்... எமது கடந்த காலத்தை, ஆற்றும் மருந்து.

ப்ளீஸ்.... அடுத்த பதிவுடன் முடிக்காமல், தொடர்ந்து... ஊர்ப் பேச்சுடன் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

என்ன அண்ணை தொடர் நாடகம் மாதிரி பொறுத்த கட்டத்தில நிப்பாட்டி போட்டியல் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசாத்தி ராசம்மாவாகி விட்ட து போல இருக்கு கவனிக்க வும்.

 

தொடருங் கள் படிக்கும் ஆவலுடன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை என்ன இப்படி கொல்லுறியள் .உடன மிச்சத்தையும் போடுங்கோ. 

தம்பி, கலியாணம் எண்டது 'ஆயிரங்காலத்துப் பயிர்"!

சட்டுப் புட்டெண்டு 'முடி' எண்டால் நான் என்ன செய்யிறது?

நீங்க  சந்திரன்ர ஆச்சியை விட மோசம்! :D

சித்திரவதையையும் அறிந்துகொள்ள ஆவல்..! :D

இந்தச் 'சுமே'  அக்காவின்ர கதையளைப் படிச்சுப் படிச்சுச் சனமெல்லாம், ஒரு விதமான 'கொலைவெறியில' திரியுது போல கிடக்கு!

 

நன்றிகள், இசை!

புங்கையூரான்... இந்தக் கதையின் ஆரம்பமே.... எமது ஊர்ப் பேச்சின் கதையுடன் ஆரம்பிக்குது.

நன்றாக உள்ளது. இது, தான்... எமது கடந்த காலத்தை, ஆற்றும் மருந்து.

ப்ளீஸ்.... அடுத்த பதிவுடன் முடிக்காமல், தொடர்ந்து... ஊர்ப் பேச்சுடன் எழுதுங்கள்.

 

சரி, தமிழ் சிறி!

 

இரண்டு பியரைச் சந்திரனுக்கு வாங்கிக் குடுத்துப் பாக்கிறன்! 

 

ஏதாவது வெளிச்சால், கட்டாயம் எழுதுவன்! :D

என்ன அண்ணை தொடர் நாடகம் மாதிரி பொறுத்த கட்டத்தில நிப்பாட்டி போட்டியல் :lol:

 

உலகமே ஒரு நாடக மேடை தானே, அஞ்சரன்?

 

வாழ்க்கையே ஒரு நாடகம் தானே!

 

நன்றிகள், தம்பி! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசாத்தி ராசம்மாவாகி விட்ட து போல இருக்கு கவனிக்க வும்.

 

தொடருங் கள் படிக்கும் ஆவலுடன் 

வணக்கம், நிலாக்கா! நலம் தானா?

 

நீங்க கண்ணுக்குள்ள எண்ணையை விட்டுக்கொண்டு வாசிப்பீங்கள் எண்டு 'ராசாத்திக்கு' என்னெண்டு தெரியும்? :D

 

சில பேர் படிச்சு ரீச்சராவினம்! சில பேர் பிறவியிலேயே ரீச்சராகப் பிறந்து விடுவதுண்டு! இரண்டாவது வகை, ஓய்வு பெறுவதே கிடையாது! :o

 

நன்றிகள்! :lol:

Link to comment
Share on other sites

நல்ல ‘சீதனமும்' கொடுக்கினமாம் எண்டு கேள்வி, எண்டு ஆச்சியும் ஒண்டும் தெரியாதமாதிரி, சந்திரனுக்குத் தலையில நல்லெண்ணெய் தடவிற மாதிரிக் கதையை நகர்த்த, அவனுக்கும் தங்கைகளின் ‘முகங்கள்' வரிசையாக நினைவில் வந்து போயின! /// ஆக சந்திரனும் வழக்கமான யாழ்பாணத்து சூழ்நிலைக்கைதி போல இருக்கப் போவது மேகத்தில் கன்ணாம்மூஞ்சி காட்டும் சந்திரன் போலத் தெரிகின்றது .கதையைத் தொடர வாழ்த்துக்கள் புங்கையூரான்  :)  :)  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா சந்திரனுக்கு மட்டுமா அப்படி புத்தனுக்கும் அப்படித்தான்......ஒருகாலத்தில் பாவடை தாவனி இப்ப ஜீண்ஸ் பான்ட்........மிகுதியையும் தொடருங்கோ

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்ம்..... மிச்சத்தையும் போடுங்கள் புங்கை!

முழுதாக வாசித்துவிட்டு கருத்துப்போட மீண்டும் வருகின்றேன்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  புங்கையரை  காணோம்

சீதனம்  வீடு வளவு என்றவுடன் அமுங்கிப்போனாரோ....

நம்ம ஊரவனாச்சே........

தப்புவது கடினம்

பார்க்கலாம்........ :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ‘சீதனமும்' கொடுக்கினமாம் எண்டு கேள்வி, எண்டு ஆச்சியும் ஒண்டும் தெரியாதமாதிரி, சந்திரனுக்குத் தலையில நல்லெண்ணெய் தடவிற மாதிரிக் கதையை நகர்த்த, அவனுக்கும் தங்கைகளின் ‘முகங்கள்' வரிசையாக நினைவில் வந்து போயின! /// ஆக சந்திரனும் வழக்கமான யாழ்பாணத்து சூழ்நிலைக்கைதி போல இருக்கப் போவது மேகத்தில் கன்ணாம்மூஞ்சி காட்டும் சந்திரன் போலத் தெரிகின்றது .கதையைத் தொடர வாழ்த்துக்கள் புங்கையூரான்  :)  :)  .

வணக்கம் கோமகன்! நீங்கள் சொன்ன 'சூழ்நிலைக்கைதி' என்ற வகையில் கதையைக் கொண்டு போனால், அது பத்தோட பதினொன்றாக ஆகி விடும் என்ற ;பயம்' பிடித்துக் கொண்டது!

அதனால், கதையை வேறு விதமாக நகர்த்த எண்ணினேன்! ஏற்கெனவே, அரைவாசி நகர்ந்து விட்ட கதையை மாற்றுவதென்பது மிகவும் கடினமான  காரியம் என்று உங்களுக்கு, நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை! அதனால், மூன்று நாட்கள் எடுக்க வேண்டி ஏற்பட்டு விட்டது! தங்கள் ஆக்கபூர்வமான விமரிசனத்துக்கு நன்றிகள், கோமகன்!

ம்ம்ம்ம்ம்..... மிச்சத்தையும் போடுங்கள் புங்கை!

முழுதாக வாசித்துவிட்டு கருத்துப்போட மீண்டும் வருகின்றேன்! :)

ம்ம்ம்... ஏதோ ஒரு மாதிரி, ஒரு குமரைக் கரை ஏத்திற அளவுக்குக் கஸ்டப்பட்டுக் கதையை முடிச்சிருக்கிறன் !

 

நன்றிகள், கவிதையே! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா சந்திரனுக்கு மட்டுமா அப்படி புத்தனுக்கும் அப்படித்தான்......ஒருகாலத்தில் பாவடை தாவனி இப்ப ஜீண்ஸ் பான்ட்........மிகுதியையும் தொடருங்கோ

 நன்றிகள், புத்தன்!

 

எனக்கும் இப்போதெல்லாம் மேற்கத்தைய உடைகள் தான் பிடிக்கிறது!

 

ஒரு பாயை விரிச்சுப் படுக்கிறதிலும் பார்க்க, கட்டில்ல நேர விழுகிறது வசதி மாதிரிக்கிடக்கு! :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.