Sign in to follow this  
nunavilan

நாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும்.

Recommended Posts

டியோடரன்டஸ் Deodorants என்பது இப்பொழுது, சீப்புப் பவுடர் போலாகிவிட்டது. வீட்டுப் பாவனைப் பொருள் போல எங்கும் கிடைக்கின்றன. யாருக்குத்தான் மற்றவர்கள் முன்னால் தங்களது உடல் நாற்றத்துடன் போய் நிற்க மனதிருக்கும். 

deodorant.jpg

நாற்றமும் நறுமணமும்

"அரசியின் கூந்தல் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா" ஆராய்ந்து பார்த்த கதைகள் நினைவிற்கு வருகிறதா? அந்தக் காலத்தில் அரசிகள் முடிக்கு மட்டுமே தேடிய வாசனைத் திரவியங்கள் இன்று தொழிலாளர்களின் அக்குளுக்கும் அவசியமாகிவிட்டன. சந்தை வாய்ப்புகளும் விற்பனையும் அமோகமாக இருக்கின்றன.

india_hair_decoration_styling_jasmine_fl

அக்குள் மணத்திற்கும் பொதுவான உடல் மணத்திற்கு காரணம் வியர்வையாகும். ஆனால் இயற்கையாக வியர்வை மணப்பதில்லை. வியர்வையில் நீரும் சில உப்புக்களும் மட்டுமே இருக்கின்றன. இவற்றில் எந்த மணமும் கிடையாது. ஆனால் சுரக்கும் அந்த வியர்வையில் பக்றீரியா கிருமிகள் பெருகும்போதே மணம் ஏற்படுகிறது.

நாற்றமற்ற வியர்வைக்குக் காரணம் என்ன?

"எல்லோருக்குமே வியர்க்கிறது, எல்லோரது உடலிலும் கிருமிகள் இருக்கலாம் ஆனால் ஏன் எல்லோரது வியர்வையும் மணப்பதில்லை" என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுந்திருக்கும். வியர்வையில் மணம் ஏற்படுவதானது எமது மரபணு சார்ந்தது.

Woman-holding-nose.jpg

அதைக் கொடுப்பற்குக் காரணமாக இருப்பது ABCC11 என்ற மரபணுவாகும். ஆனால் சிலரில் இந்த மரபணுவானது சிறிய மாற்றங்களுடன் செயலற்று இருப்பதுண்டு. அவ்வாறான மரபணு மாற்றமுற்றவர்களின் வியர்வை மணப்பதில்லை. மிகுதியான பெரும்பாலானவர்களுக்கு மணக்கவே செய்யும்

jid201314i1.jpg

University of Bristol  லில் ஒரு ஆய்வானது 6,495  பெண்களிடையே செய்யப்பட்டது. இந்த ஆய்வின் பிரகாரம் மிகச் சிறிய எண்ணிக்கையானோருக்கு மட்டும் (2% -117 out of 6,495) அவ்வாறான மாற்றமுற்ற மரபணு இருந்தமை கண்டறியப்பட்டது. அதன் அர்த்தம் அவர்களது அக்குள் வியர்வையில் நாற்றம் இல்லை என்பதாகும்.

ஆய்வின் ஆச்சரியமான அம்சங்கள் இனித்தான் காத்திருக்கிறது.

  • இந்த ஆய்விற்கு உட்பட்டவர்களில் 117 பேரது வியர்வை மட்டுமே நாற்றமற்றது. அதை விகிதாசார ரீதியில் நோக்கினால் ஒவ்வொரு 50 பேருக்கு ஒருவரது வியர்வையே உடல் நாற்றம் அற்றதாகும்.
  • நாற்றமான வியர்வை சுரப்பவர்களில் 5 சதவிகிதமானவர்கள் டியோடரன்டஸ்  எதையும் உபயோகிப்பதில்லை.
  • வியர்வையில் நாற்றம் அற்றவர்களில் சுமார் 20 சதவிகிதமானவர்களும் டியோடரன்டஸ்  எதையும் உபயோகிப்பதில்லை. அதற்கான அவசியம் அவர்களுக்கு இல்லாததால் அது ஓரளவு எதிர்பார்க்கக் கூடியதே.
  • ஆனால் வியர்வை நாற்றமற்றவர்களில் சுமார் 78 சதவிகிதமானவர்களும் டியோடரன்டஸ் உபயோகிப்பதாக ஆய்வு கூறியது.

இதை இலகுவான மொழியில் சொன்னால் எப்படி இருக்கும். சமூகத்தில் பெரும்பாலானவர்களின் வியர்வையில் நாற்றமிருக்கிறது. இருந்தபோதும் அவர்களில் சிலர் தமது அக்குள் வியர்வை நாற்றத்தை மறைக்க வாசனைத் திரவியங்களை உபயோகிப்பதில்லை. ஆனால் அக்குள் வியர்வை நாற்றம் அற்றவர்களில் மிகக் குறைந்தவர்களே தமக்கு நாற்றமில்லை என்பதை உணர்ந்து டியோடரன்டஸ் உபயோகிப்பதில்லை. 

1-s2.0-S1748681509004872-gr3.jpg

மந்தை ஆடுகள் போல மனிதர்களும்

ஆனால் மிகப் பெரும்பான்னையான வியர்வை நாற்றமற்றவர்கள் மந்தை ஆடுகளை போல மற்றவர்களை பின்பற்றுகிறார்கள். அதாவது எந்தத் தேவையுமற்று டியோடரன்ஸ்சை உபயோகிக்கிறார்கள் என்பதுதான்.

இவர்கள் இப்படியாக தேவையற்றபோதும் டியோடரன்டஸ் உபயோகிப்பதற்குக் காரணம் என்ன? சமூகப் பழக்க வழக்கங்கள்தான். சமூகத்தில் பலரும் நாகரீகம் எனக் கருதுவதை தாமும் மறுகேள்வியின்றிப் பின்பற்றுகிறார்கள் என நினைக்கிறேன். மற்றொரு காரணம் ஊடகங்களின் விளம்பர உத்திகளைப் புரிந்து கொள்ளாமல் கடைப்பிடிப்பதாகவும் இருக்கலாம்.

இது மேலை நாட்டில் செய்யப்பட்ட (University of Bristol) ஆய்வாகும். 'வடஆசிய நாட்டவர்கள் பெரும்பாலும் டியோடரன்டஸ் உபயோகிப்பதில்லை. அதற்கான தேவை அவர்களுக்கு இல்லை' என அந்த ஆய்வுக்குழுவின் தலைவரான Professor Ian Day கூறினார். தெற்காசிய நாட்டவர்களான எங்களைப் பற்றி அந்த ஆய்வு எதையும் தனியாக எடுத்துரைக்கவில்லை. 

காதில் கற்குடுமி

இந்த ஆய்வின்போது வியர்வையுடன் தொடர்பற்ற மற்றொரு விடயமும் தெரிய வந்தது. அது காதுக் குடுமி பற்றியது. பொதுவாகக் காதுக்குடுமி என்பது பசை போன்ற தன்மையானதாகும். ஆனால் மிகச் சிலரில் அது எப்பொழுதும் காய்ந்து இறுகி 'கற்குடுமி' யாகத் தொல்லை கொடுக்கும். அவர்களுக்கும்

நாற்றமற்ற வியர்வையுள்ளவரின் அதே மாற்றமுற்ற ABCC11 மரபணு இருக்கிறதாம்.

000.png

ஆம் இயற்கை விசித்திரமானதுதான். கற்குடுமி என்ற தொல்லை ஒருசிலருக்கு கொடுத்துவிட்டு அதனை நட்ட ஈடு கொடுப்பதுபோல நாற்றமற்ற வியர்வையைக் கொடுத்திருக்கிறது.

தனித்துவமான உடல் மணங்கள்

பெரும்பாலானவர்களது உடலில் மணம் இருந்தாலும் எல்லோரது வியர்வையும் ஒரே மணத்தைக் கொடுப்பதில்லை. கைவிரல் அடையாளம்போலத் தனித்துவமானது. சில மணங்கள் மற்றவர்கள் ஆகர்ஸப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் சிலரது மணங்கள் மற்றவர்களை கிட்ட நெருங்க விடாது விலக வைத்துவிடுகின்றன.

அவ்வாறு கடுமையான உடல் நாற்றம் உண்டாவதை bromhidrosis என மருத்துவத்தில் கூறுவர்.

உடல் மணத்தைக் குறைக்க வழிகள்

உடல் மணமானது ஒவ்வொருவருக்கும் தனித்துவமான போதும் அதன் 

வீச்சை நாம் சில நடைமுறைகள் மூலமாகச் குறையச் செய்யலாம்.

எடையைக் குறைப்பது முக்கியமானது. அதீத எடையானது உடலின் செயற்பாட்டிற்கு அதிக சிரமத்தைக் கொடுக்கிறது. சிரமப்படும் உடல் அதீதமாக வியர்க்கிறது. அதனால் உடல் மணம் மோசமாகும். எனவே எடையைக் குறைப்பதானது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதுடன் மணத்தையும் குறைக்கிறது.

தினமும் குளியுங்கள். முக்கியமாக வேலை முடிந்த பின்னர் குளிப்பது மிகவும் அவசியம். கிருமி கொல்லி சோப் வகைகளை உபயோகிக்க வேண்டியதில்லை. வழமையான சோப் போதுமானது. Soap free wash மேலும் நல்லது

ஆடைகளை இயற்கையான துணியிலானதாக தேர்ந்தெடுங்கள். செயற்கை இழையத்திலான ஆடைகள் ஈரலிப்பை உறிஞ்ச முடியாதலால் வியர்வை தேங்கி நிற்கும் அதிக மணத்தைக் கொடுக்கலாம். தினமும் ஆடைகளை மாற்றுங்கள்.

bodyodor-causes.gif

உணவைப் பொறுத்த வரையில் ஆடு மாடு போன்றவற்றின் இறைச்சிகள் 

(Red meat) அதிக மணத்தைக் கொடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதே போல இஞ்சி, மிளகு, மீன், போன்றவையும் உடல் மணத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. மதுபானமும் அவ்வாறே.

ஆனால் அதிகளவு நீர் அருந்துவதும், உணவில் அதிகளவில் பழங்களையும் காய்கறிகளையும் சேர்ப்பது நல்லது. தீட்டாத தானியங்களும் நல்லது என்கிறார்கள்.

அவற்றிற்கு மேலாக அவசரம், அந்தரம் பதற்றம், பதகளிப்பு போன்றவை மன அமைதியைக் குலைத்து வியர்வையை அதிகமாக்கி மணத்தை ஏற்படுத்தலாம். முன அமைதிப் பயிற்சிகள், யோகாசனம், தியானம் போன்றவையும் உதவும்.

0.0.0.0.0.0

'நீ என்ன Deodorants பாவிக்கிறாய். நல்ல வாசமாக இருக்கு' எனக் காதலியை முகத்திற்கு நேரே கேட்கும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது. அவற்றின் பாவனை அந்தளவிற்கு அதிகரித்துவிட்டது.

அழகிற்கு அழகு சேர்ப்பது என்றிருந்தவை அலங்கோலங்களை அலங்கரிப்பாக மாற்றவும் செய்கின்றன. தங்கள் அழகுகளை அலங்கோலமாக மாற்றுகிறோம் என்பது தெரியாமல் செய்பவர்களும் இருக்கிறார்கள். 

எங்களை நாங்களே அழகு படுத்தவும், மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பதற்கும் என பலவிதமான அழகுசாதனப் பொருட்கள் சந்தைகளை நிறைக்கின்றன.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col) 

குடும்ப மருத்துவர்

http://hainallama.blogspot.ca/2013/10/blog-post_16.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

எங்கடையள் திருந்திறதுக்கு நிறைய இடமிருக்கிது. :D

Share this post


Link to post
Share on other sites

தேவையோ.. இல்லையோ.. இந்தமாதிரி சில விடயங்களை ரோபாட் மாதிரி செய்து பழக்கமாகிவிட்டது.. :blink:

Share this post


Link to post
Share on other sites
வியர்வை இருக்கட்டும். 
 
யானை வரும் பின்னே கறி மண‌ம் வரும் முன்னே என்பது போல் சிலர் - பலர் நிலமை.
 
எப்ப திருந்துவார்களோ ?

Share this post


Link to post
Share on other sites

வியர்வை இருக்கட்டும்.

யானை வரும் பின்னே கறி மண‌ம் வரும் முன்னே என்பது போல் சிலர் - பலர் நிலமை.

எப்ப திருந்துவார்களோ ?

வீட்டில் சமைக்கும்போது உடுப்புக்களை பாதுகாப்பாக ஒதுக்காமல் விடுவது.. தமிழ்க்கடை மணம், சமையலின்போது நல்ல vent fan (650 cfm minimum) இப்படி பாவிக்காமல் விடுவது என்று பல காரணங்கள்..

Share this post


Link to post
Share on other sites

ஆண்களின் வியர்வையை விட... பெண்களின் வியர்வை, நல்ல வாசனையாக இருப்பது ஏன்...? :D  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

ஆண்களின் வியர்வையை விட... பெண்களின் வியர்வை, நல்ல வாசனையாக இருப்பது ஏன்...? :D  :icon_idea:

நெப்போலியன் போல இருக்க ஆசைப்படுகிறேன். 

 

"Will return to Paris tomorrow evening. Don't wash."

Share this post


Link to post
Share on other sites

ஆண்களின் வியர்வையை விட... பெண்களின் வியர்வை, நல்ல வாசனையாக இருப்பது ஏன்...? :D  :icon_idea:

கிளர்ச்சியோடு பெண்களைப் பார்த்துக் கிட்ட நெருங்கினால் அவர்களின் வியர்வை வாசனை ஆண்களை ஈர்க்குமாம். :wub:  ஆண்களும் தேன்கூட்டைப் பார்த்த நரி மாதிரி கிறங்கிப் போய் நிற்பார்களாம். :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

ஆண்களின் வியர்வையை விட... பெண்களின் வியர்வை, நல்ல வாசனையாக இருப்பது ஏன்...? :D  :icon_idea:

 

Sex Pheromones.

 

 

http://www.scientificamerican.com/article.cfm?id=pheromones-sex-lives

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஆண்கள் தைரியசாலிகளாக இருக்கலாம் பெண்கள் புத்திசாலிகள். எம்ஜிஆர் எவ்வளவு கஸ்ரப்பட்டு அதிமுக வை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தார்.  பின்னாளில் ஜெயல்லிதா சுலபமாக ஆட்சியைப் பிடிக்கவில்லையா? 
    • லெப். கேணல் அசோக் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். On Apr 2, 2020 லெப். கேணல் அசோக் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள். 02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகாவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் அரசி / இதயா, மேஜர் லக்சனா, லெப்டினன்ட் மணிநிலா, 2ம் லெப்டினன்ட் கிளிமொழியாள், வீரவேங்கை கலைமகள், வீரவேங்கை பூங்கொடி, வீரவேங்கை தமிழிசை / மதுரா ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது இத்தாவில் பகுதியில் கண்டிவீதியை ஊடறுத்து நிலைகொண்டிருந்த வேளை இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியின்போது எமது மோட்டார் எதிரியின் கையில் அகப்படக்கூடாது என்பதற்காக மற்றவர்களை தளம் அனுப்பிவிட்டு மேட்டாருடன் குண்டை வெடிக்கவைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன்ட் இசைவளவன் / நறுமுத்து அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் புவீந்திரன் / மண்ணரசன், லெப்டினன்ட் கூத்தரசன் / நிலவன் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை குயில்வண்ணன், வீரவேங்கை தமிழன்பன் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று மணலாறு கோட்டத்தில் மருதவோடைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் கிட்டு, மேஜர் அன்பு, 2ம் லெப்டினன்ட் ஜெயசீலன், 2ம் லெப்டினன்ட் சங்கர்ராஜ் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று திருமலை மாவட்டம் மூதூர் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் இளமாறன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சின்னவத்தை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை குருமதன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2007 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு கோட்ட கோப்பாவெளிப் பகுதியில் முன்னேற முயன்ற சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் நவசங்கர், மேஜர் விழியரசன், மேஜர் ஜெகநாதன், லெப்டினன்ட் எழில்நிலா, 2ம் லெப்டினன்ட் நிமலன், வீரவேங்கை புவனேந்திரன், வீரவேங்கை சுடரோன், வீரவேங்கை செந்தமிழினி, வீரவேங்கை வசீகமாறன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 02.04.2007 அன்று வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் திராவிடன் / ஆரியன், லெப்டினன்ட் நெடியோன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 02.04.2007 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரவேங்கை சுபதீபன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாய்மண்ணின் விடிவிற்காக 02.04.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் இளம்புலி, கப்டன் புரட்சித்தம்பி, கப்டன் அமலன், லெப்டினன்ட் கரிகாலினி / மதியருவி, லெப்டினன்ட் பரணி, லெப்டினன்ட் கதிரவன், லெப்டினன்ட் பகீரதன், லெப்டினன்ட் குயிலினி, 2ம் லெப்டினன்ட் போர்வாணன், 2ம் லெப்டினன்ட் இளங்கீரன், வீரவேங்கை பொய்கைக்கிளி ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 02.04.2009 அன்று முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருட னான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் அசோக் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.   https://www.thaarakam.com/news/120724  
    • கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி? கிறிஸ்டி ப்ரூவர் பிபிசி MStudioImages / getty images சித்தரிக்கும் படம் கொரோனா வைரஸ் உலகையே நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவும் செய்திகள் நம்மிடம் இடைவெளி இல்லாமல் வந்து சேர்கிறது.  இதனால் இயல்பாகவே பதற்றம் அடைபவர்கள் மற்றும் ஒரே செயலை பலமுறை செய்ய தூண்டும் ஓ.சி.டி (Obsessive-compulsive disorder) எனப்படும் மனநோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். செய்திகள் மற்றும் கொரோனா குறித்து படிப்பதை கட்டுப்படுத்துங்கள் கொரோனா வைரஸ் குறித்து தினமும் கேட்கும் செய்திகள் நமக்கு கவலை அளிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இந்த செய்திகள் இன்னும் அதிகம் பாதிப்படைய செய்யும். கொரோனா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியபோது உலக சுகாதார நிறுவனம் மன நிலையை பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கியது. இந்த ஆலோசனைகள் சமூக வலைதளத்தில் அதிகம் வரவேற்கப்பட்டன. EMMA RUSSELL பதற்றம் அடைபவர்கள் குறித்து பிரிட்டனின் நிக்கி லிட்பெட்டர் கூறுகையில், ''கட்டுப்பாட்டை மீறி நிலைமை மோசமடையும்போது ஏற்படும் அச்சம், நிச்சயமற்ற தன்மையை பொறுத்துக்கொள்ளமுடியாமல் ஏற்படும் கவலை, இவை இரண்டும்தான் நாம் பதற்றம் அடைய காரணமாக உள்ளது'' என்கிறார். எனவே இயல்பாகவே பதற்றத்துடன் இருக்கும் நபர்களுக்கு இந்த சூழ்நிலையை எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது,'' என்கிறார். ''நாம் அறியாத பல விஷயங்கள் குறித்துதான் பொதுவாகப் பதற்றம் ஏற்படும். ஏதாவது நடந்து விடுமோ என்ற உணர்வில்தான் பதற்றம் வேரூன்றி இருக்கிறது,'' என்கிறார் மனநிலைக்கான அறக்கட்டளை ஒன்றின் செயற்பாட்டாளர் ரோஸி. செய்திகளைப் படிக்கும்போது கவனம் தேவை. கேண்டில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நிக், கொரோனா வைரஸ் குறித்து அதிக செய்திகளைப் படிப்பதே கவலை அளிக்கிறது என்கிறார். ''நான் கவலை அடையும்போது, என் எண்ணங்கள் கட்டுப்பாட்டை மீறி, பேரழிவின் விளைவுகள் மீது செல்லத் தொடங்கியது,'' என கூறுகிறார். மேலும் தனது பெற்றோர்கள் மற்றும் தனக்குத் தெரிந்த முதியவர்களின் நிலை குறித்தும் கவலையாக இருக்கிறது என்கிறார். ''பொதுவாக கவலையில் இருந்தால், அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வேன். ஆனால் தற்போது அப்படி செய்ய முடியவில்லை,'' என்கிறார். கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி? கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்  Pandemic என்றால் என்ன?  கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?  முறையாக கை கழுவுதல் எப்படி? கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி? இணையத்தில் செய்திகளைப் படிப்பது மற்றும் சமூக ஊடகம் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பது உள்ளிட்ட சில அறிவுரைகளை நிக் கடைபிடித்ததால், தான் தற்போது நல்ல மனநிலையில் இருப்பதாக தெரிவிக்கிறார். உங்களை பாதிக்கக்கூடிய செய்திகளை காண்பதையும் படிப்பதையும் தவிருங்கள். மாறாக அடிப்படை செய்திகளை அறிய குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டும் செய்திகளை கவனியுங்கள். நிறைய தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவிவருகின்றன. எனவே சரியான செய்திகளை ஒளிப்பரப்பும் ஊடகம் அல்லது அரசாங்கம் வெளியிடும் தகவல்களை மட்டும் நம்புங்கள். சமூக ஊடகத்தில் இருந்து விலகி இருங்கள். சமூக வலைத்தளம் அதிகம் வேண்டாம் மான்செஸ்டரில் வசிக்கும் அலிசன், ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் குறித்த அனைத்து செய்திகளையும் படித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக இருந்த எல்லா ஹாஷ்டேகுகளையும் பின் தொடர்ந்துள்ளார். ஆனால் நாளடைவில் இதனால் மனம் வருந்தி பல முறை அழுததாக கூறுகிறார். எனவே தற்போது சமூக ஊடகத்தில் அதிக நேரம் செலவிடாமல், விலகி இருப்பதாகவும், தமக்கு கவலை அளிக்கும் எந்த செய்திகளையும் பார்ப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார். கொரோனா வைரஸ் குறித்து அடிக்கடி தகவல்களை வெளியிடும் வாட்ஸ் ஆப் குருப்புகளை மியூட் செய்யவும். பேஸ்புக்கில் உங்கள் மனதை காயப்படுத்தும் பதிவுகளை ஹைட் செய்யுங்கள்.  கை கழுவுங்கள் - ஆனால் அடிக்கடி வேண்டாம். கைகளை கழுவுங்கள், ஆனால் அதீதமாக அல்ல ஓ.சி.டி எனப்படும் ஒரு செயலை பலமுறை செய்ய தூண்டும் மனநோய்க்கு ஆளாகி, தேவையான ஆலோசனைகள் பெற்று தங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு தற்போது குழப்பம் நிலவுகிறது. EMMA RUSSELL குறிப்பாக ஓ.சி.டி யால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவகையினர் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மேற்கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை தவிர்க்கும் முயற்சியில் டுபட்டிருப்பார்கள். ஆனால் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் அவர்களுக்குள் தற்போது குழப்பம் நிலவும். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க தற்போது அவர்கள் மீண்டும் சோப் மற்றும் சானிடைசர் பயன்படுத்த ஆரம்பித்தால், பிறகு மீண்டும் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது சவாலாக இருக்கும். எந்த வகையான ஓ.சி.டி யால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தங்களை திசைத்திருப்பி கொள்ள வெளியில் செல்வார்கள். ஆனால் தற்போது அவர்களை திசைத்திருப்பிக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எவ்வாறு? நண்பர்களுடன் பேசுங்கள் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வரும் இந்த சூழலில் பலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நேரலாம். எனவே இந்த நேரத்தில் நீங்கள் அக்கறைகொள்ளும் அனைத்து நண்பர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரியை கேட்டுவாங்கிக்கொள்ளுங்கள். அவர்களுடன் உரையாட நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் தனிமைப்பட்டிருந்தால் உங்களுக்கென சில வேலைகளை பட்டியலிட்டு கொள்ளுங்கள்.  ஒவ்வொருநாளும் வெவ்வேறு பனிகளில் ஈடுபடுங்கள். இதனால் இறுதியில் உங்கள் தனிமையான நாட்களை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினீர்கள் என்ற நிறைவு ஏற்படும். உங்கள் மனம் இயற்கையை அணுகட்டும் EMMA RUSSELL இயற்கையையும் சூரிய ஒளியையும் முடிந்தவரை உங்கள் மனம் அணுகட்டும். நல்ல உணவு உண்ணுங்கள், நிறைய தண்ணீர் குடிங்கள், நல்ல உடற்பயிற்சி செய்யுங்கள். நீங்கள் சாதாரணமாக செயல்படுவதைப் போல செயல்பட வேண்டாம். சிறிதும் எதிர்வினையாற்றவேண்டாம். அமைதி காக்கவும். நீங்கள் நினைக்கும் அனைத்தும் சரி தான் என்று நம்பாதீர்கள். அது வெறும் உணர்வோ, யோசனையோ மட்டும் தான். உங்கள் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் எதிர்வினையாற்றத் தேவையில்லை.  இந்த தருணத்தை பற்றி மட்டும் சிந்தியுங்கள். ஏனென்றால் இந்த தருணம் நன்றாகத்தான் உள்ளது. https://www.bbc.com/tamil/science-52113854
    • கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள் Getty Images உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கிறது. ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமலில் உள்ள நிலையில், பல நாடுகளிலும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த தொற்றின் கடும் பாதிப்பை, ஐரோப்பிய நாடுகள் பலவும் சந்தித்து வரும் நிலையில், லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.  அதேவேளையில் இந்த வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சில நாடுகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. மார்ச் 23 வரையிலான காலகட்டத்தில் ஏறத்தாழ 15,000 பேர் இறந்துள்ள நிலையில், உலக அளவில் 4 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அருகே தங்கள் நாடு இருந்தபோதிலும், பல ஆசிய நாடுகள் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. இது குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோய்கள் தொடர்பான ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் டால்பர்ட் யென்ஸ்வா கூறுகையில், ''இந்த நாடுகளில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தீவிரமானவை. மற்றவர்கள் இதனை கற்றுக் கொள்ளவேண்டும்'' என்று தெரிவித்தார்.  ''இந்த தொற்று ஆரம்பமான சீனாவை மட்டுமே நான் உதாரணமாகக் கூறவில்லை.மற்ற சில நாடுகளும் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துள்ளன'' என்று அவர் மேலும் கூறினார்.  தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹாங்காங் பிராந்தியத்தில் எடுக்கப்பட்ட தொற்று பரவல் நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகள் உதாரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்த நாடுகள் கடைப்பிடித்த 5 முக்கிய தடுப்பு நடவடிக்கைகளை யென்ஸ்வா பட்டியலிட்டுள்ளார்.  1. பரிசோதனை, பரிசோதனை, மீண்டும் பரிசோதனை  ஆரம்பத்திலேயே கண்டறிவது இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒரு முக்கிய காரணியாக விளங்கும் என்று உலக சுகாதார நிறுவனமும், பிபிசியிடம் பேசிய நிபுணர்களும் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். ''எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியாமல், இந்த வைரஸின் முழு தாக்கம் குறித்தோ, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ எந்த முடிவுக்கும் வர முடியாது'' என்று யென்ஸ்வா கூறினார். அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோய்கள் ஆராய்ச்சி பிரிவு பேராசிரியரான ஜான்சன் கூறுகையில், ''தினமும் 10,000க்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் தென் கொரியா, இரண்டு நாட்களில் சில நாடுகள் ஒரு மாதத்தில் மேற்கொள்ளும் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் விஞ்சி விடுகிறது என்று குறிப்பிட்டார். இதேபோல் அதிக அளவில் பரிசோதனை செய்வதே கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒரு முக்கிய வழி என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் பலமுறைகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ''அனைத்து நாடுகளுக்கும் ஒரு முக்கிய செய்தி, பரிசோதனை, பரிசோதனை, பரிசோதனை செய்யுங்கள் என்பதே'' என மார்ச் மாத தொடக்கத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை பலனைத் தரும் என அவர் குறிப்பிட்டார். 2. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல்  'கொரோனா தொற்று பாதிப்பு இருப்பவர்களைச் சரியாக இனம் காணுதல், , பரிசோதனைக்கு உட்படுத்துதல், மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவது எனப் பல அம்சங்களிலும் சீனா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன'' என்று ஜான்சன் குறிப்பிட்டார்.  பரிசோதனை செய்வது பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் மட்டுமல்ல, புதிதாகப் பாதிக்கப்படுபவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும் பயன்படுகிறது. சரியாக இனம்கண்டு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, அதனால் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிப்பது என கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைச் சிறப்பாகவும், மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டு வரும் சீனாவால் தங்கள் நாட்டில் பெருமளவு பாதிப்புகளைக் குறைக்க முடிந்ததாக ஜான்சன் தெரிவித்தார். அதேவேளையில் தைவான், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகியவை வேறு முறைகளைக் கடைப்பிடிக்கின்றன. கொரோனா தொற்று இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் இந்நாடுகள், யாரேனும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களுக்கு 3000 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அபராதமும் விதிக்கின்றன. ''ஒரு சிறந்த உதாரணம் கூற வேண்டுமானால், கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று, ஹாங்காங்கில் 445 பேருக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அங்கு சுமார் 14,900 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அளவு அதிக நபர்களுக்குப் பரிசோதனை செய்ததற்குக் காரணம் எந்த வாய்ப்பையும் அவர்கள் புறக்கணிக்கவில்லை என்பதுதான். இதில் 19 பேருக்கும் மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது'' என்று யென்ஸ்வா குறிப்பிட்டார். கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்  கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்? கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்? கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும் 3. தயார் நிலை மற்றும் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது  Getty Images அண்மையில் மேற்கு ஆப்ரிக்காவில் இபோலா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின்போது அங்கு பணிபுரிந்த யென்ஸ்வா, வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் முக்கியம் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது. மக்களை அது தாக்கும் முன், நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைவுகூர்ந்தார். ''தைவான் மற்றும் சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட அதிவிரைவு நடவடிக்கைகள் அந்நாடுகளில் வைரஸ் பரவலைப் பெரிதளவு கட்டுப்படுத்த உதவியது'' என்று அவர் மேலும் கூறினார்.  இது போன்ற ஒரு தொற்று பிரச்சினையைக் கடந்த 2003-இல் தைவான் சந்தித்துள்ளது, அங்கு விரைவான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், வைரஸ் தொற்று தொடர்பான கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும் காரணமாக அமைந்தது. ''தொற்று பரவலின் ஆரம்பக் கட்டங்களில் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது மட்டுமே பயன் தரும். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இது போன்ற அதிவிரைவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காரணம் இதனைச் சந்திக்க அந்த நாடுகள் தயார் நிலையில் இல்லை'' என்றார் அவர். ''நடவடிக்கைகள் எடுக்கும் நேரம், விரைந்து செயல்படுதல் ஆகியவை மிகவும் அவசியம்'' என யென்ஸ்வா மேலும் கூறினார். 4. சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்  ''ஒரு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்கனவே இருக்கும் பட்சத்தில், வழக்கமான கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மட்டும் போதாது'' என யென்ஸ்வா கூறுகிறார். Getty Images இப்படிப்பட்ட சமயத்தில் தைவான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கடைப்பிடிக்கப்பட்டது போல சமூக இடைவெளியைப் பராமரிப்பது மட்டுமே சிறந்த பயனைத் தரும்.  ஹாங்காங்கில் வீட்டிலிருந்தே பணியாற்ற மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.மேலும் அங்குப் பள்ளிகள் மூடப்பட்டன. பொது நிகழ்வுகள் பலவும் ரத்து செய்யப்பட்டன. சிங்கப்பூரில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு இருந்த போதிலும், சமூக இடைவெளி சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டது. 5. சுகாதாரம் பேணுவது  கொரோனா வைரஸ் பாதிப்பைத் தவிர்க்க அடிக்கடி கைகளைக் கழுவுவது மற்றும் தூய்மையாக இருத்தல் அவசியம் என உலக சுகாதார மையம் கூறுகிறது. Getty Images ''2003 சார்ஸ் வைரஸ் பாதிப்பிலிருந்து பல ஆசிய நாடுகளும் அனுபவம் பெற்றுள்ளன. சிறந்த முறையில் சுகாதாரத்தைப் பராமரிப்பது மக்களைப் பிணியிலிருந்து காக்கும். மற்றவர்களுக்கும் இது பரவுவதைத் தடுக்கும்'' என யென்ஸ்வா தெரிவித்தார். சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தைவானில் சாலைகளில் பாக்டீரியாக்களை ஒடுக்கும் திரவங்கள் அடங்கிய மையங்களைக் காணலாம். அதேபோல் முக கவசம் அணிவதும் இங்கு இயல்பான ஒன்றாக உள்ளது. முக கவசம் அணிந்திருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை முக கவசங்கள் தடுக்க இயலாது என்றபோதிலும் அவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க இயலும்.   https://www.bbc.com/tamil/science-52106805
    • கொரோனா தொற்று: மருத்துவப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவது எப்படி? Getty Images கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய விலையை தந்து கொண்டிருப்பவர்கள் சுகாதாரப் பணியாளர்கள்தான். பல்லாயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த நோயால் மருத்துவப் பணியாளர்கள் இறந்ததாக மேலும் மேலும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  பாதுகாப்பு உடை மற்றும் முக கவசம் அணிந்திருந்தாலும், மற்ற சாதாரண மக்களைக் காட்டிலும் அதிக அளவில் மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற சுகாதாரப் பணியாளர்களும் இந்த நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  அது மட்டுமல்ல இந்த நோய் பாதிப்பு தீவிரமடையும் வாய்ப்பு உள்ளவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த அளவுக்கு தீவிர பாதிப்பு ஏற்படுவது எதனால்? வைரல் லோடு அவர்கள் அதிகமான வைரஸை எதிர்கொள்வதே இதற்கான முக்கிய காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள்.  வைரஸ் உடலுக்குள் நுழைந்த பிறகு அது உயிரணுக்களுக்குள் படை எடுத்துச் செல்கிறது. அங்கு சென்றபின் ஒவ்வொரு வைரசும் தன்னைப் போலவே பல படிகளை உருவாக்குகிறது. இப்படி படியாக்கம் செய்யப்பட்ட வைரஸ்களின் எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் மிக அதிக அளவை எட்டுகிறது. AFP நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் மருத்துவப் பணியாளர்கள் இப்படி ஏற்படும் வைரஸ் அடர்த்தியின் அளவை 'வைரல் சுமை' (viral load) என்று குறிப்பிடுகிறார்கள். ஒருவர் உடலில் வைரல் சுமை அதிகமாக இருந்தால் அவருக்கு உடலில் நோயின் தீவிரம் மோசமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வைரல் சுமை அதிகமாக உள்ள நோயாளி அதிக அளவில் கிருமியைப் பரப்பு கூடியவராகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.  இது குறித்து பிபிசி நியூஸ் நைட் நிகழ்ச்சியில் பேசிய லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோயியல் துறைப் பேராசிரியர் வெண்டி பார்க்லே "ஒருவர் உடலில் உள்ள வைரஸ்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அவற்றை அவர் அடுத்தவருக்கு பரப்புகிற வாய்ப்பும் அதிகமாகவே இருக்கும்" என்று கூறினார்.  மோசமாக நோய் தொற்றிய, ஏராளமான வைரஸை உடலில் சுமந்து கொண்டிருக்கிற நபர்களோடு டாக்டர்களும் செவிலியர்களும் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார்கள். இதனால் மருத்துவர்களும், செவிலியர்களும் அதிக அளவிலான பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.  சீனாவில் வுஹான் நகரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு நோயாளி தமக்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்பே 14 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா கிருமியைப் பரப்பினார் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.  "நீங்கள் ஆரோக்கியமான ஆளாக இருந்தால் கூட உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு இவ்வளவு வைரஸையும் எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமான செயல். வைரசுக்கும் உடலின் நோய் எதிர்ப்பு பு அமைப்புக்கும் இடையே நடக்கிற போராட்டத்தில் யாருடைய கை ஓங்கி இருக்கும் என்பதை உடலில் நுழைந்த வைரஸின் அளவே தீர்மானிக்கும் என்பது கிட்டத்தட்ட நிச்சயம்" என்கிறார் வெண்டி பெர்க்லே. சோதனைக் கூட விலங்குகள் உடல்களில் வெவ்வேறு அளவில் வைரஸ் தொற்ற வைத்து ஆய்வு செய்ததில், மிக அதிக அளவிலான வைரஸ் தொற்றுக்கு ஆளான விலங்குகளுக்கு நோயின் தீவிரம் மோசமாக இருந்தது என்கிறார் அவர்.  கோவிட்-19 உடலில் எப்படி நுழைகிறது? 'சார்ஸ் கோவ்-2' மற்றும் 'கோவிட்-19' ஆகிய பெயர்களால் அறியப்படும் நாவல் கொரோனா வைரஸ் ஒருவர் உடலில் இருக்கிறது எனில் இருமல் அல்லது சுவாசத்தின் மூலம் பரவுவதற்குத் தயாராக அது அவரது சுவாசப் பாதையின் மேற்பகுதியில் அமர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.  "ஒவ்வொரு முறை நாம் சுவாசிக்கும்போதும் பேசும்போதும், நம் மூக்கிலும் தொண்டையிலும் இருந்து நுண் துளிகளை காற்றில் சிதற விடுகிறோம்" என்று நியூஸ் நைட் நிகழ்ச்சியில் தெரிவித்தார் பேராசிரியர் பார்க்லே. அந்த துளிகளில் சில கீழே விழுந்து தரையை மாசுபடுத்துகின்றன. அதனால்தான் நாம் மற்றவர்களிடம் இருந்து தள்ளி நிற்க வேண்டும் என்றும் அடிக்கடி கையை கழுவ வேண்டும் என்றும் கூறுகிறோம்.  எத்தனை துளிகள் உள்ளே சென்றால் ஒருவர் நோயாளி ஆவார் என்பது குறித்து தெளிவான கணக்கு இல்லை.  Getty Images "நமக்கு மிகவும் பரிச்சயமான இன்ஃப்ளூயன்சா வைரசை பொருத்தவரை ஒருவர் உடலில் மூன்று துளிகள் சென்றாலே அது நோயை உண்டாக்கிவிடும். சார்ஸ் கோவ்-2 வைரஸ் ஒருவரின் உடலில் சென்று நோயை பரப்புவதற்கு எத்தனை நுண் துளிகள் தேவை என்பது இன்னும் நமக்கு தெரியாது. ஆனால் அது மிகக் குறைவான அளவாகவே இருக்க வாய்ப்புள்ளது" என்கிறார் பார்க்லே. இந்த வைரசுக்கு எதிரான போராட்டத்தில் முன் களத்தில் இருக்கிற சுகாதாரப் பணியாளர்கள் மீண்டும் மீண்டும் வைரஸை எதிர்கொள்ள நேரும் போது அவர்கள் நோய்வாய்ப்பட எவ்வளவு மோசமான வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து நமக்கு மிகச் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை.  ஆனால் 2002-2003 ஆண்டுகளில் சார்ஸ் நோய் தொற்றியவர்களில் 21 சதவீதம் பேர் மருத்துவ சேவை அளித்தவர்களே என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம். இதே பாணியிலேயே கோவிட் 19 வைரஸ் பரவலின்போதும் மருத்துவப் பணியாளர்கள் பாதிக்கப்படுவது பல நாடுகளில் நடக்கிறது. இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் தொற்றியோரில் 6,200 பேர் சுகாதார சேவை பணியாளர்களே. ஸ்பெயினில் இந்த எண்ணிக்கை 6,500. இது அந்த நாட்டில் நோய்த் தொற்றியோரின் மொத்த எண்ணிக்கையில் 12 சதவீதமாகும்.  மார்ச் மாத தொடக்கத்தில் சீனாவில் 3,300 சுகாதார சேவை பணியாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருந்ததாக கணக்கிடப்பட்டது. அதாவது நோய்த்தொற்று ஏற்பட்டோரில் 4 முதல்12 சதவீதம் பேர் மருத்துவப் பணியாளர்களே.  பிரிட்டனில் சில பகுதிகளில் மருத்துவமனை பணியாளர்களில் 50 சதவீதம் பேர் வரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரிட்டன் சுகாதார சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் மருத்துவமனைகள் வைரஸ் பரப்பும் மையங்களாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு இந்நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பியதாக டாக்டர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். பலவீனமான பாதுகாப்பு வைரஸை எதிர்கொள்கிற வாய்ப்பு அதிகமாக இருப்பதால்தான் பல நாடுகளில் சுகாதார சேவை பணியாளர்கள் தங்களுக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் சரிவர தரப்படவில்லை என்று கூறி கோபத்தில் இருக்கின்றனர். முகக் கவசங்களை அரசு போதிய அளவில் உற்பத்தி செய்யவில்லை என்றும் அதனால் தங்களுக்கு நோய்த் தொற்றும் இடர்ப்பாடு அதிகமாக இருப்பதாகவும் கூறி பிரான்ஸ் நாட்டில் டாக்டர்கள் அரசு மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியாக மூன்று வாரகால முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று கூறி மருத்துவர்களும் செவிலியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்  கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்? கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்? கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும் பிரிட்டனில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மன உறுதியை குலைத்துள்ளதாக சுகாதார சேவை பணியாளர்கள் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி நீல் டிக்சன் கூறியுள்ளார். ராணுவத்தை பயன்படுத்தி பல லட்சக்கணக்கான முக கவசங்களை மருத்துவ பணியாளர்களுக்கு விநியோகிக்கும் பணியை பிரிட்டன் அரசு மேற்கொண்டு இருந்தாலும் இழந்த மன உறுதியை மீட்பதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்று நீல் டிக்சன் கூறுகிறார்.  இன்னொரு பிரச்சனை, இது போன்ற பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பது சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளே. எனவே நீண்ட கால அடிப்படையில் இந்த பாதுகாப்பு உபகரணங்களை சீனா தயாரித்து அனுப்புவதை உறுதி செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.  நியூஸ் நைட் சுகாதாரபிரிவு செய்தியாளர் தெபோரா கோஹன் அளித்த செய்தியும் இதில் உள்ளடங்கும்.   https://www.bbc.com/tamil/global-52123141