Jump to content

பெரியப்பா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை வன்மையாகச் சாடுவேர் பற்றி நினைக்கையில் எனது பெரிய தந்தையார்தான் நினைவுக்கு வந்து போவார்.

 

முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளராக இருந்தவர். புலிகளின் காலத்தில் எதுவுமே அவர்களுக்கு எதிராகப் பேசமாட்டார். ஒருமுறை வவுனியாவுக்குச் சென்று வந்ததன் பின்னர். புலிகளுக்கெதிராக வீட்டில் கடுமையாக பேசத் தொடங்கிவிட்டார்.  ஆனால் (ஒன்றுவிட்ட)அண்ணன்மார் இருவரும் புலிகளின் பயங்கர ஆதரவாளர்கள். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் கொள்கைரீதியான முரண்பாடுகள் வரும். சிலவேளகளில் பேசாமல் கூட இருப்பார்கள்.

 

பெரியப்பாவின் மாற்றம் குறித்து சின்னண்ணாவும் நானும் ஆராயத் தொடங்கினோம். கடைசியில் எங்களுக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர்,வவுனியா செல்லும்போது புலிகளின் செக்பொயின்டில் பெரியப்பாவுக்கும் அங்கு நின்ற ஒரு சிறுவயதுப் போராளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஈற்றில் அப்போராளி பெரியப்பாவின் கன்னத்தில் அறைந்துவிட்டதைத் தான் கண்டதாகவும் சொன்னார். இப்போது எங்களுக்குப் பெரியப்பாவின் மாற்றத்துக்கான காரணம் தெளிவாகத் தெரிந்து விட்டிருந்தது.

 

பத்துவருடங்கள் வேகமாகக் கடந்துவிட்டிருந்ததன. இந்தகக் கால இடைவெளிக்குள் பெரியப்பாவின் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை. 2009 இன் மார்ச் மாதமளவில் பெரியப்பா பெரிதும் கவலைடைந்தவராகக் காணப்படத்தொடங்கினார்.அடிக்கடி அவரிடத்தில் இருந்து இயலாமையின் பெருமுச்சுகள்  வெளிவரத்தொடங்கின. காரணத்தை அறியுமுகமாக பெரியம்மாவிடம் சாடையாகக் கேட்டுப்பார்த்தேன். அவவும் தனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்துவிட்டிருந்தா. மேலும் சில வாரங்கள் ஓடி மறைந்தன. புலிகளின் தோல்வி நிச்சயம் என்று ஆகிவிட்டிருந்தது. வழமைக்கு மாறாகப் பெரியப்பா என்னை அழைத்தார். "தம்பி புலிகளின் தோல்வி என்பது மொத்தத் தமிழினத்தினதும் தோல்வியடா" என அழத்தொடங்கிவிட்டார். எனக்கு எதுவுமே புரியவில்லை ஆனால் பெரியப்பாவை மட்டும் புரிந்தது. அந்நாட்களில் பெரியப்பா 3 நாட்களுக்கு அதிகமாகச் சாப்பிடாமல் இருந்தார் அந்நேரத்தில் அவரை ஆற்றும் மனநிலையில் நானும்கூட இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

உண்மை. இதேபோன்ற பலரைப்பற்றி 2009இல் கேள்விப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

உந்த கதை வாசிக்க இந்த வசனம் தான் நினைவு வந்தது .

 

“புலிகள் வென்றால் அது தமிழ் மக்களுக்கு வெற்றி அல்ல. ஆனால் புலிகள் தோற்றால் அது தமிழ் மக்களின் தோல்வியாகவே அமையும்” - புளொட் தலைவர் உமா மகேஸ்வரன்.

 

பாலன் தோழாரின் முகப்புத்தகத்தில் இருந்து .

Link to comment
Share on other sites

திலீபன் இயக்கத்தில் இணையத்தள்ளியது ஒருமுறை திலீபனை ஆமி அடித்ததுதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
Link to comment
Share on other sites

உங்கள் பகிர்விலிருந்து எல்லோருக்கும் புரியும் உண்மை புலிகளும் புலிகளை நேசித்தவர்களும் என்றுமே ஒரு குடும்பமாக ஒரு கொள்கையை ஒரே எண்ணங்களை கொண்டவர்கள். தனது பிள்ளை தவறு செய்கிறபோது கன்னத்தில் அறையும் தந்தை அதே பிள்ளையின் நியாயமான கொள்கையையும் ஏற்றுக்கொண்டே பயணிப்பார்.இப்படியான பல்லாயிரம் பெரியப்பாக்கள் உலகின் திசைகளில் இருக்கிறார்கள்.

நன்றிகள் வாலி.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.