Jump to content

கனடா கமலேஸ் சர்மா மீது கடும் தாக்குதல்...

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Canada says Indian diplomat acting as Sri Lanka's stooge

[TamilNet, Wednesday, 09 October 2013, 01:39 GMT]

Following Canadian Prime Minister, Stephen Harper's public announcement of his boycotting Commonwealth meeting in Sri Lanka after accusing Colombo of "intimidation and incarceration of political leaders and journalists, harassment of minorities, reported disappearances, and allegations of extra-judicial killings," Hugh Segal, Canada's special envoy to the Commonwealth, launched a direct assault on the authority of Commonwealth Secretary General Kamalesh Sharma accusing him of "acting as a shill [a stooge] for the Sri Lankan leadership, defending their every mistake," the British broadsheet the Guardian reported Tuesday.

Sharma_Front.jpg
Kamalesh Sharma, Commonwealth Secretary
 
Segal's remarks intensified the row over the Commonwealth's decision to host its biennial heads of state meeting in the Sri Lankan capital of Colombo next month.

Segal told the Guardian that Sharma, an Indian diplomat, had concealed crucial legal advice showing Rajapakse's sacking of the country's chief justice in January was "illegal, unconstitutional and a violation of international law." A spokesman for Sharma defended his position, saying "the advice was sought in confidence and it was not necessary for him to discuss it in public," according to the Guardian report.

Asserting that if Sri Lanka was not hosting the summit it would have faced suspension from the 53-country group months ago, Segal also told Toronto's Globe and Mail, "I went to Sri Lanka as a fact finder for our foreign minister in April of this year. I saw wonderful new highways and buildings in Colombo that would rival those in Toronto. I also saw the bullet holes above the sofa in the office of the editor of a Tamil language newspaper in Jaffna."

While India, the regional power, unwilling to expose Sri Lanka's complicity in the crime of the century in killing more than 70,000 Tamil civilians in Mu'l'livaaykaal in 2009, in its characteristic fashion, is delaying announcing its stand on attending the Commonwealth meeting.

Analysts in Delhi said that while Singh's attendance would anger India's substantial Tamil population and thus be a political risk for the Congress party, which is facing elections in spring, a significant boycott was unlikely, the Guardian wrote.

"India is very uncomfortable with that sort of thing," said Shyam Saran, a former foreign secretary. "Though the relationship with Sri Lanka is not as cosy as it could be and there are strong domestic dimensions, there is a general recognition in government that both the relationship and the meeting, are nonetheless important," the paper said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36731

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

http://www.theguardian.com/world/2013/oct/08/commonwealth-chief-stooge-sri-lanka-claims-canada

சர்மா இலங்கைக்கு காவடி தூக்கிறவர் என்று கனேடியப் பிரதிநிதி சொன்னதுக்குப் பதில் இல்லை.. :D பிரதமர்கள் மட்டத்தில்தான் நாங்கள் டீலிங் வைத்துக்கொள்வோம்..! :wub:

எல்லாம் நடந்து முடிந்த பின்னர்தான் விஜேநம்பியாரை நாடுகள் அவதானித்தன. அதன் பின்னர்தான் ரங்க்கூன் போக எதிர்ப்புக்காடின. அதன் பின்னர் ஒருநாள் தானும் பொதுக்காரியதரிசிக்கு போட்டிபோடிருக்க கூடிய நிலையை கெடுத்துவிட்டதாக உணர்ந்திருப்பார். 

இவர் தேவையில்லாமல் தமிழ்நாட்டையும் சீண்டாமல் இருக்க பார்க்கிறார். பொதுநலவாய ஆவணங்களை பதுக்கியது பற்றி பதில் அளிக்காமல் தவிர்க்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு மிகப் பெரியளவிலான அக்கிரமங்களைச் செய்த நாடு இந்தியா. இதில் இரண்டு கருத்திற்கு இடமில்லை. இருப்பினும் தற்போதய இக்கட்டான சூழ்நிலையில் ராஜதந்திர ரீதியில் நல்லுறவை பேண வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் உள்ளோம். அந்த ரீதியில் தமிழ் கூட்டமைப்பின் இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்கும் செயற்பாடு சரியானதே. நிச்சயம் தமிழ் மக்கள் அனைவரும் அதை வரவேற்க வேண்டும்.

அதேவேளை இந்தியாவை தலையில் தூக்கி கொண்டாடிக் கொண்டு மேற்கு நாடுகளை வெறுக்கும் மனப்பாங்கை வளர்க்க கூடாது. கனடாவின் பகிஷ்கரிப்பு நடவடிக்கையையும் நாம் சாதகமாகவே நோக்க வேண்டும். லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு புகலிடம் அளித்து அவர்களை கௌரவமாக தமது நாட்டில் வாழவைத்த கனடாவை இந்தியாவிற்காக கிண்டல் பண்ண வேண்டிய தேவை எமக்கில்லை. தஞ்சம் புகுந்த எமது மக்களை இந்தியர்கள் கேவலப்படுத்தியது போல் எந்த ஐரோப்பிய நாடும் கேவலப்படுத்தவில்லை என்பதையும் நினைவில் கொள்க. கல்வியைக்கூட தஞ்சம் புகுந்த மக்களுக்கு மறுத்த நாடு இந்தியா. ஐரோப்பிய நாடுகளோ உயர்கல்விக்கான உதவிப்பணத்தைக்கூட வழங்கி எமது பிள்ளைகளை ஊக்குவித்தன. கோசன் சே நன்றி மறந்து ஐரோப்பிய நாடுகளை கேவலம் இந்தியாவிற்கான நீங்கள் பரிகாசம் செய்வது தவறு. பெண்களை தெய்வமாக தாயாக பார்க்கிறோம் என்று பெரிதாக பீற்றிக்கொள்ளும் இந்தியாவில் பெண்கள் பகல் நேரத்தில் கூட தெருவில் பாதுகாப்பாக நடந்து போக முடியாது. நீங்கள் பரிகாசம் செய்யும் மேற்கு நாடுகளில் உங்கள் தங்கை அல்லது மனைவி இரவு 12 மணிக்கும் பாதுகாப்பாக வீடு வந்து செல்லகூடிய நிலை உண்டு.

அதுதுதுதுதுதுதுதுத

பச்சை  இல்லை ஐயா.....

***

நாங்களும் எல்லா இடமும் சுற்றிவிட்டுதான் வந்திருக்கின்றோம் . எமக்கு உதவி செய்த எந்த நாட்டையும் நாம் பரிகாசம் செய்ய கூடாது .இலங்கை தமிழர்களுக்கு ஆக கூடிய உதவி செய்த நாடு என்றால் இந்தியாதான் .மேற்குலகு மாதிரி அகதிகளுக்கு அள்ளி கொடுக்க இந்தியா ஒன்றும் பொருளாதாரத்தால் வளமான நாடுஇல்லை ஆனால் 83 இன கலவரத்துடன் தமிழ் நாடு வந்த அத்தனை பேரையும் அரவணைத்த நாடு .அத்துடன் இயக்கங்கள் அத்தனையும் பின் தளமாக இந்தியாவைத்தான் கொண்டிருந்தன .சிங்களவனுக்கு முதல் எதிரி என்றால் இந்தியாதான் .இந்த கால கட்டத்தில் கூட இலங்கை அரசிற்கு ஆயுதங்கள் அள்ளி வழங்கி கொண்டிருந்தது மேற்குலகம் .எங்களுக்கு தந்த ஒரு சிறிய உதவித்தொகை தான் எங்கள் கண்ணுக்கு தெரியுது ,அதற்கு தானே உண்மையில் ஓடி வந்தோம் .

இப்படி இருந்த இந்தியாவை  எமது அறியாமையால் ,எமது அரிச்சுவடி அரசியலால் அழித்தது  நாங்கள் தான் .இந்திய இராணுவத்துடன் சண்டை ,ராஜீவ் கொலை .இப்படி ஒன்றை மேற்குலகுடன் நாம் செய்திருந்தால் இதை விட கேவலமாக எமது நிலைமை போயிருக்கும் .

வெறும் சுயநல சிந்தனை ,அரசியல் தான்  எமக்கு தெரிந்தது .கனடா எம்மை அரவணைத்து இன்று எமக்காக கொமன்வெல்த் மகாநாட்டையும் பகஸ்கரிக்கின்றது ஆனால் நேற்றும் சனல் இரண்டில் (tvo) இல் ஒரு விபரணப்படம் பார்த்தேன் ,கனேடிய பூர்வீக குடிகளை பற்றியது .குடிக்க தண்ணீர் கூட அவர்களுக்கு இல்லை .

Link to comment
Share on other sites

சும்மா இங்க வந்து இந்திய அரச அதிகாரத்துக்குக் காவடி தூக்கினா அது எமக்கு எதாவது செய்யும் என்பதோ இல்லை கனடாவுக்குத் தூக்கினா எதாவது நடக்கும் என்று நினைப்பது தவறு.

அரசுகள் தமது சொந்த நலன்களின் அடிப்படையிலேயே இயங்குகின்றன.கனடேயரின் நலன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையைத் தழுவியும், கனேடிய அரசியலாளர்களின் தேர்தல் நலனிலும் தங்கி இருக்கிறது.அமெரிக்கா புலிகளை அழிக்கச் சொன்ன போது கனடா செய்தது,இப்போது சிறிலங்காவை மிரட்ட அமெரிக்கா கனடாவைப் பாவிக்கிறது. இது எமக்குச் சாதகமானது அதனை நாங்க்ல் பாவிக்க வேண்டும்.இதற்க்கு மேலும் ஊக்கம் கொடுக்க வேண்டும்.

இதனை இங்கிலாந்திலும் நாம் பாவிக்க வேண்டும்.தமிழர் அமைப்புக்கள் கனடா வெளியிட்டிருக்கும் கமலேஸ் சர்மா பற்றிய தகவலை முன் வைத்து கொமன் வெல்த் அலுவலகம் முன் கமலேஸ் சர்மாவை பதவி விலகச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். இதன் மூலம் அமெரிக்கா , இந்தியாவுக்கு எதிராக ஆடும் அட்டத்திற்கு நாம் ஆதரவு தர வேண்டும். தமிழ் நாட்டிலும் ஆர்ப்பட்டங்கள் நடாத்தப்பட வேண்டும்.

நலன்களின் அரசியலை எமக்குச் சாதகமாக மாற்ற நாம் தான் போராட வேண்டும்.காகம் இருக்கப் பனம் பழம் விழும் ,சம்பந்தன் சுழியர் என்பதெல்லாம் அரசியல் அறிவற்ற பார்வை. 

Link to comment
Share on other sites

நாங்கள் தான் கனடாவிற்கு ஓடி வந்துவிட்டோம் இலங்கை இப்பவும் இந்தியாவிற்கு அருகில் தான் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தான் கனடாவிற்கு ஓடி வந்துவிட்டோம் இலங்கை இப்பவும் இந்தியாவிற்கு அருகில் தான் இருக்கு .

இலங்கையை  தூக்கி கனடாவிற்கு அருகில் வைத்து விட்டால்?
பிரச்சனை முடிந்துவிடும்.
Link to comment
Share on other sites

இலங்கையை தூக்கி கனடாவிற்கு அருகில் வைத்து விட்டால்?

பிரச்சனை முடிந்துவிடும்.

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை  தூக்கி கனடாவிற்கு அருகில் வைத்து விட்டால்?
பிரச்சனை முடிந்துவிடும்.

சீ

பக்கத்து நாடுகளை முக்கியமாக

மாலைதீவை விட்டு நான் வரமாட்டேன் என்று  இலங்கை சொல்லாதா?? :lol:  :D

Link to comment
Share on other sites

இப்படி இருந்த இந்தியாவை  எமது அறியாமையால் ,எமது அரிச்சுவடி அரசியலால் அழித்தது  நாங்கள் தான் .இந்திய இராணுவத்துடன் சண்டை ,ராஜீவ் கொலை .இப்படி ஒன்றை மேற்குலகுடன் நாம் செய்திருந்தால் இதை விட கேவலமாக எமது நிலைமை போயிருக்கும் .

இலங்கை பிரச்சினையில் இராஜீவை இயக்கிய ஜே ஆர் ,

டீக்சிற் கொழும்பு வந்த போது பெரிய தொரு நவரத்தின கழுத்தணியை அவரின் மனைவிக்கு பரிசளித்தாராம் ஜே ஆர் ...

அதிகாரமே இல்லாத மாகானசபை விருப்பத்துக்கு மாறாக திணிக்க பட்டது விருப்பம் கேக்கப்படவில்லை கருத்துக்கள் மதிக்கப்படவில்லை ... புலிகளின் ஆயுதங்கள் களையப்பட்டு மற்ற இயக்கங்கள் ஆயுதங்கள் களையப்படாமல் உலாவரவிடப்பட்டனர் , வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் குடியேற்ற பட்டு கொண்டு இருந்தார்கள்...

உண்ணாவிரதம் இருந்த திலீபன் அண்ணாவின் குரல் மதிக்கப்படவில்லை , பொது மன்னிப்பு அளிக்கப்பட்ட புலிகள் கைது செய்யப்பட்டார்கள்...

இவை எல்லம் இந்திய அனுசரனையோடை நடந்தவை... இதுக்கும் மேலை என்ன நம்பிக்கையை தந்தது நம்பி நடக்க...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்சினையில் இராஜீவை இயக்கிய ஜே ஆர் ,

எண்டால் டீக்சிற் கொழும்பு வந்த போது பெரிய தொரு நவரத்தின கழுத்தணியை அவரின் மனைவிக்கு பரிசளித்தாராம் ஜே ஆர் ...

அதிகாரமே இல்லாத மாகானசபை விருப்பத்துக்கு மாறாக திணிக்க பட்டது விருப்பம் கேக்கப்படவில்லை கருத்துக்கள் மதிக்கப்படவில்லை ... புலிகளின் ஆயுதங்கள் களையப்பட்டு மற்ற இயக்கங்கள் ஆயுதங்கள் களையப்படாமல் உலாவரவிடப்பட்டனர் , வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் குடியேற்ற பட்டு கொண்டு இருந்தார்கள்...

உண்ணாவிரதம் இருந்த திலீபன் அண்ணாவின் குரல் மதிக்கப்படவில்லை , பொது மன்னிப்பு அளிக்கப்பட்ட புலிகள் கைது செய்யப்பட்டார்கள்...

இவை எல்லம் இந்திய அனுசரனையோடை நடந்தவை... இதுக்கும் மேலை என்ன நம்பிக்கையை தந்தது நம்பி நடக்க...??

இப்ப அர்ஜுன் அண்ணாவின் கருத்துக்குள் ஏன் நீங்கள் புலிகளை இழுக்குறீர்கள்?
அவர் புலிகளை பற்றி ஏதாவது எழுதி இருக்கிறாரா??
 
அவர் எழுதியது கடந்தகால அரசியல் நிலைமைகள்.
அதுதான் சுயலாபத்திற்கு என்று  போட்டிருக்கிறாரே....
புலிகளை விட பெரிய இயக்கமாக வர இதுதான் ஒரே வழி  என்றுதான் சர்மா (றோவின் அடியாள்) உமாவிற்கு மாலைதீவை காட்டினார். 
உமாவின் சுயநலம் புளொட் போராளிகளின் உயிரை பணயம் வைத்தார்.
 
பின்பு ராஜீவ் தாம்பாள தட்டிலே தமிழ் ஈழத்தை வைத்து கொண்டுவரும்போது. 
இந்திய ரவைகள் உடலை துளைக்கும் இன்பத்தை அனுபவிக்கும் சுய நலனிற்கு ஆகா 
புலிகள் அந்த தட்டை தட்டி விட்டது. எலோருக்கும் தெரிந்ததுதானே?? 
 
அவர் என்ன பொய்யா எழுதுகிறார்? எல்லோருக்கும் தெரிந்த விடய்த்தைதானே எழுதுகிறார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தொடர்ந்த்ஹும் உணர்சியின்ன்பால் பட்டே இதை அணுகிக்றீர்கள். எமக்கு அடைக்கலம் தந்த கனடா போன்ற நாடுகளை தூற்றி, அவலம் தந்த இந்தியா வை வாழ்த்தவில்லை நான்.

நான் சொல்லுறது தெற்க்காசியாவில இந்தியாதான் லோக்கல் ரவுடி.

நொர்வேயோ, கனடாவோ இலங்கையை நல்லா முறைப்பீனம் ஆனா இந்திய தலையிட்டால், பின்வாங்குவீனம்.

இப்ப கூட யூஎஸ் இன் கருத்தையே கனடா கொமென்வெல்த்தில் யூஎஸ் இலாதவிடத்து பிரதிபலிக்கிறது.

யூஎஸ் சிலதை கொழும்பில் இருந்து எதிர்பார்க்கிறது, இதற்க்கு இந்தியாவும் ஓகே சொல்லிவிட்ட்டது ( அடிக்கும் போல அடி, அழுமாப்போல அழுறேன்) இந்த திட்டத்தின் நாடகத்தின் ஒரு அங்கம்தான் கனடாவின் பாய்ச்சல்.

இது தெரியாம கனடாக்கு 2009 எத்தனை மக்களும் சாகும் போது வராதன்கரிசனை இப்போ வந்த்ஹது என்பது சிறுபில் ல்ஃஇதனமான நம்பிகை.

மக்கள் சாவதை தெரிந்த்ஹே வேடிக்கை பார்த்தவர் இப்போ ஏன் கத்தீனம்? யோசியுங்கள்.

Link to comment
Share on other sites

கோசான்.. கனடா இப்ப திடீரென்று கத்தவில்லை.. போர் முடிந்தவுடன் 2009 இல் இலங்கையைக் கண்டித்து ஐநாவில் தீர்மானத்தை முன்மொழிந்த நாடு கனடா.

Link to comment
Share on other sites

ஏன் போர் முடியும் வரை பொறுத்தவை?

அது பேச்சு கிடையாது.. கனடா திடீரென்று கத்துது என்கிற உங்கட வாதத்துக்கான பதில் அது.. :D நீங்கள் சொன்னது பிழை என்கிறதை முதல்ல ஒத்துக்கொள்ளுங்கோ.. பிறகு அடுத்த கேள்விக்குப் போகலாம்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா திடீரென்றுதான் தான் கத்தீனம். போரில் சாகும் போது கத்தேல்ல. 5 வருடமா சிறீலங்காவோட கூடிகுலாவாம அப்பயே பொதுநலவாயத்தில இருந்த்ஹு வெளிய போடச்சொல்லி இருக்கலாமே?

கொலை செய்வதை பாத்துகொண்டு இருந்த்ஹுட்டு 5 வருசத்தால வந்த்ஹு குத்த்துதே குடையுதே என்பத நீங்க வேணா நம்புங்கோ.

நாங்களும் யாரையும் நம்பவில்லை.. :D ஆனால் வரலாறு முக்கியமல்லவா?! :rolleyes:

ஹார்ப்பர் 2011 இலேயே சொல்லிவிட்டார் என்று அறிகிறேன். அதாவது இலங்கை முன்னேற்றத்தைக் காண்பிக்காவிட்டால் போகமாட்டேன் என்று. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லேக்க பாத்துகொண்டிருப்பம். கொண்ட பின், கொலை செய்தவனையே விசாரனை செய்ய சொல்லுவம், அவன் இல்லை எண்டா அவன் வீட்டில சாப்பிட பொல் மாட்டம். சுப்பர்.

Link to comment
Share on other sites

இலங்கையை  தூக்கி கனடாவிற்கு அருகில் வைத்து விட்டால்?
பிரச்சனை முடிந்துவிடும்.

இது கூட விளங்காமல் தான் புலிகளில் இருந்தவர்களின் அரசியல் நடக்குது .படிப்பித்தும் விளங்காது அடித்தும் விளங்காது .

சேரன் தொண்ணுறுகளில் எமது புவியியல் அமைப்பு பற்றி கவிதை எழுதிவிட்டார் .கிடைத்தால் இணைக்கின்றேன் .இலங்கையை இந்து சமுத்திரத்தில் இருந்து வெளியில் இழுத்தால் ஒழிய இல்லாவிடில் இந்தியன் சொல் கேட்டுத்தான் நாம் வாழவேண்டும் என்று .(இந்து சமுத்திரத்தில் ஆண் குறி போல துருத்திக்கொண்டு இருக்கும் இந்தியாவின் நுனியில் இருக்கும் இலங்கை என்று தொடங்குது ).

இதெல்லாம் விளங்க பள்ளிகூடம் போக வேண்டும் நாலு பாடம்  படிக்க வேண்டும் ஏன் அந்த கஷ்டம் சும்மா மாரி தவளை போல கத்தி கத்தி சாவது திறம் .

இலங்கை பிரச்சினையில் இராஜீவை இயக்கிய ஜே ஆர் ,

டீக்சிற் கொழும்பு வந்த போது பெரிய தொரு நவரத்தின கழுத்தணியை அவரின் மனைவிக்கு பரிசளித்தாராம் ஜே ஆர் ...

அதிகாரமே இல்லாத மாகானசபை விருப்பத்துக்கு மாறாக திணிக்க பட்டது விருப்பம் கேக்கப்படவில்லை கருத்துக்கள் மதிக்கப்படவில்லை ... புலிகளின் ஆயுதங்கள் களையப்பட்டு மற்ற இயக்கங்கள் ஆயுதங்கள் களையப்படாமல் உலாவரவிடப்பட்டனர் , வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் குடியேற்ற பட்டு கொண்டு இருந்தார்கள்...

உண்ணாவிரதம் இருந்த திலீபன் அண்ணாவின் குரல் மதிக்கப்படவில்லை , பொது மன்னிப்பு அளிக்கப்பட்ட புலிகள் கைது செய்யப்பட்டார்கள்...

இவை எல்லம் இந்திய அனுசரனையோடை நடந்தவை... இதுக்கும் மேலை என்ன நம்பிக்கையை தந்தது நம்பி நடக்க...??

மன்னிக்க வேண்டும் தயா ,உண்மையில் நடந்தது எதுவும் தெரியாமல் புலி போட்ட வட்டத்திற்குள் தான் இன்றும் நின்று எழுதுகின்றீர்கள் .தமிழர் அதை தாண்டி பல பல வருடங்கள் போய்விட்டார்கள் .

Link to comment
Share on other sites

புலிகள் என்ற வட்டத்திற்கு வெளியே வந்து தற்போதய யதார்த்த நிலையை கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும், என்ற அர்யுனின் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். நிச்சயமாக அர்யுன் தங்கள் கருத்து நியாயமானதே. ஏனென்றால் வரலாறு என்றுமே ஓரிடத்தில். நிற்பதில்லை. புலிகள் விடயத்தில். எமது தோல்வியை ஏற்றுக்கொண்டு புலிகள் இல்லாத புதிய அடுத்த கட்டத்தை நோக்கிய எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அர்யுனின் புலி எதிர்ப்பு வக்கிரம் மட்டும் என்றுமே மாறாது . கருத்து எழுத பேனா எடுத்துவிட்டால் புலி எதிர்ப்பு என்ற வக்கிர உணர்ச்சி எழுத்துகளையே அவர் உபயோகிப்பார். தீவிர புலி ஆதரவு கருத்து எழுதுபவர்களை தொடர்ந்த கருத்தாடல்கள் மூலம் யதார்த்த நிலையை உணர வைக்காமோ என்று என்னால் உறுதியாக கூறமுடியாவிட்டாலும் அர்யுன் என்ற நபரின் புலி எதிர்ப்பு வக்கிர சிந்தனையை மட்டும் எவராலும் மாற்ற முடியாது என்பதை உறுதியாக கூற முடியும். இந்த விடயத்தில் எவ்வளவு பணத்திற்கும் என்னால் பந்தயம் கட்ட முடியும்.

புலிகள் அழிப்பதை நோக்கமாக இந்திய படைகள் வரவில்லை தமிழ் மக்களின் விடிவுக்காகவே எனும் தொனியிலான உங்களின் கருத்து ஏற்க முடியவில்லை..

இந்தியாவின் நோக்கம் என்ன என்பதை பங்களாதேசில் செய்தவைகளை வைத்து புரிந்து கொள்ள முடியும்... பாக்கிஸ்தானில் இருந்து பங்களாதேசை பிரித்து தனிநாடாக்க இந்தியாவுக்கு கை கொடுத்த முக்திபாகினி போராளிகளுக்கும் முஜிபுள்ரகுமானுக்குமான நிலையையே இந்தியா ஈழத்தில் திட்டமிட்டு இருந்தது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் என்ற வட்டத்திற்கு வெளியே வந்து தற்போதய யதார்த்த நிலையை கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும், என்ற அர்யுனின் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். நிச்சயமாக அர்யுன் தங்கள் கருத்து நியாயமானதே. ஏனென்றால் வரலாறு என்றுமே ஓரிடத்தில். நிற்பதில்லை. புலிகள் விடயத்தில். எமது தோல்வியை ஏற்றுக்கொண்டு புலிகள் இல்லாத புதிய அடுத்த கட்டத்தை நோக்கிய எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அர்யுனின் புலி எதிர்ப்பு வக்கிரம் மட்டும் என்றுமே மாறாது . கருத்து எழுத பேனா எடுத்துவிட்டால் புலி எதிர்ப்பு என்ற வக்கிர உணர்ச்சி எழுத்துகளையே அவர் உபயோகிப்பார். தீவிர புலி ஆதரவு கருத்து எழுதுபவர்களை தொடர்ந்த கருத்தாடல்கள் மூலம் யதார்த்த நிலையை உணர வைக்காமோ என்று என்னால் உறுதியாக கூறமுடியாவிட்டாலும் அர்யுன் என்ற நபரின் புலி எதிர்ப்பு வக்கிர சிந்தனையை மட்டும் எவராலும் மாற்ற முடியாது என்பதை உறுதியாக கூற முடியும். இந்த விடயத்தில் எவ்வளவு பணத்திற்கும் என்னால் பந்தயம் கட்ட முடியும்.

புலிகள் போட்ட வட்டத்திற்குள்ள.. இங்கு யாரும் இல்லை. புலிகள் போட்ட வட்டத்தை சுருக்கி.. சுருக்கி.. சுருக்கி.. கடைசியில ஒண்டுமே மிஞ்ச இடமளிக்காத இன்றைய நகர்வுகளை தான் கண்டிக்கினம்..!

புலிகள் போட்ட வட்டத்தில் இருந்து ஒன்றில் பெருப்பிக்கனும் இல்ல.. சமாந்திரமாக அதற்கு நிகர்த்ததாக மக்கள் விரும்புகின்ற வடிவில்.... இன்னொரு வட்டம் போடனும். அதைவிட்டிட்டு.. உள்ளதையும் கெடுத்து மீண்டும்.. இந்திய -- சிங்கள சரணாகதி என்ற பழைய பாழடைந்த குறுகிய வட்டத்துக்குள் நுழைவதன் மூலம்.. எஞ்சப் போவது.. மையப் புள்ளியில் உள்ள கருந்துளை மட்டுமே..! அதற்குள் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக இழுத்துச் சென்று காணடிக்காமல் செய்வதை.. எவரும் சும்மா விடுப்புப் பார்க்கவோ.. அல்லது புலி எதிர்ப்புக் கக்கி வரவேற்கவோ மாட்டார்கள்..! இதனை வரவேற்க.. ஒட்டுக்குழுக்களால் மட்டும் தான் முடியும். :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.