யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
theeya

வலி சுமந்த பயணம்

Recommended Posts

valimai_sumantha_payanam_1_300x225.jpg

 

 

விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி

உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது…

ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து

உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது…

                                                                                            (விழியிரண்டும்……)

 

சுற்றிவர நரிக்கூட்டம் நடுவில் நாமோர் ஆட்டு மந்தை

வெட்டவெளிப் பூமியிலே வெறுங்கையாய் நடைப்பயணம்…

முள்வேலி முகாம் நோக்கி யாதொன்றும் பிழைபுரியாப்

பாவியரின் நடைப்பயணம்… பாவியரின் நடைப்பயணம்…

                                                                                               (விழியிரண்டும்……)

 

பூனைகளின் குகை நோக்கிச் சுண்டெலிகள் நாங்களிங்கே

ஏதிலியாய்ப்  பாவியராய் பயணிக்கும் நேரமிது…

வேறுதுணை யாருமின்றி வேறுவழி ஏதுமின்றி

மிச்சசொச்ச உசிரை நாங்கள் தக்க வைக்கும் பயணமிது…

                                                                                            (விழியிரண்டும்……)

 

பச்சை இளங்குருத்தை பாசமுள்ள கண்மணியை

வேள்வியில் பறிகொடுத்து போகின்ற பயணமிது…

கண்கள் சிந்தும் பூக்கள் தூவி… வலிகள் சுமந்து புது வழிகள் தேடி

வாய்கள் மூடி மௌனியாகி வாழ்தல் வேண்டி

கால்கள் போகும் பாதை நோக்கி நாங்கள் போகும் பயணமிது

                                                                                           (விழியிரண்டும்……)

- தியா -

 
 
இந்த பருவ http://www.panippookkal.com/ithazh/ ல் வந்த எனது படைப்பு 

 

Edited by theeya
  • Like 3

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் நன்றாக உள்ளது 

Share this post


Link to post
Share on other sites

கவிதை தற்போதைய நிலையை பிரதிபலிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். இறுதி பந்தியில் ஐந்து வரிகள் வந்து சிறிது குழப்புகின்றது. அடுத்த படைப்புகளில் கவனியுங்கள். பாராட்டுகள்.

Share this post


Link to post
Share on other sites

நன்று தொடருங்கள் தியா .

Share this post


Link to post
Share on other sites

கவிதை நன்றாக இருக்கிறது தொடருங்கள் தீயா

Share this post


Link to post
Share on other sites

தற்போதைய யதார்த்தத்தைப் பிரதிபலித்து நிற்கும் வரிகள்... பாராட்டுக்கள் தியா!

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கவிதைக்கு எனது மனந்திறந்த பாராட்டுக்கள் தியா தொடருங்கோ .

Share this post


Link to post
Share on other sites

சுற்றிவர நரிக்கூட்டம் நடுவில் நாமோர் ஆட்டு மந்தை

வெட்டவெளிப் பூமியிலே வெறுங்கையாய் நடைப்பயணம்…

முள்வேலி முகாம் நோக்கி யாதொன்றும் பிழைபுரியாப்

பாவியரின் நடைப்பயணம்… பாவியரின் நடைப்பயணம்…

 

நன்றாக இருக்கிறது

சம்பவங்களின்  கோர்வையாக

வரலாற்றின்  தமிழரின் பதிவுகளை  கொண்டு வரும் கவிதைக்கு நன்றிகள்

தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

 உங்கள் பின்நூட்டங்களிக்கு நன்றி. 

Share this post


Link to post
Share on other sites

ஒரு பாடல் வடிவில் கவிதையை அமைத்திருக்கின்றீர்கள், தீயா!

 

கவிதை நன்றாக இருக்கும் அதே வேளையில், அதன் கருப்பொருள் கண்ணீரைத் துப்புகின்றது!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு