Sign in to follow this  
மெசொபொத்தேமியா சுமேரியர்

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.

Recommended Posts

எனக்குத் தெரிந்த பல ஆண்கள், தாம் தம் மனைவியை அடிமைபோல் நடத்தவில்லை. முழு சுதந்திரமும் கொடுக்கிறோம் என்கின்றனர். ஆனால் பல பெண்கள் ஆண்கள் கொடுக்காமல் தாமே தம் சுதந்திரத்தின் எல்லையை வரையறை செய்கின்றனர். பல ஆண்கள் சுதந்திரம் கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டே அடிமைகளாய் இன்னும் நடத்துவதை நான் கண்டிருக்கிறேன்.

சில பெண்களுக்கு தனது கணவன் எவ்வளவு சம்பளம் ஈட்டுகிறார். அதை எதற்ககெல்லாம் செலவு செய்கிறார் என்றே அறியாது தாம் வேலை செய்து உழைக்கும் பணத்தையும் கணவனிடமே கொடுத்து, தன தேவைக்கே கை ஏந்தும் நிலையில் கூட புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை, உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அதே வேளை உங்கள் மனைவியரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள்.??????
அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை நீங்கள் அவர்களுக்கு வழங்குகிறீர்களா??????

எங்கே துணிவுடன் யார் மனம் திறக்கிறீர்கள் பார்ப்போம்.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

கணக்கு வழக்கு முழுவதும் பார்க்கிறது மனைவிதான்.. கையேந்தும் நிலைமைதான் எனக்கு.. :(

கடனட்டையில் பத்து டொலர் செலவழித்தாலும் விளக்கம் கொடுக்கவேண்டிய நிலை ஒன்று உள்ளது.. :blink: எனக்கு சுதந்திரம் இருக்கா என்கிறதை நீங்கள்தான் சொல்லவேணும்.. :(:D

Share this post

Link to post
Share on other sites

நான் என் துணைவிக்கு பூரண சுதந்திரம் வழங்க நான் என்ன அவளைக் கட்டி ஆளும் அரசனா.. அல்லது இயற்கையா..??! அவளுக்கு இந்த இயற்கையில் உள்ள சுதந்திரத்தை அவள் சக மனிதனாக அனுபவிக்க எல்லா வகையிலும்.. உரித்துடையவள். அவளுக்கு எவரும் சுதந்திரத்தை வழங்கனும் என்றில்லை. அவளுடைய சுதந்திரத்தைப் பறிக்காமல் விட்டாலே போதும். ஆனால் அதேவேளை அவள் எனது சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது. பாதுகாக்கத் தெரிஞ்சிருக்கனும்..! அவள் அதைச் செய்தால் நானும் அவளுக்கு அதையே செய்வேன்.

எனக்குத்தான் மனைவி இல்லையே.. அப்ப எப்படின்னு கேட்கிறீங்களா.... எனக்குள்ள ஒரு கற்பனையான அழகான.. அம்சமான.. அன்பான.. பெண் இருக்கா இல்லா அவா பற்றியது. :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

இசை உங்கள் வீட்டில் மட்டுமல்ல.. இந்த நிலை. அநேக தமிழர் வீடுகளிலும் இதே நிலை தான்.

அண்மையில்.. உறவினர் ஒருவரின் வீட்டுப் போயிருந்தேன். அவர்களின் பிள்ளைகளோடு உரையாடிய போது அவர்களுக்கு சைனீஸ் உணவு விடுதிக்கு போக விருப்பம் என்றார்கள். நான் உடனடியாகக் கிளம்பி விட்டேன். ஆனால் அவர்கள் அப்பாவிடம் கேட்க வேண்டும் என்றார்கள். அப்பாவிடம் கேட்டார்கள்.. அவர் அம்மாவிடம் கேட்க வேண்டும் என்றார். அம்மாவிடம் கேட்டார்கள். அம்மா ஏது சொன்னோவோ என்ன சொன்னாவோ தெரியாது.. பிள்ளைகள்.. மனதை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

விரும்பின ஒரு இடத்திற்கு போய் அதுவும் அபூர்வமாய்.. சாப்பிடக் கூட சுதந்திரம் இல்லாத நிலையை ஆண்கள் தான் அதிகம் அனுபவிக்கிறார்கள்  எம்மவர் மத்தியில்..! 

இந்தத் தலைப்பு உங்கள் கணவருக்கு நீங்கள் எவ்வளவு சுதந்திரம் வழங்கிறீங்க என்று அமைவதே தற்காலத்திற்கு உகந்தது..! :):icon_idea:

Share this post

Link to post
Share on other sites

பெரிய 'அம்பானி' குடும்பம், இரண்டு பேர் இருந்து கணக்கு வழக்குப் பார்க்க.  :D  வாழ்கிறதே கடனில :( அதுக்குள்ள என்ன பிரிவினை.   

வங்கிக்கு ஊதியம் வரும், குடும்பத் தேவைக்கேற்ப இருவரும் மட்டையைப் பாவித்து செலவழிக்க வேண்டியதுதான்.  

மற்றும்படி ஒருவரை அடக்கி ஆள்வதோ அல்லது அடங்கிப் போவதோ எனது குணமில்லை.

நான் என் துணைவிக்கு பூரண சுதந்திரம் வழங்க நான் என்ன அவளைக் கட்டி ஆளும் அரசனா.. அல்லது இயற்கையா..??! அவளுக்கு இந்த இயற்கையில் உள்ள சுதந்திரத்தை அவள் சக மனிதனாக அனுபவிக்க எல்லா வகையிலும்.. உரித்துடையவள். அவளுக்கு எவரும் சுதந்திரத்தை வழங்கனும் என்றில்லை. அவளுடைய சுதந்திரத்தைப் பறிக்காமல் விட்டாலே போதும். ஆனால் அதேவேளை அவள் எனது சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது. பாதுகாக்கத் தெரிஞ்சிருக்கனும்..! அவள் அதைச் செய்தால் நானும் அவளுக்கு அதையே செய்வேன்.

நெடுக்கரில் நிலையில் வரவேற்கக் கூடிய மாற்றம் தெரிகிறது. :D

Share this post

Link to post
Share on other sites

கேள்விய மாத்திப்போடுங்க :( என் ஆத்துக்காரி வந்து பதில் சொல்லுவா :D:icon_idea:

Share this post

Link to post
Share on other sites
நான் வச்சது தான் சட்டம். ஆத்துக்காரிக்கு கொஞ்சம் சுதந்திரம் குறைவு தான்.
 
சுதந்திரம் குறைவே ஒழிய மற்றப்படி அவ செய்யிற வேலைகள் சமைக்கிறது, பக்கத்தில இருக்கிற பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகளை கூட்டிக் கொண்டுபோய் விடுவது. கூட்டி வாறது... 4‍ - 5 நிமிச நடை. இப்படி மிகச் சில.
 
அதே நேரம் எனக்கும் சில சுதந்திரங்கள் இல்லை. உதாரணமாக, ஒரு பெண் -- முனியம்மா என்று வைத்துக் கொள்வோம்.
 
முனியம்மாவின் பின் பக்கம் பெரிதாக இருக்கிறது என்றோ அல்லது முனியம்மாவின் முன்பக்கம் பெரிதாக இருக்கிறது என்றோ கதைத்தால் பெரும் நச்சரிப்பாக முடியும்.
 
முனியம்மா ரொபிக் சுதந்திரம் இல்லை.

Share this post

Link to post
Share on other sites

இப்ப எங்காத்தில ஜனனாயகம் கொடிகட்டி பறக்குது. கிளிய கூண்டுக்கு வெளிய விட்டு கூண்ட தூக்கி தொலைவில போட்டு ரொம்ப நாளாச்சுது சார்.

Share this post

Link to post
Share on other sites

எனக்குத் தெரிந்த பல ஆண்கள், தாம் தம் மனைவியை அடிமைபோல் நடத்தவில்லை. முழு சுதந்திரமும் கொடுக்கிறோம் என்கின்றனர். ஆனால் பல பெண்கள் ஆண்கள் கொடுக்காமல் தாமே தம் சுதந்திரத்தின் எல்லையை வரையறை செய்கின்றனர். பல ஆண்கள் சுதந்திரம் கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டே அடிமைகளாய் இன்னும் நடத்துவதை நான் கண்டிருக்கிறேன்.

சில பெண்களுக்கு தனது கணவன் எவ்வளவு சம்பளம் ஈட்டுகிறார். அதை எதற்ககெல்லாம் செலவு செய்கிறார் என்றே அறியாது தாம் வேலை செய்து உழைக்கும் பணத்தையும் கணவனிடமே கொடுத்து, தன தேவைக்கே கை ஏந்தும் நிலையில் கூட புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை, உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அதே வேளை உங்கள் மனைவியரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள்.??????

அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை நீங்கள் அவர்களுக்கு வழங்குகிறீர்களா??????

எங்கே துணிவுடன் யார் மனம் திறக்கிறீர்கள் பார்ப்போம்.

உங்கடை கருத்தை நான் ஆமோதிக்கிறன் . ஏன் அவையிட்டை எங்கடை சுதந்திரத்தை கேட்டு அவையளை பெரிய மனிசர் அக்குறியள் ???? ஆனா உண்மையிலை பொம்பிளையள் தான் சுதந்திரம் எண்டு கதைச்சு கொண்டு  அடிமையாய் வாழ விரும்பினம்  .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

தலைப்பே பிழை! எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர் என்ற கேள்வி கணவன் கொடுக்கும் சுதந்திரத்திற்கு எல்லை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றது. <_<

இது மனைவியானவள் கணவனுக்குக் கட்டுப்பட்டு வாழுவதுதான் ஒரு நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்றும், அதேவேளை கணவன் தேவையான சுதந்திரத்தைக் கொடுத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்றும் நினைக்கும் மனோநிலையைக் காட்டுகின்றது.

ஆணுக்குப் பெண் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று நினைக்கும் பெண் அந்தக் கட்டுப்பாட்டின் இறுக்கம், தளர்வைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? :rolleyes: 
 
  • Like 6

Share this post

Link to post
Share on other sites

இன்னும் எத்தனை நாளைக்கு தான் பெண் விடுதலை, சம உரிமை என்று அரைச்ச மாவையே அரைக்கிறது? 

என்னமோ பெண்கள் பாவப்பட்டவர்கள் போலும் ஆண்கள் அவர்களின் உரிமையை பறித்துவிட்டார்கள் என்பது போன்ற தோற்றம் ஊரில் 90களில் (அல்லது இப்பொழுதும்) இருந்திருக்கலாம். 

இங்க வெளிநாட்டில ஆண்களிற்கு தான் சுதந்திரம் பறி போய்விட்டது. ஒரு நிமிடம் ஆற அமர சிந்தித்துப்பாருங்கள். 

வெளிநாடுகளில் சட்டங்கள் அனைத்துவிதத்திலும் பெண்களிற்கு முன்னுரிமை என்பதையே முன்னிறுத்துகின்றது. 

மனைவிக்கு கணவன் அடித்தால் உள்ளே தூக்கி போடுவார்கள். அதுவே கணவனுக்கு மனைவி அடித்தால்? 

இராணுவ சேவை என்பது ஆண்களிற்கு கட்டாயம். பெண்களிற்கு? 

வேலைக்கு இன்ரர்வியு போனால் அங்க அழகான பெண்ணுக்கு தான் சந்தர்ப்பம் அதிகம்.

பிள்ளை பிறந்த மனைவிக்கு 4 மாதம் சம்பளத்தோட லீவு குடுக்கிறாங்கள். ஆனால் எங்களுக்கு வெறும் 2-3 நாள் தான்  :D ?

விவாகரத்து என்றால் ஆண் பெண்ணிற்கு வாழ்க்கைச்செலவிற்கு பணம் கொடுக்க வேண்டும். பிள்ளை பராமரிப்பிலும் பெண்ணிற்கே முன்னுரிமை.

கல்யாணம் பண்ணும் போது எத்தினை பவுனில தாலி கட்டுறம். ஆனா எங்களுக்கு வெறும் ஒரே ஒரு மோதிரம் மட்டும் தானே மிச்சம்  :wub:

ஒரு கல்யாண சாறியின்ர விலை கூட வராது எங்கட மொத்த கல்யாண உடுப்பும் :(

பெண் குழந்தை பிறந்த மகாலட்சுமி பிறந்திருக்கு என்டு சொல்றது. என்டைக்காவது ஆண் குழந்தை பிறந்தா மகாலட்சுமன் (ஏதோ ஒன்று) பிறந்திருக்கு என்டு சொன்னதுன்டா? ஆக மொத்தம் பிறப்பிலையே நம்மட உரிமை பறிபோச்சு :unsure:

காதலிக்கும் போது தர்ம அடி பெண்கள் வாங்கியிருக்காங்களா? எத்தனை உள் காயங்களோட சிங்கங்கள் இப்பவும் இருக்கு.  :huh:

இவ்வ்வ்வ்ளோ உரிமைகளையும் பறிகொடுத்திட்டு நாங்க வேலையால வீட்டுக்கு வந்து களைப்பா இருக்கு ஏதாவது குடிக்க கொண்டுவாங்க என்டா.... எங்களை அடிமைப்படுத்திறியள் என்டுறது. :icon_idea:

நாட்டாமை தீர்ப்பு: ஒரே ஒரு விடயம் மட்டும் உண்மை. எதுவெல்லாம் பெண்களுக்கு சாதகமா இருக்கோ அதில மட்டும் தான் விடுதலை எதிர்பாப்பாங்க. எதெல்லாம் கஸ்ரமான வேலையோ அதுக்கு ஒரு ஆண் வேண்டும். 

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

மொசு ஐயா, நீங்கள் சொன்னதுதான் உண்மை.

கணவன் தன் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்திருக்கின்றேன் என்று சொல்வதே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான்.

ஆம்பிளைக்கு ஆயிரம் செலவு இருக்கும் அதைச்சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே பல இடங்களில் நடக்கிறது!.

அண்மையில் நான் அதிர்ச்சி அடைந்த ஒரு செய்தி என் நெருங்கிய தோழி ஒருவரின் உறவினப்பெண்ணொருத்திக்கு அவர் கணவன் தான் சாப்பிட்ட தட்டில் தான் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயமாம்!....என்னால் நம்பவே முடியவில்லை!....இன்னும் எவ்வளவோ நடக்கிறது அதை வெளியில் வந்து சொல்லக்கூட முடியாமல் 'குடும்பப்பெயர் கெட்டுவிடுமோ என்ற காரணத்தால்" தவிர்க்கிறார்கள் பெண்கள்!.

Share this post

Link to post
Share on other sites

என் மனைவிக்கு நான் முழுச்சுதந்திரமும் தந்துள்ளேன் என்றால் நீங்க நம்பவா போறீங்க! :huh: ^_^  <_<   

நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார்பைக்கத்தான் பாப்பீங்க. நாங்க மோட்டார்பைக்குல வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க. நாங்க ஜீன்ஸ் பேண்டுத்தான் போட்டாக்கா நீங்க பேகி பேண்டுதான் பாப்பீங்க. நாங்க பேகி பேண்டுதான் போட்டாக்கா நீங்க வேட்டியத்தான் தேடுவீங்க. ஒண்ணுமே விவரங்கள் புரியல்ல, என்னதான் புடிக்குமோ தெரியல்ல, அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் புடிச்சாச்சு :D  :D :D  :D  

Share this post

Link to post
Share on other sites

நாசமா போச்சு...  

எப்ப ஆண்களின் முடிவை மனிசிமார் காது குடுத்து கேட்டு இருக்கினம்...  ??  தாங்கள் நினைச்சதை மட்டும் தானே செய்யுறவை....??

 எனக்கு  இப்ப சுதந்திரம் தந்து இருக்கிறார்களா எண்டு தேடிக்கொண்டு இருக்கிறன்... இதுக்கை நான் சுதந்திரம் குடுக்கிறதோ...   சும்மா கடுப்பை கிளப்பாதேங்கோ.. 

ஏதாவது கல்யாணவீடுகளுக்கு போனால் மாப்பிள்ளையை பாத்து நான் சொல்லுறது தம்பி கடைசியாய் ஒருக்கா படம் எடுக்கேக்கை தன்னும் சிரியப்பு...  :D

Edited by தயா
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

கணக்கு வழக்கு முழுவதும் பார்க்கிறது மனைவிதான்.. கையேந்தும் நிலைமைதான் எனக்கு.. :(

கடனட்டையில் பத்து டொலர் செலவழித்தாலும் விளக்கம் கொடுக்கவேண்டிய நிலை ஒன்று உள்ளது.. :blink: எனக்கு சுதந்திரம் இருக்கா என்கிறதை நீங்கள்தான் சொல்லவேணும்.. :(:D

கையேந்தும் நினை உங்கள் ஆளுமை இன்மையையோ அல்லது மனைவியின்பால் நீங்கள் கொண்டுள்ள ஆதீத அன்பையோதான் காட்டி நிற்கிறது. நீங்கள்தான் இசை அது எதுவென்று கூறவேண்டும். :lol:

நான் என் துணைவிக்கு பூரண சுதந்திரம் வழங்க நான் என்ன அவளைக் கட்டி ஆளும் அரசனா.. அல்லது இயற்கையா..??! அவளுக்கு இந்த இயற்கையில் உள்ள சுதந்திரத்தை அவள் சக மனிதனாக அனுபவிக்க எல்லா வகையிலும்.. உரித்துடையவள். அவளுக்கு எவரும் சுதந்திரத்தை வழங்கனும் என்றில்லை. அவளுடைய சுதந்திரத்தைப் பறிக்காமல் விட்டாலே போதும். ஆனால் அதேவேளை அவள் எனது சுதந்திரத்தையும் பறிக்கக் கூடாது. பாதுகாக்கத் தெரிஞ்சிருக்கனும்..! அவள் அதைச் செய்தால் நானும் அவளுக்கு அதையே செய்வேன்.

எனக்குத்தான் மனைவி இல்லையே.. அப்ப எப்படின்னு கேட்கிறீங்களா.... எனக்குள்ள ஒரு கற்பனையான அழகான.. அம்சமான.. அன்பான.. பெண் இருக்கா இல்லா அவா பற்றியது. :lol::D:icon_idea:

கற்பனையில் உள்ள பெண்ணுக்குச் சரிதான் நெடுக்ஸ். நீயா வாழ்வு அப்படி அல்லவே. அதனால் உங்கள் விடயத்தில் நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். கற்பனையில் உள்ள அவா நியத்தில் எவவா மாறுவாவோ இல்லை நெடுக்ஸ்தான் மாறுமோ யாரறிவார்????

பெரிய 'அம்பானி' குடும்பம், இரண்டு பேர் இருந்து கணக்கு வழக்குப் பார்க்க.  :D  வாழ்கிறதே கடனில :( அதுக்குள்ள என்ன பிரிவினை.   

வங்கிக்கு ஊதியம் வரும், குடும்பத் தேவைக்கேற்ப இருவரும் மட்டையைப் பாவித்து செலவழிக்க வேண்டியதுதான்.  

மற்றும்படி ஒருவரை அடக்கி ஆள்வதோ அல்லது அடங்கிப் போவதோ எனது குணமில்லை.

உங்கள் மனைவியும் வேலை பார்க்கிறாரா தப்பிலி???

Share this post

Link to post
Share on other sites

முதலில் ஒரு மனைவிக்குரிய சுதந்திரங்கள் எவை எனக் கூறுங்கள்
பின்னர் யோசிப்போம் :D  :D  :lol:

Share this post

Link to post
Share on other sites

கேள்விய மாத்திப்போடுங்க :( என் ஆத்துக்காரி வந்து பதில் சொல்லுவா :D:icon_idea:

ஆத்துக்காரி சொல்லக்கூடிய பதில் உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே. அதைச் சொல்லுறது.

நான் வச்சது தான் சட்டம். ஆத்துக்காரிக்கு கொஞ்சம் சுதந்திரம் குறைவு தான்.
 
சுதந்திரம் குறைவே ஒழிய மற்றப்படி அவ செய்யிற வேலைகள் சமைக்கிறது, பக்கத்தில இருக்கிற பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகளை கூட்டிக் கொண்டுபோய் விடுவது. கூட்டி வாறது... 4‍ - 5 நிமிச நடை. இப்படி மிகச் சில.
 
அதே நேரம் எனக்கும் சில சுதந்திரங்கள் இல்லை. உதாரணமாக, ஒரு பெண் -- முனியம்மா என்று வைத்துக் கொள்வோம்.
 
முனியம்மாவின் பின் பக்கம் பெரிதாக இருக்கிறது என்றோ அல்லது முனியம்மாவின் முன்பக்கம் பெரிதாக இருக்கிறது என்றோ கதைத்தால் பெரும் நச்சரிப்பாக முடியும்.
 
முனியம்மா ரொபிக் சுதந்திரம் இல்லை.

எதோ சொல்லுகிறீர்கள் நம்புகிறோம் ஈசன். மனைவியிடமே மற்றப் பெண்ணின் முன்பக்கப் பின்பக்கக் கதை கதைக்கும் உங்களை இன்னும் வெளியே கலைக்காமல் இருப்பதற்கு உங்கள் மனைவியைப் பாராட்டத்தான் வேண்டும்.

இப்ப எங்காத்தில ஜனனாயகம் கொடிகட்டி பறக்குது. கிளிய கூண்டுக்கு வெளிய விட்டு கூண்ட தூக்கி தொலைவில போட்டு ரொம்ப நாளாச்சுது சார்.

யாழில் உள்ள பல ஆண்கள் பாவப்பட்ட ஆண்களாகத்தான்  இருக்கு. ம் அது உங்கள் வினைப்பயன் :D  நான் சார் அல்ல மேடம் .

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post

Link to post
Share on other sites

இருவருக்கும் கட்டுப்பாடு அவசியம்.இல்லாவிடில் spiral ஆகி குடும்பம் குலையலாம்.

Two+Intersecting+Circles+2.jpg

Share this post

Link to post
Share on other sites

உங்கடை கருத்தை நான் ஆமோதிக்கிறன் . ஏன் அவையிட்டை எங்கடை சுதந்திரத்தை கேட்டு அவையளை பெரிய மனிசர் அக்குறியள் ???? ஆனா உண்மையிலை பொம்பிளையள் தான் சுதந்திரம் எண்டு கதைச்சு கொண்டு  அடிமையாய் வாழ விரும்பினம்  .

உண்மைதான் மைத்திரேயி. பல பெண்களைப் பார்க்க பாவமாக இருக்கும். எல்லாப் பெண்களுக்கும் துணிவு வந்துவிடாது.

தலைப்பே பிழை! எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர் என்ற கேள்வி கணவன் கொடுக்கும் சுதந்திரத்திற்கு எல்லை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றது. <_<

இது மனைவியானவள் கணவனுக்குக் கட்டுப்பட்டு வாழுவதுதான் ஒரு நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்றும், அதேவேளை கணவன் தேவையான சுதந்திரத்தைக் கொடுத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்றும் நினைக்கும் மனோநிலையைக் காட்டுகின்றது.

ஆணுக்குப் பெண் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று நினைக்கும் பெண் அந்தக் கட்டுப்பாட்டின் இறுக்கம், தளர்வைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? :rolleyes: 

சுதந்திரம் எல்லைகள் அற்றதுதான் என்றாலும் எம் சமூகத்தைப் பொறுத்தவரை எல்லைகள் வகுத்ததால் சமூகம் சீரழிந்து போகாது இன்னும் இருக்கிறது. கணவனுக்கும் மனைவிக்குமான புரிதலோடு எதையும் தீர்மானிக்கும் சுதந்திரம் எம் பெண்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.அப்படியே ஆணுக்கும் தான். ஆனால் வெள்ளை இனத்தவர்களிலும் கூட இன்னும் சுதந்திரம் அற்ற பெண்கள் இருக்கின்றனர். எமது சமூகம் கட்டுக்கோப்பை வைத்திருப்பது ஒருவிதத்தில் நல்லதுதான் எனினும் அதுவே பெண்களுக்கு தீங்காகவும் முடிகிறது.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் பல தமிழர்கள் இன்னும் உறவினர் நண்பர்கள் என்னும் வட்டத்திலும் பண்பாட்டு மீறலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தம்மைச் சுற்றி ஒரு வட்ட்டமிட்டு அதற்குள்ளேயே வாழ்கின்றனர். மற்றவரின் சுதந்திர வாழ்க்கை முறையை விமர்சித்துக் கொண்டும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக எம் சமூகத்தை ஒதுக்கிவிட்டு வாழ எம்மால் முடியாதுதானே.

நாட்டாமை தீர்ப்பு: ஒரே ஒரு விடயம் மட்டும் உண்மை. எதுவெல்லாம் பெண்களுக்கு சாதகமா இருக்கோ அதில மட்டும் தான் விடுதலை எதிர்பாப்பாங்க. எதெல்லாம் கஸ்ரமான வேலையோ அதுக்கு ஒரு ஆண் வேண்டும். 

ஆண்கள் செய்யும் கஷ்டமான வேலை எது என்று ஒரு பத்தை பட்டியலிட முடியுமா செங்கொடி.

மொசு ஐயா, நீங்கள் சொன்னதுதான் உண்மை.

கணவன் தன் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்திருக்கின்றேன் என்று சொல்வதே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான்.

ஆம்பிளைக்கு ஆயிரம் செலவு இருக்கும் அதைச்சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே பல இடங்களில் நடக்கிறது!.

அண்மையில் நான் அதிர்ச்சி அடைந்த ஒரு செய்தி என் நெருங்கிய தோழி ஒருவரின் உறவினப்பெண்ணொருத்திக்கு அவர் கணவன் தான் சாப்பிட்ட தட்டில் தான் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயமாம்!....என்னால் நம்பவே முடியவில்லை!....இன்னும் எவ்வளவோ நடக்கிறது அதை வெளியில் வந்து சொல்லக்கூட முடியாமல் 'குடும்பப்பெயர் கெட்டுவிடுமோ என்ற காரணத்தால்" தவிர்க்கிறார்கள் பெண்கள்!.

இப்படியான சைக்கோ கணவர்களுடனும் எத்தனையோபேர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

என் மனைவிக்கு நான் முழுச்சுதந்திரமும் தந்துள்ளேன் என்றால் நீங்க நம்பவா போறீங்க! :huh: ^_^  <_<   

நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார்பைக்கத்தான் பாப்பீங்க. நாங்க மோட்டார்பைக்குல வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க. நாங்க ஜீன்ஸ் பேண்டுத்தான் போட்டாக்கா நீங்க பேகி பேண்டுதான் பாப்பீங்க. நாங்க பேகி பேண்டுதான் போட்டாக்கா நீங்க வேட்டியத்தான் தேடுவீங்க. ஒண்ணுமே விவரங்கள் புரியல்ல, என்னதான் புடிக்குமோ தெரியல்ல, அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் புடிச்சாச்சு :D  :D :D  :D  

பாஞ்சு   பாஞ்சு  பாஞ்சு  பாஞ்சு  உங்கள் நிலைமை தேஞ்சு போச்சு. :lol:

Share this post

Link to post
Share on other sites

கையேந்தும் நினை உங்கள் ஆளுமை இன்மையையோ அல்லது மனைவியின்பால் நீங்கள் கொண்டுள்ள ஆதீத அன்பையோதான் காட்டி நிற்கிறது. நீங்கள்தான் இசை அது எதுவென்று கூறவேண்டும். :lol:

நீங்கள் எழுதினாப்பிலதான் தெரியுது நான் அதீத அன்பு, நம்பிக்கை எல்லாம் வச்சிருக்கிறன் எண்டு.. :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

ஆண் கணவனானால் ,பெண் மனைவியானால் இருவருக்கும் சுதந்திரம் ?  :D

Share this post

Link to post
Share on other sites

நாசமா போச்சு...  

எப்ப ஆண்களின் முடிவை மனிசிமார் காது குடுத்து கேட்டு இருக்கினம்...  ??  தாங்கள் நினைச்சதை மட்டும் தானே செய்யுறவை....??

 எனக்கு  இப்ப சுதந்திரம் தந்து இருக்கிறார்களா எண்டு தேடிக்கொண்டு இருக்கிறன்... இதுக்கை நான் சுதந்திரம் குடுக்கிறதோ...   சும்மா கடுப்பை கிளப்பாதேங்கோ.. 

ஏதாவது கல்யாணவீடுகளுக்கு போனால் மாப்பிள்ளையை பாத்து நான் சொல்லுறது தம்பி கடைசியாய் ஒருக்கா படம் எடுக்கேக்கை தன்னும் சிரியப்பு...  :D

உங்கள் உடையைத் தெரிவுசெய்து வாங்கவாவது உங்களுக்குச் சுதந்திரம் உள்ளதா :D

Share this post

Link to post
Share on other sites

எங்களது குடும்பதில் எல்லாவற்றிலும் இருவரும் சமமாகவே இருக்கின்றோம். அவளாகவே வந்து எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுவாள் செய்வாள். நான் ஆண் என்ற எண்ணத்தில் என்றும் அதிகாரம் செலுத்தியது கிடையாது. அவளுக்குப் பிடிவாதம் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும். அதனால் சமாளிக்க கொஞ்சம் அய்ஸ் வக்கவேண்டிருக்கும். இருவருக்கும் ஒரே வயது என்பதால் பலவிடயங்களில் அவளின் ஆலோசனைப்படியே நடந்துகொள்ளவேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது. :(

இப்ப உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ஆருக்குக் கூடச் சுதந்திரம் இருக்கெண்டு! :)

Share this post

Link to post
Share on other sites

மனைவியிடமே மற்றப் பெண்ணின் முன்பக்கப் பின்பக்கக் கதை கதைக்கும் உங்களை இன்னும் வெளியே கலைக்காமல் இருப்பதற்கு உங்கள் மனைவியைப் பாராட்டத்தான் வேண்டும்.

இதத்தான் சொல்றது எங்களுக்கு சுதந்திரம் இல்லையென்று.
 
இது ஒரு பாரதூரமான மனித உரிமை மீறல்.

Share this post

Link to post
Share on other sites

முதலில் ஒரு மனைவிக்குரிய சுதந்திரங்கள் எவை எனக் கூறுங்கள்

பின்னர் யோசிப்போம் :D  :D  :lol:

மனைவிக்குரிய சுதந்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு மாறுபடும் வாத்தியார். அது அவர்களின் கல்விநிலை, சமூக நிலை என்பவற்றின் அடிப்படையில் வித்தியாசப்படும். எதைச் சமைக்க வேண்டும் என்பதிலிருந்து ஆடைகள் வாங்குவது, யார் யாருடன் குடும்ப உறவை வளர்ப்பது, நண்பிகளுடன் தனியே வெளியே செல்வது, திருமணமானபின்னும் ஆண் நண்பர்களுடன் பேசுவது, பெற்றோருக்கு உதவுவது, நண்பர்களுக்கு உதவுவது, பொதுத் தொண்டு ஆற்றுவது, திரைப்படத்துக்குச  செல்வது, விரும்பிய ஆடை அணிவது, எங்கே என்று கூறாமல் எங்கேயாவது செல்வது, திருமணத்தின் பின்னரும் கற்பது, வாரத்தில் ஒருநாளாவது எந்த வேலையும் செய்யாது அவர்கள் விருப்பத்துக்கு இருப்பது என்று இன்னும் எத்தனையோ இருக்கு.

சுதந்திரமாகத் திரியும் எனக்கே என் கணவரின் செய்கை சில நேரங்களில் சினம் கொள்ள வைக்கும். என் கணவருக்கு காலையில் தனிப் பாலில் கோப்பி போட்டு வைக்கவேண்டும். ஏதும் அவசர அலுவலில் எப்பவாவது நான் அதை மறந்தால் அன்று காலை எதுவும் குடிக்க மாட்டார் கணவர். உன்கையால் ஊத்துவது சுவை என்று வேறு சொல்வாரா. அட கோப்பி போட்டு வைக்க மறந்துவிட்டோமே என்னும் குற்ற உணர்வு நாள் முழுதும் இருக்கும். இதுவும் ஒருவகை அடிமைப் படுத்தல் தான்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this