Jump to content

யாழ்வாலியின் அங்கும்! இங்கும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் பலவகையான விடயங்களையும் இணைக்கப் போகின்றேன். நான் விரும்பிய, எனது மனதுக்குப்பட்ட விடயங்களையும் எழுதுவேன். எனது சொந்த ஆக்கங்களாக இருந்தால் மட்டும் அவற்றுக்குக் கீழே எனது பெயரைப் போடுவேன். பார்வையாளர்களாகவே மட்டும் இருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஈன்ற தாயின் மடியில் உறங்கிய அந்த இனிமையான நினைவுகள் என்றுமே என் உணர்வில் கலந்திருக்கும். சிறிவனாக, தாயவள் மீளாத்துயரில் ஆழ்ந்திருந்த அந்த கொடிய இறுதி நேரங்களை நினைத்துப் பார்க்கின்றேன். "என்ட தினேஸ் குட்டியன் சாப்பிடவாங்கோ" என்று அம்மா அடிக்கடி அழைப்பது போலிருக்கும். நினைக்கும்போதெல்லாம் நெஞ்சம் விம்மி வெடிக்கும்.

 

இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒன்று மென்மையாக மனதை வருடிசெல்வது போலிருக்கும். :rolleyes:

 

http://download.tamiltunes.com/songs/__U_Z_By_Movies/Uthiripookal/Azhagiya%20Kanne%20-%20TamilWire.com.mp3

 

அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே

………..அழகிய கண்ணே………..

 

சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா

………..அழகிய கண்ணே………..

 

சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்

…………அழகிய கண்ணே ……………..

 

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்

************************************************************************************

மற்றவர் பிள்ளைகளை நாங்கள் ஊட்டி வளர்த்தால் எங்களுடைய  பிள்ளைகள் தங்களுடையபாட்டில் வளருவார்கள் என நேரடியான விளக்கம் சொல்லலாம். ஆனால் பழமொழியோட உண்மையான அர்த்தத்தைத் தேடினால், "ஊரான் பிள்ளை" என்பது மனைவியைக் குறிக்கும் . மனைவியாக வருகின்ற ஒவ்வொரு பெண்ணும் யாரோ ஒருவர் பெற்ற பிள்ளைதானே . அதுதான் ஊரான் பிள்ளை . அப்படிப்பட்ட ஊரான் பிள்ளையாகிய மனைவியானவள் கர்ப்பமாக இருக்கிற காலங்களில், சாப்பாடெல்லாம் சரியா கொடுத்து, அன்புகாட்டிச் சரியாக அவளைக் கவனிச்சுக்கொண்டால் அவள் வயிற்றில் வளர்கின்ற தன் ( கணவன் ) பிள்ளை நன்றாக வளரும் என்பதுதான் சரியாகும். :)
Link to comment
Share on other sites

சுய அனுபவங்கள் என்றுமே வலிமை வாய்ந்தவை எனவே அதில் கவனம் செலுத்துவது நல்லது உங்கள் அனுபவங்கள் தொடர வாழ்த்துக்கள் :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளைகளில் சும்மா கிறுக்குவேன் அப்படி இன்று சும்மா கிறுக்கிப் பார்த்தேன். இப்படிக் கிறுக்கிய பல கிறுக்கல்கள் இன்னும் பல் உண்டு. :D

 

குறள்:

பால் விற்கு துன்பமிலா கண்டு
மால் நிற்கு மாகள்!

 

விளக்கம்:
ஒருவன் பாலை விற்க (அலைந்து திரிந்து) படும் துன்பத்தை மயக்கம் தரும் கள்ளினை விற்பவன் சந்திப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுமொழி:

கோயிலுக்குப் போன குரங்கு குத்துக்கரணம் அடிச்சுக் கும்பிட்டுதாம்!

 

விளக்கம்:
தகுதியற்றவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தாலும் அங்கும் தம் அறிவீனத்தையே வெளிப்படுத்துவர். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி யாழ்வாலி.
ஆரம்பத்திலேயே... நாசூக்காக, சொன்ன வரிகளை... நினைத்து, ரசித்தேன்.
அவ்வளவு... முன்னெச்சரிக்கையான ஆளா... நீங்கள்.
அட... பழக்க தோசத்தில், கருத்து எழுதி விட்டேன்.
பிடிக்காவிட்டால்... நீக்கி விடுகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி யாழ்வாலி.

ஆரம்பத்திலேயே... நாசூக்காக, சொன்ன வரிகளை... நினைத்து, ரசித்தேன்.

அவ்வளவு... முன்னெச்சரிக்கையான ஆளா... நீங்கள்.

அட... பழக்க தோசத்தில், கருத்து எழுதி விட்டேன்.

பிடிக்காவிட்டால்... நீக்கி விடுகின்றேன். :)

 

சிறியண்ணா நீங்கள் இடும் ஒவ்வொரு பதிவுகளையும் விரும்பி வாசிப்பவன் நான். இங்கு உங்கள் கருத்துக்களையும் மற்றவர்களுடைய கருத்துக்களையும் தாராளமாக வரவேற்கின்றேன்.

 

சற்று முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன். எவரையும் காயப்படுத்துவதோ அல்லது அரசியல் பேசுவதோ எனது நோக்கம் இல்லை. சாதாரணமாக என் மனதில் எழும் உணர்வுகளையும் எண்ணங்களையும் பதியவே விரும்பினேன்.

 

நன்றி சிறியண்ணா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்வையாளர்களாக மட்டும் இருங்கள் என்று எழுதி இருப்பதனால்....நானும் கொஞ்சம் குளம்பித் தான் பச்சையை மட்டும் குத்திப் போட்டு போவது..

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தென்றல்!
பூக்களுக்கு வியர்க்கின்றதா
தேனீக்கள் சிறகெடுத்துச்
சாமரம் வீசுகின்றன!

17/Dec/2013

 

(சும்மா ஒரு ஹைக்கூ முயற்சி) :D

Link to comment
Share on other sites

தென்றல்!
பூக்களுக்கு வியர்க்கின்றதா
தேனீக்கள் சிறகசைத்துச்
சாமரம் வீசுகின்றன!

 

இப்படி எழுதினால் என்ன.. எங்கை இருந்து அவை சிறகை எடுக்கிறது?  :o  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல்!

பூக்களுக்கு வியர்க்கின்றதா

தேனீக்கள் சிறகசைத்துச்

சாமரம் வீசுகின்றன!

 

இப்படி எழுதினால் என்ன.. எங்கை இருந்து அவை சிறகை எடுக்கிறது?  :o  

 

அருமை அருமை இதுக்குத்தான் உங்களை மாதிரி முன்னோடிகள் எங்களுக்குத் தேவை. இப்ப இன்னும் அதிக பொருள் பதிந்து இருக்கின்றது. நன்றி சோழியான் அண்ணா! :)

Link to comment
Share on other sites

அருமை அருமை இதுக்குத்தான் உங்களை மாதிரி முன்னோடிகள் எங்களுக்குத் தேவை. இப்ப இன்னும் அதிக பொருள் பதிந்து இருக்கின்றது. நன்றி சோழியான் அண்ணா! :)

 

இது ஓவர் பில்டப்.. என்றாலும் நன்றி!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடிகாலைப் பொழுதின் விரகத்தில்,

வேகின்ற மலர்களுக்கு,

சாமரம் வீசும் சேவகர்கள்,

தேனீக்கள் ! :D

 

Link to comment
Share on other sites

விடிகாலைப் பொழுதின் விரகத்தில்,

வேகின்ற மலர்களுக்கு,

சாமரம் வீசும் சேவகர்கள்,

தேனீக்கள் ! :D

சாமரம் வீசும் சேவகர்கள் தேனையல்லவா எடுத்துச்செல்கிறார்கள்.. கிராதகர்கள்..! :D

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனி வா!

 

ஜெனிவா என்று சொல்கிறபோதெல்லாம்
எனக்குப் பக்கத்து வீட்டு ஜெனி என்னை
வாவென்று அழைப்பது போலிருக்கின்றது!
அவள் என்னை அழைத்தாளா - இல்லை
நான் அவளை ஜெனி வா என்றழைத்தேனா
என்ற குழப்பங்கூட எனக்கு இன்னுமில்லாமலில்லை!! :D

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மானிடம் இடர்கொண்டு 
இடறுப்பட்டு வீழ்வதினால் தானோ 

மானிடர் என்றார்கள்! ^_^
இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றது! :o

Link to comment
Share on other sites

வாலி அவர்களே! நான் மாலையில்தான் அதிகமாகக் கணணிமுன் வருவேன். இன்று அதிகாலை வந்ததினால் உங்கள் திரியின் ஒளி கண்களுக்குத் தெரிந்தது. அப்பப்பா...! என்ன ஒளி....!! வள்ளுவரின் மரபணுக்களோடு உங்கள் மரபணுக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்படி மரபணு நிபுணர்களை இறைஞ்சி வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்!! தொடருங்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இழை யன்ன நடு கடாவி
மழை முகி லழைந்து - தழை
முழை புகுந் தீர்த்த மாடி
புழை யுடைத் தாரே!

22/Nov/2014

 

(தயவுசெய்து இதன் விளக்கம் யாரும் கேட்கக்கூடாது :D)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.