Jump to content

பெரியப்பா!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

புலிகளை வன்மையாகச் சாடுவேர் பற்றி நினைக்கையில் எனது பெரிய தந்தையார்தான் நினைவுக்கு வந்து போவார்.

 

முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளராக இருந்தவர். புலிகளின் காலத்தில் எதுவுமே அவர்களுக்கு எதிராகப் பேசமாட்டார். ஒருமுறை வவுனியாவுக்குச் சென்று வந்ததன் பின்னர். புலிகளுக்கெதிராக வீட்டில் கடுமையாக பேசத் தொடங்கிவிட்டார்.  ஆனால் (ஒன்றுவிட்ட)அண்ணன்மார் இருவரும் புலிகளின் பயங்கர ஆதரவாளர்கள். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் கொள்கைரீதியான முரண்பாடுகள் வரும். சிலவேளகளில் பேசாமல் கூட இருப்பார்கள்.

 

பெரியப்பாவின் மாற்றம் குறித்து சின்னண்ணாவும் நானும் ஆராயத் தொடங்கினோம். கடைசியில் எங்களுக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர்,வவுனியா செல்லும்போது புலிகளின் செக்பொயின்டில் பெரியப்பாவுக்கும் அங்கு நின்ற ஒரு சிறுவயதுப் போராளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஈற்றில் அப்போராளி பெரியப்பாவின் கன்னத்தில் அறைந்துவிட்டதைத் தான் கண்டதாகவும் சொன்னார். இப்போது எங்களுக்குப் பெரியப்பாவின் மாற்றத்துக்கான காரணம் தெளிவாகத் தெரிந்து விட்டிருந்தது.

 

பத்துவருடங்கள் வேகமாகக் கடந்துவிட்டிருந்ததன. இந்தகக் கால இடைவெளிக்குள் பெரியப்பாவின் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை. 2009 இன் மார்ச் மாதமளவில் பெரியப்பா பெரிதும் கவலைடைந்தவராகக் காணப்படத்தொடங்கினார்.அடிக்கடி அவரிடத்தில் இருந்து இயலாமையின் பெருமுச்சுகள்  வெளிவரத்தொடங்கின. காரணத்தை அறியுமுகமாக பெரியம்மாவிடம் சாடையாகக் கேட்டுப்பார்த்தேன். அவவும் தனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்துவிட்டிருந்தா. மேலும் சில வாரங்கள் ஓடி மறைந்தன. புலிகளின் தோல்வி நிச்சயம் என்று ஆகிவிட்டிருந்தது. வழமைக்கு மாறாகப் பெரியப்பா என்னை அழைத்தார். "தம்பி புலிகளின் தோல்வி என்பது மொத்தத் தமிழினத்தினதும் தோல்வியடா" என அழத்தொடங்கிவிட்டார். எனக்கு எதுவுமே புரியவில்லை ஆனால் பெரியப்பாவை மட்டும் புரிந்தது. அந்நாட்களில் பெரியப்பா 3 நாட்களுக்கு அதிகமாகச் சாப்பிடாமல் இருந்தார் அந்நேரத்தில் அவரை ஆற்றும் மனநிலையில் நானும்கூட இருக்கவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை. இதேபோன்ற பலரைப்பற்றி 2009இல் கேள்விப்பட்டுள்ளேன்.

Link to post
Share on other sites

உந்த கதை வாசிக்க இந்த வசனம் தான் நினைவு வந்தது .

 

“புலிகள் வென்றால் அது தமிழ் மக்களுக்கு வெற்றி அல்ல. ஆனால் புலிகள் தோற்றால் அது தமிழ் மக்களின் தோல்வியாகவே அமையும்” - புளொட் தலைவர் உமா மகேஸ்வரன்.

 

பாலன் தோழாரின் முகப்புத்தகத்தில் இருந்து .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
திலீபன் இயக்கத்தில் இணையத்தள்ளியது ஒருமுறை திலீபனை ஆமி அடித்ததுதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பகிர்விலிருந்து எல்லோருக்கும் புரியும் உண்மை புலிகளும் புலிகளை நேசித்தவர்களும் என்றுமே ஒரு குடும்பமாக ஒரு கொள்கையை ஒரே எண்ணங்களை கொண்டவர்கள். தனது பிள்ளை தவறு செய்கிறபோது கன்னத்தில் அறையும் தந்தை அதே பிள்ளையின் நியாயமான கொள்கையையும் ஏற்றுக்கொண்டே பயணிப்பார்.இப்படியான பல்லாயிரம் பெரியப்பாக்கள் உலகின் திசைகளில் இருக்கிறார்கள்.

நன்றிகள் வாலி.

Link to post
Share on other sites
 • 3 weeks later...

உங்கள் அனுபவக் கதை பல இடங்களைத் தொட்டுள்ளது பாராட்டுக்கள் .

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஞானம் நிறை கன்னிகையே மாதா  இயேசுவே...  உயிராய் வா...  உணவாய் வா....  உணர்வாய் வா..... உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன் -2 மார்பினில் சாய்ந்து உன் உணர்வுகளை மன்னவன் நேசத் துடிப்புகளை அனுதினம் நானும் உணர்ந்திட செய்திடும்  இயேசுவே உயிராய் வா  உணவாய் வா  என் உணர்வாய் வா - 2 உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 1) இரவும் பகலும் பேசிடும் என் தெய்வமே இணையில்லா அருளை என்றென்றும் நான் சொல்வேன் -2  பாறையில் வழிந்தோடும் நீர் ஊற்றாய் உன் பரிவினால் என்னை முழுமையாய் நிரப்பிட  இயேசுவே உயிராய் வா  உணவாய் வா என் உணர்வாய் வா உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 2) வாழ்வென்றால் எனக்கு எல்லாமே நீர்தானையா வானத்துப் பறவை போல் மகிழ்வோடு வாழ்ந்திடுவேன் -2 உன்னோடு வாழ்ந்திடும் தருணங்களை  நான் பிறரோடு பகிர்ந்திட உன்னருள் தந்திட  இயேசுவே உயிராய் வா  உறவாய் வா என் உணர்வாய் வா.    
  • சரியான பதில், பாராட்டுக்கள்👏
  • சிறீலங்கா எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாக நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.நா  85 Views ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை சிறீலங்கா எதிர்த்தாலும்  அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப் (Nada Al-nashif ) இதனைத் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், “மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கை, சிறீலங்கா அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீராக்கப்பட்டு நேற்று முன்வைக்கப்பட்டது. சிறீலங்கா அரசாங்கம் சில விடயங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமையால், இந்த அறிக்கையை இறுதிப்படுத்த மூன்று வாரங்கள் காலதாமதம் ஏற்பட்டது. இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில பொறிமுறைகளின் பல விடயங்களை அமுலாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, சிரியா, மியான்மார் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்டுள்ளதைப் போன்றோ அல்லது சிறீலங்கா விடயத்தை பிரத்தியேகமான முறையிலோ கையாள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விடயத்துக்கான பொருத்தமான நடைமுறை எதுவென்பதை மனித உரிமைகள் பேரவையே தீர்மானிக்கும். அத்துடன், சிறீலங்கா விடயத்தில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.   https://www.ilakku.org/?p=43263
  • 😡 கொலைவெறி என்று சொல்லுவாங்களே.... அது இப்ப எனக்கு வந்திருக்கு. இலையான் கில்லர் மாட்டினா அவ்வளவுதான் 
  • காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏  அருள்மழை பொழிவாய் ரஹ்மானே.   ஈச்சை மரத்து இன்ப சோழையில்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.