Jump to content

நாம் சமாதானத்தை அடைய கொடுக்கக்கூடிய விலை என்ன?

Recommended Posts

சமாதானம், போர் என்ற பதங்களில் கவனத்தை செலுத்தாமல், மக்கள் அங்கு நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் நீண்டகாலத்துக்கு வாழ என்ன வழி என்ற கேள்வியை கேட்பதே, அந்த மக்களுக்கு தேவையானதை தேடுவதாக அமையும்.

கடந்த 50 வருட உரிமை பிரச்சினையில், 20 வருடங்கள் போர்க்காலமாக அமைந்து விட்டது. சில ஆய்வாளர்கள் 'ஆசியாவின் நீண்ட உள்நாட்டுப்போர்' என்று இந்த போரை குறிப்பிடுகிறார்கள். மக்கள் மடிவதோ கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாக தமிழர் ஆட்சிப்பகுதியில் நிம்மதியாக வாழலாம், என்று நினைத்த மக்களின் தலை மீது மீண்டும் குண்டுகள் விழுகின்றன.

அமெரிக்காவோ, இசுரேலோ கூட தலைமீது விழும் குண்டுகளில் இருந்து தம் மக்களை பாதுகாக்க கூடிய தொழில்நுட்பத்தை அறியவில்லை. றீகன் காலத்தில் நட்சத்திர போர் என்ற ஒன்று இந்த தொழில்நுட்பத்தை விருத்தி செய்ய உருவாக்கப்பட்டது. அது வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு தனிநாடு உருவானாலும், எதிரிநாட்டின் விமானங்களும், ஏவுகணைகளும் நாளும் மக்களை கொன்றுவருவதை எப்படி தடுக்க முடியும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.. மக்களுக்கு தனிநாடு எப்படி இந்த எறிகணைககளில் இருந்து பாதுகாப்பு தரும்?

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

போர் அல்லது சமாதானம் என்னும் தனித்தனியான இரு வேறு பாதைகள் தொடங்கும் ஒரு முச்சந்தியில் எமது போராட்டம் தற்போது தடம் பதித்து நிற்கிறது. நாம் கடந்து வந்த பாதை பற்றி எமக்கு இருந்த தெளிவு தொடர்ந்து எந்த பாதையில் பயணிக்க போகிறோம் என்பதை தீர்மானிக்க முடியாத குழப்பநிலையில் இருந்து நாம் மீள எமக்கு உதவாதது ஏன்?

இதுவரை காலமும் யுத்தத்தால் நாம் ஈட்டிய முதலீடுகள் பத்திரமாக எமது அடுத்த சந்ததிக்கு முதுசமாக்கப்பட வேண்டுமெனின் சமாதானத்தின் கதவுகளை நாம் அகல திறக்க வேண்டிய வேளை இது.

தமிழீழம் எனும் தேச உருவாக்கத்துக்கு யுத்தமூலம் செய்யப்பட வேண்டிய சத்திரசிகிச்சை அனைத்து செய்தாகிவிட்டது. குழந்தையை வெளியே எடுப்பதற்கு மிகுந்த பொறுமையும் அமைதியுமே இப்போது எமக்கு அதிகமாக தேவைப்படுகிறது.

அது ஒரு நீண்ட வரலாற்றுப்பணி. அதற்குரிய முன்நிபந்தனைகளை ஆயுதப்போராட்டம் மூலம் நிறைவேற்றி முடிதாயிற்று. அடுத்த களத்தில் நாம் சமாதானம் என்ற போர் முரசை முழங்கி உலகத்தின் கவனத்தை எமக்கு சார்பாக திருப்பவேண்டிய காலகட்டம்.

சிங்களம் எமக்கெதிரான யுத்தத்தில் மட்டுமல்ல சமாதானத்திலும் தோல்வியை சந்திக்க வைக்கவேண்டும்.ஒரு அரசியல் சமாதான தீர்வுக்கு ஊடாக எமது இருப்பு காப்பாற்றப்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. அத்தீர்வு எமது காலத்தில் கிட்டவேண்டும். அதனூடாக ஒரு அரசியல் போராட்டத்துக்குரிய குறைந்தபட்ச தமிழ் மக்கள் தொகை காப்பாற்றப்படும்.

மேற்கூறிய நிபந்தனைகளை இன்று நிராகரிப்போமால் எமது இனம் இலங்கை தீவில் முற்றாக துடைத்து அழிக்கப்படும் அவலத்துக்கு உள்ளாவோம்.

ஆக சிங்களத்துக்கு எதிரான சமாதான யுத்தத்தை தீவிரமாக முடுக்கிவிட்டு சர்வதேசத்தில் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி எமது தேச இருப்பபை நிலைநாட்டுவோம்.

Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புகளுக்கு கடல்வழித்துணைக்காக இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரித்தானிய போர்கப்பல்கள் தமது எண்ணிக்கையை மேலும் இரண்டு அதிகரித்துள்ளது. அந்த கடல் பிராந்தியத்தில் இந்திய கடற்படைகளுடன் இணைந்த கூட்டு வேலைத்திட்டதின் ஒரு பகுதி நிறைவேற்றத்துக்கே மஹிந்த அவசரமாக பிரித்தானியா வந்ததாக தற்போது தெரியவருகிறது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் முன்மொழிந்த புலிகளுக்கு எதிரான சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் மஹிந்த சிந்தனைக்குள் பின் கதவால் எப்படி வந்தது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடந்த சில நாட்களாக களப்பிரிவுகள் - செய்திகள் - தமிழீழம் பகுதியில் சில தலைப்புகளுக்கு கீழ் எமக்கிடையிலான விவாத பொருள் தலைகீழாக மாறி '' சமாதானம்'' என்னும் புனைபெயரில் எழுதும் எனது கருத்துகள் ஒரு ''புலி எதிர்ப்பு'' வானொலியின் அலைவரிசையை ஒத்ததாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகிவருகிறது.

இவ்வாறான மலிந்த விமர்சனங்கள் யாழ் களத்தில் ஒன்றும் புதிதல்ல. தமது கருத்துகளுடன் முரண்படும் ஒருவரது அரசியல் பார்வை பற்றிய தமது விமர்சனங்களை இங்கு முன் வைக்காது வெற்றுக் கோசங்களை எழுப்பும் உரையாடல் மூலம் தாம் கருத்துக் களத்தில் வெற்றி கொண்டதாக தமக்குள் பெருமிதம் கொள்ளும் மனக்கட்டமைப்பு யாழ் களத்தின் உயிர் நாடியையே உலுப்பிவிடக்கூடியது.

இது ஒரு பேராபத்தான போக்கு.

ஒரு மனிதன் தனக்குதான் கிச்சு..முச்சு செய்து தன்னைத்தான் சிரிப்பூட்டி தானாக சிரிக்கும் மன நிலையில் யாழ் களத்தில் சிலர் கருத்து எழுதுகிறார்கள்.

புலிகளின் இராணுவ வெற்றியின் இரகசியம் முன்னெப்போதும் கண்டிராத பேசப்பட்டிராத ஏன் மற்றவர்கள் நினைத்தே பார்த்திருக்காத விடயங்களை நியத்தில் நிகழ்த்திக்காட்டிய செயல் வீரத்தின் பின்புலம் '' புதியன புகுதல்'' எனும் தீராத தேடல்.

அதை விடுத்து ''புலியெதிர்ப்பு புராணங்கள்'' பாடுவது என்னவோ... சூத்திரம் சுத்தும் மாடுகளில் ஊர் போய் சேரலாமென்ற நினைப்புதான் நம்மில் பலரது பிழைப்பைக் கெடுகிறது.

Link to comment
Share on other sites

யுத்தத்தைப்போல சமாதானமும் கடினமான அரசியல் போராட்ட வழிமுறை.

ஈழப்போர்- 4 தொடங்கி சில நாட்களில் கடந்தகாலத்தில் நாம் ஒருபோதும் கண்டிராத புதிய அரசியல் இராணுவ நகர்வுகள் இலங்கை அரசியலின் பின்புலத்தில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

எதிரி விரும்பி உருவாக்கும் யுத்த களத்தில்-காலத்தில் சமாதானம் என்பது ஒரு கொரில்லா தாக்குதல் போன்றது.

ஆயுத யுத்தம் என்பது எமக்கு சாதகமான நிலையில் எம்மால் முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல் போர். எதிரிக்கு சாதகமான யுத்த களத்தில் அமைதி யுத்தம்தான் எமது அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும்

சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் தமிழர் தரப்பால் இலகுவாக வெற்றி கொள்ளகூடியதாக இருந்ததிற்கு யுத்த களத்தில் மட்டும் அல்ல அரசியல் தளத்திலும் நாம் பலமாக இருந்தோம். அன்றைய சர்வதேச அரசியல் தமிழர் தரப்புக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் சந்திரிக்கா அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழல் எமது தரப்புக்கு எதிராகமட்டும் அல்ல எதிரிக்கு சாதகமாக உள்ளது.

இந்திய அமெரிக்க உதவிகள் சிங்கள் தரப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு உசுப்பேத்தி உள்ளது. சிங்களம் யுத்தத்தை தெரிவு செய்துள்ள இந்த காலகட்டம் எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் அரிதாகும்.

இது பலவீனத்தினால் வந்த முடிவு அல்ல. இது இன்றைய காலகட்டத்தின் யுத்த தந்திரோபாயமகும்.

ஆக, சமாதானம் என்பதுதான் எமக்கு முன் உள்ள சிங்கள யுத்தத்துக்கு எதிரான அரசியல் யுத்தம் ஆகும்.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு எமது போராட்டம் யுத்தத்திற்கு முகம் கொடுப்பதற்கு வேண்டிய உதவிகளை எந்தவகையில் செய்கிறார்களோ அதேபோல் எமது போராட்டம் சமாதானத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் தெளிவில்லை. அதற்கு பிரதான காரணம் புலத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் அநேகமானவை போர் குறித்து மிகைப்படுத்தியே அதிகம் பேசுகின்றன. சிங்களத்தின் வலிந்த போருக்கு தமிழர் தரப்பு எதிர்வினைகொள்வதில் உள்ள மன ஆதங்கத்தில் வெறுமனே உள்ளக்குமுறல்களை வெளியில் கொட்டிச் சிந்துவதன் பயன்கள் குறித்து எமக்கு புதிய அணுகுமுறை தேவை.

தேசியத்துக்கு சார்பான ஆங்கில ஊடகங்கள் யுத்த நேரத்தில் வெளியிடும் செய்திகளின் பொறுப்புணர்வு தமிழ் ஊடகங்களில் குறைந்தபட்சம் இருப்பதாக தெரியவில்லை.

யுத்தமும் சமாதானமும் ஒர் இரட்டைக்குழல் துப்பாக்கியில் இருந்து வெளியேறும் சமபலம் உள்ள ரவைகள் என்பது நம்மில் பலருக்கு வயித்தில் புளியைகரைக்கும் சமாச்சாரம். மாறிவரும் உலக ஒழுங்கு எமது போராட்டத்துக்கு புதிய தடைகளை புகுத்தியபோதும் தமிழர் போராட்டத்தை இன்னும் முன்நகர்த்தி செல்ல புதிய களங்களையும் திறந்து விட்டுள்ளது என்பதை நாம் ஏன் கண்டுகொள்ளத்தவறி வருகிறோம்?

யுத்தகாலத்தைப் போலல்லாது சமாதான காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகள் அதிகம். அதில் இருந்து நாம் தப்புவதற்காகவே சமாதானம் பற்றி மெளனம் சாதிக்கிறோம் அல்லது சமாதானத்துக்கு எதிராக பேசுகிறோம் என்பது கசப்பான உண்மை.

போர் அல்லது சமாதானம் என்னும் தனித்தனியான இரு வேறு பாதைகள் தொடங்கும் ஒரு முச்சந்தியில் எமது போராட்டம் தற்போது தடம் பதித்து நிற்கிறது. நாம் கடந்து வந்த பாதை பற்றி எமக்கு இருந்த தெளிவு தொடர்ந்து எந்த பாதையில் பயணிக்க போகிறோம் என்பதை தீர்மானிக்க முடியாத குழப்பநிலையில் இருந்து நாம் மீள எமக்கு உதவாதது ஏன்?

இதுவரை காலமும் யுத்தத்தால் நாம் ஈட்டிய முதலீடுகள் பத்திரமாக எமது அடுத்த சந்ததிக்கு முதுசமாக்கப்பட வேண்டுமெனின் சமாதானத்தின் கதவுகளை நாம் அகல திறக்க வேண்டிய வேளை இது.

தமிழீழம் எனும் தேச உருவாக்கத்துக்கு யுத்தமூலம் செய்யப்பட வேண்டிய சத்திரசிகிச்சை அனைத்து செய்தாகிவிட்டது. குழந்தையை வெளியே எடுப்பதற்கு மிகுந்த பொறுமையும் அமைதியுமே இப்போது எமக்கு அதிகமாக தேவைப்படுகிறது.

அது ஒரு நீண்ட வரலாற்றுப்பணி. அதற்குரிய முன்நிபந்தனைகளை ஆயுதப்போராட்டம் மூலம் நிறைவேற்றி முடிதாயிற்று. அடுத்த களத்தில் நாம் சமாதானம் என்ற போர் முரசை முழங்கி உலகத்தின் கவனத்தை எமக்கு சார்பாக திருப்பவேண்டிய காலகட்டம்.

சிங்களம் எமக்கெதிரான யுத்தத்தில் மட்டுமல்ல சமாதானத்திலும் தோல்வியை சந்திக்க வைக்கவேண்டும்.ஒரு அரசியல் சமாதான தீர்வுக்கு ஊடாக எமது இருப்பு காப்பாற்றப்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. அத்தீர்வு எமது காலத்தில் கிட்டவேண்டும். அதனூடாக ஒரு அரசியல் போராட்டத்துக்குரிய குறைந்தபட்ச தமிழ் மக்கள் தொகை காப்பாற்றப்படும்.

மேற்கூறிய நிபந்தனைகளை இன்று நிராகரிப்போமால் எமது இனம் இலங்கை தீவில் முற்றாக துடைத்து அழிக்கப்படும் அவலத்துக்கு உள்ளாவோம்.

ஆக சிங்களத்துக்கு எதிரான சமாதான யுத்தத்தை தீவிரமாக முடுக்கிவிட்டு சர்வதேசத்தில் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி எமது தேச இருப்பபை நிலைநாட்டுவோம்.

Link to comment
Share on other sites

ஆக சிங்களத்துக்கு எதிரான சமாதான யுத்தத்தை தீவிரமாக முடுக்கிவிட்டு சர்வதேசத்தில் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி எமது தேச இருப்பபை நிலைநாட்டுவோம்.

சமாதானம் என்ற மாயைக்குள்ளே இல்லாத நடுநிலமை என்ற ஒரு மாயைதோற்றத்துக்குள்ளே பேய் என்ற எதிரிகளையும் தூரோகிகளையும் வளர்த்து விடவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானம் எழுதியது

தேவன் எழுதியது:

என்ன அழகாக ஒரு விடயத்தை சொன்னாலும் அதன் சாரம் புலிகளின் தலையில் குட்ட ஒருபோதுமே மறந்ததில்லை. அதுதான் சமாதானத்தின் பாணி.

பணியும்கூட

எனது கருத்துகள் நாம் ஏன் சமாதானத்தை எமது உடனடி போராட்ட முறையாக்க வேண்டுமென்பது பற்றியது.

அதில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான புலிகளை எந்த வகையிலும் குட்டவோ குறைசொல்லவே அகதிதமிழனான எனக்கு எந்தவித அருகதையும் இல்லை என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தேவனின் சந்தேகம் இப்போ தீர்ந்திருக்கும்.....??????

ஐயா சமாதானம்!

புலிகளை திருத்தம் செய்கின்ற பணி என்பது புலிவிரோதம் தன் கள்ளங்களை மறைகின்ற பணியுடையாக அல்லவா உபயோகிக்கிறது.

தவிர எம்தேசியத்துக்கு ஆக்கபூர்வமான பணிகளைத்தந்து கொண்டிருக்கும் தமிழ்உணர்வாளர் பதிவுகளுக்கு குட்டுப்போட்டு தேசியவிரோதத்தைக் கக்கும் பதிவுகளுக்கு

பரிந்தும் பதிவுத்தராதரங்களை நாட்டாமை செய்யும் உரிமையும் உங்களுக்கு யார்தந்தது.

இந்தக்களத்தின் பெருந்தன்மை. தெரிந்தும் தேசியவிரோதத்தை கக்கும் பதிவுகளுக்கும் நுளைவனுமதி தந்தமை. இந்த உரிமையை துர்உபயோகம் செய்தவதுதான் சமாதானத்தின் யோக்கியமா.

கேள்விகளால் துளைக்கப்படாத ஒரு விடையம் மேன்நிலையை அடையமுடியாது.

எனவே உங்கள் கருத்துக்களை அள்ளிவிடுங்கள், அதற்க்கு அழகாக பதிலுரைக்க பலர் இங்கே ஆயத்தமாகவே இருக்கிறார்கள். அதன் உபயோகம் உங்களுக்கு இல்லாவிடினும் அறியாதநெஞ்சங்களுக்கு புலிபற்றி நல்லவிபிராயத்தைக் கொடுக்க உதவும்

_________________

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானம், போர் என்ற பதங்களில் கவனத்தை செலுத்தாமல், மக்கள் அங்கு நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் நீண்டகாலத்துக்கு வாழ என்ன வழி என்ற கேள்வியை கேட்பதே, அந்த மக்களுக்கு தேவையானதை தேடுவதாக அமையும்.

கடந்த 50 வருட உரிமை பிரச்சினையில், 20 வருடங்கள் போர்க்காலமாக அமைந்து விட்டது. சில ஆய்வாளர்கள் 'ஆசியாவின் நீண்ட உள்நாட்டுப்போர்' என்று இந்த போரை குறிப்பிடுகிறார்கள். மக்கள் மடிவதோ கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாக தமிழர் ஆட்சிப்பகுதியில் நிம்மதியாக வாழலாம், என்று நினைத்த மக்களின் தலை மீது மீண்டும் குண்டுகள் விழுகின்றன.

அமெரிக்காவோ, இசுரேலோ கூட தலைமீது விழும் குண்டுகளில் இருந்து தம் மக்களை பாதுகாக்க கூடிய தொழில்நுட்பத்தை அறியவில்லை. றீகன் காலத்தில் நட்சத்திர போர் என்ற ஒன்று இந்த தொழில்நுட்பத்தை விருத்தி செய்ய உருவாக்கப்பட்டது. அது வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு தனிநாடு உருவானாலும், எதிரிநாட்டின் விமானங்களும், ஏவுகணைகளும் நாளும் மக்களை கொன்றுவருவதை எப்படி தடுக்க முடியும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.. மக்களுக்கு தனிநாடு எப்படி இந்த எறிகணைககளில் இருந்து பாதுகாப்பு தரும்?

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் பாணிதானா யூட் பாணி

உலகில் சிலசாவுகளுக்கு உணவேகாரணம் அதற்க்காக உண்பதை நிறுத்திவிடலாமா?

நாய்வாலில் கட்டிய தேன்கூடுபோல் சிலநாடுகள் பிரச்சினையோடு அலைகின்றன இவைதான் ஒப்பீட்டுத்தகுதிக்குரிய நாடுகளா?

Link to comment
Share on other sites

மேற்கோள்:

நாம் சமாதானத்தை அடைய கொடுக்க கூடிய விலை என்ன?

விலை எல்லாத்துக்கும் இருக்கு.......

வேணும்னா....... அதன் அதிகரிப்பை தடுக்கலாம்....

கூட இருந்தே சிங்களவனுக்கு எம்மில் யாரும் காவடி தூக்காமல் விட்டால்..! 8)

SAMATHAANAM எழுதியது:

இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த ஒப்பந்தங்களை அவற்றின் கீர்த்தி கருதி கீழ்வருமாறு வரிசைப்படுத்தி கொள்ளலாம்.

1. பண்டா - செல்வா ஒப்பந்தம் : 1957

2. டட்லி - செல்வா ஒப்பந்தம் : 1965

3. மாவட்ட அபிவிருத்தி சபை : 1980

4. இலங்கை இந்திய ஒப்பந்தம் : 1987

5. யுத்தநிறுத்தம் : 1994

6. யுத்தநிறுத்த ஒப்பந்தம் : 2002

7. ஒஸ்லோ பிரகடனம் 2002

தமிழர் தேச விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவருக்கும் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் 22/2/2002 இல் கைசாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் முன்னுதாரணம் அற்றது.

இந்த ஒப்பந்தம்தான் முதல்முதலில் தமிழர் தாயகக் கோட்பாட்டை அரசியல் அர்த்தத்தில் மட்டும் அல்லாது இராணுவ வலுச்சமநிலையிலும் சர்வதேச அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொண்டது. புலிகளின் வரலாற்றில் தமிழ் தேசியம் உலகு தழுவி இதற்கு முன்னமும் சரி பின்னமும் சரி பேசப்பட்டது கிடையாது.

தமிழீழ நிழல் அரசும் சிங்கள அரசும் சமாந்திரமாக இலங்கைத் தீவில் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டதுடன் கால் நூற்றாண்டு வயது வந்த யுத்தத்துக்கும் ஒரு முடிவு காணும் நோக்கில் 05/12/2002 இல் ஒஸ்லோ பிரகடனத்தை வெளியிட்டன.

இந்த பிரகடனத்தின் சாரம்சமாக கொள்ளகூடிய பந்தியை மீண்டும் கீழே தருகிறேன்.

Responding to a proposal by the leadership of the LTTE, the parties agreed to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking peoples, based on a federal structure within a united Sri Lanka. The parties acknowledged that the solution has to be acceptable to all communities.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் யோசனையொன்றுக்குப் பதிலளிக்கு முகமாக தமிழ்மொழி பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் உள்ளக சுய நிர்ணயத்தின் மேல் நிறுவப்பட்ட தீர்வொன்றை ஐக்கிய இலங்கையினுள் சமஸ்டி அடிப்படையில் தேடுவதற்கு இக்கட்சிகள் இணக்கம் தெரிவித்தன. அத்தீர்வு சகல சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை இக்கட்சிகள் ஒப்புக் கொள்கின்றன.

புலிகளின் இமாலய இராணுவ சாதனைகளால் எட்டப்பட்டதே இந்த பிரகடனம். ஒஸ்லோ பிரகடனம் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன.

இந்த நான்கு ஆண்டுகளில் புலிகள் எமது தேச எல்லைகுள்ளும் இலங்கை தீவுக்குள்ளும் இந்திய உப கண்டத்துக்குள்ளும், உலக அளவிலும் சாதித்த அரசியல், இராணுவ நகர்வுகள் என்ன?

ஒப்பந்தம் கைச்சாத்தாகி 14 மாதங்களுக்குள் கருணா வெளியேற்றம்...

கடும்போக்காளரான மகிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றி.....

அடிப்படையில் புலிகளுக்கு எதிரான இந்திய வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சி...

புலிகளை தடை செய்யும் உலக அரச பட்டியலின் நீட்சி........

இராணுவரீதியில் சம்பூர் கை நழுவி போனது...முகமாலை முன்னரண் பின்வாங்க வேண்டிப்போனது..... மற்றும் ஏ9 பாதை மூடப்பட்டது.

நான்கு ஆண்டுகளில் இந்த பின்னடைவுகள் வந்தது ஏன்?

2002ஆம் ஆண்டு முடிவில் ஒஸ்லோ பிரகடனத்தின் மூலம் தமிழ் தேசியம் விளைவித்த அரசியல் வெற்றி சமாதான பாதையில் இருந்து தடம் புரண்டு போனதுக்கு அரசுதான் தனிக்காரணம் என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டிருந்தால் எமக்கு எதிரான தடைகள் வந்திருக்கமாட்டாது.

மனித உரிமை அமைப்புகள், யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு, உதவி வழங்கும் நாடுகள் போன்றனவற்றுடன் ஒரு மென்மையான அணுகுமுறை சமாதான காலத்தில் பல இராஜதந்திர வெற்றிகளை நிஜமாக்கி இருக்கும்.

சமாதான பாதையில் இருந்து தமிழர் தரப்பு வெளியேறியதற்கு சிங்களம்தான் முழுபொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்குரிய வலுவான சாட்சியங்கள் எதனையும் சர்வதேச சமூகத்தின் கவனத்து நாம் கொண்டுவரத்தவறிவிட்டோம்.

இராணுவத்தால் செய்யப்பட்ட தமிழ் மக்கள் கொலைகளுக்கு உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும்படி ஒரு அரசியல் நியாயப்பாட்டை உருவாக்க முயச்சிக்காமல் யுத்த பேரிகைகளுக்குகே முன்னிடம் கொடுத்த அரசியல் வறுமை எம்மை தனிமைப்படுத்திவிட்டது.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை. சாத்தியமான அரசியல் தீர்வு பற்றி மீண்டும் பேசத் தொடங்க ஒஸ்லோ பிரகடனத்தை ஒரு அரிசுவடி ஆவணமாகக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

இந்த ஒப்பந்தங்களை கிளிச்சு எறிஞ்சவன் தமிழன் இல்லை...! சிங்களவந்தான்.. ஒப்பந்ததையே மதிக்க தெரியாதவனுக்கு தெளிய வைக்க வளி ஒண்டு இருக்கு அதுதான் சரியான வளி...!

அந்த வளிதான் சமாதானம் எண்ட ஒண்டை பற்றி சிங்களவனுக்கு யோசிக்க வைச்சது...! அதேவளிதான் ஆப்கானிஸ்தானிலை அமெரிக்கனுக்கும் பிரிட்ட்னுக்கும் பாடம் நடக்குது...! பில்லியன் கணக்கில செலவளிச்சு பாடம் படிக்கினம்...!

Link to comment
Share on other sites

மேற்கோள்:

இந்த ஒப்பந்தங்களை கிளிச்சு எறிஞ்சவன் தமிழன் இல்லை...!

இதெல்லாம் யாரும் சொல்லி தந்தா- அவங்களுக்கு தெரிய வரணும் - தலைவா?

தெரிஞ்சிருக்கும் - ஆனாலும் - ஏதோ சொல்லணும்னு நினைக்கிறாங்கப்போ!

அவங்க இப்போதான் -ஒப்பந்தங்கள் - எல்லாம் நடந்தது - அப்புறம் பூட்டுகிச்சுன்னு -கேள்விபட்டு இருக்காங்களோ- என்னமோ!

விட்டுரலாம்! 8) 8

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சமாதானம் அய்யா இங்கு சொல்ல வந்ததை பலர் குளப்பிப் போட்டியள். சொல்லவிட்டிருந்த எப்படி போயிருக்கும் என்ற கற்பனைக்கு இது நன்றாக பொருந்துகிறது.

http://sangam.org/taraki/articles/2006/10-...al.php?uid=1997

Link to comment
Share on other sites

இவர்கள் எந்த ரகம் எப்படியானவர்கள் என்று இந்த கட்டுரையில் விபரமாக எழுதியிருக்கு.

http://www.tamilnaatham.com/articles/2006/...chandran/15.htm

Link to comment
Share on other sites

கீழ் உள்ள கட்டுரையும் படிப்பதற்கு மிக்க பயன் உள்ளது.

LTTE -Tamil Tigers- and its UK-wide network

By Dominic Whiteman

LTTE was banned in the UK February 28th 2001. The annual publication of the International Institute for Strategic Studies (IISS) London 'Military Balance 2005/2006' referred to emerging links between the LTTE and the Al-Qaeda movement. It was later revealed confidentially by the editors to diplomatic sources that these links were in terms of commercial transactions including trafficking for financial gain and acquisition of technology rather than any ideological linkage. Experts are studying with interest links between the LTTE and Al-Qaeda in its financial, commercial and arms dealings. It is also believed that such links also exist in maritime transactions..............

Dominic Whiteman is spokesperson for the London-based VIGIL anti-terrorist organization an international network of terror trackers, including former intelligence officers, military personnel and experts ranging from linguistic to banking experts.

http://globalpolitician.com/articles.asp?I...2235&print=true

Link to comment
Share on other sites

உந்த உளவு அமைப்புக்கள் எழுதிற கட்டுரையள் படிக்கவும் இணைக்கவும் நேரம் இருக்கு எங்க கேட்ட கேள்வியளுக்குப் பதில்? இன்னும் பதிலைத் தேடிக் கொண்டிருகிறீரோ? இல்லை எசமானர் இன்னும் பதிலைச் சொல்ல வில்லயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும், இந்தச் செய்திக்கு சிங்கள இணையத்தளங்கள் அதுவும் நேற்று நடந்த தாக்குதலை விடவும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து போட்டிருக்கின்றன என்பதில் இருந்து விடயத்தைப் புரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

"The annual publication of the International Institute for Strategic Studies (IISS) London 'Military Balance 2005/2006' referred to emerging links between the LTTE and the Al-Qaeda movement."

அய்யா சமாதானம் உந்த புனைக்கதைகள் எங்களுக்கு செய்திகள் அல்ல. எமது பிரச்சனை இலங்கைமயப்படுத்தப்பட்டிருந

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.