Jump to content

நவராத்திரி விரதமும் அதன் மகிமையும்

Recommended Posts

அலைமகள்,

உங்கள் மகளை இந்த தளத்திற்க்கு செல்ல வையுங்கள்:

www.hindukidsworld.org

நன்றி நாதமுனி! இந்த தளத்தையும் மகள் வாசிக்கிறவள்.

Link to comment
Share on other sites

சைவமதனோ இல்லையேல் இந்துமதமோ இப்படித்தான் வாழ வேண்டுமென்று வற்புறுத்தியதேயில்லை. மனித ஒழுக்கத்திற்கு வாழ்க்கைக்கு தேவையானதை புராணங்கள்,தேவாரங்கள்,இதிகாச கதைகள் மூலம் நல்லதுகெட்டதை சொல்ல விளைந்தார்களே தவிர மனிதர்களை கட்டுப்படுத்தவேயில்லை. ஞாயிறு,வெள்ளிகளில் சமூகமளிக்கா விட்டால் ஆளனுப்பி விசாரிக்குமளவிற்கு இந்தமதம் என்றுமேயிருந்ததில்லை.
 
ஜெர்மனியில் ஒரு பிரபலமான கட்சி அதுவும் ஆட்சியில் அமர்ந்தகட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய பிரச்சாரத்தில் ஒன்று:-  வாரத்தில் ஒருநாள் மச்சம்மாமிசங்களை பகிஸ்கரிப்போம்.
 
 கோபுரத்தின் அழகை கிட்ட நிண்டு பார்த்தால் தெரியாது.....அதின்ரை அழகு தூரத்தை நிண்டு பார்த்தால்த்தான் தெரியும்....அது போலை......எங்கடை சமயத்தின்ரை நல்ல விசயங்கள் வெளிநாட்டவருக்கு தெரிஞ்ச அளவுக்கு எங்கடை சனத்துக்கு பெரிசாய் தெரியாது. ஒத்துக்கொள்ள வேண்டிய விசயம்.
 
டாக்குத்தர்மாரே  மாமிசங்களை  சாப்பிடாதேங்கோ எண்டு சொல்லீனம்.....மரக்கறிதான் பக்கவிளைவுகள் விக்கனமில்லையயெண்டு சொல்லீனம். இரவிலை சாப்பிடாமல் நித்திரை கொண்டால் ஒரு வருத்தமும் அண்டாது எண்டும் சொல்லீனம்.....இதெல்லாம் படிப்பறிவில்லாதகாலத்திலை மதம் மூலமாய் சொல்லியே விட்டினம்.
 
மாட்டுக்கு மாடு சொன்னா கேக்காது....மணிகட்டின மாடு சொன்னால்த்தான் கேக்குமாம்.

அருமையான வரிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களாக இருக்கையில் , அவள், சுண்டல், பொங்கல் எல்லாம் ஒரு இனிமையான அனுபவம்.

அது அது அந்த அந்த வயதில் செய்ய வேண்டும். வளர்ந்த பின் வேறு பிரச்சனைகள், பகுத்தறிவுகள்: நம்பிக்கை இருக்கும், போகும்.

எனது கவலை எல்லாம், நமது மக்களின் ஆன்மிக நம்பிக்கைகளை காசாக்கும், கோவில்கள், இந்த குழந்தைகளின், சமய அறிவூட்டல், ஆன்மிக தேவைகளுக்காக என்ன செய்கின்றன என்பதே ஆகும்..

இறுதியில், எதிர்காலத்தில், பராமரிப்பார் இன்றி இந்த கோவில்கள் இழுத்து மூடப்படுமோ?

* அதை நினைச்சு கவலைப்படாதேங்கோ..........இப்ப இருக்கிற இளந்தாரி ஐயர்மார் தங்கடை பத்துவயது  பிள்ளைக்கும் பூணூல் போட்டு அழகுபாத்திட்டினம்.....இப்பவே திருவிழாக்கள் பெரிய பூசையளிலை எல்லாம் சின்ன ஐயர்மார் வெள்ளோட்டம் விட வெளிக்கிட்டினம்.....மூலஸ்தானத்திலை பெரிய ஐய்யருக்கு பிஸியெண்டால்...........அந்தநேரம் வைரவருக்கு அர்ச்சனை செய்யிறவைக்கு சிமோல் ஐயர் எப்பவும் மணியோடை ரெடி. :D
 
 புலம்பெயர் நாடுகளில் ஐயர்மார் தொழிலை விருத்தி செய்துவிட்டார்கள் :icon_idea: ....  ஆனால் சிகைத்தொழில்தெரிந்தவர்கள் தூரம் போய்விட்டார்களாம். இது எப்பிடியிருக்கு???
Link to comment
Share on other sites

சைவமதனோ இல்லையேல் இந்துமதமோ இப்படித்தான் வாழ வேண்டுமென்று வற்புறுத்தியதேயில்லை. மனித ஒழுக்கத்திற்கு வாழ்க்கைக்கு தேவையானதை புராணங்கள்,தேவாரங்கள்,இதிகாச கதைகள் மூலம் நல்லதுகெட்டதை சொல்ல விளைந்தார்களே தவிர மனிதர்களை கட்டுப்படுத்தவேயில்லை. ஞாயிறு,வெள்ளிகளில் சமூகமளிக்கா விட்டால் ஆளனுப்பி விசாரிக்குமளவிற்கு இந்தமதம் என்றுமேயிருந்ததில்லை.
 
ஜெர்மனியில் ஒரு பிரபலமான கட்சி அதுவும் ஆட்சியில் அமர்ந்தகட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய பிரச்சாரத்தில் ஒன்று:-  வாரத்தில் ஒருநாள் மச்சம்மாமிசங்களை பகிஸ்கரிப்போம்.
 
 கோபுரத்தின் அழகை கிட்ட நிண்டு பார்த்தால் தெரியாது.....அதின்ரை அழகு தூரத்தை நிண்டு பார்த்தால்த்தான் தெரியும்....அது போலை......எங்கடை சமயத்தின்ரை நல்ல விசயங்கள் வெளிநாட்டவருக்கு தெரிஞ்ச அளவுக்கு எங்கடை சனத்துக்கு பெரிசாய் தெரியாது. ஒத்துக்கொள்ள வேண்டிய விசயம்.
 
டாக்குத்தர்மாரே  மாமிசங்களை  சாப்பிடாதேங்கோ எண்டு சொல்லீனம்.....மரக்கறிதான் பக்கவிளைவுகள் விக்கனமில்லையயெண்டு சொல்லீனம். இரவிலை சாப்பிடாமல் நித்திரை கொண்டால் ஒரு வருத்தமும் அண்டாது எண்டும் சொல்லீனம்.....இதெல்லாம் படிப்பறிவில்லாதகாலத்திலை மதம் மூலமாய் சொல்லியே விட்டினம்.
 
மாட்டுக்கு மாடு சொன்னா கேக்காது....மணிகட்டின மாடு சொன்னால்த்தான் கேக்குமாம்.

கு.சா அண்ணை,

மச்ச மாமிசங்களை தவிர்த்து ஆரோக்கியமாக இருப்பதற்குத் தான் விரதங்களும் பூசைகளும் நாங்கள் செய்கின்றோம் என்ற விடயத்தினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு விரதத்தின் பின்னும் மனிதனின் ஆசைகளை நிறைவேற்ற செய்யும் கோரிக்கைகளும் ஆர்வங்களும் தான் நிற்கின்றன.  அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு வழிமுறையாக கடவுளுடன் செய்யும் ஒரு டீலிங்காகத்தான் எம் சமூகத்தில் விரதங்கள் அன்று தொட்டு இன்றுவரைக்கும் இருக்கின்றன. அத்துடன் இந்து சமயத்தில் புலால் மறுப்பு வந்தது ஆரியரின் வருகைக்கு பின்பு தான். எம் குல தெய்வங்கள் மச்சம் சாப்பிட்டு, மது குடித்து அருள் பாலிக்கும் ஊர்க் கடவுள்களாகத்தான் வரலாற்றி இருந்து வந்துள்ளனர்.

எந்த டாக்குத்தர்மாரும்  மாமிசங்களை சாப்பிட வேண்டாம் என்று சொல்வதில்லை. அப்படிச் சொல்பவர் டாக்குத்தரும் இல்லை. நல்ல மருத்துவர் சொல்வது, மாசங்களை உண்பதுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காது மரக்கறி, பச்சை இலை வகைககளையும் உணவில் சேருங்கள் என்றுதான். இன்றைய உணவு முறைகளில் சிவப்பு இறைச்சி வகைகளை அதிகம் உள்ளெடுக்கும் சூழல் இருப்பதால் சமப்படுத்தப்பட்ட உணவு முறையை பரிந்துரைக்கின்றனர். நான் வாரத்தில் இரண்டு நாட்களாவது வெறும் பச்சை இலைகளையும் பழங்களையும் கொண்ட சலட் (Salad) உணவினை மதியத்துக்கும் இரவுக்கும் உண்டு வருபவன்.

எம் பெண்கள் பொதுவாக 45 வயதினை தாண்டியவுடன் நோஞ்சானாக போய் இருப்பதை பல தடவை கண்டுள்ளேன். ஆண்களைப் போன்று வியாதிகள் அவர்களுக்கு வராவிடினும் உடல் ரீதியில் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது தன் குடும்பமும், கணவரும் நல்லா இருக்க வேண்டும் என்று பிடிக்கும் ஆயிரத்தெட்டு விரதங்களால் தான் என்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை,

எம் பெண்கள் பொதுவாக 45 வயதினை தாண்டியவுடன் நோஞ்சானாக போய் இருப்பதை பல தடவை கண்டுள்ளேன். ஆண்களைப் போன்று வியாதிகள் அவர்களுக்கு வராவிடினும் உடல் ரீதியில் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது தன் குடும்பமும், கணவரும் நல்லா இருக்க வேண்டும் என்று பிடிக்கும் ஆயிரத்தெட்டு விரதங்களால் தான் என்று..

இதுக்குள்ளை பிள்ளை பெத்தெடுக்கிற கணக்கு ஏன் வரேல்லை? பிள்ளையளை பிளாஸ்ரிக் பாக்கிலை எங்கையோயிருந்து வாங்கிக்கொண்டு வாறியளாக்கும்? பிள்ளை பெத்தவளுக்குத்தான் தெரியும் அதின்ரை பாரமும் தாக்கமும். தம்பியர் தப்பிக்கிறதுக்கு மனுசியின்ரை விரதம் கை குடுக்குது.

Link to comment
Share on other sites

அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு வழிமுறையாக கடவுளுடன் செய்யும் ஒரு டீலிங்காகத்தான் எம் சமூகத்தில் விரதங்கள் அன்று தொட்டு இன்றுவரைக்கும் இருக்கின்றன. அத்துடன் இந்து சமயத்தில் புலால் மறுப்பு வந்தது ஆரியரின் வருகைக்கு பின்பு தான். எம் குல தெய்வங்கள் மச்சம் சாப்பிட்டு, மது குடித்து அருள் பாலிக்கும் ஊர்க் கடவுள்களாகத்தான் வரலாற்றி இருந்து வந்துள்ளனர்.

இதை நான் இன்றுதான் படிக்கிறேன். ஆனால் இதனை நிழலி எங்கு படித்திருந்தார் என்பது தெரியாது. கந்த ஷஷ்டி என்பது முருகனே விரதம் இருக்கும் நாள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

* அதை நினைச்சு கவலைப்படாதேங்கோ..........இப்ப இருக்கிற இளந்தாரி ஐயர்மார் தங்கடை பத்துவயது  பிள்ளைக்கும் பூணூல் போட்டு அழகுபாத்திட்டினம்.....இப்பவே திருவிழாக்கள் பெரிய பூசையளிலை எல்லாம் சின்ன ஐயர்மார் வெள்ளோட்டம் விட வெளிக்கிட்டினம்.....மூலஸ்தானத்திலை பெரிய ஐய்யருக்கு பிஸியெண்டால்...........அந்தநேரம் வைரவருக்கு அர்ச்சனை செய்யிறவைக்கு சிமோல் ஐயர் எப்பவும் மணியோடை ரெடி. :D
 
 புலம்பெயர் நாடுகளில் ஐயர்மார் தொழிலை விருத்தி செய்துவிட்டார்கள் :icon_idea: ....  ஆனால் சிகைத்தொழில்தெரிந்தவர்கள் தூரம் போய்விட்டார்களாம். இது எப்பிடியிருக்கு???

நான் சொல்ல வந்தது அது அல்ல!
 
கோவிலுக்கு கும்பிட ஆக்கள் வந்தால் தானே, வருமானமும், ஐயரின் பூசையும்.
 
பிள்ளைகளுக்கு, சமய அறிவு இல்லாவிடில் எப்படி கோவிலுக்கு போகும்?
 
ஐயர் கொட்டாவி விட்டுப் போட்டு, கோவிலை இழுத்துப் பூட்ட வேண்டியது தான்.

உங்க லண்டனில, முக்கால்வாசிக் கோவில்கள், நடை பெறுவது இழுத்துப் பூட்டப்படிருந்த வேறு மத வழிபாட்டிடங்களிள் தான்.

இதுவே இந்த கோவில்களுக்கும் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டில் இன்று ஓரா மீன் கறியும், சூவாப்பாரை மீன் பொரியலும். சரஸ்வதி பூசையில் இருந்து எதுவும் செய்வது இல்லை. ஆனாலும் பிள்ளைகள் தாம் கண்டிப்பாக படிப்பார்கள் என்று நம்புகின்றனர். எந்தவித ஆதாரமில்லாத இப்படியான விரதங்கள், பூசைகளை விட அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுப்பதுதான் சிறந்த விடயம் என்று நம்புகின்றேன்.

இருக்க, ஒவ்வொரு வீடுகளிலும் சரஸ்வதி பூசை செய்த ஈழத் தமிழரின் தாயகத்தில் தான் ஆயிரக்கணக்கான பாடசாலைகள் அழிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும், கல்வி வசதிகள் மிக மோசமாக சிதைக்கப்பட்டும் கல்வி அறிவு வீதத்தில் மிகவும் மோசமான நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர். சரஸ்வதியும் உதவவில்லை, அழிவுகளில் இருந்து காப்பாற்ற துர்க்கையும் துணியவில்லை. வெறுமனே புலம்பெயர்ந்தவர்களுடன் மட்டும் லக்ஷ்மி உறவு வைத்து இருக்கின்றார்.

நிழலி,
 
உங்கள் பகுத்தறிவுக் கருத்துகளை, குழந்தைகள் மீது, அதுவும், மச்சம் சாப்பிட்டோம் என்று statement விடும் அளவுக்கு வீம்பாக, திணிக்காதீர்கள்.

ஒவ்வொருவருக்கும் ஆன்மிக தேவை உள்ளது. அதை நீங்கள், மறுத்தால், தமது கருத்துகளை திணிப்பதற்க்கு வெளியில் பலர் உள்ளனர். இப்படி இருந்த பலரின் பிள்ளைகள், வேறு நம்பிக்கைகளினால் கவரப் பட்டு உள்ளனர். அப்போது உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா, நிலை தான்.
 
கனடாவில் இது அதிகமே. பிரான்சில், வேறு மதவாதிகளிடம் சிக்கி, அது குறித்து கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த சொந்த நிறை மாத அக்காவை, குத்தி கொலை செய்த தம்பியைனையும் கேள்விப் பட்டு உள்ளோமே.
 
இங்கிலாந்து GCSE பரீட்சையில் A* ஒன்றை இலகுவாகப் பெற, Religious Education பாடத்தில், எம்மவர்களே, இஸ்லாமிய பாடத்தினை தெரிவு செய்கின்றனர். ஏனெனில், கேள்வியும் அதற்கான பதிலும், இந்து மத கேள்விகள் போல் இல்லாது, ஒரு வரி தானாம். இலகுவானது என்கின்றனர்.

அப்பர் விலாவாரியாக பகுத்தறிவு பேச, பிள்ளை வேறு மதம் படித்து A* எடுக்கும் சில நிலைப்பாடு குறித்து என்ன சொல்ல முடியும்?

முள்ளி வாய்காலில் தெய்வம் உதவவில்லை என்கிறீர்கள். அதே தெய்வம் தான், போத்துகேயரின் ஆலய அழிப்பினையும்,சங்கிலியனின் வீழ்ச்சியையும், ஆங்கிலேயரிடம் இருந்து பண்டார வன்னியனையும், கட்டப் பொம்மனையும் காக்கவில்லையே!

அதே போத்துக்கேயர்கள், தமது சொந்த நாட்டினை, இழந்து, வரலாறில் சில காலம், கடல் கடந்த போர்த்துகேய முடி அரசு என, பிரேசில் காலனித்துவ பிரதேசத்தினை பிரகடனம் செய்து இருந்தார்கள். 

சில விடயங்கள் நடந்தால் தான், மனித வரலாறு அடுத்த நகர்வுக்கு தயாராகும் என்பது உலக நியதி.  முள்ளிவாய்கால் அவ்வாறான ஒன்று தான்.

ஹிட்லரின் யூத அழிப்பினையும் இதே முறையில் பார்க்கலாம். 14ம் நூற்றாண்டின் ஐரோப்பிய கொள்ளை நோய் பல மில்லியன் மக்களை பலி கொண்டதை, 18ம் நூற்றாண்டின், ஐரிஷ் பஞ்ச அவலத்தினை, சுனாமி அழிவினையும், முதலாம், இரண்டாம் யுத்தத்தினையும், இறைவன் தடுக்கவில்லை என சொல்ல முடியுமா?

அனுராதபுர, பொலநறுவை படையெடுப்பில் சோழர்களும் சிங்கள மக்கள் மீது பெரும் அழிவுகளை செய்தார்கள் என சொல்வோரும் உள்ளனர்.

இவை மனித வரலாறில் சகயம் போல் தெரிகிறது. 

மூன்று காலனித்துவ வாதிகளிடமும், குறிப்பாகக போர்த்துக்கேயரிடம், பாதுகாத்து, சமயத்தினை எம்மிடம் தந்துள்ள எமது முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.
 
கடவுளிடம் அதிகமாக எதிர்பார்ப்பதும், கிடைக்காவிடில், பகுத்தறிவு பேசுவதும்......

'சில' மனித இயல்பு. (உங்களை தனிப் பட்ட ரீதியில் சொல்ல வில்லை)

நல்லது நடந்தாலும் நன்றி சொல்ல கோவிலுக்குப் போகிறோம், துன்பம் வந்தாலும் அதே கோவிலுக்கு போகிறோம்.

இந்த வழி இல்லாவிடில் இருப்பது, தண்ணிப் போத்தலும், போதைப் பொருட்களும் தான்.

எமது அடுத்த தலைமுறை அவ்வழியே செல்வது ஏற்புடையதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.