Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 2

Recommended Posts

நீங்கள் ( இது பிந்திய வழமை நீ + கள்  = நீங்கள் )

( நீ + கள் ) அதாவது 'நானும் + குமாரசாமியரும்'. அப்படித்தானே! எப்படி ஒன்றுசேர முடியும்!. அந்தாள் மப்பிலை வாறதையும் நீங்கள் கவனிக்கிறதில்லை. பின்வாங்கிலை வைச்சு என்னைக் கும்மு கும்மு என்று கும்முறதையும் கவனிக்கிறதில்லை. அதைக்கண்டு பக்கத்திலை சுமேரியர் கண் கலங்குவதைக்கூட நீங்கள் கவனிக்கிறதில்லை. நான் சாது வாத்தியார். மிரண்டால் காடுகொள்ளாது. உங்க வீட்டுக்கு எங்க தோட்டத்துச் சுண்டக்காய் கூட இனி வராது. <_< 

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியில் வேற்று மொழிச் சொற்கள்

காலம் காலமாக தமிழ் மொழியில் பல வேற்று மொழிச் சொற்கள்
கலந்து வந்துள்ளன. மக்களின் குடியேற்றமும் குடியேற்றவாசிகளுடன்

சமயம் கலை மற்றும் அரசியல் ஆகிய தொடர்புகளாலும்

மக்கள் வேற்று மொழிச் சொற்களை உள்வாங்குகின்றனர்.

இவற்றைத் தவிர்க்க முடியாமல் இலக்கணவாதிகளும்

வேற்று மொழிச் சொற்களை தமிழ் இலக்கணத்திற்கேற்றவாறு

மாற்றி அமைத்து அவற்றையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆரியர்களின் ஆதிக்க காலத்தில் பரவிய வேற்றுமொழிச் சொற்கள்

ராமன் இராமன்
சீதா  சீதை
இலஷ்மணா இலக்குவன்
ராவணா  இராவணன்
விபீஷணா  விபீடணன்
ஹனுமான்  அனுமன்

என்பன ஆரியச் சொற்களும் அவற்றின் தமிழ்ச் சொற்களும் ஆகும்

போர்த்துக்கீசியச்  சொற்கள்
 
யன்னல்
சாவி
கிராம்பு
அலுமாரி
பாதிரி
 
பாரசீகச் சொற்கள்
 
ஜமீன்
சிபாரிசு
சிப்பாய்
சிப்பந்தி
சுமார்
பக்கிரி
மேசை
ரொக்கம்
 
அரேபியச் சொற்கள்
 
ஆசாமி
இலாகா
கஜானா
நகல்
நாசூக்
மாமூல்
வசூல்

இந்துஸ்தானிச்  சொற்கள்

அசல்
அந்தஸ்து
அபின்
உஷார்
குமாஸ்தா
குல்லா
சமக்காளம்
தபால்
தர்பார்
பஞ்சாயத்து
பங்களா
மாகாணம்
தொப்பி

வடமொழிச் சொற்கள்
 
சந்தோசம்
சந்தர்ப்பம்
சுகம்
துக்கம்
ஜலம்
சபா
சம்பாசணை
வசனம்
விரசம்
சமரசம்
கலியாணம்
ஸ்திரி
புருசன்
விவாகம்
சுபம்
பத்திரிகை

ஹிந்திச் சொற்கள்

இனாம்
சாமான்
லாயக்கு
சமாச்சாரம்

இத்தனை சொற்களையும் :wub:  வேற்றுமொழிச் சொற்கள் என உங்களால் நம்ப முடிகின்றதா?? :rolleyes:

நம்ப முடியாத அளவிற்கு இத்தனை சொற்களும் தமிழிலும் எங்கள் பேச்சிலும் ஊறிவிட்டன.
இவற்றைத் தடுக்க முடியாது. தவிர்க்கவும் முடியாது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியில் வேற்று மொழிச் சொற்கள்

இத்தனை சொற்களையும் :wub:  வேற்றுமொழிச் சொற்கள் என உங்களால் நம்ப முடிகின்றதா?? :rolleyes:

நம்ப முடியாத அளவிற்கு இத்தனை சொற்களும் தமிழிலும் எங்கள் பேச்சிலும் ஊறிவிட்டன.

இவற்றைத் தடுக்க முடியாது. தவிர்க்கவும் முடியாது.  :)

ஏன் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது வாத்தியார்????. நீங்கள் சொல்லித்தாறதைத்தானே மாணவர்கள் நாங்கள் கற்கின்றோம். அப்படி என்றால் உங்களால் விட முடியாது என்று சொல்லுங்கள். நீங்கள் திருந்தி, எமக்குச் சரியாக வழிகாட்டினால் நாம் வேற்றுமொழியை ஏன் பயன்படுத்துகிறோம்???

மிக்க நன்றி வாத்தியார்!

செங்கொடி.....  டவுட்டு கிளியரா இப்ப? :D

அலைமகள் கேட்ட உடன வாத்தியார் அந்தத் திரிக்கு ஓடிப்போய் விளக்கம் சொல்லிப்போட்டு வாரார். நான் இந்தத் திரியில கேட்ட கன கேள்வியளுக்கே வாத்தியார் விடை சொல்லேல்லை. ம் ........... :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது வாத்தியார்????. நீங்கள் சொல்லித்தாறதைத்தானே மாணவர்கள் நாங்கள் கற்கின்றோம். அப்படி என்றால் உங்களால் விட முடியாது என்று சொல்லுங்கள். நீங்கள் திருந்தி, எமக்குச் சரியாக வழிகாட்டினால் நாம் வேற்றுமொழியை ஏன் பயன்படுத்துகிறோம்???

அலைமகள் கேட்ட உடன வாத்தியார் அந்தத் திரிக்கு ஓடிப்போய் விளக்கம் சொல்லிப்போட்டு வாரார். நான் இந்தத் திரியில கேட்ட கன கேள்வியளுக்கே வாத்தியார் விடை சொல்லேல்லை. ம் ........... :D :D

முயற்சி செய்யலாம் முழுமையாக செயல்ப்படுத்த முடியாது. :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரைய்யா.... கன காலம் ஸ்கூலுக்கு வராமல் இருந்ததுக்கு... மன்னிக்கணும்.
அஜித்தின்ரை... புதுப் படம் வந்ததால், அவரின் கட் அவுட்டுக்கு, ப்பூமாலை கட்ட, போய் விட்டேன்.
சின்ன... ஒரு கேள்வி. "நடு சென்ரர்" வட மொழியா... தமிழ் மொழியா?

Link to comment
Share on other sites

ஏன் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது வாத்தியார்????. நீங்கள் சொல்லித்தாறதைத்தானே மாணவர்கள் நாங்கள் கற்கின்றோம். அப்படி என்றால் உங்களால் விட முடியாது என்று சொல்லுங்கள். நீங்கள் திருந்தி, எமக்குச் சரியாக வழிகாட்டினால் நாம் வேற்றுமொழியை ஏன் பயன்படுத்துகிறோம்???

அலைமகள் கேட்ட உடன வாத்தியார் அந்தத் திரிக்கு ஓடிப்போய் விளக்கம் சொல்லிப்போட்டு வாரார். நான் இந்தத் திரியில கேட்ட கன கேள்வியளுக்கே வாத்தியார் விடை சொல்லேல்லை. ம் ........... :D :D

சபாஸ் சரியான கேள்வி :D  :lol:  :lol:

இங்காலை வாத்தியாருக்கு பதில் சொல்லத்தெரியாமல் முழி பிதுங்குது. :blink:  அங்காலை சென்ரரை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் தமிழ் சிறிக்கு வேர்த்தொழுகுது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகு பெயர்
 
1.பொருளாகு பெயர் 

ஒரு முளுப்பொருளைக் குறிக்கும் சொல்
அப்பொருளினைக் குறிக்காமல் சில இடங்களில்

அந்தப் பொருளின் ஒரு பகுதியைக் குறிக்கும்.
அதாவது உண்மையான பொருளின் ஒரு உறுப்பை  மட்டும்

குறிப்பதாகி வருவதால் பொருளாகு  பெயர் எனப்படும்

உதாரணம்
தாமரை மலர்ந்தது.

தாமரை என்பது பல உறுப்புக்களைக் கொண்ட ஒரு முழுப்பொருள்
தாமரையில் கொடி,இலை,வேர்,பூ எனப்பல உறுப்புகள்(சினை) உள்ளன.

இங்கே தாமரை மலந்தது என்ற கூற்றில் தாமரையைக் குறிக்காமல்

அதன் பூவைக் குறித்தே தாமரை என்ற சொல் நிற்கின்றது.
அதேபோல வாழைக்கறி கத்தரி சாம்பார் என்பனவற்றில்  வாழை மற்றும் கத்தரி என்பன  அதன் காயை மட்டும் குறித்து  நிற்கின்றது.

2. இடவாகு பெயர்

ஒரு இடத்தின் பெயர் அந்த இடத்தைக் குறித்து வராமல்
அந்த இடத்துடன் சம்பந்தமான ஒரு பொருளைக் குறித்து வருவதை இடவாகு பெயர் என்பர்.

உதாரணம்
லண்டன் வென்றது என்பதில் லண்டன் என்பது அந்த இடத்தில் இருந்து விளையாடும்

ஒரு குழுவைக் குறிக்கும்
யாழ்ப்பாணம் வென்றது என்றாலும் இங்கே யாழ்ப்பாணத்தைக்  குறிக்கவில்லை

அவனை மந்திகைக்கு அனுப்ப வேண்டும் என்ற கூற்றில்
மந்திகை என்பது ஊரைக் குறிக்காமல் அங்கு இருக்கும் வைத்திய சாலையைக் குறிக்கின்றது.

3.காலவாகு பெயர்
 
ஒரு காலத்தின் பெயர் அக்காலத்தில் நடைபெறும் நிகழ்வினைக் குறிப்பதை

காலவாகு பெயர் என்பர்.

உதாரணம்
 
நான் காலையில் பங்கு கொள்கின்றேன்.
 
இங்கே காலையில் என்பது பல நிகழ்வுகளைக் குறிக்கலாம்
காலையில் நடக்கும் ஆலயப் பூசை அல்லது பாடசாலை வகுப்புக்கள்

அல்லது பரீட்சைகள் என்பனவற்றைக் குறித்து நிற்கலாம்

கார்த்திகை கைகளில் ஏந்துவோம்
என்ற கூற்றில் கார்த்திகை என்பது மாதத்தைக் குறிக்காமல்
கார்த்திகை மலரைக் குறித்து வருகின்றன.

4.சினையாகு பெயர்

அதாவது ஒரு பொருளின் உறுப்பைக் கூறி அந்த உறுப்பின் முழுப் 

பொருளையும் குறிப்பது சினையாகு பெயர் எனப்படும்.
 
உதாரணம்
 
தலைக்கு ஒரு கிலோ அரிசி இலவசம்
இங்கே தலை என்பது ஒரு மனிதனை குறிக்கின்றது.

இப்படியே
 
5.பண்பாகு பெயர்
6.தொழிலாகு பெயர்
7.எண்ணலளவை ஆகு பெயர்
8.அடுத்தலளவை ஆகு பெயர்
9.முகத்தலளவை ஆகு பெயர்
10.நீட்டலளவை ஆகு பெயர்
11சொல்லாகு பெயர்
12.தானியாகு பெயர்
13.கருவியாகு பெயர்
14.காரியவாகு பெயர்
15.கர்த்தாவாகு பெயர்
16.உவமையாகு பெயர்
17.இருமடியாகு பெயர்
18.மும்மடியாகு பெயர்
19.அடையெடுத்த ஆகு பெயர்

பல ஆகு பெயர்கள் உள்ளன
அவற்றைப் பின்னர் பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணம் - சொல்விளக்கம்
http://ta.wikipedia.org/s/17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
இலக்கணம் என்னும் சொல் இலக்கு+அண்+அம் என்னும் சொற்களின் கூட்டு.

இலக்கு என்பது இலங்குவது அதாவது துலங்குவது.

அண் என்பது அண்மை என்னும் நெருக்கத்தை உணர்த்தும்.
அண்ணன் என்னும் சொல்லோடு தொடர்புடையது.
இது வேளாண்மை, தாளாண்மை என்னும் சொற்களில் ‘ஆண்மை’ சேர்ந்திருப்பது போன்றது.
இலக்கணம் என்னும் சொல்லில் சேர்ந்திருக்கும் ‘அணம்’ (அண்+அம்) அண்மை (அண்+ம்=அண்ம்+ஐ) என்பதன் மற்றொரு வடிவம்.

‘அண்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றிய மற்றொரு பொருள் அணி. ஆடையணிகள் நமக்குத் தெரியும்.
மாந்தர் அணிந்துகொள்வது அணி.
மொழி அணிந்துகொள்வது அணம்.
மொழி இலக்காக, விளக்கமாக அணிந்துகொண்டிருப்பது இலக்கணம்.

இலக்கம் என்னும் தொல்காப்பியருக்கு முன்பிருந்தே தமிழ்மொழி வழக்கில் இருந்தது.
தொல்காப்பியர் இதனை ‘எல்லே இலக்கம்’ [1] என்று விளக்கும்போது பயன்படுத்தியுள்ளார்.
‘இலக்கம்’ என்னும் பொருளில் ‘எல்’ என்னும் இடைச்சொல் பயன்படும் என்பது அவர் கருத்து.

தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கம் என்னும் சொல் இலங்குதலைக் குறிக்கும்.
இலங்குதல் என்பது விளங்குதல்.
விளங்குவதும் விளங்கச் செய்வதும் விளக்கம்.
அதுபோல இலங்குவதும் இலங்கச் செய்வதும் இலக்கம்.

இலங்குமலை[2] இவங்குவளை [3] இலங்குமணி[4] இலங்குவாள் [5] இலங்குவன [6] போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பழமையான சொல்லாட்சிகளை எண்ணுவோம்.

இலக்கம் என்னும் தமிழ்ச்சொல் வேறு. லட்சியம் என்னும் வடமொழிச்சொல் வேறு. இலக்கம் என்னும் சொல்லுக்கு இலங்குதல் என்று பொருள். லட்சியம் என்னும் சொல்லுக்குக் குறிக்கோள் என்பது பொருள்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இனி ஆதித்த இளம்பிறையனாருக்கு வாத்தியாரின் விளக்கம்
சரியோ பிழையோ தெரியாது

ஒரேழுத்தொருமொழி - ஒரு எழுத்தால் உருவாகும் சொல்
ஈரெழுத்தொருமொழி - இரண்டு எழுத்துக்களால் உருவாகும் சொல்
இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழி - இவை இரண்டும் அல்லாமல்

பல எழுத்துக்களால்  உருவாகும் சொல்

உளப்பட மூன்றே மொழிநிலை -  உட்பட்ட சொற்களின் நிலை மூன்றாகும்
 தோன்றிய நெறியே -

சொல் எப்போதும் ஒன்பது எழுத்துக்களுக்குள்ளேயே அமையவேண்டும் என்பது  விதியாம்

ஓரெழுத்து ஒருமொழியும் தொடர்மொழியும்
என இரண்டு நிலைகளை மட்டும் குறிப்பிடாமல் தொல்காப்பியர்
ஈரெழுத்தொருமொழி எனவும் குறிப்பிடுவதற்குப் பல காரணங்களைக்

கூறுவார்கள் தொல்காப்பிய உரையாசிரியர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ தமிழ்ச் சொற்கள் ஒன்பதுக்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனவே வாத்தியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ தமிழ்ச் சொற்கள் ஒன்பதுக்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனவே வாத்தியார்

வழக்கிற்கு ஏற்றவாறு விதிவிலக்குகள் எப்போதும் உள்ளன,

தமிழிலும் ஒன்பது எழுத்துக்களுக்கு மேற்பட்ட எழுத்துக்களைக்

கொண்ட சொற்கள் இருக்கலாம்

உங்களுக்குத் தெரிந்த சொற்களைக் கூறுங்கள் சுமேரியர்

Link to comment
Share on other sites

வடமொழிச் சொற்கள் தமிழுக்கு அணிகலன் பூட்டி அலங்கரிக்கிறதா, அழகுபடுத்துகிறதா, அவலப்படுத்கிறதா, அழிக்கிறதா... வாத்தியார் போன்றோரின் ஆலோசனைகளையும் கேட்பதற்கு ஆவலாகஉள்ளது. இந்த ஆவல் என்போன்று பலரையும் பற்றியிருக்கலாம் எனவும் நம்புகின்றேன்.

இங்கு என்னால் முடிந்த வடமொழிச் சொற்களைக் கூகுளில் தேடி இணைத்துள்ளேன்.   

வடமொழிச் சொல்  -----  தமிழ்ச் சொல்   

அகங்காரம் ---------------------- செருக்கு

அக்கிரமம் ----------------------- முறைகேடு

அசலம் ---------------------------- உறுப்பு                                                                

அசூயை --------------------------- பொறாமை

அதிபர் ------------------------------ தலைவர்                                                                          

அதிருப்தி ------------------------- மனக்குறை

அதிருஷ்டம்  -------------------- ஆகூழ், தற்போது                                         

அத்தியாவசியம் --------------  இன்றியமையாதது

அநாவசியம் ---------------------  வேண்டாதது, தேவையற்றது            

அநேகம் --------------------------- பல

அந்தரங்கம்  ---------------------- மறைபொருள்                                              

அபகரி ------------------------------  பறி, கைப்பற்று

அபாயம் ---------------------------  இடர்                                                                    

அபிப்ராயம் ----------------------  கருத்து

அபிவிருத்தி  ---------------------  செழிப்பு                                                             

அபிஷேகம் ----------------------  திருமுழுக்கு

அபூர்வம் --------------------------  புதுமை, அருமை                                         

அமிசம் ----------------------------  கூறுபாடு

அயோக்கியன் -----------------  நேர்மையற்றவன்                        

அர்த்தநாரி -----------------------  உமைபாகன்

அர்த்த புஷ்டியுள்ள ---------  பொருள் செறிந்த                      

அர்த்தம் ---------------------------  பொருள்

அர்த்த ஜாமம் ----------------- நள்ளிரவு                                                         

அர்ப்பணம் -----------------------  படையல்

அலங்காரம் ---------------------  ஒப்பனை                                                           

அலட்சியம் --------------------- புறக்கணிப்பு

அவசரமாக --------------------- உடனடியாக, விரைவாக                         

அவசியம்  ------------------------  தேவை

அவஸ்தை --------------------- நிலை, தொல்லை                                        

அற்பமான ---------------------- கீழான, சிறிய

அற்புதம் ------------------------- புதுமை                                                                

அனுபவம் ---------------------- பட்டறிவு

அனுமதி ------------------------ இசைவு                                                                 

அனுபவி  ------------------------  நுகர்

அன்னியம்  ---------------------  அயல்

அக்ஷேபம்  ----------------------  மறுப்பு

ஆக்ஞை ------------------------ ஆணை, கட்டளை                                         

ஆச்சரியம் --------------------- வியப்பு                                                 

ஆசீர்வாதம்  ---------------------  வாழ்த்து

ஆட்சேபணை ------------------ தடை, மறுப்பு

ஆதி -------------------------------- முதல்                                                                   

ஆபத்து ---------------------------- இடர்

ஆமோதித்தல் ----------------- வழிமொழிதல்                                              

ஆயுதம் --------------------------- கருவி

ஆரம்பம் --------------------------  தொடக்கம்                                                       

ஆராதனை -----------------------  வழிபாடு

ஆரோக்கியம் ------------------- உடல்நலம்                                     

ஆலோசனை ------------------- அறிவுரை

ஆனந்தம் ------------------------- மகிழ்ச்சி

இங்கிதம் ------------------------ இனிமை                                                             

இருதயம்  ------------------------  உள்ளம்                                                                

இஷ்டம் -------------------------- விருப்பம்

ஈன ஜன்மம் ------------------- இழிந்த பிறப்பு                                              

ஈனஸ்வரம் -------------------- மெலிந்த ஓசை

உக்கிரமான -------------------- கடுமையான                                    

உதாசீனம் ----------------------- பொருட்படுத்தாமை

உத்தரவாதம் ------------------- பிணை, பொறுப்பு                                       

உத்தரவு -------------------------- கட்டளை

உபசாரம் ------------------------ முகமன் கூறல்

உபயோகம் --------------------- பயன்

உல்லாசம் ---------------------- களிப்பு                                                  

உற்சாகம் ------------------------ ஊக்கம்

ஐதீகம் ---------------------------- சடங்கு, நம்பிக்கை                                       

கர்ப்பக்கிருகம் ---------------- கருவறை                                          

கர்மம் ----------------------------- செயல்

கர்வம்  -----------------------------  செருக்கு

கலாச்சாரம் --------------------- பண்பாடு                                                           

கலாரசனை -------------------- கலைச்சுவை

கல்யாணம் --------------------- மணவினை, திருமணம்                          

கஷ்டம் --------------------------- தொல்லை, துன்பம்

கீதம் ------------------------------- பாட்டு, இசை                                                    

கீர்த்தி ----------------------------- புகழ்

கீர்த்தனை  ----------------------  பாமாலை, பாடல்                                          

கோஷம் ------------------------- ஒலி

கோஷ்டி  --------------------------  குழு

சகஜம்        ----------------------------  இயல்பு

சகலம் --------------------------- எல்லாம், அனைத்தும்                                 

சகஜம் ---------------------------- வழக்கம்

சகி --------------------------------- தோழி                                                                                     

சகோதரன்  ----------------------  உடன்பிறந்தவன்

சகோதரி ------------------------ உடன் பிறந்தவள்

சங்கடம் ------------------------ இக்கட்டு, தொல்லை                                     

சங்கதி --------------------------- செய்தி

சங்கீதம்  -------------------------  இன்னிசை

சங்கோஜம் -------------------- கூச்சம்                                                  

சதம் ------------------------------ நூறு

சதா ------------------------------- எப்பொழுதும்

சதி  --------------------------------- சூழ்ச்சி

சத்தம் ---------------------------- ஓசை, ஒலி

சபதம் ---------------------------- சூளுரை

சந்ததி  ----------------------------  மரபு

சந்தானம் ---------------------- மகப்பேறு

சந்தேகம் ----------------------  ஐயம்

சந்தோஷம் ------------------- மகிழ்ச்சி, மகிழ்வு

சம்சாரம் ----------------------- குடும்பம், மனைவி

சம்பந்தம் ---------------------- தொடர்பு

சம்பவம் ------------------------ நிகழ்ச்சி

சம்பாதி ------------------------- ஈட்டு, பொருளீட்டு

சம்பிரதாயம் ----------------- மரபு

சம்மதி ---------------------------  ஒப்புக்கொள்

சரணாகதி ---------------------- அடைக்கலம்

சரித்திரம் ----------------------- வரலாறு

சரீரம் ----------------------------- உடல்

சருமம் ---------------------------  தோல்

சர்வம் ---------------------------- எல்லாம்

சாகசம் --------------------------- துணிவு, பாசாங்கு

சாசுவதம் ----------------------- நிலை

சாதம் ------------------------------- சோறு

சாதாரணம் ---------------------- எளிமை, பொதுமை

சாதித்தல் ------------------------- நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்

சாந்தம் ---------------------------- அமைதி

சாயந்திரம் ----------------------- மாலை வேளை, அந்திப் பொழுது

சாராமிசம் ----------------------- பொருட்சுருக்கம்

சாவகாசம் ----------------------- விரைவின்மை

சாஸ்திரம் ----------------------- நூல்

சிகிச்சை -------------------------- மருத்துவம்

சித்தாந்தம் ----------------------- கொள்கை, முடிவு

சித்திரம் --------------------------- ஓவியம்

சிநேகிதம் ------------------------- நட்பு

சிம்மாசனம் --------------------- அரியணை

சிரத்தை -------------------------- அக்கறை, கருத்துடைமை

சிரமம் ----------------------------- தொல்லை

சின்னம் --------------------------- அடையாளம்

சீக்கிரமாக --------------------- விரைவாக, சுருக்காக

சுதந்திரம் ------------------------- உரிமை, விடுதலை

சுத்தமான ------------------------ தூய்மையான

சுபாவம் ---------------------------- இயல்பு

சுலபம் ------------------------------ எளிது

சுவாரஸ்யமான -------------- சுவையான

சேவை ----------------------------- பணி

சேனாதிபதி ---------------------- படைத்தலைவன்

சௌகர்யம் ---------------------- வசதி, நுகர்நலம்

சௌக்கியம் --------------------- நலம்

சேட்டை  -------------------------  குறும்பு

ஞாபகம்  --------------------------  நினைப்பு

தசம் --------------------------------- பத்து

தத்துவம் -------------------------- உண்மை

தம்பதியர் ------------------------- கணவன் மனைவி, இணையர்

தரிசனம் --------------------------- காட்சி

தருமம்  ---------------------------  அறம்

தர்க்கம் ----------------------------- வழக்கு

தர்க்க வாதம் ------------------- வழக்காடல்

தாபம் ------------------------------- வேட்கை

திகில் ------------------------------- அதிர்ச்சி

திருப்தி ----------------------------- நிறைவு

தினசரி ----------------------------- நாள்தோறும்

தினம் ------------------------------- நாள்

தீர்க்கதரிசி ---------------------- ஆவதறிவார்

துரதிருஷ்டம் ------------------ பேறின்மை

துரிதம் ----------------------------- விரைவு

துரோகம் ----------------------– வஞ்சனை, இரண்டகம்

துவம்சம் -------------------------- அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்

தேகம் ------------------------------- உடல்

தேசம் ------------------------------- நாடு

தைரியம் -------------------------- துணிவு

நட்சத்திரம் ----------------------- விண்மீன், நாள்மீன்

நமஸ்காரம் ---------------------- வணக்கம்

நர்த்தனம் ------------------------- ஆடல், நடனம்,கூத்து

நவீனம் ----------------------------- புதுமை

நவீன பாணி --------------------- புது முறை

நாசம் -------------------------------- அழிவு, வீண்

நாசூக்கு ----------------------------- நயம்

நாயகன் ----------------------------- தலைவன்

நாயகி -------------------------------- தலைவி

நிஜம் --------------------------------- உண்மை, மெய்

நஷ்டம்  ----------------------------  இழப்பு

நிசபதமான ----------------------- ஒலியற்ற, அமைதியான

நிச்சயம் ---------------------------- உறுதி

நிச்சயதார்த்தம் ----------------- மண உறுதி

நிதானம் ---------------------------- பதறாமை

நித்திய பூஜை ------------------- நாள் வழிபாடு

நிரூபி -------------------------------- மெய்ப்பி, நிறுவு

நிருவாகம் ------------------------- மேலாண்மை

நிதி ------------------------------------ பொருள்,செல்வம், பணம்

நீதி ---------------------------------- அறம், நெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை

பகிரங்கம் ------------------------- வெளிப்படை

பக்தன்  ----------------------------  அன்பன்

பஞ்சாட்சரன்---------------------- ஐந்தெழுத்து

பரவசம் ---------------------------- மெய்மறத்தல்

பராக்கிரமம் --------------------- வீரம்

பரம்பரை  ------------------------  தலைமுறை

பராமரி ----------------------------- காப்பாற்று , பேணு

பரிகாசம் -------------------------- இகழ்ச்சிச் சிரிப்பு

பரிசோதனை ------------------ ஆய்வு

பரிட்சை -------------------------- தேர்வு

பலவந்தமாக ------------------- வற்புறுத்தி

பலவீனம் ------------------------- மெலிவு, வலிமையின்மை

பலாத்காரம் --------------------- வன்முறை

பாணம் ---------------------------- அம்பு

பாணி ----------------------------- புது முறை

பாதம் ------------------------------ அடி

பாபம்  ------------------------------  தீவினை

பாரம் -------------------------------- சுமை

பால்யம் --------------------------- இளமை

பிம்பம் ------------------------------ நிழலுரு

பிரகாசம் -------------------------- ஒளி, பேரொளி

பிரகாரம் -------------------------- சுற்று

(அதன்)பிரகாரம் ------------- (அதன்)படி

பிரசங்கம் ------------------------- சொற்பொழிவு

பிரசுரம் ---------------------------- வெளியீடு

பிரச்சினை ----------------------- சிக்கல்

பிரதிநிதி --------------------------- சார்பாளர்

பிரதிபலித்தல் ------------------ எதிரியக்கம்

பிரதிபிம்பன் --------------------- எதிருரு

பிரத்தியோகம் ----------------- தனி

பிரபலம் --------------------------- புகழ்

பிரமாதமான ------------------- பெரிய

பிரமிப்பு --------------------------- திகைப்பு

பிரயோகி ------------------------- கையாளு

பிரயோசனம் ------------------- பயன்

பிரவாகம் ------------------------ பெருக்கு

பிரவேசம் ------------------------ நுழைவு, புகுதல், வருதல்

பிரார்த்தனை ------------------ தொழுகை,

பிரியம் --------------------------- விருப்பம்

பிரேமை ------------------------- அன்பு

பீடிகை ---------------------------- முன்னுரை

புண்ணியம் ---------------------- நல்வினை

புத்தி -------------------------------- அறிவு

புத்திரன் --------------------------- புதல்வன்

புனிதமான ----------------------- தூய

புஷ்பம் ----------------------------- மலர், பூ

புஜபலம் --------------------------- தோள்வன்மை

பூர்த்தி ------------------------------ நிறைவு

பூஜை ------------------------------- வழிபாடு

பூஷணம் ------------------------- அணிகலம்

போதனை ------------------------ கற்பித்தல்

மகான் ------------------------------ பெரியவர்

மகாயுத்தம் ------------------------பெரும்போர்

மத்தியஸ்தர் -------------------- உடன்படுத்துபவர்

மத்தியானம் --------------------- நண்பகல்

மந்திரி ------------------------------ அமைச்சர்

மல்யுத்தம் ------------------------ மற்போர்

மனசு -------------------------------- உள்ளம்

மனிதாபிமானம் --------------- மக்கட்பற்று

மானசீகம் -------------------------- கற்பனை

யந்திரம் ----------------------------- பொறி

யூகம் --------------------------------- உய்த்துணர்தல்

யூகி ----------------------------------- உய்த்துணர்

யோக்யதை ----------------------- தகுதி

ரசம் ----------------------------------- சாறு, சுவை

ரதம் ----------------------------------- தேர்

ரத சாரதி----------------------------- தேரோட்டி

ராச்சியம் ---------------------------- நாடு,மாநிலம்

ராணி --------------------------------- அரசி

ராத்திரி ------------------------------ இரவு

ராஜா ---------------------------------- மன்னன்

லட்சம் ------------------------------- நூறாயிரம்

லட்சணம் -------------------------- அழகு

லட்சியம் --------------------------- குறிக்கோள்

வதம் --------------------------------- அழித்தல்

வதனம் ----------------------------- முகம்

வம்சம் ------------------------------ கால்வழி

வஸ்திரம் --------------------------- துணி, ஆடை

வாஞ்சை ---------------------------- பற்று

வாதம் ------------------------------- வழக்காடல்

வாயு ---------------------------------- காற்று

விக்கிரகம் -------------------------- வழிபாட்டுருவம்

விசாரம் ----------------------------- கவலை

விசாலமான ---------------------- அகன்ற

விசித்திரம் ------------------------- வேடிக்கை

விஞ்ஞானம் ----------------------- அறிவியல்

விதானம் --------------------------- மேற்கட்டி

விநாடி ------------------------------- நொடி

வித்தியாசம் ---------------------- வேறுபாடு

விபூதி -------------------------------- திருநீறு , பெருமை

விமோசனம் ---------------------- விடுபடுதல்

வியாதி ------------------------------ நோய்

விரதம் ------------------------------ நோன்பு

விவாகம் --------------------------- திருமணம்

விவாதி -----------------------------  வழக்காடு

விஷயம் --------------------------- செய்தி

விஷேசம் -------------------------- சிறப்பு

வேகம் ------------------------------ விரைவு

வேதம் ------------------------------ மறை

வேதவிற்பனன்ர் -------------- மறைவல்லார்

வேதியர் --------------------------- மறையவர்

ஜனநாயகம் ---------------------- குடியாட்சி

ஜனம் -------------------------------- மக்கள்

ஜனனம் ----------------------------- பிறப்பு

ஜன்மம் ---------------------------- இழிந்தபிறப்பு

ஜாதகம்------------------------------ பிறப்புக் குறிப்பு

ஜாலம் ------------------------------ வேடிக்கை

ஜூரம் ------------------------------- காய்ச்சல்

ஜோதி ------------------------------- ஒளி

ஜோடி ------------------------------- இணை

ஜோடித்தல் ---------------------- அழகு செய்தல்

ஸந்ததி ---------------------------- கால்வழி

ஸமத்துவம் --------------------- ஒரு நிகர்

ஸமரசம் -------------------------- வேறுபாடின்மை

ஸமீபம் ---------------------------- அண்மை

ஸம்ஹாரம் --------------------- அழிவு

ஸோபை -------------------------- பொலிவு

ஸௌந்தர்யம் ----------------- பேரழகு

ஸ்தாபனம் ---------------------  நிறுவனம்

ஸ்தானம் ------------------------- இடம்

ஸ்ரீ  -----------------------------------  திரு

பாஞ்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் ஆரம்பித்துள்ள திரியை மூட வைக்கும் வேலை போல் உள்ளது. ஒருநாள் மாங்காய் கேட்டுத் தரவில்லை என்பதற்காக இப்படிச் செய்வதா பாஞ்ச்???? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்... கேள்விகளால் தான் தெளிவு பிறக்கும். :D

Link to comment
Share on other sites

பாஞ்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் ஆரம்பித்துள்ள திரியை மூட வைக்கும் வேலை போல் உள்ளது. ஒருநாள் மாங்காய் கேட்டுத் தரவில்லை என்பதற்காக இப்படிச் செய்வதா பாஞ்ச்???? :D

கோபம் வேண்டாம் சுமேரியர்!. :(  நான் இங்கு யாழ்கள குத்துவிளக்கில் உங்கள் திரிகளை மேலும் நன்றாக உறுட்டி வைத்து, ஊரும் மகிழ்ந்து வணங்க மங்கள ஒளியேற்றும் முயற்சியில்தான் இறங்கியுள்ளேன். நீங்கள் என்னடா என்றால்........????தாங்கமுடியல்ல. :(  :( 

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்...நன்றி... :)

ஆனால், இங்கு இருக்கும் சொற்களில் நிறைய தமிழ்ச் சொற்கள் உள்ளன...பல சொற்கள், தூய தமிழ்ச்சொற்களாக இல்லையென்றாலும், அவை திரிந்த தமிழ்ச் சொற்களாக(கொடுந்தமிழ்ச் சொற்கள்) இருக்கின்றன...

எடுத்துக்காட்டாக,

வேதம்

வேய் - மறைக்கும் தன்மை கொண்ட ஒன்று, உயரமாக வளரும் ஒருவகை மூங்கில், மறைக்கும் செயல்

வேய்>வேய்து(வேய்+து)>வேய்தம்(வேய்து+அம் - தமிழ்)>வேதம்(தமிழ், சமஸ்கிருதம்)

அதாவது,

வேய்தம் - ஒன்றை தன்னுள் மறைத்து வைத்திருப்பது

வேந்தன் எனும் சொல்லும் இதனடியில் உருவானது தான்

வேய்>வேய்து(வேய்+து)>வேய்ந்து(வேய்+ந்+து)>வேய்ந்தன்(வேய்ந்து+அன்)>வேந்தன்

வேய்ந்தன் - மறைப்பவன்(மக்களை மறைத்துக் காப்பவன்)

யந்திரம்

எந்திரம்>யந்திரம்>இயந்திரம்

அவை>ஸவை(ஸ்+அவை)>ஸபை(வ>ப மாற்றம்)>ஸபா>சபா

சலம்(சல சலவென ஒலி எழுப்புவது)>ஜலம்

தானம்>ஸ்தானம்>ஸ்தான்

இலக்கம்>இலட்சம்>லட்சம்>லக்ஷம்

இட்டம்>இஷ்டம்

கட்டம்>கஷ்டம்

கலாசாரம்(கலை+ஆசாரம்)>கலாச்சாரம்

மன்>மனம்(தமிழ்)>மனசு(சமஸ்கிருதம்)

ஊகம்>யூகம்

ஊகி>யூகி

தேம்>தேயம்>தேசம்

இலக்கணம்>இலக்ஷம்(லட்சணம்)>லக்ஷம்>லக்ஷண்

சாயுந்திரம்(சாயும்+திரம்)>சாயந்திரம்

கர்(கருமை நிறம்>செயலைக் குறிக்கும்)>கர்மம்(கர்+அம் - தமிழ்ச்சொல்)

தருமம்(தரு+அம் - தமிழ்ச் சொல்)

அகங்காரம்(அகம்+காரம் - தமிழ்ச்சொல்)

ஆதி(தமிழ்ச்சொல்)

கர்வம்(தமிழ்ச்சொல்)

.....

இன்னும் பல.

நம் தமிழ் மொழி சொல் வளம் மிகுந்தது...அதில் உள்ள சொற்களை நாமே வடசொற்கள்/பிறமொழிச்சொற்கள் என ஒதுக்கி வைத்துவிட்டால், வந்தவர்கள் நினைப்பதை(நம் மொழியை அழிப்பது...), நாமே நம்மை அறியாமல், நிறைவேற்றுவதைப் போல ஆகிவிடுமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், சொல்வளம் உள்ள மொழி என்று கூறும் நீங்களே எதற்கு வடமொழியையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் தமிழ் வேந்தன்?????

சாயுந்தரம் என்னும் சொல்லுக்கு அழகிய அந்திப் பொழுது என்னும் தமிழ் உள்ளதே \?????

கர்வம் தமிழ்ச் சொல் என்று யார் சொன்னது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்...நன்றி... :)

நம் தமிழ் மொழி சொல் வளம் மிகுந்தது...அதில் உள்ள சொற்களை நாமே வடசொற்கள்/பிறமொழிச்சொற்கள் என ஒதுக்கி வைத்துவிட்டால், வந்தவர்கள் நினைப்பதை(நம் மொழியை அழிப்பது...), நாமே நம்மை அறியாமல், நிறைவேற்றுவதைப் போல ஆகிவிடுமே...

தமிழ்வேந்தன் கூறியது போலத் தமிழ் மொழியில் இருக்கும் வேற்றுமொழிச் சொற்களை ஒதுக்கி வைக்க முடியாது.

காலம் காலமாக மக்களால் பேசப்பட்டு எழுதப்பட்டு வரும் சொற்களை இது வேற்றுமொழிச் சொல் இதனைப் பயன்படுத்தாதே எனக் கூறினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

தூய தமிழ்ச் சொற்களையும் வேற்று மொழியில் இருந்து வந்து கலந்த தமிழ்ச் சொற்களையும் நாம் அறிந்து வைத்திருத்தல் அவசியம். தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே பாவிக்க வேண்டும் என்பது அபத்தம்.

இலக்கணவாதிகளெ இதற்காகப் போராடித் தோல்வி கண்ட பின்னரே வேற்றுமொழிச் சொற்களையும் தமிழ் இலக்கணத்திற்கேற்றவாறு மாற்றி அமைத்து அவற்றையும் தமிழ் மொழிச் சொற்கள் என ஏற்றுக் கொண்டனர்.

ஆகவே இன்று பாவனையில் உள்ள அனைத்துச் சொற்களும் தமிழ்மொழிச் சொற்களே எனவும் வாதாடலாம் :D:rolleyes: 

Link to comment
Share on other sites

தமிழ், சொல்வளம் உள்ள மொழி என்று கூறும் நீங்களே எதற்கு வடமொழியையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் தமிழ் வேந்தன்?????

நம் தமிழ் மொழி சொல் வளம் மிகுந்தது...அதில் உள்ள சொற்களை நாமே வடசொற்கள்/பிறமொழிச்சொற்கள் என ஒதுக்கி வைத்துவிட்டால், வந்தவர்கள் நினைப்பதை(நம் மொழியை அழிப்பது...), நாமே நம்மை அறியாமல், நிறைவேற்றுவதைப் போல ஆகிவிடுமே...

சுமேரியர் அவர்களே, மேலே உள்ள என் கூற்றில், நான் கூறவந்தது என்னவென்றால், தமிழ் மொழியில் நாம் இழக்கும் ஒவ்வொரு சொல்லிற்கும், அச்சொல்லை ஒட்டிய நம் வரலாறையும் சேர்த்து நாம் இழப்போம்(எடுத்துக்காட்டு: கல், கல்வி, கற்பு, முதலியன)...நான் வடசொற்களை பயன்படுத்தவேண்டாம் எனக் கூறவில்லை...ஆனால், செந்தமிழ்ச்சொற்களை நாமே பிறமொழிச் சொற்கள் என ஒதுக்கிவிடக்கூடாது எனக் கூறுகிறேன்...அப்படிச் செந்தமிழ்ச் சொற்களை நாம் பிரித்தறிந்தால், நமக்கு ஒரு உண்மை தெரியவரும்...அதுதான், வடமொழியில் உள்ள சொற்கள் பெரும்பாலும் தமிழ் மொழியிலிருந்து சென்றவை என்று...ஆந்திர மாநிலத்தில் பேராசிரியர் ஒருவர், சமஸ்கிருதத்தில் உள்ள குறைந்தபட்சம் 60 விழுக்காடு சொற்கள் தமிழ் வேர் கொண்ட சொற்கள் என நிறுவினார்...ஆனால், இச்செய்தி ஒரே ஒரு நாள் தான் ஊடகத்தில் வந்தது...வந்தவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகத் துறை அதை இருட்டடிப்பு செய்தது...

சாயுந்தரம் என்னும் சொல்லுக்கு அழகிய அந்திப் பொழுது என்னும் தமிழ் உள்ளதே \?????

தமிழ் மொழியில் பெயர்ச்சொற்கள் என்பவை காரணப்பெயர்கள். அதாவது, ஒரே பொருளைக் குறிக்க அப்பொருளின் பல பண்புகளை வைத்து நிறைய சொற்கள் உருவாக்கலாம்.

எடுத்துக்காட்டு: உலகம்(உலா - சுற்றி வருதல்), ஞாலம்(ஞாலுதல் - தொங்குதல்), முதலியன

அதேபோல, சாயுந்திரம், சாயுங்காலம், அந்திப்பொழுது, மாலை, முதலிய சொற்கள் ஒரேப் பெயரைக் குறிக்கும் வேறு வேறு தமிழ்ச்சொற்கள்.

குறிப்பு:

உலகம் எனும் சொல்லை நாம் இழந்தால், தமிழர்களுக்கு உலகம் ஞாயிறை சுற்றிவந்துகொண்டிருப்பது ஏற்கனவே தெரியும் எனும் வரலாறும் சேர்ந்து அழியும்...

கர்வம் தமிழ்ச் சொல் என்று யார் சொன்னது???

கர்வம் எனும் சொல் கருவம் எனும் செந்தமிழ்ச் சொல்லின் திரிபே

கர்>கரு(கர்+உ)>கருவம்(கரு+அம்=கரு+வ்+அம்)>கர்வம்

ஒப்புநோக்குக:

தருமம்>தர்மம்

கருமம்>கர்மம்

பொருள்:

கர்=கருமை நிறம்>செய்யும் செயல்

கரு=கர்+உ=பழமையானது/மேன்மையானது/உயர்ந்தது/மேடானது(ஒப்புநோக்குக:கருநாடகம்(Karnataka - மேடான இடம்), கருஞ்சரக்கு(மேன்மையான சரக்கு))

கரும்புலி எனும் சொல் இதிலிருந்து தோன்றிய சொல்லா எனத் தெரியவில்லை. விடயம் அறிந்தவர்கள் கூறவேண்டும்.

கருவம்=கரு+அம்=கரு+வ்+அம்=பெருமை/உயர்வானத் தன்மை கொண்டது, செருக்கு, ஆணவம், திமிர்

Link to comment
Share on other sites

தூய தமிழ்ச் சொற்களையும் வேற்று மொழியில் இருந்து வந்து கலந்த தமிழ்ச் சொற்களையும் நாம் அறிந்து வைத்திருத்தல் அவசியம். தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே பாவிக்க வேண்டும் என்பது அபத்தம்.

இலக்கணவாதிகளெ இதற்காகப் போராடித் தோல்வி கண்ட பின்னரே வேற்றுமொழிச் சொற்களையும் தமிழ் இலக்கணத்திற்கேற்றவாறு மாற்றி அமைத்து அவற்றையும் தமிழ் மொழிச் சொற்கள் என ஏற்றுக் கொண்டனர்.

ஆகவே இன்று பாவனையில் உள்ள அனைத்துச் சொற்களும் தமிழ்மொழிச் சொற்களே எனவும் வாதாடலாம் :D:rolleyes: 

வாத்தியாரின் பதிவு அறிவுறுத்துவது போலவே காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப ஒரு இனத்தின் மொழிவழக்கிலும் மாற்றங்கள் ஏற்படுவதை அனுமதித்து, அனுசரித்துப் போதலும் வேண்டும். தமிழ்ச் சொற்களில் மாற்றங்கள் ஏற்படுவது தமிழுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. தமிழ்ச் சொற்களைத் தமிழ் எழுத்துக்களான உயிர், மெய், உயிர்மெய், ஆயுத எழுத்துக்கள் ஆகிய 247 எழுத்துக்களை மட்டுமே கொண்டு தழுவச்செய்தல் வேண்டும் இதில் கவனமெடுக்கத் தவறுவதே பாதிப்பை ஏற்படுத்தும். இன்று பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதும் கண்கூடு. தற்போதுள்ள பிற எழுத்துக்களைப் பாவனையிலிருந்து நீக்கிவிடுவதோடு, புதிய எழுத்துக்கள் சேர்ந்துவிடாது கவனமெடுத்தும், தமிழைப் பாதுகாப்பது அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரே தனித்தமிழ் என்றால் அபத்தம் என்னும்போது நான் எந்தச் சுவரில் முட்டுவது என்று தெரியவில்லை. தனித் தமிழைக் கையாள எம்மால் முடியவில்லை எனில் காரணம் சிறுவயதில் இருந்தே எமக்கு மற்ற மொழிச் சொற்களும் சேர்த்து ஊட்டப்பட்டதுதான். எதையும் முயலலாம் என்று கூட எண்ணாது நிராகரிப்பது சிறந்தது அல்ல. கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பாடத்திட்டத்தில் தனித் தமிச் சொற்களே அனைத்துப் புத்தகங்களிலும் உள்ளன. எம்மால் முடியாதுதான். ஆனால் சிறுவயதிலிருந்தே புதிதாக ஒன்றைக் கற்கும் மாணவருக்கு அதுவே சரியான சொல்லாகும். அதிலும் இந்தியத்தமிழரை விட மிக அதிகமாக ஈழத் தமிழரே சரியான தமிழைப் பேசுகின்றனர் என்பது இந்தியப் பேராசிரியர்களின் கருத்து. அப்படியிருக்க எம் மனம் தாம் எமக்கு எதிரியே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

மொழி என்பது மக்கள் தங்களுக்கிடையில் தாங்கள் நினைப்பதை ஒருவருக்கொருவர் எழுத்தினாலோ பேச்சினாலோ பரிமாறிக்கொள்ளும் கருவி.

மக்களுக்காக மொழி என்றால் மக்கள் நினைப்பதை சொல்வதை

பேசுவதை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.

மொழிக்காக மக்கள் என்றால் அந்த மக்கள் எங்கே எப்படி எந்தச் சூழ் நிலையில் யாருடைய ஆதிக்கத்தில் வாழ்கின்றார்கள் என்பதை ஆராய வேண்டும்.

மக்கள் புரட்சி வேண்டும்

மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

மக்கள் முடிவை எடுக்க வேண்டும்.

அதற்கு ஊன்றுகோலாக மட்டுமே நாங்கள் இருக்கலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு எண்ணமும் ஆசையும். சில விடயங்களை மக்களே முடிவு செய்யுங்கள் என்று விட முடியாது ஏனெனில் அந்த விடயம் பற்றிய ஆழ்ந்த அறிவு அனைவருக்கும் இருக்கும் என்பது இல்லை. ஆகவேதான் ஆன்றோர் கூடிச் சில முடிவுகளை எடுப்பது. பேச்சு மொழி என்பது வேறு. அதை எப்படியும் பேசிவிட்டுப் போகலாம். ஆனால் எழுத்தையும் அப்படி ஆக்க முடியுமா??? எழுத்தை அத்தனை மக்களும் சேர்ந்து உருவாக்கவில்லை. எழுத்து மொழி என்பது இயல்பாக ஒருவருக்கு வருவதுமில்லை. கற்றால் மட்டுமே ஒருவர் எழுத்தறிவைப் பெற முடியும்.

மக்கள் புரட்சி எதற்கு வேண்டும்???

மக்கள் எதைப் புறக்கணிக்க வேண்டும் ???

மக்கள் என்ன முடிவை எடுக்க வேண்டும்???

கொஞ்சம்  விளக்கமாச் சொல்லுங்கோ வாத்தி ....யார் :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தங்கள் மொழியைச் சிறப்பாக்கும் புரட்சி வேண்டும்
மக்கள் வேற்றுமொழிகளைப் புறக்கணிக்க வேண்டும்
வேற்றுமொழிச் சொற்களைத் தொடர்ந்து பாவிப்பதா இல்லையா என மக்களே முடிவெடுக்க வேண்டும்.
மக்கள் என்பவர்கள் மாணவர்களையும் குறிக்கும்
திணிப்பதால் எதையும் திருத்த முடியாது.

இனி நாங்கள் தொடர்ந்தும் தமிழ் படிப்போமா மாணவர்களே? :D

வகுப்பிற்கு வருவதே இரண்டு மூன்று பிள்ளைகள்
அதற்கும் ஒரு கேள்வி வாத்திக்கு.... புகையாதீர்கள்
:D  :D  :lol:

வேற்று மொழிகளை அல்ல
வேற்று மொழிச் சொற்களை திருத்தி வாசிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்திக்கே தமிழ் படிப்பிக்கிறது வெறுத்துப்போச்சோ.கேவ்வி கேட்டாலே அஞ்சு நாளைக்கு இந்தப் பக்கம் காணேல்லை. பாவம் அந்தாளை இனி கேள்வியே கேட்கக் கூடாது. :unsure:  :lol:

வணக்கம் வாத்தியார். ஏன் என்னைத் தவிர ஒருத்தரையும் வகுப்பில காணேல்ல ???? பாஞ்சையும் காணேல்ல???? எங்க வாய் பாக்கப் போட்டுதோ தெரியேல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாத்தி இண்டைக்கும் வகுப்புக்கு வரேல்லையே. நான் ஒரால்த்தான் வேலைவெட்டி இல்லாமல் இருக்கிறன்போல.நானும் ஏதும் சாட்டுச் சொல்லிப்போட்டு நிக்கத்தான் வேணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.