• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

அஞ்சரன்

அப்படி பெரிய...... :) (நகைச்சுவை )

Recommended Posts

நம்ம ஊருல இரண்டு பேர் இருப்பாங்க எப்பவும் அவங்களால் ஒரே சிரிப்பு தான்... மற்றவனை ஏமாற்றுவது இவங்களின் வேலையா இருக்கும்.. ஒருநாள் பனையை பார்த்து இருவரும் மிக கவனமா அவதானமா பேசிக்கொண்டு இருந்தாங்கள்.. அக்கம் பக்கம் உள்ளவனுக்கு எல்லாம் குழப்பம் என்ன இப்படி கதைக்குறாங்க என.. பக்கத்தில் போய் பார்த்தா ஒன்னும் இல்லை.. அப்பொழுது முதல் ஆள் கேட்டான் எப்படி ஐந்து காலால் நடக்குது என்று.. மற்றவன் கேட்டான் ஓம் ஒரு காலை தூக்கிட்டு ஊருது பாரு எறும்புக்கு எவ்வளவு துணிவு என.. சுற்றி நின்டவனுக்கு அனைவருக்கும் கடுப்பாகும்.. பேசிட்டு போயிடுவாங்க அப்படி அவங்களின் அலப்பரை கொஞ்சம் இல்லை .

 

 

ஒரு முறை இருவரும் சைக்கிளில் தூரம் பயணம் போயிட்டு இருந்தாங்க.. அப்பொழுது காட்டு பாதையில் போனவர்களுக்கு ஊர் எல்லை வந்ததும் சாப்பிடும் எண்ணம் வர ஒரு நிகழ்வு நடந்த வீட்டுக்கு போயிட்டாங்க.. அங்க முதல் பந்தியில் இருந்து சாப்பிட்டு கொண்டு இருக்க சாப்பாடு பரிமாறியவர் இவர்கள் இருவரையும் கேட்டார் நீங்க யாரு தம்பி என.. அப்பொழுது முதல் ஆள் சொன்னான் நாங்க பெண்ணு வீட்டுகாரர் என்று.. திடுக்கிட்டு கேட்டார் சாப்பாடு போட்ட ஆள் நீங்களா ஓகே வடிவா சாப்பிடுங்க வேற என்ன வேணும் என கேட்டு கேட்டு நல்ல உபசரிப்பு நடந்துது.. அப்பொழுது முதல் ஆள் சொன்னான் பார்த்தியா இதுதான் அரசியல் எப்படி கவனிப்பு போகும்போது சாப்பாடு கட்டிட்டு போகவேணும் என்று திட்டம் வேற போட்டாச்சு.. இப்படி பேசிய படி சாப்பிட்டு முடிந்து கைகளை கழுவி கொண்டு இருக்க அவர்களை நாலுபேர் சுற்றி வளைத்து எருமை மாடு பிடிக்கும் கயிறால் கட்ட முற்பட . பயந்து போன இருவரும் குழப்பத்துடன் என்ன நடக்கு எங்களுக்கு மரியாதை இல்லாட்டி என்னாகும் எண்டு தெரியுமே இப்ப நிப்பாட்டுவன் கலியாணத்தை என உரக்க கூறி கலவரம் பண்ண வீட்டுக்காரன் சொன்னான் டேய் முட்டாள் இது சாமத்திய வீடு நிங்க களவு எடுக்க வந்ததும் இல்லாமல் எங்களை மொக்கன் ஆக்க பார்த்தா விடுவமா என.. அதன் பிறகு விழித்த இருவரும் உண்மையை சொல்ல மன்னித்து அனுப்பி விட்டார்கள் அவர்கள்..

 

 

பின்னர் அதில் ஒருவன் தென்பகுதிக்கு போயிட்டான்.. ஒரு எட்டு மாதம் இருக்கும் போனவன் வந்தான்.. கண்டி ரோட்டால் வந்தவன் ஒரு சைக்கிள் கடையில் கதைத்து கொண்டு இருந்தான்.. அப்பொழுது கடைக்காரன் கேட்டார் என்ன தம்பி சிங்களம் கதைப்பியா என அதுக்கு அவன் ஓம் அண்ணே சிங்களம் தறோ என்று சொல்லி தன் பெருமைகள் பேசிட்டு இருந்தான் . அப்பொழுது ஒரு நாலு சக்கர வாகனம் காற்று போய் ஒருவர் உருட்டி வந்தார்.. வந்தவர் சிங்கள மொழி கதைப்பவர் சிங்களத்தில் கேட்டார் ஒட்டி தர முடியுமா என.. விளங்காத கடைக்காரன் இவனை பார்த்து கேட்டார் உனக்கு தானே சிங்களம் தறோ என்ன சொல்லுறான் என கேட்டு சொல்லு என்று இவன் குழம்பி ஓகே என்று எழும்பி என்ன என கேட்டான் அவர் மீண்டும் சிங்களத்தில் ஒட்டி தர முடியுமா கேட்க இவன் கடைகாரானுக்கு சொன்னான் பதில் பாருங்க .........

 

ஓம் அண்ணே அவன் கதைப்பது சிங்களம் தான் என்று கடுப்பாகின கடைக்காரன் சுட்டியலை தூக்க பாட்டி எஸ்கேப் இப்படி தான் அறியா சிங்களத்தால் அவன் பட்ட பாடு .

 

பிறகு ஒருநாள் கொஞ்ச பேருக்கு கதை சொல்லிட்டு இருந்தான் ஆவலா அனைவரும் கேட்டுக்கொண்டு இருந்தனர் முயல் ஆமை கதை.. இதில் முயலும் தண்டனை பணம் கட்டியது ஆமையும் வரிகட்டியது பற்றி அனைவருக்கும் ஆச்சரியம் எப்படி சாத்தியம் என் அவைகள் பணம் கட்டவேண்டி வந்தது என்று குழம்பி இருக்கு இவங்கள் இருவரும் டீ குடிக்க போயிட்டு வந்து கேட்டாங்கள் விடை தெரியுமா என்று எல்லோரும் விழியை உருட்டியபடி இல்லை சொல்லு சொல்லு என் காசு கட்டியது என்று வினாவ முதல் ஆள் சொன்னான் முயல் ஓவர் இஸ்பிட் (50 வேகத்தில் போகாமல் 150 போனது ) அதுக்கு குற்றப்பணம் என்று அப்ப ஆமை ஏன் கட்டினது வரி மற்றவன் சொன்னான் ஆயிரம் முட்டையை ஒழித்து மறைத்து கொண்டுவந்தது பிடிபட்டதால் கட்டியது .

 

இப்படி ஊருக்குள் சிலர் இருப்பங்கள் அண்டப்புளுகு ஆகாஷாபுளுகனுகள் அப்படி பெரிய புளுகங்கள் தான் இவர்கள் இருவரும் தாங்கள் ஜோக்கர் என்று தெரியாமல் வாழும் ஹிரோக்கள்

:D :D :D

 

 

Share this post


Link to post
Share on other sites

ஒரு இடம் இல்ல பல இடம் இடிக்குது :o  ,எண்டாலும் நல்லாருக்கு :D

Share this post


Link to post
Share on other sites

உங்களுக்கு இடிக்காதவரை ஓகே நந்தன் அண்ணா :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

உங்களுக்கு இடிக்காதவரை ஓகே நந்தன் அண்ணா :rolleyes:

 

இப்பிடி அவர் சொன்னவரே?

 

எழுதுங்க. அவசரப்படாதேங்க! அதனால எழுத்துப் பிழை, வசனப்பிழை விடாதேங்க!!  :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இப்பிடி அவர் சொன்னவரே?

 

எழுதுங்க. அவசரப்படாதேங்க! அதனால எழுத்துப் பிழை, வசனப்பிழை விடாதேங்க!!  :rolleyes:

 

நன்றி அண்ணா உங்கள் ஆதரவுக்கு .

Share this post


Link to post
Share on other sites

 

இப்படி ஊருக்குள் சிலர் இருப்பங்கள் அண்டப்புளுகு ஆகாஷாபுளுகனுகள் அப்படி பெரிய புளுகங்கள் தான் இவர்கள் இருவரும் தாங்கள் ஜோக்கர் என்று தெரியாமல் வாழும் ஹிரோக்கள் ..

:D :D :D

 

இப்படியும் சில கீரோக்கள் உண்மைதான் அஞ்சரன். கதையை சிரித்து ரசித்து வாசித்தேன்.

 

Share this post


Link to post
Share on other sites

இப்படியும் சில கீரோக்கள் உண்மைதான் அஞ்சரன். கதையை சிரித்து ரசித்து வாசித்தேன்.

 

 

நன்றி அக்கா உங்கள் கருத்துக்கு :rolleyes:

 

Share this post


Link to post
Share on other sites

நகைச்சுவை எனப் போடாவிட்டாலும் நாங்கள் வாசித்துச் சிரிப்போம்
 

அஞ்சரன்  ஊருக்கு ஒரு லொள்ளுப்பாட்டி இல்லை
தெருவிற்கொரு லொள்ளுப்பாட்டி கூட இருப்பார்கள் :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

நகைச்சுவை எனப் போடாவிட்டாலும் நாங்கள் வாசித்துச் சிரிப்போம்

 

அஞ்சரன்  ஊருக்கு ஒரு லொள்ளுப்பாட்டி இல்லை

தெருவிற்கொரு லொள்ளுப்பாட்டி கூட இருப்பார்கள் :D  :lol:

 

நன்றி வாத்தியார் அதுதான் உண்மை அவர்கள்தான் வாழ்வில் மறக்க முடியா நபர்களும் கூட .

Share this post


Link to post
Share on other sites

அஞ்சரன் எழுத்துப் பிழைகள் மட்டுமல்ல சொற்களையே முழுங்கிவிட்டீர்கள். கவனியுங்கள். அத்தோடு எழுத்துநடை ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும். ஏன் எல்லாம் கலந்து வாங்க போங்க என்று இரசிக்கவில்லை. 

Share this post


Link to post
Share on other sites

நன்றி சுமோ அக்கா கூடிய கவனம் எடுக்கிறன் :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

கதை கலக்கல் கொக்டெயிலாய் இருக்கு  :lol:  . விஸ்கி , பிரண்டி , ஜின் எண்டு தந்தால் நல்லாய் இருக்கும் அஞ்சரன் :) :) .

Share this post


Link to post
Share on other sites

கதை கலக்கல் கொக்டெயிலாய் இருக்கு  :lol:  . விஸ்கி , பிரண்டி , ஜின் எண்டு தந்தால் நல்லாய் இருக்கும் அஞ்சரன் :) :) .

 

நன்றி கோமகன் அண்ணா உங்கள் ஊக்கம் தான் எல்லாம் இணைத்து இருப்போம் படைப்பில் . :)

Share this post


Link to post
Share on other sites