Jump to content

புலம் பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வட மாகாண சபை ஆவண செய்யவேண்டும் - சந்திரநேரு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

chandrakanthan-seithy-20131008-570.jpg

வட மாகாண தமிழர்கள் தமது உரிமைகளுக்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்தார்கள். இதனாலேயே நாம் எதிர்பார்த்ததை விட அமோக வெற்றி பெற்றுள்ளோம். அதே நேரத்தில் போரின் அழிவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும், கணவன்மார்களை இழந்த விதவைகளின் வாழ்வாதாரத்தையும் கட்டி காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் வடமாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்ற ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் உண்டு என்று அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வறிக்கையில் மேலும் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் உள்ள கணவனை இழந்த விதவை தாய்மார்கள் தமது அன்றாட வாழ்வாதார செலவுக்காக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் கஷ்டங்களை போக்க புலம் பெயர் தமிழர்கள் வட மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்காக ஆடை தொழிற்சாலைகள், கைத்தொழில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால் இவர்களது வாழ்வாதாரதுக்கு பெரும் உதவியாக இருப்பதுடன். அவர்களின் பொருளாதார ரீதியில் முன்னேற்றமும் அடையலாம். முதலீடு செய்பவர்களுக்கான அனுமதி, பாதுகாப்பு தொடர்பில் மாகாண சபை கவனம் செலுத்தி, உறுதிப்படுத்த வேண்டும். என்று அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

chandrakanthan-seithy-20131008-570.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=94505&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

இதுதான் சரியான முடிவு.. அடுத்த கட்டம் சரி.. அத விட்டு விட்டு,.,., பதவிப்பிரமாணம் செய்யவிடாமல் ஏதோதோ சொல்லித் திரிந்த புலம்பெயர் கூட்டங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாச் சொன்னீங்க சிறீ. சந்த்ஹிரநேரு புலம்பெயர்ந்த்ஹாலும் புலன் பெயராதவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் வடக்குக் கிழக்கில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்கவும். இலங்கைத்தீவு முழுவதும் நடப்பது மகிந்த கொத்தா கும்பலதும் அதனது ஏவற்ப்பேய்களான புலனாய்வுத்துறையதும் அடாவடிக்காட்டாட்சி. அங்கு உங்கள் முதலீடுகளுக்கு எந்த நேரத்திலும் என்னவேண்டுமாகிலும் நடக்கலாம். இங்கு யாழ் களத்தில் பலர் தமிழ்த்தேசியத்தில் ஒன்ருபட்டு உருதியாக இருப்போரைப் புலிப்பினாமிகள் என அவதூரு செய்வதுபோல், ஓரிரு நிமிட நேரத்திலேயே உங்கள் சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டு எந்தவித ஆதாரமும் இல்லாது நீங்கள் காணாமற்போகலாம். லசந்தவை அழைத்து மிரட்டி ஓரிரு நாட்களிலேயே அவரது கதையை முடித்தவர்கள், குமார் பொன்னம்பலத்தை சாந்த எனும் சுங்களப் புலனாய்வாளரால் கொலைசெய்யப்பட்டு அதன் பின்பு சாந்தவின் அடையாளமே தெரியாது அவரி இல்லாதொழித்தவர்கள், வடக்கின் வசந்தம் எனும் பெயரில் பல மில்லியன் பணத்தை தங்கள் பெயரில் திருப்பிவிட்டு அரசியல் வியாபாரம் செய்யும் அங்கயன் இராமநாதன் வாழும் பூமி அது. அகலக்கால்களை வைக்காதீர்கள். ஒரு வெள்ளைவான் உங்கள் வாழ்க்கைக்கு வேட்டுவைக்கும்.

தவிர வடக்கில் ஏதாவது செய்ய வேண்டுமாக இருந்தால், வன்னியில் பறங்கியாரு எனும் வெள்ளநீர் வடிகால் வாய்க்காலை செப்பனிட்டு இரணமடுக்குளத்துக்கும் மற்ரும் ஏனைய நீரேந்து பகுதிகளுக்கும் திருப்பிவிடுவதற்கும்.

 யாழ் குடாநாட்டின் குடிநீர் உப்புச்த்தன்மை அடைவதைத் தடுக்க தொண்டைமான் ஆற் என இப்போது அழைக்கப்படும் பருத்தித்துறை கடலிலிருந்து நாவற்குழி வரக்குமான உப்புக்களியாற்றை நானீர்த்தேகமாக்கும் பாரிய செயற்திட்டத்தையும் முன்னெடுக்க தாங்கள் வாழும் நாடுகளது அரசு நிர்வாகத்தினரது உதவியை வேண்டி நிற்கலாம்.

மேலும் உப்பிப் பெருத்த யாழ் நகரில் கழிவுநீர் வடிகால் திட்டம். மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையை மணியந்தோட்டப்பகுதிக்கு மாற்ரும்திட்டம் ஆகியவற்ரையும் புலம்பெயர்தேசத்து உறவுகள் அந்நாடுகளது அரச உதவியின்மூலம் வென்றெடுக்கலாம்.

தவிர யாழ்ப்பல்கலைகழகத்தில் விவசாய பீடத்தின் அபிவிருத்தியும் அதன் அமைவிடமான கிளிநொச்சி வளாக அபிவிருத்தியும் யாழ்ப்பாணத் திமிர்பிடித்த அதிகாரவர்க்கத்தின் செயற்பாடுகளால் அந்தலை சிந்தலையாகிக் கிடக்கு அதற்கு ஒரு முடிவுகாண முயலலாம். மேலும் யாழ் நகரச் சூழலில் வாழும் குடியிருப்பளரது சோம்பேறித்தனமான செயற்பாடுகளால்  யாழ் நகரது நனீர் வளம் கெட்டுக்கிடக்கு அதற்காக ஏதாவது செய்ய முயலலாம்.

வேலைப்பளு காரணமாக எழுத்துப்பிழைகள் அனேகம் இருக்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

வெள்ளைவான் அங்க வரும் அங்க ஒண்டும் செய்ய ஏலாது எண்டால்.... வன்னி மக்களைச் சாட்டி புலத்தில் பணம் வாங்குபவர்கள் என்ன சொல்றாங்க???

மக்களே துணிந்து நில்லுங்கள்... தொடர்ந்து செல்லுங்கள் ... முதலீட்டை சும்மா உண்டியலில் அனுப்பி முட்டாள் முறையில் பணப்பரிமாற்றம் செய்யாமல்.. முறையாக நீங்கள் வாழும் நாட்டின் வங்கியூடாக அனுப்பி,, அதை இலங்கை மத்திய வங்கியூடாக எடுத்து , இலங்கை கம்பனிச் சட்டதிட்டத்தின் கீழ் பதிந்து , உங்கள் நாட்டின் கொழும்பு தூதரகத்துடன் தொடர்பில் இருந்து .. வியாபாரத்தில் வெற்றி பெறுங்கள்...

சண்டை முடிந்ததும் எனக்கு தெரிந்த ஒருவர் யாழில் சீமெந்து கல் ஆலையை நிறுவினார் ,...இன்று அவர் ஒரு கோடிஸ்வரர்.. இன்னுமொருவர் பெயிண் கடை வைத்தார் அவர் இலட்சாதிபதி.. ஆனால் முட்டாள்களின் நடாத்தும் ஊடகங்களின் பொய் செய்தியை கேட்ட நாங்கள் இன்றும் வெள்ளைக்காரரிடம் அடிமையாக இங்கே வேலை செய்கின்றோம்...

குறுப்பு : உங்களுக்கு விரிப்பமென்றால் வழிகாட்ட நான் தயார் , ஏனேனில் நான் வெற்றிகரமாக எனது நிறுவனத்தை அங்கே நடாத்தி வரிகின்றேன் , தினமும் மின்னஞ்சல் மூலமாக கணக்கு வழக்கு எனக்கு வந்து சேர்ந்து விடும் , நான் 10 இலட்சம் சிறிய முதலீட்டில் ச்தொடங்கினேன் , இப்போது மாதம் மாதம் 50,000 - 60,000 இலாபம் கிடைக்கின்றது ..இது இன்னம் அதிகரிக்கும்... /// இதைச் சொல்வதால் யாரும் என்னை சிங்கள உளவாளி , துரோகி எது வேணும் எண்டாலும் சொல்லுங்கோ.. இன்று எனது நிறுவனத்தில் 5 பேர் வேலை செய்கின்றனர் அதில் 3 பேர் மாவீரர் குடும்ப உறுப்பினர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சிறிலிங்கம்

எப்பொழுதுமே சொல்லைவிட செயலை ஆதரிப்பவன்

நீங்கள் தங்களது முன்னுதாரணமான விடயங்களை  தொடர்ந்து பகிருங்கள்

அதனால் பலர் அதனைப்பார்த்து   முதலிட முன் வரலாம்.

அதுவே தங்களதும் தாயகத்துக்கும் மேலும்  மேலும் ஊக்கமும்  

பலனும் தருவதாக அமையலாம்

(பச்சை முடிந்துவிட்டது.)

Link to comment
Share on other sites

வெள்ளைவான் அங்க வரும் அங்க ஒண்டும் செய்ய ஏலாது எண்டால்.... வன்னி மக்களைச் சாட்டி புலத்தில் பணம் வாங்குபவர்கள் என்ன சொல்றாங்க???

மக்களே துணிந்து நில்லுங்கள்... தொடர்ந்து செல்லுங்கள் ... முதலீட்டை சும்மா உண்டியலில் அனுப்பி முட்டாள் முறையில் பணப்பரிமாற்றம் செய்யாமல்.. முறையாக நீங்கள் வாழும் நாட்டின் வங்கியூடாக அனுப்பி,, அதை இலங்கை மத்திய வங்கியூடாக எடுத்து , இலங்கை கம்பனிச் சட்டதிட்டத்தின் கீழ் பதிந்து , உங்கள் நாட்டின் கொழும்பு தூதரகத்துடன் தொடர்பில் இருந்து .. வியாபாரத்தில் வெற்றி பெறுங்கள்...

சண்டை முடிந்ததும் எனக்கு தெரிந்த ஒருவர் யாழில் சீமெந்து கல் ஆலையை நிறுவினார் ,...இன்று அவர் ஒரு கோடிஸ்வரர்.. இன்னுமொருவர் பெயிண் கடை வைத்தார் அவர் இலட்சாதிபதி.. ஆனால் முட்டாள்களின் நடாத்தும் ஊடகங்களின் பொய் செய்தியை கேட்ட நாங்கள் இன்றும் வெள்ளைக்காரரிடம் அடிமையாக இங்கே வேலை செய்கின்றோம்...

குறுப்பு : உங்களுக்கு விரிப்பமென்றால் வழிகாட்ட நான் தயார் , ஏனேனில் நான் வெற்றிகரமாக எனது நிறுவனத்தை அங்கே நடாத்தி வரிகின்றேன் , தினமும் மின்னஞ்சல் மூலமாக கணக்கு வழக்கு எனக்கு வந்து சேர்ந்து விடும் , நான் 10 இலட்சம் சிறிய முதலீட்டில் ச்தொடங்கினேன் , இப்போது மாதம் மாதம் 50,000 - 60,000 இலாபம் கிடைக்கின்றது ..இது இன்னம் அதிகரிக்கும்... /// இதைச் சொல்வதால் யாரும் என்னை சிங்கள உளவாளி , துரோகி எது வேணும் எண்டாலும் சொல்லுங்கோ.. இன்று எனது நிறுவனத்தில் 5 பேர் வேலை செய்கின்றனர் அதில் 3 பேர் மாவீரர் குடும்ப உறுப்பினர்கள்..

முன்னாள் போராளி கடன்பட்டு தொழில் செய்தால் புலனாய்வு காரங்களிட்ட கடன்வான்ஞார் எண்டு ஊர்ச்சனமும். புலம்பெயர் சங்கள் காசு கொடுத்து தொழில் தொடங்கினா புலம்பெயர் புளிக்கும் உனக்கும் என்ன தொடர்பு என்று புலனாய்வும்.

அதுக்கும் இல்லாட்டி பதுக்கின காசு இப்பத்தான் மெள்ள வெளில வருதெண்டு சங்களும் கதைக்கும்போது நீங்கள் வெளின்ட்டாடில் இருந்து முதலீடு செய்து பணத்தை இங்கு கொணர்ந்தால் அங்குள்ளவர்க்ட்கு என்னதான் தெரிவு? 

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழர்கள் வடக்குக் கிழக்கில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்கவும். இலங்கைத்தீவு முழுவதும் நடப்பது மகிந்த கொத்தா கும்பலதும் அதனது ஏவற்ப்பேய்களான புலனாய்வுத்துறையதும் அடாவடிக்காட்டாட்சி. அங்கு உங்கள் முதலீடுகளுக்கு எந்த நேரத்திலும் என்னவேண்டுமாகிலும் நடக்கலாம். இங்கு யாழ் களத்தில் பலர் தமிழ்த்தேசியத்தில் ஒன்ருபட்டு உருதியாக இருப்போரைப் புலிப்பினாமிகள் என அவதூரு செய்வதுபோல், ஓரிரு நிமிட நேரத்திலேயே உங்கள் சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டு எந்தவித ஆதாரமும் இல்லாது நீங்கள் காணாமற்போகலாம். லசந்தவை அழைத்து மிரட்டி ஓரிரு நாட்களிலேயே அவரது கதையை முடித்தவர்கள், குமார் பொன்னம்பலத்தை சாந்த எனும் சுங்களப் புலனாய்வாளரால் கொலைசெய்யப்பட்டு அதன் பின்பு சாந்தவின் அடையாளமே தெரியாது அவரி இல்லாதொழித்தவர்கள், வடக்கின் வசந்தம் எனும் பெயரில் பல மில்லியன் பணத்தை தங்கள் பெயரில் திருப்பிவிட்டு அரசியல் வியாபாரம் செய்யும் அங்கயன் இராமநாதன் வாழும் பூமி அது. அகலக்கால்களை வைக்காதீர்கள். ஒரு வெள்ளைவான் உங்கள் வாழ்க்கைக்கு வேட்டுவைக்கும்.

தவிர வடக்கில் ஏதாவது செய்ய வேண்டுமாக இருந்தால், வன்னியில் பறங்கியாரு எனும் வெள்ளநீர் வடிகால் வாய்க்காலை செப்பனிட்டு இரணமடுக்குளத்துக்கும் மற்ரும் ஏனைய நீரேந்து பகுதிகளுக்கும் திருப்பிவிடுவதற்கும்.

 யாழ் குடாநாட்டின் குடிநீர் உப்புச்த்தன்மை அடைவதைத் தடுக்க தொண்டைமான் ஆற் என இப்போது அழைக்கப்படும் பருத்தித்துறை கடலிலிருந்து நாவற்குழி வரக்குமான உப்புக்களியாற்றை நானீர்த்தேகமாக்கும் பாரிய செயற்திட்டத்தையும் முன்னெடுக்க தாங்கள் வாழும் நாடுகளது அரசு நிர்வாகத்தினரது உதவியை வேண்டி நிற்கலாம்.

மேலும் உப்பிப் பெருத்த யாழ் நகரில் கழிவுநீர் வடிகால் திட்டம். மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையை மணியந்தோட்டப்பகுதிக்கு மாற்ரும்திட்டம் ஆகியவற்ரையும் புலம்பெயர்தேசத்து உறவுகள் அந்நாடுகளது அரச உதவியின்மூலம் வென்றெடுக்கலாம்.

தவிர யாழ்ப்பல்கலைகழகத்தில் விவசாய பீடத்தின் அபிவிருத்தியும் அதன் அமைவிடமான கிளிநொச்சி வளாக அபிவிருத்தியும் யாழ்ப்பாணத் திமிர்பிடித்த அதிகாரவர்க்கத்தின் செயற்பாடுகளால் அந்தலை சிந்தலையாகிக் கிடக்கு அதற்கு ஒரு முடிவுகாண முயலலாம். மேலும் யாழ் நகரச் சூழலில் வாழும் குடியிருப்பளரது சோம்பேறித்தனமான செயற்பாடுகளால்  யாழ் நகரது நனீர் வளம் கெட்டுக்கிடக்கு அதற்காக ஏதாவது செய்ய முயலலாம்.

வேலைப்பளு காரணமாக எழுத்துப்பிழைகள் அனேகம் இருக்கு மன்னிக்கவும்.

இந்த கருத்தில் முதலீடு என்பதன் பொருள் சரியாக வெளிவரவில்லை.

வடமாகாண அரசு உள்ளூர் கட்டுமாணத்தை கவனிக்க வேண்டும். புலம் பெயர் மக்கள் தங்களின் முதலீடுகளை தம்முள் இணைந்து கம்பனியாகவோ, தனிப்பட சிறு கைத்தொழில் ஆகவோ செய்யலாம். தனிய தாயகமக்களுக்கு நன்கொடையாக என்பது தொடர்ந்து முன்னால் கொண்டு செல்லத்தக்க கருத்தல்ல.உதாரணமாக  மக்டொனால்ட் முகாமைத்துவ அனுபவம் உள்ள்வர் ஒருவர் தான் அங்கு அந்த விரைவு உணவகம் திறக்க முயலாம். மென்பொருள் துறையில் பலர் இணைந்து மென்பொருள் எழுதும் நிலையங்களை ஆக்கலாம். 

வருங்காலத்தை 100% விதம் எதிர்வு கூறுவது கடினம். சிங்கள பகுதி ஒன்றில் முதலிடும் வசதிகள் வடக்கில் இருக்கபோவத்தில்லை. ஆனால் தமிழர் என்ற முறையில் வடக்குக்கு வெளியே முதலிடுவது, வடக்கில் முதலிடுவதை விடப்பாது காப்பு குறைந்தது. இதை முஸ்லீம்கள் உணருகிறார்கள்.

பாதுகாப்பு அதிகாரம் மாகாண சபையின் கையில் வராவிட்டாலும் அங்கஜனின் ஆட்டம் இனி அமிழ்ந்து போகும். 

அவர்களின் கையில் தொடர்ந்தும் பணம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடை போடுறது.. பார் திறக்கிறது.. ஹோட்டல் கட்டுறது.. இதெல்லாம் பெரிய முதலீடாப் போச்சு. அது சரி வெளிநாட்டில.. கோழி பொரிக்கிற கடை வைச்சிருக்கிறது.. தமிழ் பெட்டிக்கடை வைக்கிறது பெரிய முதலீடா இருக்கிறப்போ... இதுதான் எம்மவர்களுக்கு இப்ப பெரிய முதலீடு. :lol:

பெரிய பெரிய தமிழர் வர்த்தகர்கள் கொழும்பிலேயே உள்ளார்கள். அவர்களே முதலீடு பற்றிச் சிந்திக்கத் தயங்கிறாங்க. காரணம்.. அரச.. அரச தயவு ஒட்டுக்குழுக்களின் ஆதிக்கம்.. அச்சுறுத்தல்.. கப்பம்.. கொள்ளை.. கொலை..!

புலம்பெயர் தமிழர்கள் அரசியலில் தலையிட வேணாங்கிறீங்க.. ஆனா அவங்க முதலீடு வேணும் என்றீங்க.. அதாவது அவங்க காசு வேணும் என்றீங்க..! ஏன்.. கொள்ளை அடிக்கவா..???!

முதலீடுகளைக் கவரனுன்னா.. திடமான அரசியல் நிலை இருக்கனும். சும்மா அதிகாரமற்ற மாகாண சபையை நம்பி தமிழர்கள் முதலீடு செய்ய முட்டாள்களே.. அல்லது முதலீடு என்பதன் தார்ப்பரியம் புரியாதவர்களோ அல்ல..! முதலீட்டுக்கு புறக்காரணிகள் சரியாக அமைந்தால் தான் அகக் காரணிகள் பற்றி முதலீட்டாளன் சிந்திப்பான். இது புறக்காரணியே பிரச்சனைக்குரியதாக உள்ள போது...???! இப்படி ஒரு அழைப்பு அர்த்தமற்றது..!

சிறிய அளவிலான முதலீடுகளை யாரும் செய்யலாம். அது பெரிய பாதிப்பைத் தராது. ஆனால் இன்று பெருமளவிலான முதலீடுகளை சிங்கள அரசு சார்ந்த உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புக்களே செய்து வருகின்றன. அதற்குரிய அரசியல் களம் தான் அங்குள்ளது. இதனை மாகாண சபை மாற்றி அமைக்கப் போதுமானதல்ல..! :icon_idea::)

Link to comment
Share on other sites

தலைப்பு புலம் பெயர் முதலீடுகளை பற்றியது. செய்தி வழக்கம் போல் சந்திரநேருவின் பேச்சில் ஒரு பகுதியை மட்டும் போடுகிறது. 

புலம் பெயர் தமிழர் ஆடைத் தொழிலில் இல்லை. சிறிய சிறிய முதலீடுகள் பலருக்கு முடியும். அவர்கள் முன்னால் போய் குதிக்க வேண்டும். பலரை இணைத்து கம்பனிகள் திறக்கலாம். ஆனால அதை விட வெளிநாட்டு முதலீடுகள்  செயல் திறன் கூடியவையாக இருக்கும். அவைகள் நீண்டகால திட்டமாக இருக்க வேண்டும்.

தமிழ்ரை பொறுத்தவரை அந்த முதலீடுதான் வேண்டும். இது வேண்டாம் என்று அடம் பிடிக்க முடியாது. பலர் நாடு திரும்பி சிறு கைத்தொழில் முய்றைகளில் ஈடுபட விருப்பமுள்ள்வர்களாக இருக்கிறார்கள். அவர்களை அழைத்து வசதி கொடுப்பது வடமாகாண சபை இலகுவாகச் செய்யக்கூடியது. இதற்கு மத்திய அனுமதி தேவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு முதலீடுகளுக்கு எதுக்கு மாகாண சபை. மாநகரசபை.. நகர சபை.. உள்ளூராட்சி சபை அனுமதி போதுமே..! :lol::D

இவ்வளவு காலமும்.. மாகாண சபை இருந்தா நம்மவர்கள் கடை போட்டவர்கள். ஹோட்டல் கட்டினவர்கள்.. இல்லையே..???! :lol:

சும்மா சும்மா மாகாண சபை பற்றி ஒரு போலி விம்பத்தை மக்கள் மத்தியில் விதைப்பது கூடாது..! :icon_idea:

பெரிய முதலீடுகளுக்கு சிங்களம் அனுமதிக்காது. அவை தனக்கூடாகப் போவதையே அது பார்த்துக் கொள்ளும். மாகாண சபை அவற்றை கட்டுப்படுத்தும் எந்த அதிகாரத்தையும் கொண்டதல்ல..! :icon_idea:

Link to comment
Share on other sites

சிறு முதலீடுகளுக்கு எதுக்கு மாகாண சபை. மாநகரசபை.. உள்ளூராட்சி சபை அனுமதி போதுமே..! :lol::D

உள்ளூராசி தேர்தலின் பின்னர் இவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை பசில்தானே பேசியிருந்தார்.  லட் பல்ப் மாற்றுவது.

நான் அறிந்தவரை யாழ் மாங்கர சபை அழைத்து அதை நம்பி போனர்கள் இல்லை. மேலும் இதுவரையில் போனவர்கள் பலர் துரோகளும், ஒட்டுக்குழுக்களும். இதையே சிறீலீங்கமும் போனவர்கள் பற்றிய அபிப்பிராயமாக தனது கருத்திலும் சொல்லியிருக்கிறார். இவர்களை பற்றித்தான் தலைப்பு என்று நீங்கள் நிநைத்தால் அது தப்பு.  இவ்வளவு நாளும் புலம் பெயர் தேசங்களில் இருந்து  எத்தகைய வியாபரத்தையும் அங்கு செய்வதை பலர் எதிர்த்தோம். புறக்கணி இலங்கையை பரப்புரை செய்தோம்.  இனி அந்த பரபுரைகள் சில மாற்றங்ககூடன் புறகணி கொழும்பு என்று செய்யப்படவேண்டும்.

இவ்வளவு காலமும்.. மாகாண சபை இருந்தா நம்மவர்கள் கடை போட்டவர்கள். ஹோட்டல் கட்டினவர்கள்.. இல்லையே..???! :lol:

இவர்களை நம்மவர்கள் என்று அழைப்பது பொருள் இல்லாதது.  அவர்களில் பெரும்பாலோனார் அரசியல் தொர்புகள் மூலம் செய்து முடித்தார்கள்.  இவைகள் ந்டுந்தீவை சிங்கபூராக மாற்றும் கோசம் போன்ற்வையும் அடங்கும்.

சும்மா சும்மா மாகாண சபை பற்றி ஒரு போலி விம்பத்தை மக்கள் மத்தியில் விதைப்பது கூடாது..! :icon_idea:

மாகாண சபை பற்றிய விம்பம் எதுவும் இங்கு விதைக்கப்படவில்லை.  தமிழ் மக்களால் தெரியப்பட்ட மாகாணசபை. இதை போய் ஒட்டுக்குழுக்கள் அடாவடியாக பிடித்துவைத்திருக்கும் "யாழ்மாநரக" சபையுடன் தொடுப்பது அரதமில்லாதது. அதன் அழைப்பாக புலம்பெயர் மக்களிடம் உதவிக்கு கோரிக்கைவிடப்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி கோரிக்கை வந்தோ வரமாலோ, தமது பணத்தை இயல்புவாழ்வுகளை இழந்து போயிருப்போருக்கு உதவும் வகையில் முதலிட புலம் பெயர் தேசத்தவர்கள் முன்வர வேண்டும் என்பது அடுத்த எதிர்பார்பு. இதில் ஏதாவது விம்பம் விதைப்பத்தாக  நினைப்பது வலிந்த அனுமானம்.   இதையும் தேர்தல் விஞ்னாபனமாக புரிந்து கொள்வது பிர்ச்சார மனநிலையிலிருந்து விடுபடமுடியாமை. 

பெரிய முதலீடுகளுக்கு சிங்களம் அனுமதிக்காது. அவை தனக்கூடாகப் போவதையே அது பார்த்துக் கொள்ளும். மாகாண சபை அவற்றை கட்டுப்படுத்தும் எந்த அதிகாரத்தையும் கொண்டதல்ல..! :icon_idea:

அந்த விவாதம் வேறு. அதை புலம் பெயர் மக்கள் முதலீடாக செய்ய வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. அதை அவர்கள் அரசியல் போராட்டமாக விளங்கி அந்த திசையில் எடுத்துசெல்ல வேண்டும். ஆட்டுக்குள் மாட்டை கலந்தடித்துக்கொண்டிருப்பது பிரயோசனமில்லாத விவாதம்.  முதல்வர் விக்கினேஸ்வரன், அரசு விட்டுக் கொடுக்காதவை நீண்டகால குறிகோள்களுக்குள் அடங்கும் என்று சொன்னதை புரிந்து கொள்ள வேண்டும். அரசு தடுக்க கஸ்டமாக இருக்கப்போகிறவைகளை அரசியல் போராட்டமாக்காமல் நசூக்காக செய்ய முயலவேண்டும். 

புலம் பெயர் மக்களை சிறு முதலீடுகளில் ஆரம்பிக்கும் படி கேட்பதுதான் முதல் கோரிக்கை.   விட்டால் குடும்பி அடித்தால் மொட்டையாக $500 டலர் Garment கம்பனிதான் வேண்டும் என்று வாதாடுவது பொருளாதாரதை அறியாமையாக முடியும். யப்பான், கொறிய, சீனா போன்ற்வற்றின் பாரிய கம்பனிகளால் அடிப்பட்டுபோன  மேற்கு பொருளாதாரத்தை மீளக்க்ட்டி எழுப்ப எல்லா மேற்கு நாடுகளும் சிறு கைத்தொழிலைத்தான் ஊக்குவிக்கின்ற்ன. 

பாரிய கம்பனிகள் உடல் உணமுற்ற, பிள்ளைகளை பொறுப்பெடுக்கும் தனி பெற்றொர், பயிற்றப்பட்டாத மக்களுக்கு மத்தியில் கம்பனிகளை அமைக்க விரும்ப மாட்டா என்பதியதையும் கவனிக்க வேண்டும். விவசாய கிராமங்களுக்கு, பாரிய கம்பனிகள் அல்லாமல்,  கூட்டுறவு சங்கங்கள் மிக இலகுவாக அமைத்து முன்னேற்றக்கூடியவை. பயிற்றப்பட்ட தொழிலாளிகள் இல்லாமல் பாமரமக்கள் நிறந்த கிராம சூழ்நிலைகள் உள்ள முல்லைத்தீவு போன்ற இடங்களில் இவை அவர்களின் கைத்தொழிலை வைத்து வாழ்க்கையை ஆரம்பிக்க உதவக் கூடியவை. அவர்களுக்கு பாரிய கம்பனிகளை விட வினைத்திறன் கூடிய்வை. 

Link to comment
Share on other sites

ஐரோப்பாவில் வாழும் நண்பர் ஒருவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு  சொகுசு பஸ் ஆட்களை வைத்து நடாத்துகிறார்.பஸ்சின் ஒட்டுனராக சிங்களவரை வைத்துள்ளார்.(ராணுவம் ஒன்றும் கேட்காதாம் என்ற நம்பிக்கை ஏறும் தமிழ் மக்களுக்கு வர வேண்டுமாம்).பஸ்சின் பின்னால் டக்ளசினதும் மகிந்தவினதும் பெரிய படம் ஒட்டப்பட்டுள்ளதாம்.வருமானத்தில் சில வீதம் மாதா மாதம் டக்ளசுக்கு கப்பமாக கொடுக்கப்படுகிறதாம்.இவ்வளவு சுதந்திரம் போதாதா சிறிலங்காவில் முதலீடு செய்ய?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பாதிக்கபட்ட மக்களுக்கு ஒரு இணைய தளம் திறந்து அதில் உறுதிபடுத்தபட்ட குடும்பங்களை பட்டியல் இடலாம். உதவுவோர் நேரடியாக உதவுவது சில சிறி லங்கா முறைப்பாட்டாளர்களின் வாயை பொத்தும்.

புலம்பெயர் ஈழதமிழர் ஒவ்வொருவரும் ஒரு பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்திற்கு உதவினாலே பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

உண்மைதான்  தம்பி

எனது மனதில் ஒரு திட்டம்  இருந்தது

ஒரு ஆயிரம் தாயக விரும்பிகளைச்சேர்த்து

அவர்கள்  ஒவ்வொருவரும் 1000  ஈரோக்கள் மூலதனமாக  போட்டு

அதை ஒரு  தாயக நிறுவனத்திடம் கொடுத்து

அவர்களது பார்வையிலேயே  விட்டு விடணும் என்று.

வருமானத்தை மீண்டும்மீண்டுமம தாயக மக்களுக்கே பாவிப்பது போல்.

மூலதனம்   போட்டவர்கள் எந்த நேரமும்

நிறுவனத்தினுடைய  கணக்கு வழக்குகளையும்

அதன் போக்கையும் அறியக்கூடிய  வகையில் இணையத்தில் ஏற்பாடும்

கேட்கப்படும்  கேள்விகளுக்கு விளக்கமும் செய்யக்கூடிய  மாதிரி ஒரு ஏற்பாடு செய்யவேண்டுமென்று.

அப்படி ஒன்றைச்செய்யும்போது எனது சார்பில் ஒரு பத்துப்பேரையாவது என்னால் சேர்த்துத்தரமுடியும்...

பார்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மாகாண சபை ஆட்சி வேண்டி வாக்குப்போட்டது போல நீங்கள் காட்ட விளைகிறீர்கள். மக்கள் மாகாண சபைக்கு வாக்குப் போடவில்லை. மகிந்த அரசுக்கு எதிராகவும் ஒட்டுக்குழுக்களுக்கு எதிராகவும் அவர்களின் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகவுமே வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

மாகாண சபை என்பது அதிகாரமற்ற ஒன்று. அதனிடம்.. பெரியதோ.. மிதமானதோ.. முதலீட்டாளர்களை அரசிடம் இருந்தோ.. அரச குழுக்களிடம் இருந்தோ பாதுகாக்கும் எந்தப் பொறிமுறையும்.. இல்லை. சட்ட வலுவும் இல்லை.

அந்த வகையில்.. சிறு முதலீடுகள்.. அதுவும் கண்ணை உறுத்தாத.. போட்டியற்ற முதலீடுகள் தான் தப்பிப்பிழைக்க முடியும் என்ற அரசியல் சூழ்நிலையில்... மாகாண சபையைக் காட்டி முதலீட்டைச் செய் என்று புலம்பெயர் மக்களை அழைப்பது புத்திசாலித்தனமான ஒன்றல்ல.

மாறாக மாகாணசபை அதிகாரங்களை பலப்படுத்திக் கொண்டு.. மாகாண சபைக்கு முதலீட்டாளர்களை பாதுகாக்கும்.. முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு.. மத்திய அரசின்.. அதன் ஆதரவுக் குழுக்களின் நேரடித் தலையீடுகளை தடுத்து நிறுத்தும் சட்ட மற்றும்.. பொலிஸ் அதிகாரங்களை கையில் வைத்துக் கொண்டு தான்.. புலம்பெயர் மக்களை நோக்கி ஒரு முதலீட்டுக்கான காத்திரமான பங்களிப்பைக் கோர முடியும்.

இன்றைய சூழலில்.. மத்திய அரசிடம்.. எல்லா அதிகாரங்களும் குவிந்து கிடக்கும் நிலையில்.. முதலீட்டாளர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ள நிலையில்.. முதலீட்டைக் கொண்டு வா.. என்று கூவுவது சிங்களவனுக்கே பலமாக அமையும். அது.. இன்றைய மாகாண அதிகாரங்களே போதும்.. என்று சிங்களம் சொல்லும் நிலையையே தோற்றுவிக்கும்.

தேர்தலை நடத்திவிட்டு.. சிங்களம் செய்த பரப்புரை போல.. முதலீடுகளை சிறீலங்காவுக்குள் இழுத்துக் கொண்டு சிங்களம் தனது பொருண்மியத்தைக் கட்டி எழுப்ப வழிபார்க்குமே தவிர.. அதிகாரமற்ற மாகாண சபைகளால் அதற்கு எந்த ஒரு நெருக்கடியையும் வழங்க முடியாது.

இந்த நிலையில்.. சிறீலங்காவைப் புறக்கணியை.. புலம்பெயர் தமிழர்கள் கைவிடனும் என்ற கோரிக்கை உசிதமானதல்ல. உப்புச்சப்பற்ற மாகாண சபையை நம்பி.. சிறீலங்காவின் அனைத்து இன அழிப்பு நடவடிக்கைகளையும் மறந்து மறைத்து சிறீலங்காவின் பொருண்மியத்தை கட்டி எழுப்புவதன் மூலம்.. தமிழர்கள் தமக்குத் தாமே குழிபறிப்பைச் செய்ய முடியுமே தவிர விடிவை பெற முடியாது.

இன்றைய நிலையில் கொழும்பைப் புறக்கணி என்றால்.. அவன் வடக்கைப் புறக்கணி என்று சொல்லமாட்டான். இராணுவத்தை ஒட்டுக்குழுக்களை வைத்து உங்களை ஒரு வழி பண்ணுவான். இத்தகைய ஒரு நிலையில் புலம்பெயர் மக்களை முதலீட்டுக்கு அழைக்கும் சந்திரநேருவின் அழைப்பு சந்தேகத்தை உண்டு பண்ணுவதோடு.. புலம்பெயர் மக்கள் இது தொடர்பில் விழிப்பாக இருக்கவும் வேண்டும்.

மகிந்த குடும்பம்..முஸ்லீம் குழுக்கள்..  டக்கிளஸ்.. சித்தார்த்தன்.. கருணா.. பிள்ளையான்.. ஒட்டுக்குழுக்களைத் தாண்டி.. புலம்பெயர் மக்களின் முதலீடுகளின் பயன்கள்..எந்தளவுக்கு காத்திரமாக மக்களைப் போய் சேரும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ள நிலையில்.. இவற்றைக் கட்டுப்படுத்தும் எந்த அதிகாரமும் பலமுமற்ற மாகாண சபைகளை வைச்சுக் கொண்டு புலம்பெயர் மக்களை சிங்களத்தின் பொறிக்குள் முதலீடு என்ற போர்வையில் இழுத்துவிடும் செயலை அங்கீகரிக்க முடியாது. இந்த அறைகூவல் குறித்து சந்திரநேரு விளக்க வேண்டும்.

அண்மையில் மகிந்த மற்றும் பீரிஸ் கூட புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்பி தங்களின் பிரசேதத்தை.. சிறீலங்கா என்ற தேசத்தை கட்டி எழுப்ப அழைப்பு விடுத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் ஆக்கிரமிப்புத் திமிரில் விடுத்த அறிவிப்பைப் போல.. சந்திர நேரு மாகாண சபை மாயையில் அறைகூவல் விடுக்கிறார். ஆனால் முதலீடுகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் மாகாண சபை எந்த வித பாதுகாப்பையும் உறுதிமொழிகளையும் வழங்க முடியாத சட்டவலுவற்ற ஒரு வெட்டி அமைப்பு என்பதை அவர் மறைத்து விட்டிருக்கிறார்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் பணம் வருமானம் இதுபோன்ற விடையங்களில் கண்வைத்துக்கொண்டு இருப்பது மடமை. ஏற்கனவே நான் கூரிய விடையம் என்னவெனில் எம் தாயகமண்ணில் வளங்களை எப்படிப்பேணிப்பாதுகாப்பது என்பதுபற்ரியே நாம் முதலில் கரிசனைகொள்ளவேண்டும். அவையே எமது அடுத்த சந்ததிக்கு விட்டுப்போகும் சொத்தாக இருத்தல்வேண்டும். ஆகவே எமது இயற்கை வளங்களிப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை புலம்பெயர் தமிழராகிய நாம் மேற்கொள்வோம், அதுபற்ரிக்கலந்துரையாடுவோம். சும்மா வெட்டிக்குக் கதைப்பதை நான் விரும்பவில்லை. நாம் வாழும் நாடுகளது அதிகாரமையங்களது வெளிநாடுகளது உதவித்திட்டங்கள் மற்றும் சர்வதேசரீதியில் நலத்திட்டங்களைக் கொண்டுநடாத்தும் ஒருங்கிணைப்பாளர்களை நாம் அண்பித்து எமது தேசத்துக்குத் தேவையான நீண்டகாலம் பயந்தரக்கூடிய எமது கலாச்சார விழுமியங்களுடன் ஒன்றுபட்டே இவ்வளவுகாலமும் எம்முடன் கைகோர்த்தேவந்த இயற்கை வளங்களைப் பாதுகாப்பதே எமது கடமை. யாழில் சூழலியலாளர் திரு ஐங்கரநேசன் அவர்கள் இவ்விடையத்தில் மிகவும் கரிசனை உள்ளவர் ஆகவே அவருடன் கைகோர்த்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். இதுபற்ரிய காத்திரமான கருத்தாடலுக்கும் அதை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கான வழிமுறைகளையும் ஆராய்து நடைமுறைப்படுத்துவோம் வாரீர். 

உங்கள் கருத்துச் சார்ந்த ஒரு கருத்தை நாங்களும் கீழ்ப்படி தலைப்பில் பதிவு செய்திருக்கிறோம்..!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130438

Link to comment
Share on other sites

முன்னாள் போராளி கடன்பட்டு தொழில் செய்தால் புலனாய்வு காரங்களிட்ட கடன்வான்ஞார் எண்டு ஊர்ச்சனமும். புலம்பெயர் சங்கள் காசு கொடுத்து தொழில் தொடங்கினா புலம்பெயர் புளிக்கும் உனக்கும் என்ன தொடர்பு என்று புலனாய்வும்.

அதுக்கும் இல்லாட்டி பதுக்கின காசு இப்பத்தான் மெள்ள வெளில வருதெண்டு சங்களும் கதைக்கும்போது நீங்கள் வெளின்ட்டாடில் இருந்து முதலீடு செய்து பணத்தை இங்கு கொணர்ந்தால் அங்குள்ளவர்க்ட்கு என்னதான் தெரிவு? 

கம்பனிச் சட்டதிட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கம்பனியின் கீழ் அதன் முதலீட்டிற்கான பதிவைக் காண்பித்தால் சரி,, அதற்கு மத்திய வங்கியின் ஊட்க பணம் கொண்டு வரப்பட்ட விடய்த்தையும் காட்டினால் சரி - இது புலநாய்வாளர்கள் கேட்டால்.. நம்மட சனியன் பிடிச்ச மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... அவர்களை ரோட்டால் குரைத்துப் போகும் நாய் மாதிரி எண்ணி முன்னோக்கிச் செல்லுங்கள்,... வெற்றி நமதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

உங்களின் வியாபாரம் வளர்ச்சி பெற்று ஆயிரம் மாவீரர் குடும்பத்திற்கு வேலை கொடுக்க வாழ்த்துக்கள்.

உங்களை போன்ற செயல்வீரர்கள் தான் எம்மக்களுக்கு தேவை.

நீங்கள் ஊருக்கு திரும்பி சென்று முழு நேரமாக செயல்படும் திட்டம் இருக்கிறதா?

நீங்கள் ஒரு சிறு தகவல் பெட்டகம் தயாரித்து நெழிவு சுழிவுகளை பகிர்ந்தால் இன்னும் பல ஈழத்தமிழ் முதலீட்டாளருக்கு வசதியாக இருக்கும்.

உங்களின் சேவைக்கு நன்றி.

ஆம்

இதை நான் ஆமோதிக்கின்றேன்

தகவல்களை  முழுமையாக தரத்தேவையில்லை

இன்றைய  நிலையில் எந்தளவு தூரம் நாம் முதலிடலாம்

அவற்றை  எம்மக்களுக்காக எந்தளவுக்கு  பாதுகாப்பாக செலவிடலாம் போன்றவற்றையும் எழுதுங்கள்

Link to comment
Share on other sites

மக்கள் மாகாண சபை ஆட்சி வேண்டி வாக்குப்போட்டது போல நீங்கள் காட்ட விளைகிறீர்கள். மக்கள் மாகாண சபைக்கு வாக்குப் போடவில்லை. மகிந்த அரசுக்கு எதிராகவும் ஒட்டுக்குழுக்களுக்கு எதிராகவும் அவர்களின் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகவுமே வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

 நீங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டும். விவாதமொன்றுக்கு அதைத்தான் வைத்து ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் நாங்கள் சொல்வதாக, காட்டுவத்தாக விவாதம் ஒன்றை ஆரம்பிப்பது பொருள் இல்லாதது.

இதை யாரும் எந்த இடத்திலும் சொல்லவரவில்லை. தப்பபிராயத்துடன் கூட்டமைப்பு மீது குற்றம் காண்கிறீர்கள்.   கூட்டமைப்பு வடமாகாணத்துக்கு பொறுப்பாக இருக்க போவதால் அதன் பொருளாதாரததை கையில் எடுப்பதால் மாகாண ஆட்சிக்கு மேலால் உரிமை கேட்டுவிட்டால் அவரகள் யாரை எதோ செய்ய போவதாக ஏன் பொருள் கொள்ள வேண்டும். வடமாகாண பொருளாதாரம், அகதிகள் நிலை என்பனவற்றுக்கு வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து முடிய கூட்டமைப்பு பொறுப்பு. இதற்கும் உரிமையை தேடுவதற்கும் தொடர்புகள், சிக்கல்கள் வரும் போது பேசிக்கலாம். இப்போ புலம் பெயர்மக்கள் முன்னால் வந்து வடக்கில் முதலிட ஆயத்தமாக வேண்டும்..

மிச்சம் எல்லாம் யாரும் கேட்காதவை.

Link to comment
Share on other sites

இன்றைய சூழலில்.. மத்திய அரசிடம்.. எல்லா அதிகாரங்களும் குவிந்து கிடக்கும் நிலையில்..

திரும்ப திரும்ப இந்த பல்லவியால் பாட்டு முன்னேற்றாது. இதௌ அருவரிக் குழந்தைக்கும் தெரியும்.

1.ஆமி வெளியில் போக வேண்டும்.

2.நமக்கு கடன் வாங்கும் அதிகாரம் வேணும்.

3. எமதுமாகாண தேர்தலை நான்கள் ந்டத்த வேண்டும்.

4.வடக்கு கிழக்கு இணியக்கப்பட வேண்டும்.

5.எமக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும்.

இதற்கும் புலம் பெயர் தமிழர் சிறு முதலீடுகள் ஆரம்பிபதற்கும் தொடர்பு இல்லை.

அனந்த்தியை வீட்டுக்குள் உள்ளட்டும் மிரட்டினவர்கள். சர்வதேச உதவியுடன் தேர்தல் நடந்துதான் முடிந்தது. யாழ்ப்பாணத்தில் நடக்க போகும் ஒவ்வொன்றும் இனி வெளியே வரும். ஆமிதான் பொன்னம்பல வானேஸ்வரர் கோவிலுக்கு போக வேண்டுமேயல்லாமல் நாம் இனி நமது தொழிகளில் இறங்க பாத்திருக்க கூடாது. கூட்டமைப்பின் நீதியான ந்டத்தைகளை வைத்துக்குக்கொண்டு இனி சிங்களவர்களும் மற்ற்வர்களும் வியாபாரங்களை தொடங்க எமது மக்களை யாழ்ப்பாணத்தில் பின்னடிக்க வைத்து ஏமாற்றிவிடக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்

இதை நான்ஆமோதிக்கின்றேன்

தகவல்களை முழுமையாக தரத்தேவையில்லை

இன்றைய நிலையில் எந்தளவு தூரம் நாம் முதலிடலாம்

அவற்றை எம்மக்களுக்காக எந்தளவுக்கு பாதுகாப்பாக செலவிடலாம் போன்றவற்றையும் எழுதுங்கள்

இது நல்ல ஐடியா. யாழ் களத்திலோ அல்லது ஒரு blog மூலமாகவோ சிறி லிங்கம் how to start a business in Northern Sri Lanka என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு பதிவு போட்ட்டால் பலருக்கு வசதியாய் இருக்கும்.

புலம் பெயர்ந்தவையை நான் திட்டுறது உண்மைதான், ஆனால் நடக்க கூடிய விசயங்களை செய்யும் சொல்லும் போது வரெவேற்க்கத்தானே வேணும்.

நெடுக்கு கிண்டல் பண்றமாரி சிறு வியாபாரங்கள் ஒன்ரும் இன்ன விசயங்கள் இல்லை. அவை ஒவ்வொரு வீட்டில் அடுப்பெரிய உதவும் சக்தி உடயன.

Link to comment
Share on other sites

ஆம்

இதை நான் ஆமோதிக்கின்றேன்

தகவல்களை  முழுமையாக தரத்தேவையில்லை

இன்றைய  நிலையில் எந்தளவு தூரம் நாம் முதலிடலாம்

அவற்றை  எம்மக்களுக்காக எந்தளவுக்கு  பாதுகாப்பாக செலவிடலாம் போன்றவற்றையும் எழுதுங்கள்

தயவு செய்து கோழிப்பண்ணை மட்டும் ஆரம்பிக்காதீர்கள்... !   கேட்டு அலுத்து போச்சுது...    :D  கோமிக்காய்ச்சல் வந்தால் எல்லாம் படுத்து விடும்... 

நல்ல தொழில் முதலீடு எண்டு என்னை கேட்டியள் எண்டால் அண்ணை...   ஆள் கடல் மீன் பிடிப்புக்கு தேவையான  படகும் வலைகளும் வாங்கி  விடலாம் அண்ணை...  நல்ல சம்மாட்டியாக பார்த்து லீசுக்கு விட்டீர்கள் எண்டால்  வருவாயை மீண்டும் அங்கேயே முதலிடலாம்...  

இல்லை கரைவலை மீன் பிடிப்பு நல்லதொரு முதலீடு ....   பருத்திதுறை முதல் அளம்பில் (நாயாறுவரை)  பாறை இல்லா கடலில் நல்லதொரு தொழில்... 

முல்லை தீவு அளம்பில் பக்கம் நல்ல வலைகள் இல்லாமல்  கரையில் மீன் பிடிக்கும்  நீர்வலைகளோடுதான் பல சனம் காலத்தை ஓடுது...    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் போய் வியாபாரம் செய்யுறதில் பிரச்சினை வரும். ஆனா சிறிலிங்கம் சொன்னமாதிரி முறைய செய்தா பிரச்சினை குறைவா இருக்கும். நாட்டுடைமை ஆக்கினா கூட சட்டப்டி வெளிநாட்டு காரரின் வியாபாரம் எண்டால் நட்ட ஈடு கொடுக்கொனும்.

பெரியளவில முதிலிடுறவைக்கு BoI மூலம் முதலிட்டா வரிச்சலுகை, வாகன இறுக்குமதி பத்திரம் எண்டு வசதிகளும். உண்டாம்.

போராட்டம் அரசியல் உரிமையை பற்றியது, பொருளாதார வாய்ப்பு பற்றியதல்ல.

ஆனால் சுவரில்லாமல் சித்திரம் வரையேலாது. முதல் கடமை மக்களை முடிந்த்ஹளவு கைதூக்கி விடுறதுதான்.

Link to comment
Share on other sites

ஊரில் போய் வியாபாரம் செய்யுறதில் பிரச்சினை வரும். ஆனா சிறிலிங்கம் சொன்னமாதிரி முறைய செய்தா பிரச்சினை குறைவா இருக்கும். நாட்டுடைமை ஆக்கினா கூட சட்டப்டி வெளிநாட்டு காரரின் வியாபாரம் எண்டால் நட்ட ஈடு கொடுக்கொனும்.

ஏன் அண்ணை ஊரிலை உங்களுக்கு எல்லாம் சொந்தமே இல்லையா...?? இல்லை அவர்கள் நம்பிக்கையானவர்கள் இல்லையா...??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.  
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.