Jump to content

தோழர் தியாகுவின் போராட்டத்தைக் கைவிடுமாறு மன்மோகன் சிங் கோரிக்கை


Recommended Posts

தமிழ் நாட்டில் போராட்டங்களால் எந்தப் பயனும் இல்லை என்று முழங்கியவர்கள் எங்கே?

போராட்டங்களையும் போராடுபவர்களையும் கொச்சைப் படுதியவர்கள் எங்கே?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுமே எனக்கு விளங்குதில்லை. தியாகு உண்ணாவிரதம் இருக்குறார். மன்மோகன் சிங் எழுதிறார் கடிதம் கருணாநிதிக்கு அவரின் அலுவலகத்தின் நன்மதிப்பைப் பயன்படுத்தி தியாகு அவர்களின் உண்ணாவிரதத்தை கைவிடும்படி. இப்ப ஏன் இந்தக் கடிதத்தை கருணாநிதிக்கு எழுதவேணும். நேரே தியாகுவுக்கு எழுதலாம் தானே? இல்லாட்டி இவ்வாறான மக்கள் போராட்டங்களை மழுங்கடிப்பதில் கருணாநிதி வல்லவர் என்பதால் எழுதினாரா? ஒர் உயிர் உன்னதமானது அதை காப்பது முக்கியமானது. இப்ப கருணாநிதி நல்லவரா கெட்டவரா?

எனது அபிப்பிராயம் தோழர் தியாகு இதுவரை செய்தது போதும். அவரது உயிர் பெறுமதியானது

Link to comment
Share on other sites

கடிதங்களிலேயோ காரியமாற்றும் அரசாங்கம் எது என்று கேட்டால் அது இந்தியாவில் தானாம்.

 

 

Link to comment
Share on other sites

எப்படி இருந்தாலும் தோழர் தியாகுவின் போராட்டம் மத்திய அரசின் கவனத்திற்கு வந்து பதில் கொடுக்கப்பட்டிருக்கு. இதுவரையில் எத்தனையோ தடவை கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழக மீனவர் பிரசனைகளை தபால்களில் கூறும் போது அவர்கள் பதில் அளிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன் மோகன் சிங்  மற்றும்.... தமிழ் உணர்வாளர்களினினதும்....

வேண்டுகோளையும்  ஏற்று, தியாகு அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்.

Link to comment
Share on other sites

மத்திய அரசு  தமிழ் நாட்டு மக்களின் உணர்வை புரிந்து கொண்டு செயற்படும். தியாகு அவர்கள் தனது உயிரை மாய்க்காமல் அல்லது உடல் உறுப்புக்கள் பாதிக்கும்  நிலையை நெருங்கியுள்ளதால் உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே தீர்மானம் எடுக்கப்படும் - மன்மோகன் சிங்

15 அக்டோபர் 2013


தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே தீர்மானம் எடுக்கப்படும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக கட்சிக்கு வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து உறுதியான தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமர்வுகளில் பங்கேற்பது தொடர்பிலான சகல காரணிகளும் கவனத்திற் கொள்ளப்பட்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மன்மோகன் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தோழர் தியாகு நடத்திய வரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து தமிழக அமைச்சர் ரி.ஆர்.பாலு பிரதமருக்கு விளக்கியுள்ளார். கடந்த 1ம் திகதி தொடக்கம் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை தோழர் தியாகு நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதே தோழர் தியாகுவின் கோரிக்கையாக அமைந்துள்ளது. தியாகுவின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாலு, பிரதமரிடம் தெரிவித்துள்ளார். தியாகுவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கலைஞர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங், பாலுவிடம் கோரியுள்ளார்.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97677/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்! மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு அருகேயுள்ள மாலோம் என்ற புறநகர்ப் பகுதியில் அசாம் துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் சாலையோரத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற அப்பாவிகள். மாலோம் படுகொலை என்று அழைக்கப்படும் இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சிப்பாய்களுள் ஒருவன்கூட இதுநாள்வரை தண்டிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தப் படுகொலை நீதிமன்ற விசாரணையைக்கூட இன்னும் எட்டவில்லை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அச்சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது. ஐரோம் ஷர்மிளா, மாலோம் படுகொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு அரண்டு போன மணிப்பூர் மாநில அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது. அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறைகூடத் தனது வீட்டிற்குச் செல்லவில்லை. மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம் – அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் அவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைத்துவைக்க முடியும் – அவர் தனது போராட்டத்தை ஆதரித்து வரும் மேரா பாபி என்ற மகளிர் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார். உடனே, மணிப்பூர் மாநில அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அடைத்துவிடும். அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது பற்றி ஆராய கமிட்டி அமைக்கிறோம்; எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு மாநில அரசு நடத்திய பேரத்தையெல்லாம் ஐரோம் ஷர்மிளா ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை. அவரைப் பொருத்தவரை, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே வீட்டிற்குச் சென்று வயது முதிர்ந்த தனது தாயாரின் மடியில் தலை சாப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூ கி-யைப் பதினைந்து ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்ததற்கும் இந்தியக் ‘குடியரசு’ ஐரோம் ஷர்மிளாவைப் பத்தாண்டுகளாக மருத்துவமனை என்ற கிளைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. போராளிகளின் மனவுறுதியையும் கொள்கைப் பற்றுறுதியையும் அடக்குமுறைகளின் மூலம் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார். வெல்லட்டும் அவரது போராட்டம்! இதையும் வாசிப்போம்.....அதிகாரம் மூலம் இதையும் ஒடுக்குவார்களோ தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்.......நன்றிகள் வினவு .com

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் உணர்வுக்கும், திமுகவின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தான்  மன்மோகன் முடிவெடுப்பார் எண்று கடித்தத்தில்  சொல்லப்பட்டு இருக்கிறது....

 

தமிழ் நாட்டி மக்களும் தலைவர்களும் செய்த போராட்டங்கள்  காங்கிரசாருக்கு கொடுத்த அழுத்தம் எவ்வளவு என்பதை புரிய வைக்க  இது போதுமானது... 

Link to comment
Share on other sites

சிங்கின் நோக்கம் எதுவானாலும் தியாகு அவர்கள் உண்ணாவிரதத்தை உடனடியாக முடித்துக்கொள்ள வேண்டும்..!

Link to comment
Share on other sites

உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள அந்த பதில் போதுமானது. பின்னர் மன்மோகன் சிங் கின் வருகையால் புதிய பிரச்சனைகள் ஏற்பட்டால் வேறு போராட்டங்கள் தொடங்க வேண்டும். இது அவர்கள் தமிழகம் மீது இருக்கும் பயத்தை காட்டுகிறது. இப்போது அதை பயன் படுத்திக்கொள்ள வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"...that I should not attend the CHOGM conference..."

 

இவரை கலந்து கொள்ள வேண்டாம் என யார் சொன்னது? 

"மண்" மோகன் கலந்துகொள்ளாட்டில் சோனியா கலந்து கொள்ளலாமா?[/size]

 

 

1.இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடத்த கூடாது, [/size]

2.இலங்கையை காமன் வெல்த் கூட்டமைப்பில் இருந்தே நீக்க வேண்டும்.[/size]

 

இது தானே கோரிக்கை. [/size]

நியானி: இணைக்கப்பட்ட படமும் ஒரு வசனமும் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இவரை கலந்து கொள்ள வேண்டாம் என யார் சொன்னது? 

"மண்" மோகன் கலந்துகொள்ளாட்டில் சோனியா கலந்து கொள்ளலாமா?[/size]

 

 

1.இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடத்த கூடாது, [/size]

2.இலங்கையை காமன் வெல்த் கூட்டமைப்பில் இருந்தே நீக்க வேண்டும்.[/size]

 

இது தானே கோரிக்கை.[/size]

நியானி: இணைக்கப்பட்ட படமும் ஒரு வசனமும் நீக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வைத்து நிறுத்தியிருந்திருக்க கூடிய மகாநாட்டை விடாபிடியாக இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தது இந்தியா. ஆனால் இனி அதை தடுத்து நிறுத்துவது தனிய இந்தியாவின் கைகளில் இல்லை. அதே போலவே பொது நலவாயத்தில் இருந்து நீக்குவதும் இந்தியாவிடம் முழுவதாக இல்லை. அவசரமாக செய்யக் கூடியது இந்தியாவை வரவிடாமல் தடுப்பது. இந்தியா அதை வெளிப்படையாக கூறினால் மற்றைய நாடுகளை இலங்கையிலிருந்து மகாநாட்டை மாற்று மாறு கோரிக்கைவிடலாம்.  

 

இந்தியா வராமல் விட்டால், கொள்கை அளவில் தன்னும் மற்றய இரண்டையும் இந்தியா ஏற்றுக்கொள்கிறதாக விவாதிக்க முடியும். அதாவது இலங்கை மகாநாட்டுக்கு பொருத்தமற்ற நாடு என்பதால் போகவில்லை; எனவே பொருத்தமான நாட்டுக்கு மகாநாடு மாற்றப்பட வேண்டும்............இலங்கை குற்றம் புரிந்த நாடு ஆகையால் அதனுடன் பிரத்தியேக வழிகளில் உறவுகளை வைக்க அதை பொது நலவாயத்திலிருந்து விடுவிக்க வேண்டும்............

 

 

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் வைத்து நிறுத்தியிருந்திருக்க கூடிய மகாநாட்டை விடாபிடியாக இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தது இந்தியா. ஆனால் இனி அதை தடுத்து நிறுத்துவது தனிய இந்தியாவின் கைகளில் இல்லை. அதே போலவே பொது நலவாயத்தில் இருந்து நீக்குவதும் இந்தியாவிடம் முழுவதாக இல்லை. அவசரமாக செய்யக் கூடியது இந்தியாவை வரவிடாமல் தடுப்பது. இந்தியா அதை வெளிப்படையாக கூறினால் மற்றைய நாடுகளை இலங்கையிலிருந்து மகாநாட்டை மாற்று மாறு கோரிக்கைவிடலாம்.  

 

இந்தியா வராமல் விட்டால், கொள்கை அளவில் தன்னும் மற்றய இரண்டையும் இந்தியா ஏற்றுக்கொள்கிறதாக விவாதிக்க முடியும். அதாவது இலங்கை மகாநாட்டுக்கு பொருத்தமற்ற நாடு என்பதால் போகவில்லை; எனவே பொருத்தமான நாட்டுக்கு மகாநாடு மாற்றப்பட வேண்டும்............இலங்கை குற்றம் புரிந்த நாடு ஆகையால் அதனுடன் பிரத்தியேக வழிகளில் உறவுகளை வைக்க அதை பொது நலவாயத்திலிருந்து விடுவிக்க வேண்டும்............

உண்மை தான் மல்லை.

 

நீங்கள் எழுதியது போல் நடக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும். 

 

ஆனால் அவரின் கடிதத்தை பாருங்கள். அவர் கலந்துகொள்வது பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளார் (இந்தியா என்று குறிப்பிடவில்லை). தான் உறுதியாக கலந்துகொள்ள மாட்டேன்  என்றும் குறிப்பிடவில்லை. தமிழர்களின் உணர்வும் திமுகவின் உணர்வையும் வைத்தே முடிவு அமையும் என்பது போல் எழுதியுள்ளார். அவர் குறிப்பிடும் அந்த "உணர்வை" எதை வைத்து அளக்கப்போகின்றார்? 

 

இவர் தனது கடிதத்தை உண்ணாவிரதத்தில் சம்மத்தப்பட்டவர்க்கு அனுப்பாமல் கருணாநிதிக்கு அனுப்பியதை வைத்தே உள் நோக்கத்தை புரிந்துகொள்ளலாம். 

 

நாளை கருணாநிதி இப்படி ஒரு செய்தியும் வெளியிடலாம். என்னால் மன்மோகன் சிங்கை தான் தடுக்கமுடிந்ததே தவிர இந்தியாவை தடுக்கமுடியாமல் போய்விட்டது என்று ஒரு மாயையான வெற்றியை உருவாக்குவார். மன்மோகன் சிங்கிற்கு பதிலாக வேறொருவர் அங்கு செல்வார் (மன் மோகன் அங்க போய் வாயை திறந்து பேசவா போகிறார்).

 

 உண்மையில் தமிழர்களின் உணர்வை மதிக்கிறவர்களாக இருந்திருந்தால் இந்தியா பங்கேற்காது என்றே அறிவித்திருக்க வேண்டும். 

 

நம்மவர்களிற்கு இது வெற்றிச்செய்தியாக காட்டி போராட்ட வலுவை குறைப்பதற்கு நடக்கும் நாடகமாகவே நான் இதை பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் உணர்வுக்கும், திமுகவின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தான்  மன்மோகன் முடிவெடுப்பார் எண்று கடித்தத்தில்  சொல்லப்பட்டு இருக்கிறது....

 

தமிழ் நாட்டி மக்களும் தலைவர்களும் செய்த போராட்டங்கள்  காங்கிரசாருக்கு கொடுத்த அழுத்தம் எவ்வளவு என்பதை புரிய வைக்க  இது போதுமானது... 

இனி மன்மோகன்சிங் அப்படியான முடிவுகள் தான் எடுப்பார் என நம்புகின்றீர்களா?

சிங்கிற்கு ஒரு நன்றி கடிதம் போடுவவோமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி. தோழர் தியாகு அவர்களுக்கு நன்றியும். :icon_idea:


இதையும் தான் தான் முடிச்சு வைச்சு.. பொதுநலவாய நாடுகள் கூட்டத்தை இந்தியப் பிரதமர் பகிஸ்கரிக்க வைச்சதா கருணாநிதி கதை அளக்கப் போறார். பொறுத்திருந்து பாருங்கள்..! :lol::rolleyes:

Link to comment
Share on other sites

முடிவுக்கு வந்தது தோழர் தியாகுவின் 15 நாள் உண்ணா நிலைப் போராட்டம்!

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்றும் அப்படி நடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தியும் தோழர் தியாகு 15 நாட்களாக உண்ணா நிலை போராட்டம் செய்து வந்தார். இந்த போராட்டத்திற்கு இறுதி வரை இந்தியா எந்த பதிலும் கொடுக்காத நிலையில் தமிழ் உணர்வாளர்கள் பலரும் தோழர் தியாகுவின் உண்ணா நிலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று முகநூல் வாயிலாக கோரிக்கை வைத்தனர் . அதே போல் தமிழ் அமைப்புகள் , தமிழக கட்சிகள், இயக்கங்கள், மாணவர்கள் , சமூக ஆர்வலர்கள் பலரும் தோழர் தியாகு தன்னுடைய உண்ணா நிலைப் போராட்டத்தை முடித்துக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். வேறு வழிகளில் போராட்டத்தை தொடரலாம் என்றும் அழுந்தம் கொடுத்தனர். அந்த அழுத்தம் மற்றும் தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தோழர் தியாகு தன்னுடைய உண்ணா நிலையை இன்றோடு முடித்துக் கொண்டார்.

சென்னை பொது மருத்துவமனையில் , தாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பழச்சாறு கொடுக்க தனது உண்ணா நிலையை நிறைவு செய்தார் தோழர் தியாகு. இந்த நிகழ்வில் தொல் திருமாவளவன், ஜவஹருல்லா, ஐயா மணியரசன், தி.வி.கே.எஸ் இளங்கோவன், குடந்தை அரசன் ஆகிய தலைவர்களும் கலந்து கொண்டனர் .

அதே சமயம், இந்திய பிரதமர், திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் தோழரை போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார் . இலங்கைக்கு அவர் செல்வது குறித்து மறு பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார் பிரதமர். மேலும் தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கப் படும் என்று கடிதத்தில் குறிப்பிட்டார் இந்திய பிரதமர். இதை முதல் வெற்றியாக கருத்தில் கொண்டும் தோழர் தன்னுடைய போராட்டத்தை நிறைவு செய்வதாக தெரிவித்தார்.

இருப்பினும், இந்தியா முற்றிலும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் வரை வேறுவகையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்தார் தோழர் தியாகு. தமிழக மக்கள் இனி வெவ்வேறு வகையில் போராட்டத்தை முன்னெடுக்க தயாராக வேண்டும்.

 

1238354_730196750328511_408967849_n.jpg

 

1385592_730196746995178_907217748_n.jpg

 

1383140_730196876995165_2086594818_n.jpg

 

1378276_730198110328375_2101541697_n.jpg

 

 

 

Rajkumar Palaniswamy

 

(facebook)

 

 

Link to comment
Share on other sites

இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பியக்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக வைக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கிணங்கவும், தொடர்ச்சியாக ஆதரவு இயக்கங்களின் போராட்டங்களைக் குறித்து விளக்கியதாலும், மருத்துவமனையிலிருந்த நிலையினாலும் (கட்டாயப்படுத்தி குளூக்கோசு ஏற்ற தயார்படுத்தப்பட்ட நிலை) தோழர் தியாகு அவர்கள் புரசைவாக்கம் உழைக்கும் மக்கள் மன்றத்தில் சென்று உண்ணாவிரதத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முடிவு செய்யப்பட்ட்து.

 

ஆனால் காவல்துறை அவரை மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. உள்ளேயும் ஒரு சிலரைத் தவிர அனுமதிக்கவில்லை. வழக்கமாக பெரும்பாலும் எல்லா நாட்களிலும் வருவது போல் வந்த தொல். திருமாவளவன் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் அறிவிப்பு வெளிட்டார்.

எனவே இது வேறு யாருடைய , முயற்சியாலும் நடந்ததில்லை. காமன்வெல்த் எதிர்ப்பியக்கம் மற்றும் தோழமை அமைப்புகள், மாணவர் அமைப்புகள் தந்த உறுதியாலும் தாற்காலிகமாக உண்
ணாவிரதப் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தோழமை அமைப்புகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் தொடரும். அய்யாவின் அடுத்த கட்ட நிகழ்வு குறித்து அய்யா
மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு அறிவிப்பார்.

 

(facebook)

Link to comment
Share on other sites

உண்மையில் தமிழர்களின் உணர்வை மதிக்கிறவர்களாக இருந்திருந்தால் இந்தியா பங்கேற்காது என்றே அறிவித்திருக்க வேண்டும். 

 

நம்மவர்களிற்கு இது வெற்றிச்செய்தியாக காட்டி போராட்ட வலுவை குறைப்பதற்கு நடக்கும் நாடகமாகவே நான் இதை பார்க்கின்றேன்.

 

மன்மோகன் சிங் கூறியதை எல்லாம் கணக்கில் எடுக்க முடியாது. தமிழ் மக்கள் கோரிக்கைக்கு இணங்குவதாக இருந்தால் இந்தியா commonwealth மாநாட்டில் கலந்து கொள்ளாது என இப்பொழுதே அவர் உறுதியாக கூறியிருக்கலாம்.

 

இந்த அறிக்கை உண்ணாவிரதத்தை தடுக்கும் ஒரு உத்தியாகவே பார்க்கிறேன்.

ஆனால் தியாகு ஐயா மாணவர்கள் மற்றும் ஏனைய கட்சியினர் போராட்டத்தை கையில் எடுப்பதாக உறுதியளித்ததாலேயே உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார். அது இப்பொழுது கலைஞருக்கு வாய்ப்பாகி விட்டது.

 

இதையும் தான் தான் முடிச்சு வைச்சு.. பொதுநலவாய நாடுகள் கூட்டத்தை இந்தியப் பிரதமர் பகிஸ்கரிக்க வைச்சதா கருணாநிதி கதை அளக்கப் போறார். பொறுத்திருந்து பாருங்கள்..! :lol::rolleyes:

உண்மை அண்ணா,

 

இவ்வளவு நாளும் கலைஞர் தொலைக்காட்சியில் மௌனமாக இருந்து விட்டு இப்பொழுது தியாகு ஐயா போராட்டத்தை கைவிட்டிட்டார் என்ற செய்தியை கலைஞர் தொலைக்காட்சியில் அடிக்கடி போட்டுக்கொண்டிருக்கிறார்களாம் என்று சில தமிழக உறவுகள் முகநூலில் எழுதியிருப்பதை பார்த்தேன்.தம்மால் தான் எல்லாம் என்பது போல் இனி பிரச்சாரம் செய்யப்போகிறார்கள். :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ தெரியவில்லை எம்ஜிஆர் ற்கு பின் தமிழ் நாட்டில் எமக்காக குரல் கொடுப்பவர்கள் எல்லாம் ஒன்றில் ஒன்றுக்குமுதவாத உணர்ச்சியாளராய் இருக்கிறார்கள் அல்லது திருமாவை போல் ஊரை ஏய்த்து பிழைப்பவர்களாய் இருக்கிறார்கள். எதிரணியில், சோ, ராம், ஏன் சுசாமி கூட நேர்த்தியாக காய்நகர்த்தும் போது இவர்கள் மறுபடியும் போய் கருணாநிதியின் கொல்லையில் விழுகிறார்கள்.

சிங்கு கடிதம் போட்டா என்ன இமெயில் பண்ணிணா என்ன? நமக்கு உடனியாக தேவை மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரம். அதை பெற்று தருவாரெண்டால் சிங்கு அம்பாந்த்ஹோட்ட வுக்கு வந்து கிரிப்ச்த் சாப்பிட்டால் நமக்கென்ன.

Link to comment
Share on other sites

அய்யய்யா கருணாநிதி.

பிரதமர், காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதா அல்லது கூடாதா என்பதல்ல கோரிக்கை. இந்தியா மற்றும் அதன் சார்பில் யாரும் கலந்துகொள்ள கூடாது , மேலும் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் இந்தியா லாபி செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

கனடா அதிபரை தொடர்ந்து. இந்தியாவும் "இனபடுகொலை செய்யப்பட்ட நாட்டில் காமன்வெல்த் நடக்க கூடாது " என்று அறிக்கை வெளியிட வேண்டும்

அய்யய்யா கருணாநிதி , பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்கிற உட்டாலக்கடி அரசியல் கடிதத்தை காட்டி ...அருவருப்பு அரசியல் செய்ய முயல வேண்டாம்.

 

(facebook: loyolahungerstrike)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.